Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 109
- Thread Author
- #1
கனவு - 4
ரோஜாவை பார்த்து அதன் அழகில் லயித்துப் போன நதியாவை, அந்தக் குரல் இயல்புக்கு கொண்டு வர, குரல் வந்த திசையில் அவள் திரும்பி பார்க்க, அங்கே கோபமாக நின்றிருந்தாள் சபர்மதி..
நதியாவின் உயிர்தோழி.. ப்ரேக் இல்லாத லாரி போல் செல்லும் இவளது அட்டகாசத்தின் அணை.. அவளது இம்சைகளை ரசிப்பவள் தான்..
ஆனால் அது எல்லையை கடக்கும் முன் முகசுளிப்போடு கூடிய 'நதியா!..' என்ற அழைப்பு, அதற்கு அணை போடும்.., தோழியின் முகபாவனை கண்டே அவளது செயலை நிறுத்தி விடுவாள் நதியா..
அங்கே கோபப் பார்வையோடு நின்றிருந்த சபர்மதியின் கத்தலில் அதிர்ந்தவள், என்னவென்று புரியாமல் பார்த்து இருக்க, "என்னடி பண்ணிட்டு இருக்க?!.."என்று பல்லைக் கடித்துக் கொண்டு கோபம் தீராமல் கேட்டாள் சபர்மதி..
"மதி!!!.. நீ எப்போ வந்த?!.."என நதியா கேட்டதும் அவளை ஆன மட்டும் முறைத்தவள், "நான் வர்றது இருக்கட்டும்!.. என்ன இதெல்லாம்?!!.." என்று அவர்கள் இருவரையும் காட்டி கேட்கவும், "எது!!!?.." எனக் கேட்டு விழித்தாள் நதியா..
அவளது முகத்தை திருப்பிய சபர்மதி, ராகுலையும் அவனது கையில் இருந்த பூவையும் காட்டிட, "ஹேய் யார்ரா நீ?!.." என்று அவனிடமே நதியா கேட்கவும் அவன் விழித்தான்..
இவளிடம் கேட்பது வீணென்று நினைத்த சபர்மதி, அவனிடமே நேராக கேட்டாள்," யார் மேன் நீ?!.. எதுக்கு இப்ப அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்க?!.." என்று கேட்கவும்,
"எதேஏஏ ப்ரோபோஸா!!!!..அலோ!!.. அதெல்லாம் இல்ல ங்க.. சீனியர் தான் அவங்கள அடுத்து நான் பார்க்கும்போது இப்படி பண்ண சொன்னாங்க!.." என ராகுல் சொன்னதும் நதியாவை முறைத்தாள் சபர்மதி..
"நான் எதுவும் சொல்லல மதி!!!..இவன் ஏதோ ஒளர்றான்!.." என்று படபடப்பாக பதில் பேசிய தோழியை புரியாமல் அவள் பார்க்க,
உடனே ராகுல், "என்ன சீனியர் அன்னைக்கு நடந்ததை எல்லாம் மறந்துட்டீங்களா?!.." எனக் குழப்பமாக கேட்கவும், சபர்மதிக்கு தலை கிறுகிறுத்தது..
'இது ஒரு முழுலூசு னா.. புதுசா ஒரு அரைலூசு வேற வந்து கடுப்பேத்துதே!!' என மனதிற்குள் சலித்து கொண்டவள், "என்னடி நடக்குது இங்க??!!.." என நதியாவிடம் கேட்டாள்..
"நான் சொல்றேன் ங்க!.. அன்னைக்கு..... " என்று ஆரம்பித்த ராகுல் அவன் கல்லூரிக்கு வந்த முதல் நாள் இவளுடன் இன்னும் சிலரும் அமர்ந்து கொண்டு, ராகுலிடம் ராக்கிங் செய்ததையும்,
(அதுக்கு பேர் ராக்கிங் னு அந்த பைத்தியம் தான் நினைக்குதுனா, இந்த பைத்தியமும் அப்படி தான் நினைக்குது போல!!..)
அதன் பிறகு இவளை சமாதானம் செய்ய இவ்வாறு செய்ய வேண்டும் என்றும் பேசி முடித்ததாக நடந்த அனைத்தையும் ராகுல் சபர்மதிக்கு விளக்கிக் கூறவும், தலையிலடித்துக் கொண்டாள் மதி..
ராகுல் சொன்னதை புதிதாய் கேட்பவள் போல் கேட்ட நதியாவும், "அப்படியா டா சொன்னேன்!!!?.." என்று யோசனையோடு கேட்கவும், சபர்மதி அவளை முறைத்து விட்டு,
"நீ போ ராகுல்!.. இனிமே இப்படி பண்ணாதே!.." என எச்சரிக்கை விடுத்து அவனை அனுப்பிவிட்டு இவளிடம் திரும்பியவளுக்கு, இது யாரால் இழுத்து விடப்பட்டது என புரிந்து போனது..
"உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது நதி, அந்த யமுனா கூட சேர்ந்து இந்த மாதிரி குரங்கு சேட்டை பண்ணாதே னுட்டு..ஒரு நாள் நான் வரல, அதுக்குள்ள என்ன கூத்து பண்ணி வச்சிருக்க பார்த்தியா?!.." என சலித்தவள்..
"நீ செய்த இந்த வேலையால, இனி உனக்கு உடனே கல்யாணம் நடந்தா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல!!.." என்று சபர்மதி முடிக்கவும், நதியா புரியாமல் விழித்தாள்..
"இந்த விசயத்துக்கும் என்னோட கல்யாணத்துக்கும் என்னடி சம்பந்தம்?!!!..எதுக்கு லூசு மாதிரி ஒளர்ற?!.." என்று சிரிப்புடன் கேட்ட நதியாவை முறைத்தவள்,
"ஆமா பின்னே!!.. தன்னோட பொண்ணுக்கு ஒருத்தன் பப்ளிக்கா இப்படி ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் பண்ணினா, எந்த அப்பா தான் அடுத்து அவளை படிக்க விடுவாங்க!.. உடனே கல்யாணம்தான்!!.." என்று சொல்லவும்,
அதிர்ச்சியில் கண்கள் விரிய, "என்னாதே!!!!?.. அப்பாவா!!!??.. என்ன மதி சொல்ற??!!. அவர் எப்போ பார்த்தாரு?!.. " என்று பீதியோடு நதியா கேட்டாள்..
நதியா காரிலிருந்து இறங்கி சென்றதும் வண்டியை எடுத்த சுதர்சனம், சில நிமிடங்களில் காருக்குள் விழுந்திருந்த அவளது பென்ட்ரைவ் கண்டு அவளிடம் தருவதற்காக மீண்டும் கல்லூரியை நோக்கி வந்தார்..
கல்லூரிக்குள் நுழையும் போதே சபர்மதியை கண்டவர், அவளை அருகே அழைத்து நலம் விசாரித்த பிறகு, "நதியாவை இன்னிக்கு நான் தான் டிராப் பண்ணேன் மா!.. கார்ல இந்த பென்ட்ரைவ் மிஸ் பண்ணிட்டா போல.. அவகிட்ட கொடுத்துடுறியா மா?!.." எனக் கேட்டார்..
"நல்லா இருக்கேன் அங்கிள்!!.. ஓஓ.. அப்படியா?!..ஓகே அங்கிள் நான் கொடுத்துடுறேன்!!.." என கூறி அவரது கையில் இருந்த பென்ட்ரைவ்வை சபர்மதி வாங்குவதற்காக கையை நீட்டவும்,
அவரது பார்வை எங்கோ இருக்க, அதில் கொஞ்சம் கொஞ்சமாக உஷ்ணம் ஏறியதை கண்டவள், அவரது பார்வை போன திசையில் தானும் திரும்பிப் பார்த்தாள்..
தனது மகள் முன்னே ஒருவன் ரோஜாவை நீட்டிக் கொண்டு இருப்பதையும், அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் மயங்கி நிற்பதையும் கண்டவர்,
வேகமாக அவரது கையிலிருந்த நதியாவின் பென்ட்ரைவ்வை சபர்மதியிடம் கொடுத்து விட்டு, அவளிடம் எதுவும் சொல்லாமல் திரும்பிச் சென்றார்..
அவர் சென்றதும் அதே காட்சியை கண்ட சபர்மதி, அவர்களருகே வந்தது முதல் நடந்த அனைத்தையும் கூறி முடிக்கவும், நதியாவிற்கு மயக்கம் வருவது போலானது..
மயங்குவது போல் அவள் பாவனை செய்யவும், "நடிக்காதே டி!!.. இன்னிக்கு ப்ரஸன்டேஷன் இருக்கு.. ஒழுங்கு மரியாதையா க்ளாஸ் க்கு வா!.. இந்த பிரச்சனை பற்றி அப்றம் பேசிக்கலாம்!.." என்று அவளை இழுத்துப் போக முயன்றாள்..
வகுப்பில் நுழைந்து பாடங்களில் மூழ்கியதும் நதியாவின் மனதில் சற்றுமுன் நடந்த அனைத்தும் சிறிது நேரம் தள்ளி வைக்கப்பட்டது..
அவள் எப்போதுமே அப்படித்தான்!.. அவளுக்கு படிக்கிற போது ஆழ்ந்து படித்தாலே போதும்!..பிறகு ஆல்டைம் அட்டகாசம் தான்!..
அவளது பப்ளிக் எக்ஸாம் போது
அடுத்த வீட்டு மரத்தில் தொங்கும் மாங்காய் அடிக்கிறேன் என்று போவோர் வருவோர் மண்டையை பதம் பார்ப்பது,
சமையல் செய்கிறேன் என அடுப்படியை அலங்கோலம் செய்வது என்றிருந்தவளை கண்ட சுதர்சனம் 'இது தேறாத கேஸு!' என்று நினைத்தார்..
ஆனால் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்களுக்குள் அவளது தேர்ச்சி வரவும், வாயை பிளந்தார்.. இருப்பினும் அவளை கண்டிப்பதை நிறுத்தவில்லை..
ப்ரஸன்டேஷன் முடிந்த பிறகு, "அவர் ஏதாவது சொன்னாரா டி மதி?!!!. " என நதியா திடீரென கேட்கவும், முதலில் விழித்த சபர்மதி சிறு யோசனைக்கு பின்னர், "ம்ம்!!!..குட் ஜாப் னு சொன்னார்ல.. நீயும் தானே கேட்ட!!?.." என்றாள்..
"ம்ப்ச்!!.. நான் இதை கேக்கல டி பைத்தியம்!.. காலைல அப்பா பார்த்தாருன்னு சொன்ன ல அதைப்பற்றி ஏதாவது உன்கிட்ட சொன்னாரா?!.." தான் கேட்க வந்ததை அவள் தெளிவாக கேட்கவும்,
"அவர் எதுவும் பேசல டா நதி!.. ஆனா கோபமா கிளம்பிப் போனாரு!.. அனேகமா வீட்டுக்கு போய் உனக்கு நோம்பி கொண்டாடுவார் னு நினைக்கிறேன்!.." என நமட்டுச் சிரிப்புடன் பதிலளித்தாள் மதி..
அவள் கூறியதில் சற்று பீதியான நதியா, 'ஹ!!.. எவ்வளவோ பார்த்துட்டோம்!.. இதை சமாளிக்க மாட்டியா நதி நீ!!?..என்ன இன்னிக்கு வெயிலோட கூடிய புயல் மழை அடிக்கும்!.. அவ்ளோ தானே!!..' என தன்னைத்தானே பூஸ்ட் அப் செய்து கொண்டு இயல்பானாள்..
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த தந்தையை கவனிக்காமல், "ம்மீ!!!.. ரொம்ப பசிக்குது!.. சாப்பிட ஏதாவது இருக்கா?!.." என்று கேட்டுக் கொண்டு நுழைந்தாள் நதியா..
தனது கைபேசியை பார்த்துக் கொண்டிருந்த சுதர்சனம் மகள் நுழைந்ததுமே அவளை பார்க்க, அவளோ அப்படி ஒரு ஜீவன் அமர்ந்திருப்பதையே உணராமல் நேராக சமையலறை நோக்கி வேகமாக சென்றாள்..
"சச்சு மாதா!!.. சாப்பாடு சாப்பாடு னு வயிறு கூப்பாடு போடுது சச்சும்மா!.. ப்ளீஸ் அதுக்கு ஏதாவது கொடுங்க னு நான் கேட்டுட்டே இருக்கேன்!.."
"அதுக்கு பதில் கூட சொல்லாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?!.." என்று வேலையாக இருந்த சரஸ்வதியை கேட்டவளை திரும்பி முறைத்தார் அவர்..
"என்னம்மா?!.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்ளோஓஓ பாசமா பாத்துட்டு இருக்கீங்க?!.." என்று அவரது முகத்தை கைகளில் தாங்கி கேட்ட மகளிடம், "ஹால் ல தான் உங்க அப்பா உட்கார்ந்து இருக்காரு!.." என்று பதில் அளித்தார் அவர்..
"என்..னஅஅஅ!!!!..மிலிட்டரி வந்துட்டாரா?!.. மழை ஏதாவது பெய்யுதா??!!.." என்று ஜன்னல் வழியாக வெளியே அவள் எட்டிப் பார்க்க,
"வந்த உடனேயே நீ எப்ப வருவ னுட்டு தான் கேட்டார்!!.." என சரஸ்வதி தகவல் போல் முறைப்புடன் சொன்னவர்,"என்னடி கூத்து பண்ணி வச்ச?!.." எனக் கூர்மையான பார்வையுடன் கேட்டார்..
"அது வந்து..... " என இழுத்தவள் காலையில் அவளை சுதர்சனம் கல்லூரியில் இறக்கி விட்டு சென்ற பின், ராகுல் அவளிடம் ரோஜாவை நீட்டியதையும், அதை அவர் பார்த்ததாகவும் நடந்ததை கூறியவள்,
வேகமாக, "நான் ஒன்னும் பண்ணலை ம்மா!.. அந்த பைத்தியம் பண்ண வேலையால தான்!.." என பாவம் போல சொன்ன மகளை பார்த்த சரஸ்வதி,
"என்னடா மா நீ?!.. இப்படி பண்ணி வச்சிருக்க!.. ஏற்கனவே யாரோ சொன்னாங்க னு இப்பவே உனக்கு கல்யாணத்தை பண்ணனும்னு குதிச்சிட்டு இருந்தாரு!.."
"நான் தான் 'அவ ஒரு டிகிரியாவது முழுசா முடிக்கட்டும்' னு பேசி வச்சு ஓரளவுக்கு சமாளிச்சு இருந்தேன்!.. இப்போ அவர் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கார் னு தெரியலையே!?.." என தாய் சொல்ல,
"என்னாது!!.. எனக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாரா?!.. என்னம்மா இது?!.. எனக்கு அப்படி என்ன வயசு ஆயிடுச்சு னு இப்பவே கல்யாணம் முடிக்கணுமாம்!.." என நதியா எகிறினாள்..
"கத்தாதே டா!.. சரி.. இந்தா டீயும் ஸ்நாக்ஸ் ம் கொண்டு போய் அவருக்கு கொடு!.." என்று தட்டை நீட்டியவர், 'அவள் அவரிடமே பேசி தெரிந்து கொள்ளட்டும்' என மகளிடம் கொடுத்து அனுப்பினார்..
நிலக்கரி ரயில் இன்ஜின் போல புகை விட்ட நதியா, அவரது கையில் இருந்த தட்டை வெடுக்கென்று வாங்கிக் கொண்டு தந்தையை நோக்கி கோபமாகச் சென்றாள்..
சமையலறையில் இருந்து வெளியே வந்தவள் தந்தையை கண்டதும் கோபம் அனைத்தும் சர்ரென்று வடிந்து போக பவ்யமாக அவரிடம், "இந்தாங்க ப்பா டீ!.." என தட்டை நீட்டினாள்..
அவர் எடுத்துக் கொண்டதும் அங்கிருந்து செல்ல முனைந்த நதியாவை, "நதியா!.. ஒரு நிமிஷம் உட்காரு!.. உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்!.." என்றார் சுதர்சனம்..
தந்தை சொன்னதும் அமைதியாக நதியா அமர்ந்து விட, உள்ளே இருந்த சரஸ்வதி நடப்பதை அறிய சமையலறை வாயிலில் நின்று கொண்டு இருந்தார்..
"நெக்ஸ்ட் மன்த் 20ஆம் தேதி உன்னை பொண்ணு பார்க்க வராங்க. காலேஜ்ல லீவுக்கு எதாவது முன்கூட்டியே சொல்லனும் னா இப்பவே சொல்லிடு." என்ற தகவலை சுதர்சனம் சொன்னதும் தாயும் மகளும் ஒருசேர அதிர்ந்தனர்.