• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
சீமக்கரை:

வண்டியில் கணம் இருந்தாலும்,"மேடு பள்ளம் பார்க்காமல் குதிரையைப் போல வேகமெடுத்து ஓடியது இரண்டு காளை மாடுகளும்".

இன்னும் ஐநூறூ அடி தூரத்திலிருக்கும் சுடுகாட்டு பாதையை கடந்து விட்டால் ஊருக்குள் செல்லும் வழியில் வெளிச்சம் வந்துவிடும்.அங்கிருந்து தான் தெரு விளக்கு இருக்கும் போஸ்ட் கம்பம் தொடங்குகின்றது.

வண்டியின் வேகத்திலிலும்,டயர்கள் கற்களின் மீது ஏறி இறங்கிய ஆட்டத்தில்,கரும்பு கட்டின் மேல் உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு விழிப்பு வந்தது.

என்ன மாமா இவ்வளவு வேகம் என்றவாறு அவர்கள் அருகில் நகர்ந்து வந்தான் வேலு.

பசிக்குதுனு சொன்னியேடா?.அதான் வேகமா வண்டிய ஓட்டுறேன் என்றவரின் பார்வையில் பட்டது, தூரத்தில் இருக்கும் உருவம்.அவரின் மேல் ஐய்யனார் சாமி இறங்குவதால், காத்து கருப்புலாம் கண்ணுக்கு தெரிந்து விடும்.யாருக்காவது ஊருக்குள் சேட்டை குணம் வந்தால்,"இவரிடம் தான் விபூதி போட்டுக்கொள்ள வருவார்கள்".

மாப்ளை...ரெண்டு பேரும் படுங்கடா என்றவர்,கழுத்தில் இருந்த தாயத்தை ஒரு நிமிடம் தொட்டு வணங்கி விட்டு, மீண்டும் மாட்டின் முதுகில் ஊசியால் குத்த,"முன்பை விட வேக மாக ஓடியது மாடுகள்".

இன்னும் பத்தடி தூரமே என்பதை கணக்கில் கொண்டவர்,அப்பா ஐய்யனாரே....உன் புள்ளைங்களுக்கு நீ தான்யா துணையா வரணுமென்று சத்தமிட்டு சொல்லிய படியே, அங்கிருக்கும் உருவத்தை பார்க்காதது போல வேகமாக வண்டியை ஓட்டினார்.

ஆனாலும் அவ்வுருவமோ மாடுகளின் கண்ணுக்கு முன் தெரிய, ஓடிக்கொண்டிருந்தவைகள் கத்த ஆரம்பித்து,இரண்டும் மிரள,கயிற்றை லாவகமாக இழுத்து பிடித்து சமாளித்து, வண்டியின் வேகத்தை சீராக்கியவர், எந்திரிங்கலே என்க,என்னாச்சு மாமா?என்றனர் வேலுவும்,இன்னொருவரும்.

"அதையெல்லாம் காலையில பேசிக்கலாம்".தூக்குறவனுங்களை எழுப்புங்க."ஊருக்குள்ள போகப்போறோம் என்றபடியே வண்டியை ஓட்டினார்".

ஒரு வழியாக எந்த அசம்பாவிதமும் இல்லாமல்,நள்ளிரவில் தெருவினுள் வந்து சேர்ந்தனர்.

"வண்டியை நேராக கதிரின் வீட்டிற்கே விட இவர்கள் வருகைக்காக தூங்காமல் அவர்கள் காத்திருந்தனர்.

வண்டியிலிருந்து அனைவரும் இறங்கிய பின்னர் மாடுகளை அவிழ்த்தவர்,அதற்கான தொட்டிகளில் இருந்த தண்ணீரை காட்ட,இரண்டு வாயில்லாத ஜீவன்களும் தாகத்தை தீர்த்துக்கொண்டது,.

பின்னர் மாடுகளை அதற்குரிய கவனையில் கட்டி விட்டு,அவர்களை தடவி கொடுத்தவர் காலையில் பாக்கலாம் என்று வீட்டிற்கு கிளம்ப, "சாப்ட்டு போடா தம்பி என்றார் வள்ளி அப்பாயி".

இருக்கட்டும் பெரிம்மா.."உன் மருமவ வாசலையே பார்த்து கிட்டு கிடப்பா", நான் போய்க்கிறேன் என்கவும் மற்றவர்களும் சொல்லிக்கொண்டு சென்றனர்.

வேலுவும் வீட்டுக்கு கிளம்புறேன் என்க,அடேய் இனி போய் என்ன சோறா கிண்ட போற?வந்து சாப்ட்டு படுடா என்றார் அப்பாயி.செல்லம்...உனக்கு இந்த மாமன் மேல எவ்வளவு பாசம் பாரு என்றவன்,இரு உன் மவ பாருக்கு ஒரு போன் பண்ணிக்குறேன் என்க, எல்லாம் சொல்லியாச்சுடா.வந்து சாப்டுங்க என்றார் பெருமாள்.

கதிரும்,வேலுவும் கை கால் கழுவி வர, இருவருக்கும் முன்னோர்களுக்கு படைக்க செய்திருந்த உணவுகளோடு, பரிமாறிவிட்டு அவனுங்களோடு ராதா,சீதா மற்றும் வளவன் மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.

நீங்க இன்னும் சாப்டாம என்ன பண்ணுறீங்கனு கதிர் கேட்க,சீதாவோ நீங்க வந்த பிறகு சாப்டலானு இருந்தோம் பா என்கவும் பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்." மற்றவர்களோ அறைக்கு சென்று படுத்து விட்டனர்".

வேலு,கதிர்,வளவன் மூவரும் தலகாணியோடு டீவிக்கு முன்பு இருக்கும் தரையில் பாயை விரித்து, படுத்தவுடனே அசதியில் தூங்கி விட்டனர்.

"செங்கதிர்களை அனைவருக்கும் சமமாக காட்சியளித்தபடியே,கிழக்கே உதயமாக தொடங்கியது சூரியன்".

அதிகாலையிலே எழுந்த செல்வி, அம்மாக்கள் உதவியோடு வாசலில் சாணம் தெளித்து,கூட்டி முடித்த பின், கோலத்தை போட்டவள்,அதன் மேலே கலர் பொடிகளால் வண்ணம் தீட்டி விட்டு,மாட்டிலிருந்து அதிகாலையில் வரும் கோமியத்தை பிடிக்க கொட்டகைக்குள் சென்றாள்.

சிறிது நேரத்திலே கோமியம் வருவது தெரிய,கையிலிருந்த சொம்பால் புடித்தவள்,மாட்டு கொட்டகையின் ஓரமாக வைத்து மூடி விட்டு,வெளியே இருக்கும் பைப்பில் கையை கழுவி உள்ளே வர,மகளுக்கு பிடித்த சூடான காஃபியை நீட்டினர்.

"அம்மானா அம்மா தான் என்று ராதாவை போய் கட்டி சொல்ல",போய் பல்லை விளக்கிட்டு குடி என்றார் சீதா.

அதானே,என்னமோ நீயே போட்ட போல ரூல்ஸ் பேசுற?,போடி,போடி என்றவாரே ஆக வேண்டிய வேலையை பார்க்க சென்றார்.ஆவி பறக்கும் காஃபி கப்போடு ஹாலிற்கு வந்தவளின் கண்ணில் தூங்கும் முவரும் பட்டனர்.

"யாரு இங்கே துங்குறா??", என்று யோசித்துக்கொண்டே வந்தவள், முதலில் தூங்கிக்கொண்டிருப்பவன், போர்வையை விலக்கி பார்க்க, வளவனாக இருந்தது.

என்னா அண்ணன் இங்கே தூங்குது???என்றபடியே,அடுத்த போர்வையை விலக்க,அந்த நேரம் பார்த்து வேலுக்கு விழிப்பு வர முகத்துக்கு மேலே தலைகீழாக தெரியும் உருவத்தை பார்த்தவன்,அய்யோ..."பேய் பேய் என்று அலறி எழுந்தான்".

அவன் எழுந்த வேகத்தில்,செல்வியின் கையிலிருந்த சூடான காஃபி தட்டி, வேலுவின் மேலேயே விழ "அய்யோ கொலை கொலை என்று மீண்டும் கத்தினான்".

வேலுவின் சத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த இருவரும் அடித்து புடித்து எழுந்து பார்க்க,அங்கே, முகத்துக்கு நேற்று இரவு,கடலைமாவும் மஞ்சளும் கலந்த போட்ட பேஸ் பேக்கை கழுவாமல் நின்று கொண்டிருந்தாள் செல்வி.

அடேய்.... என்ற பெருமாள் சத்தத்தில் கண் திறந்து பார்த்தான் வேலு.

ஏன் யா இப்படி?? என்று வளவன் கேட்க, ஏண்டா....,நான் என்னமோ வேண்டும்னு பண்ணுன போல ஏன்,நோன்னு...?.

இந்த பேய் தான் டா மூஞ்ச கிட்ட வந்து காட்டுச்சி என்று செல்வியை காட்ட, அவளை முறைத்து பார்த்தான் கதிர். அண்ணா....அது வந்து என்று செல்வி பயப்பட...தங்கையை ஒரு முறை முறைத்தவன், போய் மூஞ்ச கழுவு என்று சொல்லி விட்டு, படியில் ஏறி மேலே செல்ல,இவர்கள் இருவரும் கீழே படுத்து,விட்ட தூக்கத்தை தொடர்ந்தனர்.

நல்லவேளைடி தப்பிச்சனு சொல்லிக்கொண்டே அய்யோஓஓஓ காஃபி போச்சே என்றவள்,மீண்டும் வேலுவிடம் வந்து மாமா,மாமா என்று எழுப்ப,என்னடி என்றவாரே போர்வையை விலக்கி பார்த்தான்.

காஃபி ஊத்திட்டே என்று சொல்ல, அதை எப்போடி வந்து கேட்குற?, எங்கெங்கோ வெந்துச்சோ போ.கொஞ்ச தூங்க விடு செல்வி என்க, சரி மாமா என்று அங்கிருந்து சென்றாள்.

சூரியன் தன் முழு உருவத்தோடு கிழக்கே வந்தது.அவரவர் வீட்டில் வழக்கம் போல வேலையை தொடங்கினர்.

அப்பொழுது ஊருக்குள் தண்டோரா சத்தம் கேட்டது.என்ன சொல்ல போகிறார் என்று அங்கிருப்பவர்களுக்கு தெரிந்தாலும்,மக்களோ அவர் சொல்லப்போவதை வெளியே வந்து கேட்டனர்.

இதனால் சீமக்கரை மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்,
இன்று தைத்திங்கள் முதல் நாளாகிய பொங்கல் திருநாளை முன்னிட்டு,காலம் காலமாக முன்னோர்கள் கொண்டாடிச் சென்ற வழக்கம் போல,மாலை நான்கு மணிக்கு மேலே,அனைவரும் அவரவர் வீட்டில் செய்த பொங்கலோடு, படையலுக்கு கோயில் கிட்ட வந்து விடுமாறு பஞ்சாயத்து உத்தரவுங்கோ.....,என்று சொல்லிக்கொண்டே சென்றார்.

கரும்பு கட்டுகளை எடுத்து போக நேற்று போன ஆறு பேரும் கதிரின் வீட்டிற்கு வர,மேலிருந்து அவர்கள் வருவதை பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தான் கதிர்.

தம்பி....கரும்பை பிரித்து கொடுத்துட்டு, எவ்வளவு ஆகும்னு கணக்கு சொல்லுப்பா என்றார் ஒருவர்.

அண்ணே...முதல்ல கரும்ப கொண்டு போய் புள்ளைங்கள்ட கொடுங்கண்ணா. பொறவு கணக்கு பாக்கலாமென்க,இருக்கட்டும் தம்பி என்றார்.

பின்னர் அவர்கள் ஏற்கெனவே சொல்லி வைத்த போல,அவர்களுக்கான கரும்பு கட்டுகளை அனைவரும் பிரித்து எடுத்து விட்டு,கதிருக்கும் வேலுக்கும் உரிய பங்கை மீதம் வைத்து,எவ்வளவு என கணக்கு பண்ணி பணத்தை கொடுத்து கரும்பை எடுத்து சென்றனர்.

வண்டி ஓட்டிய பூசாரி மட்டும் பிரகாசத்தின் அருகில் சென்று,இராவுல மாடு கத்துச்சாப்பா?என்றார்.

ஆமாப்பா...உன் பெரியம்மாவும் நானும் வந்து பார்த்தோம் எப்படியும் ரெண்டு மணி இருக்கும் பிறகு சத்தம் இல்லை என்றவர்,ஏம்பா?.

அவரிடம் நேற்று இரவு வரும் வழியில் நடந்ததை சொல்லியவர்,நாளைக்கு மூக்கனாங்கயிரு மாத்தும் போது,நம்ப ஐய்யனார்கிட்ட வேண்டி சங்கை ரெண்டு கழுத்திலும் கட்டி விடலாம் பெரியப்பா,சரிப்பா செஞ்சிடலாம் என்றார் பிரகாசம்.

சீமக்கரை ஊர் மக்கள்...

அவரவர் வீட்டின் முன்பு இருக்கும் இடத்தில் கரும்பால் பந்தலிட்டு,வருடா வருடம் தரையில் குழி தோண்டி,அடுப்பு உண்டாக்கும் அதே இடத்தில் தோண்டினர்.ஒரு வாரத்திற்கு முன்பே செம்மண்ணால் மூன்று முட்டுகள் கொண்ட அடுப்புகளை செய்து காய வைத்திருந்தனர்.

அதை அடுப்புக்கு தோண்டிய குழியின் மூன்று புறமும் வைத்து விட்டு,முதல் நாள் வாங்கி வந்த மண் பானையில் , விபூதி பட்டை போட்டு,அதன் கழுத்தில் மஞ்சள்,இஞ்சி கொத்துக்களை முடிந்து, அடுப்பில் வைத்து,அதனுல் பாலை ஊற்றி,குழியில் விறகுகளை வைத்து நெருப்பை மூட்டினர்.

பால் சூடாகியதும்,தண்ணீரை ஊற்றி கொதி வந்தது.பின்,கழுவி வைத்த பச்சரிசி,பயத்தம் பருப்பை அதில் கொட்டி வெந்து பொங்கி வழிய,வீட்டில் இருந்தவர்களோ பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியாக கத்தினார்கள்.

இதில் சிறு பிள்ளைகளோ, எங்கள் வீட்டில் தான் முதலில் பொங்கியது என்று போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

தாமரை வீடு...

தங்கள் வீட்டு வாசலில் "மகளை விட்டே பொங்கல் செய்ய சொல்லி விட்டார் கவிதா".

தாமரையும் வெந்த பச்சரிசி குழைவில் இடித்த வெள்ளத்தை போட்டு நன்கு கிண்டி,இன்னொரு கடாயில் நெய் ஊற்றி,அதில் முந்திரி, திராட்சைகளை வறுத்து,அதை பொங்கலில் கொட்டி இறக்கி வைத்தாள்.

"கடந்த பதினைந்து வருடமாக, கவிதாவும்,அன்பழகனும் இந்த பூஜையில் கலந்து கொள்வதில்லை".

பொங்கலை மட்டும் தயார் செய்து மாமியார்,மாமனாரிடம் கொடுத்து, அவர்களோடு பிள்ளைகளை அனுப்பி வைத்து விடுவார்.மணி எத்தனைனு பாருப்பா என்று கலா அப்பாயி சொல்ல,மூன்று ஆகின்றது என்றான்.

இரண்டு பேத்திகளிடமும் தலைய சீவிகிட்டு கோயிலுக்கு போக தயாராகுங்கம்மா என்றார் .

சரி அப்பாயி என்றபடியே, "அக்கா, தங்கை இருவரும் அவரவர் அறையின் உள்ளே சென்றனர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
"அல்லியோ தனது அக்கா எடுத்து வந்த டிரஸை போட்டுக்கொண்டவள்,தனது சுருட்டை முடியில் அழகான பின்னை போட்டு ஆடைக்கு ஏற்ற போல அலங்காரத்தை முடித்து வெளியே வந்தாள்".

நல்லா இருக்குடி வாயாடி என்றார் அப்பாயி.ம்ம்.."தேங்க்யூ".

அதற்கு சிவசாமி தாத்தாவோ,அவ கிட்ட போய் இப்படி சொல்லுறியே சின்ன குட்டி?,இதுலாம் எங்கே புரிய போகுது என்க,ஆமா "உன் தாத்தன் வெள்ளக்காரன் ஊட்டுல பொறந்தவரு", அங்கையே பேசு.

தாமரையோ குங்குமக்கலரில் தங்க ஜரிகை வைத்த சாப்ட் சில்க் பட்டுப்புடவையை கட்டியவள்,அதற்கு ஏற்ற போல,பெரிய தங்க ஜிமிக்கியும், கையில் தங்க வளையலையும், கழுத்தில் நீண்ட பதக்கம் வைத்த செயினை போட்டுக்கொண்டாள்.

பின்னர்,நீண்ட முடியை அழகாக பின்னலிட்டவள்,நெற்றியில் பொட்டை வைத்து விட்டு பார்க்க,புதுவித அழகாய் தெரிந்தாள்.

எல்லாம் சரியாக இருக்காயென்று ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவள்,செல் ஃபோனில் வித விதமாக செல்பியை எடுத்து வேதாவிற்கு அனுப்பி விட்டு, ஃபோனை ஆப் பண்ணி டேபிள் மேலே வைத்து விட்டு, கதவை திறந்து வெளியே வந்தாள்.

தேனூர்...

காலையிலே குளித்து தயாராகி கீழே வந்திருக்கும் மகனையும் அவன் கையிலிருந்த பேகையும் பார்த்தவருக்கு,"எங்கே கிளம்பிவிட்டான் என்பது தெரிந்தது.

சரி விசாரிக்கும்,என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவர், "துரை காலையிலே எங்கே பயணம்?".

ம்ம்....தலை பொங்கல் கொண்டாட என் பொண்டாட்டி வரச்சொன்னாள்.அதான் மாமனார் வீட்டுக்கு போறேனென்று ஜான் சொல்ல,எதேஏஏஏ என்று அதிர்ந்தவர்,ஏய் ஜூலி....அடியேய் ஜூலி என்று கத்தி அழைக்க,இதோ என்றபடியே கையில் கரண்டியோடு வந்தவர்,எதுக்கு இப்போ என் பேரை ஜூலி,காளினு ஏலம் போடுறீங்க?

உன் மவன் சொன்னதை கேட்டியா? என்க,நான் அங்கே இருக்கேன். கேட்டியானா என்ன அர்த்தமென்று கணவரை முறைத்தார்.

உன் மவன் நமக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டானாம். இன்றைக்கு தல பொங்கல் கொண்டாட போறானாம்டி,ஓஓஓ....சரி என்று ஜூலி உள்ளே செல்ல,நில்லுடி....நான் என்ன சொல்லி கிட்டு இருக்கேன்?,"நீ உன் பாட்டுக்கு போற".

ராஜா....இன்னும் 5 மினிட்ஸ்ல டிபன் ஆகிடும் பா என்றவர்,உங்களுக்கு எந்த முட்டா பயல் மிலிட்ரியில் வேலை கொடுத்தான்?என்க..

மனைவியின் கேள்வியில் கோவம் வர, ஏண்டி.....அவனை எதுவும் கேட்காம, வாத்திச்சி போல எங்கிட்ட கேள்விய அடுக்குற?

அப்பொழுது ஜானோ ஏம்மா?மறுபடியும் அதே சந்தேகம். உண்மையிலே இவர் மிலிட்ரியில் மேஜர் தானா?."நீ எப்போவாது போய் அவர் கேம்ப்ல பார்த்துருக்கியா?".

"இல்லைப்பா",என்று ஜூலி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார்.

மனைவியையும்,மகனையும் பார்த்து லாரன்ஸ் முறைக்க,ராஜா,பீபி ஏறிட போகுதுப்பா?."பாவம் பா".

ம்ம் என்றவன்,இப்போ பாரு என்றவன், நீயும் வாயேன்மா.அப்படியே உன் மருமகளை பார்த்த போல இருக்குமே என்க,எனக்கும் ஆசையா தான் இருக்கு ராஜா...ஆனால்...,கொஞ்சம் வேலை இருக்கே,இன்னொரு நாளைக்கு வரேன் என்றவாறு கிச்சனிற்குள் சென்று விட்டார்.

தந்தையை பார்த்தவன்நையாண்டி காட்ட,புள்ளையாடா நீ?என்கவும்,ஏன்? பார்த்தா தெரியலையா?என்றான்.

ஒரு மார்க்கமா தான் இருக்க நேற்றிலிருந்து என்றவர்,உள்ளே போய் ஒரு கவரோடு வந்தவர்,அந்த தடிமாடுங்கள் கிட்ட இதை கொடுனு மகனின் முன்பு நீட்டினார்.

அப்போ எங்க போறன்னு தெரிஞ்சு கிட்டு தான் இந்த வேலை உங்களுக்கு?

ஆமா டா.உனக்கும்,உன் அம்மாவுக்கும் மட்டும் தான் கலாய்க்க தெரியுமா என்றபடி சோஃபாவில் போய் உட்கார்ந்தார்.

சிறிது நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு முடித்த ஜான்,அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி, ராயல் என்ஃபீல்டில் சென்றான்.

கதிர் வீடு...

ராதாவும்,சீதாவும் பொங்கல் வேலையை வாசலில் செய்து கொண்டிருக்க,"ஒரு பக்கம் வள்ளி அப்பாயி வெள்ளத்தை அருவாள் மனையில் அறிந்து கொண்டிருந்தார்".

பிரகாசம் தாத்தா,வேலு மற்றும் கதிர் மூவரும்,காலையிலே வயலில் அறுத்து வந்த நெற்கதிர்களை மாட்டின் கழுத்தில் கட்டுவதற்கும்,வீட்டு அருகாலில் தோரணம் கட்டுவதற்கும் மாலையாக பின்னிக்கொண்டிருந்தனர்.

"வழக்கம் போல் பெருமாளோ பஞ்சாயத்து வேலையாக வெளியே சென்றிருந்தார்".

வாசலில் வைத்த பொங்கல் தயாராகியதும் அதை உள்ளே எடுத்து சென்று வைத்து விட்டு,கோயிலுக்கு எடுத்து செல்ல பூஜைக்கான பொருட்களை எடுத்து வைத்தார்கள்.

அப்பொழுது,"வீட்டு வாசலில் வந்து நின்ற வண்டியை பார்த்த கதிரும், வேலுவும் அதிர்ந்து எழுந்தனர்!".

வண்டியிலிருந்து இறங்கியவனோ நேராக அவர்களிடம் சென்று,ஆளுக்கு இரண்டு அறைகளை கொடுத்து விட்டு, "இரண்டு கைகளாலும் நண்பர்களை கட்டிக்கொண்டு அழுதான் ஜான்".

"எப்போடா வந்த பனைமரம் என்று வேலு கேட்க,அதற்கு ஜான்,முந்தா நாள் என்றான் ".

எத்தனை வருஷமாகுதுடா உன்னை பார்த்து..சரி...சரி...போதும்டா...சென பன்னி கணக்கா இருக்கடா."கணம் தாங்க முடியலை மச்சான்?.

இருடா,முதல்ல எல்லாரையும் பார்த்துட்டு வரேனென்ற ஜான், அங்கிருந்த வள்ளி அப்பாயி மற்றும் தாத்தாவிடம் நலம் விசாரித்து விட்டு, அம்மா...அம்மா என்றபடி வீட்டின் உள்ளே சென்றான்.

ஜானின் குரல் கேட்டு பூ கட்டிக்கொண்டிருந்த செல்வியோ இது உண்மையா என்று திரும்பி பார்த்தவள், ஜானண்ணாஆஆஆ என்று அதிர!!, சின்ன குட்டினு அவள் தலை மேல் தடவி விட்டு,எப்படிடா இருக்க?என்றான்.

"நான் நல்லா இருக்கேன்ணா".ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே நீ வரேன்னு?என்க,எல்லாம் உன் அப்பா மிலிட்டரி பண்ண வேலை தான்.

நானா வரேன்னு சொன்னேன்??, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வரலாம்னு இருந்தேன்.

எங்கடா,அப்பா அம்மா சித்தி எல்லாம் காணும்?என்கும் போது, ஜானு என்றபடியே சீதாவும் ராதாவும் வர,இரண்டு பேரின் தோளில் கை போட்டுக் கொண்டவன்,நான் நல்லா இருக்கேன் அம்மாஸ்...

நீங்க எப்படி இருக்கீங்க?,அப்பாக்கள் நல்லா இருக்காங்களா?.

ஏம்பா...,கடைசியா பேசும் போது கூட இந்தியாவுக்கு வரப்போறனு சொல்லவே இல்லையேனு ராதா கேட்க, எல்லாம் இந்த மிலிட்டரி பண்ண வேலை தான்.

பூராஆஆஆஆ....கேள்வியையும் அங்கயே கேளுங்க."என்னை யாரும் கேட்காதீங்க என்றான் கோபமாக".

சரி..சரி.. விடு..அண்ணாக்கு திடீர்னு இப்படி ஆனதால ஜூலி பயந்துட்டுப்பா. அதனால் தான உன்னை வரச்சொன்னது என்றார் சீதா.

ம்ம் என்றவனிடம்,எப்போ ஆப்ரேஷன் என்கவும்,நெக்ஸ்ட் மந்த் மா.சரி நான் அந்த தடிமாடுங்க கூட கொஞ்சம் பேசிட்டு வரேனென்று வெளியே வந்தவன்,எருமைங்களா...வாங்கடா என்றபடி வண்டியில் ஏறி ஸ்டார்ட் பண்ணினான்.

மாப்பு.....பனைமரம் விஷயத்தை கேட்கதான் டா கூப்டுறானென்ற வேலுவோ ஜான் பின்னாடி அமர்ந்தான்.
வேலுக்கு பின்னாடி கதிர் உட்கார, "அந்த என்ஃபீல்டு வண்டி ஏரிக்கரையை நோக்கி சென்றது".

அப்புறம் பனைமரம்....என்னடா வாங்கிட்டு வந்தடானு வேலு கேட்க, "பாட்டா செருப்பு பத்து ஜோடி" என்றான் ஜான்.

ஓஓஓ...இத வாங்கவா ஆஸ்திரேலியா போன?என்க,இன்னும் நிறைய வாங்கியிருக்கேன்.நீ கவலை படாதடா என்றபடியே வண்டி ஓட்டினான்.

சிறிது நிமிடங்களில் ஏரிக்கரையின் படித்துறை அருகில் வந்து வண்டியை நிறுத்தியவன்,இறங்குங்கடா என்றான்.

அடேய் பனைமரம்....நானும்,உன் பங்காளியும் காலையிலே குளிச்சிட்டோம்டா வெண்ணெய்னு வேலு சொல்ல,செருப்பு பிஞ்சிடும் டா என்று இருவரையும் முறைத்தான்.

ஓஓஓ...ரொம்ப கோவமா இருக்கான் போலனு முணுமுணுத்தவன்,அடேய் அதான் நாங்க இருக்கோமே, நீ ஏன் கவலைப்படுற?,மீசை என்ன பண்ணுறார் என்கவும்?,நார்மலா தான் டா இருக்கார்.என்னால தான் இயல்பா இருக்க முடியலைடா என்று நண்பர்கள் இருவரிடமும் சொல்லி கண் கலங்கினான் ஜான்.

நீ மீட்டிங்ல இருந்தடா,அதனால் தான் உன் கிட்ட அப்பா பற்றி சொல்ல வேண்டானு இருந்தேன்.மாப்ளையும் அதே தான் சொன்னான்.உனக்கு நல்ல வாய்ப்பு வந்துருக்கு.இந்த நேரத்தில் இதை சொல்லி உன்னை குழப்ப வேண்டானு எண்ணம் தான்."சரி சொல்லு,என்னாச்சு அந்த கம்பெனி விஷயமென்று கதிர் கேட்க,எல்லாம் ஓகே டா...".

ஆனால்... நான் இனி ஆஸ்திரேலியா போற போல இல்லைடா.அப்பா நல்லா ஹெல்தியான ஆள்."அவருக்கே ஹார்ட் அட்டாக் வந்துருக்கு".அம்மா...கொஞ்சம் கூட உடல் நலத்துல அக்கறை காட்டாது. அதையெல்லாம் சொல்லவே வேண்டாம்.

அதான் வேலை வேண்டானு எழுதி குடுத்துட்டு வந்துட்டேனென்று ஜான் சொல்ல,சரி விடு டா பார்த்துக்கலாம் என்று நண்பர்கள் இருவரும் அவன் தோளில் தட்டிக்கொடுத்தனர்.

சரி பனைமரம்....எத்தனை அரைடவுசர் கூட அங்கு அரட்டையென்று வேலு கேட்க,அட துப்பு கெட்டவனே?,என்னடா பேசுற??என்று கதிரும் சத்தம் போட்டான்

ஏண்டா தடிமாடு...மிலிட்ரி பற்றி தெரிஞ்சி கிட்டும் அங்க எவளைடா ரூட் விட?.யாரு பொண்ணு?,யாரு கிழவினு அங்க கண்டு புடிக்கிறது பெரும் பாடுனு ஜான் சொல்லவும் அதைக்கேட்ட வேலுவோ சத்தமாக சிரித்தவன்,மச்சி....யார்கிட்டயோ செமத்தியா ஏமாந்த போல என்க,ஏன் பக்கி இப்படி என்றவன்,பின்னர் ஸ்கூல் பொறுப்பை ஏற்றுக்கொண்டதை சொல்ல,"வாழ்த்துக்கள்டா என்றனர் இருவரும்".

மேலும் சிறிது நேரம் லாரன்ஸ் உடல் நிலை பற்றி பேசி விட்டு,மூவரும் வீட்டிற்கு வந்தனர்.

கோயிலுக்கு செல்ல எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்ததை,மீண்டும் ஒருமுறை சரி பார்த்தார் வள்ளி அப்பாயி.அந்த நேரம் இவர்கள் மூவரும் உள்ளே வர,வேகமா கிளம்பி வாங்கப்பு."பூஜைக்கு போகனும்".

சரியென்று கதிரின் அறைக்கு வந்த நண்பர்கள் இருவரிடம் அவர்களுக்கு வாங்கி வந்ததையும்,தந்தை கொடுத்த கவரையும் ஜான் கொடுத்தான்.

டேய்... இந்தா வேஷ்டிய கட்டிக்கோ என்று பீரோவில் இருந்த புது வேஷ்டியை எடுத்து ஜானிற்கு நீட்ட, இதுவேரையாடா என்றபடி போட்டிருந்த பேண்டை கழட்டி விட்டு,வேஸ்டியை கட்டிக்கொண்டான்.

கதிரோ,பொங்கலுக்காக வாங்கிய டிரஸை போட்டு வர,என்னடா இது?
"புது மாப்பிள்ளை போல பட்டுல மின்னுற என்றவாறு மேலும் கீழுமாக வேலு பார்க்க,என்னடா புதுசா சமஞ்ச பொண்ண பாக்குற போல குறுகுறுன்னு பார்க்கிற என்று கதிர் சொல்லவும், தனது பல்லை கடித்த வேலுவோ வா பன்னி என்றபடி கீழே வர,அங்கு ரெடியாக இருந்த பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு,கதிர் குடும்பமும் கோயிலை நோக்கி சென்றனர்.

கண்மணி வருவாள்.....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top