• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
112
கனவு - 7

சரஸ்வதி சமையலறையில் பரபரப்பாக இருக்க, "ம்மீ!!.." என அழைத்துக் கொண்டே அங்கே வந்தவள், பிஸியாக சமைத்துக் கொண்டு இருந்தவரைக் கண்டு,

"நானே வர்றவங்கள எப்படியாவது கடுப்பேத்தி, உங்க பொண்ணே வேணாமடா சாமினு அலறியடிச்சு ஓட வைக்கலாம் னுட்டு பார்த்தா.. நீங்க என்னமோ கல்யாண விருந்து மாதிரி பாயாசம் எல்லாம் வச்சுட்டு இருக்கீங்க?!.." எனப் பொரிந்தவள்..

"ஐடியா!!.. நான் வேணும்னா போன தடவை செய்தேனே அந்த மாதிரி அசோகா ஹல்வா பண்ணட்டுமா?!.." என ஆர்வமாக கேட்ட மகளை கலவரத்துடன் பார்த்தார் அவர்..

"எது?!!!.. அன்னிக்கு அந்த ஒரிஜினல் அல்வாவோட கலர் வரலை னு ஃபிஷ் மசாலா பொடி போட்டு கலர் வர வைச்சியே!.. அதுவா டா!!??.." எனக் கேட்டவர், "கொலை பண்றது பாவம்டா!!.." என்றார் பரிதாபமாக..

"ம்ப்ச்!!.. சாகவெல்லாம் மாட்டாங்க ம்மீ!.." என தீர்மானமாக சொன்னவளை, திரும்பிப் பார்த்தவர், "நாம சாத்வீகமான முறையிலேயே பேசி பார்க்கலாம் டா!.. வன்முறை வேணாம்!..சரியா?!.."

"போ!..போய் நீயும் உன் வேலையை பாரு!.. இப்ப என்னையும் வேலை பார்க்க விடு!.." என கெஞ்சிக் கேட்ட தாயை முறைத்துக் கொண்டே வெளியேறினாள்..

அந்த முற்பகல் வேளையில் வீட்டிற்கு வந்தவர்களை, "வாங்க!!.. வாங்க!!.." என வரவேற்று அமரச் சொன்ன சுதர்சனம்,"சரோ!.. அவங்க வந்துட்டாங்க பாரு!.." என உள்நோக்கி குரல் கொடுத்தார்..

அறையிலிருந்து வெளியே வந்த அரவிந்தும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்து தன்மையாக பேச,

'பரவால்ல!.. நல்ல மரியாதையான பிள்ளை தான்!.. அப்ப பெண்ணும் அடக்க ஒடுக்கமா தான் இருக்கும்' என தனக்குள் தப்பு கணக்கு போட்டாள் அமராவதி..

"இவன் தான் என் மூத்த மகன் ரவீந்திரன்.. இவங்க அவனோட மனைவி சரயு.." என தனது மூத்த மகனை அறிமுகம் செய்து வைத்த ஜெயராமன்,

அவனருகே ஒரு அலட்சியத்துடன் கால்மேல் கால் போட்டு, கண்களில் ஷேட்ஸ் அணிந்து, அமர்ந்து இருந்தவனை காட்டி,

"இவன் தான் என் ரெண்டாவது மகன் ருத்ரதேவ்.. இவனுக்கு தான் உங்க பொண்ணை பார்க்க வந்து இருக்கோம்!.." என்று கூற,

மரியாதை நிமித்தமாக தலையசைத்து பந்தாவாக கை ஆட்டிய அவனை கண்டுக் கொண்டே, அவர்களுக்கான பழச்சாறு கோப்பையுடன் வந்த சரஸ்வதியை, சுதர்சனமும் அறிமுகம் செய்தார்..

வந்தவர்களுக்கு அதை கொடுத்துவிட்டு உள்ளே சென்றவர் மகளிடம்,"என்ன பாப்பு!?.. இந்த பையன் ரொம்ப ரஃப்ஆ இருப்பான் போலயே!.."

"உங்கப்பா முன்னாலேயே கால்மேல கால் போட்டு ரொம்ப திமிரா உட்கார்ந்து இருக்கான், எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை!.." என்று தனது மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறினார்..

அவர் அவனைப் பற்றி சொன்ன விதத்திலே 'அவனிடம் பேசி திருமணத்தை நிறுத்தலாம்!' என்று நதியாவின் மனதில் எண்ணியிருந்த தனது திட்டத்தை மாற்றிக் கொண்டாள்..

"உங்க புர்ர்ர்..ருஷர் பார்த்த பையன் தானே!.. அப்புறம் அவரை மாதிரி தான் இருப்பான்!.." என்று நக்கலாக பேசிய நதியாவை முறைத்தவர்,

"அங்க வந்தும் இப்படி ஏதாவது ஏடாகூடமா பேசி வைக்காதேடா!!.. அப்றம் 'புள்ளயை எப்படி வளர்த்து வைச்சு இருக்கா பாரு' னு என்னை தான் திட்டுவாங்க!.." என எச்சரித்தார்..

அங்கே வரவேற்பறையில் சுதர்சனம், "எனக்கு இந்த ஜாதகத்தில் எல்லா பெருசா நம்பிக்கை இல்லை ஜெயராமன்!..அதனால அதெல்லாம் கண்டுக்கறதில்ல.."

"என் நண்பன் பிரேம் தான் உங்க பையனைப் பற்றி சொன்னான்.. ஐ.டி கம்பெனி வைச்சு இருக்கறதாகவும், உங்க ஃபேமலி பற்றியும் எல்லாம் சொன்னான்.."

"அப்படி தான் உங்களை பற்றி தெரிய வந்தது.. எனக்கும் மனசுக்கு திருப்தியா இருந்துச்சு!.." என அவர்களைப் பற்றி இவர் அறிந்த விதத்தை கூறிக் கொண்டிருந்தார்..

"இருக்கட்டும் ங்க சுதர்சனம்!.. இப்படி தெரிஞ்சவங்க சொல்லி தானே இந்த மாதிரி விசயம் எல்லாம் நடக்கும்!.." என இயல்பாக பேசிக் கொண்டே திரும்பி தனது சின்ன மகனை பார்த்த ஜெயராமன்,

அவனது சலிப்பான முகபாவனையை புரிந்துக் கொண்டு, "சரி!.. நாம மட்டும் பேசிட்டு இருக்கோமே!.. உங்க பொண்ணை வரச் சொல்லுங்க!.. இன்னும் அந்த காலம் மாறி எல்லாம் எதுக்கு ஃபார்மாலிட்டீஸ்!?.."

"அவங்களும் கொஞ்சம் இயல்பா பேசி பழகட்டும்!.. லைக் ஃபேமலி கெட் டுகெதர் மாதிரி.." எனக் கூறி 'தான் பெரிய பெருந்தன்மையானவன்' என்பதைப் போல பேசினார்..

அதன் பின் நதியா அழைக்கப்பட.. அமைதியாக வந்து நின்று வணக்கம் வைத்தவளை கண்டு அமராவதிக்கும் ஜெயராமனுக்கும் திருப்தியாக இருந்தது..

அவள் என்ன படிக்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்க, அவளும் கேட்டதற்கு பதில் என்னும் விதமாக அதை மட்டும் பேசினாள்..

ரவீந்தரின் அருகே அமர்ந்திருந்த சரயு, "ரிலாக்ஸ்டா பேசு மா!.. ஃபேமலி அன்ட் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுற மாதிரி இயல்பாயிரு!.. இல்லனா இது ஏதோ இன்டர்வ்யூ மாதிரி இருக்கும்!.." என்றாள் சிநேகப் புன்னகைடன்..

அதைக் கேட்ட ஜெயராமனும், "ஆமாம் மா!.. நீ என்ன நினைக்கிற னு தைரியமா வெளிப்படையா பேசு!.." என்றதும், நம்ம அம்மணிக்கு இது போதாதா!!!?..

உடனே நிமிர்ந்து பார்த்தவள், " நான் என்ன நினைக்கிறேன் னா அங்கிள்!.. உங்க ஃபேமலி ல எல்லாரும் நல்லா படிச்சவங்க மாதிரி தான் தெரியறீங்க!.." என்று விட்டு,

சிறிது இடைவெளிக்குப் பிறகு, "இப்படி இருக்கும்போது ஒரு டிகிரி கூட முழுசா முடிக்காத பொண்ணை எப்படி பார்க்க வந்தீங்க?!.." என

தனது மனதில் பட்டதை வெளிப்படையாக அவள் கேட்கவும், அவர் திகைக்க, சுதர்சனம் அவளது பேச்சில் கொதிநிலை கூடிப் போய் அமர்ந்திருந்தார்..

ருத்ரதேவ் அவளது பேச்சில் அவளை கூர்மையாக பார்க்க, ரவீந்தர் தான், "நல்ல கேள்வி தான் மா!.. ஆனா உன்னோட படிப்பு முடிஞ்சதும் தான் இவனுக்கு கல்யாணம் கட்டி வைக்கப் போகுது!.."என தன் தம்பியை பார்த்து சிரித்தவன்,

"இவனுக்கும் ஒரு ப்ராஜெக்ட் விசயமா அப்ராட் போக வேண்டி இருக்கு!.. அதனால பொறுமையா தான் நடக்கும்!.. இப்ப ஜஸ்ட் ஒரு அறிமுகம் மாதிரி தான் வந்தோம்!.. "

"ஏன் உங்க வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் வந்தா நீங்க பேச மாட்டீங்களா!?.." என பேச்சில் மடக்கவும், அவளால் அதற்குமேல் ஒன்னும் கேட்க முடியவில்லை..

"தப்பா நினைச்சுக்காதீங்க!.. அவ கொஞ்சம் வாய்துடுக்கு!.. அதான் இப்படி பேசிட்டா!!.. " என அவசரமாக மன்னிப்பு வேண்டிய சரஸ்வதி, மகளை, 'ஏன்டா?!' எனும் விதமாக பார்த்திருத்தார்..

"பரவால்ல ங்க!!. இதுல என்ன இருக்கு!..என் பெரிய மருமகளும் அப்படித்தான்!.. மனசுல என்ன தோணுதோ அதை பட்டுபட்டென பேசிடுவா!..அவ நினைக்கிறதை தான் செய்வா!.." என்று

ஒரு மாதிரி சிரிப்புடன் கூறிய அமராவதியின் பேச்சில் இருந்த குத்தலை யார் உணர்ந்தார்களோ இல்லையோ ஆனால் சரஸ்வதிக்கு தெளிவாக புரிந்தது.. சரயுவும் தனது மாமியாரை திரும்பி யோசனையுடன் பார்த்தாள்..

அவர்களின் பார்வையை உணர்ந்த அமராவதி உடனே பேச்சை மாற்றுவதற்காக, " உங்களுக்கு ஓகே னா அப்புறம் நாம பேச வேண்டிய மத்த விசயங்களை எல்லாம் பேசிடலாமே!.." என்று ஆரம்பித்தார்..

பெண் வீட்டார் புரியாமல் பார்த்திருக்க, நதியா மட்டும் தனது முதல் அஸ்திரம் தான் நமத்துப் போனது இப்போது தனக்கு ஏதோ வாய்ப்பு வரப் போவதாக ஆவலோடு பார்த்திருந்தாள்..

"அது ஒன்னும் பெருசா இல்லங்க!.. உங்க பொண்ணுக்கு என்ன பண்ணனும்..எவ்ளோ பண்ணனும் னு உங்களுக்கே தெரியும்!.." எனக் கூறிவிட்டு அவர் அசட்டுச் சிரிப்பு சிரிக்கவும், சுதர்சனமும், அரவிந்தும் அமைதியாக பார்த்திருக்க..

அமராவதியே தொடர்ந்தவள், "ஆனா எங்க குடும்பத்து வழக்கம் னு ஒன்னு இருக்கு!.. எப்படியும் நீங்களே நல்லா தான் செய்வீங்க!.. இருந்தாலும் எங்க வழக்கத்தை நானும் சொல்லனும்ல.."

"அது வந்து.. பொண்ணுக்கு குறைஞ்சது ஒரு நூறு பவுனாவது போடனும்!.. அப்றம் உங்களால முடிஞ்சா கல்யாண செலவும் பார்த்துடுங்க!!.." என சிரிப்போடே கேட்க, சுதர்சனம் திகைத்தார்..

'வ்வாரே வா!!!.. நல்ல சான்ஸ் டி நதி!.. புகுந்து வெளையாடு!.. ' என்று மனதிற்குள் குதூகளித்து விட்டு,சில நொடிகள் கழித்து, "ஏன் அங்கிள் நான் ஒன்னு கேட்கலாமா?!.." என்றாள் நிதானமாக..

"கேளுமா!.. அதான் தயங்காம பேசு னு தானே சொன்னோம்!.." என்றார் ஜெயராமன்..

"உங்க வீட்ல மிக்ஸி..கிரைண்டர்.. வாஷிங் மெஷின் இதெல்லாம் இருக்கா அங்கிள்?!.. நல்லா வேலை செய்யுதா?!.." எனக் கேட்கவும் அனைவரும் புரியாமல் பார்க்க,

அமராவதி சட்டென, "அதெல்லாம் இருக்கு மா!.. இப்பவரை நல்லா தான் வேலை செய்துட்டு இருக்கு!.. அப்படியே ரிப்பேர் ஆனாலும் புதுசு வாங்கிக்கலாம்!.. நீ அதுக்காக கவலைப்படாதே!.." என சிரிப்புடன் கூறினாள்..

ஒரு ஏளனப்புன்னகை செய்த நதியா, "ஓஓ!!.. அப்படியா ஆன்ட்டி!!?.. புதுசு வாங்கும் போது பணம் 'கொடுத்து' தானே வாங்குவீங்க!!?.." என அந்த 'கொடுத்து' என்ற வார்த்தையில் அழுத்தி, ஒரு மாதிரி கேட்டாள்..

அவளது கேள்வி வந்ததுமே, அவள் எதை கேட்கப் போகிறாள் என்பது சரஸ்வதிக்கு புரிந்துவிட, அதை உணர்ந்தவர் அவளை தடுப்பதற்காக, "நதியா!!.." என்று அழைத்து நிறுத்த பார்த்தார்..

ஆனால் அவளோ," இருங்க ம்மா!.. அவங்க பதில் சொல்லட்டும்!!.." என அவரை கையமர்த்திவிட்டு, திரும்பி பதிலுக்காக இவர்களை பார்த்தாள்..

அவளது கேள்விக்கு அமராவதி அவளை புரியாமல் பார்த்துக் கொண்டு, 'ஆம்!' என்று பதில் அளிக்க, " உங்க வீட்ல வேலை செய்யற பொருள்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கற நீங்க!.." என இடைவெளி விட்டவள்,

"உங்க வீட்டுக்கு வந்து.. உங்க வம்சத்தையும் விருத்தி செய்து.. தன்னோட வாழ்நாள் முழுக்க வாழ போற பொண்ணை மட்டும்.. எப்படி பணத்தையும் கேட்டு வாங்கிட்டு, பொண்ணையும் வாங்கிட்டு போறீங்க ஆன்ட்டி!!!?.."

"இந்த ட்டேக்டிக்ஸ் மட்டும் எனக்கு ரொம்ப நாளா புரியலை!!.. அதான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் ஆன்ட்டி." என முடித்ததும்,

அங்கே சில நிமிடங்கள் அமைதி மட்டுமே ஆட்கொள்ள, அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

அவர்கள் வரதட்சணை கேட்பது அதிகப்படியாக தெரியவும் சற்று குழப்பத்தில் இருந்ததால் சுதர்சனம் மகளது பேச்சை தடை செய்யாமல் இருந்தார்.

தங்கையை பற்றி அறிந்த அரவிந்த், வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டு, வாய்மீது கையை வைத்து மறைத்துக் கொண்டான்.

அவளது கேள்வியில் சற்று அவமானமாக உணர்ந்த அமராவதி ஜெயராமனை திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது,

"தென்!!!..." என அழுத்தமாக ஆரம்பித்த ருத்ரதேவ், "உங்க பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள். வேற ஒன்னும் வேணாம். உங்களுக்கு ஓகேனா மத்த விஷயத்தை பேசிக்கோங்க." நிதானமாக கூறியவன்,

"எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு!.. அவாய்ட் பண்ண முடியல அங்கிள்!.. ஸோ!!.. நான் இப்ப கிளம்பி ஆகனும்!.." என்றவன்,

அவளை விசித்திர பார்வையோடு பார்த்துக் கொண்டு, முதல் முறையாக வாயை திறந்து பேசிவிட்டு, கிளம்ப எத்தனித்தான்.

அவனது பேச்சில் அதிருப்தியான அமராவதி,"ருத்ரா!!!.. " என சத்தமாக அழைத்ததும், அதுவரை அவனது பேரை கூட அறிந்து கொள்ளாமல்,

அங்கே இப்படி ஒருவன் அமர்ந்து இருந்ததையும் கவனியாமல் இருந்த நதியா, அந்த அழைப்பில் அதிர்ச்சியாகி அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top