• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு....

வயலுக்கு சென்றிருந்த பிரகாசமும், முத்துவும் வீட்டுக்குள் வர, அவர்களும் நிலவனிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருக்க,அங்கு வந்த ராதா, சாப்டலாம் வாங்க என்றவர் சமைத்த உணவுகளை எடுத்து வந்து வைத்தார்.

போங்கப்பா போய் சாப்பிடுங்களென்று வள்ளி அப்பாயிடம் நீயும் வா என்று கதிர் கூப்பிட,எனக்கு உன் அம்மா கூழ் கிண்டியிருக்காள்.நான் கொஞ்ச நேரம் போன பிறகு குடிக்கிறேன் நீங்கலாம் சாப்டுங்கப்பா.

ஆண்கள் நால்வரும் சாப்பிட அமர,ராதா பரிமாற,சீதாவோ சமையல் கட்டில் சூடாக தோசை ஊத்திக்கொண்டிருக்க அதை செல்வி எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

" பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த கதிர், அப்பா வயலுக்கு மருந்து போட ஆள் வர சொல்லிருக்கேன்னு முத்துவிடம் சொல்ல,சரிப்பா நீ அங்கே பாரு.நான் கரும்பு தோட்டத்துக்கு போறேன்.

நேற்று வேலை சரியாவே நடக்கலை, பார் கொத்துனது எதுவும் சரியில்லை என்றவர்,செல்வி அம்மாகிட்ட டீ ஒன்னு சொல்லுமா என்று எழுந்து போய் கையை கழுவியவர்,அவரது அறைக்குள் சென்றார்.

சமையலறைக்குள் வந்தவள், அம்மா... அப்பாக்கு டீ வேண்டுமாம் என்க,இது தெரிஞ்ச விஷயம் தானே என்றவர்,கையில் டீ டம்ளரோடு கணவரிடம் சென்றார்.

அம்மா... எனக்கும் பசிக்குதுனு செல்வி சொல்ல,சாப்ட வேண்டியது தானே,உன் தட்டை யாராவது புடிங்கி வச்சிகிட்டாங்கலா என்றவாறு நிலவன் வந்தான்.

" அடேய் கொரங்கு சாப்பிட்ட கொழுப்பாடா என்க,செல்வி....வர வர உனக்கு ரொம்ப வாய் நீளுது என்றைக்கு வாங்கி கட்டிக்க போறனு தெரியலை என்றபடியே மகளுக்கு பிடித்த போல முறுவல் தோசையை சுட்டவர்,தட்டில் வைத்து அவளிடம் நீட்ட, ம்கும் என முறுக்கி காட்டி வெளியே சென்றாள்.

"என்னப்பா வலிக்குதானு சின்ன மகனிடம் கேட்க,ஆமாமா என்றவன், நான் ப்ரண்ட்ஸை பாக்க போகனும்மா.அடேய்...அப்பா, அண்ணன்லாம் இருக்காங்க.கொஞ்சம் பொறு பின்ன போகலாம் என்றார் சீதா.

"ம்ம்...சரிம்மா என்றவன் அங்கிருந்து போய் ஹாலில் இருந்த டீவியை ஆன் பண்ண,செல்வி பாட்டு சேனலை வைக்க சொல்ல,வள்ளி அப்பாயி நாடகம் வைக்க சொல்ல,நிலவனோ காமெடி சேனலை தேடி வைத்தான்.

"மோரோடு சேர்த்து கரைத்த கேழ்வரகு கூழில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், மாங்காய்களை சேர்த்து நன்கு கலந்து அதை சொம்பில் ஊற்றியவர், இன்னொரு தட்டில் வறுத்த கொத்தவரங்காய் வற்றல் மற்றும் மோர்மிளகாயையும் எடுத்துக்கொண்டு மாமியாரிடம் வந்து கொடுத்தார்.

"இன்னும் பெருமாள் வரலையாம்மா? என்க,இல்லத்தை என்றார் சீதா.சரிம்மா என்றவர் கூழை குடித்து முடித்தவரோ நானும் வயலுக்கு போறேன் மா என்றார்.

தனது அறைக்கு வந்த கதிர், வேலுவிற்கு கால் பண்ணினான். இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்க வில்லை.எங்கே போனான் இவனென்று யோசனையோடே தனது வண்டியில் ஏறி ஏரிக்கரையை நோக்கி சென்றான்.

"போகும் வழியில் எங்கேயாவது அல்லி தென்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே செல்ல,அல்லி அவன் கண்ணில் படவேயில்லை. அப்பொழுது அவன் மனசாட்சி கேள்வி கேட்டது,நீ இப்போ எதுக்கு அல்லியை தேடுறடா என்று?.

"அது வந்து...அது வந்து...என்ன சொல்லு என்க,வேலு அந்த செயினை அவங்க அக்கா கிட்ட குடுத்துட்டானானு தெரிஞ்சிக்க தான் என்றான் கதிர் தனது மனசாட்சிக்கு.அதற்கு அதுவோ,இதை நீ வேலு கிட்ட தான் கேட்கனும்?என்றது.

இப்படியே தனது மனசாட்சியிடம் தாமரை பற்றி பேசிக்கொண்டே வயல் மேட்டுக்கு வந்து சேர்ந்தவன், வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, ரோட்டிலிருந்து கீழே செல்லும் வரப்பில் இறங்கி நடந்து சென்றான்..

வேலையாட்களோ மருந்துகளை ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர் வர்களிடம்.அவர்களிடம் சென்றவன், எந்த வயலுக்கு எவ்வளவு,யுரியா, னடி. ஏ. பி, பொட்டாஸ் போடனும் என்று அளந்து தனியாக எடுத்து வைத்து விட்டு,முதல் நாள் நட்ட நடவில் இறங்கி ஆட்களோடு மருந்து போட ஆரம்பித்தான்.

கதிரோடு சேர்ந்து ஐந்து பேர் வேலை செய்வதால் சுற்றி இருக்கும் நடவு வயல்களுக்கு விரைந்து மருந்துகளை போட்டு முடித்தனர்.மீதம் இருந்த மருந்து மூட்டைகளை மோட்டார் கொட்டகைக்குள் வைக்க சொன்னவன், அங்கிருந்து காய்கறி தோட்டத்திற்கு சென்றான்.

அங்கே வேலையாட்கள்,காய்கறிகளை பறித்து வந்து ஒரு பக்கம், தனித்தனியாக குமித்து கொண்டிருக்க, அதை இருவர் சாக்கில் எடை போட்டு எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களருகில் சென்றவன் ஒரு பார்வை சுற்றி பார்த்து விட்டு,வேலையாட்களிடம் சிலதை சொல்லி விட்டு,அங்கிருந்து ஏரிக்கரையை நோக்கி சென்றான்.

"வயலுக்கு மருந்து போட்டதால் வேறு எந்த வேலையையும் அவனால் செய்ய முடியவில்லை.கையெல்லாம் மருந்து வாசனை அடிக்க,முதலில் குளிக்க வேண்டுமென்று மரத்தில் தொங்கி கொண்டிருந்த சட்டை பையில் இருந்து குளியல் சோப்பை எடுத்துக்கொண்டான்.

ஏரிக்கரை படிக்கட்டுக்கு வந்தவன்,வழக்கமாக சோப்பு வைக்கும் இடத்தில் அதை வைத்து விட்டு,அங்கிருந்து நீரில் பாய்ந்தவனோ அக்கரையை நோக்கி நீச்சலடித்தான்.

நீச்சல் அடித்து முடித்தவன் கரைக்கு வந்து சோப்பை போட்டு மருந்து வாடையை போக்கி கொண்டிருந்தான். பின் மீண்டும் தண்ணீரில் நனைந்தவன் மூச்சை பிடித்து நீருக்குள் முழ்கியிருந்தான்.சிறு வயதிலிருந்து வேலுவும் கதிரும் இந்த விளையாட்டை விளையாட மறப்பதில்லை.

முடிந்த அளவு வரைந்து முடித்தவள், இனி வீட்டிற்கு செல்லலாம் என எழுந்து கை கால்களை உதறி சோம்பலை போக்கிக்கொண்டிருக்க கோயில் வாசலில் சிவாவின் வண்டியும் வந்து நின்றது.

வண்டி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள் அங்கு தனது தம்பி நிற்பதை கண்டு, சாமியை மீண்டும் வணங்கிவிட்டு,தனது பொருட்களை எடுத்தவள் அவனிடம் வர,கடலை காய வைக்குற ஆளுங்களுக்கு டீ போட்டு குடுத்துச்சி அம்மா.

உன்னையும் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு வர சொல்லுச்சிக்கா வந்து உட்காரு என்றான்.

தம்பி சொன்னதை கேட்டவள் நீ போய்டே இருடா நான் நடந்து வரேன்.காலையிலிருந்து உட்கார்ந்தே வரைந்தது கை காலெல்லாம் ஒரு மாதிரியா இருக்குனு தாமரை சொல்ல, அப்படியா,அங்க வர உனக்கு வழி தெரியுமாக்கா?

தெரியாதுடா நீ சொல்லு நான் வந்துடுறேன் என்க,ஏரிக்கரை வழியாக வந்து அங்கே வலது பக்கம் திரும்பினால் போர் கொட்டகை இருக்கும் பாரு.அந்த வரப்பு வழியா வந்தால் நாலாவது களத்து மேடு நம்முடையது தான்,இல்லைனா எனக்கு போன் பண்ணு நான் எதிரில் வரேன்.

நீ பார்த்து வாக்கா டீ ஆறி போவதற்குள் நான் போய் குடுக்குறேன்.இல்லை அந்த கலா தாம் தூமென்று குதித்து உசுர வாங்குமென்று தனது அப்பாயியை பற்றி அக்காவிடம் சொல்லி சிரித்தவன் அங்கிருந்து சென்றான்.

தம்பி சொன்னதை நினைத்து சிரித்துக்கொண்டே அவன் வண்டி சென்ற திசையில் நடந்தவள் இரு புறமும் தெரியும் இயற்கையை ரசித்துக்கொண்டே ஏரிக்கரையின் ஓரம் நடந்தவளின் கண்ணில் பட்டது அந்த காட்சி.

"ஏரிகரையில் இருக்குப் படிக்கட்டுவின் பக்கத்தில் ஆகாயத்தாமரையும், அல்லியும்,தாமரையும் பூத்திருக்க அதை தனது போனில் புகைப்படமாக எடுத்தவளுக்கு, தண்ணீரில் இறங்க ஆசை வந்தது.

சுற்றியும் யாராவது இருக்கிறார்களா என தனது கண்களை சுழற்றி பார்த்தவளுக்கு,அங்கிருந்த இயற்கையின் அழகை தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை.

சரியென அங்கு வந்தவள், கையிலிருந்த செல்போனை படிகட்டின் மேல் வைத்து விட்டு,செருப்பை கழட்டி அங்கேயே விட்டவள்,படியின் மேல் கால் வைத்து இறங்கியவளோ கீழ் படியில் இருக்கும் தண்ணீரின் மேல் தனது வலது கால் தூக்கி வைக்க போக,நீரில் மூழ்கியிருந்தவன் அந்த நேரத்தில் மேலே எழுந்திரிக்க திடிரென்று நீரிலிருந்து வந்த உருவத்தை என்னவோனு அதிர்ந்து படியில் கால் வைக்குறேன் என நீரிலே வைக்க அதன் மேலிருந்த பாசியோ அவளை வழுக்கி விடவும் தண்ணீரிலிருந்து எழுந்தவன் மேலே நேராக விழுந்தாள் தாமரை.

இதை அவனும் எதிர் பார்க்கவில்லை. மீண்டும் அதே மின்சாரம் தாக்கிய உணர்வு இருவருக்கும் வந்தது.ஆனால் இருக்கும் சூழல் தெரிந்து அதை பற்றி யோசிக்கவில்லை.

தன் மேல் விழுந்தவளை தாங்கியவன் மேலே எழும்போது மீண்டும் அவன் உடலின் அணுக்கள் ரசாயன மாற்றத்தை கொடுத்துக்கொண்டிருக்க, முத்தானையால் மூடியிருக்கும் அவள் முகத்தை விலக்கி பார்க்க போகும் போது,அவன் கையிலிருந்து துள்ளி குதித்தவள் தண்ணீரிலிருந்து படிக்கட்டில் ஏறப்போக,கதிரோ ஒரே எட்டில் அவளின் இடது கையை எட்டிப் பிடித்தான்.

"தற்பொழுது தாமரைக்கும் புரிந்து விட்டது, இவனின் பிடியில் தனக்குள் மீண்டும் அதே மாற்றங்கள் உருவாகுவதை வைத்து அன்று விழுந்தது இவன் மேல் தான் என்று.

ஆனாலும் பெண்மைக்கே உள்ள உணர்வு அவனை பார்க்க விடாமல் தடுக்க,திரும்பி பார்க்காமலே கொஞ்சம் வலுவாக அவனிடமிருந்து தனது கையை உதறி விடுவித்து கொண்டவள், படியின் மேலிருந்த போனை எடுத்துக்கொண்டு திரும்பி பார்காமல் ஓடினாள்.

தண்ணீரிலிருந்து மேலே வர நினைத்தவன்,குளிப்பதற்காக இடுப்பில் துண்டு மட்டும் கட்டியிருப்பதை உணர்ந்தவன்,தாமரை என்று சொல்லி தண்ணீரில் கையால் அடித்தவன், கரையின் மேலே ஈர புடவையில் நீர் சொட்ட சொட்ட,நீண்ட பின்னல் இருபுறமும் ஆட,எழிலோவியமாய் ஓடுபவளை மெய் மறந்து ரசித்தான்

இன்று எப்படியாவது அவள் முகத்தை பார்த்து விடனுமென்று சூலுறைத்தவன் வேக மாக படியில் ஏறி ஏய் தாமரை... நிள்ளுடி என்று வேகமாக கத்தினான்.

"ஈர உடையில் வேகமாக ஓட முடியாததால் மிதமான வேகத்திலே ஓடிக்கொண்டிருந்தவளின் காதில் அவனின் கணீர் குரல் கேட்டு அதிர்ந்தவள்,நம்ப பேர் இவனுக்கு எப்படி தெரியுமென யோசனையோடே ஓட்டத்தை விட்டு நடக்க,சில அடி தூரத்தில் தனது தம்பி வருவது தெரிந்தது.

சிவா வருவதை பார்த்த கதிர்,அவள் ஈர உடையோடு இருக்கும் கோலமும்,தான் படியில் இருப்பதையும் கண்டால் எதாவது நினைப்பானோ என்று நினைத்தவன் படியின் கீழே இறங்கிவிட்டான்.

என்னக்கா இவ்வளவு ஈரமாக இருக்க?? என்க,வறட்சியா இருக்கேனு முகத்தை வாஸ் பண்ணலானு தண்ணில இறங்கும் போது பாசி வழிக்கிட்டுடா என்றாள்.

அய்யோ!

எதாவது அடி பட்டிருச்சா??என பதற,இல்லைடா என்கவும் சரி வா வீட்டுக்கு போகலாம்,ம்ம் என்று தம்பியின் வண்டியின் பின்னால் அமர்ந்தவள் மறந்தும் பின் பக்கம் திரும்பி பார்க்க வில்லை.

படிக்கட்டில் ஏறியவனின் கண்ணில் அங்கங்கே அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்து கிடக்கும் மல்லிகை பூக்கள் தென்பட, அதையெல்லாம் கையிலெடுத்துக்கொண்டே மேலே வந்தவன்,ஒரு முறையாவது தன்னை திரும்பி பார்ப்பாளென ஆவலோடு அவள் சென்ற திசையிலே பார்த்திருக்க, அவன் கண்ணிலிருந்து மறையும் வரை, திரும்பி பார்க்காமலே அவன் எண்ணத்தில் இடியை போட்டுச் சென்றாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
வெயில் அதிகமாக இருப்பதால் வண்டியில் வந்து கொண்டிருந்த போதே அவள் ஈர ஆடைகள் ஓரளவிற்கு காய்ந்து விட்டது.வண்டியை சிவா நிறுத்த,கீழே இறங்கியவள் வீட்டின் உள்ளே செல்ல, அங்கு கவிதா சமையலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது".

" அம்மா ..நான் வந்துட்டேனென்க அங்கிருந்தே மகளை எட்டி பார்த்தவர், என்ன தாமரை ரொம்ப சோடையாக தெரியுர?

வெயில்ல வந்தது மா அதான் என்றவளோ ரூமிற்குள் சென்று கதவை அடைத்தவள்,வேறு உடையை மாற்றிக்கொண்டு,பின்னலை அவிழ்த்து தலையை துவட்டினாள்.

வெயிலால் மேல் பக்கத்து முடிகள் காய்ந்திருந்தாலும் உள் பக்கம் ஈரமாக இருந்ததை டவலால் துவட்டி கொண்டிருந்தவளுக்கு சற்று முன்னர் ஏரிக்கரையில் நடந்த நிகழ்வுகள் நினைவிற்கு வந்தது.

தண்ணியில் அவன் மேல் விழும் போது, வெளியே வருகிறேன் என்ற எண்ணத்தில் தன்னை பிடித்திருந்தவன் நெஞ்சில் கை வைத்து நீருக்குள் தள்ளி மேலே வந்ததை நினைத்தவள் அவன் என்ன இரும்பு மனுஷனா இருப்பானா?கைப்பிடியும் இவ்வளவு ஹார்டா இருக்கே


நல்லவேளை அவனுக்கு எதுவும் ஆகலையேனு அவன் பிடித்த கரத்தை பார்க்க,அதில் லேசாக வலி இருப்பது போல இருந்தது.சரியான முரட்டு பயலா இருப்பானா?எருமை மாட்டுக்கு ஒரு பொண்ணு கைய எப்படி பிடிக்கனும்னு கூட தெரியலையேனு திட்டிக்கொண்டாள்.

"அப்பொழுது தாமரை...தாமரை என்று கவிதா கூப்பிடுவது கேட்கும் போது
அவன் தாமரை...என்று தன் பெயரை சொல்லி கூப்பிட்டது ஞாபகம் வர நம்மை தெரிஞ்சிருக்கே இவன் யாராக இருப்பானென்க,மீண்டும் கவிதாவின் கூப்பிட இதோ வரேம்மா என்றவள், நீண்ட கூந்தலை மடக்கி கிளிப் போட்டு விட்டு வெளியே வந்தவளிடம் வாம்மா சாப்டலாம் என்றவர்,சிவா என்க அவனும் வர,இருவருக்கும் தட்டில் பரிமாற அக்கா தம்பி இருவரும் பேசிக்கொண்டே அம்மாவின் சமையலில் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தனர்.

நீயும் சாப்பிட வேண்டிய தானே என்க,கொஞ்ச நேரம் ஆகட்டும் தாமரை என்றவர் இட்லிக்கு ஊறவைத்திருந்த கழுவி கிரைண்டரில் ஓட விட்டார்.

"நான் இதை பார்த்துக்குறேன்மா நீங்க சாப்டுங்களென்று தாமரை சொல்ல, ஒரேடியா இந்த வேலையை முடிச்சடுவேன்.ஆமா நீ வரைந்தது என்ன ஆச்சு?

அட டா ஆஆஆ அதை மறந்துட்டேன் மா என்றவள்,நோட்டு எங்கேடா?

வண்டி கவர்லே இருக்குக்கா என்றவாறு எடுத்து வந்து அக்காவிடம் கொடுத்தான்.

நோட்டை திறந்து காலையில் வரைந்ததை அம்மாவிடம் காட்ட, கருவறையில் இருக்கும் அம்மனை அவ்வளவு தத்ரூபமாக வரைந்திருந்த மகளை பாராட்டி தள்ளி விட்டார்.அந்த ஓவியத்தில்,ஒரு பெண் தண்ணீர் குடத்தோடு கோயிலுக்குள் நடந்து வருவது போல இருந்தது.

இன்னொரு வரைபடத்தில் அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மனுக்கு பூஜை நடப்பது போலவும்,சிறு பிள்ளை ஒன்று மணியில் தொங்கும் கயிற்றை இழுத்து ஓசை எழுப்புவது போலவும் வரைந்திருந்தாள்.

இரண்டையும் பார்த்தவருக்கு அது வரைபடம் போல தெரியவில்லை.கண் முன்னால் நடப்பது போல அத்தனை உயிரோட்டமாக இருந்தது.உன்னை பற்றி வேதா எவ்வளவோ சொல்லிருக்கு.அதை இன்று நேர்ல பார்த்து பெத்த மனசு பூரிச்சி போய்ட்டு மா என்றவர் அடுப்பங்கறைக்கு சென்று உப்பும்,வர மிளகாயையும் எடுத்து வந்தவர் ஊறு கண்ணு,உறவு கண்ணு, வந்தவன் கண்ணு,கொள்ளி கண்ணு என்று சொல்லி அவள் தலையில் மூன்று சுத்து சுற்றியவர்,இதுல துப்புமா என்க,என்னம்மா இது சின்ன புள்ளை தனமாக இருக்கென்றவள் து.. து.. து என்று மூன்று முறை துப்ப,அதை எடுத்து போய் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் போட்டார்.

உனக்கு எப்படி இதில் ஆர்வம் வந்ததென்று அவள் வரைந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டே சிவா கேட்க,தெரியலைடானு எழுந்து தனது அறைக்கு சென்றவள்,அங்கிருந்த லேப்டாப்பை எடுத்து வந்து தன் போனில் கனெக்ட் பண்ணி,தனது மெயிலை திறந்து உள்ளே சென்றவள்,வி வி.மெயில் ஐடிக்கு,தான் வரைந்த இரண்டு ஓவியத்தையும் அனுப்பி வைத்தாள்.

தேவி வீடு....

வசந்தி...தேவியை கூப்பிடென்று சொல்லியபடியே அங்கிருந்த ஷோபாவில் உட்கார்ந்தார் கண்ணன்.

இதோங்கனு மகளின் ரூம் கதவை தட்ட, படித்து கொண்டிருந்த டைரியை மூடி தலைகாணி உறைக்குள் வைத்தவள், எழுந்து சென்று கதவை திறந்து என்னம்மா என்க,அப்பா கூப்பிடுறாங்க.

ம்ம் என்றவளோ,தந்தை அமர்ந்திருக்கும் சோபாவின் அருகில் வந்து நின்றவள் சொல்லுங்கப்பா என்க,மகளை நிமிர்ந்து பார்த்தவர்,எல்.டி.ஸ்கூல்ல வேலைக்கு ஆள் எடுக்குறாங்களாம்.

"வீட்டுக்குள்ளே இருந்தால் கண்டதையெல்லாம் யோசிக்க தோன்றும்".நீ என்ன செய்யுறேனா, நாளைக்கு தேவ் கூட போய் அங்க கலந்துக்கம்மா.உனக்கு தான் இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும்னு கேட்டிருக்கியே,அதை இப்படி போக்கு.வர்ற பையன் விருப்பப்பட்டால் வேலைக்கு போ,இல்லை என்றால் வீட்டுக்கு மருமகளா இருந்துக்கோ.

இதுவரை தந்தை சொன்னதை கேட்டவள் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் ஹப்பாடா.... இந்த வேலைக்கு போய்விட்டால் இப்பொழுது கல்யாண பேச்சிற்கு வாய்ப்பில்லை என்பதை நினைத்தவளோ தனது சந்தோஷத்தை முகத்தில் காட்டிக்காமல், சரிங்கப்பா.நீங்கள் சொல்லுற போலவே செய்கிறேன் என்க,மகளின் வாய்மொழியை கேட்டு வசந்திக்கு தான் மீண்டும் நெஞ்சுவலி வராத குறை!.

நிஜமாகத்தான் சொல்றியா?என்று
வசந்தி கேட்க,நான் தான் சொல்லிட்டேனேமா இனி அப்பா சொல்றதை தான் கேட்பேன்னு பவ்யமாக சொல்ல,மாரியாத்தா இதையெல்லாம் தாங்கிக்க எனக்கு கொஞ்சம் சக்தி கொடு என்று மானசீகமாக வேண்டிக் கொண்டார் வசந்தி".

சரிமா...நீ போய் நாளைக்கு போறதுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கனு கண்ணன் சொல்ல,சரிங்கப்பா என்று ரூமிற்குள் வந்து கதவை சாத்தி விட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள்,மறைத்து வைத்த டைரியை எடுத்து மீண்டும் படிக்க தொடங்கினாள்.

"வரப்பில் நடந்து வந்த கதிருக்கு தேவி நிற்பது கண்ணில் பட,பின்னாடி நடந்து வருகின்ற வேலுவிடம் இந்த புள்ள என்னடா இங்க நிக்குது?என்றான்.எந்த புள்ளடானு வேலு கேட்க,தேவோடு தங்கச்சி தான்.கொஞ்ச நாளா அந்த புள்ள போக்கே சரியில்லைடா?.

அப்படியா என்ற வேலு,அது உனக்கு எப்படி தெரியும்?என்க,கவனிச்சேன் டா என்றான்.

ஓஓஓஓ.... இது வேறையா என்ற வேலு, +12 எழுதிருக்கு போல,சின்ன புள்ளடா என இருவரும் பேசிக்கொண்டே அங்கு வர,மாமா என்று தேவி கூப்பிட்டாள்.

"நீ பேசிட்டு வாடா,நான் வண்டி கிட்ட போகிறேனென்று வேலு சொல்லவும் இருடா என்ற கதிர்,சொல்லுமா என்ன என கேட்க?,அவள் வேலுவை சங்கடமாக பார்ப்பது புரிந்தது.

விஷயத்தை சொல்லு, எனக்கு வேலை இருக்குமா என்ற கதிரிடம்,லவ் யூ மாமா என்றாள்.

"அவள் சொன்னதைக்கேட்டவன்,என்ன படிக்குற?என்கவும்,பிளஸ் டூ என்றாள். ம்ம், மேல படிக்க போறியா?

ஆமாம் என்றவளிடம்,போய் அந்த வேலைய பாரு. இன்னொரு முறை இப்படி சொல்லி கிட்டு வர வேலைய வச்சிக்கிட்ட மூஞ்சு மொகரைலாம் பேந்துரும்.

"ஒழுங்கா வீடு போய் சேரு என்றவனின் கோவத்தை கண்டு அதிர்ந்தவள், எதுவும் பேசாமல் நிற்க,சொன்னது புரிஞ்சிதா என மீண்டும் அதட்டி கேட்டவனுக்கு தலையசைத்தவளை கண்டவன்,நீ வாடா என்று வேலுவிடம் சொல்லியபடியே முன்னே நடந்து சென்றான்.

"சிறிது நிமிடம் அமைதியாக வந்த கதிர், ஆளை பாரு காதலு கீதலுனு. படிக்கிறதை தவிர எல்லாத்தையும் கத்துக்குதுங்க என்க,அதற்கு வேலு எதுவும் சொல்லாமல் வருவதை கண்டு, என்னடா வாய்ல கொழுக்கட்டையா? என்க..

வேற ஒன்னு யோசிக்கிறேன் டா.

ஆஹான்..அப்படி எந்த நாட்டை புடிக்கிறதை பற்றி அய்யாவுக்கு யோசனைனு கதிர் கேட்க,இந்த புள்ளை நீ சொன்னதை கேட்கும்னு நினைக்கிறியாடா?என்றான்.

"கண்டிப்பாக கேட்கும் ரகம் இல்லைடா. ஆனாலும் எவ்வளவு தைரியம் பாரேன்.

ஹம் காதல் வந்தாலே எல்லாருக்கும் வீரமும் வந்துரும் போலடா,பேசாமா நாமலும் அஞ்சாறு காதலை பண்ணிருக்கலாமோ என வேலு சொல்வதை கேட்டவன்,ஏண்டா பக்கி ஏன்?

"அட... நீ யோசித்து பாருடா.இத்தனை நாளு அந்த புள்ள உன்கிட்ட பேசியிருக்கா?

இல்லை என்று கதிர் சொல்ல,இப்போ பார்த்தியா தைரியம் வந்துட்டு.அதான் காதல் பண்ணுற வேலைனு வேலு சிரிக்க,இருக்குற வேலையவே பார்க்க முடியலை.இதுல அந்த லோலாயி வேறயாடா.நமக்கு இதுலாம் சரி வராதுடா என பேசிக்கொண்டே இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.

கதிர் சொல்லியது போல தான் தேவியின் செயல்களும் இருந்தது. நாட்களும் செல்ல,பிளஸ்டூவில் பாஸாக,பக்கத்து ஊர் காலேஜில் சேர்ந்து விட்டாள்.சில நாட்கள் அமைதியாக இருந்தவள் மீண்டும் கதிரிடம் காதலை சொல்ல,தற்பொழுது அவனுக்கு கோபம் வந்தது.

" சரி கல்யாணமாவது பண்ணிக்குங்க மாமா என்றவளை முறைத்து பார்த்தவன்,உனக்கு என்ன வயசு என்றான்.

"18 வயசு மாமா"

அதுக்குள்ளே உனக்கு கல்யாண ஆசை வந்துட்டு.உன்னை போல பொண்ணுங்களாம் என்னை பார்த்தால் குனிந்த தலை நிமிராம போகுதுங்க. உனக்கு மட்டும் என்ன இப்படி ஒரு எண்ணம்?.

அதுலாம் தெரியாது மாமா,உங்களை எனக்கு புடிச்சிருக்கென்று அவள் சொல்வது சிறு பிள்ளை தனமாக கதிருக்கு தோன்றியது.ஆனாலும் இதை வளரவிடக்கூடாதுனு நினைத்தவன்,உன் மேல் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை.

"போய் படிக்கிற வேலைய பாரு என்க,தேவியும் கஜினி முகமது போல விடாமல் கடந்த ஐந்து வருடமாக,வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் காதலை சொல்லி, அவன் சம்மதம் வேண்டி காத்துக்கொண்டிருக்கிறாள்.

டைரியை படித்து முடித்த தேவி, இதுவரை அது இருந்த இடத்திலே பாதுகாப்பாக வைத்து விட்டு,நாளைக்கு இன்டர்வியூக்கு தேவையானதை எடுத்து வைக்க தொடங்கினாள்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top