• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தாமரை வீடு!

வேறு பொண்ணு கிடைக்கலையானு சின்ன பேத்தி கேட்டதற்கு, "என்னம்மா செய்ய? எங்க ஆத்தா அப்பனுக்கு இவளை தான் கண்ணு தெரிஞ்சிருக்கு போல. காலமும் ஓடி போய்ட்டு" என்றார் சிவசாமி தாத்தா.

"ஓ... இந்த தொரைக்கு பொண்ணுங்க அப்படியே வரிசை கட்டி நின்னாளுங்க பாரேனென்று,தனது தோள் பட்டையில் இடித்து காட்டி கலா பாட்டி சொல்ல", தாமரைக்கு சிரிப்பு வர, "வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடி? என்க".

"ஏன்....சுதந்திர நாட்டுல எனக்கு பேச உயிமையில்லையா?என்னக்கொடுமை கலா இதுலாம்?என்க,அடியேய், இன்னொரு முறை பேர சொன்ன வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற அந்த கழுத்து எலும்ப திருவி போட்டுறுவேன்".

"ம்கும்... இந்த அம்மா திருவுர வரைக்கும் நான் கழுத்தை காட்டி கிட்டே இருப்பேன்னு கனவு,ஏழு ஊரு வாய், பாவம் தாத்தா நீ.எப்படி தான் காலத்தை தள்ளுனியோ போ,உன் மன தைரியத்துக்கு கோயில் கட்டி கும்பிடனும் என்றாள் அல்லி".

"சின்ன பேத்தி சொன்னதைக்கேட்டு சிவசாமிக்கு சிரிப்பு வந்தது".சின்ன குட்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது என்றவர் பின்னர் பேசிக்கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தனர்".

"அப்பொழுது அங்கு வந்த கவிதா,சாப்பாடு ரெடி வந்து சாப்பிட்டு பிறகு வேலைய பார்க்கலாம் என்க, இன்னும் கொஞ்சம் தான்,ஒரேடியா முடிச்சிட்டு வந்துடுறோம் என்றனர்".

ஒரு வழியாக எல்லா வேலையும் முடிய மதியம் ஆனது.தேவையில்லாத குப்பைகளை ஒரு பக்கம் கொளுத்துவதற்காக அள்ளி வைத்து விட்டு,கிணற்றிலிருந்து நீரை இறைத்து தங்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்கு வர,அவர்களுக்கான உணவுகளோடு கவிதாவும் திண்ணையில் காத்திருந்தார்"

"சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து,என்ன செய்யனு பேசிக்கொண்டிருந்தனர்".

அப்பொழுது,வேதாகிட்டயே நீ சொல்லிருக்கலாமே வேலை பற்றினு அன்பு தனது மகளிடம் கேட்க, "என்னோட சம்மதம் இல்லாமல் அத்தையும் மருது வீட்டில் பேசியிருக்க மாட்டாங்கப்பா".

"தனது தங்கைக்கும் மகளுக்கும் உள்ள புரிதலை எண்ணி உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவர்,சரிமா நானே இதைப்பற்றி பேசுறேன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாவிடமிருந்து கால் வந்தது".

"அத்தை தான் பா என்றவாறு அட்டென் பண்ணிய அல்லி,அத்தை எப்படி இருக்கீங்க?,நல்லா இருக்கேன் குட்டி, பொங்கல் வேலையெல்லாம் எப்படி போகுது?".

"பெண்டு கழலுது".நான் சும்மா இருந்தால் தான் சில பேர் கண்ணுக்கு ஆகாது என்றாள் கலா அப்பாயியை பார்த்துக்கொண்டே.

தனது தாயை பற்றி தான் மருமகள் சொல்கிறாள் என்பது புரிந்து சிரித்தவர், அப்பா இல்லையாடா?,ம்ம் இதோ தரேன் என்று போய் அன்புவிடம் போனை நீட்ட, சொல்லுமா என்றார்".

"அண்ணா....மயிலாவுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லலையேணா,சம்மதம் சொல்லிடுமா என்றவர்,நீயே எல்லாம் பேச வேண்டிய தானே?,நம்ப புள்ளை விருப்பம் தெரியாமல் எப்படிணா நான் வாக்கு கொடுக்க?,மருமகளும் அத்தையும் ஒரேப்போலவே யோசிக்கிறீங்களென்று சிரிக்க", என்னணானு வேதா கேட்க,புள்ளை சம்மதமில்லாமல் நீ எதுவும் பேச மாட்டனு.அதைப்போல தான் இப்போ நீயும் சொல்லுற.

அப்படியாணா என்ற வேதாவிற்கு, "கல்யாணம் மட்டும் இப்ப வேண்டாம் என்று சொல்லுதுமா".சிங்கப்பூர் போய் விட்ட பிறகு அத பத்தி யோசிக்கலாம்னு சொல்லுதுமா என்கவும்,எனக்கும் அது தான்ணா தோணுச்சி.

அவளுடைய கனவு இது தான்.அதை கலைக்க எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்ற தங்கையிடம், இதை பற்றி தம்பி வீட்ல பேசிடுமா, "சரிணா என்றார்"

"அப்புறம் மா."..பொங்கல் முடிஞ்ச பிறகு அவர்களை முறைப்படி பொண்ணு பாக்குறதுக்கு வர சொல்லிடு,சரி ணா. நான் அவங்க வீட்ல பேசிட்டு உனக்கு பதில் சொல்றேன் என்றவர்,வீட்டில் இருப்பவர்களிடம் பேசி விட்டு போனை கட் பண்ணினார்".

"தாமரையோ நாளைக்கு பொங்கலுக்கு போடுவதற்காக ஏற்கெனவே தைத்து எடுத்து வைத்த துணியை எடுத்து வந்து அம்மாவிடமும் பாட்டியிடமும் காட்ட,அவர்களுக்கு அந்த புடவை ரொம்ப பிடித்தது".

"அதற்கு மேட்சாக வேதா வாங்கி கொடுத்த நகைகளையும் தாமரை காட்ட, நாளைக்கு பூஜைக்கு இந்த புடவையவே கட்டிக்கடா தங்கம் என்கவும்,ம்ம் சரிம்மா என்றவள் "தங்கைக்கு எடுத்து வந்த டிரஸை தைக்க தொடங்கினாள்".

அப்பொழுது அங்கு வந்த அல்லி, அக்காஆஆஆ ஒரு விஷயம் என்க, சொல்லுடி என்றாள்.

வந்து... வந்து என்க,என்னதுனு சொல்லுடி.இதைப்போலவே இன்னொரு டிரஸ் தைக்க எவ்வளவு நேரம் ஆகும் கா என்க?

" டிரஸ் டிசைன் பொறுத்துடி என்ன மிஞ்சி போனால் கட்டிங்,ஸ்டிச்சிங், அப்படி இப்படினு பார்த்தால் 2 மணி நேரம் ஆகும்,ஓஓஓ...சரிக்கா.

அறுவடை வயல்...

என்னங்க....புள்ளைங்கள கூப்பிட்டு கிட்டு சாப்ட வாங்கனு சொல்லிக்கொண்டே வரப்பில் நடந்து சென்ற பார்வதி,அங்கிருந்த வேப்ப மர நிழலில் கூடையை இறக்கி வைத்தார்.

"அத்தை நான் போய்ட்டு அங்க என்ன நடக்குதுனு பார்த்துட்டு வரேனென்று வளவன் சொல்ல,சாப்பிட்டு போடி அப்பு என்கவும், "சாப்ட்டு தான் வந்தேன் என்றான் வளவன்".

"அங்கு வந்த செல்வம்,என்ன மருமகனே இன்னைக்கு பேக்டரிக்கு போகலையா?, வழக்கமான பொங்கல் லீவு மாமா".

ம்ம் என்றவர்,அதான் ஒத்தை சாப்ட சொல்லுறாளே,நீயும் கொஞ்சம் அந்த வெஷத்தை சாப்ட்டு பாக்க வேண்டியது தானேனு வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கை, கால் மூஞ்சை கழுவி கொண்டே செல்வம் சொல்ல,கணவரின் பேச்சே கேட்டவர் ஆஹான்...அப்போ நல்லா சமையல் தெரிஞ்சவளையே கட்டிக்க வேண்டியது தானே,எதுக்கு பாரு... நோருனு பின்னாடியே அலைஞ்சீங்க? என்க,என்ன செய்ய?,"பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தான் தெரியுமென்று சிரித்தார்".

"தெரியும் தெரியும்",ஒரு பயலும் பொண்ணு குடுக்கலை அப்பு இவருக்கு.

ஏதோ எங்கப்பனும்,சித்தப்பனும் தான் நம்ப அத்தை குடும்பமாச்சே போனா போகட்டும்னு பொண்ணு குடுக்க சம்மதிச்சாங்க.அய்யா, "அதை மறந்துட்டாரு போல".

"அப்பொழுது அங்கு வந்த வேலு,எம்மா உன் பஞ்சாயத்து முடிஞ்சிட்டுனா சோறு தரலாமே,வாப்பா என்றவர்,மூவருக்கும் தட்டில் சூடான சாதத்தையும்,அதன் மேல் எண்ணெய் கத்தரிக்காய் கொழம்பை ஊற்றி,"தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரை பொறியலை வைத்து கொடுத்தார்".

"நீயும் சாப்டுடானு வேலு சொல்ல,சாப்டு தான் வந்தேன் மாமா என்ற வளவன், பின்னர் அங்கிருந்து வயலை நோக்கி சென்றான்.இவர்கள் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து மீண்டும் வயலில் இறங்கி வேலையை தொடங்கினர்".

அப்பொழுது,வேலை செய்து கொண்டிருந்த வேலுவோ தாத்தா தாத்தா என்க,சொல்லுடா என்றார்.

ஆமாம்,நீ உன் வாலிப வயசுல பொண்ணுக்கு ரூட்டு விடுரதுலாம் உண்டா?என்க,எலேய் அறிவு கெட்டவனே என்னடா கேள்வினு மகனை செல்வம் சத்தம் போட,அதற்கு பெரியவரோ,செல்வம் விடுப்பா.என் பேராண்டி தானே கேட்குறான்,அட நீ வேற சித்தப்பா,அயோக்கிய பய, "உன்கிட்ட விசயத்தை வாங்கி கிட்டு ஊட்ல சித்தி கிட்ட போட்டு குடுத்துருவான்".

ஹாஹாஹா என்று சிரித்தவர், இன்னும் புதுசா உன் மவன் போட்டுக்குடுக்க என்ன இருக்கென்றவர்,சின்னஞ்சிறுசுக நாங்க ஏதோ பேசிக்குறோம்,நீ ஏண்டா மவனே அதையெல்லாம் காதுல வாங்குற என்று செல்வத்திடம் சொல்லியவர்,அது ஏகப்பட்ட கழுதை உண்டு டா பேரான்டி.

எங்கே,அதுல ஒன்னை எடுத்து உடு பாக்கலாம்னு வேலு சொல்ல,ம்ம் என்றவர்,அப்போ தான் மீசை முளைக்குற வயசு.பக்கத்து ஊரு வயல்ல தோண்டிகா போடும் வேலைக்கு ஆள் கூப்புட வந்தாங்களா."நானும் இன்னும் சில கூட்டாளிங்களும் வேலைக்கு போனோம்".

"காலைல சீக்கிரமாவே வேலைக்கு போய்ட்டதால பசி வேற வந்துட்டு. அப்போது ஜல்லு ஜல்லுனு கொலுசு சத்தம் கேட்க,வேலை செஞ்சிக்கிட்டே திரும்பி பார்த்தேன்,இடுப்புல பானையும்,தலையில பெரம்பு கூடையோட செப்பு செல போல வந்தாள் பாரு,கண்ண அங்கு இங்க சிமிட்ட முடியல".

"வரப்புல நடந்து வந்தவ,எல்லாரும் வாங்க கூழ குடிச்சிட்டு வேலை பாக்கலானு சொல்ல,அந்த குரலு அப்படியு காதுக்குள்ள போய் என்னமோ பண்ணிச்சி,ஆஹான் பண்ணும் தாத்தா பண்ணும் என்றவன் அப்புறமென வேலு கேட்க,நாங்க ஆறு பேர்,வயல்காரர் ஒருவர்".

"கேழ்வரகு கூழை கரைச்சி பதமா எடுத்து வந்தவ,ஆளுக்கு ஒரு சொம்ப மொண்டு கொடுக்க,பசிக்கு அது தேவாமிர்தமா இனிச்சிது.கண்ணுக்கு முன்னாடி நின்னவளை பாக்க கண்ணு கூசுதுடா பேராண்டி,ஏன் தாத்தா,சூரிய ஒளி கிட்ட நின்னாங்களா என்றான் வேலு?"

அதை கேட்ட தாத்தாவோ, "அட துப்பு கெட்டவனே".....அம்புட்டு பள பளனு இருக்கா.சரி இவள எப்படியாவது கரைக்ட் பண்ணிடலானு மனசுக்குள்ள நினைக்க,வந்து விழுந்துச்சே இடி.

என்ன இடி தாத்தா?,வயலுக்கு சொந்தக்காரனை பார்த்து,மாமா மதியம் சாப்ட ஊட்டுக்கு வரீங்களானு அவ கேட்க,அவரோ இல்லைடி மாமான் வேலைய முடிச்சிட்டு தான் வருவேன். "சாய்ங்காலம் ரெண்டாவது ஆட்டம் படத்துக்கு போகலாம்,நீ ஊட்ல அம்மாட்ட சொல்லிடுனு சொன்னார்".

"எனக்கோ, என்னடா இது விஷயம்னு மண்டை காய, பொறுமையா பேச்சு கொடுத்துக்கிட்டே உங்க சொந்தக்கார புள்ளைபோல, பாசமா இருக்கேனு கேட்க, அந்த ஆளு என் பொண்டாட்டினு சொல்லிட்டாருடா என்று தாத்தா கதையை முடிக்க ,ஹாஹாஹாஹா சோனமுத்தா போச்சா தாத்தா" என்று சிரித்தான் .

"சித்தப்பா... இதோட நிறுத்திக்க. உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்னு செல்வம் சொல்லிக்கொண்டே வேலை செய்ய,தம்பி விடுப்பா.இல்லைனா மட்டும் உன் சித்திக்காரி என்னை அரிச்சந்திரன்,ராமன்னா சொல்லிடப்போறா" என்றவர்,"அதுலாம் ஒரு காலம் டா பேராண்டி" என்று தனது சிறு வயது நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே வேலையை செய்தனர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தேனூர்!

ஜேம்ஸ் ஒவ்வொருவராக அனுப்புனு ராமன் சொல்ல,சரிங்க சார் என்றவனோ இன்டர்வியூக்கு வந்திருப்பவர்கள் இருக்கும் ஹாலிற்கு வந்தவன், ஒவ்வொருவராக போக சொன்னான்.


"உள்ளே வந்தவர்களை மூவரும் ஆளுக்கொரு கேள்வியை கேட்டு இன்டர்வியூ எடுத்துக் கொண்டிருந்தனர்.பாதி பேருக்கான இன்டர்வியு முடியவே மதிய உணவே நேரம் வந்து விட்டது".

இனி மதிய உணவு முடிந்த பிறகு தொடங்குமென ஜேம்ஸ் சொல்லி விட்டு செல்ல,இப்போ என்னடி பண்ணுவது? என்றாள் ரேவதி.

இருடி,அண்ணா இங்க தான் இருக்காங்க நான் சொல்லுறேன் என்றவள்,தனது போனிலிருந்து தேவ்க்கு கால் பண்ண,அட்டென் பண்ணியவனிடம் விஷயத்தை சொல்லவும்,சரிடா கீழ வந்து வெய்ட் பண்ணுங்க,இன்னும் அஞ்சு நிமிஷத்துல வரேனென்று சொல்லி போனை வைத்தான்.

"சொன்னப்போலவே இருவரும் கீழே உள்ள மரத்தடியில் காத்திருக்க,அங்கு வந்து சேர்ந்தவன்,வாங்கி வந்த உணவை கொடுத்து விட்டு,ரேவதியிடம் நலம் விசாரித்தவன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து தேவ் சென்று விட,சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் மேலே உள்ள ஹாலிற்கு வந்தனர்".

"திரும்பவும் இன்டர்வியூ தொடங்கியது, ரேவதியும் சென்று சிறிது நிமிடத்தில் வெளியே வந்தாள்". என்னடி?, தேறுமா என்க,ஸ்சூஊஊஊஊ,எத்தனை கேள்விடி?வளைச்சி வளைச்சி மூன்று பேரும் கேட்குறாங்கடி.ஆனால்,நமக்கு தெரிந்த கேள்விகள் தான்.

மேலும் இருவர் சென்று பின்னர் தேவியை போகச்சொன்னார் ஜேம்ஸ். "மனதிற்குள் இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொண்டே கதவை தட்டி உள்ளே சென்றாள்".

" என்ன?மூன்று பேர் இன்டர்வியூ பண்ணுறாங்கனு சொன்னாள்,இங்க ஒருத்தன் தான் இருக்கானேனு யோசனையோடே வந்தவள்,குட் நூன் சார்".

முக்கியமான போன் கால் வந்ததால் லாரன்ஸ் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்,ராமனும் இதுவரை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ண சென்று விட,கடைசியாக வந்த இருவரையும் ஜான் தான் இன்டர்வியூ பண்ணினான்.

"கதவை திறந்த போது,வெளியே இருந்த சூரியன் வெளிச்சம் பட்டு , தேவியின் உருவம் பிரகாசமாய் தெரிய",அதிலே ஜான் விழுந்து விட்டான்.இன்னும் அவள் அருகில் வர, "அழகு பதுமையாய் வந்து நிற்ப்பவளை பார்த்து ஆட்டம் கண்டது ஜானின் மனம்".

"சார்" என்க,எஸ்... உட்காருங்க என்றவன்,என்னடா இவ?,லட்டு பொம்மை போல இருக்கா?, எந்த ஊர்காரியா இருப்பானு தெரியலையேனு மனதிற்குள் சொல்லிக் கொள்ளும்போது, மனசாட்சியோ அவ பைலை வாங்கி பாரு முண்டம் தெரியுமென்றது".

"என்ன இவன் எதுவும் கேட்காம இடிச்ச புளி போல இருக்கான்னு தேவி நினைக்க,அவளின் முன்பு கையை நீட்டினான்".மடியில் இருந்த பைலை கொடுத்தாள்.

அதை வாங்கி திறக்க தேவி என்று இருந்தது."தேவி ஜான் தியோல்" என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
தேவியின் விவரங்களை படித்தவன், நீங்க யுஜி மட்டும் தான் முடித்து இருக்கீங்க இல்லையா?எஸ் சார் என்றாள்".

பின்னர் அவளிடமும் பெயருக்கு மட்டும் ஒப்புக்கு சப்பாணியான கேள்விகளை கேட்க,எல்லாவற்றிற்கும் தேவியும் பதிலை சொல்லிக்கொண்டிருந்தாள்".

"நம்ப ஜானோ,சைட் அடிக்கும் வேலையை அழகாக செய்து கொண்டிருந்தான்".ஒவ்வொரு கேள்விக்கும்"அவள் முகம் காட்டும் அபினயங்களை ரசித்து பார்ப்பதை காட்டிக்கொள்ளாமல் இருக்க ஜானுக்கோ சிரமமாக இருந்தது".

இந்த சிங்காரி இன்டர்வியூக்கு வந்தாளா?இல்லை என்னை இம்சை பண்ண வந்துருக்காளானே தெரியலையே ஜீஸஸ்னு உள்ளுக்குள் பிதற்றிக் கொண்டிருந்தான்".

"வழக்கமாக அனைவருக்கும் பத்து நிமிடங்களே இன்டர்வியூ, ஆனால்..., தேவிக்கு இருபது நிமிடங்கள் தாண்டி சென்று கொண்டிருந்தது".

"இனியும் இவளிடம் கேள்வி கேட்டால், இவளே வேலைக்கு வரமாட்டாள் என்று நினைத்தவன்,ஓகே வெய்ட் பண்ணுங்க". தேங்க்யூ சார் என்றவள், பைலை கேட்க,மனமேயில்லாமல் கொடுத்தான்".

"வெளியே வந்த தேவியிடம்,என்னடி உனக்கு மட்டும் இவ்வளவு நேரம்?, என்று ரேவதி கேட்க,அட ஏண்டி நீ வேற....
மூன்று பேர் இருப்பாங்கனு பீதிய கிளப்பி விட்ட,அங்கே பார்த்தா,ஒரு பால் வாடி பையன் உட்கார்ந்துருக்கான்.என்னாஆஆஆ பால்வாடியா!!".

"ஹாஹாஹா", என்று சிரித்தவள், சும்மா சொன்னேன் டி.நம்ம சினிமா ஹீரோ ஆர்யா போல ஒருத்தன் இருந்தான்.அவன் தான் அத்தனை கேள்வி கேட்டான் டி என்றாள் தேவி".

" ஓஓஓ என்றவள்,நான் போகும் போது மூன்று பேர் இருந்தாங்களேனு சொல்ல, தெரியலைடி என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்".

"அரைமணி நேரம் சென்று,ரேவதி, தேவி, இன்னும் மூன்று பேரை உள்ளே வரச்சொல்வதாக ஜேம்ஸ் சொல்ல, என்னவா இருக்குமென்று இவர்கள் யோசனையோடே உள்ளே செல்ல, இப்பொழுது அங்கே மூன்று பேர் இருந்தனர்".

நீலகிரி...

ஆன்ட்டி... ஆன்ட்டி....என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் பவி.அப்பொழுது தான் தாமரையிடம் பேசி விட்டு போனை வைத்தார் வேதா. வா பவி என்றவர்,உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.

நானும் ஒன்னும் சொல்லனும் ஆன்ட்டி. " சரி நீ சொல்லு என்றார் வேதா".

அப்பாவும்,அம்மாவும் கோவைக்கு போறாங்க ஆன்ட்டி.நான் உங்க கூடவே இருக்குறேன்னு சொல்லிட்டேன் என்க, சரிடா பவி,பாட்டிக்கு துணைக்கு போறாங்களோ?

ஆமா... அந்த கிழவிக்கு வேலைக்கு ஆள் வேண்டும் இல்லையா,இப்போ நம்ம உதவி தேவையாச்சேனு பவி சொல்ல , விடுடா பவி.வயசானவங்க அப்படி தான் என்று வேதா சொல்லி விட்டு,சாப்டியா நீ ,ம்ம்,நீங்க?.

" நான் சாப்ட்டேன்,மயிலா தான் எடுத்து வந்துச்சி என்றார்".அப்போ செம்ம சாப்பாடு தானென்று பவி சிரிக்க,போக்கிரினு சிரித்தவர்,சிம்பிளான உணவு தான் ஆனால் வழக்கம் போல ருசியா இருந்துச்சி".

"அது தான் தெரியுமே என்றவள்,ஆமாம் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே,, ஆங்.... நான் பேச்சு வாக்குல மறந்துட்டேன் டா பவி".எல்லாம் நல்ல விஷயம் தான் என்றவர், தாமரைக்கு கல்யாணம் முடிவாகிருக்கு பவி,அதைக்கேட்டவள் என்னாஆஆஆஆஆ!!என்று அதிர்ந்தாள்".

ஆமாடா பவி..... மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை,"உன் தோழன் மருது தான்",என்னாஆஆதுஊஊ என்று, "மீண்டும் விழி விரிய அதிர்ந்தாள்!!".

" ஹாஹாஹா.... என்று சிரித்தவர், ஆமாடா பவி.மருதுக்கு பொண்ணு கேட்டு மயிலா வந்து பேசிச்சென்றதையும்,பின்னர், சீமக்கரையில் இருக்கும் அண்ணனிடம் பேசியதையும் தாமரையின் சம்மதத்தையும் சொல்லி முடிக்க,பேயறைந்த போல் இருந்தாள் பவி".

"அவளின் அதிர்ந்த தோற்றத்தை கண்டவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது".

பவி... பவி... என்று அவள் தோளை பிடித்து கூப்பிட,இவ்வளவு தானா?, இல்லை இன்னும் ஏதாவது இருக்கா?.

சரி வா.... நாம மருது வீடு வரைக்கும் போய் வரலாம் என்றவாறு எழுந்து சென்று,சிலிண்டரை நிறுத்தி விட்டு, தனது போனையும் வீட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு பவியை பார்க்க, ம்ம் என்று அவளும் எழுந்து வெளியே வர, வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் மருது வீட்டை நோக்கி சென்றனர்.

மருது வீடு!

"தலையில் தட்டிய அண்ணனை மனதிற்குள் திட்டியவன்,போதும்ணா என்க,ம்ம் என்றான்".

தம்பி...அண்ணனுக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்குனு சின்ன மகனிடம் மயிலா சொல்ல,என்னமா சொல்லுற?என்றான் மிலன்.

ஆமாப்பா, "நம்ப தாமரை தான் உன் மதனி என்க", நெசமாவா!! என்றான்.

" நெசம் தான் பா". ஹைஹை....தாமரை அக்காவா சூப்பரூ என்றவன், ச்சீ ச்சீ... இனி அக்கா இல்லை அண்ணி என்று தம்பி சொல்வதை கேட்டு, "மருதுக்கு பட்டாம்பூச்சிகள் தன்னை சுற்றி பறப்பது போல இருந்தது".

"அப்பொழுது... மயிலா... மயிலானு கூப்பிட்டுக்கொண்டே வேதா உள்ளே வர,அவரோடு பவியும் வீட்டின் உள்ளே வந்தாள்".

"இருவரையும் பார்த்தவர்கள்,வாங்க வாங்க என்று சொல்லி விட்டு, தம்பி நர்சம்மாக்கு சேர் எடுத்து போடுப்பா என்றபடியே குடத்தில் இருந்த நீரை சொம்பில் மொண்டு எடுத்தவர், இந்தாங்கம்மா என்று வேதா முன்பு நீட்ட,தண்ணி வேண்டாம் மயிலா, உன்னோட சுக்கு டீ தான் வேண்டும்".

"அதுக்கு என்னக்கம்மா போட்டுட்டா போச்சி என்றவர்,பவி கண்ணு சாப்புட்டியா?,ம்ம் என்று தலையசைத்தாள் மருதுவை முறைத்துக்கொண்டே".

"அடியேய் தீனிகள்ளி",அதான் நீ கேட்டது எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்ல இன்னும் ஏண்டி மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிற? என்று மருது கேட்க,நான் ஒன்னும் அதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிக்கலை என்று முறுக்கி காட்டினாள்.

"பொறவு என்னடி கோவம் குட்டச்சி?, இப்போ தெரியும் டா என்றவாறு அவன் அருகில் சென்றவள், தாமரைக்கும் உனக்கும் கல்யாணம்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?என்று அவனை அடித்தாள்".

" ஓ....அதுவா என்றவன் நேற்று தான் டி பேசி முடிச்சிருக்கு,சரி பிறகு உன் கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்,அதுக்குள்ள நீயே தெரிஞ்சுகிட்டனு மருது சிரிக்க,நடிக்காதடா".

"ஒழுங்கு மரியாதையா நடந்ததை எனக்கு சொல்லு என்க,சரி வா நம்ம வெளியில போலாமென்று அவளை அழைத்துக் கொண்டு மர நிழலில் இருக்கும் கட்டில் கிட்ட வந்தவன், உட்காருடி என்றான்".

"பின்னர் தாமரையை கடந்த மூன்று வருடங்களாக விரும்புவதையும்,அதை அன்றே அவளிடம் சொன்னதையும், அதற்கு தாமரை பதிலையும்,பின் மயிலா கேட்டது,வேதாவிடம் சென்று பேசியது வரை எல்லாம் சொல்லி முடித்தான் தனது ஆருயிர் தோழி பவியிடம்".

" நண்பனின் வாய் மொழியால் மீண்டும் ஒரு முறை கேட்டு தெரிந்து கொண்டவள்,வாழ்த்துக்கள் டா என்க, அட போடி நீ வேற,அவங்க வீட்ல என்ன சொல்ல போறாங்களோனு திக்கு திக்குனு இருக்குடி".

"ஓஓஓ...என்றவள் சப்போஸ் தாமரை வீட்டுல ஒத்துக்கலைன்னா என்னடா பண்ணுவ?என்று நண்பனை பார்க்க,கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் டி".

"இந்த மருதுக்கு பொண்டாட்டி என்றால் அது தாமரை மட்டும் தான். இந்த உடம்புல உசுரு இருக்கும் வரைக்கும்" என்ற மருதுக்கு, "அடேய்... நான் சும்மா கேட்டேன். நீ ஏன் இவ்வளவு சீரியசாகுற?" என்றவள், "சரி வா உள்ளே போகலா"ம் என்க, "ம்ம்" என்று இருவரும் வீட்டின் உள்ளே வந்தனர்.

வேதாவை பார்க்கவே மருதுக்கு சிறிது சங்கடமாக இருந்தது".அவன் சங்கடம் புரிந்தவர், மருது என்க,சொல்லுங்க மேடம் என்றான்."எப்படிப்பா...,தாமரைய கட்டுன பிறகும் இப்படி தான் மேடம் மேடம்னு கூப்பிடுவியா?என்கவும், அவர் சொன்னதை கேட்டவனுக்கு வெட்கமானது".


கண்மணி வருவாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top