Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 113
- Thread Author
- #1
கனவு - 8
சில நாட்களுக்கு பிறகு..
அந்த இரவு தங்களது தனிமையில் சுதர்சனத்திடம், "நான் ஒன்னு சொல்லவா ங்க?!.." என சரஸ்வதி ஆரம்பிக்கவும், என்னவென கேள்வியாக பார்த்திருந்தார் அவர்..
"இல்ல.. நமக்கு கண்டிப்பா இந்த சம்பந்தம் தான் வேணுமா?!.. நாம வேணும்னா நம்ம பொண்ணுக்கு வேற பையனை பார்ப்போமே!!?.. " எனக் அவர் கேட்க, "ஏன்?!.." என்ற ஒற்றை கேள்வியோடு சுதர்சனம் நிறுத்தினார்..
"அன்னிக்கே அந்த பையன் ரொம்ப.. ஒரு மாதிரி.. திமிரா நடந்துக்கறாப்ல இருக்கு!.. அதுவுமில்லாம அந்த அம்மா பேசுறது..எல்லாம் என் மனசுக்கு சரியாபடலைங்க!.. அதனால தான்..." என ஒருவழியாக சரஸ்வதி சொல்லி முடிக்க..
"அந்த பையன் ஒரு ஐடி கம்பெனி வைச்சு நடத்துறான்.. இப்படி இல்லனா எப்படி கம்பெனி ல எல்லார் கிட்டயும் வேலை வாங்க முடியும்?!.. அந்தம்மா அவங்க குடும்ப முறை என்னவோ அதை தானே சொன்னாங்க!..." என பதிலளித்தவர் மேலும்,
"அந்த பையனோட அப்பா கவர்மென்ட் வேலைல இருந்து ரியர்ட்டு ஆனவர்!.. பெரியவனும் மருமகளும் ஐஐடி ல ப்ரோஃபஸரா வொர்க் பண்றாங்க!.. என்ன அந்த அம்மா தான் கொஞ்சம் ஒருமாதிரி பழமைவாதியா இருக்காங்க!.. "
"மத்தபடி நான் விசாரித்த வரை நல்ல குடும்பம் தான்!.. சும்மா உன் மனசை போட்டு குழப்பிக்காம தூங்கு சரஸ்வதி!.." அதற்கும் நீளமாக விளக்கம் கொடுத்தார் சுதர்சனம்..
"அதில்ல ங்க!.. நீங்க இந்த சம்பந்தம் பேசி முடிச்சதுல இருந்து புள்ள முகம் ஒரு மாதிரியே இருக்கு.. என்னவோ போல ரொம்ப அமைதியா இருக்கா!.. அதான் சொல்றேன்!.. "
" இந்த குடும்பம் நம்ம நதியா குணத்துக்கு சரிபட்டு வரமாட்டாங்க!.. சொன்னா புரிஞ்சுக்குங்க!.. நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்க வேண்டாமா?!.." மீண்டும் நதியாவை முன்னிறுத்தி அவர் கேட்கவும்,
"அதெல்லாம் சரியா வரும்.. அவளுக்கே ஓகே ங்கற போது நீ ஏன் இவ்ளோ பேசிட்டு இருக்க?!.." என சற்று கடுமையாக அவர் கேட்க, 'இதற்கு மேல் இவரிடம் பேசுவது வீண்! எல்லாம் கடவுள் விட்ட வழி!..' என்றெண்ணி அமைதியானார் சரஸ்வதி..
*****************
அன்று...
நதியாவை பிடித்திருப்பதாகவும், அவர்களுக்கு சரியென்றால் மேற்கொண்டு இந்த திருமணத்தைப் பற்றி பேசுமாறும் கூறிய மகனின் பேச்சில்..
ஏற்கனவே நதியாவின் கேள்வியில் அவள் மீது அதிருப்தியில் இருந்த அவனது தாய் அமராவதி, "ருத்ரா!!.." என சத்தமாக அழைக்க..
அந்த அழைப்பில்.. அந்த பெயரில்.. அதுவரை அவனைப் பற்றி எதுவுமே அறியாமல் இருந்த நதியா, கனவில் வந்த பெயரை நனவில் முதல்முறையாக கேட்டதில் அதிர்ந்து ஸ்தம்பித்துப் போனாள்..
தாயின் அழைப்பில் திரும்பியவன், "நீங்க பேசி முடிச்சுட்டு வாங்க மாம்!.." எனக் கூறியவன், நதியாவை திரும்பிப் பார்த்து,
"ஐ திங்க் உங்க பொண்ணுக்கும் விருப்பம் தான் போல!.." என்று புன்சிரிப்புடன் கூறிட, நதியாவை பார்த்த சுதர்சனமும் அதை தான் நினைத்தார்..
"தென்!.. நீங்க அதையும் மனசுல வச்சுட்டு யோசிச்சு சொல்லுங்க அங்கிள்!.. ஐ ம் கெட்டிங் லேட்!.. எக்ஸ்க்யூஸ் மீ!.." என்று விட்டு அவன் கிளம்பினான்..
அதன் பின் ஜெயராமனும்," நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!.. இவ கொஞ்சம் பழமைவாதி!. அதான் அப்படி பேசிட்டா!.. இப்பெல்லாம் காலம் மாறி போச்சு னு தெரியல!.."
"நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்வீங்களோ அதையே செய்யுங்க!.. ஒன்னும் பிரச்சனை இல்ல சுதர்சனம்!.."என அமராவதியின் பேச்சிற்கு மன்னிப்பு வேண்டுவது போல பேசினார்..
நதியாவையும் தம்பியையும் கவனித்த ரவீந்திரனும், "நீங்க இந்த விசயம் எதையும் மனசுல வைக்காம, கல்யாணம் பண்ணிக்க போறவங்க விருப்பத்தை மட்டும் யோசிங்க அங்கிள்!.. "
"பொறுமையா பதில் சொல்லுங்க!.. இப்ப நாங்க கிளம்புறோம்!.."என்று விட்டு கைகூப்பி கும்பிட்டவன் தன் மனைவி சரயுவுடன் கிளம்பத் தயாரானான்..
இவர்கள் அனைவரும் பேசியதை பார்த்த அமராவதிக்கு, 'என்னங்கடா இது!?..நான் என்னமோ கொலை குத்தம் பண்ணுன மாதிரி மாஞ்சு மாஞ்சு மன்னிப்பு கேட்குறாங்க!..'
'ஏதோ பொண்ணு வீட்டுக்கு பூர்வீக சொத்து நிறைய இருக்கு.. நல்ல வசதி னு எல்லாம் சொன்னாங்க அதனால தானே கேட்டேன்!..' தன் தவறை உணராமல்..
'அப்படி என்ன ஊர் உலகத்துல நடக்காததையா நான் கேட்டேன்!?.. அதுவும் இவளோட வாய்க்கு என் வீட்டுக்கு இவ மருமகளா வந்தா அவ்ளோ தான்!..' என யோசித்த அமராவதி,
தன் குடும்பத்தாரோடு கிளம்பும் போது பெண் வீட்டினரை ஒரு தினுசாக பார்த்துக் கொண்டு வெளியேறினாள்..
அவர்கள் பாட்டிற்கு பேசிக் கொண்டு செல்ல, அவனைப் பற்றி தன் யோசனையிலேயே இருந்த நதியாவும் எழுந்து தனது அறைக்குள் சென்றிட, சுதர்சனம் அதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டார்..
தன் கனவில் வந்தவன் இவன் தானோ?!.. என்ற குழப்பத்தில் இருந்தவள் அதையே சிந்தித்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போனாள்..
மாலையில் எழுந்தவளிடம் வந்த சரஸ்வதி, "ஏன்டா பாப்பு என்னமோ பொண்ணு பார்க்க வர்றவங்கள ஓட வைக்க போறேன் னுட்டு சபதம் எல்லா போட்டுட்டு இருந்தியே?!.. இப்ப ஓகே சொல்லிட்டியே!!.." என்று கேட்கவும்,
"என்ன ம்மீ?!.. எதாவது கனவு கண்டீங்களா!?.. ஆனா தூங்கி எழுந்தது நான் தானே??!.. " என தலையை சொறிந்து கொண்டு அவள் யோசிக்க, அவளது மண்டையில் கொட்டினார் அவர்..
"ஏன்டி காலைல அந்த பையனையே.. ஏதோ காணாததை கண்ட மாதிரி 'பே' னு பார்த்துட்டே இருந்துட்டு.. இப்ப கேள்வியை பாரேன்!.."என திட்டித் தீர்க்க..
"அது வந்து... " என இழுத்தவள், "அதிருக்கட்டும்!.. ஆனா நான் எப்ப ஓகே சொன்னேன்!?.. " என யோசனையுடன் கேட்டாள் நதியா..
"அப்ப உனக்கு நடந்த எதுவும் தெரியாதா?!.." என கேட்டவர், "இதுக்கு தான் ஆஊ னா உன்னோட கனவு உலகத்துக்கு போகாதே னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன்!.. லூசு!!.. உங்கப்பா கல்யாணம் வரைக்கும் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாரு!.." என்றார் சரஸ்வதி..
"எதேஏஏ!!!.. கல்யாணமா?!.. நான் என்னோட விருப்பத்தையே சொல்லாம அவர் எப்படி முடிவு பண்ணலாம்!.. இப்பவே போய் கேட்கறேன்!.." என்று விட்டு தன் தந்தையை தேடிப் போனாள்..
குழாயடி சண்டைக்கு போவது போல வேகமாக வந்தவள் தந்தை அருகே வந்ததும் "அப்பா!!.." என சாந்தமாக அழைத்து, "என்னோட விருப்பம் என்ன னு கேட்காமயே மேரேஜ் வரை ஃபிக்ஸ் பண்ணீட்டீங்களா?!.." எனக் கேட்டாள்..
"அதான் உன்னோட விருப்பத்தை சொல்லிட்டியே!.. இப்ப என்ன பிரச்சினை வந்தது உனக்கு?!.." என அவர் எதிர்க்கேள்வி கேட்க, அவள் இல்லையென மறுத்தாள்..
அவள் அவனை பார்த்த பார்வையை விருப்பத்துடன் பார்க்கிறாள் என புரிந்து கொண்டவர், 'இப்போது இவள் மறுப்பதற்கு காரணம் தனது காதலை விட்டுத்தர முடியாமல் தான் சொல்கிறாள்' என்று தவறாக எண்ணி அவள் பேசுவதை புறக்கணித்தார்..
தந்தையின் பேச்சைக் கேட்டவள், "எனக்கு கொஞ்சம் யோசிக்கனும்!.." என்றாள் திட்டவட்டமாக.. அவளுக்கு இவன் தான் அவனா என்று யோசிக்க வேண்டி இருந்தது..
"ஒன்னும் பிரச்சனை இல்ல.. இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணம் வைச்சு இருக்கு!.." என்றார் அவர் நக்கலாக.. அவரது பதிலில் கடுப்பானவள், வேகமாக அறைக்கு திரும்பினாள்..
சுதர்சனம் அவனது ஆளுமையான பேச்சில், தன் பெண் அவனது வீட்டிற்கு வாழ சென்றாலும் அவன் பாதுகாப்பான் என்ற எண்ணத்தில் அவனது குடும்பத்தை பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை..
அதனால் அன்றே ஜெயராமனை அழைத்து தனது சம்மதத்தை கூறி மேற்கொண்டு நிச்சயம், திருமணம் அனைத்திற்கும் அவர்களுக்கு தோதுபடுமாறு நாள் குறிக்கச் சொல்லி விட்டார்..
மறுநாள் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக கல்லூரிக்கு கிளம்பியவள், சுதர்சனம் வந்து கல்லூரியில் இறக்கி விடவும், குழப்பமான மனநிலையோடே வகுப்பிற்கு வந்தாள்..
சபர்மதி 'என்னாயிற்று?!' என கேட்டதும், அவள் மையமாக தலையசைத்ததை கண்டு முறைத்தவள், "உருப்படியா சொல்லித் தொலை டி!.." என திட்ட,
நதியா நடந்ததைக் கூறினாள்..
"ஆமா!.. வந்தவங்க ரோஸ் எதாவது கொண்டு வந்தாங்களா?!.." என சபர்மதி கேட்கவும், "இல்லயே!!.. ஏன் கேட்குற!?.." குழப்பமாக நதியா பதிலளித்தாள்..
"அப்றம் என்ன விசயம்!?!.. நீ ஏன் ஃப்ரீஸ் ஆகி இருந்த?!.." என புரியாமல் குழம்பிய மதி,"ஹேய்!!.. அப்படினா வந்தவனை உனக்கு பிடிச்சு போச்சா?!.." என ஆச்சர்யமாக மகிழ்வுடன் கேட்டாள்..
"அப்படி னு இல்ல மதி!.. ஒரே குழப்பமா இருக்கு!.." என நதியா சொல்லவும், "தாயே!.. நீ நார்மலா பேசுனாலே ஒன்னும் புரியாது.. இதுல குழப்பமா பேசுனா.. சுத்தம்!!!.." என சலித்தாள் சபர்மதி..
சில நிமிடங்கள் யோசித்த நதியா மெதுவாக, தனக்கு அடிக்கடி வரும் கனவை பற்றி கூறவும், இவனும் அந்த பெயரில் இருந்ததை கூறவும் குழப்பமாகியதாக கூறினாள்..
நதியா சொல்லி முடிக்கும் வரை ஏதோ சினிமா கதை கேட்பது போல கேட்டு கொண்டிருந்த சபர்மதி அவள் சொல்லி முடித்ததும்,
"இரு!..இரு!.." என்று நிறுத்திவிட்டு, "ஆமா உன்னோட கனவுல வந்தவன் செத்து போயிட்றதா தானே சொன்ன?!.." என தன் சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கேட்க, நதியா ஆமென்று தலையசைத்தாள்..
அதில் கோபமாகிய சபர்மதி "லூசாடி நீ?!.. அவனே செத்து போயிடுறான்னு சொல்ற.. அப்புறம் இவனை போய் கட்டிக்கிட்டு, எப்படி டி இதெல்லாம்?!.. "
என்று 'இவளுக்கு அதை எப்படி சொல்லி புரிய வைப்பது?!' என்று தயங்கிய சபர்மதி பாதியில் நிறுத்தினாள்..
"அதெல்லாம் எனக்குத் தெரியாது மதி!.. ஆனா.. கனவுல நான் பார்த்த அவனோட அந்த கண்கள்... அதில் தெரிஞ்ச அந்த காதல்..." என மந்தகாசத்துடன்க் கூறியவள்,
"கொஞ்சகாலம் னாலும் உயிர் உருகுற அந்த காதலை அனுபவிக்கனும் மதி!.. உனக்கு அதை வார்த்தையில சொன்னா புரியாது!.."என அந்த உணர்வில் லயித்து கூறியவளை விசித்திரமாக பார்த்திருந்தாள் சபர்மதி..
"அதுசரி டா நதி!.. ஆனா அவன் தான் இவனா னு தெரியாம.. வெறும் பேரை மட்டும் வச்சிட்டு.. எப்புட்ரா!?!.." இன்னுமும் குழப்பமாக கேட்ட சபர்மதியிடம்,
"இவன் அவன் இல்லனா.. எதுக்கு அதே பேரோட என்னை தேடி வரனும்!?.. அப்பாவும் இவனைத் தான் கட்டனும் னு என்னை கட்டாயப்படுத்தனும்!?.." என்று கேள்வி எழுப்பினாள்..
சபர்மதிக்கு இவள் கூறுவதில் உடன்பாடு இல்லை எனினும் இவளது தந்தை எப்படியும் தனது முடிவை மாற்றப் போவதில்லை..
அதனால் நடப்பதை ஏற்றுக்கொள்ள அவள் தன்னை ஏதோ ஒரு வழியில் தயார்படுத்திக் கொண்டதை நினைத்து அவளை மேலும் எதுவும் கேட்டு குழப்பாமல் அமைதியாக விட்டுவிட்டாள்..
நதியாவிற்கும் 'இவன்தான் தனது கனவில் கண்டவன்!' என்பதை அவள் மனம் உறுதியாக நம்பியதால் அந்த கனவு மீண்டும் வரவேயில்லை.. அதனால் இவன்தான் அவன் என்றே உறுதி செய்தாள்..
இன்னும் சில தினங்களில் நிச்சயதார்த்தம் வைத்து இருக்க,
நதியாவின் அமைதி சரஸ்வதியை யோசிக்க செய்ய, ஒருநாள் தனிமையில் அவளிடம்,
"உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனா சொல்லுடா பாப்பு!.. எதாவது செய்து நிறுத்திடலாம்." என்று கேட்க, அப்படி எல்லாம் எதுவுமில்லை என்று விட்டாள்.