• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தாமரை வீடு!

தங்கையின் சத்தம் கேட்டு தாமரையும் விஷயத்தை புரிந்து கொண்டு, தோட்டத்து பக்கம் ஓட,வளவனோ அத்தை மகளுங்களை துரத்த ஆரம்பித்தான்.


அக்கா...,மாலாக்கா வீட்டு சந்து வழியாக ஓடிடுனு சொல்லிக்கொண்டே அல்லி ஓட,தாமரையும் அந்த சந்தில் புகுந்து ஓடியவளோ முன் பக்கம் இருக்கும் ரோட்டுக்கு ஓடி வந்தாள்.

தூரத்தில் அல்லி கையை காட்டி இங்க வந்துடுனு கத்தி சொல்ல,தாமரையோ பின்னாடி துரத்தி வரும் வளவனை, அப்போ,அப்போ பின் பக்கமாய் திரும்பி பார்த்துக்கொண்டே ஓடியவள், எதன் மீதே வேகமாக போய் இடித்து நின்றாள்.

இடித்த வேகத்தில் அவள் நெற்றியில் நன்கு அடிபட்டதும் கண்ணை மூடியவள்,அப்பா என்று சொல்லி நிமிர்ந்து பார்ப்பதற்குள்,தன் மேல் இடித்து நிற்ப்பவளின் கழுத்தில்,மூன்று முடிச்சை போட்டிருந்தான் கதிர்.

தாமரையை துரத்தி வந்த வளவனோ, அண்ணன் செய்ததை பார்த்து, "அண்ணாஆஆஆ என்று அதிர்ந்து சொன்னான்".

தெருவில் தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அங்கு நடந்ததை பார்த்து அதிர்ந்து தான் நின்றார்கள்.

வளவனின் குரலில் கண்ணை திறந்தவளோ,கழுத்தில் இருந்த தாலியை பார்க்க,"தாமரையின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தது".

தனது பாக்கெட்டில் இருந்த மஞ்சள் பொடியை நிதானமாக எடுத்தவன், அதிர்ந்து நிற்ப்பவளின் முகத்தை பார்த்துக்கொண்டே,அவளின் கன்னங்கள் மஞ்சளை பூசி விட்டான்.

கன்னம் வலிக்க,அழுத்தி மஞ்சள் தடவியதில்,அதிர்வில் இருந்தவளோ நிகழ்வுக்கு வந்ததை பார்த்தவன், பதினாறு ஊர் பஞ்சாயத்துக்கு முன்னாடி உன் அப்பனை,"எங்க அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுடி".

பிறகு உன்னை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்துறேன்டி என் செல்ல பொண்டாட்டி என்றவாறு,அவள் கன்னம் வலிக்க தட்டி விட்டு,வந்த வழியே கதிர் திரும்பி செல்ல,நில்லுடா என்ற குரல் ஆங்காரமாக கேட்டது.

அந்த குரலில் திரும்பி பார்த்தவனோ, கோவம் கொப்பளிக்க தன் முன் நடந்து வருபவளை,அந்த சூழலிலும் ரசித்து பார்த்தான்.

சில அடி தொலைவிலிருந்த அல்லிக்கு, இங்கு நடந்தது தெரிய,அக்கா என்றபடியே தாமரையிடம் ஓடி வந்தாள்.

அதற்குள் சிலர், இங்கு நடந்ததை கதிர் வீட்டுக்கும்,கவிதாவிடமும் சொல்லி விட, கேட்ட இரண்டு வீட்டினரும் அதிர்ந்து போய்,ஓடி வந்தனர்.

ஒரு அடி இடைவெளி தூரத்தில் வந்து நின்ற தாமரையோ,கதிரை பார்த்தவள், யார்டா நீ?.உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால்,இந்த மஞ்சள் கயிற்றை என் கழுத்தில் கட்டுவ?.

என்ன சொன்ன?

என் அப்பா உன் அப்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க்கனுமா? என்று ஆங்கரமாக சொன்னவள்,தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை கழற்றி, கதிரின் முகத்தில் தூக்கி எறியும் போது
இரண்டு வீட்டினரும் அங்கே வந்து சேர்ந்தனர்

அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களை விட,கதிருக்கு தான் பேரதிர்ச்சியாக இருந்தது.அவள் கோவப்படுவாள் என்று எதிர் பார்த்தவன்,"தாலியை கழட்டி எறிவாளென்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை".

ஒரு கயித்தை கட்டிட்டா நீ சொல்ற படி நான் கேட்ப்பேனு என்ன நம்பிக்கைடா என்றபடியே,அத்தனை பேரின் முன்னாலும் கதிரின் கன்னத்தில் மாறி, மாறி அறைந்தவளின் கையை ஓடி வந்து கவிதாவும் பிடித்தார்.

தன் கையை யார் பிடிக்கிறார்கள் என்று திரும்பியவளோ அங்கிருந்த தாயை பார்த்தவள் யார்மா இவன்?.

என்னமோ,ஒரு மஞ்சள் கயிற்றை தூக்கிட்டு வந்து என் கழுத்தில கட்டி விட்டு,அப்பா மன்னிப்பு கேட்கனும், ஆட்டு குட்டி மன்னிப்பு கேட்கனும்னு ஒளறிகிட்டு இருக்கான்?.

யார் இவன்?,என்று கதிர் பக்கமாய் கையை நீட்டி கேட்கும் போது,அங்கு வந்த சீதாவோ,மகனின் அருகில் போனவர் ஏன் இப்படி பண்ணுனடா? என்று கேட்டபடியே அவரும் மகனை மாற்றி,மாற்றி அறைந்தார்.

அங்கிருப்பவனை தனது அத்தையும் அடிப்பதை பார்த்தவள்,அம்மா... அப்போ இது?என்று அதிர்ச்சியாக கேட்க, கவிதாவோ அழுது கொண்டே ஆம் என்று தலையசைத்தார்.

தனது அம்மாவை ஒரு பார்வை பார்த்தவள்,தனது ரூமிற்குள் போய் கதவை தாழிட்டுக்கொண்டாள்.

தான் கட்டிய தாலியை தாமரை கழட்டி எறிந்ததில் அதிர்ச்சியில் நின்றவன் தான்,பின்னர் அங்கு நடப்பது எதுவும் அவனால் உணர முடியவில்லை.சற்று முன்னர்,தன் முகத்தில் தாலியை கழற்றி எறிந்தது மட்டும் தான் கதிருக்கு நினைவில் இருந்தது.

ஒரு கட்டத்தில் மகனை அடித்து ஓய்ந்தவர்,அழுது கொண்டே கவிதாவின் வீட்டை நோக்கி சென்றார்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டிற்குள் போனவர் தாமரை.. அம்மாடி தாமரை என்று கதவை தட்ட,தாமரையோ எதுவும் சொல்லாமல்,சுவற்றின் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

கவிதா,அல்லி,மற்றும் வீட்டினர் அனைவரும் கதவை தட்டி ஓய்ந்தனர்.

அம்மாடி நான் சொல்றதை கேளுடி என்று சீதா எவ்வளவோ கெஞ்ச,அவளோ வாயை திறக்கவில்லை.

கம்மங்காட்டிற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த அன்பு,வாசலில் தனது மாமனார் வீட்டினர் நிற்பதை பார்த்து, அந்த நேரத்திலும்,உள்ளே வாங்க மாமானு பிரகாசத்திடம் சொல்லிக்கொண்டே, என்னாச்சுனு கேட்டுக்கொண்டு உள்ளே வர,அங்கே தாமரையின் அறைக்கதவை தட்டிக்கொண்டிருந்த ராதாவை பார்த்தார்.

கவிதா,தாமரைக்கு என்ன ஆச்சு?? என்று கேட்டபடியே,அவள் அறைக்கிட்ட வந்தவர்,அம்மாடி தாமரை,தாமரை, என்று கூப்பிட,தந்தையின் குரலைக்கேட்டவள், "யாரையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை".

நான் உயிரோட இருக்கனும்னு நினைச்சீங்கனா என்னை தனியா விடுங்க என்றாள்.

கவிதா...என்ன நடந்தது என்று சொல்லப்போறியா?, இல்லையா? என்று அன்பு கத்த நடந்ததை எல்லாம் தந்தையிடம் அழுது கொண்டே அல்லியும் சொல்லி முடித்தாள்.

சின்ன மகளின் மூலமாக விஷயத்தை தெரிந்து கொண்டவர்,என்ன என்று அதிர்ந்து,நெஞ்சில் கை வைத்தவர்,சீதா என்று அழைத்தார்.

அண்ணா,சாமி சத்தியமா நடந்தது எதுவும் எனக்கு தெரியாது என்று சீதா சொல்ல,நீங்க வீட்டுக்கு போங்கம்மானு ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

அண்ணா அது வந்து என்று ராதா சொல்ல,கையெடுத்து கும்பிட்ட அன்பு, தயவு செய்து போங்கம்மா.பிறகு பேசிக்கலாம்.

நெல்லு மண்டிக்கு வந்து பணம் வாங்கிட்டு போக வர சொல்லியதால், வேலுவும்,ஜானும் காலையில் கிளம்பி அங்கே சென்று விட்டனர்.

கவிதா வீட்டிலிருந்து வெளியே வந்த சீதாவையும்,ராதாவையும் பார்த்த, வள்ளியும்,பிரகாசமும், என்னாச்சிமா என்க?,எதுவும் பேசாமல் இருவரும் வீட்டிற்கு சென்றார்கள்.

கவிதா வீட்டிற்கு இவர்கள் போகும் போது,கதிர் எந்த இடத்தில் நின்றானோ, இன்னமும் அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான்.

செல்வம்,பார்வதி,முத்து இவர்கள் மூவரும்,வயலில் உளுந்து விதைக்க சென்றிருந்ததால் அவர்களுக்கும் இங்கு நடந்தது எதுவும் தெரியவில்லை.

விதைப்பு வேலையை முடித்து விட்டு,மூவரும் பேசிக்கொண்டே தெருவில் நடந்து வரும் பொழுது,அங்கு தெரிந்த ஒருவர் நடந்த விஷயத்தை சொல்ல என்ன என்று கேட்டு மூவரும் அதிர்ச்சியாகினார்.

கதிர் வீடு!

ரோட்டில் நின்று கொண்டிருந்த அண்ணனின் தோளை தட்டியவன், அண்ணா அண்ணா என்று கூப்பிட, கதிரோ எதுவும் சொல்லாமல் தம்பியை ஒரு பார்வை பார்த்தவன்,திரும்பி வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்குள்ளே வந்த சீதாவோ, அங்கிருந்த முற்றத்து தூணில் சாய்ந்த அமர்ந்து,கண்ணை மூடிக்கொள்ள, அவர் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து ஒடிக்கொண்டிருந்தது.

அந்நேரம்,வெளியே போயிருந்த பெருமாளும் வீட்டிற்குள் வந்தார்.

மற்றவர்களும் வீட்டிற்குள் வந்தனர்.

யார் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

சீதா அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்த பெருமாள்,ராதா என்னாச்சு?.

வாழுற வீட்டுல,எதுக்கு உன் அக்கா இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கா?என்று சத்தம் போட்டார்.

கணவரின் வார்த்தையை கேட்டு கண்ணை திறந்தவர்,"உங்க மகன் செய்த காரியத்தை நினைத்து ஆனந்த கண்ணீரென்றார்".

என்னடி பேச்சுலாம் குத்தலா இருக்கு?என்கும் போது,கதிரும் வீட்டிற்குள் வர, அதோ வராறே நீதியரசர் அங்க கேளுங்க?,என்ன நடந்ததென்று கோவமாக சீதா சொல்ல,பெரியவனே என்ன ஆச்சு?

உன் ஆத்தாகாரி என்னமோ பானையில போட்ட நண்டு போல,லொட லொடனு கத்திக்கிட்டு இருக்கா.

அப்பாவின் கேள்விக்கு எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவன்,சற்று முன்னர் நடந்ததை சொல்ல,அதைக்கேட்டவர் என்னாஆஆஆ என்று அதிர்ந்தார்.

அவரின் அதிர்ச்சியை பார்த்தவன், அப்பா அன்றைக்கு நடந்ததுக்கும் இன்றைக்கு நடந்ததும் சரியா போகிட்டு என்று சொன்னது தான் தாமதம்,கீழே உட்கார்ந்திருந்த சீதா,எழுந்து மகனிடம் வந்தவர் என்ன சொன்ன?,என்க.

பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததென்று வாயை திறந்தவனின் கன்னத்தில்,மீண்டும் மாறி மாறி அறைந்தவர்,அன்றைக்கு நடந்ததை பற்றி உனக்கு என்னடா தெரியும்?.

நேர்ல நடந்ததுனு என்னனு நீ பார்த்தியா?என்று மகனிடம் கேட்க, நானும் முத்து அப்பாவும் அங்கு வரும் போது,அந்த அன்பழகன் அத்தனை பேருக்கு முன்னாடி எங்கப்பாவை அடிச்சாரே என்றான் கதிர்.

மகன் சொன்னதை கேட்ட சீதாவோ, கணவரின் முன்பு போய் நின்றவர் எதுக்கு உங்களை அன்பு அண்ணன் அன்றைக்கு அடிச்சாங்களென்று கேட்க, அவர் எந்த பதிலும் சொல்ல முடியாமல கீழே குனிந்து கொண்டார்.

ஏற்கெனவே செஞ்ச பாவத்துக்கே இன்னும் பிரயாச்சித்தம் பண்ணலை.
அந்த பாவத்தை தீர்க வழியில்லாமல் இருக்கவும்,அப்பனுக்கு தப்பாமல் நீயும் புள்ளையா வந்து பொறந்துருக்கியே பாவி.

உன்னை போய் பத்து மாசம் சுமந்து பெத்தை நினைச்சி வெக்கமா இருக்கென்றவர் என்ன கொழுந்தனாரே,குடும்பமே அந்த குடும்பத்துக்கு பாவத்தை தான் செய்யனும்னு வரம் வேண்டி வந்துருக்கீங்களா?என்று ஒவ்வொருவர் தலையிலும் கேள்வியால் இடியை இறக்கினார்.

அம்மா...நீ என்ன பேசுறனு கொஞ்சம் புரியுர போல சொல்லுறியானு வளவன் கத்த,மகனை திரும்பி பார்த்த சீதா, அதான் குத்துக்கல்லு கணக்கா உன் அப்பா,இதோ ஊர் உலகத்துக்கு பஞ்சாயத்து பண்ணும் மனுஷன் நிக்கிறாரே.அவர் கிட்டவே கேளுடானு சொல்லி விட்டு,தோட்டத்து கதவை திறந்து வெளியே சென்று விட்டார்.

அம்மா...நீயாவது வாய திறந்து சொல்ல போறியா?,இல்லையா என்கவும் ராதாவும் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே தனது அறைக்கு சென்று விட்டார்.

அங்கிருந்த பாட்டி,அத்தை மாமாவை பார்த்த வளவன்,அத்தை உனக்கு கண்டிப்பா விஷயம் தெரிஞ்சிருக்கும்.

நீயாவது சொல்லுனு பார்வதியின் அருகில் சென்று கேட்க,என்னத்தை சொல்ல சொல்லுற அப்பு என்று கதறி அழுதார்.

என்னடா உனக்கு தெரியனும்?. பதினாறு ஊர் மக்களுக்கு முன்னாடியே நம்ப அப்பாவை அந்த அன்பழகன், ரோட்டுல விட்டு அடிச்சார்டா என்று கதிர் கத்தி சொல்ல, வாய மூடுடா என்று வள்ளி அப்பாயி கத்தினார்.

அடிச்சாங்க?,அடிச்சாங்கனு சொல்லுறியே, ஏன் அடிச்சாங்கனு தெரியுமா உனக்கு?,சொல்லு?,உனக்கு தெரியுமா?என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி:

வீட்டிற்கு வந்த வேதாவோ குளித்து வேறு புடவையை கட்டிக்கொண்டு"முதலில்,வீட்டை கூட்டி கிளீன் பண்ணினார்".


பின்னர்,நேற்று சிங்கில் போட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி , கூடையில் வைத்து விட்டு,ஃப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து சூடு பண்ணியவர்,காப்பித்தூளை கலந்து,சூடாக ஒரு டம்ளர் காஃபியை குடித்த பிறகு தான்,தலைவலி சற்று குறைந்த போல இருந்தது.

பிறகு,அழுக்கு துணிகளை ஊற வைத்து விட்டு,அங்கிருந்த ஷோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவருக்கு,பவியின் பெற்றோர்கள் பற்றிய நினைவுகள் வந்தது.இந்த ஊருக்கு தாமரையோடு வரும் போது,எல்லா விதத்திலும் உதவியாக இருந்தது,மயிலா மற்றும் பவியின் குடும்பம் தான்.

15 வருட நட்பு,இப்படி பாதியிலே போய் விட்டதேயென்று கண் கலங்கிக்கொண்டிருக்க,நர்சம்மா, நர்சம்மா என்ற குரல் கேட்டு,கண்ணை துடைத்துக்கொண்டு, வெளியே வந்தார்.

"அங்கு,மலைவாழ் மக்களில் ஒருவர் குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நின்றிருந்தார்".

சொல்லுமா?,என்க,குழந்தைக்கு உடம்பு முடியலைனு அழுகவும்,சரி அழாதமா என்றவாறே குழந்தையை தொட்டு பார்த்தவர்,என்ன இப்படி கொதிக்குது,முதல்ல தூக்கிட்டு உள்ளே வா.

குழந்தையோடு உள்ளே வந்தவரை இங்க வாமா என்று சொல்லிக்கொண்டு பாத்ரூமிற்கு சென்றவர் குழந்தைய கீழ நிக்க வை என்றபடியே,டேப்பை திறந்து, தண்ணியை மக்கில் மொண்டு, குழந்தை தலையில் ஊத்திக்கொண்டே இருக்க,உடம்பில் நீர் பட்டதும் குழந்தை அழுதது.

ஒன்னும் இல்லைபா என்றவாறே,இன்னும் சில முறை ஊற்றியவர்,இது போதும்.

ஈரத்தை துவட்டி விடாதமா,தானாகவே நீர் காயட்டும் அழுறவனை ஓச்சு என்றபடி கபோர்டை திறந்து ஜுரத்திற்கான மருந்தை எடுத்தவர், குழந்தைக்கு மருந்தை அளந்து எடுத்து, இதை முதல்ல குடு என்றார்.

இவ்வளவு சூடு இருந்தால், குழந்தைகளுக்கு வலிப்பு வந்துரும், இனி இதைப்போல் இருந்தால்,இப்படி தான் தண்ணியை ஊற்றி எடுக்க வேண்டும்.இந்த மருந்தை நான்கு வேளையா,மூன்று நாளைக்கு கொடும்மா என்கவும்,நன்றி மா என்றபடி குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றார்.

ஊற வைத்த துணிகளை துவைத்து காய வைத்து விட்டு வீட்டை பூட்டிக்கொண்டு பவி வீட்டிற்கு செல்ல,அங்கே மயிலா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.வேதாவும் போய் இணைந்து கொள்ள,இருவரும் சேர்ந்தே சமைத்து முடித்தனர்.

பின்னர் பவியை விட்டு சாப்பாட்டை நீர் மாற்ற சொல்ல,சொன்னதை மட்டும் செய்தாள்.பவி.. பவினு வேதா கூப்பிட, நிமிர்ந்து பார்த்தவளிடம்,எதாவது பேசுடி.நீ இப்படி இருக்குறது தாங்க முடியலையடி என்று வேதா கண் கலங்க,அவளோ வழக்கம் போல விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அம்மாடி பவி சாப்டுமானு படையல் போட்ட இலையின் முன்பு அவளை உட்கார வைக்க கடமைக்கு சாப்பிட்டு எழுந்தாள்.போகும் அவளையே இருவரும் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

மயிலா,வீட்ல கொஞ்சம் வேலை, அதுவும் இல்லாமல்,நம்ப செவளையன் புள்ளைக்கு உடம்பு முடியலைனு தூக்கிட்டு வந்துருந்தாங்க.அதான் இங்க வர நேரமாகிட்டுனு வேதா சொல்ல, இருக்கட்டுங்கம்மா,நான் இங்கையே குளிச்சிட்டு,அவர மட்டும் வீட்ல போய், மாத்துக்க துணி எடுத்து வர சொல்லிருந்தேன்.

சரி... நீ முதல்ல,மிலனுக்கும், அவருக்கும் சாப்பாட்டை குடு என்று சொல்லியபடி,பவி இருக்கும் அறைக்குச் சென்றார்.

உள்ளே வந்த வேதாவின் கண்ணில் பட்டது, ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்திருக்கும் பவி தான்.

பவி என்று கூப்பிட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தவர்,தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்து விட்டு, அவள் முடியை,ஈரம் போக துவட்டி விட்டார்.

பவி... பவி...என்க,யாரோ என்ற அந்நியப்பார்வையில் அவள் பார்க்க,ஒன்னும் இல்லைடா என்றவர், இங்க வந்து உட்காரு என்க,அவளும், சொன்ன படியே செய்தாள்.

அவள் தலை முடியின் இரண்டு பக்கமும் கொஞ்சம் முடியை எடுத்து பின்னலிட்டவர்,எதாவது வேண்டுமா என்க?,இல்லை என்று தலையசைத்தாள்.

கொஞ்சம் தோட்டத்து பக்கம் போகலாமா?,அதற்கும் வேண்டாமென்று தலையசைத்தாள் பவி.

சரி கொஞ்ச நேரம் படுனு சொல்ல, அப்படியே கட்டில் மேல் சுருண்டு படுத்தவளை பார்த்து,வேதாவோ வாய் விட்டு கதறி அழ முடியாத சூழலில் இருந்தார்..

சீமக்கரை...தேவி வீடு...

"தேவிஈஈஈஈ என்று கண்ணன் கத்தி கூப்பிடுவதை கேட்டு,ரூமிற்குள் இருந்தவளுக்கு கிலி பிடித்தது".

கணவரின் சத்தம் கேட்டு,தோட்டத்தில் துணி காய வைத்துக்கொண்டிருந்த வசந்தா என்னாச்சோனு பதறியடித்து உள்ளே வந்தார்.

என்னங்க?,என்னாச்சி என்க?," உன் மவளை போய் கூப்பிட்டுவாடி என்றார்".

கணவரின் குரலிலே ஏதோ விஷயமென்று புரிந்தவர்,தேவி,தேவினு கதவை தட்டி கூப்பிட,அவளோ பொறுமையாக கதவை திறந்து எட்டிப்பார்க்க,அப்பா கூப்டுறாங்க வா என்றார்

எதுக்குமா என்க?,இப்போ வரப்போறியா, இல்லையா? என்று கண்ணனின் சத்தம் வேகமாக கேட்டது.

உள்ளுக்குள் பயமிருந்தாலும்,வெளியே காட்டிக் கொள்ளாமல்,சாதாரணமாக இருப்பது போல்,சொல்லுங்கப்பா என்று வந்தவளை,இடுப்பில் கட்டியிருந்த பெல்டை கழட்டி விலாசி எடுத்துவிட்டார்.

நம்ப குப்பன் கிட்ட சொல்லி என்ன வேலை பண்ணுன என்று பல்லை கடித்துக் கொண்டே,அடியுடனே கேட்டார்.

நான் எதுவுமே பண்ணலைப்பானு வலியில் அழுது கொண்டே சொல்ல, இதை நான் நம்பனும்?.உன்கிட்ட எவ்வளவு பொறுமையா சொன்னேன்.
நீ எந்த வேலையும் பார்க்காதே.அந்த கதிரை உனக்கு கட்டி வைக்கிறது என் பொறுப்புன்னு.

இப்போ,உன் இஷ்டத்துக்கு எல்லா வேலையும் பண்ணி,இன்னைக்கு அந்த ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துட்டே?.

எப்படியாப்பட்ட வேலை பண்ணி வச்சிருக்க நீ? என்றவர், மீண்டும் அடிக்க,வசந்திக்கோ என்ன நடக்குதென்று ஒன்னும் புரியவில்லை.

"ஆனால் இவருக்கு பிடிக்காதது என்னமோ நடந்திருக்கு என்பது மட்டும் புரிந்தது.".

அதனால் தான் இவ்வளவு ஆத்திரமென்று நினைத்தவர் அய்யோ அடிக்காதீங்க,அடிக்காதீங்க என்று மகளுக்கு அடி விழாமல் தடுக்க போக, வசதிக்கும் நாலு அடி விழுந்தது.

மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தேவிற்கு,தங்கையும் அம்மாவும் கத்தும் சத்தம் கேட்க,என்னாச்சோ?ஏதாச்சோ என்று வேகமாக இறங்கி கீழே வந்தவன் கண்ணில் பட்டது,அங்கே தங்கையை, தனது அப்பா பெல்டால் அடித்துக் கொண்டிருப்பது.

அப்பாஆஆஆ என்ன பண்றீங்க என்று ஓடி வந்தவன்,அவர் கையில் இருந்த பெல்டை பிடுங்கி தூங்கி எறிந்து விட்டு, பைத்தியம் ஏதாவது உங்களுக்கு பிடிச்சிருக்கா?என்று கத்தினான்.

ஆமாடா.இவ பண்ணி வச்ச வேலைக்கு எனக்கு பைத்தியம் பிடிக்காதது தான் குறை என்றவர்,என்ன வேலை பண்ணி வச்சிருக்க தெரியுமா??என்று கோபமாக மகனிடம் கேட்டார்.

என்னன்னு சொன்னாதானே தெரியும் என்க,நம்ம குப்பங்கிட்ட சொல்லி, கள்ளுல எதையோ கலந்து,கதிரை குடிக்க வைத்து,அவன் கிட்ட ஏதேதோ சொல்லி,ஏற்றி விட்டு, இப்போ அந்த அன்பழகன் மவளுக்கு தாலியை கட்டிட்டான்.

பதினைந்து வருஷமா ரெண்டு குடும்பத்தையும் கஷ்டப்பட்டு,இல்லாத பொய்யெல்லாம் சொல்லி நான் பிரிச்சி வைத்திருந்தேன்.

ஒரு மஞ்சள் கயிற்றால,எல்லாத்தையும் இன்று நாசமாக்கிட்டாள்டா உன் தங்கச்சி என்று கோபமாக சொல்லிக்கொண்டே அங்கிருந்த ஷோஃபாவில் போய் அமர்ந்து கொண்டார்.

அவர் சொன்ன விஷயத்தை கேட்டு வீட்டிலிருந்த வசந்தி,மற்றும் தேவ்க்கு மட்டுமல்ல,கண்ணனை பார்க்க வந்த பெருமாளும் அதிர்ந்து போனார்.

அப்பா...நீங்க என்ன சொல்லுறீங்க?, மாமாக்கு கல்யாணம் ஆகிட்டானு தேவி கேட்க? நீ பண்ணி வைத்த வேலைக்கு வேற என்ன நடக்கும்?.உன்னை யாரு முதல்ல இந்த விஷயத்தில் ஈடுபட சொன்னது?.

நான்தான் உன்கிட்ட சொன்னேன் இல்லையா,நீ எந்த வேலையும் பண்ண கூடாதுன்னு.ஏன் என் பேச்சைக் கேட்கவில்லை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மகளை அடிக்க வர,முதல்ல ரெண்டு பேரும் வாய மூடுங்களென்று தேவும் கத்தினான்.

மகனின் கத்தலை கேட்ட பிறகு நிதானத்திற்கு வந்தவரிடம்,அப்போ உங்களால் தான் அவங்க இரண்டு குடும்பமும் பிரிஞ்சிதா?

மகனின் கேள்வியில்,அச்சோ, கோவத்தில் எல்லாத்தையும் சொல்லிட்டோம் போலயே?, சரி சமாளிப்போமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

அப்பா...உங்களை தான் கேட்குறேன் நீங்க பண்ணிய வேலையால் தான் அவங்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை.அப்படி தானே??என்க,அதற்கு கண்ணனோ என்னடா ஒளரிட்டு இருக்க,போய் மூஞ்ச கழுவி,பல்ல விலக்கிட்டு சாப்டு என்றவர்,நீ என்னடி சிலை போல நிக்கிற??, போய் குடிக்க எதாவது கொண்டு வா..

ஆனால் வசந்தியோ அவர் சொன்னதை கேட்காமல்,முறைத்துக்கொண்டே நின்றார்.

மனைவி அசையாமல் அதே இடத்தில் நிற்பதை கண்டு கோவம் வர,என்னடி துளிர் விட்டு போய் விட்டா?,உள்ள போய் சொன்னதை செய்டி என்றார் அதிகாரமாக.

அதற்கு வசந்தியோ,முதல்ல, என் புள்ளை கேட்டதுக்கு பதிலை சொல்லுங்கள் என்கவும்,என்ன பதில்?.

நான் கேட்டதுக்கு என்றவன், நீங்களா சொல்ல போறீங்களா இல்லை நானே கேட்டு தெரிஞ்சிக்கட்டுமா என்ற மகனை, நிமிர்ந்து பார்த்தவர், "முழுசும் நனைஞ்சிட்டேன், இனி முக்காடு எதுக்கு"?.

ஆமா.... நானும் எங்க அப்பாவும் தான் அந்த ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சோம்டா.அதுக்கு இப்போ என்னாங்கிற?.போய் அந்த பெருமாள் கிட்ட சொல்லப்போறியா?, சொல்லிக்கடா.

"சுய அறிவு இல்லாதவன் அந்த ஆளு".

வானத்துல வெள்ளை காக்கா பறந்துச்சி நான் பார்த்தேன்னு சொன்னால், முட்டா பயல் அப்படியே நம்புவான்.

கொஞ்சமாவது சிந்திக்க மண்டையில எதாவது இருந்திருந்தால்,நான் சொன்னதை எல்லாம் நம்பி கூடப்பிறந்த தங்கச்சி புருஷனையே சந்தேகப்படுவானா?.

பிறந்து வளர்ந்ததில இருந்து ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தவன், கேட்பார் பேச்சை கேட்டு,அத்தனை பேருக்கு முன்னாடி தங்கச்சி புருஷனை அடிப்பானா?.

ஹாஹாஹா.... அந்த முட்டாப்பயலுக்கு இன்னும் உண்மை தெரியலை,கூட இருந்து குழிய பரிச்சது நான் தான்னு. என்னாலை தான் அந்த குடும்பத்துக்குள்ள மருமவனா போக முடியலை."தலையெழுத்து..இதோ நிக்கிறாளே இவளை கட்டி மாறடிக்கனும்னு இருந்துருக்கு".

சரி போனது போய் தொலையட்டும், உனக்கு அந்த பெருமாள் மவளையும், இந்த கழுதைக்கு அந்த கதிர் பயலையும் கட்டி வைக்க,இத்தனை வருஷமா பார்த்து,பார்த்து காய நகர்த்திட்டு வந்தேன் டா.கடைசி நேரத்தில,எல்லாத்தையும் உன் தங்கச்சி கெடுத்துட்டாள்.ச்சை என்று ஷோஃபாவின் மேல்,கை விரல்களை மூடி குத்தினார்.

தந்தை சொன்னதை கேட்ட தேவ்,அப்படி என்ன அந்த குடும்பத்து மேல கோவமென்றான்?.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top