• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு!

அப்பாயிஈஈஈ... எதுக்கு அடிக்குற? பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களாடா? நீ எதுக்கு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க என்றதும் பேயறைஞ்ச போல இருக்கயென்று வளவனை பார்த்தார்.

இல்லையே,நான் சாதாரணமாக தானே இருக்கேன். அடேய்... ரீல் அறுந்து போயிடுச்சிடா விளக்கெண்ணெய் என்று வேலு சொல்ல, "ஏன் மாமா ஏன்?"

"அதே தான்டா நாங்களும் கேட்குறோம் ஏன் உனக்கு இந்த அதிர்வு?".

இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன், எனக்கு அத்த மவளை புடிச்சிருக்கு, கட்டிக்கலானு இருந்தேன் என்க,ஏதேஏஏஏஏஏ என்று வேலுவும், அப்பாயியும் அதிர்ச்சியாக,அப்பொழுது அவர்களுக்கு பின் புறமாக ஏதோ கீழே விழும் சத்தம் கேட்கவும் மூவரும் திரும்பி பார்க்க,அங்கே கதிர் அய்யனார் போல நின்று கொண்டிருக்க, அவனிடமிருந்து சில அடி தூரம் தள்ளி, தண்ணீர் சொம்பு நீரை சிந்திக்கொண்டு கீழே கிடந்தது.

ஆத்திஈஈஈஈ....இவனா என்று மூவரும் அதிர்ந்து பார்க்க,அவர்கள் அருகில் வந்தவன்,யாருக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க அப்பாயி?

அது வந்துப்பா என்று பாட்டி இழுக்க... ம்ம் சொல்லு.கவிதா மவள் தாமரைக்குதான்.

அப்பாயி சொன்னதை கேட்டவனுக்கு கொலை வெறி வந்தது.அவனின் தாடை இறுகுவதிலே எவ்வளவு கோவமாக இருக்கிறான் என்பது புரிய,எட்டி கதிரின் கையை பிடிக்கவும் வேலுவை நண்பனை பார்த்தவன்,நீ ஏதோ சொன்னாயே என்க..

"அண்ணா...அது வந்துணா...என வளவன் பேச்சில் தடுமாற,ம்ம் மேல சொல்லு.ஒரு வழியாக தைரியத்தை வர வைத்துக்கொண்டவன் எனக்கு தாமரைய புடிச்சிருக்குணா,அந்த புள்ளைய கட்டிக்க ஆசப்படுறேன் என்கவும் பார்வையாலே தம்பியை சுட்டெரித்தான் கதிர்".

"என்னடா இது ஆளுக்காளு என் பொண்டாட்டிய பங்கு போட நிக்கிறானுங்க?என உள்ளுக்குள் கோவம் மூண்டதை வெளியே காட்டிக்க முடியாமல் தவித்தான்.நண்பனின் மனநிலையை கணித்த வேலு,அடேய் என்ன பேசுறனு புரிஞ்சி தான் பேசுறியா?.

"மாமா....ஏன் உன் தங்கச்சிய கட்டிக்க எனக்கு உரிமை இல்லையா?,கை நிறைய சம்பாரிக்கிறேன்,காலம் முழுவதும் அவளை கண்கலங்காமல் பாத்துக்க தெம்பு இருக்கு,இன்னும் என்ன வேண்டும்?.

"இதற்கு மேல் தம்பி பேசுவதை கேட்டால் இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை உணர்ந்து அங்கிருந்து வேகமாக படியில் ஏறி மேலே சென்றான் கதிர்.

"மேலே போகும் பெரிய பேரனை பார்த்தவர்,பெரியவனுக்கு என்னடா சாமி பிரச்சினை?.யாருக்கு தெரியும் என்றவன்,நான் போய் பார்த்திட்டு வரேனென்று சொல்லி,மேலே வந்தவன் கதவை திறந்து உள்ளே பார்க்க,அறை இருந்த கோலமே கதிரின் கோவத்தை காட்டியது".

"உள்ளே வந்து கதவை தாழிட்டவன், கிழே கிடந்த சேரை நிமிர்த்தி வைத்து விட்டு,அங்கங்கே சிதறி கிடந்தவைகளை அதற்கான இடத்தில் வைத்தவன்,பாத்ரூம் வாசலில் நின்று கதவை தட்டலாமா?,வேண்டாமா? என்று யோசித்தான்.

அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்க சில அடி தள்ளி வந்து நின்றான்.வேலுவை நிமிர்ந்து பார்க்காமல் வெளியே வந்தவனின் தோள் பட்டையில் கை வைக்க,எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

மாப்பு என்க,ம்ம்... கிளம்பு,காய்கறி லோடு ஏற்ற வண்டி வந்துடுச்சுனு ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து போட்டவனோ வா என்று படியில் இறங்கி சென்றான்".

வேலுவும் கதிரின் வண்டியில் உட்கார்ந்தவன் கதிரின் வேகத்தை பார்த்து தோள் பட்டையில் தட்ட,இயல்புக்கு வந்தவன் பின் வழக்கமான வேகத்தில் வண்டியை ஓட்டினான்.

"மனசுல இவ்வளவு ஆசைய வச்சி கிட்டு எதுக்கு மாப்பு இப்படி?என்று வேலு கேட்க,அப்படிலாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.ஓஓஓ.. அப்போ நம்ப வளவனுக்கே என் தங்கச்சிய கட்டி வச்சிர வேண்டியது தானென்னு வேலு சொல்லியது தான் தாமதம்,வாய்க்குள் வந்த அத்தனை வார்த்தைகளையும் கொண்டு திட்ட தொடங்கி விட்டான்".

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அடேய் போதும் மாப்பு,காதுல ரத்த ஆறே ஓடுதுடா என்க,அப்பொழுது தான் வாயை மூடினான்.இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலே காய்கறி தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர்.

"ஏற்கெனவே மூட்டையில் காயை நிரப்பி கொண்டிருந்ததால் எடை போட ஈசியாக இருந்தது.நண்பர்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் மேற்பார்வையிட, காய்கறிகள் எடை போட்டு தைத்து தூக்கி சென்றனர் கூலி ஆட்கள்.

எல்லா காய்கறிகளையும் எடை போட்டு ஏற்றி முடிக்கவே மாலை ஆனது.பின்னர் எவ்வளவு பணம் என்று இருவரும் கணக்கு பண்ணி எழுதி வாங்கிக் கொள்ள,வண்டி லோடு அங்கிருந்து கனியூத்தை நோக்கி சென்றது".

மாப்பு லோடு அனுப்பியாச்சி என்று அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிடு டா,நான் போய் தோண்டிகா போட்ட வயலை பார்த்திட்டு வண்டி கிட்ட வந்துடுறேன்று அங்கிருந்து கதிர் சென்றான்.

தனது போனிலிருந்து கதிர் சொன்ன நம்பருக்கு கால் பண்ண,அட்டென் பண்ணிய கணீர் குரலில் வழக்கம் போல பேச்சு தடுமாறியது வேலுவிற்கு. என்னடா,லோடு அனுப்பியாச்சா?,கொஞ்ச நேரம் முன்னே தான்ணா".

"சரி டா நான் பாத்துக்குறேன்,அங்க வேலையெல்லாம் எப்படி போகுது? என அக்குரலுக்கு சொந்தக்காரனான ரிதுவர்ஷன் கேட்க,நல்லா போகுதுணா. நம்ப வயல்ல நாளைக்கு அறுவடைணா, கதிர் வீட்ல பாதி வயல்ல நடவு முடிஞ்சிட்டுணா,மீதம் அறுவடைக்கு உள்ள வயல்ல நாளைக்கு உளுந்து விதைக்குறாங்கணா".

"ம்ம் என்றவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை கட் பண்ணினான் வர்ஷன்.இப்பொழுது தான் வேலுக்கும் இயல்பாக மூச்சு வந்தது. எப்பாஆஆஆஆ....என்னாஆஆஆ கம்பீரம் இந்த மனுஷனுக்கென்று சொல்லிக்கொண்டவன்,கதிர் போன திசையை நோக்கிப் போனான்".

"நாளைக்கு போகி பண்டிகை,அன்று அதிகாலையிலே உளுந்து விதைத்தால் பொங்கல் முடிந்து நெல்லை அறுத்துக்கொள்ள சரியாக இருக்குமென்று,அங்கங்கே பழுத்தும் பழுக்காமலும் இருக்கும் நெற்கதிர்களை பார்த்துக்கொண்டிருந்த கதிரோ தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

வயலில் அதிகம் தண்ணி நிற்காமல் இருக்க தோண்டிகா போடப்பட்டு தயாராக இருப்பதை கண்டவன், பரவாயில்லை நல்லா தான் வேலை செய்திருக்காங்கனு மெச்சிக்கொண்டவன்,பின் ஒரு ரவுண்டு வயலை சுற்றி விட்டு,வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி செல்ல,வேலுவும் வந்து சேர்ந்தான்.

" வேலை ஒழுங்கா நடந்துருக்கா? நாளைக்கு விதைச்சிடலாம் தானே?ம்ம் நல்லா தான் செஞ்சிருக்காங்க. வடக்கால பக்கம் மூலையில் தான் தண்ணி கொஞ்சம் தேங்கி நிற்குதுடானு கதிர் சொல்லவும்,ம்ம் அது தண்ணி வடியும் பாதை,எதுக்கும் நாளைக்கு மடைய தெரந்து வச்சிட்டு பிறகு விதைச்சிடலாம் என்றான்".

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே வண்டியில் வந்தவர்கள்,வேலுவை அவன் வீட்டில் விட்டவன் தன் வீட்டை நோக்கி சென்றான்.

வேலு வீடு!

உள்ளே வந்த மகனை பார்த்தவர்,டீ வேண்டுமா என்க,போடுமா,இந்தா சித்தி உன்கிட்ட பேசனுமாம்.முதல்ல பேசிக்க என்ற வேலுவோ தனது போனிலிருந்து கவிதாவிற்கு கால் பண்ணியவன்,அவர் அட்டென் பண்ணியதும் காய்கறி லோடு ஏத்தும் வேலை வந்ததால் வீட்டுக்கு வர முடியலை சித்தி என்றவன்,இரு அம்மாகிட்ட தரேன்னு சொல்லி தன் போனை கொடுத்தான் வேலு".

"மகனிடமிருந்து போனை வாங்கியவர், சொல்லுத்தா என்க,கவிதாவும் விஷயத்தை சொல்ல,அதைக்கேட்ட வேலுவின் அம்மா இரு இரு நான் வீட்டுக்கு வரேனென்று போனை கட் பண்ணியவர்,தம்பி நான் சித்தி வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.

"அப்பா வந்தால் சொல்லிடுப்பா என்றவர் மகனின் பதிலை கூட எதிர் பார்க்காமல் தனது தங்கை வீட்டை நோக்கி வேகமாக சென்றார்.சிறிது நிமிட நடையிலே தங்கை வீட்டை அடைந்தவர்,கவிதா,கவிதா..என கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தார்".

தாமரை வீடு!

"எங்கேடி ஒரு அரவத்தையும் வீட்ல காணுமென்று சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தார் வேலுவின் அம்மா பார்வதி.அவரை பார்த்த அன்பு, வாங்கண்ணி என்க,வரேங்க என்றவர் கலா அப்பாயின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு,அவரிடம் நலம் விசாரித்து விட்டு,ஏத்தா இங்க வா என்றார்".

"இருக்கா,குடிக்க எடுத்து வரேன் என்க, அதுலாம் ஒன்னும் வேண்டாம்,நீ வந்து இப்படி உக்காருத்தா என்றவரின் அருகே வந்து அமர்ந்த கவிதா,தாமரை உன் போன்ல மருது போட்டோ இருந்தா அம்மா கிட்ட காட்டு மா".

"சரிமா என்றவள் போன் கேலரியில் பவி,தாமரை,மருது,வேதா நால்வரும் சேர்ந்து எடுத்திருந்த போட்டோவை ஓப்பன் பண்ணியவள்,இந்தாங்கம்மா என பார்வதியிடம் நீட்டினாள்".

"மகளிடமிருந்து போனை வாங்கியவர் மருதுவை ஆராய்ச்சி பார்வையோடு பார்த்து விட்டு,பையன பார்க்க நல்லா லட்சணமாக தான் இருக்கு கவிதா,பேரு என்ன?".

"மருதையன் கா என்றவர் பின் அவனது குடும்பத்தை பற்றி தனது அக்காவிடம் சொல்லி முடித்தவர்,நீ என்னக்கா சொல்லுற?நல்ல படியாக தான் தெரியுதுத்தா.நேரம் கூடி வந்துச்சினா எல்லாம் நல்லதா நடக்கும் என்றவர், தாமரை உனக்கு புடிச்சிருக்காமா?.

"உங்க எல்லாருக்கும் புடிச்சிருந்தால் எனக்கும் சம்மதம்மா என்றவளை, கிள்ளி முத்தமிட்டவர் அந்த மாரியாத்தா புண்ணியத்தில் மாங்கல்யம் அமையட்டும் என்றவர்,மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு,அவர்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்".

"காலை கதிரவன் செங்கதிரை பாய்ச்சிக்கொண்டு கிழக்கே உதயமாக தயாரகிக்கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் சென்று தூங்கினாலும் இன்றைக்கு கோலம் போட வருபவள் முகத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுந்தவன்,சத்தமில்லாமல் கதிர் படியிலிறங்கி போனான்".

"இன்று போகிப்பண்டிகை என்பதால் இந்த இருள் விலகாத நேரத்திலும் தங்கள் வீட்டை சிலர் சுத்தம் செய்ய தொடங்கினர்.யாருக்கும் தன் முகம் தெரியாமல் இருக்க மங்கி குல்லாவை போட்டுக்கொண்டு,உடலை சால்வையால் சுற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கவனித்துக்கொண்டே அத்தை வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்".


"தங்களது வயலில் இன்று அறுவடை ஆரம்பிப்பதால் ஆட்களை அழைத்து செல்ல வேலுவும் வீட்டிலிருந்து வந்து கொண்டிருக்க கதிர் வீட்டிலிருந்து செல்வது தெரிந்தது.இந்த நேரத்தில் இவன் எங்கே போறானென்று யோசித்தவன்,சரி என்னதுனு நாமும் போய் பார்க்கலாம் என்று நினைத்து,வந்த வேலையை விட்டு கதிரை பின் தொடர்ந்தான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தாமரை வீடு!

வழக்கமாக எழுந்திரிக்கும் நேரத்தை தாண்டி தூங்கிக்கொண்டிருந்தாள் தாமரை.நள்ளிரவு வரை ஓவியங்கள் வரைந்ததால் அவளால் எப்பொழுதும் போல எழுந்திரிக்க முடியவில்லை".

"எப்போதும் போல எழுந்து வெளியே வந்த கவிதா,மகளின் அறையை பார்க்க அது சாத்தி இருந்தது.இன்னும் தாமரை எழலை என்பது புரிந்தவர்,முற்றத்தில் இருந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு,முன் பக்க கதவை திறந்து வாசலுக்கு வந்தவர்,சாணம் தெளித்து,வாசலை கூட்டி முடிக்க, அல்லியும் எழுந்து வந்தாள்".

"அக்கா இன்னும் எந்திரிக்கலையாமா?,தூங்கட்டும் டி. தினமும் தாமரை தானே இந்த வேலைய செய்யுது என்றபடியே கோலம் போட கவிதா தயாராக,ம்மா... கோலத்தை நான் போடுறேன்".

நீ உள்ளே போய் சூடா டீய போடு.சரி நம்ப வீட்டு வாசலுக்கு மட்டும் போடு என்றபடியே வீட்டிற்குள் சென்றார்.இந்த அம்மாக்கு நம்ம கால வாரி விடுவதே வேலையா இருக்கென்றாள்.

கதிரும் யார் கண்ணிலும் படாமல் தாமரை வீடு இருக்கும் தெருவிற்கு சென்றவன்,அவள் வீட்டிலிருந்து மூன்று வீடி தள்ளி,நாலாவது வீட்டின் அருகே இருந்த புங்கை மரத்தின் கிழே போய் நின்று சுற்றி,முற்றி பார்க்க யாரும் அவன் கண்ணில் படவில்லை".

ஹப்பாடா....என்று சொல்லிக்கொண்டவன்,மரத்திற்கு பின்னே போய் நின்று கொண்டு, அங்கிருந்து தாமரை வீட்டை பார்க்க அங்கே வாசலில் லைட் எரியும் வெளிச்சம் தெரிந்தது".

"வாசல் பெருக்கி இருப்பதும்,இன்னும் கோலம் போடவில்லை என்பது தெரிய, நல்ல வேளைடா கதிரு.சீக்கிரமா வந்தோம்,இல்லைனா அவள் கோலத்தை போட்டு உள்ளே போயிருப்பாளென்று சொல்லிக் கொண்டான்".

"நண்பனை பின் தொடர்ந்து வந்தவனுக்கு ஆடு எங்கே போகுது என்பது தெரிந்தது,ஓஓஓஓஹோ.... இதான் சங்கதியா?தடிமாட்டு பயலே, மனசுல இவ்வளவு ஆசை இருக்கு, ஆனாலும் இல்லாத போலவே சமாளிக்குற,இன்றைக்கு நீ செத்தடி மாப்புனு சொல்லிக்கொண்டே வேலுவும் அங்கே சென்றான்".

"பொறுமையாக சென்ற வேலு, கதிருக்கு தெரியாமல் அவன் பின்னாடி போய் சில அடி விட்டு நின்று கொண்டான்.எப்படியும் தற்பொழுது கதிர் பின் பக்கம் திரும்பி பார்க்க வாய்ப்பு இல்லை என்பது புரிந்தே இருந்தான் வேலு,ஏனென்றால் தன் நண்பனின் கவனம் முழுவதும் சித்தி வீட்டின் மேல் இருக்கிறதே".

"என்னடா இவ்வளவு நேரம் ஆகுது ஆளைக்காணுமேனுன கதிர் புலம்புவது வேலுவின் காதில் விழுந்தது.புலம்புடி மாப்பு..நல்லா புலம்புனு சொல்லிக்கொண்டான்.அப்பொழுது, யாரோ வீட்டின் உள்ளே இருந்து வரப்போவது நிழலின் மூலமாக தெரிய, தாமரை தான் வரப்போகிறாள் என்று ஒரு வித பரபரப்போடு கதிர் பார்த்துக்கொண்டிருக்க,அல்லிதான் வெளியே வந்தாள்".

என்ன இவள் வராள்?என்று யோசித்தவன்,பின்னாடியே அவளும் வருவாளென காத்திருக்க,அல்லியோ பூக்கோலமிட்டு வண்ணத்தை தீட்டி, எழுந்து நின்று பார்த்து விட்டு,உள்ளே சென்று விட்டாள்".

"ச்சை...என்று தனது கையை மரத்தில் அடித்தவனின் காதில் விழுந்தது, 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன மாப்பூஊஊஊ' என்ற குரல்.வேலுவின் குரலை கேட்டு சட்டென்று திரும்ப, அங்கே கைகளை கட்டி நின்று கொண்டிருந்தான்".

"என்ன மாப்பு...தரிசனம் கிடைக்கலை போல?.எதுவும் பேசாமல் அங்கிருந்து தனது வீட்டை நோக்கி சென்றான் கதிர். டேய்... நில்லுடா எருமைனு சொல்லிக்கொண்டே அவனருகில் வந்தவன் விடு விடு என்க,ம்ம் வயலுக்கு ஆள் கூப்பிட்டியா?".

கதிர் கேட்ட பிறகு தான் வந்த வேலை ஞாபகம் வர,அய்யோ என்று தலையில் கை வைத்தவன்,போச்சுடா.அப்பா பேசியே கொல்லப்போறாரென புலம்பிக்கொண்டே வர,சிஐடி வேலை பார்க்குவதற்கு முன்பு இதை யோசித்திருக்கணுமென்று கதிர் சொன்னான்.

"எல்லாம் என் நேரம்டி மாப்பு என்றவனின் போனில் ரிங்டோன் சத்தம் கேட்க,செத்தடா வேலுனு சொல்லிக்கொண்டே அட்டென் பண்ணியவன் சொல்லுப்பா என்க, எலேய் அறிவுகெட்ட பயலே,எங்கடா போன? என்றார்".

"ஆள் கூப்பிட தான் பா வந்தேன் என்க, ஏண்டா....ஆளுங்க எல்லாரும் வயலுக்கு வந்துட்டாங்க,நீ இன்னும் எந்த ஆள கூப்பிட போயிருக்க முட்டா பயலே??என்றவர்,எங்கே அவன் என்க?, யாருப்பானு வேலு கேட்க,ம்ம் உன்னோட இரட்டை பிறவி என்கவும்,அதைக்கேட்டு சிரிப்பு வந்தது வேலுவிற்கு".

"மாப்பு இந்தாடானு கதிரிடம் போனை நீட்ட,அதை வாங்கியவன் சொல்லு மாமா.ஏண்டா துப்பு கெட்ட பயலுங்கலா எங்கடா போனீங்க?.உடற்பயிற்சி நல்லதுனு நீ தான மாமா சொல்லுவ அதான் நடக்குறோம்".

"எலேய்.... காலையிலே நெஞ்சில கல்லை போடாதீங்கடா முடியலை.முத்து மச்சான் உளுந்து இறைக்க ஆள கூப்பிட்டு போயிட்டுருக்காற்,நீங்க ரெண்டு பேரும் என்னாதுனா ஊரை உலாத்திட்டு இருக்கீங்க.

உன் அத்தைகாரி கிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன் ஆளுங்களுக்கு குடிக்க மோரும்,டீயும் போட சொல்லி,வயலுக்கு வரும் போது வாங்கிட்டு வந்துருங்கடா என்றபடிஅழைப்பை கட் பண்ணினார் வேலுவின் அப்பா"

தேவி வீடு!

"காலையிலே எழுந்த தேவி,குளித்து, புடவை கட்டி தயாரானவள் சாமி முன்பு வந்தவள் இந்த வேலை கிடைக்க நீங்க தான் அருள் புரியனும் தாயே என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். ".

"புடவை கட்டி லட்சணமாக இருக்கும் மகளை பார்த்த வசந்திக்கு, குணத்திலும் அடக்கம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவர்,பின்னர் முதல் நாள் இரவு கட்டி வைத்த பூவை எடுத்து வந்து மகளிடம் நீட்டினார்".

"அவளுக்கு பிடித்த சந்தன முல்லையை பார்த்தவள் ஆசையாக வாங்கிக்கொண்டு தனதறைக்கு சென்று மேக்கப் பொருட்கள் வைத்திருக்கும் டப்பாவை திறந்து, அதிலிருக்கும் பூ குத்தும் ஹேர் பின்னை எடுத்து,கண்ணாடியில் பார்த்துக்கொண்டே தலையில் வைத்துக்கொண்டவளோ ஒரு முறை தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள்".

"அளவான தேகத்தில் நல்ல கடலை மாவு கலரில்,குண்டு கன்னங்களோடு, நெற்றியில் சின்ன வட்ட வடிவத்தில் குங்கும கலரில் பொட்டும்,அதற்கு மேல் கீற்றாக திருநீரும்,அதன் கீழ் சிறிது குங்குமமும்,உடல் முழுவதும் ஆரஞ்சு கலரிலும்,அங்கங்கே ஆலீவ் கிரின் கலரில் சின்ன சின்ன ரோஜாக்கள் போட்ட ஷிபான் சேலையில் பார்க்க நம்ப குட்டி குஷ்பு போல இருக்கும் தனது உருவத்தை பார்த்தவளுக்கு எல்லாம் திருப்திகரமாக இருந்தது".

"இன்டர்வியூக்கு தேவையான பைலோடு தனது ஹேண்ட் பேகையும் எடுத்துக்கொண்டவள்,மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து விட்டு வெளியே வர,தேவும் தனது அறையிலிருந்து தயாராகி வந்தான்".

"தங்கையை பார்த்தவன் அழகா இருக்கடா என்க,நிஜமாவா அண்ணா?. ஆமாடா...நீ தான் புடவையே கட்ட மாட்டியே.இப்போ பாரு எவ்வளவு லட்சணமாக இருக்கென்றவன் அம்மாஆஆஆஆ என்று குரல் கொடுத்துக்கொண்டே டைனிங் டேபிளின் அருகில் சென்றவன், அங்கிருந்த சேரில் உட்கார,தேவியும் அவனுக்கு எதிரில் உள்ள சேரில் உட்கார்ந்தாள்".

பிரிப்பேர் பண்ணிட்டியா மா என்கவும், பண்ணிட்டேன் ணா.ம்ம் என்றவன், அம்மா என்று மீண்டும் கூப்பிட,இதோ வரேன்பா என்றபடி சமைத்த உணவுகள் அடங்கிய ஹாட் பாக்ஸ்களோடு அங்கு வந்தார்".

" பிள்ளைகள் இருவருக்கும் தட்டில் இட்லியை வைத்தவர்,அதன் மேல் சாம்பாரை ஊற்றி, ஓரத்தில் வெங்காய சட்னியையும் வைத்து இருவருக்கும் கொடுக்க,அண்ணன் தங்கை இருவரும் சாப்பிட்டு முடித்து,வசந்தியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்".

தேனூர்....

L. T. Metric Higher Secondary School...
சுற்று வட்டாரத்திலே இருக்கும் ஒரே ஆங்கில வழி பள்ளி இது தான்.இந்த ஸ்கூலை நிறுவியவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லாரன்ஸ் தியோன் என்பவர்.கடந்த பத்து ஆண்டுகளில் நன்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.

பள்ளியின் வாசலின் முன்பு வந்து தனது வண்டியை தேவ் நிறுத்த,கீழே இறங்கியவள்,நான் முடிச்சிட்டு கால் பண்ணுறேன் அப்போ வாணா என்று சொல்ல,சரிடா மா... நல்லா பண்ணுடா என்றவன் அங்கிருந்து தனது வேலையை பார்க்க சென்றான்.

"பள்ளியின் உள்ளே நடந்து வந்தவளின் பார்வையில் அங்கங்கே இன்டர்வியூக்கு வந்தவர்கள் தெரிய,காலியாக இருந்த சேர் ஒன்று தென் பட,அதில் போய் அமர்ந்து கொண்டவள்,கண்களை சுழற்றி எல்லாரையும் பார்வையிட்டாள்".

" அப்பொழுது,ஹேய் தேவி....என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க,அங்கே தன்னோடு கல்லூரியில் படித்த தோழியான ரேவதி வந்து கொண்டிருந்தாள்.தேவியின் அருகே வந்தவள்,எப்படி இருக்கடி?,நான் நல்லா இருக்கேன் டி.நீ எப்படி இருக்கிற? மேரேஜ் ஆகிட்டா?,பார்த்து இரண்டு வருஷம் ஆகுது இல்லையா?

ஆமாடி என்றவள்,நான் நல்லா இருக்கேன் என்ற தேவி,தோழியின் அடுத்த கேள்விக்கு இன்னும் மேரேஜ் ஆகலைடி என்க,எனக்கு காலேஜ் முடிச்சதும் ஆகிட்டு டி.அவர் துபாய்ல இருக்குறார்.வீட்லே இருக்க போர்.அதான் இங்கே இன்டர்வியூக்கு வந்தேன் என்றாள் ரேவதி.

தோழி சொன்னதை கேட்டு சிரித்தவள், எனக்கும் போரிங் தான் டி.அதான் என்க, பின் தோழிகள் இருவரின் பேச்சும் கல்லூரி காலத்தை நோக்கி சென்றது.

பாரேன்...மூன்று வருஷம் ஒன்றாக படித்தும்,கடைசி நேரத்தில் எல்லாம் எங்கெங்கோ பிரிஞ்சி போய்ட்டோம். இப்படி எதாவது சந்தர்பத்தில் பார்த்துக்கொண்டா தான்.அதற்கு தேவியும் ஆமா ரேவா,நீ சொல்றது ரொம்ப சரி இது தானே பெண்களோட வாழ்க்கை".

"எப்படியோ இங்க நமக்கு ஒன்னாகவே வேலை கிடைச்சிட்டா சந்தோஷம் டி என்றாள் தேவி.ஆமாடி, நானும் வந்ததில் இருந்து சுத்தி சுத்தி பார்த்தேன் யாராவது தெரிஞ்ச முகம் இருக்கானு??ரொம்ப நேரமா யாரையும் காணலை.அந்த நேரத்தில் இவர் போன் பண்ணிருந்தார்,அவர்ட்ட பேசிட்டு திரும்பும் போது தான் நீ வந்து உட்கார்ந்ததை பார்த்தேன்".

உடனே பல்பு எரிஞ்சிட்டு...ஆஹா... தேவி வந்துருக்கானு.அதான் கூப்பிட்டு கிட்டே வந்தேன்.அப்பொழுது,அங்கு வந்த ஆபிஸ் அட்டென்டர்,இன்டர்வியூக்கு வந்தவர்களெல்லாம் 'A' Block la இருக்கும் முதல் மாடிக்கு போங்கமா. இன்னும் கொஞ்ச நேரத்தில் சார் வந்துருவாங்க என்று சொல்லி சென்றார்.

"பின்னர் இருவரும் பேசிக்கொண்டே அவர் சொன்ன இடத்திற்கு வந்தவர்கள், அங்கிருந்த சேரில் போய் உட்கார்ந்து கொண்டவர்கள்,என்னடி... இவ்வளவு கூட்டம் இருக்கு?நமக்கு வேலை கிடைக்குறது சந்தேகம் தான் போல என்றாள் ரேவதி?

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top