Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
கனவு - 23
"வந்துட்டே தான் ம்மா இருக்கேன்!.. அதுக்குள்ள நீங்க வேற உங்க அர்ச்சனையை ஆரம்பிச்சுடாதீங்க!.. ஏற்கனவே தூரத்து வெள்ளை புள்ளி மாதிரி அங்கங்கே ஒரே ஒரு ஸ்ட்ரீட் லேம்ப் தான் எரியுது!.."
"அந்த லைட் டும் மினுக்கிட்டு எரியுது.. நான் வேற ஆளே இல்லாத ரோட்ல வந்துட்டு இருக்கேன்!.. எதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடுச்சு னா!!!?.." என்று பயந்தது போல ஈஸ்வர் கூறவும், சிரித்தார் அவனது தாய் கங்கா..
" ஏன்டா டேய்!!.. ஒரு போலீஸ்காரன் மாதிரி பேசு டா மகனே!.. என்ன நடந்துடும் னு இப்படி பயந்து நடுங்குறீங்க ஸாரே!!?.." என்று கிண்டலுடன் கேட்டார் அவர்..
" போலீஸ் னா பேய் பிடிக்காதா!?.. என்ன கேங்ஸ் பேசுறீங்க!?.. அதுவும் நான் வேற கன்...னிப் பையன்.. மகன் மேல அவ்ளோ தான் உங்க பாசமா!?.." என நாடகத்தனமா அவன் கேட்க, "போடா போக்கிரி!!.." சிரிப்புடன் அவர் திட்டினார்..
" எல்லாம் உங்கனால தான்!.. நீங்க தானே, 'அமைதியா.. நல்ல காற்றோட்டமா.. கிராமத்து வீடு இருந்தா தான் மட்டும் சொல்லு உங்கூட வந்து இருப்பேன்'னுட்டு சொன்னீங்க!.."
"அதான் ட்யூட்டி முடிஞ்சு பார்க்கலாம்னு வந்தா.. இங்க யாரும் வீடு கொடுக்க தயாரா இல்ல.. அப்படியே ஒரு சில வீடு இருந்தாலும் இங்க வெளக்கு வைச்ச அப்றம் வீட்டை காட்ட மாட்டாங்களாம்!.." என சலிப்புடன் கூறினார் மகன்..
அந்த ஊருக்கு ஒரு வாரம் முன்பு தான் பணி நியமனம் செய்யப்பட்டு வந்த ஈஷ்வர், தனது தாயையும் தன்னுடன் வைத்துக் கொள்ள எண்ணி தாயை அழைக்க..
ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிக்க எண்ணிய கங்கா சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அவர் சொன்னது போல வீட்டை தேடுகிறான்.. ஈஷ்வரின் குடும்பம் என்பது அவனும் அவனது தாய் கங்கா மட்டும் தான்!..
அவனது தந்தை அவனுக்கு விவரம் புரியாத வயதிலேயே இறந்து விட, தனி ஒரு மனுஷியாக.. தாயாக தந்தையாக அவனை செதுக்கியது கங்கா தான்..
தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அநீதியையும் சுட்டிக்காட்டி அதை களைய தன்னால் ஆன சிறிதளவேனும் முயற்சி செய்ய வேண்டும் என்று அவனது மனதில் சிறு வயதில் இருந்தே உருவேற்றிட..
அதுவே படிப்பு முடிந்ததும் அரசு சீருடை பணியாளர் தேர்வு எழுதி அவனை சப்-இன்ஸ்பெக்டர் ஆக செய்தது.. அவனது கூர்மையான அறிவும், திறமையும் பதவி உயர்வை பெறச் செய்தது..
"ஓவரா சலிச்சுக்காதே டா பையா!.. நான் வந்தே ஆகனும் னு அடம்பிடிச்சது நீ தானே!.. அப்போ அதனால என்ன பிரச்னை வந்தாலும் நீ தானே ஃபேஸ் பண்ண வேணும்!.." என்று நமட்டுச் சிரிப்புடன் கூறினார் தாய்..
"ஆமா ஆமா.. தாயே!.. நான் தான் சொன்னேன்... அதுக்... " என தொடங்கியவன்,அங்கு நின்ற வண்டியை கண்டு, " ம்மா!.. நான் அப்புறமா கூப்பிட்றேன்!.." என்று விட்டு அலைபேசியில் அழைப்பை துண்டித்தான்..
அங்கே ஒழுங்கில்லாமல் நிறுத்தப்பட்ட வண்டியை கண்டு சந்தேகம் கொண்டவன் போலீஸ் மூளை யோசிக்க, உடனே அருகில் யாரும் இருக்கிறார்களா என்று தேடினான்..
அப்படி சென்று தேடும் போது கேட்ட முனகல் சத்தத்தை தொடர்ந்து சண்முகத்தை கண்டறிந்தவன், அவர் யார் என்று அறிந்து கொள்ள அவரைச் சுற்றி ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடும் போது,
கையில் அகப்பட்ட அவரது அலைபேசியை எடுத்துக்கொண்டு அவரையும் மருத்துவமனையில் சேர்த்தவன், அதிலிருந்து அவரது குடும்பத்து எண்ணிற்கு அழைத்துச் சொன்னான்..
இவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராத சண்முகத்தின் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு அந்த இரவு வேளையிலும் மருத்துவமனைக்கு வந்து சேர,
"என்ற ராசா!!!.." என ஓலமிட்டு கொண்டு வந்த கோதாவரியையும் காவேரியையும் கண்டவன், 'சரியான நேரத்தில் சேர்த்ததால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை!' என்று எடுத்துரைத்து அவர்களை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றானது அவனுக்கு..
அவர்களது அழுகையை சமாதானம் செய்தவன், அப்போது தான் மூக்கை உறிஞ்சிக் கொண்டு அழுத சிந்துவை கண்டான்..
அருவி போல் அவளது அழுகை தொடர, "ச்சே!!.. இத்தனை வருசம் இது தெரியாம போச்சே!!.." என்று சீரியஸாக சொன்னதும், அழுகையை நிறுத்தி அவனை புரியாமல் பார்த்தாள் அவள்..
"இல்ல.. அங்கங்கே தண்ணி பஞ்சம் னு எல்லாரும் கஷ்டப்படுறாங்க!.. உங்கிட்ட தான் அன்லிமிடட்ஆ தண்ணி இருக்கே!.. அதான் நிக்காம வடியுது!.."
"உன்னை கூட்டிட்டு போய் ஒவ்வொரு ஊர்ல இருக்கற தண்ணீர் பஞ்சத்தையும் தீர்த்து இருக்கலாம் போலயே!.." என சொல்லி முடிக்கவும், அழுகையை நிறுத்தி முதலில் முறைத்தாள் அவள்..
" அட!.. என்னாச்சு!?.. அதுக்குள்ள மோட்டார் ஆஃப் பண்ணிட்டியா!?.." என்று கேட்டவன், "பார்த்தா தைரியமான பொண்ணு மாதிரி இருக்க.. "
"பெரியவங்க அங்கே அழும்போது அவங்களுக்கு நீ தானே தைரியம் சொல்லனும்!.. அதைவிட்டுட்டு நீயும் இப்படி அழுதிட்டு இருந்தா எப்படி மா!?.." என அறிவுரைத்தான்..
அவன் சொன்னதில் ரோஷம் வரப்பெற்றவள், தன் கண்களை துடைத்து விட்டு அழுகையை நிறுத்திவிட்டு, தனது தாயுடனும், பாட்டியுடனும் ஆதரவாக கரம் பற்றி நிற்க, 'குட் கேர்ள்!' என்று சைகை செய்து பாராட்டினான் ஈஸ்வர்..
இவர்களை சரிசெய்த அதேவேளையில் காவல் நிலையத்திற்கு அழைத்து, செய்ய வேண்டிய அனைத்தையும் உத்தரவு பிறப்பித்தவன், சிந்து தைரியமாக நிற்பதை கண்டு அங்கிருந்து கிளம்பினான்..
மறுநாளும் அவரைக் காண வந்த ஈஸ்வர், அவரது நலம் விசாரித்து விட்டு, நடந்த நிகழ்வைப் பற்றியும் கேட்டவன்.. மேலும் சில விசயங்களை கேட்டு அறிந்தான்..
தனது பணிகளுக்கு இடையே சண்முகம் கூறியதைப் பற்றியும் விசாரித்து, மனோஜ் தான் அவரை அடிக்க ஆட்கள் அனுப்பியது என்பதை கண்டறிந்தான்..
அதைக் கேட்டு சண்முகம் அதிர்ச்சி அடைய, "என்ன தம்பி இது!?.. குத்தகை பணம் கொடுக்காம ஏமாத்துனது அவங்க.. என்ற இடத்தை நான் வாங்குனதுக்கு என்னை கொலை பண்ண பார்த்தானுவளே!!.." என்று ஆதங்கப்பட்டார்..
சண்முகம் அவர்கள் மீது கேஸ் கொடுக்க, அவரை கொலை செய்ய முயன்றதாக மனோஜ் அன்ட் கோ மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்து நல்ல கவனிப்பு கொடுத்தான் ஈஸ்வர்..
ஈஸ்வர் அவனது தாயை அழைத்து வர, அங்கு வீட்டை தேடி வந்த போது தான் சண்முகத்தை பார்க்க நேர்ந்தது என்பதை அறிந்த சண்முகம்,
தங்களது தோட்டத்து வீட்டில் அவர்களை தங்க சொன்னதற்கு அவன் மறுக்கவும், அங்கேயே தங்க வற்புறுத்தி குடியேறச் செய்தார்..
மகன் இல்லாத சண்முகம் தங்கை மகனை தன் மகனாக நினைத்திருக்க, அவனும் விட்டுச் சென்றதில் மன வருத்தத்தில் இருந்த அவருக்கு,
அரவிந்தன் பெரியவனாகி இப்படி தான் இருப்பான் என்ற நினைப்பில் அவனது வயதொத்த ஈஸ்வரை கண்டதும் அதே பாசப் பிணைப்பு ஏற்பட, அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லுமாறு ஈஸ்வரிடம் அன்புக் கட்டளை இட்டார்..
ஈஸ்வரும் அடிக்கடி அவனது தாயுடன் வந்து சென்றதில் அந்த குடும்பமே அவனுக்கு உறவாகிப் போனது, அதனால் அந்த குடும்பத்தின் ஓர் அங்கம் ஆகினர் ஈஸ்வரும் அவனது தாயும்..
நடந்து முடிந்ததை சிந்து சொல்லி முடிக்கவும், "பரவால்லயே!!.. அவ்ளோ பெரிய ஆபிஸரா இருந்தும் எந்த பந்தாவும் இல்லாம இயல்பா பேசிட்டு போகுது அந்த பையன்!!.." என்று சரஸ்வதி ஆச்சர்யமாக சொன்னார்..
சரஸ்வதி சொன்னதை கேட்டு நதியா முகத்தை சுழிக்க, சிந்து சிரித்துவிட்டு, " நீங்க இன்னும் அவரோட அம்மாவை பார்க்கலையே!.. அவங்க அம்மா இதைவிட ரொம்ப நல்லா பேசுவாங்க த்தை!.."
" அதுக்கு தான் இவளை தோட்டத்துக்கு வீட்டுக்கு போலாம் வாடி னா.. என்னமோ ரொம்ப பிகு பண்ணிக்கிறா!?.." சிந்து நதியாவை குறை கூறினாள்..
அறியாத வயதில் தோட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றதால் தான், தந்தை அவர்களை ஊரை விட்டே அழைத்துச் சென்றார் என்றெண்ணி நதியா அங்கு செல்ல மறுக்க,
நதியா எதற்காக தோட்டத்திற்கு வர மாட்டேன் என்கிறாள் என்பது சரஸ்வதிக்கு புரிந்ததால் அமைதியாக இருந்தவர், "சரி விடு மா!.. இன்னொரு நாள் போகலாம்!.." என்று அந்த பேச்சை முடித்தார்..
அப்போது தான் சண்முகம் வீட்டினுள் நுழைய, "என்ன ப்பா நீங்க!?.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கலாம்ல.. ஈஸ்வரை பார்த்து இருக்கலாம்.. இப்ப தான் அவர் கிளம்பினாரு!.." என்றவள், அவன் எதற்காக வந்தான் என்ற காரணத்தையும் கூறினாள் அவரது மகள்..
"அடடா!!.. அப்படியா கண்ணு!!?.. அந்த தம்பி வந்துச்சா!?.. எனக்கு தோப்புல வேலை ஜாஸ்தி மா!.. சரி விடு நான் நேர்ல போய் பேசிக்கிறேன்!.." என சண்முகம் பதிலளிக்க, சரஸ்வதி அப்போது நடந்த விபத்தை பற்றி தனது சகோதரனிடம் விசாரித்தார்..
அதற்குள், " சரி.. சரி.. பேசிட்டே இருந்து பொழுது போயிடுச்சு!.. அல்லாரும் சாப்பிட வாங்க!.." காவேரி அழைத்ததும், அனைவரும் சென்று பரிமாறிக் கொண்டு உண்டனர்..
மேலும் சில தினங்கள் இயல்பு போல் நகர, சிந்து மீண்டும் நதியாவிடம், "ஹேய் நதி!.. நாம தோட்டத்து வீட்டுக்கு போய் கங்கா ஆன்ட்டியை பார்த்துட்டு வரலாமா!?.." எனக் கேட்க, இப்போது வேண்டாமென மறுத்து விட்டாள் நதியா..
"உங்கிட்ட கேட்கறதே வேஸ்ட்!.. நான் போய் அத்தை கிட்ட கேட்கறேன்!.." என்று விட்டு சரஸ்வதியிடம் ஓடியவள், அவரை நச்சரித்து ஆமோதிக்கச் செய்தாள்..
அன்று மாலை வேளையில் தோப்பிற்கு தாயையும் மகளையும் அழைத்துக் கொண்டு சிந்து செல்ல, வெளியே காற்றாட அமர்ந்திருந்த கங்கா, புதிதாக வருபவர்களை கண்டு குழம்பினார்..
"என்ன டா சிண்டு!?.. ஏதோ பாட்ஷா ரஜினி மாதிரி படையோட வர்ற!?.." என கேலிப் புன்னகையுடன் கேட்ட பின்னர் தான் சிந்துவின் இருபுறமும் வந்தவர்களை கவனித்தாள்..
"ஆனாலும் உங்களுக்கு ஓவர் குசும்பு ஆன்ட்டி!.. எந்த ஏங்கிள் ல நான் உங்க கண்ணுக்கு சூப்பர் ஸ்டார் மாதிரி தெரியறேனாம்!?.." என சிணுங்கலுடன் கேட்டாள் சிந்து..
" நீ எப்பவுமே கருப்பு தங்கக்கட்டி தானே டி செல்லம்!.. அதான் அந்த இன்ஸ் பையன் உன்னை கருப்பட்டி னு கூப்பிடுறான்!.." என கூறி அவளது கன்னத்தில் செல்லமாக தட்டினார்..
" அதுசரி!!.." சிரித்த சிந்து, தனது அத்தையையும், நதியாவையும் அறிமுகப்படுத்த, "சிந்து சொன்னா.. எங்கண்ணன் அடிப்பட்டு இருந்தப்ப தம்பி தான் காப்பாத்துனதா.. தம்பிகிட்ட என்னோட நன்றியை சொல்லனும்!.." என்றார் சரஸ்வதி..
"அதுக்குள்ள உங்ககிட்டவும் அந்த பழைய படத்தை ஓட்டிட்டாளா இந்த வாண்டு!?.. " என்று சிந்துவை பார்த்து சிரித்துக் கொண்டே சலித்தார் கங்கா..
பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் நட்புடன் சிரித்துப் பேசிய கங்காவின் முகம் மட்டும் சரஸ்வதிக்கு பரிட்சயமானதாக தெரிந்தது..
அதனால்," நீங்க சென்னைக்கு எதுவும் வந்து இருக்கீங்களா!?.." என்று வினவிட, "இல்லையே!!.. ஏன் கேட்கறீங்க!?.." என யோசனையுடன் கேட்டார் கங்கா..
"உங்கள எங்கேயோ பார்த்தது போல இருக்கு.. அதான் கேட்டேன்!.." எனக் கேட்ட சரஸ்வதி, சிறிது நேரம் வேறு விசயங்களை பேசிவிட்டு,
"சரி கிளம்பறேங்க, வந்து ரொம்ப நேரமாச்சு." என்று அங்கிருந்து கிளம்பியவருக்கு அன்று இரவு முழுவதும் கங்காவை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்க,
சிந்தனையின் முடிவில் அவர் யாரென்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் சரஸ்வதி.