• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு:

முதல் நாளுக்கான நடவு வேலை நல்ல படியாக முடிய,வேலை செய்த பெண்மணிகளுக்கு ஒரு ஆளுக்கான சம்பளத்தை சேர்த்தே கொடுத்தனர்.

"தாத்தா... நாமலும் வீட்டுக்கு கிளம்பலாமா என்க,சரியப்பு என்றவர், வரப்பிலிருந்து எழுந்து தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அதை உதறி தோளில் போட்டு நடக்க,அவரின் பின்னால் கதிரும் நடந்து சென்றான்.

"சிறிது நிமிட நடை பயணத்தில் ரோட்டின் மேலே ஏறி நிழலில் நின்றிருக்கும் வண்டியை நோக்கி சென்றவன்,தனது பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி உட்காரு தாத்தா என்க, பேரனுடைய வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு போலாம்பா என்றார்.

"இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வர,தூரத்தில் அல்லி வருவதை பார்த்தவன்,அய்யோ..இவள் கிட்ட எப்படி கேட்க?,தாத்தா வேற இருக்காரே?என யோசனையானவன்,சரி எப்படியாவது இன்றைக்குள்ளே தன்னவளை பற்றி விசாரிக்கணும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

அவளை பற்றி நினைத்ததும் அவன் உதட்டில் புன்னகை தானாக வந்து உட்கார்ந்து கொண்டது.யாரடி பெண்ணே நீ?என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே வீட்டிற்கு வந்தவன்,தாத்தாவை இறக்கி விட்டு, வண்டி நிறுத்தும் கொட்டகைக்குள் சென்று தனது புல்லட்டை நிறுத்தியவன் வெளியே இருக்கும் படியில் ஏறி மேலே சென்றான்.

வீட்டின் உள்ளே வந்த பிரகாசம்,எம்மா செல்வி...என்று சத்தம் கொடுக்க,சொல்லுங்க மாமா என கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் சீதா.

பெரியப்பு மேலே போயிருக்கான்,டீ போட்டு குடுத்து அனுப்பு என்றவர் கிணற்றடியை நோக்கிகுளிக்க சென்றார்.

"மகனுக்கு பிடித்த போல இஞ்சி, ஏலக்காயை தட்டி போட்டு,டீ யை தயாரித்தவர்,டம்ளரில் ஊற்றிக்கொண்டு,அதனோடு வீட்டில் செய்த சிற்றூண்டியையும் பிளேட்டில் எடுத்து வைத்தவர்,செல்விஈஈஈ...ஏய் செல்வி என கூப்பிட, திண்ணையில் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த வள்ளி அப்பாயியோ உம்மவ இங்கயெங்கே இருக்காளென்று சொன்னார்.

"எங்கேத்தை போனாளென்று? கேட்ட மருமகளுக்கு,ஆத்தாளும்,மவளும் தோட்டத்தில் மல்லிகை பூ பறிச்சி கிட்டு இருக்காங்க,இரு கூப்பிடுறேன் என்க, வேண்டாத்தை,நானே போறேன் என்று சொல்லி தோட்டத்து வாசலில் நின்று செல்வி இங்கே வா என்றார்.

"அம்மா,பந்தல் மேல இருக்கேன், கொஞ்சம் மேல பாரு என்க, அன்னார்ந்து பார்த்தவருக்கு அவள் மல்லிகை பந்தல் மேல் இருப்பது தெரிந்தது.என்ன சீதா என்று ராதா கேட்க,கதிருக்கு டீ கொடுத்துட்டு வரணும் டி.

"இரு நான் வரேன் என்று சொல்லியவர் அக்காவிடம் பூக்கூடையை கொடுத்து விட்டு,உள்ளே போய் கதிருக்கான டீயையும் சிற்றூண்டி தட்டையும் எடுத்துக்கொண்டு படியில் ஏறி மேலே சென்றவர்,அப்பு..அப்பு என கதிரோட அறைக்கதவை தட்ட,திறந்து தான் இருக்குமா என்கும் குரல் கேட்டது.

"கதவை திறந்து உள்ளே வந்தவர்,பால்கனியில் இருக்கும் ஈசி சேரில் சோர்வாக உட்கார்ந்திருப்பவனை கண்டு என்னப்பா சோடையா இருக்க?

ம்ம்..ரொம்ப தலை வலிக்குதுமா என்றவனிடம் இந்த டீ யை குடி, சரியாகும் என்றவர்,மகனின் முன்பு டீயை நீட்ட,வாங்கி குடித்தவன் டம்ளரை அவரிடம் நீட்டவும் அதை வாங்கியவர், தைலம் தேய்ச்சி விடட்டுமா அப்பு என்க..

இல்லம்மா...டீ குடிச்சதும் பரவாயில்லை என்றவனிடம் இதையும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்பா என்றவர்,அங்கிருந்த மர டீப்பாயின் மேல் சிற்றூண்டி தட்டை வைத்து விட்டு ராதாவும் வெளியே சென்றார்.

கண்ணை மூடி சிறிது நேரம் சேரில் சாய்ந்திருந்தவனுக்கு, தற்பொழுது வலி குறைந்திருப்பது தெரிய,அங்கிருந்த ராகி புட்டை சாப்பிட்டு முடித்து,எழுந்து போய் கதவை தாழிட்டு விட்டு,துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்.

"பின்னர் குளித்து வெளியே வந்தவனோ கபோர்டை திறக்க,டாலர் ஞாபகம் வரவும்,உள்ளே இருந்த டிராவை திறந்து அதனுள் இருக்கும் செயினை வெளியே எடுத்தவன்,தாத்தா இருந்ததால் உன்னை பற்றி கேட்க முடியாமல் வந்துட்டேன்டி,இதை காணாமல் என்ன நிலமையில் நீ இருக்கனு தெரியலையேடி என்றான்.

பின் செயினை எடுத்த இடத்திலே வைத்தவன்,டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு,கபோர்டை லாக் பண்ணி விட்டு,டிரஸ்ஸை மாற்றியவன், கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தான்.

வராண்டாவில் ராதாவும்,செல்வியும் ஒரு பக்கம் பூ கட்டிக்கொண்டிருந்தனர். வள்ளியும்,பிரகாசமும் எதோ பேசிக்கொண்டிருந்தனர்.

என்ன வீடு இவ்வளவு அமைதியா இருக்கென்றவாறு அங்கிருந்த ஊஞ்சலில் உட்காரும் போது,செல்லமேஏஏஏஏஏ... உன் மாமன் வந்துட்டேன் என்ற சத்தம் வாசலில் கேட்க,அந்த குரலை கேட்ட கதிரோ நெற்றியில் தனது இடது உள்ளங்கையால் தட்டிக்கொண்டவன், ப்ச்...மறந்துட்டேனே என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.

செல்ல குட்டி எங்கே இருக்க?,மூன்று நாளா இந்த மாமனை பார்காமல் என்ன பாடு பட்டியோ செல்லமே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் கதிரின் அத்தைமகனான வேலு.

உள்ளே வந்தவன் வள்ளிஈஈஈ செல்லம் என சொல்லிக்கொண்டே அப்பாயிடம் சென்று ,அவரின் கன்னத்தை ஒரு கையால் கிள்ளி,எப்படி செல்லம் இருக்கிற?என்க,அப்பாயியோ அவனை ஒரு பார்வை பார்த்தவர்,எதுவும் சொல்லவில்லை.ஏனென்றால் வேலு சபரிமலைக்கு போய் விட்டு இப்பொழுது தான் வந்திருக்கான்.

"இன்னும் அவன் காவி உடையில் இருப்பதால்,சாமி என்ற எண்ணத்தில் எதுவும் பேசவில்லை.என்ன செல்லம் இப்படி துரும்பா இளைச்சிட்ட,மாமன் மேல அம்புட்டு பாசமாடி உனக்கு என்க, அடேய் என்றார் பிரகாசம்.

என்ன செல்லம் சகலபாடி குரல் கேட்குது என்க,இடது பக்கம் பாருடா பிக்காலி பயலே என்கவும்,குரல் வந்த திசையில் பார்க,அங்கே பிரகாசம் தாத்தாவோ கால் மேல் கால் போட்டுக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தார்

" தாத்தாஆஆஆ...,நல்லா இருக்கியா என்றபடி அவரிடம் போக,நல்ல படியா கோயிலுக்கு போயிட்டு வந்தியா வேலு என்கவும்,ம்ம்.... கூட்டம் தான் எப்பாஆஆஆ...

எல்லாம் சிறப்பா முடிஞ்சிது தாத்தா என்றவாறு மீண்டும் பாட்டியிடம் வந்தவன்,தனது கையில் எடுத்து வந்த பேகை அவர் முன் நீட்டி,அம்மா குடுத்துச்சி செல்லம் என்க,போய் உன் அத்தைங்கள்ட குடுங்க சாமி.

" ஹாஹாஹா....செல்ல குட்டி.... இப்போ ஆசாமி தான்...உன் மரியாதை அப்படியே புல்லரிக்குது போ என்றவனை,கிட்ட வாடி வேலு என்றார் அப்பாயி.இதோ வந்துட்டேன் செல்லம் என்றவன், கீழே மண்டியிட்டு அமர,எட்டி அவன் காதை பிடித்து திருக தொடங்கினார் வள்ளி பாட்டி.

அய்யோ என்று கதறியவன், ஏன் செல்லம் இப்படி என்க,துப்பு கெட்ட பயலே,என் புருஷன் கூட இப்படி மூச்சுக்கு முன்னூறு செல்லம் சொன்னதில்லை,நான் பார்த்து பொறந்த பயல் எம்புட்டு ஏத்தம்டா உனக்கு?

" சரி... சரி.... விடு விடு.காது...வலிக்குது என்றவனுக்கு,இதுலாம் புதுசா கைப்பிள்ளை என்றாள் செல்வி. வேலுவின் மனசாட்சியோ,அடேய் இவளை பேச விட்டால் ரொம்ப டேமேஜ் பண்ணுவா,சீக்கிரம் அவ வாய அடைடா என்றது.

"செல்வி கண்ணுஊஊஊ....இங்கே பாரு உனக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் என்றவன்,அவளுக்கான பொருட்கள் இருக்கும் கவரை எடுத்து போய் அவள் முன்பு நீட்ட, அதை வாங்கியவள்,கவரை திறந்து பார்க்க, உள்ளே வித விதமான கிளிப், ஹேர்பேண்ட்,மேலும் சில மேக்கப் பொருட்கள் இருந்தது.

அதையெல்லாம் பார்த்தவள் தேங்க்ஸ் மாமா என்க,இதுக்கு ஏண்டா மாமனுக்கு கிஸ்ஸூலாம் என்றான்.யோவ் மாமா, வாய மூடுயா என்று செல்வி முறைக்க.சும்மா லுலலாயிக்கு என்றவன்,ராதாத்தை இந்தாங்க என்க, அவனிடமிருந்து பேகை வாங்கியவர், பூஜையறையில் கொண்டு போய் வைத்து விட்டு வெளியே வந்தவர்,டீ எடுத்துட்டு வரட்டுமா வேலு என்க, இல்லத்தை,கொஞ்ச நேரம் முன்னே தான் படைச்சிட்டு சாப்பிட்டேன் என்றவன்,ஆமாம் எங்கே சீதாத்தைய காணலை?

அக்கா,நம்ப அய்யனார் கோயிலுக்கு விளக்கு போட போயிருக்கு என்றார்.

"இவ்வளவு நேரம் அங்கே நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கதிர்,அடேய் நான் ஒருத்தன் குத்துக்கல் போல இருக்கிறேன் என்க,எந்த பரதேசி பயலையும் என் கண்ணுக்கு தெரியாது.

"அய்யோஓஓஓ....மச்சான் ரொம்ப சூடா இருக்கான் போலயே என மனதிற்குள் சொல்லிக்கொண்ட கதிர்,அடேய் நிஜமாகவே வயல் வேலையில் மறந்துட்டேன் டா.சரி நீ வீட்டுக்கு வந்துட்டு போன் பண்ணுவ,நான் வரலாம்னு இருந்தேன் என்று சொல்ல, ஸ்சூஊஊ ஸ்சூஊஊ என்று மேலே காக்கா ஓட்டுவது போல் வேலு கையை அசைத்தான்.

"டேய் மச்சான் நிஜமாலே மறந்துட்டேன். உனக்கு தான் தெரியுமே வயலுக்கு போனால் வேற எந்த ஞாபகம் இருக்காது என்று சொல்ல,ம்கும்...ஆ... ஊ... என்றால் இதை சொல்லிடு என்றவன், நண்பனின் அருகில் அமர்ந்து கொண்டு எப்படிடா இருக்க? என்க,ம்ம்,நீ எப்படி இருக்க? என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

" வீட்டில் இருந்த நால்வரும் இருவரையும் பார்த்தனர்,அப்பொழுது கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் எவனோ ரோசக்காரன்னு ஒருத்தன் இங்கே இருந்தானே தெரியுமா செல்வி? என்றார் வள்ளி பாட்டி.அதைக்கேட்ட நண்பர்கள் இருவரும்,அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா என்றனர் கோரஸாக...

"வேலுவோ பிரகாசத்தின் அண்ணன் பேரன்.சிறு வயதில் இருந்தே கதிரும் வேலுவும் ஒன்றாக தான் சுற்றுவார்கள்.உறவை தாண்டி இருவருக்கும் ஆழமான நட்பு இருக்கிறது.அவனுக்கு தெரியாமல் இவன் எதுவும் செய்ய மாட்டான், இவனுக்கு தெரியாமல் அவனும் எதுவும் செய்ய மாட்டான்.

"உன் நண்பனை பற்றி கேட்டால் உன்னை பற்றி தெரியும் என்பதற்கு இலக்கணமே இவர்கள் இருவரும் தான்.சரிடா மச்சான் நடவு எப்படி போச்சு ?என்க,எல்லாம் நல்லா போச்சுடா மச்சான்.

"சரி வா வெளியில போயிட்டு வரலாம் என்று வேலு கூப்பிட,நண்பன் அழைக்கும் காரணம் தெரிய,ம்ம்...வா என்று இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது,என்ன யோசனையில் இருக்க?,என்ன குழப்பம்?

இது தான் நண்பன்.தான் சொல்லாமலே தன்னை பற்றி புரிந்து கொண்டானே என்று நண்பனை நினைத்து கதிருக்கு பெருமையாக இருந்தது.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே, நல்லா தான் இருக்கிறேன் என்று கதிர் சொல்ல,அப்படியா? நம்பிட்டேன்டா என்றவன்,"மொச பிடிக்கும் நாய் மூஞ்ச வச்சே கண்டு பிடிக்கலானு" வள்ளி செல்லம் அடிக்கடி சொல்லும்டா.

"பின்னர் நண்பனிடம் மறைக்க மனமில்லாமல்,கும்மிருட்டிள் தன்னை மோதிவிட்டு டாலரை தொலைத்து சென்றவளையும்,தேவி பேசியதையும், அவர்கள் வீட்டில் இருந்து வந்தது,அதற்கு தான் பதில் சொல்லியது என நடந்த அத்தனையும் நண்பனிடம் கதிரும் சொல்லி முடித்தான் .

"எல்லாத்தையும் கேட்டவன்,ஏண்டா.... ஒரு மனுஷன் மூன்று நாள் ஊரில் இல்லை என்றதும் இவ்வளவு நடந்துருக்கா?.

நல்ல வேளைடா,நான் வருவதற்குள் உனக்கும் தேவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலையே என்ற வேலு, ஒரு நிமிடம் நண்பனை உற்று பார்த்தவன்,நம்ம சீமக்கரை சியான் காதல் கடலில் விழுந்துட்டான்னு சொல்லி சத்தமிட்டு சிரித்தான்.

நண்பன் சிரிப்பதை பார்த்து காண்டு ஏறியதும் என்னடா, நக்கலா இருக்கா?என்று கதிர் முறைக்க,ச்சே ச்சே.நான் அப்படி சொல்லுவேனா மாப்பு என்றவன்,உன் கிட்ட ஒரு கதை சொல்லனும் மாப்பு.

"இந்த ஊருக்குள்ள ஒரு சண்டியர் இருந்தான்டா.அந்த கிராதகனுக்கு காதல் என்றாலே புடிக்காதுடா,அப்படி யாராவது காதல் பண்ணினாலும், அதுலாம் வேலை வெட்டி இல்லாத பயலுங்க பண்ணுறதுடா மாப்பிள்ளைனு சொல்வான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
அப்படியாப்பட்டவனுக்கு ஆண்டவன் வச்சான் பாரு ஆப்புனு வேலு சிரிக்க,எல்லாம் என் நேரம்டா மச்சான், நீ பேசுடா என்று கதிர் முறைத்தான்.

"ஏண்டா மாப்பு....அந்த தேவி புள்ள பார்க்க நல்லா தானே இருக்கு,இத்தனை வருஷமா உன் பின்னாடியே சுத்திட்டு இருக்குது.அந்த புள்ள மேல கொஞ்சம் கருணையை காட்டி இருக்கலாமேடா? என்று வேலு கேட்க,அடேய்...நிஜமாகவே எனக்கு அவள் மேல அப்படி ஒரு எண்ணம் வரலைடா மச்சான்.

"இதை உன் கிட்ட பல தடவை சொல்லிட்டேன்,தெரிஞ்சும் நீ இப்படி கேட்டா நான் என்ன பண்றதுடா? என கதிர் கேட்க,அதற்கு வேலுவோ,அவளும் பெண் தானே என்றான்.

"நண்பன் சொன்னதை கேட்ட கதிர் செருப்பு பிஞ்சிடும் மாப்பிள்ளை.அவள் பொண்ணு இல்லைன்னு நான் என்றைக்குடா சொல்லிருக்கேன்னு? கோபமாக கதிர் பார்க்க,அடேய்...இத்தனை வருஷமா உன் பின்னாடி அந்த புள்ள எப்படிலாம் அலைஞ்சிது,அப்போ கூடவா அது மேல காதல் வரவில்லை?என மீண்டும் வேலு கேட்க,வரலைடா.

மாப்ளை...நெஞ்சுக்குள்ள அவ நினைப்பு வண்டா குடையுதுடா,படுத்தா தூங்க முடியலை,பசிக்குது ஆனால் சாப்ட முடியலைடா என்று கதிர் சொல்ல,அது வேற ஒன்னும் இல்ல மாப்பு,அத்தை நல்லி எலும்புல கொஞ்சம் காரம் அதிகமா சேர்த்திருக்கும் அதான்னு வேலு சொல்ல,நண்பனை ஒரு பார்வை பார்த்தவன்,என்னை கொலைகாரனாக்காமல் ஒழுங்கா ஓடி போய்டுடா.

"ஏண்டா..இந்த சினிமாவில் தான் மூஞ்ச பாக்காம,ஊர் பேரு தெரியாம காதலிப்பாங்க.அதையும் கதையா எழுதி உசுர வாங்கி தொலைவாங்க என்றால்,நீ இருட்டில் மோதினவளை காதலி என்றே முடிவு பண்ணி,இப்படி என் உசுர வாங்குறியேடா என்னத்தை சொல்ல.

"இருவரும் பேசிக்கொண்டே நடந்து சொல்லும் பொழுது,வேலுவின் செல்லிற்கு கால் வர,பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அட்டென் பண்ணியவன் சொல்லு தாய்க்குலமே என்க,தம்பி சித்தி வீட்டுக்கு போகனும்பா,பொங்கல் ஆறிப்போகுது என்க,நீ எடுத்து வைம்மா நான் வரேன் என்று சொல்லி அழைப்பை கட் பண்ணியவன்,மாப்பு அம்மா வர சொல்லுதுடா,சித்தி வீடு வரை போகனுமாம் என்க சரிடா என்றான்.

பின்னர்,இருவரும் பேசிக்கொண்டே அவரவர் வீடு இருக்கும் தெருவிற்குள் பிரிந்து சென்றனர்.


தாமரை வீடு...

"வீட்டு வாசலின் முன்பு வந்து நின்றது ஆட்டோ.அதிலிருந்து கீழே இறங்கிய தாமரை,எவ்வளவு ஆச்சு அண்ணா? என்க,ஆட்டோக்காரர் மீட்டரை பார்த்து அமௌன்டை சொல்ல,தனது பர்சிலிருந்து கேட்ட தொகையை விட கூடுதலாக அம்பது ரூபாய் சேர்த்தே எடுத்துக் கொடுத்தாள்.

"அதை வாங்கிய ஆட்டோக்காரர் நன்றி மா என்று சொல்லி விட்டு,டிரைவர் சீட்டிலிருந்து கீழே இறங்கியவர் பின் இருக்கையில் இருந்த லக்கேஜை எடுத்து கீழே வைக்க,சிவாவும் அங்கு வந்து சேர்ந்தான்.

பின்னர்,சிவாவும்,தாமரையும் வாங்கிய பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றனர்.இருவரும் வந்ததை பார்த்த கவிதா என்னப்பா போன வேலை நல்லபடியா முடிந்ததா?

ம்ம்..அக்காவுக்கு பிடித்த போலவே வாங்கியாச்சு மா என்றவன், இவற்றையெல்லாம் எங்கேக்கா வைக்கணும் என்க,இரவிலும் யாருக்கும் தொந்தரவு பண்ணாமல் தைப்பதற்கு வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் மெஷினை தனது அறையில் வைக்க சொன்னாள்.சரி என்றவன், அனைத்தையும் தாமரையின் அறையிலே வைத்தான்.

மெஷினை பிட் பண்ணனும் சிவா?

சரி கா.நம்ப வேலு அண்ணனுக்கு தான் இந்த வேலை தெரியும் ஆனால், அண்ணன் மலைக்கு போயிருக்கு,அது வந்தால் தான் பண்ண முடியும் என்றான்.

"தம்பி சொன்னதை கேட்டவள்,ஓஓஓ... வேற யாருக்கும் தெரியாதாடா?என்க, இல்லைக்கா என்றவன்,வேண்டும் என்றால் போன்லே பார்த்து நாம பிட்டிங் பண்ணுமா?என்க,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்றவாறு கவிதாவும் அங்கு வந்தார்.

"ஏன் மா என சிவா கேட்க,வேலு வந்துரட்டும் என்று சொல்லும் போதே, சித்தி,சித்தி என்று கூப்பிட்டுக்கொண்டே வேலுவும் அங்கு வந்தான்.அவனின் குரல் கேட்டு கவிதாவும்,சிவாவும் ரூமிலிருந்து வெளியே வந்தனர்.

"வாப்பா... நல்ல படியா மலைக்கு போய்ட்டு வந்தியாப்பா என்க,சிறப்பு சிறப்பு என்றவனிடம்,எப்போணா வந்த? என்கவும்,மதியம் தான் வந்தேன் டா என்றவன்,இந்தா சித்தி,அம்மா படைச்சதை குடுத்துச்சி.

அதை வாங்கியவர்,இரு குடிக்க எதாவது எடுத்து வரேனென்று உள்ளே சென்றார்.

அப்புறம்....காலேஜ் லீவ் தானா என்ற வேலுவிடம்,ஆமாணா,உனக்கு ஆயுசு நூறுணா.அதேக் கேட்டவன் ஏண்டா... ஏன்...இதுக்கே நாய் பேய் பொழப்பா இருக்கு,இதுல நூறு வயசு தான் கேடு என்றான்.

அப்படி சொல்லாதண்ணா என்ற சிவா, மெஷின் ஒன்னு பிட்டிங் பண்ணனும், இப்போ தான் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன் என இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது,தாமரை...தாமரை என்று கவிதா கூப்பிட அவள் வரவில்லை.

யாரை சித்தி கூப்டுற?என்ற வேலுவிற்கு,கொஞ்சம் பொறு,யார் என்று உனக்கே தெரியும் என்றவர், தாமரையின் ரூமினுள் சென்று பார்க, பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டது.

திரும்பி வந்தவரிடம் எங்கே யாரையும் காணும் என்க,இதோ நான் வந்துட்டேன் என்று சொல்லியபடியே அல்லியும் அங்கு வந்தாள் .

"ஏய் வாலு"...எப்படி இருக்கே என்ற வேலுவிற்கு,எங்கே என் பங்கு என்றாள். நீயெல்லாம் தங்கச்சியா பிசாசு பிசாசு. அண்ணன் மலைக்கு போனாணே நல்ல படியா போய்ட்டு வந்தியா இல்லையானு கேட்காமல்,பங்கு கேட்குது பாரு என்க, அதான் குத்துக்கல்லு போல இருக்கியேண்ணா.என் அண்ணன் மனசுக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும் என்றாள்.

"தங்கச்சி..... தங்கச்சி... தங்கமான தங்கச்சி என்று வேலு பாட,அண்ணா, முடியலைணா,உங்க பாச வெள்ளத்தில் நான் மூழ்கி போய்டுவேன் போல என்றான் சிவா.

இந்த வளந்து கெட்டவனுக்கு பொறாமைணா என்ற அல்லிக்கு, அப்படினு பச்சையா சொல்ல முடியாதுடா என்றவன்,அம்மா கிட்ட குடுத்துருக்கேன் போய் பாரு.

ஹை... ஹை... என்று சொல்லிக்கொண்டே உள்ளே அம்மாவிடம் ஓடியவள் எங்கேம்மா அண்ணா கொடுத்த பொருள்?.

ஆமாடா,நம்ப வீட்ல யாருக்கு தையல் தெரியும் என வேலு கேட்கும் பொழுது, எனக்கும் தெரியும்ணா என்ற குரல் கேட்ட வேலுவிற்கு,யார் டா இது புது குரலா இருக்கு என்று சுற்றி பார்க்க, தனது அறையினுள் இருந்து தாமரை வந்தாள் .

யார் இந்த பொண்ணு? என யோசனையோடே வேலு பார்க, வேலுணா எப்படி இருக்கீங்க? என்றாள் தாமரை.தன்னை அண்ணன் என்று அழைப்பவளிடம்,நல்லா இருக்கேன் மா என்றவன்,அடேய் தம்பி,யார்டா இந்த பாப்பா?.

"ம்ம்.... நல்லா பாருணா,யாருனு தெரியும் என்ற சிவாவிற்கு,அறிவு கெட்டவனே,ஒன்னு ரெண்டு பித்த நரை தலையில் வந்திருப்பதால் எனக்கு வயசாகிட்டு,அதனால் கண்ணு தெரியலைனு முடிவு பண்ணிட்டியாடா?, தம்பி என்று பார்க்க மாட்டேன்.எட்டி மிதிச்சேன் குருத்தெலும்பு ஒடைஞ்சிடும் என்றான் வேலு.

என்ன அண்ணா,நான் கேட்குறேன் பதில் சொல்லாமலே இருக்கீங்க? என்றவள்,பெரியம்மா நல்லா இருக்காங்களா அண்ணா? என்க,அவள் யாரென்று தெரியாமல் என்ன பேசுவது என்று வேலுக்கு மண்டை காய்ஞ்சது. .

" சரி குத்து மதிப்பா பேசி வைப்போம்" என மனதிற்குள் சொல்லியவன்,நல்லா இருக்காங்கம்மா.நீ எப்படி இருக்க?

நான் நல்லா இருக்கேன் அண்ணா.மெஷின் பிட்டிங் பண்ண இந்த ஊரில் நீங்க மட்டும் தான் இருக்கீங்கனு தம்பி சொன்னான் எனக்கும் கொஞ்சம் மெஷினை பிட்டிங் பண்ணி தரமுடியாமாண்ணா?

அவள் யாரென்று தெரியவில்லை என்றாலும் இவ்வளவு பாசமாகவும் உரிமையாகவும் பேசுவதை கேட்டவன், இதுல என்ன இருக்குமா,இதோ பண்ணிட்டா போச்சு என்றவன்,முதல்ல மெஷினை பார்க்கனும் என்க,என் ரூம்ல தான் இருக்கு வாங்கணா என்றாள்.

"என்ன தான் சித்தி வீடாக இருந்தாலும் அல்லி ரூமிற்கு கூட போகமாட்டான் வேலு.அப்படி இருக்கும் போது,யாரென்றே தெரியாத பொம்பள புள்ள இருக்கும் ரூமிற்குள் செல்ல அவனுக்கு மனசாட்சி இடம் தரவில்லை.

அப்பொழுது அங்கு வந்த கவிதா, இந்தாப்பா என்க,அவர் நீட்டிய சுக்கு காஃபியை வாங்கி ஒரு மிடறு விழுங்கியவன்,உன் கை பக்குவமே எப்போதும் டாப் தான்.

ஆனால்,ஏன் உன் அக்காவுக்கு மட்டும் இப்படி போட தெரியலை சித்தி என்றவன் குடித்து முடித்து டம்ளரை அவரிடம் நீட்ட,அதை வாங்கியவர் தாமரையை காட்டி இது யாருனு தெரியுதா?என்றார்

"என்ன விளையாடுறீங்களா?,இந்த அரை வேக்காட்டு பயலும் அதான் கேட்குறான்,நீயும் அதான் கேட்குற,அந்த புள்ளையும் யாருனு தெரியலையானு கேட்குது?,நான் என்ன வெத்தலையிலா மை போட்டு தெரிஞ்சிக்க முடியும் என்றவனின் பேச்சை கேட்டு நால்வரும் சிரித்தனர்.

"சித்தி என்ற வேலுக்கு,நம்ப தாமரைப்பா,உன் தங்கச்சி. அதைக்கேட்டவன் என்னா என்று அதிர்ந்து போய் அவளை உற்றுப்பார்க்க,என்ன அண்ணா கண்ணு அவுட்டா என்றாள் அல்லி.

நிஜமா தான் சொல்லுறியா சித்தி என்றவனுக்கு ஆமா வேலு.உன் தங்கச்சியே தான் பா.வேலுக்கு அவள் நினைவு இருக்கின்றது.ஏனென்றால் பெண் குழந்தை இல்லாத வீடு என்பதால் தன் தங்கச்சி மகள் தாமரையை வேலுவின் அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும்.

அவளுக்கு தவழும் வயது வந்ததும் காலையிலே வந்து தூக்கி கொண்டு சென்று விடுவார்.அதிக நேரம் தாமரை இருந்ததே வேலுவின் அம்மாவிடம் தான்.வேலுக்கு விவரம் தெரியும் வயது என்பதால் அவனிடம் இவள் தான் உன் தங்கச்சி என்று சொல்லியே பழக அவனுக்கும் தங்கையை பிடித்து விட்டது.

அவள் சிறு வயதில் விரும்பி சாப்பிடுவது கமார்கட்டு மிட்டாய் மட்டும் தான்.அதை வாங்கி கொடுத்தாலே போதும் தாமரை சமாதானம் ஆகிவிடுவாள்.அதையெல்லாம் நினைத்து கொண்டிருந்தவனின் முன்னால் வந்து நின்றவள் தனது வலது கையை அவனிடம் நீட்ட,அதில் இருந்ததை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது.

பாப்பாஆஆஆ என்றவனிடம் நானே தான் ணா என்க,தனது தங்கை என்ற பாசத்தோடு நல்லா இருக்கியாடா? என்றான்.ம்ம் என்றவள்,என்னை மறந்துட்டே தானே?என்கவுமா, அய்யோஓஓஓ....உன்னை எப்படி பாப்பா அண்ணன் மறப்பேன்?

சித்தி உன்னை பார்க்க வரும் போதொல்லாம் கேட்பேன் டா. வேண்டுமானால் கேளு என்றவன், கவிதா பக்கம் திரும்பி அப்போ நான் விசாரிக்கிறதையெல்லாம் நீ சொல்லவே இல்லையா சித்தினு வருத்தமான முகத்தோடு கேட்டான்.

"அண்ணா,முடியலை உங்க பாச போராட்டம் என்ற அல்லியின் தலையில் கொட்டியவன்,பொறாமை புடிச்ச கழுதை என்று வேலு சொல்ல சிவாவோ அதில் என்ன அண்ணா சந்தேகம் என்றான்.

பின் சிறிது நேரம் தாமரையிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு, தங்கையின் அறைக்கு சென்றவன், அங்கிருந்த பார்சலை பிரித்து பார்த்தவன் பைக் கவர்ல டூல்ஸ் இருக்கு எடுத்துட்டு வா சிவா.

சரி ணா என்று வேலு சொன்னதைப் போல சிவா டூல்ஸ் பேக்கை எடுத்துட்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக்கொண்டவனோ மெஷினை பிட் பண்ண தொடங்கினான்.

அரைமணி நேரத்தில் வேலையை முடித்தவன் சரியாக இருக்கின்றதா என்று மீண்டும் செக் பண்ணி பார்தவன், இப்போ ஓகேடா இனி தாராளமா நீ இதை பயன்படுத்தலாம்.

ஹம்...சாய்ந்தரம் கோயிலுக்கு போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்த பிறகு யூஸ் பண்ணிக்கிறேன்ணா என்றாள்.

கண்மணி வருவாள்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top