• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
சீமக்கரை!

"கல்யாணம் பண்ணும் வயசு வந்துருச்சு இன்னும் பொருப்பு இல்ல ரெண்டு பயலுக்கும்", என்று திட்டிக் கொண்டே வேலுவின் அப்பா வரப்பில் நடந்து செல்ல,அவருக்கு எதிரில் அன்பழகன் வந்து கொண்டிருந்தார்.

என்னணா,நம்ம வயல்ல இன்னைக்கு அறுவடை போல என்று அன்பு கேட்க?,ஆமாடா தம்பி,அங்க கடலை பறிக்குறதுலாம் முடிச்சிட்டியா?

முடிஞ்சிட்டுணா.

"இன்னும் கம்பங்கொள்ளை தான் முடியலை.அறுத்துக்கிட்டு இருக்கு".

அதற்கு ஓஓஓஓ என்றவர்,உன் அண்ணிகாரி நம்ப பெரிய புள்ளைக்கு மாப்ளை வந்துருக்குனு சொன்னாள் என்க, "ஆமாணா".

"நானே நேர்ல வந்து பாக்கனும்னு இருந்தேன்.அதுக்குள்ள அண்ணி வீட்டுக்கு வந்துட்டாங்க என்றவர்,ரொம்ப நல்ல பையன் தான்ணா".

கோயம்புத்தூரில் வேலை பார்த்துட்டு இருக்கான்.வீட்டுக்கு மூத்த புள்ளைனு மருது குடும்பத்தை பற்றி சொல்ல, அனைத்தையும் கேட்டவர் பரவாயில்லை.வேதாக்கு தெரிஞ்ச குடும்பமா இருக்கு.இது போதும் நம்பி குடுக்கலாம்.

"என்ன நம்ப பங்காளி பயலுங்க தான் கூறு கெட்ட தனமா சாதி,கொலம், கோத்திரம்னு இழுப்பானுங்க"
ஏன் அன்பு,கவிதாவுக்கு அண்ணன் ஊட்டுல பொண்ணு குடுக்கனும் எண்ணம் இருக்கானு விசாரிச்சியா?

"இல்லைணா...நான் அப்படி ஒன்னும் கேட்கலையே?,ம்ம் நாளைக்கு ஒரு பேச்சு வரக்கூடாது டா".

அண்ணா இரண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தையில்லைனு உனக்கு தெரியாதா?நீ சொல்றது வாஸ்தவம்தான் தம்பி.ஆயிரம் தான் இருந்தாலும் முதல் உரிமை மாமா வீட்டுக்கு தான் அதை நீயும்,நானும் மறுக்க முடியாமா சொல்லு?என்க, முடியாது தான் ணா".

ஆனால்.."கவிதாவுக்கு இப்படி எண்ணம் இருக்குற போல தெரியலைணா?".

அதற்கு செல்வமோ,உன் அண்ணிகாரியும் சொன்னா டா, "தாமரைய பெரிய மருமவனுக்கு கட்டினா நல்லா இருக்கும்னு".

"என்னாஆஆஆ!!...கதிருக்காணா??என அன்பு கேட்க,ஆமாடா தம்பி.ஊட்டுக்கு மூத்தவன் கதிரு தானே".

ஆனால்,"யாருக்கு எங்க முடிச்சினு மேல இருக்கவன் போட்டுருக்கான்".அவன் போட்ட படியே தான் நடக்கும்.நீ எதுக்கும் ஒரு வார்த்தை கவிதாவை கேட்டுக்க?.

"இந்த பொம்பளைங்க எப்ப மாத்தி பேசுவாளுவோனு தெரியாதே".நீ சொல்லுறதும் சரி தான் ணா.பின்னர் மேலும் சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர்.

"வேலுவின் தந்தை செல்வம் சொன்னதைப் பற்றி அன்பும் யோசித்துக் கொண்டே வரப்பில் நடந்தார்".

"ஒருவேளை கவிதாவிற்கு அண்ணன் மகனுக்கு பொண்ணு கொடுக்கணும் என்று எண்ணம் இருந்திருக்குமா?

நாம் ஏன் இத பத்தி யோசிக்கவே இல்லை?நல்ல வேளை அண்ணன் இதை பற்றி பேசிச்சி.ஆனால், கவிதாவுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் நம்ம கிட்ட சொல்லிருப்பாளே?.

"சரி...எதுக்கு இதை மனசுல வச்சுக்கனும்,நேரடியாக கவிதா கிட்டயே கேட்டு விடலாமென்ற முடிவோடு வீட்டை நோக்கிச் சென்றார்".

"போகி வேலைகள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தது".சிலர் வீட்டை சுத்தம் பண்ணிக்கொண்டும்,சிலர் வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டும்,ஒரு சில வீடுகளில் வீட்டு பொருட்களை கழுவிக் கொண்டிருந்தனர்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டே அன்புவும் வந்தார்.

"பொங்கல் பண்டிகை எப்போதும் கிராமத்தில் விமர்சையாக கொண்டாடப்படுவதால் ஒவ்வொரு வீடும் வண்ணங்கள் பூசிக்கொண்டு பார்வைக்கு அவ்வளவு அழகாக காட்சியளிக்கும்".

"வேலைக்காக வெளி ஊருக்கு சென்றிருந்தவர்களெல்லாரும் பொங்கலுக்கு தான் லீவ் வாங்கிக்கொண்டு வருவார்கள்".

"தனது வீட்டுக்கு வந்தவர்,கவிதா என்று கூப்பிட,துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டிருந்தவர்,இதோ வரேங்க என்றபடியே வர,தங்களது தோட்டத்தில் வீட்டுக்காக பறித்து எடுத்து வந்து காய்கறிகளை மனைவியிடம் கொடுத்தவர்,கவிதா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்".

"கணவரிடமிருந்து காய்கறி பையை வாங்கியவர்,சொல்லுங்கள் என்ன விஷயம்?,ஒன்று கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டியே?

அட...எதுக்குங்க இப்படி?

"என்னன்னு சொல்லுங்க,நிறைய வேலை கடக்கு".

"அது வந்துமா...உன் அண்ணன் வீட்டுக்கு பொண்ணு கொடுக்கனும்னு எதாவது எண்ணம் இருக்கா?என்க,எனக்கு ஏதுங்க அண்ணன்?".

அக்காளுங்க தானே.அதும் ஒருத்தி உசுரோட இருக்காளானே தெரியலை?, இன்னெருத்தி தான் பார்வதி அக்கா.ம் னு நான் சுருண்டு படுத்தாலும் அம்மாவா ஓடி வருவாள்.

"எனக்கு நீங்க சொல்லுற போல யாரும் இல்லைங்க" என்று ஓரே வார்த்தையில் கணவர் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லி அடுத்த கேள்விக்கு இடமில்லாமல் வாயை அடைத்து விட்டார்".

மனைவியிடமிருந்து வந்த பதிலை தெரிந்து கொண்டவருக்கு மனது திருப்தியாக இருந்தது.

'நல்ல வேளை கவிதாவிற்கு இப்படி ஒரு எண்ணம் இல்லையே'னு உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவர்,எங்கே புள்ளைங்கள காணும்?என்க, அக்காளும்,தங்கையும் வீட்ல இருக்குற பாத்திரங்களை கழுவிட்டு இருக்காளுங்க.

"ஏன்டி, உனக்கு அறிவு இருக்கா? இந்த வருஷம் பொங்கலுக்கு தான் புள்ளை நம்ப கூட இருக்கு. இந்த நேரத்துல போய் இதப்போல வேலையெல்லாம் செய்ய சொல்லிருக்கியே என்ன பொம்பளை நீ?" என மனைவியை திட்ட, போதும் நிறுத்துங்க முதல்ல".

"மனைவியின் சத்தத்தில் அமைதியானவரை பார்த்து முறைத்தவர்,இதையெல்லாம் போய் உங்க மவளுங்க கிட்ட கேளுங்க என்று உள்ளே சென்று விட்டார்".

"கொஞ்சம் ஓவராதான் பேசிட்டோமோ?" என முணுமுணுத்துக்கொண்டே தோட்டத்திற்கு சென்றார்.

கிணற்றடியின் கீழே போட்டிருக்கும் சிமெண்ட் தரையில், ஆளுக்கு ஒரு மணையில் அமர்ந்து கொண்டு, அல்லியும் தாமரையும் பரணிலிருந்து இறக்கிய பாத்திரங்களையெல்லாம், ஒருத்தி சோப்பு போட்டு தேய்த்து கொடுக்க, இன்னொருத்தி கழுவி காய வைப்பதுமாக இருந்தார்கள்.

மரப்பொருட்களை எல்லாம் சிவா சுத்தம் பண்ணி கொண்டிருந்தான். கலா அப்பாயியும், தாத்தாவும் தேவையற்ற பேப்பர்களையும், புத்தகங்களையும் தனியாக பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

அங்க வந்த அன்பு, "ஏம்மா நானும் உங்க அம்மாவும் நைட்ல இந்த வேலையெல்லாம் பண்ணிப்போம் நீங்க ஏன் இப்படி சிரமப்படுறீங்க?"

"இதுல என்னப்பா இருக்கு?" என்றாள் தாமரை.

"பின்னர், அன்புவும் அவர்களோடு சேர்ந்து சுத்தம் பண்ண தொடங்கினார்".

அப்பொழுது,அக்கா இந்த வருஷம் பொங்கலுக்கு தான் இங்க எங்களோடு இருப்ப."அடுத்த வருஷம் மருது அண்ணா கூட கொண்டாடுவ என்றாள் அல்லி".

"அடியேய் சீரங்கத்து சிலுக்கி செங்காத்து முறுக்கி",அக்காவ கட்டிக்க போறவனை எப்படி கூப்பிடனும்னு கூட தெரிய துப்பு இல்லை,வாயப்பாரு வாடி வாசல் வரை என்றார் கலா அப்பாயி.

அதானே...என்னை எதாச்சும் சொல்லலை என்றால் உன் தலை தான் வெடிச்சிடுமே என்றவள்,ஏன் தாத்தா, இந்த உலகத்துல உனக்கு பொண்ணே கிடைக்கலையா?என்றாள்.

கதிர்-வேலு...

"மச்சான், அத்தை கிட்ட டீ வைக்கு சொல்லிருக்காராம்,அதையும், மோரையும் வாங்கிட்டு வந்துரு. நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேனென்று கதிர் சொல்ல, சரிடா என்று இருவரும் அவரவர் வீடு இருக்கும் தெருவிற்குள் பிரிந்து சென்றனர்.

"தனது அறைக்கு வந்த கதிருக்கு தாமரை மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது".

"ஏன்?மகாராணி கோலம் போட எழுந்து வர மாட்டாளா?".

" பெரிய இவ,அந்த அரைக்காபடிய கோலம் போட சொல்லிட்டு இவ வீட்டுக்குள்ளவே இருக்காப்போலனு திட்டிக்கொண்டே வண்டி சாவியை எடுத்தவன் கதவை திறந்து கீழே வர, அங்கு மாமியாருக்கும்,மாமனாருக்கும் டீ கொடுத்துக்கொண்டிருந்தார் ராதா".

" கீழே வந்தவன் ம்மா... டீ என்க, இதோப்பு என்றவாறு சமையல் அறைக்குள் சென்றவரிடம் கதிருக்கான டீயை கொடுத்தார் சீதா".

"அக்காவிடமிருந்து வாங்கி வந்தவர், இந்தாப்பு என நீட்ட,டீ டம்ளரை எடுத்து குடித்தவனிடம்,அப்பா வயலுக்கு போயாச்சப்பு,உன்னையும், வேலுவையும் வரச்சொன்னாரப்பு என்க, சரிமா என்றவன்,குடித்த டம்ளரை டேபிள் மேல் வைத்து விட்டு வெளியே இருக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு வர, வேலுவும் வீட்டிலிருந்து வந்தான்".

"பின்னர் இருவரும் வயலை நோக்கிச் சென்றனர்".

இந்த வருஷம் என்னடா பனி இப்படி பெய்யுது?என வேலு சொல்ல,"இதுலாம் ஒரு பனியாடா?என்றான் கதிர்".

"உனக்கு குளிராதுடா மாப்பென்று வேலு சொல்ல,என்னடா கிண்டலா?,அது இருக்கட்டும் உன் தங்கச்சி கிட்ட செருப்பை குடுத்துட்டியா?

இல்லைடா.இனி தான் குடுக்கனுமென்று வேலு சொல்லவும், முட்டாப்பயலே,முட்டாப்பயலே" கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்காடா?என்று வாய்க்கு வந்தபடி கதிர் திட்ட,ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வேலுவோ ,வாய மூடுடா தடிமாடென்று கத்தினான்.

பண்ணாடைப்பயலே....செருப்பை என்ன வீட்டுக்குள்ளவா போட்டு கிட்டு திரியப்போகுது?

"என்னமோ கருவ காட்டுல வேலை பாக்குற போல இந்தப்பேச்சி உனக்கு?, எங்களுக்கும் அந்த அக்கரை சக்கரைலாம் இருக்குடா".தங்கச்சி தான் காலையில வாங்கிக்குறேன்ணானு சொல்லுச்சி போதுமாடா?.ஆமா ராசா... என்ன உனக்கு என் தங்கச்சி மேல இம்புட்டு அக்கரை?என்க,உன் தங்கச்சியாச்சே மச்சான்".

பின்ன...அவள் மேல அக்கரை இல்லாமல் எப்படிடா இருக்கும் என்று கதிர் திருப்பி கேட்க,ஆஹான்..."அப்போ தேவி கூட தான் டா எனக்கு தங்கச்சி முறை என்க,எட்டி மிதிச்சேன் குருத்தெலும்பு நசுங்கிடும் டா. வெளங்காத பயலே,காலையிலே தேவி, காவினு ச்சை என்று வண்டியை வேகமாக ஓட்டிச்சென்றான் கதிர்". அடேய் பொறுமையா போடானு வேலுவும் சத்தம் போட்டான்.

"பின்னர் ஒரு வழியாக இருவரும் வயலுக்கு வந்தவர்கள்,வேலுவின் தந்தையிடம் சென்று,எடுத்து வந்த டீ, மோர் இருக்கும் பையை கொடுத்து விட்டு,உளுந்து விதைக்க போய்ட்டு வரோம் என்று சொல்ல,ம்ம்...சீக்கிரம் போங்கடா சூரியன் உச்சிக்கு வந்துரும் போல".

"ஏம்பா...இவ்வளவு கருக்கலா இருக்கு?,அதுக்குள்ள சூரியன் உச்சிக்கு வரப்போறனு உங்கிட்ட சொல்லிச்சானு வேலு கேட்க,மகனை ஒரு பார்வை பார்த்தவர்,சரி..ரெண்டு பேரும் அறுவடை வேலைய பாருங்க".

"நான் மச்சான் கூட சேர்ந்து உளுந்து விதைச்சிட்டு வரேன் என்க",இதோ கிளம்பிட்டோம் மாமா என்று கதிர் முன்னே நடக்க,என்னா நக்கலு எங்கப்பனுக்கு"என்று முணுமுணுத்துக்கொண்டே வேலுவும் அவன் பின்னே நடந்து சென்றான்.

"போகும் இருவரையும் பார்த்து தலையில் தட்டிக்கொண்டவர், சோம்பேறி புடிச்ச கழுதைங்கனு சொல்லிக்கொண்டே அறுவடை வயலில் இறங்கியவர்,வேலை செய்பவர்களிடம் சென்றவர் யப்பா,டீயும் மோரும் வந்துருக்கு,வாங்கப்பா".யாருக்கு என்ன வேண்டும்னு குடிச்சிட்டு வேலைய பாருங்க".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நண்பர்கள் இருவரும் வயலுக்கு வர, முத்துவும் இன்னும் சில ஆட்களும் விதை உளுந்தை ஆளுக்கொரு அலுமினிய கூடையில் பிரித்து எடுத்துக்கொண்டிருந்தனர்.

"இவர்களுக்கும் இரண்டு கூடையில் உளுந்தை கொடுக்க,முதல் ஆளாக வயலில் இறங்கிய பிரகாசம் கடவுளை வேண்டி விட்டு விதைக்க ஆரம்பிக்க, மற்றவர்களும் இறங்கி தங்களது விதைக்கும் வேலையை தொடர்ந்தனர்".

தம்பி தோண்டிகா போட்டுருக்கு பார்த்து விதைங்கப்பா,நெல்லு தாளுக்குள்ளே உளுந்து நின்னுட போகுதென சொல்லிக்கொண்டே பிரகாசம் விதைக்க,அதுலாம் நல்லா விதைக்கிறோம் பெருசு கவலை படாதே என்றார் ஒருவர்".

"எலே...வேலு....அங்க வயலுக்கு டீ குடுத்தாச்சானு தாத்தா கேட்க, குடுத்துட்டு தான் வந்தோம்".

"ம்ம்...கரும்பு கட்டு எப்போ எடுக்க போறீங்க?,கூடைய கீழ போட்டுட்டு இப்பையே போகட்டுமா?என்று வேலு சொல்ல,அகராதி புடிச்ச பயலென்றார்".

" ஒரு வழியாக எல்லா வயல்களிலும் உளுந்தை விதைத்து முடித்தனர்.சரி தாத்தா நாங்க அறுவடை வயலுக்கு போறோமென்று சொல்லிக்கொண்டே வேலு வீட்டு வயலுக்கு வந்தனர் நண்பர்கள் இருவரும்".

"அவர்கள் வந்து பார்க்கும் போது பாதி வயலை அறுத்திருந்தனர்".

"பின்னர் இருவரும் வரப்பின் மேல் செல்வம் வைத்திருந்த அருவாளை எடுத்துக்கொண்டு,வயலில் இறங்கி அடுத்த பட்டத்திலிருந்து அறுக்க தொடங்கினர்.பேச்சு கும்மாளத்தோடு வேலை நடந்து கொண்டிருந்தது.

"அறுப்பு அறுத்துக்கொண்டே ஒருவர் கேட்கலானார்,ஏண்டா... இப்படியே இளந்தாரி பயலாவே இருக்கலானு முடிவுல இருக்கீங்களா ரெண்டு பேரும்?என்க,வேணும்னா உன் பொண்டாட்டிய கட்டிவை யாரு வேண்டானு சொல்றாங்க என்றான் வேலு".

"அடேய்.... அந்த கிழவிய வச்சிகிட்டு நான் படுறது போதாதா?என்று அவர் கேட்க,அப்படியா என்றவன்,இன்றைக்கு ஆச்சிகிட்ட இருக்கு சங்கதி என்க, ஏண்டா,ஏன்?.

"சும்மாவே உன் ஆச்சி சக்கரம் இல்லாம சுத்துவா",இதுல நீ சலங்கை கட்டி விட்ட, உன் தாத்தன் அவ்வளவு தானென்று அவர் சொல்ல,அதைக்கேட்டு அனைவருக்கும் சிரிப்பு வந்தது".

"அப்பொழுது...ஏன் தாத்தா உனக்கு எத்தனை வயசுல கல்யாணம் ஆச்சுனு வேலு கேட்க,உங்கப்பன் பொறக்குறதுக்கு முன்னாடியே ஆச்சு என்றார்".

ஓஓஓ...அப்போனா உனக்கு எழுபது வயசு ஆகுது."ஆனால் இன்னும் குமரனாட்டம் இருக்கியே?".

" ஹாஹாஹா....என்று தனது மீசையை முறுக்கிக்கொண்டு சிரித்தவர்,வயசு ஏறுதுனு மனசு நினைச்சிட்டு சோர்ந்து போய்டுவோம்".

இது வைரம் பாஞ்ச உடம்பு.இன்னும் நாலு கல்யாணம் பண்ணலாமென்று தாத்தா சொல்ல, "ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆசை இருக்க கூடாது" என்று வேலு சொல்ல,இன்னொருத்தரோ மாமா நாலு பொண்ணு போதுமா? என்றார்.

"இப்படி கலகலப்பாகவே பேசிக்கொண்டே நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருக்க,காலை உணவுக்கான நேரம் வர,மீதி உள்ளதை வந்து அறுத்துக்கலாம் என்று மற்றவர்கள் கலைந்து சென்றனர்.

"வேலுவும்,கதிரும் நாங்கள் கொஞ்ச நேரம் கழித்து வரோமென்று சொல்லியவர்கள் வேலையை தொடர்ந்தனர்".

"எல்லாரும் சமமாக வேலை செய்யும் போது தான் கூலி கொடுக்க வசதியாக இருக்கும்".

இவர்கள் இருவரும் பாதியில் வந்து கலந்து கொண்டதால்,முன்னே அறுத்தவர்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை.

"என்ன தான் சொந்த வயலாக இருந்தாலும் இருவரும் கூலி ஆட்களை போல தான் நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்".

"எலேய்...நீங்களும் போய் சாப்ட்டு வாங்க"என்று செல்வம் சொல்ல, இருக்கட்டும் மாமா.எப்படியும்.."இன்னும் கொஞ்ச நேரத்தில் அத்தையே சாப்பாட்டோடு வரும் பாரு"என்று கதிர் சொல்லி கொண்டே வேலை செய்ய, அது என்னமோ உண்மை தான் டா மருமகனே.மவனும்,மருமவன் மட்டும் தான் அவளுக்கு கண்ணு தெரியும்.
என்றபடி வரப்பில் வைத்திருந்த மோரை எடுத்து வந்தவர்,இதை ரெண்டு பேரும் குடிச்சிட்டு பின்ன வேலைய பாருங்க என்க, நீ குடிக்கலையா மாமா? என்றான் கதிர்".

"நான் குடிக்கிறேன்டா,முதல்ல நீங்க ரெண்டு பேரும் குடிங்க" என்று சொல்லி வாளியை திறந்தவர்,அதனுள் இருந்த சொம்பால் ஒரு அளப்பு அளப்பி, ஒரு சொம்பு மோரை மொண்டு கதிரிடம் நீட்ட,அவன் வாங்கி குடிக்கவும்,அடுத்து வேலுக்கும் கொடுத்து விட்டு,"பின்னர் தானும் ஒரு சொம்பு மோரை குடித்ததும் மூவரும் பேசிக்கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தனர்".

சாப்பிட வீட்டிற்கு போனவர்களும் ஒரு மணி நேரம் சென்று திரும்பி வந்து வேலையை தொடங்கி சிறிது நிமிடங்கள் செல்ல,"மூவருக்கும் காலை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வளவனோடு பார்வதியும் அங்கு வந்தார்".

தேனூர்-லாரன்ஸ் வீடு....

"ராணுவ வீரருக்கே உரிய அத்தனை மிடுக்கோடு,வீட்டின் உள்ளேயிருக்கும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த லாரன்ஸ்,இன்னுமா உன் மவன் கிளம்புறான்?என்று பத்தாவது தடவையாக கேட்டார் தனது மனைவி ஜூலியிடம்".

இதோ...வந்துருவாங்க என்று ஜூலி சொல்ல,"அரை மணி நேரமா இதை தான் டி சொல்லி கிட்டுருக்க". பொம்பளை கிளம்ப நேரம் ஆனாலும் வாஸ்தவம்.

"சீவி சிங்காரிக்க நேரம் ஆகிட்டுனு சொல்லலாம்".உன் மவனுக்கு ஒரு பேன்ட்,சட்டையை போட இவ்வளவு நேரமா?".

"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டி கிட்டு நான் படுற பாடு இருக்கே ஜீசஸ்"...என்ற ஜூலி,மாடிப்படியில் ஏறி மேலே இருக்கும் மகனின் அறைக்கு முன் வந்தவர்,ஜான்...ஜான் என்று கதவை தட்ட,சிறிது நொடியில் கதவை திறந்து வெளியே வந்தான்,பெயருக்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல்,"பனை மரத்தின் பாதியளவு உயரத்தில் ஒருவன்".

மகனை பார்த்த ஜூலிக்கு திருப்தியாக இருக்க,வாடா கண்ணா.

எவ்வளவு நேரம் அப்பா வெய்ட் பண்ணிட்டு இருக்கார்,"நல்லா வெய்ட் பண்ணட்டும் அந்த ஹிட்லர என்றான்".

"ஏன் கண்ணா இப்படி?என்க",விடும்மா என்றவன்,தனது தாயை தோளோடு அணைத்துக்கொண்டு படிக்கட்டில் இறங்கி கீழே வந்தான்.

"மனைவியோடு கூட நடந்து வரும் மகனை பார்த்தவருக்கு என் மகன் என்ற கர்வம் தூக்க",தனது மீசையை முருக்கிக்கொண்டவர்,இப்போ எப்படி இருக்கு பார்க்க என்கவும்,ம்ம் அப்படியே நெத்தில மூன்று பட்டையும்,கழுத்துல ருத்திராட்சையும்,கையில் புக்ஸ் குடுத்துருங்க,பத்து பொருத்தமும் பக்காவா இருக்குமென்றான்".

"அதற்கு லாரன்ஸோ,முன்னாடி போட்ட கழை கூத்தாடி டிரஸ்களுக்கு இது எவ்வளவோ பெட்டர் என்க",எதேஏஏஏ... ஏம்மா இந்த ரசனை கெட்ட மனுஷனோடு எப்படிமா காலத்தை ஓட்டுன?சோ சேட் என்று ஜான் சொல்ல..."காலம் கடந்து வருத்தப்பட்டு ஒரு புண்ணியமும் இல்லைப்பா என்றார் ஜூலி".

மனைவியும் மகனும் குசுகுசுனு பேசுவதை பார்த்தவர்,ஆத்தாளும் மவனும் என்ன அங்க மந்திரம் ஓதி கிட்டு இருக்கீங்க?

"ஃபோனா இருந்தாலும் சரி,நேர்ல பார்த்தாலும் சரி,அப்படி என்னத்தை தான் பேசுவீங்களோ??என்க, நாங்க ஆயிரம் பேசுவோம் உங்களுக்கு என்ன??என்று ஜான் கேட்க,"என்னடா ஏத்தமா??என்றார் லாரன்ஸ்".

"கொஞ்சம் கூட டைம் கீப்பப் பண்ணுறது இல்லை,பஞ்ச்வாலிட்டினா என்னனு கேட்கும் ரகம் ரெண்டும்?,மிலிட்ரி காரனுக்கு போய் இப்படி சோம்பேறிங்க வந்து வாய்ச்சிருக்குங்க பாரு".

"பனி,மழைனு பாக்காம நானெல்லாம் அங்க பார்டர்ல நிக்கலையா?,இதுங்க என்னதுனா ஏசியில தூங்கிட்டு ஆடி அசைந்து வருவதற்கு எவ்வளவு நேரமென பேசிக்கொண்டே இருந்தார் ஜானின் அப்பா".

"தந்தையின் பேச்சை கேட்டவன்,அம்மா ரொம்ப வருஷமா எனக்கு ஒரு சந்தேகம்??என்க என்னப்பா என்றார் ஜூலி?.."

"உன் புருஷன் உண்மையிலே துப்பாக்கி புடிச்சி எதிரியை சுட்டாரா?இல்லை இட்லி,தோசை,சப்பாத்தினு சுட்டு கிட்டு நமக்கு தெரியாதுனு பீலா உடுறாரா சொல்லு?".

"பாவமாக முகத்தை வைத்துக்கொண்ட ஜூலியோ அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு தம்பி".

"அம்மாவின் பேச்சை கேட்டு ஜானிற்கு சிரிப்பு வரவும் ஹாஹாஹா என சத்தமிட்டு சிரிக்க,பொண்டாட்டியும் புள்ளையும் தன்னை பற்றி தான் பேசி சிரிக்கிறாங்கனு லாரன்ஸிற்கு புரிந்தது.

தனது முருக்கு மீசையை தடவிக்கொண்டே,ஒரு வருஷம் டைம் குடுக்கலானு பார்த்தேன்,ஆனால் இப்போ இரண்டு வருஷமா ஏத்தலானு முடிவு பண்ணிட்டேன் என்கவும், "அய்யோ என்று ஜானும் அலறினான்".

"அந்த பயம் இருக்கட்டும் என்றவர்,தனது வாட்சை பார்த்து விட்டு கிளம்பளாமா என்க,ம்ம் வேண்டானா விடவா போறீங்க?".

"டேய்...இங்க நீ அப்பனா?இல்லை நான் அப்பனா?,ஏன்,உங்களுக்கு அம்னீஷியாவா என்றான்? ".

"கேட்டதுக்கு என்றைக்காவது ஒழுங்கா பதில் சொல்லிருக்கியாடா?,புள்ளை பெத்து வச்சிருக்கா பாரு ச்சை என்றபடியே எழுந்து வெளியே செல்ல, ஹாஹாஹா என்று சிரிக்கும் மகனின் தோளை தட்டியவர் போதும் டா ராஜா".

ம்ம் உனக்காகமா என்றவன்,போய்ட்டு வரேன் மா என்று சொல்லி விட்டு வெளியே வந்தவன்,அங்கிருந்த காரின் கதவை திறந்து ஏறவும் டிரைவரும் ஸ்கூலை நோக்கி ஓட்டினார்".

"பத்து நிமிட பயணத்தில் ஸ்கூல் காம்பவுண்டிற்குள் வந்து சேர்ந்தது லாரன்ஸ் வந்த கார்".

"காரிலிருந்து இறங்கிய இருவரும் , அங்கிருந்து இன்டர்வியூ நடக்கும் பிளாக்கை நோக்கி சென்றனர்".

தந்தை,மகன் இருவரும் வருவதை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான ராமனுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்து.".

"அங்கு வந்த லாரன்ஸிற்கு குட்மார்னிங் சார் என்றார் ராமன்,லாரன்ஸூம் ராமனுக்கு குட் மார்னிங் சொல்லி விட்டு ஆரம்பிக்கலாமா என்க,இன்னும் ஐந்து நிமிடத்தில் தொடங்கிடலாம் சார்.

"ம்ம் என்றவர்,தனக்கான இருக்கையில் போய் உட்கார்ந்தார்".

"ஜானிடம் வந்த ராமன்,தம்பி... நல்லாருக்கீங்களா?எப்போ பா வந்தீங்க?,நான் நல்லா இருக்கேன் அங்கிள்".

"நேற்று மார்னிங் தான் வந்தேன் என்றவன்,நீங்க நல்லா இருக்கீங்களா அங்கிள்?,நல்லாருக்கேன் பா.

"எத்தனை வருஷம் ஆகுதுப்பா உன்னை பார்த்து".

"அதற்கு சின்ன சிரிப்பை உதிர்த்தவன், படிப்பு-வேலைனு அப்படியே வருஷம் போய்ட்டு அங்கிள்".

அப்பா தான் பிடிவாதமாக வர வச்சிட்டார்.ஆமா தம்பி,ஒத்த புள்ளை, கூட இருக்கனும்னு சார்க்கும் ஆசை இருக்காதாப்பா என்க,"உங்க ப்ரண்டை விட்டு தர மாட்டீங்களே என்று ஜானும் சிரித்தான்".

"ராமு..ரெண்டு பேரும் பேசிட்டீங்கனா ஜேம்ஸ் கிட்ட சொல்லி ஒவ்வொருத்தவங்களா வரச்சொல்லு என்றார் லாரன்ஸ்".

"தந்தை சொன்னதை கேட்டவன்,இந்த மிலிட்ரி கூட எப்படி அங்கிள் 55 வருஷமா நட்பா இருக்கீங்க?

"உங்களுக்கு சிலை வைக்கனும்" என்றவன்,லாரன்ஸ்க்கு பக்கத்தில் இருக்கும் சேரில் போய் அமர, இன்னொரு சேரில் ராமன் உட்கார்ந்து கொண்டு,டேபிள் மீது இருந்த பெல்லை அழுத்த "கதவை திறந்து உள்ளே வந்தான் அலுவலக ஊழியன் ஜேம்ஸ்".



கண்மணி வருவாள்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top