Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
நீலகிரி!
காலையில் எழுந்த வேதா வீட்டிலிருப்பவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லியவர் பவி எழுவதற்குள் காலை டிபனையும் செய்து முடித்தார்.
"அப்பொழுது அன்னோன் நம்பரில் இருந்து கால் வந்தது".
"யார் என்று எடுத்தவர்,"அந்தபுறம் கேட்ட செய்தியில் ஒன்னும் சொல்ல முடியவில்லை".
மீண்டும் ஹலோ..ஹலோ என்பது கேட்க,நாங்கள் உடனே வரோமென்று ஃபோனை வைத்தவர்,தூங்கிக் கொண்டிருக்கும் பவியை பார்த்து விட்டு,கதவை மட்டும் லேசாக சாத்திவிட்டு மருது வீட்டை நோக்கி வேகமாக சென்றார்.
வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த மயிலாவிற்கு தூரத்தில் வேதா வருவது தெரிய,என்னப்பா..,"நர்சம்மா இவ்வளவு வேகமாக வராங்க?".
மயிலா...என்று வந்தவர் விஷயத்தை சொல்ல,"அவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது".சரிங்கம்மா,நாம உடனே கிளம்பலாம்.நீங்களும் போய் கிளம்புங்க என்க,சரி மயிலானு வீட்டுக்கு வந்தவர்,பவியை எழுப்பியவர் நாம ஊருக்கு போகனும் என்றார்".
எந்த ஊருக்கு ஆன்ட்டி?
கோவைக்கு தான் டா.நேரமில்லை உடனே கிளம்பு என்றவர்,உள்ளே சென்று தயாராகி,பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வர, பவியும் ரெடியாக இருந்தாள்.
பாட்டிக்கு சீரியஸா இருக்கா ஆன்ட்டி என்க?,ஆமாடா அதான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாங்கக.
ம்ம்.
"இப்போதான் பாசம் பொத்துக்கொண்டு ஊத்துது போல அந்த கிழவிக்கு".
அப்பொழுது நர்சம்மா என்ற குரல் கேட்க,வா என்று வீட்டை பூட்டி விட்டு, மருது ஓட்டி வந்திருந்த வேனில் ( மருத்துவமனைக்கான பழைய சின்ன வேன்)ஏறிக்கொண்டதும்,வண்டியும் கோவையை நோக்கி ஓடியது.
"இரண்டு மணி நேர பயணத்தில் மருத்துவமனையை வந்து சேர்ந்தனர்".
வேனிலிருந்து இறங்கியவர்கள்,உள்ளே செல்ல,அங்கே,"பவியின் தந்தை வழி உறவினர்கள் நிற்பது தெரிந்தது".
என்னடி பவி,கிழவி புட்டுகிச்சோ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவள், உள்ளே செல்ல,"அவளின் இதயத்துடிப்பு தாருமாறாக துடித்தது".
ஏதோ விபரீதம் நடந்த போல தோன்ற, ஆன்ட்டி என்று வேதாவின் கையை பிடித்தவள்,"மனசு ஒரு மாதிரியா இருக்கென்றாள்".
ஒன்னும் இல்லைனு அவளை அழைத்துக்கொண்டு ஐசியு நோக்கி செல்ல,பாட்டி இங்கேவா இருக்காங்க என்றவளுக்கு?,ம்ம் என்றவர்,அவளை கையோடு பிடித்துக்கொண்டே கதவை திறந்து உள்ளே சென்றார்.
உள்ளே வந்தவள் அங்கு படுத்திருக்கும் உருவத்தை கண்டு அம்மாஆஆஆஆஆ என்று கத்தியபடியே,அருகில் ஓடியவள், அம்மா அம்மா உனக்கு என்னாச்சு?,என்று கதறி அழுதவளை, தேற்ற தெரியாமல் நின்றனர்.
மகளின் கதறலில் கடைசி கட்டத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாயுக்கும் கண்ணில் நீர் வழிந்து ஓட,அங்கிருந்த நர்சை பார்த்தவாறே மேல் மூச்சு வாங்க சைகை காட்டினார்.
அவர் சைகையை புரிந்து கொண்டு,அவர்களிடம் வந்தவர் டேபிளின் மேல் துணியில் மூடி வைத்திருந்த தாலியை எடுக்க,"அதை மருதுவிடம் திக்கி திணறி கொடுக்க சொன்னார்".
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பவியை தவிர மற்றவர்களுக்கு புரிந்தது.
சார் இந்தாங்க என்று தாலிச்செயினை அவன் முன்பு நீட்ட,மருதுவோ அதிர்ந்து நின்றான்.அவனை பார்த்தவர் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த கையை தூக்க மூடியாமல் தூக்கி கை கூப்ப,அது மேலும் மருதுக்கு தூக்கி வாரி போட்டது.
மகனை நினைத்து மனதிற்குள் உடைந்தவர் தம்பி இதை பவி கழுத்துல கட்டு என்று மயிலா சொல்ல அம்மாஆஆஆஆ என்றான்.
அம்மா என்பது உண்மைனா இதை பவி கழுத்துல கட்டு என்றவரை ஒரு பார்வை பார்த்தவன்,தாலியை வாங்கிக்கொண்டு சுற்றம் மறந்து தாயின் மடியில் சாய்ந்து அழுது கொண்டிருப்பவளை கைப்பிடித்து தூக்கியவன்,அவள் முகத்தை பார்க்காமல் "கையில் இருந்த தாலியை கட்டி முடித்தான்".
அவளின் தாயிற்கு மேல் மூச்சு அதிகமாவது தெரிந்த நர்ஸ் அவரருகே ஓடி வரவும்,உயிரும் பிரிந்தது.
"அவங்க இறந்துட்டாங்க" என்று நர்ஸ் சொல்ல,"அம்மாஆஆஆ!" என்று மயங்கி விழுந்தவளை கூட பார்க்காமல், நடைபிணமாய் வெளியே சென்றான் மருது.
பவி...என்றபடியே வேதாவும் மயிலாவும் அவளை தூக்கி,அங்கிருந்த இன்னொரு பெட்டில் படுக்க வைத்து விட்டு,நர்ஸ் இவள் அதிர்ச்சியில் மயங்கி இருக்கா என்றவர்,மருந்து பெயரை சொல்லி இஞ்ஜக்க்ஷனை போடுங்க என்றார்.
அவர் சொல்லிய மருந்து பெயரை கேட்டவர்,உங்களுக்கு எப்படி தெரியும்?
தன்னை பற்றி சுருக்கமாக சொன்னவன வேதா,முதலில் அவளுக்கு ஊசியை போடுங்களென்று இத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகையை, பவியோட அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு அழுது தீர்த்தனர்
சீமக்கரை தாமரை வீடு..
செப்பு சிலை போல வந்த தாமரையை பார்த்தவர்கள் அழகா இருக்கடா என்க, "காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு" என்று சிரித்தாள்.
தாமரை,அல்லி இந்தாங்க என்று வீட்டில் கட்டிய பூச்சரத்தை இருவருக்கும் கவிதா கொடுக்க,அதை வாங்கி தலையில் வைத்துக்கொண்ட பேத்திகளிடம்,இனி கோயிலுக்கு போகலாமானா அப்பாயி கேட்கவும் ம்ம் என்றாளுங்கள்.
இந்த வருடமாவது மகனும்,மருமகளும் கோயிலுக்கு வருவாங்களானு முதியவர்கள் இருவரும் பார்க்க,வழக்கம் போல அதை கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்".
அப்பாயி நேரமாகுதுனு சிவாவின் குரல் கேட்க,இதோப்பானு பூஜை பொருட்களை பேத்திகளை எடுத்து வர சொல்லி விட்டு கோயிலை நோக்கி சென்றனர்.
அம்மன் கோயில்...
கோயிலுக்கு முன்பு உள்ள இடத்தை கூட்டி,தண்ணி தெளித்து கோலங்கள் போடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கோலத்திற்கு முன்பும் ஒரு ஆள் வந்து நின்று கொண்டு,தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த முறத்தில் ( மூங்கிலால் பின்னியது)வாழை இலையை விரித்து வைத்து,அதன் நடுவில் சமைத்த பொங்கலையும்,வாழை பழத்தையும் வைத்தனர்.
பின் பூஜை தட்டில் குங்குமம்,விபூதி, சூடம் வைத்து விட்டு,தூபக்காலில் சாம்புராணி போடுவதற்காக எடுத்து வந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இன்னும் பூஜை தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றது என்று பூசாரி சொல்லி விட்டு செல்ல,மற்றவர்களும் தயாராகினர்.
"கதிர் குடும்பம் முன்பே வந்துவிட்டது".
கலாவும்,சிவசாமியும் வந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு,ஏனோ, இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது போலிருந்தது.
"வள்ளி,சீதா,ராதா,மூவரும் ஒரு வித ஆர்வத்தோடே கவிதா வீட்டிலிருந்து வருபவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்".
அவர்கள் எண்ணத்தை பொய்யாக்காமல்,கையில் பூஜை கூடையோடு,அல்லியோடு பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்த உருவத்தை கண்டு மூன்று பெண்கள் மட்டுமல்ல,பெருமாள்,முத்து,பிரகாசமும் அதிர்ந்து போயினர்!".
கதிருக்கு அந்த நேரம் பார்த்து ஃபோன் வந்ததால்,அவன் வேறு பக்கம் திரும்பி நின்று பேசிக்கொண்டிருக்க, இவர்களுக்கான இடத்தில் வந்து ஆயத்தமாகினர் தாமரை வீட்டினர்.
ஃபோன் பேசி முடித்தவன் மீண்டும் முன்பக்கம் வந்து பார்க்க,கை வளையல் மட்டும் தெரிய பூஜை பொருட்களை எடுத்து வைப்பது தெரிந்தது.
"ம்கும்...என்ற பெருமாளின் கனைப்பில் அதிர்ச்சியில் இருந்து மூன்று பெண்களும் வெளியே வந்தனர்".
"அந்த பொண்ணு யாரு சீதானு மனைவியிடம் பெருமாள் கேட்க, கவிதாவோட பெரிய பொண்ணு தாமரை.
"என்னாஆஆஆஆ என்று முத்துவும், பெருமாளும் அதிர,அதற்கு வளவனோ ஆமாம் பா,கவிதா அத்தை மகள் தாமரை தான்".
"முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்த உருவத்தை மீண்டும் அதே சாயலில், அச்சு மாறாமல்,இரட்டை பிறவி போல கண்டதை,இவர்களால் வார்த்தையில் விவரிக்க முடியவில்லை".
நண்பர்களுடன் சில அடி தள்ளி நின்று பேசிக்கொண்டிருக்கும் கதிருக்கு தன் வீட்டினரின் அதிர்ச்சியும்,அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயமும் தெரியவில்லை.
"அப்பொழுது கோயில் உள்ளே இருந்து வெளியே வந்த பூசாரி,எல்லாரையும் பார்த்து ஆரம்பிக்கலாம் என்றவர்,அவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த பூஜை முறத்தை இரண்டு கைகளிலும் ஏந்தியவர்,சூரியன் இருக்கும் திசையை பார்த்து தூக்கி காட்ட,மற்றவர்களும் அவரைப்போல செய்தனர்.
பின்னர்...அவர் சொல்ல தொடங்கினார். உற்றார்,உறவினர்,கொண்டான், கொடுத்தான்,பங்காளி,ஊர்க்காரர், ஆடு, மாடு,கோழி,கொக்கு,ஈ,எறும்பு புல், பூண்டு,செடி,கொடி,நீர்,நிலம், இவைகளை,"எள்ளுக்காய் முள்ளு முறியாமல் இருப்பது போல"இந்த தைத்திங்கள் தொடங்கி,அடுத்த தைத்திங்கள் வரை எங்களை காக்க வேண்டும் சூரிய பகவானே என்க, அவரோடு சேர்ந்து அதைப்போல சொல்லி முடித்தனர்.
"பின்னர்,சூடத்தை ஏற்றி,சூரியனுக்கு காட்டி விட்டு,அருகில் இருக்கும் வீட்டாருக்கும் காட்டினர்.
சாம்பிராணி புகையை சூரியனுக்கு காட்டி விட்டு,இலையில் இருந்த தேங்காயை உடைத்து,நீர் மாற்றி அனைவரும் சூரிய வழிபாடை முடித்தனர்.
பின்னர்,கோயிலின் உள்ளே இருந்த குண்டானை எடுத்து வந்த பூசாரி, எல்லார் வீட்டு பொங்கலிலும் சிறிது அள்ளி,தனது பாத்திரத்தில் போட்டு கொண்டே வந்தவர் அதை உள்ளே இருக்கும் அம்மனிடம் வைத்து வணங்கி விட்டு,எல்லா சாதத்தையும் ஒன்றாக கலந்து,அதை அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து,விபூதி பூசிய பின்,அவரவர் வீட்டிற்கு செல்ல சொல்ல,மக்களும் கலைந்து சென்றனர்.
கதிரோ தன் வீட்டினர் வருவதற்கு முன்பே நண்பர்களை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.
"அடேய்..எதுக்குடா இப்படி இழுத்துட்டு போறான் இவனென்று ஜான் கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும், வாடா பனைமரமென்றான் வேலு".
வேகமாக சென்ற கதிர்,கவிதா வீட்டிற்கு வளைந்து செல்லும் தெரு முனையிலிருந்த புளிய மரத்தின் கீழே போய் நின்று கொண்டான்.
இவன் என்னடா புளியமரத்துக்கும் கீழே போய் நிக்கிறான்னு ஜான் சொல்ல, ம்ம் ..,உன் பங்காளி புளி உலுக்க போறான்.அதை எடுத்து போய் தான் மதியம் சாம்பார் வைக்கனுமென்று வேலு சொல்ல,ஜானோ நண்பனை முறைத்து பார்த்தான்.
"என்னை முறைத்து பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை".உன் பங்காளியோட பார்வை எங்கேயிருக்குனு பாரு?,அப்பொழுது தான் கதிர் முகத்தை பார்த்தான்.
அவன் ஏதோ ஒருவித பரபரப்பாக இருப்பது தெரிந்தது.
என்ன ஆச்சு இவனுக்கு?? என்று யோசனையாகவே அவன் பார்வை சென்ற திசையில் ஜானும் பார்க்க,அங்கே கோயிலில் இருந்து எல்லாரும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
ரைட்டர் வாய்ஸ்....
பொதுவாகவே...நிஜத்திலும் சரி கதையிலும் சரி உண்மை காதல் தோற்பது எனக்கு சுத்தமா புடிக்காது.
அப்படி இருக்கும் போது இங்கே மருதுவிற்கு இப்படி ஒரு சூழலை உருவாக்கியது மனதளவில் எனக்கு ரொம்ப வருத்தம் தான்.
மனமேயில்லாமலே இந்த பகுதியை எழுதினேன்.இது கதை தானே என்று என்னை நானே எவ்வளவோ சமாதான படுத்தியும், எனக்கு..சாதாரண கதை என்று கடந்து போக முடியலை.
கதைப்படி சரி என்றாலும் சீமாவின் மனசாட்சி படி மருதுக்கான முடிவு தப்பு

... சீமா...