• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி!

பொழுதும் விடிந்தது.நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான்," இரவு முழுவதும் சாவு வீட்டில் இருந்தனர்".

அங்கு இருந்தவர்களுக்காக,வாங்கி வந்த டீயை,மிலனுன், கொடுத்துக்கொண்டிருந்தான்."இந்த குளிருக்கு,அந்த டீ தேவையாகவே இருந்தது".

பவியோ இரவு முழுவதும் தூக்கமால், சிலை போல,நேற்று எங்கே உட்கார்ந்தாளோ,அதே இடத்தில் இப்பொழுது வரை உட்கார்ந்திருந்தாள்.

"போஸ்ட்மார்டம் செய்த உடல்.அதை ரொம்ப நேரம் வைத்திருக்க வேண்டாமென்று இரவே முடிவு செய்ததால்,காலை பத்து மணிக்கு மேல் பாடியை எடுக்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

ஒரு வாய் டீயாவது குடி பவியென்று வேதா வற்புறுத்தியும் அவள் அசரவில்லை.

பவியின் தாய்வழி உறவினர்கள் யாரும் இல்லாததால்,தந்தை வழியில் சிலருக்கு மட்டுமே செய்தியை தெரிவித்தனர்.

செய்ய வேண்டிய சடங்குகளை அங்குள்ளவர்கள்,இருவருக்கும் செய்து முடித்து,இருவரின் உடலையும் ஊர்தியில் ஏற்ற,அங்கிருந்து சுடுகாட்டை நோக்கி சென்றனர்.

ஆண்களும்,தூரத்திலிருந்து வந்திருந்த உறவினர்களும்,பாடியின் பின்னாடியே சென்றனர்.

எனக்கு கொள்ளி வைப்பாயென்று வரம் வாங்கி பெத்தனே,இன்னைக்கு உனக்கு கொள்ளி போடுறனேனு கொள்ளிக்குடத்தோடு பவியின் தாத்தாவோ அழுதபடி வந்தார்.

மயிலாவும், இன்னும் சில பெண்களுப் வீடு வாசலை கழுவி விட்டனர்.வேதாவோ பவியை எழுப்பி கொண்டு போய் குளிக்க அனுப்ப,"பொம்மை போல அவர் சொன்னதையெல்லாம் செய்தாள்".

நர்சம்மா..இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கா?,எனக்கு ஏதோ அச்சமா இருக்குங்கம்மானு மயிலா சொல்ல, "எனக்கும் அந்த யோசனை தான்". நாளைக்கு நம்ப ஹாஸ்பிட்டலுக்கு டாக்டர் வருவாங்க.எதுக்கும் பவிய அவர் கிட்ட காட்டலாம் மயிலா.

அதிர்ச்சிதான்.மனசு விட்டு அழுதால் எல்லாம் சரியாகிடும்.ஆனால்,ஒரு சாமார்த்தியமா அழாம இருக்காளே, அது தான் தாங்க முடியலை மயிலா.
"பெத்தவள் இல்லைனு கேட்டே இப்படி ஆகிட்டாள்".

இதில் அப்பாவும் இல்லைனு என்னைக்கு இவளுக்கு புரியப்போகுதோனு,அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

சிட்டுக்குருவி போல திரிஞ்சவ,இப்படி முடங்கி போயிருக்காளே மயிலானா வேதாவும் கண் கலங்கினார் .

சுடுகாட்டுக்கு சென்றவர்களில் சிலர் மட்டுமே வீட்டிற்கு வந்தனர்.

பவியின் தாத்தாவோ,அங்கிருந்த மருது குடும்பத்திடமும்,வேதாவிடமும் சொல்லிக்கொண்டு கோவைக்கு கிளம்பினார். உடல்நிலை சரியில்லாத மனைவியை,பார்க்க வேண்டிய கடமையும் அவருக்கு இருப்பது மற்றவர்களுக்கு புரிந்தது.

இனி பவி கூட யார் இங்கிருந்து, தினமும் மதிய வேளைக்கு படைக்க உணவு சமைப்பது என்ற பேச்சு வந்தது.
வேதாவின் வேலை பற்றி தெரிந்ததால், தனது வீட்டிலே சமைத்து கொண்டு வந்து இங்கே படைக்கலாம் என்றார் மயிலா.

அப்பொழுது,மருதுவோ ஷோல்டரில் ஃபேகை மாட்டிக்கொண்டு,
தூரத்தில் வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

அங்கே வந்தவன்,நைட் டூட்டிக்கு போகனும் என்றும்,காரியத்தின் அப்பொழுது வரேனென்று தந்தையிடம் மட்டும் சொல்லி விட்டு வேறு யாரையும் பார்க்காமல் செல்ல,மயிலாவோ பேயறைந்தது போல,அதிர்ந்து போனார் .

நேற்றிலிருந்து இதுவரை ஒரு வார்த்தை,ஏன் அவர் முகத்தை கூட மருது பார்க்கவில்லை.

என்னய்யா இவனென்று கணவனிடம் கேட்க,மூக்கையனோ,மனைவியை ஒரு முறை முறைத்து பார்க்க,வாயை மூடிக்கொண்டார் மயிலா.

அப்பொழுது பவியின் வீட்டின் உள்ளே இருந்து வந்த வேதாவோ,நான் வீட்டுக்கு போய் புடவைய மாத்திட்டு வரேன்.பிறகு நீ வீட்டுக்கு போ என்க,சரிங்க நர்சம்மா நீங்க போய்ட்டு வாங்க என்றார்.

வேதா போகும் வரை அமைதியாக இருந்த மயிலா,தற்பொழுது அங்கு யாரும் இல்லை என்பதால்,என்னங்க அவன் பாட்டுக்கு போறான்.நீங்க எதுவுமே சொல்லாம குத்து கல்லா இருக்கீங்க என்க?,மூக்கையனோ நீ சொல்லிட்டு செஞ்சியானு அழுத்தமாக கேட்டார் .

"அவர் கேள்விக்கு மயிலாவால் பதிலும் சொல்ல முடியவில்லை".அது வந்துயானு சொல்ல வர,கையை நீட்டி மனைவியை தடுத்தவர்,அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சி,நீ இப்படி ஒரு நிலமையில இழுத்து விட்டது உனக்கு பெருசா தெரியலை?.

அவன் சொல்லாம போனது தான் இப்போ தெய்வ குத்தம் அப்படி தானேனு பல்லை கடித்துக்கொண்டே கேட்க,ஏங்க...அந்த இடத்தில் எனக்கு என்ன தோனுச்சோ அதை தாங்க செஞ்சேன் என்கவும்,உனக்கு தோனுவதை செய்ய,அவனோட விருப்பம் தேவையில்லை அப்படி தானே?

வார்த்தைகளை சாட்டையை போல் சுடற்றி அடித்து,கேள்வியாய் கேட்ட கணவருக்கு,பதில் சொல்ல வழி இல்லாமல் நொறுங்கி நின்றார்.

ஆனது ஆகிட்டு...கொஞ்ச நாள் அவனை விடு.உடனே,ஊர்ல இருக்க பொம்பளைங்க போல,பேரப்புள்ளைய பாக்கனும்,அது இதுனு,வாய தொரந்த நல்லா இருக்காது.முதல்ல ஒன்பதாம் நாள் காரியம் முடியட்டும்.மற்றதை பிறகு பேசிக்கலாம்.போய் பவி கூட இரு.

ம்ம் என்றவாரே தலையசைத்து,உள்ளே சென்று பார்த்தவரின் கண்ணிலிருந்து அருவி தான் பொழிந்தது.பவியோ அங்கே தாய் தந்தையின் போட்டோவை தரையில் வைத்து,அதன் மேல் தலை வைத்து படுத்திருந்தாள்.

ஆனாலும் அவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வரவில்லை. மலையம்மா.நீதான் என் புள்ளைங்களுக்கு துணையா இருக்கனும் ஆத்தா என்று வேண்டிக்கொண்டார்.

சீமக்கரை கதிர் வீடு!

தங்கள் வீட்டு மாடுகளின் மேல்,விபூதி பட்டைகளை பூசி,அதன் மேல் குங்குமம் வைத்தான் வளவன்.கதிரும்,முத்துவும், மாடுகளுக்கு வாங்கிய சலங்கை வைத்த குஞ்சத்தை,அதன் கொம்புகளில் கட்டிக் கொண்டிருந்தனர்.

கதிரோ காலையிலே கொம்புகளை சீவி,அதன் மேல் பளபளக்கும் வகையில் வண்ணங்களை பூசி விட்டான்.

பிரகாசம் தாத்தாவோ நெற்கதிரில் பின்னிய மாலையை,எல்லா மாடுகளுக்கும் கழுத்தில் கட்டிக் கொண்டே வந்தார்.செல்வியோ,சுத்தம் செய்த உழவுக்கருவிகளின் மேலே சந்தனத்தையும்,குங்குமத்தையும் வைத்துக் கொண்டிருந்தாள்.

நிலவனோ விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும், பாறை,மண்வெட்டி,கதிர் அருவாள்,ஏர் கலப்பைகள்,என உழவுப் பொருட்களையெல்லாம் அங்கே கொண்டு வந்து வைத்தான்.

வீட்டில் சமைத்த உணவுகளோடு,தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், வயலில் விளைந்த நெல்,சோளம், பயிறுகளையும்,இன்னொரு தட்டில்,தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என,எல்லாம் பூஜைக்காக எடுத்து வைத்தனர்.

என்னம்மா ஆரம்பிக்கலாமானா பிரகாசம் தாத்தா கேட்க,இதோ என்றவாறே,உள்ளே இருந்த எல்லாவற்றையும் வெளியே எடுத்து வந்து வைத்தார்கள்.

அப்பொழுது,வேலு,ஜான்,மற்றும் செல்வமும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செல்வத்தை பார்த்து வாங்க மாப்பிள்ளை என்றார் பிரகாசம் தாத்தா.
வரேன் மாமா என்றவரிடம், மற்றவர்களும் வாங்க வாங்க என்றனர்.

இன்னும் உன் பெரிய மவன் வரலையானு பிரகாசம் தாத்தா வள்ளி அப்பாயிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பெருமாளும்,லாரன்ஸ் தம்பதியினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

லாரன்ஸ் தம்பதியை பார்த்து வாங்க என்று சொல்லி விட்டு,பூஜை முடிந்த பிறகு மற்றது பேசிக் கொள்ளலாம் என்றார்.பின்னர்,அவரவர் கைகளில் கிடைத்த பொருட்களை மேளமாக தட்டிக்கொண்டே,பொங்கலோ பொங்கல்,மாட்டுப்பொங்கல் என்று, அனைவரும் சொல்லிக்கொண்டே மூன்று முறை மாடுகளை சுற்றி வந்தார்கள்.

பிறகு,சூடத்தை ஏற்றிய பிரகாசம் தாத்தா,மாடுகளுக்கும், உழவுப்பொருட்களுக்கும் காட்டி விட்டு, வீட்டிள் உள்ளவர்களுக்கு எரிகின்ற சூடத்தை காட்ட,அவர்களும் சூடத்தை வணங்கிய பின்,அனைவரும் மாடுகளுக்கு முன்பு,நெடுஞ்சான் கிடையாக கீழே விழுந்து வேண்டிக்கொண்டனர்.

முத்துவோ சமைத்த சக்கரை பொங்கல், உப்பில்லாத வெண்பொங்கல், அதற்கு தொட்டுக்கொள்ள செய்த,உப்பில்லாத பரங்கிக்காய் பச்சடி,மற்றும் வாழைப்பழத்தை எல்லாம் ஒன்றாக கலந்தார்.

பிறகு,அதை எடுத்துக்கொண்டு போனவர்,எல்லா மாடுகள் வாயிலும் கொஞ்சமாக கலந்த சாதத்தை வைத்து விட, மாட்டுப்பொங்கல் பூஜையும் சிறப்பாக முடிந்தது.இனியாவது மனுஷன் வயிற்றுக்கு எதாவது போடுவீங்களா?என்றான் நிலவன்.

மாடுகளுக்கு பொங்கல் வைப்பதால் பெரும்பாலும்,மதிய உணவு வீட்டில் செய்ய மாட்டார்கள்.நிலவா,இனி உள்ள போய் சாமிக்கு சூடம் காட்டிட்டு,சாப்டலாம்பாஎன்றார் பெருமாள்.

அதைப்போலவே வீட்டின் உள்ளேயும் போய்,அங்கிருந்த சாமி படத்திற்கு முன்பு பூஜையை முடித்ததும், செல்வி...,இலைய கழுவி எடுத்து வா என்க.பார்வதியும்,சீதாவும் சமைத்த உணவுகள் மற்றும்,இனிப்பு பதார்த்தங்களை எடுத்து வந்து முற்றத்தில் வைத்தார்கள்.

அண்ணி எல்லாரையும் கூப்டுங்க என்று ராதா சொல்ல,வெளியே வந்த பார்வதி,அப்பா சாப்ட வரச்சொல்லுங்க..

லாரன்ஸ்,பெருமாள்,முத்து,ன பிரகாசம், செல்வம், இவர்கள் ஐவரைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும்,வரிசையாக முற்றத்தின் தரையில் வந்து உட்கார்ந்தனர்.

செல்வியும் வாழை இலையை வைத்து,அதன் மேல் தண்ணீரை தெளித்து செல்ல,சீதாவும்,பார்வதியும் சமைத்தவைகளை இலையிலும் பரிமாறினார்கள்.

அப்பொழுது,செல்வி,இதில் நீ சமைச்சது எதுனு வேலு கேட்க,மாமா.. நான் சும்மா எடுபுடி வேலை தான்,மெயின் பிச்சரை ஓட்டுனது எல்லாம் உங்கள் தாய்க்குலங்கள் தானென்றாள்.

ஹப்பாடா....அப்போ உசுருக்கு ஆபத்து இல்லை.நம்பி சாப்டலாம்டா என்ற வேலுவின் வார்த்தையை கேட்டு மற்றவர்கள் சிரிக்க,செல்வியோ கொலை வெறியில் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

ஏன் டா,குட்டி கிட்ட வம்பு பண்ணலைனா, தூக்கம் வராதோ என்றான் ஜான்?.

ஆமாடா....நீ வேண்டுமானால் ராவுக்கு தூங்க தாலாட்டு பாடு.நான் நல்லா நிம்மதியா தூங்குறேன்.முதல்ல சாப்ட்டு எந்திரிங்கடா.மூன்று ஐயனாரும் ஒன்னா கூடிருக்காங்க.கல்யாணம் பண்ணலை,காது குத்தலைனு பேசியே கொன்னுடுவாங்க.நாமளாம் அதுக்குள்ள சாப்ட்டு தப்பிக்கனும் என்றான் வேலு.

கிண்டல்,கேலிகளோடு சாப்பிட்டு முடித்து இவர்கள் எழவும்,வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அந்த மாரியாத்தா புண்ணியத்துல,மாட்டாமல் தப்பிச்சோம்டா பனைமரம்.
இல்லை காதுல ரத்த ஆறே ஓடியிருக்கும்.

மாப்பு...நேரத்தை கடத்தாம சீக்கிரம் மாட்டை ஓட்டியாங்கடா,கோயிலுக்கு போகலாமென்று வேலு சொல்ல,யோவ் மாமா,எதுக்குயா சுடுதண்ணி காலுல கொட்டுன போல பதறி கிட்டு இருக்கனு நிலவன் கேட்கவும்,அதற்கு வேலுவோ,நீ போய் அந்த மூன்று மீசைங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன் என்றான்.

ஏன் மாமா?,ஏன் இப்படி? என் காது நல்லா இருக்குறது உனக்கு பொறுக்கலையா?.

இப்போ தெரியுது இல்லை,வாய மூடிகிட்டு வாடா என்றவன்,நீங்க என்னடா புதுப்பொண்ணு சமைஞ்சதை பார்த்த போல நிக்கிறீங்கனு அவர்கள் மூவரையும் முறைத்துப் பார்த்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கன்னிக்கோயில்!

யார்,யார் வீட்டில் மாடுகள் இருக்கின்றதோ,அவர்கள்,பசு மாடுகளை தவிர்த்து,காளை மாடுகளை ஓட்டிக்கொண்டு கோயிலுக்கு முன்பு உள்ள திடலில் வந்து சேர்ந்தனர்.


எல்லாரும் வந்தாச்சாப்பா என்று பூசாரி கேட்கும் போது,அந்நேரம் தங்கள் வீட்டு மாடுகளோடு,கதிரும்,வளவனும் வந்து சேர்ந்தனர்.ஜானும்,நிலவனும் மற்றவர்களோடு இணைந்து வேடிக்கை பார்க்கும் இடத்தில் நின்று கொண்டனர்.

வேலுவோ,வரும் வழியில் தெரிந்தவர் எதோ மெஷின் விஷயமாக கேட்க,நீங்க போங்கடா."நான் வரேன் என்று சொல்லி விட்டான்".

என்னப்பா ஆரம்பிக்கலாமா என்று மீண்டும் பூசாரி கேட்க,ஆரம்பிக்கலாம் என்ற சத்தம் பல குரல்கள் மூலமாய் கேட்டது.

வழக்கம் போல ஒன்னு,ரெண்டு,மூன்று என்று பூசாரி சத்தமாக சொல்ல,தங்கள் மாடுகளோடு கோயிலை சுற்றி ஒடத்தொடங்கினர்.

"சிலருடைய மாடுகள்,கூட்டத்தை பார்த்து மிரண்டு வேறு பக்கம் ஓடியது". சிலரின் மாடுகள் ஓடாமல் நடப்பதை பார்த்து, விரட்டிக்கொண்டு இருந்தனர்.

"வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாரும்,அங்கு நடப்பவைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்".

ஒரு வழியாக மூன்று சுற்று பொங்கலோ பொங்கல்,மாட்டுப்பொங்கல் என்ற கோஷத்தோடு,கோயிலை சுற்றி வந்ததோ ஒரு சிலரின் மாடுகள் மட்டும் தான்.

பிறகு வரிசையாக நிற்கும் மாடுகளுக்கு,விபூதியை பூசி விட்டு, ஓட்டிட்டு போகச்சொன்னார் .

இவர்களும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டை நோக்கிச் செல்லம் போது, "ஜான் மட்டும் ஏதோ யோசனையாக வருவதை பார்த்த கதிர் என்னடா யோசனை என்க, அவளைக் காணுமேடா?, நேற்றும் கோயிலுக்கு வரலை.சரி இன்றைக்காவது பாக்கலானு இருந்தேன்,இப்பவும் வரலையே என்கவும்..

அதுசரி."பெருங்கவலை தான் டா என்றவன்",எதாவது வேலையா இருக்கும்.அதனால் தான் அந்த புள்ளை வந்துருக்காது."நாளைக்கு மஞ்ச தண்ணி விளையாட்டு இருக்குடா".
ஊர்ல இருக்குற எல்லாரும் ரோட்டுல தான் இருப்பாங்க.அப்போ பாக்கலாம் உன் பச்சைக்கிளிய என்றான்.

அப்பொழுது ஜானின் ஃபோனிற்கு கால் வர,எடுத்து பார்த்தவன்,வேலு தான் பண்றான்டா என்றவாறு அட்டென் பண்ணியவன்,சொல்லுடா என்க,வேலு ஃபோனில் சொன்னதை கேட்டவன், சரிடா சரி என்று வைத்து விட்டு, பங்காளி,கதிரடிக்கும் மிஷின் வந்துட்டாம் டா.ஆளுங்களை கூப்பிட்டுக்கொண்டு களத்து மேட்டுக்கு போய்ட்டான் டா..

செல்வம் மாமா கிட்ட சொல்லிட்டு, நம்மை வரும் போது,ஆளுங்களுக்கு டீ எடுத்துட்டு வர சொன்னான்.

அதைக்கேட்டு,அண்ணா நாங்களும் வரோம்னு வளவன் சொல்ல,ம்ம் என்றான்.

வீட்டிற்கு வந்து மாடுகளை கவனையில் கட்டி விட்டு,அங்கு பேசிக்கொண்டிருந்த செல்வத்திடம் விஷயத்தை சொல்ல, சரிப்பா நான் இதோ போறேன் என்றவரிடம்,மாமா இருங்க நானும் வரேனென்றபடி உள்ளே போன வளவனோ வேறு டிரஸை மாற்றிக்கொண்டு வந்தான்.

நானும் வரேன் மாமானு நிலவனும் சொல்ல,மருமவனே,பனி சாரல் அதிகமா இருக்கும்யா.நீ வீட்ல இரு.
நாளை கழிச்சி பள்ளிக்கூடம் போகனுமே என்றவரிடம்,அதுலாம் ஒன்னும் ஆகாது மாமா நானும் வரேன்.

சரி...,போய் காதுல போட்டுக்க மப்ளர எடுத்துட்டு வா என்றவர்,வண்டியில் ஏறி ஸ்டார்ட் பண்ண,அவரோடு வளவனும், நிலவனும் ஏறியதும்,களத்து மேடை நோக்கி சென்றார்கள்.

நான் போய் அத்தை கிட்ட டீ போடச்சொல்லி வாங்கி வரேன்னு சொல்லிய ஜான்,பார்வதிக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல, சரிக்கண்ணு என்றார்

மேலே வந்தவர்கள்,போட்டிருந்த புது டிரஸை கழட்டி போட்டு விட்டு, வேறு டிரஸை போட்டுக்கோண்டு வேலு வீட்டிற்கு வந்தவர்கள் அத்தைனு கூப்பிட்டபடியே உள்ளே போக,வாங்கப்பு என்றவாறே டீ போடும் வேலையில் இருந்தார்.

பத்து நிமிடத்தில் போட்ட டீயை,கேனில் ஊற்றி மூடியவர் குடிப்பதற்கு டம்ளரையும் எடுத்துக்கொண்டு, வாங்கப்பு போகலாம் என்க,அதான் நாங்கள் போறேமே, நீ வீட்ல இருக்க வேண்டிய தானேனு இருவரும் சொல்ல, நான் மட்டும் மொட்டு,மொட்டுனு தனியா இருக்கனும்பா.

அங்க வந்தாலாவது எதாவது வேலை இருக்கும்ல என்ற பார்வதிக்கு,
நீ ஒன்னும் செய்ய வேண்டாம். வந்து சும்மா உட்காருத்தைனு கதிர் சொல்ல,
சரிப்பா என்றவாறே வீட்டை பூட்டியவர், கதிரோடு வண்டியில் ஏறிக்கொள்ள, மூவரும் களத்து மேட்டுக்கு சென்றனர்.

மூவரும் அங்கு போய் சேரும் போது மிஷின் ஓடிக்கொண்டிருக்க,ஆட்கள் நெற்கதிர் கட்டுகளை தூக்கி வந்து கொடுக்க,வேலுவோ அதை ஒற்றையாளாய் வாங்கி மிஷினில் போட்டுக்கொண்டிருந்தான்.

செல்வமும்,வளவனும் வெளியே வரும் வைக்கோலை உதறி,ஒரு பக்கம் தூக்கி எறிந்துக்கொண்டிருந்தனர்.

இன்னும் சிலர்,மிஷினிலிருந்து சுத்தம் செய்து வெளியே வந்து குமியும், நெல்லுங்களை சாக்கில் அள்ளி,ஒரு ஓரமாக மூட்டையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.நிலவனோ தற்காலிகமாக தயார் செய்த குடிலுக்குள் உட்கார்ந்து,வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

வண்டியை நிறுத்தி விட்டு வேட்டியை மடித்து கட்டிய கதிரோ, ஓடிக்கொண்டிருக்கும் மிஷினின் இன்னொரு பக்கமாக ஏறி,
கட்டு தூக்கிட்டு வருபவர்களை,இந்த பக்கம் எடுத்து வாங்கணா என்று சத்தமாக கத்தி சொன்னான்

மிஷின் ஓடும் சத்தத்தில் காது கேட்காது என்பதால்,சைகையாலும் சொல்லிக்காட்டினான்.

டீ கேனை எடுத்து வந்த ஜான்,வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம், அண்ணா டீ குடிச்சிக்கிறீங்களானு கேட்க,குடுப்பா ஜானு என்க.

நிலவன் குடிலில் இருப்பதை பார்த்த பார்வதி, நீயும் வந்துட்டியா கண்ணென்று சிரித்து விட்டு
அவரும் ஜானும் வேலையாட்களுக்கு டீயை கொடுக்க,அவர்கள் குடிக்கும் வரை சிறிது நேரம் மெஷினை நிறுத்தி வைத்தனர்.

பின் மீண்டும் வேலை ஆரம்பித்து சிரிப்பு, கலாட்டாவோடு நடந்து கொண்டிருந்தது.எல்லா நெற்கதிர் கட்டுகளையும் மெஷினில் போட்டு,வேலையை முடிக்க,நள்ளிரவு மூன்று மணி ஆனது.குடிலுக்குள்ளே நிலவனும் தூங்கி விட்டான்.

பின்னர் சாமிக்கு முதல் காணிக்கையாக,ஒரு பறை நெல்லை எடுத்து தனியா வைத்து விட்டு,வேலை செய்த ஆட்களுக்கான கூலியை செல்வமும்,வளவனும் அளந்து ஓரமாக எடுத்து வைத்தனர்.

அதிகாலை நான்கு மணி அளவில் நெல்லு மூட்டைகளை ஏற்றிச்செல்ல லாரியும் வந்தது.எல்லா மூட்டையையும், அவர்கள் எடுத்து வந்த எடை மெஷினில் அளந்து,அதை தைத்து லாரியில் ஏற்றி விட்டனர்.

களத்து மேட்டுக்கு பக்கத்தில் இருக்கும் போர் கொட்டாயின் உள்ளேச்சென்று,மோட்டாரை வேலு போட்டு விட,நெல்லு சொணை போக அதில் எல்லாரும் கை, கால்களை கழிவிக்கொண்டு வந்தனர்.

பின்னர்,சரிடா வீட்டிற்கு கிளம்பலாம்னு கதிர் சொல்ல,வாங்கப்பு டீ போடுறேன் குடிச்சிட்டு விடிஞ்ச பின்ன வீட்டுக்கு போகலாம்னு பார்வதி கூப்பிட,அதற்கு செலாவமோ இன்னும் விடிய என்னடி இருக்கென்றார்.

சரி போலாம் வாங்களென்று வண்டியில் ஏறி வேலு வீட்டிற்கு சென்றனர்.

பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே வந்த பார்வதி, அடுப்பை பற்ற வைத்து டீயை போட்டு வந்து அவர்களுக்கு கொடுக்க, வாங்கி குடித்தவனுங்கள், அங்கிருந்த முற்றத்து தரையிலே சாய்ந்து படுத்து விட்டனர்.

என்ன பாரு இவனுங்க வெறுந்தரையிலே தூங்கிட்டானுங்க என்றபடியே உள்ளே போனவர்,இரண்டு பெட்ஷீட்டை எடுத்து வந்து அவர்கள் மேலே போர்த்தி விட்டு,அங்கிருந்த கயிற்றுக்கட்டிலில் அவரும் படுத்து விட்டார்.

சிறிது நேரம் உள்ளரையில் படுத்திருந்த பார்வதி,சேவல் கூவும் சத்தம் கேட்டு, எழுந்து போய் வாசலில் சாணம் தெளித்து, கூட்டி கோலத்தை போட்டு உள்ளே வர,வளவன் எழுந்திருந்தான்.

ஏன்பா இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டிய தானே என்க,உன் மவளுங்க மேல பூசுறதுக்கு,கலர் பவுடர் வாங்க மறந்துட்டேன் அத்தை."காலையிலே போய் வாங்கிட்டு வந்துடுறேன்".

உன் சின்ன மவள்( அல்லி) என்னை அடையாளம் தெரியாம ஆக்குறதுக்கு முன்னால,அவளை இன்றைக்கு நான் ஒரு வழி பண்ணனும்னு தனது அத்தையிடம் சொல்லிக்கொண்டு, தங்கள் வீட்டை நோக்கிச்சென்றான்.

நன்கு விடிந்தது...ஊருக்குள் வயது வித்யாசம் பார்க்காமல் மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடும் விழாவும் ஆரம்பமானது.

"மாமன்,மச்சான் முறை உள்ளவர்கள் எல்லாரும் இன்றைக்கு ஒரு வழி ஆகி விடுவார்கள்".கையில் எந்த தண்ணி கிடைக்குதோ,அதில் போட்டு புரட்டி எடுத்து விடுவார்கள்.

இதற்காகவே சில இளம் பெண்கள், தங்கள் மனதுக்கு பிடித்தவன் மேலே பூசுவதற்காக,கலர் பொடிகளையெல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள்.இன்று,யாரும் யாரையும் தவறாக நினைத்து பேச வழியில்லை.

அப்பொழுது,ரோட்டில் பேசிக்கொண்டே வந்துக்கொண்டிருந்த பெருமாளின் மீது, அண்ணி முறை உள்ளவர் கஞ்சி தண்ணியை ஊற்றி செல்ல,பக்கத்தில் வந்தவர்களுக்கு அதைப்பார்த்து சிரிப்பு தான்.

கொழுந்தனாரே,என் தங்கச்சி கிட்ட சொல்லி,செங்கல்லை எடுத்து தேய்ச்சிக்குங்க என்று சொல்லி சென்றார் அந்த பெண்மணி.

சரிங்கண்ணி என்று சிரித்துக்கொண்டே அவரும் சொல்லி விட்டு, மீண்டும் விட்டக்கதையை அவர்கள் பேசிக்கொண்டே வரும் போது,சில அடி தொலைவில் பூசாரி தலை தெரிக்க ஓடிக்கொண்டிருக்க,அவரை இரண்டு பெண்கள் கையில் தண்ணியோடு துரத்திக்கொண்டிருந்தனர்.

டவுனில் போய் கலர் பொடிகளை வாங்கி வந்த வளவன்,கொஞ்சம் பழையதாக இருந்த டீஷர்டை எடுத்து போட்டுக்கொண்டு அத்தை வீட்டை நோக்கி சென்றான்.

அம்மா இன்றைக்கு உன் அண்ணன் மவனுக்கு இருக்கு கச்சேரி என்ற அல்லியோ தோட்டத்தில் இருந்த சேற்று நீரை ஒரு குவளையில் நிரப்பினாள்.

பிறகு,அதனுள் கலர் பொடிகள், மாட்டுக்கு வைக்கும் கஞ்சி தொட்டியில் இருந்த அடி வண்டல்களில் கொஞ்சம் அள்ளி போட்டு,மூக்கை ஒரு கையால் பிடித்துக்கொண்டே, இன்னொரு கையில் குச்சியை வைத்து கலக்கிக்கொண்டிருந்தாள்.

அந்நேரம் தோட்டத்திற்கு வந்த தாமரை,ஏன் டி இதெல்லாம் என்க?.

அந்த பனங்கா மண்டையனை இன்னைக்கு பழி தீர்த்துக்கிட்டா தான் உண்டுக்கா.இல்லை அடுத்த வருஷம் வரை காத்திட்டு இருக்கனும்.

ஒவ்வொரு வருஷமும் மாமா என் மேல ஊத்த வருவதற்கு முன்னாடியே,நான் தான் அவர் மேல ஊற்றிடுவேன்.இந்த முறை மிஸ் ஆகக்கூடாதுக்கா."அப்புறம் வரலாறு என்னை தப்பா பேசும் கா".

தங்கை சொன்னதை கேட்டு தலையில் தட்டிக்கொண்ட தாமரை,என்னமோ பண்ணுடி என்றபடியே தோட்டத்து வாசல் வழியாக முன்பக்கம் வந்து பார்க்க,அங்கே மஞ்சள்தண்ணி விழா கோலாகளாமாக நடந்து கொண்டிருந்தது.

அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு,தொலைவில் வளவன் வருவது தெரிந்தது.

அச்சோ...மாமா பாவம் என்று நினைத்தவள் பின்னாடி திரும்பி தங்கையை பார்க்க,அல்லியோ கையில் சொம்போடு வந்து கொண்டிருந்தாள்.

வாசலுக்கு வரும்போதே வளவனை அல்லி பார்த்து விட,தாமரை பார்ப்பதற்குள்,கீழே குனிந்து கொண்டே பின்னாடி சென்றவள்,பக்கத்து வீட்டு சந்து வழியாக பொறுமையாக வந்தாள்.

அல்லி செய்ய போறதை பார்த்த தாமரை, அய்யோ மாமா என்று கத்துவதற்குள்,வளவனுக்கு பின்னாடியே வந்தவள்,தன் கையில் வைத்திருந்ததை நடந்து கொண்டிருந்தவன் மேலே ஊற்றி விட்டு, மாமா இந்த முறையும் தோத்துட்ட என்று சொல்லிக்கொண்டே,வந்த வழியாகவே திரும்பி ஓடி போய்விட்டாள்.

"இந்த முறையும் இவள் தானா முதல்ல ஊத்துனவள்" என்று பல்லை கடித்தவன், முகத்தை துடைத்து விட்டு நிமிரும் போது, தாமரையை பார்த்து விட்டான்.

ஆஹா...நம்ப ஆளு என்றபடியே அவளை நோக்கி வர,அக்கா ஓடிடு, ஓடிடு.மாமா,கலர் பொடிய உன் மேல தான் பூச வராறென்று பின்னாடியிலிருந்து கத்திக்கொண்டே அல்லியும் ஓடி வந்தாள்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top