Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 112
- Thread Author
- #1
கனவு - 6
மறுநாள் பொழுது யாருக்கும் காத்திருக்காமல் விடிய, எந்த கலவரமும் இல்லாமல் பொறுமையாய் கிளம்பிய நதியா அமைதியாக உணவு மேசையில் வந்து அமர்ந்தாள்..
சரஸ்வதி அனைவருக்கும் உணவை பரிமாறிக் கொண்டிருக்க, அப்போது சுதர்சனம், "இன்னைக்கும் நானே உன்ன காலேஜ்ல டிராப் பண்றேன்!.." என்று கூற, நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவள் தோள்களை குலுக்கிக் கொண்டு உண்ணுவதை தொடர்ந்தாள்..
எப்போதும் காலையில் ஏதோ ஒரு பஞ்சாயத்தை இழுத்துக் கொண்டிருக்கும் தங்கை இன்று அமைதியாய் உண்பதை அரவிந்தும் யோசனையாய் பார்த்திருந்தான்..
சுதர்சனத்துடன் காரில் பயணிக்கும் போது நதியா அவரை திரும்பி கூட பார்க்கவில்லை.. வெளியே தலையை திருப்பியவள் வேடிக்கை பார்த்துக்கொண்டே வர, கல்லூரி வந்ததும் அமைதியாக இறங்கி உள்ளே சென்றாள்..
அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் எதற்காக என்பதை மட்டும் மாற்றி புரிந்து கொண்டார்..
இப்போதே அவளுக்கு திருமணம் செய்ய நினைக்கும் தந்தையின் செயலை எண்ணி அவள் கோபமாக இருக்க,
அவரோ அவள் காதல் பற்றி அவருக்கு தெரிந்ததால் தான் அவ்வாறு இருப்பதாக எண்ணி வேறு விதமாக புரிந்து கொண்டார்..
அவள் இறங்கி சென்ற பின்னும் அவரது கார் நகராமல் இருப்பதை கண்டு தலையசைத்து சலித்தவள், அமைதியாக வகுப்பிற்கு சென்று அமர்ந்து கொண்டாள்..
அப்போது அவளை நோக்கி வேகமாக வந்த யமுனா, "என்ன மச்சி நீ இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க?!.. இன்னிக்கி அந்த பில்லக்கா பசங்கள ஒரு வழி பண்ணலாம் னுட்டு நீ வருவ னு நான் அங்கேயே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!.." என்றிட,
"ப்ளீஸ் யம்மு!.. என்னை கொஞ்சம் தனியா விடு!.." என்றவளை வித்தியாசமாக பார்த்தவள், "எதாவது பிரச்சனையா நதியா?!.." எனக் கேட்டாள்..
ஏற்கனவே இவளுடன் அதிகமாக சேராதே என்று சபர்மதி எச்சரித்து இருந்ததும், அன்று இவளோடு சேர்ந்து ராகிங் செய்ததால் தான் இவ்வளவு தூரம் பிரச்சனை நடந்ததையும் எண்ணிய நதியா, "நத்திங்!..ஐ நீட் சம் ப்ரைவஸி!.." என்றாள்..
யமுனாவும், "என்னமோ போ!!!.. நீ சரியே இல்ல மச்சி!.. சரி விடு.. அப்புறமா பேசிக்கலாம்!.." என்று விட்டு தனது இடத்திற்கு சென்றிட, நதியா தனது புத்தகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
அன்று வந்ததில் இருந்து அமைதியாகவே இருந்த நதியாவை அவளது அருகே அமர்ந்திருந்த சபர்மதி கவனித்தவள் ,
வகுப்புகளின் இடைவேளையின் போது, "என்ன இன்னிக்கு வானம் ஒரே மேகமூட்டமா இருக்கு!.." என்றிட, புத்தகத்தினுள் தலையை விட்டிருந்த நதியா ஜன்னலின் வெளியே எட்டிப் பார்த்தாள்..
பின்பு சபர்மதியை திரும்பிப் பார்த்து, "பங்குனி வெயில் பல்லை காட்டிட்டு அடிக்குது!.. உனக்கு வானம் மேகமூட்டமா இருக்கா?!.." என முறைத்துக் கொண்டே கேட்டாள்..
"ஹப்பா!!.. உனக்கு பேச்சு வந்துடுச்சா!!!?.. நான் கூட மிலிட்டரி நேத்து கொடுத்த டோஸ் ல ஊமை ஆகிட்டியோ னு நினைச்சேன்!.." எனக் கலாய்த்தாள் சபர்மதி..
மீண்டும் அவளை முறைத்த நதியா,"நீ பேசாதே டி!.. உன்னோட கருநாக்கால தான் இப்படி நடந்துச்சு!.." என்று அவளை குற்றஞ்சாட்ட விழித்தாள் மதி..
"நான் என்ன டி பண்ணுனேன்!!!?.. நானா அந்த ஆஃப்பாயில் ராகுலை உன்கிட்ட ரோஸ் கொடுக்க சொன்னேன்!.. அப்படி தான் அந்த வெளங்காதவன் நீட்டுனா.."
"அவனை எதாவது சொல்லி துரத்தி விடுறதை விட்டுட்டு 'ஆ'னு பார்த்துட்டு இரு னு நானா உங்கிட்ட சொன்னேன்!?..நீயே ஒரு ரோஸோமேனியா னு, எனக்கு தான் நல்லா தெரியுமே!.." எனக் கேட்டாள் சபர்மதி..
"நான் அதை சொல்லலை பைத்தியம்!.. நீ தானே நேத்து கல்யாணத்தை பற்றி பேசுன!.. அதான் அதே மாதிரி நடந்துடுச்சு!.." என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள் நதியா..
"என்ன சொல்ற நதி!!!?.... ஒரே நாள்ல கல்யாணமா?!.. ஹௌவ்வ்வ்வ்!!???..." அதிர்ச்சி அடைந்த சபர்மதியை முதுகிலேயே மொத்திய நதியா,"போடி போண்டாக்கோழி!!.." என்று விட்டு,
பின்னர் நேற்று நடந்த கூத்து அனைத்தையும் சொல்லிய நதியா சோகமாக அவளை பார்க்க, "பொண்ணு தானே டா பார்க்க வர்றதா சொல்றாங்க!.. அப்றம் என்ன?!.." என கூலாக கேட்டவளை கொலைவெறியுடன் முறைத்தாள்..
"டங்ஸன் ஆகாதீங்க மேடம்!.. அதான் நீ டிகிரி முடிச்ச அப்றம் தான் கல்யாணம் னு உன் நொண்ணன் பேசி பெரிய சாதனை செய்து இருக்காரே!.." என வாய்க்குள் அடக்கிய சிரிப்புடன் சபர்மதி கூற,
"கடுப்பேத்தாதே மதி!.. ஏற்கனவே நான் கொல காண்டு ல இருக்கேன்!.." என மிதமிஞ்சிய எரிச்சலில் நதியா சொன்னதும், தனது கேலியை கைவிட்ட சபர்மதி,
"விடு டா!.. அடுத்த மாசம் தானே வர்றதா சொல்லி இருக்காரு மிலிட்டரி!.. அதுவும் பொண்ணு பார்க்க தானே.. அதை மிஸ் பண்ணுனா கூட அப்றம் எத்தனை ப்ராஸஸ் இருக்கு!..பாத்துக்கலாம்!.."
"அப்படியே கல்யாணமே வச்சாலும் நமக்கு இன்னும் ஏழெட்டு மாசம் இருக்கே!.. அதுக்குள்ள வேற எதாவது ஐடியா பண்ணலாம்!.." என்று அவளுக்கு ஊக்கம் அளித்தவள்,
"எந்த பிரச்னை வந்தாலும் 'ஊஃப்'னு ஊதிட்டு அடுத்த வேலையை பார்க்கிற நதியா னு ஒருத்தி இருந்தாளே!.. அவளை எங்கே காணோம்!?!.." என தேடுவது போல பாவனை செய்ய, நதியா சிறிதாக புன்னகைத்தாள்..
"ம்ம்!!.. இப்ப எப்படி இருக்கு மூஞ்சி!!?.. சரி சரி.. டிஸாஸ்டர் டிராகன் வருது!.. மீதியை அப்றம் பேசிக்கலாம்!.. வருத்தப்படாத டா.."
" இது உனக்கு செட்டே ஆகல!..சியர் அப் கேர்ள்!!.." எனக் கூறிய தோழியின் கையில் அழுத்தம் கொடுத்து தன் உணர்வை வெளிபடுத்திய நதியா..,
அதன்பின் வகுப்புகளில் மூழ்கிப் போனவள், தோழியின் ஊக்கத்தால் சற்று மனம் தெளிந்து தன்னியல்பிற்கு திரும்பினாள்..
வீட்டிற்கு திரும்பியதும் மீண்டும் அந்த பிரச்சனை வந்து மண்டையில் அமர, அதை தட்டி விட்டு சற்று இயல்புக்கு வர முயன்றாலும் அதைப்பற்றிய சிந்தனை இன்றி அவளால் இருக்க முடியவில்லை..
அடுத்து வந்த நாட்களில், எப்போதும் எதாவது கிறுக்குதனம் செய்து கொண்டும் வீட்டில் சத்தத்தை உண்டு பண்ணும் தங்கை..
இப்போது எல்லாம் அமைதியோ அமைதியாக இருப்பதை உணர்ந்த அரவிந்த், அவனை கடந்து சென்ற நதியாவை, "பப்பிமா!!.." என அழைத்தான்..
சில வருடங்களுக்கு பிறகு தன் சகோதரனின் பிரத்யேக அழைப்பு, அவளை நிறுத்திட, "எதாவது பிரச்சனையா?!.." என அவன் வினவினான்..
"நீயா பேசுன?!!!.." என அவள் ஆச்சரியம் காட்டி கேட்கவும், அவன் ஆமோதிக்க, "உனக்கு பேசத் தெரியுமா?!.." என கண்கள் விரிய அவள் நக்கலாக கேட்டாள்..
அவளை முறைத்தவன், "விளையாடாதே நதியா!.. உனக்கு எதாவது பிரச்சனையா?!.." அவன் கேட்டது தான் தாமதம், அவள் பொங்கி விட்டாள்..
"உனக்கென்ன பா?!!.. நீ ஆசைப்பட்டதை படிச்சு முடிச்சுட்டு.. உனக்கு பிடிச்ச வேலைக்கு ஜாலியா போயிட்டு வந்துட்டு இருக்க!.. நீ ஆசைப்பட்டது எல்லாம் கிடைச்சுடுச்சு!.. அது மட்டுமில்ல.."
"நீ யாரையாவது லவ் பண்ணிட்டு வந்து நின்னா கூட உனக்கு உடனே கட்டி வைச்சுடுவாரு!.." என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் மனதின் வலி முகத்தில் சில நொடிகள் வந்ததை அவளால் உணர முடியவில்லை..
அவனது உணர்வை கவனியாமல், அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டு இருந்தாள்.."எனக்கு அப்படியா?!.. முழுசா படிப்பைக் கூட முடிக்க முடியல!.. உடனே இந்த கூட்டை விட்டு இன்னொரு கூட்டுல கொண்டு போய் அடைக்கப் போறாங்க!.."
"இந்த லட்சணத்துல அதை நினைச்சு நான் என்ன குத்தாட்டமா போட முடியும்!?.. கேட்குறாரு பாரு கேள்வி!!. பெரிய இவனாட்டம்!!.." என்று சலித்தவள் அங்கிருந்து நகர்ந்து விட,
'அதான் இவ டிகிரி முடிச்சு அப்றம் தான் மேரேஜ் வைக்கிறதா அப்பா சொன்னாரே!.. அப்றம் எதுக்கு இப்படி பொங்கிட்டு போறா?!..' என
மனதிற்குள் குழம்பியவன்,
' இந்த லூசு கிட்ட போய் கேட்டேன் பாரு!.. என்னை சொல்லனும்!..' என்று எண்ணி விட்டு தன்னுடைய வேலையை பார்க்கச் சென்றான்..
பெண் பார்க்கும் படலத்திற்கான நாள் நெருங்க நெருங்க, நதியாவிற்கு இனம் புரியாத கலக்கம் வந்து ஆட்கொண்டது..
சபர்மதியும் தன்னாலான மட்டும் அவளை தைரியப்படுத்தி, சில பல ஐடியாகளையும் அவளுக்கு சொல்லி கொடுத்தவள்.. ஒரு நாள் திடீரென,
"எனக்கொரு சந்தேகம் டி நதி!.. அதான் நீ படிப்பை முடிச்சதும் தானே மேரேஜ் னு சொல்றாங்க!.. இதுல உனக்கென்ன பிரச்சனை!?!.." என தெரிந்து கொள்வதற்காகக் கேட்டாள்..
"அது எப்படி சொல்ல னு தெரியல மதி!..படிப்பை முடிச்சுட்டு வீட்ல கொஞ்சநாள் அம்மா கூடவே இருந்து எந்த டென்ஸனும் இல்லாம என்சாய் பண்ணிட்டு.. அப்றம் நான் ஆசைப்பட்ட வேலைக்கு போயிட்டு.. "
"இதெல்லாம் இல்லாம உடனே இந்த கமிட்மென்ட் ல இப்பவே என்ட்ர் ஆகனுமா னு ஒரு மாதிரி பயமா இருக்கு!.." என தனக்கே தெளிவில்லாமல் கூறினாள்..
"அட பைத்தியம்!!.. இது தான் உன் பிரச்சனையா?!.. ஒருவேளை வர்ற ஆள் உன்னோட ட்ரீம் பாய் ஆ இருந்தா?!!!!..நீ ஆசைப்பட்டது நடக்கலாமே!.." என மதி கேட்கவும், நதியா யோசனையானாள்..
'ஒருவேளை அவளது எண்ணம் பலிக்காமல் எதிர்ப்பதமாக நடந்தால், அதற்கும் தோழியின் மனம் தயாராக இருக்க வேண்டுமே! ' என்ற எண்ணத்தில் பொதுவாகத் தான் கேட்டாள் சபர்மதி..
அவள் சொன்ன அர்த்தம் வேறு... இவள் புரிந்து கொண்ட விதம் வேறு..
நதியாவின் மனதில், தற்போது அடிக்கடி அவளது கனவில் வருபவன் நினைவிற்கு வர, அவனது முகம் துளி கூட நினைவில்லை.. இதில் வருபவன் அவன்தான் என்று எப்படி கணிப்பது?!! எனத் தோன்றியது..
**************
அவளை பெண் பார்க்க வரும் நாளும் வந்தது.. அன்று சமையலறையில் வெகு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த தாயை தேடி வந்த நதியா கடுப்பானாள்..
"என்ன சச்சும்மா இது?!.. நானே அவங்கள எப்படி ஓட வைக்கலாம் னு யோசிச்சிட்டு இருக்கேன்!.. நீங்க என்னடா னா பாய்ஞ்சு பாய்ஞ்சு பாயாசம் வச்சுட்டு இருக்கீங்க?!.. " என எரிச்சலுடன் கேட்டாள்..
"உங்கப்பாவோட ஆர்டர் டி!.. நான் என்ன பண்ணுவேன்!?.. அதான் நான் சொன்ன மாதிரி செய்யலாம் னு சொல்லி இருக்கேனே!.." என்று அவர் பாவமாக சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள் மகள்..
அந்த முற்பகல் வேளையில் பெற்றோர் மற்றும் சகோதரனோடு குடும்ப சகிதமாக வந்தவன்..
கண்களில் ஷேட்ஸ் அணிந்து.. கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்திருந்த தோரணையே.. அவர்களுக்கு ஜீஸ் கொடுக்க வந்த சரஸ்வதியை சற்று பீதியாக செய்தது..
அறைக்குள் சென்று மகளிடம், "என்னடி இந்த பையன் இவ்ளோ திமிரா உட்கார்ந்து இருக்கான்?!!!.. இவங்கிட்ட பேச முடியுமா னு தெரியலையே!!.." என கலக்கமாக கூறினார்.
அவர் அவனைப் பற்றி கூறிய விதத்தை வைத்தே, தனது அடுத்த திட்டத்தை தான் செயல்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள் நதியா.
அவர்களும் பரஸ்பர நலம் விசாரிப்புகள், வீட்டினர் அறிமுகப் படலம் மற்றும் நாட்டு நடப்புகள், பேசி முடித்து.. முக்கியமான விசயத்தை பேசத் துவங்கினர்.
அவர்கள் பேசியதும், 'ஆஹா!! ஆஹா! வழி வந்துவிட்டது!' என்று தனக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்ததாக நினைத்து மகிழ்ந்த நதியாவும் வேகமாக பேசிவிட, அதுவே அவளுக்கு ஆப்பாக அமைந்தது.