• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
126
கனவு - 21

சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த காவேரியிடம் வந்த சிந்து, "ம்மா!.. மாரியம்மன் கோயில்ல நோம்பி சாட்டி இருக்கே!.. இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே போயிட்டு வருவோமா!?.." என ஆசையாக கேட்டாள்..

"உன்ற காலேசு பரீட்சை முடிஞ்சுதும் ஆச்சு.. எப்போ பாரு எங்கயாவது சுத்திட்டு இருக்கோனும் உனக்கு!.." என்று காவேரி கடிந்து கொள்ளும் போதே,

"கோவிலுக்கு தானே அண்ணி கூப்பிடுறா!.. அதான் சமையல் முடிஞ்சுடுச்சே!.. பிள்ளைங்களை கூட்டிட்டு போயிட்டு வருவோமா!?.." என சரஸ்வதி கேட்டதும், காவேரியும் சரியென்று சம்மதித்தாள்..

"சூப்பர் அத்த!!.. டேங் யூ ம்மா!.." என காவேரியின் கன்னத்தில் அவள் முத்தம் வைக்க, "போடி அங்கிட்டு!!.. எச்சி பண்ணிட்டு இருக்கா!.." என்று நாணத்துடன் அவளை திட்டிய காவேரி சிரித்தாள்..

" நான் போய் நதியா கிட்ட சொல்லி சீக்கிரமே கிளம்ப சொல்றேன்!!.." என்று துள்ளிக் குதித்து ஓடிய சிந்துவை கண்ட சரஸ்வதி, "நம்ம சிந்துக்கு எதாவது வரன் வந்துச்சா அண்ணி!?.." என்று விசாரித்தார்..

"ம்க்கும்!!!.. அதெல்லாம் நெறய வருது!.. எங்கே.. உங்கண்ணனும், ஆத்தாளும் தான் எதாவது நொட்ட நொல்லை சொல்லி எதையும் செய்ய வுட மாட்டேன் னுட்டு இருக்காக!.." இயலாமையில் நொடித்தாள் காவேரி..

காவேரி சொன்னதில் ஏனென்று யோசனையான சரஸ்வதி, "அவளுக்கானவன் இனிமேலா பொறக்க போறான்!.. கண்டிப்பா ஒருநா‌ள் தேடி வருவான்!..கவலையை விடுங்க!.." என

காவேரிக்கு ஆதரவாக சொன்னாலும்
அவர்களிடமும் என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டார்..

அதற்குள் நதியாவை காணச் சென்றவள், "அத்த!!.. நதியா வீட்டுக்கு தூரம் ஆகிட்டாளாம்!.. அதனால நம்பள மட்டும் போக சொல்றா!.." என முகத்தை தொங்க போட்டுக்கொண்டு வந்து சொன்னாள் சிந்து..

"சரி விடு கவலைப்படாத டா!.. அடுத்த தடவை போகும் போது அவளையும் கூட்டிட்டு போகலாம்!.." என சிறு சிரிப்புடன் அவளை சமாதானம் செய்த சரஸ்வதி, மகளிடம் சென்று நலம் விசாரிக்கவும் மறக்கவில்லை..

அதன்பின் பாட்டியை அவளுக்கு துணையாக இருக்க செய்து விட்டு, மற்ற மூன்று பெண்கள் மட்டும் கோவிலுக்கு சென்றனர்..

தலைகுளித்து வந்து ஈரக்கூந்தலை உலர்த்த வெளியே வெயிலில் நின்றிருந்த நதியாவிடம் தான், வந்தவன் வாயாடி வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான்..

அவனை சில நொடிகள் மெய்மறந்து பார்த்துவிட்ட கடுப்போடு இருந்தவளுக்கு, மேலும் அவளை பார்த்து அதிசயித்தது போல அவன் கேலி செய்த செயல், அதை இன்னும் அதிகப்படுத்தியது..

இப்போது எரிச்சலை முகத்தில் வெளிப்படையாக காட்டிய நதியா, "யாரு நீங்க!?.. இப்படி தான் முன்னே பின்னே தெரியாத பொண்ணு கிட்ட பேசறதா!?.." என்று சற்று காட்டமாகவே கேட்டாள்..

"அப்படி எல்லா எதுவும் இல்லையே!!..முன்னால பின்னால எல்லாமே நல்லா தெரியுதே!!.." என அவளை முழுதாக மேலும் கீழும் பார்த்தவன் கேலியை கைவிடாமல் பேசியதில், "இடியட்!!!.." என்று அவனை திட்டிவிட்டு,

"அம்மாச்சி!!!.. இங்க வந்து பாருங்க!.. யாரோ வந்து இருக்காங்க!!!.." உள்நோக்கி குரல் கொடுத்தவள், "சரியான லூசு போல!!.." என முணுமுணுக்க, அது அவனது செவிகளில் தெளிவாகவே விழுந்து இதழில் புன்னகையை உற்பத்தி செய்தது..

"ஆமா லூசு தான்!!.. வேணும்னா நீ வந்து சரி பண்றியா!!?.." என மாறாத புன்னகையோடு ஆழ்ந்த சொற்களில் கேட்க,

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவள் அதை கவனிக்காமல் மூக்கில் காற்றடித்துவிட்டு வேகமாக வீட்டினுள் சென்றாள்..

அவளை பின்தொடர்ந்து இயல்பாக வீட்டினுள் அவனும் நுழைந்தான்.. அவளை கண்ட மகிழ்வான மனம் நிறைந்த புன்னகையோடு!..

"அம்மாச்சி!!.. யாரோ வந்து வாசல்ல நிக்கிறாங்க!.. போய் பா...." என அவள் சொல்லிக் கொண்டு திரும்பும் போதே அவன் வீட்டினுள் நுழைந்ததை கண்டவள், வேகமாக அவனருகில் சென்றாள்..

"ஹலோ!!.. பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க!.. இப்படி தான் பர்மிஷன் இல்லாம ஒருத்தர் வீட்டுக்குள்ள நுழையறதா!?.." என்று அவனிடம் காட்டமாக கேட்க, அப்போதும் புன்னகையுடன் நின்றான் அவன்..

"அடடே!!!.. வா ராசா!!.. நல்லா இருக்கியா பா!?.. அம்மா எப்படி இருக்காங்க?!.." என்று முகம் முழுக்க புன்னகையுடன் நலம் விசாரித்து கொண்டே வந்தார் கோதவரி..

தனது பாட்டியின் அதீத விசாரிப்பில் குழம்பிய நதியா, 'ஏற்கனவே இவர்களுக்கு தெரிந்தவரோ?!.. தான் தான் அதிகப்படியாக வாய்விட்டு விட்டோமோ!?' என்ற யோசனையில் இருக்க..

"நல்லாருக்கேன் அப்பத்தா!!.. அம்மாவும் நல்லா இருக்காங்க!.. இந்தாங்க திருப்பதி பிரசாதம்!.. அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க!.." அவரது கையில் ஒரு பையை திணித்தவன்,

"திருப்பதி பெருமாள் கூட பிரசாதம் ஈஸியா கொடுத்துடுவாரு போல.. அதை உங்க கிட்ட சேர்க்கறதுக்கு உள்ளே வர தான், நான் போராட வேண்டி இருக்கு!.." என்று நதியாவை பார்த்துக் கொண்டு புன்சிரிப்புடன் கூறினான் வந்தவன்..

" என்ன ராசா சொல்ற!?.. இந்த கெழவிக்கு வெளங்கலையே!?.." புருவங்சுருங்க யோசனையோடு கோதாவரி பாட்டி கேட்கவும், "ஒன்னுமில்ல அப்பத்தா!.." என முடித்து விட்டான்..

அவனது பேச்சில் தனது சிந்தனையில் இருந்த நதியா, 'இவனோட வாய்க்கு நாம பேசுனது எதுவும் தப்பில்ல!' என்ற முடிவிற்கு வந்து உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்..

அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையில் அவனது இதழ்களில் மேலும் புன்னகை விரிய, "வீட்ல வேற யாரும் இல்லையா அப்பத்தா!?.." எனக் கேட்டான்..

" நாம எல்லாம் சார் க்கு மனுசங்களா தெரியல போல அம்மாச்சி!!?.." கேலி சிரிப்புடன் கேட்டுக் கொண்டே நதியா தனது பாட்டியின் அருகே வந்து நின்றாள்.. அவனை மட்டம் தட்டிவிட்டளாம்!..

அதே மாறாத புன்னகையுடன், "தெரியறது னால தானே அப்பத்தா!.. உங்கள தவிர வேற யாரும் வீட்ல இல்லயா னு கேட்டேன்!.." எனக் கேட்க, பல்பு வாங்கிய மொமன்ட் நதியாவிற்கு..

இருந்தாலும் விட்டுக் கொடுக்காத பழைய நதியா வெளியே வர, "ஏன் அம்மாச்சி!?.. தொரை நம்ம கூட எல்லாம் பேச மாட்டாராக்கும்!?.." என நக்கலாக அவள் கேட்க, அவனது கண்கள் மின்னின..

"தாரளாமா பேசலாமே அப்பத்தா!.. உங்க கூட பேசறதுனா விடிய வரை கூட பேசலாமே!.." என்று அவன் பார்வை ஆயிரம் அர்த்தத்துடன் அவளிடம் சொல்ல..

அப்போது தான் அம்மணிக்கு உரைத்தது, தான் அதிகப்படியாக பேசி விட்டோம் என்று, அதை உணர்ந்தவள் அவ்ளோ தான் ஆஃப் ஆகி போனாள்..

இருவரும் அம்மாச்சி, அப்பத்தா என்ற வெறும் வார்த்தைகளை மட்டும் விளிப்பொருளாக வைத்துக் கொண்டு கேலிப் பேசியதை சுவாரஸ்யமாக ஆ'வென்று பார்த்துக் கொண்டு இருந்தார் கோதாவரி..

அவனுக்கு பதிலடி கொடுத்து பேசத் தோன்றினாலும், அமைதியாக இருந்தவள், ஏனோ அப்படியே விட முடியாத கடுப்பில் உடனே தனது பாட்டியிடம், "அம்மாச்சி!!!.. என்ன ஆ னு பார்த்துட்டு இருக்கீங்க!?.." என எரிந்து விழுந்துவிட்டு,

"உங்க விருந்தாளி கூட நீங்களே பேசி உறவாடுங்க!.. தெரியாதவங்க கூட எனக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை!.." என்று விட்டு தனது அறைக்கு செல்ல முயன்றாள்..
விடுவானா அவன்!!?..

"தெரியாதவங்கள தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினா தானே அவங்க யாரு னு தெரியும்!.. அப்றம் அவங்க கூட பேசவும் முடியும் அப்பத்தா!.." அவன் மீண்டும் அவளிடம் ஆரம்பிக்க..

" எனக்கு அப்படி யார் கூடவும் பேச தேவையில்ல.. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் அம்மாச்சி!.. ஒரே தலைவலி!.." என்று மீண்டும் அவள் அங்கிருந்து அகல முயற்சிக்க..

"தெரியாத ஒரே ஒரு தலைவலி மட்டும் தானா!?.." மீண்டும் அவன் நமட்டுச் சிரிப்புடன் கேள்வியோடு தொடங்கவும், அவனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டவள்,

" தப்பு தான் சார்!.. ஆளை விடுங்க!.. நீங்க எதுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இருங்க!.." என்று வேகமாக கூறிய நதியாவை,

"வீட்டுக்கு வந்த ஒரம்பரையை அப்படி எல்லா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல கூடாது மொசக்குட்டி!.." என்று பாட்டி கண்டிக்கவும், 'அம்மாச்சி!..' என பல்லைக் கடித்தாள் பேத்தி..

ஏற்கனவே அவளை பொம்மை என்று அவன் கிண்டல் செய்திருக்க, இப்போது கோதாவரியும் அவளுக்கான செல்லப்பேரை சொன்னதில், அவன் இன்னும் சிரிப்பானே என்றெண்ணி மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு திரும்பியவள் அவனை காண..

அவளது எண்ணத்தை பொய்யாக்காமல் அதை தான் செய்து கொண்டு இருந்தான் அவன்.. சிரிப்பை அடக்க சிரமப்படுவது போல வாயை மூடிக் கொண்டு கண்கள் சிரிக்க நின்று இருந்தான்..

"ம்ஹ்ம்!!.." என்று அவள் உதட்டை சுழித்துக் கொள்ள, அதையும் ரசனையாக பார்த்துத் தொலைத்தான் அந்த கடங்காரன்.. இது சரிப்படாது என்று எண்ணி அவள் அறைக்கு செல்ல விழையும் போது,

"ஹேய் ஈஸ்வர்!!.. எப்போ வந்தீங்க!?.. வர்றதா சொல்லவே இல்ல!!.." அவனை எதிர்பாராத மகிழ்ச்சியில் கேட்டுக் கொண்டே நுழைந்தாள் சிந்து..

'இவங்க எல்லாருக்கும் இவனை முதல்லேயே தெரியும் போலயே!?' என்ற யோசனையில் நின்ற நதியா நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"வந்து கொஞ்ச நேரம் ஆகுது டா கருப்பட்டி!!.. சர்ப்ரைஸ்ஆ இருக்கட்டும் னு சொல்லாம வந்தேன்!.. பார்த்தா எனக்கே அது திரும்பிடுச்சு!.." என்று சிறு சிரிப்புடன் சொன்னவன் கண்கள் நதியாவை நோக்கின..

"வாங்க தம்பி!.. நல்லா இருக்கீங்களா!?.." என காவேரியும் தன்மையாக சிரிப்புடன் விசாரிக்கவும், " நல்லார்க்கேன் ஆன்ட்டி!.. சார் நல்லா இருக்காரா!?.." என்றவன்,

"அம்மா பிரசாதம் கொடுத்தாங்க!.. அதான் தரலாம் னு வந்தேன்!.. " என்று பணிவன்புடன் பேசியவனை 'இவ்வளவு நேரம் தன்னிடம் வம்பு வளர்த்தவன் இவன்தானா!!!?..' என்ற ரீதியில் பார்த்தாள் நதியா..

அவனுக்கு குடிக்க எதாவது கொடுக்க வேண்டும் என்று காவேரி உள்ளே சென்றுவிட, அதற்குள் சரஸ்வதி தனது தாயிடம் சென்று கோவில் திருநீறு நீட்ட, கோதாவரியும் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார்..

தனது மகளுக்கும் வைக்க வந்ததும்,"வேண்டாம்மா!.." என்று அவள் சற்று விலகவும், "அச்சோ!..
மறந்துட்டேன் டா பாப்பு!!.." என்று கூறிவிட்டு புதியவனிடம் வந்தவர்,

"எடுத்துக்கோங்க தம்பி!!.." என நீட்ட.. அவன் பவ்யமாக, "நீங்களே பூசி விடுங்க ஆன்ட்டி!!.." எனக் கூறிவிட்டு சற்று குனிந்து நெற்றியை காட்டினான்..

சரஸ்வதியும் பூசி விட்டு, விபூதி கண்களில் விழாமல் இருக்க தன் பிள்ளைகளுக்கு ஊதிவிடுவது போல செய்யவும், "அப்படியே எங்கம்மா மாதிரியே செய்றீங்க ஆன்ட்டி!.." சிரிப்புடன் சொன்னான் அவன்..

"இப்ப அதனால என்ன தம்பி!?.. அம்மா ன்னே நினைச்சுக்கங்க!.." என சரஸ்வதியும் இயல்பாக சொன்னதும், "ஆத்தாடி!!!.." என அதிர்ந்து பதறியவனை புரியாமல் அவர் பார்க்க, நதியா யோசனையோடு பார்த்தாள்..

அவரது பார்வையை உணர்ந்தவன், "இல்ல ஆன்ட்டி!.. ஒரு அம்மாவை சமாளிக்கவே பெரிய பாடா இருக்கு!.. இதுல இரவல் எல்லாம்......" என இழுத்துக் கொண்டே மறுப்பாய் சிரித்து சமாளித்தான் அவன்..

அவன் சொன்ன விதத்தில் சரஸ்வதியும் "அதுசரி...." என்று சிரித்துவிட்டு, " நீங்க.. மேலத்தெரு கோமதி மகன் தானே!?.." என யோசனையுடன் சந்தேகமாக கேட்டார்..

" ஹையோ அத்த!!.. ஈஸ்வர் இந்த ஊர்காரரே இல்ல.." சிரிப்புடன் சொன்ன சிந்து," இப்போ அப்பா உயிரோட இருக்குறதுக்கு காரணமே ஈஸ்வர் தான்!.." என்று நெகிழ்வுடன் சொன்னதும், தாயும் மகளும் அதிர்ந்தனர்..

"என்ன மா சொல்ற!?.. அண்ணனுக்கு என்ன நடந்துச்சு!?.. எனக்கு யாரும் எதுவும் சொல்லவே இல்லயே!!?.." என்று பதறி சரஸ்வதி கேட்கவும், நதியாவும் என்ன நடந்தது என்ற பதட்டத்துடன் தான் அவளைப் பார்த்து இருந்தாள்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top