Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
சீமக்கரை!
"உச்சியில் இருக்கும் வெயில் மேற்கே இறங்குவதற்கு முன்பாகவே கிண்டல்கள்,கேலியோடு அறுப்பு வேலையை முழுவதுமாக முடித்தனர்".
விடிந்தால் பொங்கல் என்பதால், இரண்டு நாட்கள் சென்ற பிறகே டிராக்டரை வைத்து அடித்து,நெல்லை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பே செல்வமும் முடிவு செய்து விட்டார்.
வயலில் வேலை செய்து விட்டு கலைந்த ஆட்களெல்லாரும்,நெல் சுணை போக ஏரிக்கரையை நோக்கி சென்றனர் குளிப்பதற்காக.
டேய் நாமளும் குளிச்சிட்டே போய்டலாமா?,ம்ம் என்றான் கதிர். வேலையாட்களோடே இவர்களும் ஏரிக்கரையை நோக்கி சென்றனர்.
" கரையின் அருகே நெருங்க நெருங்க இவ்வளவு நேரம் உள்ளுக்குள் அமைதியாக இருந்த தாமரையின் நினைவுகள் மேலே எழும்பியது".
"அன்று நடந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டே நடந்தவனுக்கு இதழோரம் சிரிப்பு வந்தது".
"அவனின் கரத்திலிருந்து தனது கையை விடுவிக்க பெரிதாக ஒன்றும் தாமரை போராடவில்லை".
லேசாக தான் பிடித்திருந்தான்,ஆனால் அதுவே அவளுக்கு தடத்தை பதித்திருந்தது.முடிக்கு என்ன போட்டு வளக்குறானு தெரியலையேனு உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
அடேய்....மாப்பு என்ற சத்தம் கேட்ட பிறகு தான்,குளிக்கும் படித்துறையை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றோம் என்பது கதிருக்கு புரிந்தது.
அய்யோ....!
எதாவது சொல்லி சமாளிடா.இல்லை மானத்தை வாங்குவான்னு மனதிற்குள் சொல்லிக்கொண்டவன்"...,பார்வையை சுழற்றி பார்க்க,வலது பக்கம் இருக்கும் முள் வேலியில் முதல் நாள் இரவு வள்ளி அப்பாயி கேட்ட தூதுவளை செடி படர்ந்திருப்பது கண்ணில் பட்டது.
"ஹப்பாடா தப்பிச்சோம்"....என்று முணுமுணுத்தவன்,கதிறருக்கும் அருவாளால் வைத்தியத்திற்கு தேவையான அளவிற்கு அறுத்து எடுத்தவன் கீழே சிதறி கிடந்த வைக்கோல்களை சிறு கயிறாக திரித்து, கொடியோடா ஏரிக்கரைக்கு வந்தான்.
"அப்பாயி நேற்று கேட்டுச்சிடா"அதானென்க,அய்யோஓஓஓஓ என் செல்லத்துக்கு சளியானு வேலு கேட்க,இது அப்பாக்குடா,ஓஓஓ அய்யனாருக்கா என்றவன்,மேல் படிக்கட்டிலிருந்து நீருக்குள் அம்பாய் பாய்ந்தான் வேலு....
தண்ணிக்குளிருந்து எழுந்த தாத்தாவோ,அகராதி புடிச்சவன்னு சொல்லிக்கொண்டே படிக்கட்டின் அருகே வந்தவர்,நெற் கதிர் சொணை போக கையால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டிருந்தார்.
கதிரும் ஏரிக்குள் இறங்க,மீண்டும் சிறு வயது போல நண்பர்கள் இருவரும் நீந்தி அக்கரையை தொட்டு விட்டு,மீண்டும் இக்கரைக்கு திரும்பி வந்தவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்.
மாப்பு...ரெடியா கிட்டு வண்டிய எடுத்து வா,போய்ட்டு கரும்பை ஏத்திட்டு வந்துரலாம்னு வேலு சொல்ல,சரிடானு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
சொல்லியது போலவே மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கதிர் வரும் போது,வழக்கமாக அவர்களோடு கரும்பு வாங்க வருபவர்களும் வண்டியில் ஏறிக் கொண்டனர்.
வேலுவும் இவர்களுக்காக காத்திருக்க, மணி சத்தத்தோடு மாட்டுவண்டி வந்தது.அவனருகில் வந்து வண்டியை நிறுத்த,டயர் வழியாக மேலே ஏறியவன், கதிரின் அருகில் அம்ர்ந்து கொண்டான்.
பின்னர் பேச்சு கிண்டலோடு வழக்கமாக வாங்கும் கரும்பு தோப்புக்குள் செல்ல,அங்கே தெரிந்தவர்கள் சிலரும் கரும்பு கட்டுகளோடு எதிரில் வந்து கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் கதிரு என்க, சொல்லுணா,வீட்ல அண்ணி புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா?,எல்லாரும் நல்லா இருக்காங்கடா தம்பி என்றவாறு வேலுவை பார்த்து மாப்பு எங்கேடா இந்த பக்கம்?
அது வந்து மாமா,இங்க பன்னிக்கு பள்ளி கூடம் திறந்து இருக்காங்கனு கேள்விப்பட்டேன்,அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
"கொழுப்பெடுத்த பயடா நீ" என்றவருக்கு, பின்ன என்னைய்ய?.எதுக்கு வந்துருக்கோம்னு தெரிஞ்சே நக்கலு வேண்டி கடக்கு என்றவனிடம்,எலேய்...
"எங்கத்தை மவனை நாங்க கிண்டல் பண்ணாம வேற யாரல?பண்ணனும்", பையனா பொறந்ததால நீ தப்பிச்சே.இல்லை என் பொண்டாட்டியா ஆகிருப்படி.
"அதற்கு வேலுவோ",ஏன் மாமா ஏன் இப்படினு முறைக்க,உண்மைய சொன்னேன்டானு சிரித்தவர், சரிடா,வாங்கடா ஒரு எட்டு வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரலாம் என்கவும், இருக்கட்டும்,இன்னொரு நாளைக்கு வரோம் மாமா என்றான்.
பின்னர் அவரிடம் சொல்லிக் கொண்டு வண்டியில் இருந்து இறங்கி மாடுகளை அவிழ்த்து,மாட்டு வண்டியின் முனையின் இரண்டு பக்கமும்,இரண்டு மாடுகளை கட்டி விட்டு கரும்பு தோப்பிற்குள் சென்றனர்.
தேனூர் L.T. Matric school....
"ஐந்து பேருக்கும் உள்ளுக்குள் ஒரே விஷயம் தான் தோன்றியது".தங்களுக்கு வேலை இல்லை என்பதை தான் சொல்லப்போகிறார்கள் என்று.
"நம்ப ஜானோ பக்கத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ளாமல்",காற்றில் பறக்கும் தேவியின் காதோர முடியையும்,பார்பி டால் போல் எதிரில் நின்று கொண்டிருப்பவளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
"அவன் மனசாட்சியோ,அடேய் உங்கப்பன் மிலிட்ரிக்கு தெரிஞ்சிது தோலை உறித்துடுவார் என்றது".
"அதற்கு இந்த பயபுள்ளையோ... எல்லாம் அவர் வயசுல பண்ணியதை தான் நானும் பண்ணுறேன் என்றான் மனதிற்குள்".
ம்ம் நீ நடத்து ராசானு மனசாட்சி சென்று விட,மீண்டும் சைட் அடிக்கும் வேலையை ஜானும் தொடந்தான்.
தேவியோ,தன்னை ஒருவன் ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பது அறியாமல் நின்று கொண்டிருந்தாள்.
"அதற்கு காரணமோ ஜான் போட்டிருக்கும் கூலிங் கிளாஸ் தான்". இவர்களை கூப்பிட போகிறார்கள் என்று தெரிந்த உடனே, பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டான்".
"மகனின் செயலை விசித்திரமாக மிலிட்டரி பார்க்க,கண்ணுல ஏதோ அன்னீசியா இருக்க போல உறுத்துது என்க,ஓகே என்று தனது வேலையை பார்க்க தொடங்கினார் லாரன்ஸ்".
"ஹப்பாடா"....எப்படியோ இந்த மிலிட்டரி கிட்ட இருந்து தப்பிச்சடா ஜானென சொல்லிக் கொண்டான்.
உங்களை இங்கு வர சொல்லியதற்கு காரணம் என்று லாரன்ஸ் அமைதியாக, "வேலை இல்லையென்று சொல்ல எதுக்குடி இவருக்கு இவ்வளவு அக்கப்போறு" என்றாள் தோழியிடம் பொறுமையாக ரேவதி.
நீங்க ஐந்து பேரும் யு. ஜி டிகிரி தான்மா முடிச்சிருக்கீங்க.ஆனால் உங்களோட பர்பார்மென்ஸ் நல்லா இருந்தது. இப்போதைக்கு உங்களுக்கு கே.ஜி ஸ்டூடன்ஸ்கு கிளாஸ் எடுக்க போஸ்டிங் தரோம்.
ஒரு வேளை,முடிந்தால் கரஸ்ல பி. எட்..பண்ணுங்க,அப்போ வேண்டுமானால் உங்களுக்கு அடுத்த லெவலுக்கான வகுப்பை அலார்ட் பண்ண முடியும்.இல்லை இதையே தொடர்கிறேன்னு சொன்னாலும் பிரச்சினை இல்லைங்கம்மா. "இனி,...முடிவு உங்கள் கையில் தான்".
அவர் சொன்னதை கேட்ட பிறகு தான் இவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. தேவியும்,ரேவதியும்,கே. ஜி.. போதும் என்க,மற்ற மூவருக்கும் வேலை மிக அவசியம் என்பதால்,"சொன்ன போலவே கோர்ஸ் படித்து விடுகிறோம் சார் என்றனர்".
"பின்னர் ஐவருக்கும் வேலைக்கான லட்டரை கொடுத்தவர்,பொங்கல் ஹாலிடே முடிந்து ஸ்கூல் ரீ ஓப்பன் ஆவதையும்,பள்ளியின் வேலை நேரம் மற்றும் சம்பளம்,மேலும் சில நடைமுறை வழக்கங்கள் பற்றிய விவரங்களெல்லாம் இதில் அடங்கி இருக்கின்றது என்க,தேங்க்யூ சார் என்றவாறு வெளியே வந்தனர்".
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்ன தேய்ஞ்சா போய்டுவாள்...?
"விட்டா போதும்னு ஓடிட்டாளே இந்த பார்பி டால்?"...என்று மனதிற்குள் தேவியை திட்டிக்கொண்டான் ஜான்.
ராமு.... தங்கச்சியை கூப்பிட்டு கிட்டு வீட்டுக்கு வா என்று லாரன்ஸ் சொல்ல, ம்ம் என்று சிரித்தார்.
என்னடா...நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறனு லாரன்ஸ் கேட்க,நீயும் ஜூலி கூட வரலாம்டா தப்பே இல்லை என்றார்.
வரலாமே என்றவர்,சரி ராமு கிளம்பளாமா என்றபடி லாரன்ஸ் சேரிலிருந்து எழுந்து கொண்டே கேட்க, ஹம் டா என்றபடியே அவரின் பின்னாடியே ராமனும் செல்ல,வெளியே வந்த ஜான்,பார்பிடாலை தேடினான்.
ஜேம்ஸ் ரூமை லாக் பண்ணிடுப்பா என்று ராமன் சொல்ல,சரிங்க சார் என்று உள்ளே போய் லைட்,பேன், ஏ. சி. சுவிட்களை நிறுத்தி விட்டு வந்து கதவை பூட்டினான்.
பின்னர் மூவரும் பேசிக்கொண்டே கார் இருக்கும் இடத்திற்கு வந்தவர்கள் காரில் ஏறி வீட்டை நோக்கி சென்றனர்.
இந்த வேலை கிடைக்காம போய்டுமோனு நினைத்தோமெ என்றவாறு மரத்தின் கீழே நின்று தேவியும் ரேவதியும் பேசிக்கொண்டிருந்தனர்.
எனக்கும் அந்த எண்ணம் இருந்துச்சி ரேவா.அந்த சார் முகம் தெளிவா இருந்துச்சு.அப்போ நமக்கு வேலை உண்டு,ஆனால் வேறு ஏதோ டுவிஸ்ட் இருக்குனு இருந்தேன் டி.அதைப்போல தான் நடந்துருக்குனு தேவி சொன்னாள்.
ம்ம்...நேரத்தை போக்க தான் இந்த வேலைக்கு வந்தோம்."இந்த டிகிரி வாங்குவதற்குள் நாக்கு தள்ளியதே போதும்டி".
"இனியும் படிப்புலாம் நமக்கு செட்டாகாது" என்ற ரேவதியின் பேச்சை கேட்டு தேவிக்கு சிரிப்பு வந்தது.
நீ அண்ணாவை வர சொல்லலையாடி?என ரேவா கேட்க,"உன்னை பஸ் ஸ்டாப்பில் விட்ட பிறகு அண்ணனை அங்கு வர சொல்லிக்குறேன்டி".
சரிடி... முதல்ல வேலை கிடைத்ததை அவர் கிட்ட சொல்லுறேன்னு சொல்லிக் தனது ஹேண்ட் பேகில் இருந்த போனை எடுத்த ரேவதி கணவருக்கு கால் பண்ண,உடனே அட்டென் பண்ணியவனிடம் விஷயத்தை சொல்ல,மனைவிக்கு வாழ்த்துக்கள் சொன்னார்.
பின் தேவியை பற்றி சொல்லி விட்டு போனை கொடுக்க,அதை வாங்கியவள், அண்ணா நல்லா இருக்கீங்களா என்க?, ஒற்றை பிள்ளையாய் பிறந்தவனுக்கு அண்ணன் என்று அழைத்தது நெஞ்சுக்குள்ளே சொல்ல முடியாத உணர்வை தந்தது.
ஹலோ ஹலோ அண்ணா... என மீண்டும் தேவி கூப்பிட,நினைவுக்கு வந்தவன்,தங்கை என்று உரிமையோடு அவளிடம் பேசி விட்டு போனை வைத்தான்.
வாயேண்டி....வீடு வரைக்கும் வந்துட்டு போயேன்? என்று தேவி கூப்பிட, இருக்கட்டும்டி.இனி ஒன்றாக தானே வேலை பார்க்கப் போகிறோம்.அப்போ, அடிக்கடி வீட்டுக்கு வருவேன். நீ கவலையே படாதே என்றாள் ரேவதி.
பள்ளியில் இருந்து பத்து நிமிடம் நடக்கும் தொலைவு தான் என்பதால், இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்து தேனூர் பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றனர்.
இவர்கள் போன நேரத்திற்கு ஏனாதிக்கு செல்லும் பஸ்ஸும் வந்தது.நீ போ என்று தேவி சொல்ல,இருக்கட்டும் டி. அண்ணாவை வர சொல்லு,நீ போன பிறகு நான் போகிறேனென்று சொன்னாள்.ஏனென்றால்,எப்படியும் அரை மணி நேரம் சென்று தான் இந்த பஸ் எடுப்பார்கள் என்பது தெரிந்ததால் தான் ரேவதி அப்படி சொன்னாள்.
சரி என்று தேவியும் தனது ஃபோனில் இருந்து தேவ்க்கு கால் பண்ணியவள், பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக சொல்ல, உடனே வரேன் என்று சொல்லி கட் பண்ணினான்..