• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
126
கனவு - 20

அரவிந்தனை அங்கேயே இருக்க சொல்லி கோதாவரி பாட்டி சொல்லியதற்கு, நிறைய நாட்கள் பணியில் விடுப்பு எடுக்க முடியாதென கூறினான் அவன்..

ஏற்கனவே அவன் இரு நாட்களில் கிளம்புவதாக சொன்னதில் எரிச்சலாக இருந்த சிந்து, பட்டென அவனது வேலையை விட்டு இங்கேயே வந்து இருக்குமாறு கூறினாள்..

அவள் சொன்ன விசயத்தில் விழித்த அரவிந்த், தன் அத்தை அங்கே அதேவேளையில் வந்ததை கண்டு சற்று திகைக்க தான் செய்தான்..

ஆனால் அவளுடனே வந்த சரஸ்வதி, "நல்லா இருக்குடியம்மா நீ சொல்றது!?.. உத்தியோகம் தான் புருஷலட்சணம்!.. வீட்லேயே உட்கார்ந்தா புவ்வா க்கு என்ன பண்றதாம்!?.."

"ஒழுங்கா வேலை பார்த்துட்டு இருக்கறவனை போய் வேலையை விட சொல்றியா!?.. உனக்கு வாய் கூடிப் போச்சு!.." என சிரிப்புடன் கேட்டு சூழலை இயல்பாக்கினார்..

அதற்குள் காவேரி, "அதானே!!.. இவளுக்கு யாருகிட்ட எப்படி பேசனும் னு தெரியறது இல்ல!.. உள்ளே போடி!.. போய் கைகால் முகம் கழுவு!.." என அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த பார்த்தாள் தாய்..

ஆனால் அவளோ, " இருங்க ம்மா!.." என தாயை அடக்கிவிட்டு, "அத்த!!!.. நல்லா இருக்கீங்களா!?.." என ஓடிவந்து அவரது கைகளை பிடித்துக் கொண்டு நலம் விசாரிக்க,

"என்ன மேடம் நாங்க எல்லா கண்ணுக்கு தெரியலையா!?.." என புன்சிரிப்புடன் கேட்ட நதியாவிடம்,
" உன் கூட பேச மாட்டேன் போ!.. உன்னோட கல்யாணத்துக்கு அப்றம் நீ எங்கூட பேசவே இல்லை ல!!?.." என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் சிந்து..

மகிழ்வான அந்த குடும்ப சூழலில் நதியாவின் முகத்தில் அப்போது தான் இயல்பாக தோன்றிய சிறுநகையும் அவளது கல்யாணம் என்ற வார்த்தையில் மறைந்து போனது..

திடீரென அமைதியான அந்த சூழ்நிலை புரியாமல் சிந்து விழிக்க, "உள்ளார போய் முகம் கழுவு சின்னக்குட்டி!!.." என்று அவளை அனுப்பினார் கோதாவரி..

அப்போது தான் சிரிப்புடன் பேசிய தங்கையின் முகம் கூம்பிப் போனதும் அரவிந்தன் சிந்துவை பார்த்து முறைத்தான்..

சிந்து, நதியாவின் திருமணத்திற்கு வந்ததோடு சரி, அதன்பின் அவளது விவாகரத்து பற்றி ஒன்றும் அவளுக்கு தெரிவிக்கபடவில்லை..

அதனால் தான் இயல்பாக கேட்ட அவளது கேள்விக்கு அனைவரது எதிர்வினையையும் கண்டு குழம்பிப் போனாள் சிந்து.. அதிலும் அரவிந்தன் முறைத்தது ஏன் என்று புரியவில்லை அவளுக்கு..

சிறிது நேரம் நலம் விசாரிப்புகள், இத்தனை வருடங்களில் பொதுவாக நடந்த நிகழ்வுகள் என்று பேசிக் கொண்டே இரவு உணவும் முடிந்து விட,

"சரி போய் ரெஸ்ட் எடுங்க பா!.. அவ்ளோ தூரம் பயணம் பண்ணி வந்தது அலுப்பா இருக்கும்!.. உங்களோட ரூம் சுத்தம் செய்து தான் வைச்சு இருக்கு!.." என்று அவர்களை அனுப்பி வைத்தார் சண்முகம்..

இரவு உணவிற்கு பிறகு நதியா தன் தாயுடன் உறங்கச் சென்றிட, அரவிந்தன் மட்டும் உறக்கம் பிடிக்காமல் காற்றாட வெளியே வந்தான்..

வெகு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த இயற்கையான காற்றை சுவாசித்ததில் அவனது மனது இதமாக இருந்த அதே நேரம் அவனருகில் காலடி சத்தம் கேட்டதில் திரும்பினான்..

அங்கு நின்றிருந்தவரை கண்டு திகைத்தவன், " என்னாச்சு அம்மாச்சி?!.. தூக்கம் வரலையா!?.. " என வினவிட,

"இல்ல கண்ணு!.. மனசு சரியில்ல!.. அதான் காத்தாட கொஞ்சம் வெளியே வரலாம் னு வந்தா நீ இருக்க!.." பதிலளித்தார் பாட்டி..

என்னவென்று வினவிய பேரனிடம், "என்னத்த சொல்ல!!.. நம்ப நதியாவை நினைச்சுத்தே ஒரே விசனமா இருக்கு!.." என்ற அவரது பதிலில் புரியாமல் பார்த்து இருந்தான் அரவிந்த்..

"அவளுக்கென்ன அம்மாச்சி!!?.. இப்ப நல்லா தானே இருக்கா!.." என அரவிந்த் கேட்க, "எங்க கண்ணு!?.. அதான் சிந்து புள்ள கண்ணாலம் னு சொன்னதுமே அவளோட முகமே விழுந்துடுச்சே!.. " என்றவர்,

"அவளுக்கு இன்னும் வயசு இருக்கு!.. கண்ணாலம் காட்சி, புள்ள குட்டி னு சந்தோஷமா இருக்க வேணாமா!?.. அவசர கோலம் அள்ளி தெளிச்சாப்ல எல்லாமே முடிஞ்சு போச்சு!.." என வருத்தமாக கோதாவரி பாட்டி பேசவும்,

"இப்ப தான் அம்மாச்சி ஏதோ இயல்பா ரெண்டொரு வார்த்தை பேசுறா!.. அப்படி ஒரு நிலையில ஹாஸ்பிடல் ல இருந்து அவ வீட்டுக்கு வந்த அப்றம் சுத்தமா பேச்சே இல்ல.."

"விவாகரத்து முடிஞ்ச பிறகும் கூட எப்பவுமே அவளோட ரூம்லேயே தான் அடைஞ்சு இருந்தா!.. அதுக்கு இது எவ்வளவோ பரவால்ல!.. போக போக மாறும்!.. கவலைப்படாதீங்க!.." என்று அவரை தேற்றினான்..

"ஆனா அதுக்குள்ளார உன்ற வயசு போயிடுமே கண்ணு!.." என்று அவனை பற்றி பேசியவர், "அவளை இப்படியே பொத்துனாப்ல வைச்சு இருந்தா எப்படி கண்ணு மனசு மாறுவா!?.." என சரியான கேள்வியை கேட்டார் அவர்..

"அவ மனசு மாறி சந்தோஷமா இருக்கனும் ன்னு தான் அப்பா தன்னோட பிடிவாதத்தை விட்டு இங்க அனுப்பி இருக்காரு அம்மாச்சி!.. அவளை பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு!.. சரியா!?.." என அர்த்தத்துடன் சொன்னவன்,

"ஆனா அதுக்காக அவ விருப்பம் இல்லாம இனிமே எதுவும் செய்யறதா ஐடியா இல்ல அம்மாச்சி!!.. அதுவுமில்லாம அவளை அப்படியே தனியாவே விடவும் போறதில்ல!.." என்று விளக்கினான் அரவிந்த்..

"அதை நான் பார்த்துக்கறேன் பா!..ஆமா ராசா!.. அவளுக்கு னு ஒரு வாழ்க்கை கண்டிப்பா அமையனும்!.. நீ கவலைப்படாதே!.. அப்றம்...." என்று அவர் கேட்பதற்கு தயங்கவும்,

"எங்கிட்ட கேட்க என்ன அம்மாச்சி தயக்கம்!?.. தயங்காம கேளுங்க!.." என அவர் பேசுவதற்கு ஊக்கினான் அவன்..

"அது ஒன்னுமில்ல கண்ணு!!.. உன்ற வாழ்க்கையை பற்றி எதாவது ரோசனை இருக்கா னு கேட்க வந்தேன்!.." தெளிவில்லாமல் அவர் பேசவும்,

"அதுக்கென்ன அம்மாச்சி!!?.. எனக்கு புரியல!.. என்ன னு தெளிவா கேளுங்க!?.." குழப்பமாகக் கேட்டான் அரவிந்த்..

"இல்ல ராசா!.. உனக்கும் வயசாகிட்டே போகுது!.. கண்ணாலம் பண்ணோனு மல்லோ!?.. அதான் உன்ற மனசுல யாராச்சும் மேல நோக்கம் இருக்கா னு கேட்குறேன்!.." பாட்டி தான் சொல்ல வந்ததை விளக்கினார்..

அவனது சில நொடிகள் அமைதி அங்கே ஒருத்தியின் இதயத்துடிப்பை எகிறச் செய்தது.. ஆம்!.. கோதாவரி பாட்டி எழுந்து வெளியே வந்ததும், அவருடன் உறங்கிக் கொண்டிருந்த சிந்து,

புரண்டு படுத்த போது அருகில் அவர் இல்லாதது உணர்ந்து அவரைத் தேடி வெளியே வந்தவள், அரவிந்தனிடம் அவர் பேசியது அனைத்தையும் கேட்டாள்..

நதியாவின் விவாகரத்து பற்றியும், அது தெரியாமல் தான் அவளது திருமணத்தை பற்றி பேசியதையும் எண்ணி உண்மையிலேயே மிகவும் வருத்தம் கொண்டாள்..

திருமணத்தின் போது அவ்வளவு மகிழ்வாக இருந்தவள் வாழ்வில் என்ன தான் நடந்தது என்று சிந்து குழப்பமாக யோசிக்கும் வேளையில் கோதாவரியின் கேள்வி அவளது கவனத்தை அங்கு திசைதிருப்பியது..

தனது பாட்டி கேட்ட கேள்விக்கு அரவிந்தன் என்ன பதில் சொல்ல போகிறான் என்று எகிற துடிக்கும் இதயத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு கவனிக்க.. "அப்படி எல்லா ஒன்னுமில்ல அம்மாச்சி!.." என்ற அவனது பதிலோடு,

" நான் என்னை பற்றி யோசிக்கவே இல்ல.. இப்போதைக்கு பப்பிமாவோட வாழ்க்கையை சீராக்கறது தான் என்னோட எண்ணத்துல நிறைஞ்சு இருக்கு!.."

தன் மனதை அவன் தெளிவாக உரைத்ததும் தான் அவளுக்கு நிம்மதியானது.. தன் மாமனின் மனதில் யாரும் இல்லை என்ற மகிழ்வில் வீட்டிற்கு திரும்பிச் சென்று விட்டாள்..

அரவிந்தனின் பதிலை கேட்ட கோதாவரிக்கு மனம் நிம்மதியடைய, "என்ற மனசுல ஒரு எண்ணம் இருக்கு கண்ணு!.." என்றார் கண்களில் ஆவலோடு..

"நீ அதை நிறைவேத்தறியா ராசா!?.." என்று அவனது கைகளை பிடித்து கொண்டு கேட்ட முதியவரின் கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை அவனால்..

"என்ன னு சொல்லுங்க அம்மாச்சி!!.. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்!.." என அப்போதும் எச்சரிக்கையுடன் தான் பதிலளித்தான் அரவிந்த்..

"உன்றனால முடியும் கண்ணு!.. முடியாத எதையும் இந்த கெழவி கேட்க மாட்டேன்!.. நீ செய்வ னு சொல்லு.. அப்ப தான் அம்மாச்சி சொல்லுவேன் " என்று 'நான் உனக்கு பாட்டி!' என நிரூபித்தார்..

"நீங்க என்ன கேட்க போறீங்க னு எனக்கு தெரியும் அம்மாச்சி!.. ஆனா அது நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது!..அது எல்லாத்துக்கும் பெத்தவங்க சம்மதிக்கனும்!.." என்றவன்,

"நீங்களோ நானோ ஆசைப்பட்டா நடக்கற விசயம் இல்ல.. அதனால இந்த பேச்சை இத்தோட விடுங்க!.. நேரம் ஆகிட்டு இருக்கு!.. போய் படுங்க அம்மாச்சி!.. எனக்கும் தூக்கம் வருது!.." என்று அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்..

அவருக்கும் அவன் சொன்னது சரியெனப்பட அமைதியாக பெருமூச்செறிந்து விட்டு, எல்லாம் கடவுள் விட்ட வழி என்று எண்ணி திரும்பி வீட்டினுள் சென்றார்..

அரவிந்தன் அங்கிருந்த இரு நாட்களிலும் சிந்து வீட்டில் இருக்கும் நேரங்களில் வெளியே சென்று விட, இரவு உறங்குவதற்காக மட்டும் தான் வீட்டில் இருந்தான்..

நதியாவும் தன் தாயோடு சேர்ந்து சிந்துவை அழைத்துக் கொண்டு கோவில், தனது தோழிகள் வீடு என்று சுற்றிவர, அரவிந்தனை அதன்பின் சிந்து காண இயலாது போனதோடு அவனும் ஊருக்கு கிளம்பி விட்டான்..

நதியா கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வர, காவேரியிடம் இருந்து பெரிதாக எதுவும் குத்தல் பேச்சு இல்லாமல் இருக்கவும்,

இப்போதெல்லாம் நதியாவின் பழைய கேலிப் பேச்சுகள் வருவதோடு, அவ்வப்போது சிந்துவினால் வாய்விட்டு சிரிக்கக் கூட செய்தாள்..

சரஸ்வதிக்கு தனது மகளின் மனது பழைய நிலைக்கு வருவதை எண்ணி தனது கணவரின் முடிவு சரியானதே என்று தோன்றியது..

இப்படியாக நதியாவின் நாட்கள் தனது பிறந்த ஊரில் இன்பமாக நகர, அன்று அவள் கோவில் விசேஷத்திற்கு செல்ல இயலாத காரணத்தால் வீட்டில் இருக்க, மற்ற பெண்கள் சென்று இருந்தனர்..

வெள்ளிக்கிழமை ஆதலால் நதியா தலைகுளித்து முடியை வெயிலில் உலர வைத்துக் கொண்டு இருக்க, அவளது பின்புறத்தில் இருந்து,

"அட கருப்பட்டி!!.. ரெண்டு மாசத்துல எப்படி இவ்ளோஓஓ நீளமா முடி வளர்த்த!!!?." என்று அதிசயித்து வந்த கேள்வியோடு ஆண்குரல் கேட்கவும்.. யாரது என்று திரும்பி பார்த்த நதியா சிலையென நின்றாள்..

அவளது எதிரே.. கட்டுக்கோப்பான உடற்கட்டோடு.. நேர்த்தியாக உடையணிந்து.. அவளை விட சற்று உயரமாக ஒருவன்.. அவளை கண்ட பிரமிப்பில் நின்றிருக்க..

அவனையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்து இருந்தவள், அவன் பேசியதில் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டாள்..

அவளை கண்கள் மின்ன பார்த்தவன், "ஹை!!!.. பார்பி பொம்மை!" என்று மேலும் ஆர்ச்சயத்தோடு சொன்னதில் முழுதாக இயல்புக்கு வந்தவள்,

சில நொடிகளேனும் அவனை ஊன்றி பார்த்த தனது செயலை எண்ணி எரிச்சலை வெளிப்படுத்தி, "வாட்!. ஹு ஆர் யூ மேன்!?" என்று தன்னை மீட்டுக் கொண்டு, அவன் யாரென தெரியாமல் கேட்டாள்..

"பார்ரா!! பார்பியோட பந்தாவை, " என அவன் கண்களில் கேலி இழையோட, இதழ்களில் சிறு புன்னகையுடன் சொன்னதும் நதியாவிற்கு கொதிநிலை ஏறியது.


அன்பான வாசகர்களே!..
உங்களது கருத்துகளும் விமர்சனங்களும் எனது கதைக்கு ஊட்டமளித்து மேலும் சிறப்பாக எழுத வைக்கும்!.. நன்றி!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top