• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
128
கனவு - 22

சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து வருமளவுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பதறி சரஸ்வதி கேட்கவும்,

"சொல்றதுக்கு அப்படியே நீங்க ரெண்டு பேரும் பாசமலர் சிவாஜி சாவித்ரி மாதிரி உறவாடிட்டா இருந்தீங்க!?.." எனக் கேட்டுக் கொண்டே வந்த காவேரி ஈஸ்வரிடம் மோர் குவளையை நீட்டினாள்..

காவேரியின் கேள்வியில் சரஸ்வதியின் முகம் சுருங்கினாலும், அதற்கு காரணமும் காவேரி தானே என்று தன்னை இயல்பாக்கிக் கொண்டு, "என்னாச்சு ம்மா!?.." என தன் தாயிடம் கேட்டார்..

"அவ்ளோ பெரிய பில்டப்பு எல்லாம் ஒன்னுமில்ல ஆன்ட்டி!!.. அவர் அடிப்பட்டு இருந்தப்ப நான் பார்த்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன்!.." என இலகுவாக சொன்னவன்,

" அதை தான் இந்த கருப்பட்டி கொஞ்சம் மசாலா தூக்கலா சொல்லிட்டா!!.." என்று சிரிப்புடன் சிந்துவின் தலையில் வலிக்காமல் தட்டிய ஈஸ்வர்..

காலி குவளையை கீழே வைத்துவிட்டு, "அப்ப நான் கிளம்பறேன் அப்பத்தா!!.. சாரை நான் நலம் விசாரிச்சதா சொல்லிடுங்க!.." என்று விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது..

" சரி கண்ணு!!.. அடிக்கடி வந்துட்டு போ ராசா!.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!.." கோதாவரி மீண்டும் அவன் வருவதற்கு அழைப்பு விடுத்தார்..

அவரது மனதில் ஓடியது எல்லாம் நதியாவின் இன்றைய மாற்றம் தான்!.. வந்த புதிதில் அவளது அமைதி கண்டு கோதாவரிக்கு கூட மனம் கனத்தது..

இத்தனை வருடங்கள் கழித்து கண்ட பேத்தியில், தனது வம்பு பேசி வாயாடும் பழைய மொசக்குட்டியை காணாமல் வருத்தப்பட்டவர், தன்னால் ஆன மட்டும் அவளை மகிழ்வாக மாற்ற முனைந்தார்..

அதற்கு பலனாக அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொண்டு வர, இன்று அவனிடம் அவள் பேசிய விதத்தில், பழைய நதியாவை கண்டார்.. அதனால் கேட்டது தான் அவனுக்கான அந்த அழைப்பு..

யாரேனும் எந்த இடத்தில் உண்மையான உயிர்ப்போடு இயல்பாக வாழ்ந்தோமோ, அங்கு சென்றாலே இழந்த மகிழ்ச்சி கூட மீண்டு விடும்!..

நதியாவின் விசயத்திலும் அதுதான் நடந்தது.. இயற்கையிலேயே நடந்ததை எண்ணிப் பெரிதாக சோகத்தில் மூழ்காத அவளை கூட, இடையில் வந்த எமகாதகன் ஒருவன் அதையும் செய்ய வைத்தான்..

அவனிடம் இருந்து விடுதலை பெற்ற சிறுபறவை மீண்டும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்த இடத்திற்கு வந்ததும் தான் தனது சிறகையே உணரத் தொடங்கி இருக்கிறது..

சிறகை விரித்து இன்ப வானில் பறந்தால் அனைவருக்கும் மகிழ்வே!.. ஆனால் அதுவும் காலத்தின் கையில் தானே உள்ளது..

"சொல்லிட்டீங்க ல.. இனிமே பாருங்க அப்பத்தா!.. நீங்களே 'போடா!' னு விரட்டுற அளவுக்கு அடிக்கடி வந்து தொந்தரவு தரப் போறேன்!.. அப்றம் உங்களுக்கு தான் கஷ்டம்!.. யோசிச்சுக்கங்க!!.." சிரிப்போடு எச்சரித்தான்..

"உன்ன எல்லா எப்படி தான் உன்ற ஆத்தா சமாளிக்கிறாளோ!!?.."என்று சிரிப்புடன் கோதாவரி பாட்டி சொல்ல, 'எனக்கும் அதே தான் டவுட்டு அம்மாச்சி!..' என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் நதியா..

"நான் அப்படி எல்லா சொல்ல மாட்டேன் ராசா!!.. நீ தாராளமா எப்போ னாலும் வரலாம்!.." என அனுமதி போல அவர் சொன்னதும், கண்டிப்பாக வருவதாக கூறிவிட்டு கிளம்பியவன் பார்வை நதியாவை தீண்டிச் சென்றது..

அவன் பார்வையை உணர்ந்து நதியா தனது பார்வையை திருப்பிக் கொள்ள, புன்சிரிப்புடன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து ஈஸ்வர் கிளம்பியதும்,

"அண்ணனுக்கு எப்போ என்னம்மா நடந்தது!?.. எங்கிட்ட நீங்க எதுவுமே சொல்லலையே!?.." சரஸ்வதி ஆதங்கத்துடன் கோதாவரியிடம் கேட்டார்..

"அது ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னால நடந்தது சரசு!.. உன்ற கிட்ட சொல்லக் கூடாது னு இல்ல கண்ணு!.. அப்ப தான் நாம பெருசா பேசிக்கலையே!?.." என அவரை சமாதானம் செய்த கோதாவரி..

" உன்ற பங்கு காடு இருக்கு ல அதை சம்முகம் குத்தகைக்கு வுட்டு இருந்தான்!.. குத்தகை எடுத்த அந்த பரதேசி பயலுக ரொம்ப வருசமா பணத்தை தராம ராவடி பண்ணிட்டு இருந்தானுங்க கண்ணு!.." என்று நடந்ததை விவரிக்கத் தொடங்கினார் கோதாவரி பாட்டி..

பெண்ணிற்கு பொன்னை மட்டுமே கொடுக்கும் அந்த காலத்தில் கூட சரஸ்வதியின் தகப்பனார் சீனிவாசன் , மனைவியின் பெயரில் அந்த பூர்வீக வீட்டையும், மகளது பெயரில் சில ஏக்கர் நிலத்தையும் எழுதி வைத்திருந்தார்..

சரஸ்வதியின் சொத்துக்கள் பற்றி அவரிடம் சண்முகம் விவரித்த போது கூட, "எனக்கு அதைப் பற்றி எல்லா என்ன தெரிய போகுது ண்ணே!.. நீயே பார்த்துக்க!.." என்று விட்டார்..

சுதர்சனத்திடம் அந்த சொத்துக்கள் பற்றி சொன்ன போது, 'அது சரஸ்வதியின் சொத்து அதைப் பற்றிய எதுவானாலும் அவர் தான் முடிவெடுக்க வேண்டும்' என்று விட்டார்..

இருவரும் அவ்வாறு கூறிய பிறகு அந்த நிலங்களை சண்முகம் தான் பண்ணையம் செய்து வந்தார்.. அதில் வரும் வருமானத்தை தங்கையின் பிள்ளைகளுக்காக சேர்த்து வந்தார்..

சில காலத்திற்கு பிறகு அனைத்து நிலங்களையும் அவரால் பார்த்துக் கொள்ள முடியாமல் போன போது, தனது சில ஏக்கரோடு சரஸ்வதியின் நிலத்தையும் குத்தகைக்கு விட்டு இருந்தார்..

குத்தகைக்கு எடுத்திருந்த கோவிந்தசாமி ஒழுங்காக குத்தகை பணத்தை கொடுத்து கொண்டு தான் இருந்தான்..

ஆனால் சில மாதங்களாக சரிவர தராமல் இருக்கவும் என்னவென்று விசாரிக்க சென்றவரிடம்,

"அண்ணே!.. இந்த வருசம் காய் வரத்து கம்மியாகிடுச்சு ண்ணே!.. அதான் நேரத்துக்கு தர முடியல!.. கொஞ்சம் சமாளிச்சுக்குங்!.." என்று பவ்யமாக பதிலளிக்க, சரியென்று விட்டு வந்தார் சண்முகம்..

இதுவே தொடர்கதையாக, என்ன செய்வது என்று யோசித்த சண்முகம், அவன் காய்களை கொடுக்கும் வியாபாரி யாரென்று அவனிடம் இயல்பாக பேசி விசாரித்து,

நேராக அந்த வியாபாரியிடமும் எதைப் பற்றியும் விளக்காமல் இயல்பாக வியாபாரம் எப்படி என்று விசாரிப்பது போல பேசி அப்படியே கோவிந்தசாமி தரும் தேங்காய்களை பற்றியும் விசாரித்தார்..

"என்ன சண்முகம் தெரியாத மாதிரி கேட்குற!?.. அவன் கொடுக்கற காய்ங்க தான் நல்லா வெளஞ்ச காய்களாச்சே!.. எனக்கு வர்ற காய்கள் ல பெரும்பகுதி அவனோடது தானே!.." என்று உண்மையை சொன்னதும் சண்முகத்திற்கு கோபமேறியது..

மறுநாளே கோவிந்தசாமியிடம் நேராக சென்று குத்தகை பணத்தை கேட்க, "அதான் சொல்றேன் ல வரத்து ஜாஸ்தி இல்ல னு.. திரும்பத்திரும்ப வந்து கேட்டா நான் என்ன பண்றது!?.." என பேசும் தொனியே மாறியது அவனிடம்..

" உன்ற பேச்சு கொஞ்சம் கூட சரியில்ல கோய்ந்தசாமி!.. அதெப்படி அப்படி ஆகும்!.. என்ற தோப்புல வரத்து நல்லா தானே வரச் செய்யுது!.." என்றவர், "நீ பண்ற கோல்மால் எல்லாம் எனக்கு நல்லா தெரியும்!.." கூர்மையான பார்வையோடு சொன்னார்..

"ஓஹோ!!.. அதான் தெரிஞ்சுடுச்சே!.. அப்றம் என்ன.. பணம் வாரப்ப தாரேன்!.. அம்புட்டு தான்!.. இப்ப இடத்தை காலி பண்ணு!.. வந்துட்டானுக ***.. " என்று மரியாதை இல்லாமல் சொன்னான் அவன்..

அவனது மரியாதை இல்லாத பேச்சைக் கேட்ட சண்முகம் கோபத்தில் கொதிக்க, "ஏய்!!.. " என்று அவனது சட்டையை பிடிக்கும் போது, உள்ளே நுழைந்தான் அவனது மகன் மனோஜ்..

"யோவ்!!.. யாரு யா நீ!?.. என்ன தகுரியம் இருந்தா என்ற அப்பாரு மேல கை வைப்ப!?..*******" என்று சண்முகத்தை விலக்கி தள்ளியவன், மிரட்டினான்..

சில நொடிகள் நடந்ததை கிரகிக்க முடியாத சண்முகம், அடுத்து அவன் பேசிய தகாத வார்த்தைகளில் மிகவும் அவமானமாக உணர்ந்தவர் அங்கிருந்து அகன்றார்..

பின்பு ஊர் தலைவரிடம் சென்று கோவிந்தசாமியை பற்றி முறையிட, அவனை பஞ்சாயத்தில் நிறுத்தி அவனுக்கு குத்தகைக்கு கொடுத்த அவர்களது இடத்தை திருப்பித் தருமாறு பணித்தார் தலைவர்..

வேண்டா வெறுப்பாக அதை திருப்பி தந்த கோவிந்தசாமியும் அவனது மகனும் திடீரென தங்கள் வருமானம் போனதில் சண்முகத்தின் மீது வன்மம் வைத்தனர்..

"அந்தாளை என்னமாவது பண்ணனும் ப்பா!.. நிலத்தை இப்படி பொசுக்குனு நம்ம கிட்ட இருந்து புடுங்கிட்டான் ல!.." என்று குடிப்போதையில் வந்து தன் தந்தையிடம் கூச்சலிட்டான்..

அதைக் கேட்ட கோவிந்தசாமியும் அவனுக்கு ஒத்து ஊத, எதேச்சையாக மகன் பேசியதைக் கேட்டு எரிச்சலடைந்த அவனது தாய்,

"ஏன்டா அறிவுகெட்டவனே!.. அவரோட நிலத்தை அவரு வாங்கிட்டாரு!.. அதுக்கு னு இப்படி வெஞ்சனம் கொண்டு அலைவியா!?.." என எடுத்துரைக்க,

"புரியாத பேசாதே ம்மோவ்!.. அவன் என்ற அப்பாரு மேலயே கை வச்சுட்டான்!.. அதோட பஞ்சாயத்துல நிறுத்தி அசிங்கப்படுத்துனான்!.." இன்னமும் புரியாமல் பேசிய மகனிடம் பேசுவது வீணென்று எண்ணி,

"நீ தான் உருபடாம திரியற னா இந்த மனுசனையும் ஏத்திவிட்டு, ஏடாகூடமா எதுனாச்சும் செய்த.. அவ்ளோ தான் சொல்லிப்புட்டேன்!.." என்று எச்சரித்து விட்டு சென்றார் கோமதி..

அவருக்கு தனது கணவன் குத்தகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய விபரமும் அதைக் கேட்க வந்த அவரை தரக்குறைவாக பேசியது என எதுவும் தெரியாது, சண்முகம் இடத்தை திரும்பப் பெற்றது மட்டும் தான் தெரியும்..

ஏற்கனவே உருப்படாமல் ஏதோ பெரிய மிராசுதாரர் போல ஊதாரியாய் சுற்றிக் கொண்டிருக்கும் மகன், இப்படி பேசியே தேவையில்லாத வம்புகளை இழுத்து விடுவானோ என்று அஞ்சி எச்சரித்தார்.. ஆனால் அவன் அதைத் தான் செய்தான்..

ஓரிரு தினங்களுக்கு பிறகு சண்முகம் தனது தோப்பில் இருந்து லோடு அனுப்பி வைத்து விட்டு கணக்கை முடித்து கிளம்ப இரவாகி விட்டது..

வழக்கமாக அவர் வரும் வழியில் வந்தவர், எதேச்சையாக திரும்பிப் பார்க்க அவரது தோப்பு முடியும் இடத்தில் சிலர் நின்று இருப்பதை கண்டார்..

"எலேய்!!!.. யாரு டா அது!?.." என்று அவர் சத்தமிட, அவர்கள் ஓடுவது தெரியவும், தனது வண்டியை சாலையில் நிறுத்தி விட்டு வேகமாக உள்ளே விரைந்து சென்றார்..

வந்தவரை மறைந்திருந்த அந்த ஆட்கள் முகமூடி அணிந்து கொண்டு தாக்க, ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர் சரிந்ததும் அவர்கள் சென்று விட்டனர்..

அந்த மனோஜ் தனது ஆகாவலி நண்பர்களை வைத்துக் கொண்டு சண்முகத்தை தாக்க திட்டமிட்டு அவரை அங்கு வர செய்து நினைத்ததை முடித்தும் விட்டான்..

அவ்வழியே வந்த ஈஸ்வர், சாலையில் வண்டி மட்டும் நிற்பதை கண்டு யோசனையுடன் அருகில் யாரும் இருக்கிறார்களா என்று தேட, அதற்கான அறிகுறியே தென்படவில்லை..

அதனால் சந்தேகம் கொண்டவன், தனது வண்டியில் இருந்து இறங்கிச் சென்று சுற்றி முற்றிலும் தேடத் தொடங்க.. ஒரு முனகல் சத்தம் கேட்டு சண்முகத்திடம் விரைந்து வந்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான்.

நடந்ததை கோதாவரி கூறி முடித்ததும், " மாமா மேல கை வைச்ச அந்த ராஸ்கல்ஸ்ஐ சும்மாவா விட்டீங்க அம்மாச்சி? போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தூக்கி போட்டு நல்லா மொத்தனும்." என ஆவேசமாக நதியா கூறவும், சிந்து கிளுக்கிச் சிரித்தாள்.

அவளை விநோதமாக பார்த்த நதியா முறைக்க, "அடியேய்! அப்பாவை அடிச்சது அந்த காவலி பயலுகள தான் னு கண்டுபிடிச்சு சொன்னதே போலீஸ் தான்." என்றாள்.

நதியா புரியாமல் விழிக்கவும்," அட, அப்பா கிட்ட என்ன நடந்தது னு விசாரிச்சு அவனுகளை அரஸ்ட் பண்ணி உள்ள வச்சு கும்மாங்குத்து குத்துனது சாட்சாத் நம்ம ஈஸ்வர் தான்." என்றாள் விளக்கமாக.

" என்னடி சொல்ற!?" நதியா கேட்க, "ஈஸ்வர் யாருன்னு நினைச்ச, அவர் தான் இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்." என சிந்து சொன்னதும் திகைப்புடன் பார்த்தாள் நதியா.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top