• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
ஏரிக்கரை!

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்.


என்ற பாடல் கேட்க,அய்யோஓஓஓஓ இவனா!என்று பதறி போய் கதிர் திரும்ப,அங்கே வேலு நின்று கொண்டிருந்தான்".

"இவன் நம்மை ஓட்டியே கொன்னுடுவானே,சரி...பேசி சமாளிப்போமென மனதிற்குள் சொல்லியவன்,ஆமாம்...நீ எப்போடா வந்த?

தண்ணில குதிச்சி விளையாண்டியே அப்பவே என்றவன்,இது என்னடா கோலம்?

குளிக்க வந்தேன் டா அதான் என்றவன் கையில் உள்ள பூவை மறைக்க, எல்லாம் பார்த்தாச்சி பார்த்தாச்சி...லுங்கிய கட்டி கிட்டு வாடா.

ஹி ஹி என்று சிரித்தவாறு டிரஸை போட்டுக்கொண்டு அவள் செருப்பை பார்க்க,எடுத்துக்க வேற வழியென்று வேலு சொல்ல,அதையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டவனை பார்த்தவன், ஏண்டா,எத்தனை முறை சொல்லியிருக்கேன் இப்படி ஆள் இல்லாத போது தண்ணில மூழ்கி இருக்காதடானு?என்றைக்காவது கேட்டுருக்கியா?

மச்சான் உன் தங்கச்சிக்கு உண்மையிலே நீட்டு முடியா?என்று கதிர் கேட்க,நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடா தடிமாடு கேட்குற?எவனோ ஒரு ரோசக்காரன் அவ்வளவு தான்னு சொன்னானே இப்போ என்னவாம்?,நீள முடியா? குண்டு கண்ணானு?கேள்வி வேண்டி கடக்கு...

டேய் சொல்லுடா உன் தங்கச்சிகாரிக்கு நீட்டு முடியா?.

ஆமாம் அதுக்கு என்ன.சும்மா தான் கேட்டேன் என்றவன்,செருப்பை விட்டுட்டு போய்ட்டாளேடா.தூக்கி தலையில வச்சிக்கடா சரியாகிடும் என்ற வேலுவை வெட்டவா குத்தவா என்று முறைத்து பார்த்தான்".

என்ன பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை மாப்பு,எதுவா இருந்தாலும் தெளிவா யோசித்து முடிவெடுக்குர என் மச்சானுக்கு,இப்போ மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்னு தான் புரியலை?

தெரியலைடா என்ற கதிரோ சரி வா வீட்டுக்கு கிளம்பலாமென்று வண்டி நிறுத்தியிருக்கும் மரத்தடியை நோக்கி சென்றான்.

"மாப்பு... மாப்பு"

காது கேட்குது சொல்லுடா.அதான் மானங்கெட்டு போய் காதல்ல விழுந்திட்டியே பின்ன எதுக்கு இந்த வெட்டி வீராப்பென வேலு கேட்க,காதல், கன்றாவிலாம் ஒன்னும் இல்லை.இப்போ என்ன உனக்கு தெரியனுமென்றான்.

"ஓஓஓ... அப்படியா மாப்பு சரி செருப்பை குடு என் தங்கச்சி கிட்ட நான் குடுத்துடுறேன் என வேலு சொல்ல,கதிருக்கோ ஒரு நொடி திக்கென்று இருந்தது.

மனம் வராமல்,இந்தாடா...அவளோட செருப்பை வச்சிக்கிட்டு நான் என்ன மச்சு வீடா கட்ட போறேனென்று கையிலிருந்ததை கீழே போட்டான்.

"கதிர் இதை தான் செய்வான் என்பது வேலுக்கு தெரிந்ததால் தங்கையின் செருப்பை எடுத்தவன்,இந்த சண்டியர் பயலை புரிஞ்சிக்கவே முடியலையே?எத்தனை நாளைக்கு உன் நாடகத்தை நடத்துறனு நானும் பாக்குறேன் மாப்பு என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்".

வண்டியில் ஏறி வீட்டை நோக்கி செல்ல,இருவரின் சிந்தனையும் வெவ்வேறாக இருந்ததால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

"வேலுவோ கதிரை எதிர் பார்க்காமல்.... செல்லம்....வள்ளி செல்லம்....எங்கே இருக்க?என்றபடி உள்ளே வந்தவன் அங்கிருந்த நிலவனை கண்டு வாடா நல்லவனே...நல்லா இருக்கியாடா?

நல்லா இருக்கேன் மாமா...நீ எப்போ கோயில்ல இருந்து வந்த?முந்தா நாள் தான் வந்தேன் டா.அப்புறம் விளையாட்டு எப்படி போச்சுடா?, நிலவனும் அங்கு நடந்ததை வேலுவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேலையை முடித்து வளவனும் வந்து சேர,அவனும் தம்பியிடம் பேசி விட்டு தனது அறைக்கு சென்றான்".

" ஏண்டா...நெசமாவே செயிச்சி தான் கப்பு வாங்குனீங்களாடா என்கவும்,யோவ் மாமா என்னைய்யா கிண்டலா,மனுசன் உசுர குடுத்து விளையாண்டுருக்கோம் தெரியுமா. அவன்,அவன் மாடு போல இருக்கானுங்க,அந்த பயலுங்களை தாண்டி பைனலுக்கு வர எவ்வளவு கஷ்டம் தெரியுமாயா?

"இன்னும் கொஞ்சம் இருந்தால் என் கால் எலும்பை உடைச்சிருப்பான் அந்த மதுரை கேப்டன் என ஆவேசமாக நிலவன் சொல்ல,என்னடா சொல்ற? ரொம்ப அடியா என வேலுவும் பதற, யாருக்கு அடி??என கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் பெருமாள்".

"யாருக்கும் இல்லை மாமா... நிலவன் கிட்ட மேட்ச் பற்றி பேசிட்டு இருந்தோம் என வேலு சமாளிக்க,ம்ம்.... பரிச்சை வர போகுது படிக்க சொல்லு என்றவர்,எப்போ வந்த?நல்லா இருக்கியா?காலையில தான் பா,ம்ம் என்றான்.

"தனது அறைக்கு வந்த கதிரோ,கட்டில் மேல் மல்லாந்து விழுந்து கண்ணை மூட,ஏரிக்கரையில் நடந்த நிகழ்வுகள் படமாக ஓடியது கண்களுக்குள்.தன் மேல் விழுந்த பஞ்சு பொதிகையானவளை நினைத்து தாமரை என்று சொல்லி நெஞ்சின் மேல் குத்தியவன்,நீ எப்படி டி இருப்ப?

" கருப்பா?,இல்லை வெளுப்பா?, இல்லை மாநிறமா?...ஒரு மண்ணும் தெரியலைடி.ஆனால்,வக்கனையா மேல விழுந்து இப்படி பைத்தியம் போல புலம்ப வைக்குறடி??....ஒரு பேச்சுக்கு சொன்னேன்,செயினை உன் தங்கச்சி கிட்ட குடுத்துருடானு,உடனே உன் நொண்ணன் பண்ணாட பயல் வாங்கிட்டு போய்ட்டான்".

"இவனெல்லாம் மச்சானா?, கொஞ்சமாவது மாப்ளை பற்றி கரிசனை இருக்கா உன் அண்ணனுக்கு?,என்னை பார்த்து நக்கலா பாக்கியராஜ் பாட்டு பாடுறான்.

நான் உன்னை பேர் சொல்லி கூப்பிடுவேனு நீ எதிர் பார்த்திருக்க மாட்டடி என்றவன்,இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிரு இருக்க கூடாது. தண்ணில விழுந்தவளை காப்பாத்துனானே ஒருத்தன்,அவனுக்கு நன்றி சொன்னியாடி?

"இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போடுவ?,எவ மேலயும் ஆசை வரலையே,இருட்டுல வந்து மோதி விட்டு என்னை அலைகழிக்க வைக்கிறது சரியாடி???சரி...போனது போகட்டும்,ஒரு முறையாவது திரும்பி பார்த்தியாடினு திட்டியவன்,இன்றைக்கு இது போதும். இல்லை,உன் நொண்ணன் கதவை ஒடைச்சிட்டு உள்ளே வந்துருவானென்று வேறு டிரஸ் மாற்றிக்கொண்டு கீழே வந்தான்".

என்னடா அடிபட்டுருக்குனு சொல்றானே?? என வேலு கேட்க, முட்டியில காயம் தான் என்ற கதிருக்கு, ஓஓ...ஊசி எதாவது போட்டாங்களா?

யோவ் மாமா...பொறுமையா கேளுயா, விஜயசாந்தி மேடம் உள்ளே தான் இருக்குறாங்களென்று நிலவன் பதற்றமாக சொல்ல,ஹாஹாஹா...என்று சிரித்தவன் இருடா ஒரு நாளைக்கு இதை காதுல வாங்கி,உன் முதுகுல சின்னத்தை டின்னு கட்டுதா இல்லையானு பாரு என்ற வேலுவிற்கு, மாமா...மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி கிட்டு சத்தமா பேசுறயா.

என்னடா கிண்டலா என்றவன்,நாளைக்கு நடக்கப்போகும் வேலையை பற்றி வேலு கேட்டுக் கொண்டிருந்தான்.வேலுக்கு பதில் சொன்னாலும் கதிரின் சிந்தனையெல்லாம் தாமரை படியில் ஏறி ஓடிய உருவமே நினைவில் வந்து இம்சைகள் செய்தது".

நண்பனுக்கு பேச்சில் கவனமில்லை என்பது வேலுவுக்கு புரிய,அவன் தொடையில் ஒரு அடி வைத்தான், அடியின் வலியில் ஏண்டா தடிமாடு,ம்ம்... இப்போ நான் என்ன சொன்னேன் சொல்லு?? என வேலு கேட்க,நீ எங்கேடா பேசுன?

நீலகிரி...

"மயிலா இப்படி ஒரு விஷயத்தை தன்னிடம் கேட்பாரென்று வேதா சிறிதும் நினைக்கவில்லை.அப்போ,மருதுக்கு முன்பிருந்தே தாமரை மேல விருப்பம் இருந்துருக்கு என்பதை புரிந்து கொண்டவர்,எதுக்கு இந்த விஷயத்தை நீட்டி முழக்கனும் என நினைத்தவர், எழுந்து போய் தனது போனை எடுத்து அண்ணனுக்கு கால் பண்ணினார்".

" கம்மங்கறுதை அறுத்துக்கொண்டிருந்த அன்பழகனுக்கு செல் போன் ரிங் டோன் சத்தம் கேட்க,அங்கிருந்து சென்று மரத்தின் நிழலில் இருந்த பையை திறந்து போனை எடுத்தவருக்கு,தங்கை கால் பண்ணுவது தெரிய,அட்டென் பண்ணியவர்,சொல்லுமா நல்லா இருக்கியா?.

"நான் நல்லா இருக்கேண்ணா. அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?"


"இங்கையும் எல்லாரும் சுகமாக தான் இருக்காங்கம்மா" என்றவரிடம், "அண்ணா ஒரு விஷயம் பேசனும்" என்று வேதா தயங்க, "உன் அண்ணன்கிட்ட என்னத்தா தயக்கம் கேளுமா."

"தாமரை கல்யாணம் விஷயமா அண்ணா."

"ஏத்தா! உனக்கு நான் சொல்லி தான் தெரியனும்னு இல்லை. பெத்தது நானா இருந்தாலும் ஆளாக்குனது நீ தான்மா. தாமரை விஷயத்தில் நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான். உனக்கு பிறகு தான்டா எனக்கு உரிமை" என்று அன்பு சொல்ல, அண்ணனின் வார்தைகளை கேட்ட வேதாவிற்கு ஆனந்த கண்ணீர் வந்தது.

"இப்போ எங்கே இருக்கணா?"

"நம்ப கம்மங்காட்டுல தான்மா. இன்னும் செத்த நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்" என்றார்.

அப்படியாணா, நம்ப மருதுக்கு தாமரைய பொண்ணு கேட்குறாங்கணானு விஷயத்தை சொல்ல, "நீ என்ன நினைக்கிற?என்றார்".

நல்ல பையன் தான்ணா. கண்ணு முன்னாடி வளர்ந்த பையன். நல்ல குடும்பம்.

சரிமா. வீட்டுக்கு போனதும் போன் பண்ணுறேன். நீ கவிதா கிட்ட பேசிக்கோ."
"சரிணா" என்று வேதாவும் அழைப்பை கட் பண்ணிய வேதாவோ, சுவற்றில் இருந்த புகைப்படத்தின் அருகில் சென்று பார்க்க, அதில் ஏழு வயது சிறுமியாக இருந்ததிலிருந்து இன்று இளம் பெண்ணாக இருக்கும் தாமரையின் புகைப்படங்கள் பெரியதாக பிரேம் பண்ணி தொங்கி கொண்டிருந்தது.

இதுவரை தாமரையின் திருமணம் என்ற ஒன்றை பற்றி வேதா யோசித்து பார்த்ததில்லை. இன்று மயிலா பேசி சென்ற பிறகுதான் அவள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட உண்மை வளர்த்த தாயிற்கு விளங்கியதும், அவர் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது.

ஒரு நாள் கூட வேதாவை பிரிந்து இருந்ததில்லை தாமரை. வேதாவிற்கு மாதத்தில் ஓர் நாள் வழக்கமான மீட்டிங் இருக்கும்,எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்து விடுவார்.


ஆனால், தாமரையோ திடிரென்று, "ஊருக்கு போய்விட்டு வரட்டுமா?" என்று கேட்டது அதிர்சியாக தான் இருந்தது. ஆனாலும் மனமுவந்தே தான் பிறந்த ஊருக்கு அண்ணன் மகளை அனுப்பி வைத்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தாமரை வீடு:

தாமரை அனுப்பிய மெயிலுக்கு உடனே வி. வி.யின் பி. ஏ.லீனாவிடம் இருந்து பதில் வந்திருந்தது.எக்ஸலண்ட் தாமரை,குட் ஜாப் என்று வி. வி,சொல்லியதாக அதில் இருந்தது. மெயிலை படித்த தாமரை,விஷயத்தை தனது அம்மாவிற்கும் தம்பிக்கும் சொல்ல,அவர்களுக்கும் மகிழ்சியே".


"அத்தையம்மாக்கு விஷயத்தை சொல்லனும் என சொல்லிக்கொண்டே தனது போனிலிருந்து வேதாவிற்கு கால் பண்ண,அழைப்பு போய்க்கொண்டே இருந்ததே தவிர எடுக்கவில்லை".

"திரும்ப கால் பண்ணியும் எடுக்க வில்லை என்பதால் யோசித்தவள்,அந்த சின்ன மருத்துவமனையில் இருக்கும் போனுக்கு கால் பண்ண,வேதா தான் எடுத்து ஹலோ சொல்ல,அத்தை என்றாள்.

" சொல்லுடா என்க,இன்றைக்கு டூட்டி இல்லைனு சொன்னீங்களே,ஆமாடா... மெடிசின்ஸ் வந்துருக்கு அதான் வந்தேன் என்றவரிடம் விஷயத்தை சொல்ல,மருமகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு சிறிது நேரம் பேசி போனை வைத்தார்.

"அத்தையையும் கூப்பிட்டு வந்துருக்கலாமேக்கா என சிவா கேட்க, நான் கூப்பிட்டேன் டா.அத்தை தான் வேலை இருக்கு வரலைனு சொல்லிட்டாங்க.

இதை கேட்ட கவிதாவிற்கு வேதாவை நினைத்து வேதனையாக இருக்க, பிள்ளைகளிடம் அதை காட்டாமல் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டார்.

"சிவா....நேரம் ஆகிட்டு நீ தாத்தா பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போ என்றவர்,அவைகளை எடுத்து வந்து கொடுக்க,பையை வாங்கியவன் களத்து மேட்டிற்கு சென்றான்.

"நான் கொஞ்ச நேரம் படுக்குறேன் மா என்ற தாமரையும் தனது அறைக்கு வந்து படுத்தவளுக்கு சற்று முன்னர் ஏரியில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் நினைவிற்கு வந்தது.

அவன் தாமரை என்று அழைத்தது இன்னும் காதில் கேட்பது போல இருந்தது.எத்தனையோ முறை மருதுவோடு காடு மலை சுற்றும் போது வழுக்கி விழும் போதெல்லாம் அவளை தாங்கி பிடித்திருக்கின்றான்.

"ஆனால் இதை போல ஒரு மாற்றம் மருதுவிடம் தனக்கு வந்ததில்லையே என்று யோசித்தவளுக்கு உறக்கம் வருவது போல தெரியவில்லை.சட்டென அது தோன்ற,எழுந்து நோட்டை எடுத்தவள் ஏரிக்கரையில் நடந்த நிகழ்வுகளை உயிரோட்டமாக வரைய தொடங்கினாள்".

"வயலில் வேலையை முடித்த அன்பு, அங்கு ஓடிய போரிலே குளித்து முடித்து விட்டு, வேலை நடப்பதை சிவாவை பார்த்துக்க சொல்லி விட்டு தனது வீட்டிற்கு வந்தார்

உள்ளே வந்தவர் கவிதா...கவிதா... என்று கூப்பிட,தோட்டத்தில் இருந்தவருக்கு கணவர் கூப்பிடுவது கேட்க வில்லை.எப்படியும் பின்னாடி தான் மனைவி இருப்பாளென்று புரிந்தவர்,தோட்டத்திற்கு செல்ல, அங்கே கீரை செடிகளுக்கு,பூச்சி பிடிக்காமல் இருக்க சாம்பலை தூவிக்கொண்டிருப்பது தெரிந்தது.

கவிதா...என மீண்டும் அன்பு கூப்பிட,இதோ வரேனென்று சொல்லி விட்டு மீதமிருந்த சாம்பலை தூவியவர், தொட்டியில் இருந்த நீரில் கையை கழுவியவர்,வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேனென்க,ம்ம் என மனைவியின் பின்னே சென்றார்.

"தயாராக இருந்த உணவு பாத்திரங்களை முற்றத்தில் எடுத்து வைக்க,அங்கு வந்து அமர்ந்தவருக்கு உணவை பரிமாறிய மனைவியிடம் தாமரை சாப்பிட்டுச்சா என்க,ம்ம் ஆச்சு, கொஞ்ச நேரம் படுக்குறேனு போயிருக்காள்.

" சரிமா என்றவர்,தாமரை கல்யாணம் விஷயமா வேதா போன் பண்ணிருந்துச்சி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என மனைவியிடம் சொல்ல, என்ன சொல்லுறீங்க என அதிர்வாக கேட்க,ம்ம்...மருதுக்கு பொண்ணு கேட்குறாங்களாம்.

"மருது பேரை கேட்டதும் அப்படியா என்றவர்,நாம இதுவரை பார்த்த வரைக்கும் நல்ல பையன் தான்,ஆனால் தாமரைக்கு புடிக்கனுமேங்க,ஆமா மா... அந்த போனை எடுத்து வேதாக்கு பேசு.

சரிங்களென்று எழுந்து போய்,டேபிள் மேலிருந்த போனை எடுத்து நாத்தனாருக்கு கால் பண்ண,அட்டென் பண்ணிய வேதாவோ அண்ணா என்க...

"நான் தான் வேதா.உங்க அண்ணன் என்னமோ சொல்லுறாரே?ஆமா அண்ணி என்றவர் மயிலா வந்து பேசி சென்றதை பற்றி சொல்லி முடிக்க, கவிதாவிற்கு பெரிதாக தடை ஏதும் இல்லாததால் தாமரைய கேட்டு முடிவு சொல்லுறேனென்று அழைப்பை கட் பண்ணினார் .

கதிர் வீடு..

கதிர் சொன்ன பதிலை கேட்டு வெட்டவா குத்தவானு வேலு முறைக்க,நிலவனோ, யோவ் மாமா....செம்ம பல்பு என்று சிரிக்க,என்னடா நக்கலா என்றவன், உன் அண்ணன் காதல் போதையில மிதக்குறான்னு எனக்கு மட்டும் தான் டா தெரியுமென மனதிற்குள் பேசிக்கொண்டான்.

"ஏண்டா....தொண்டை கிழிய இவ்வளவு நேரம் பேசுனேன் அப்போ உன் கவனம் எங்கே இருந்துச்சி? என்க,அசதி மாப்பு அதான் என்ற கதிருக்கு நம்பிட்டேன் டா நம்பிட்டேன்.சரி போய் தூங்கு என்க,இப்போ தூக்கம் வரலைடா என்றான்.

" வளவனும் குளித்து வேறு உடை மாற்றி கீழே வந்து நிலவனிடம் பேசி விட்டு, அப்புறம் மாமா ஆசாமியா ஆகிட்ட போல என்க,ஏண்டா....அது பொறுக்கலையா உங்களுக்கு.விட்டா என்னை இமய மலைக்கே அனுப்பிடுவீங்க போலடா நீங்களாம்.அதில் என்ன மாமா உனக்கு சந்தேகம் என்றான் நிலவன்.

தோட்டத்திலிருந்து வாழை இலையை அருத்துக்கொண்டு உள்ளே வந்த ராதா அடுப்பங்கறைக்கு செல்ல,அங்கே படைக்க தேவையான உணவுகளை வேறு பாத்திரத்தில் போட்டுக்கொண்டிருந்தார் சீதா.

"சீதா...இலை என்று சொல்ல,நீ போய் போட்டோவுக்கு கீழே வச்சிட்டு மாமாவை கூப்பிட்டு சூடம் காட்ட சொல்லென்று தங்கையிடம் சொல்ல,சரி என்று ராதாவும் தனது அக்கா சொன்னதை செய்ய போனார்.

முன்னோர்களின் போட்டோவிற்கு முன்பு போட்டிருந்த இலையில் சமைத்த உணவுகளை ராதா பறிமாறி முடித்தவர், தம்பி...வாங்க என்க,நால்வரும் அங்கு செல்ல,அங்கு வந்த பெருமாளும் சூடத்தை ஏற்றி தனது தாத்தா பாட்டி படத்திற்கு காட்டி விட்டு வீட்டினற்கு காட்ட அவர்களும் விபுதியை எடுத்து பூசிக்கொண்டனர்.

"பின்னர்,பக்கத்தில் இருந்த சின்ன இலையில்,படையல் போட்ட அத்தனையிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அந்த இலையில் வைத்தவர், தோட்டத்திற்கு சென்று கா.. கா... கா... என்று கூப்பிட சிறிது நிமிடத்தில் காகங்கள் வர இலையை வழக்கமாக வைக்கும் ஓட்டின் மேல் வைத்து விட்டு உள்ளே வந்தவர்,எம்மா... சாப்பாடு கொடுங்களென்றார்.

"முன்னோர்களுக்கு போட்ட இலையிலே பெருமாள் அமர்ந்து சாப்பிட,இவனுங்க நால்வரும் டைனிங் டேபிளில் கலாட்டா பண்ணிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

"ரொம்ப நேரமா செல்லத்தை காணுமே, எங்கே போச்சு என வேலு கேட்க,நம்ப வீரா புள்ளைக்கு குடலேத்தமாம் அதான் அத்தை வைத்தியம் பண்ண போயிருக்காங்க என்றார் சீதா.

"அதற்கு வேலுவே...அவன் அவன் கஷ்ட பட்டு படிச்சி டாக்டரா ஆகுறான்,என் செல்லம் பள்ளி கூடத்தை எட்டி பார்காமலே டாக்டரா ஆகிட்டு பாரு என்க,அடேய் என்னடா எங்க அம்மா பேச்சு என்றார் பெருமாள்.

"அய்யோ...இந்த அய்யனார் வீட்ல இருப்பதையே நான் மறுந்துட்டனே என்று வேலு முணுமுணுக்க,அப்பா.... மாமா யாரோ அய்யனார் இருப்பதை மறந்துட்டேனு சொல்லிட்டு இருக்கார் என்றான் நிலவன்.

அட சண்டாள பாவி!!,என்னை சுத்தி இருக்குறது எல்லாம் வெஷமாக தான் இருக்கென்று வேலு முறைக்க,சும்மா தான் மாமாயென்று நிலவன் சொல்ல, அடேய் உங்கப்பா பேச ஆரம்பிச்சாரு இந்த லோகத்தில் நிறுத்த மாட்டாருடா, அவர் கிட்ட கோர்த்து விடுற என்றவன், சின்னத்தை இன்னும் ரெண்டு மாசம் தான் பரிச்சைக்கு நாள் இருக்கு, இப்ப போய் இவனை கபடி விளையாட்டுக்கு அனுப்புறீங்களே இதுலாம் சரியா என்றான்?.

" வேலு சொன்னது போதுமென்று, பெருமாளும்,ராதாவும் பிடித்து கொண்டனர்.இருவரும் இஷ்டத்திற்கு அட்வைஸ் மழையை அள்ளி வீச,நிலவனோ பாவமாக முகத்தை வைத்து வேலுவை பார்க்க, என்னையாடா கோத்து விடுற,அனுபவி மாப்ளை அனுபவி என்றான்.

"ஒரு கட்டத்தில் பொருக்க முடியாமல், விளையாட்டுக்கே நான் போகலை போதுமா என்றான் நிலவன்.பிறகு தான் இருவரும் அமைதியாகினர்.இப்போ சந்தோஷமாயா உனக்கென்று வேலுவிடம் நிலவன் கேட்க,லைட்டா மச்சி என்று சிரித்தான்.

"அப்பொழுது வெளியே சென்றிருந்த வள்ளி அப்பாயி உள்ளே வந்தவர், முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நல்ல விளக்கையும்,அதன் மேலே தொங்கி கொண்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து கொண்டே வந்தவர் ஒரு புகைப்படத்தில் மட்டும் பார்வையை கூர்மையாக்க,அம்முதிய பெண்மணியின் கண்ணிலிருந்து நீர் திரண்டு கீழே விழுந்தது.

"உள்ளுக்குள் இருந்த மனசோ எங்கோ ஒரு மூலையில் உசுரோடு இருக்குற உனக்கு முப்பது வருஷமா பூசை நடக்குதே என்று கலங்கி சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக தனது அறைக்கு சென்றவர் சத்தமில்லாமல் அழுது முடிக்க,சீதாவும்,ராதாவும் அங்கு வந்தனர் .

"மாமியாரின் அருகில் வந்த இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்துகொண்டு அத்தை என்க,எனக்கு சாப்பாடு வேண்டாம்மா.நீங்க போய் சாப்பிடுங்க என்றார்.

அம்மாவாசை நாளில் வழக்கமாக இது நடக்கும் விஷயம் என்றாலும், மாமியாரை சாப்பிட அழைக்க இருவரும் தவறுவதில்லை.

"சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு இருவரும் வெளியே செல்ல,எழுந்து கதவை சாத்தியவர்,தன் அறையில் இருக்கும் டிரங்கு பெட்டியை திறந்து புடவைகளுக்கு கீழே பல வருடங்களாக ஒளித்து வைத்திருக்கும் புகைப்படத்தை எடுத்து பார்த்தவர்,நீ எங்கே இருக்க ஆத்தா என அழுகையோடே கேட்டார்.

" நீ உசுரோட எங்கையோ இருக்கனு பெத்த வயிறு சொல்லுது. கண்ணை முடுறதுக்குள்ள உன்னை பார்ப்பேனானு தெரியலையே நான் பெத்த மவளே என்று கதறி அழுதார் வள்ளி அப்பாயி.

அசாம்....

வீட்டில் இருந்த சிந்துவிற்கு புரையேறியது. பல வருடங்களாக இந்த நாளில் மட்டும் இப்படி அவருக்கு வருவது எதனால் என்று அந்த மருத்துவருக்கு மட்டுமே உண்மை புரியும்.

இந்த நாளில் மட்டும் மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்.எவ்வளவு அவசரமான கேஸ் வந்தாலும் வேறு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்க சொல்லிவிடுவார். நவீனும் சிறு வயதில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறான் அம்மாவின் இந்த செயலை.

"எத்தனையோ முறை காரணம் கேட்டும் இதற்கு மட்டும் சிந்து எந்த வித பதிலும் சொல்லியதில்லை.

யார் இந்த சிந்து- நவீன் ...?

கண்மணி வருவாள்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top