• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
107
கனவு - 2

காரிருளின் மடியில், அந்த தெருவே நிசப்தத்தில் மூழ்கி திளைக்க.. அந்தஹாரம் மட்டுமே ஆட்கொண்ட நடுநிசியில்.. அந்த வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க..

முகம் முழுவதிலும் பனித்துளிகளாய் வேர்த்து வடிய, ஏதோ தாங்க இயலாத வலியில் தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டு, "ஆஆஆ!!!.." என்ற அலறலுடன் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள் நதியா!..

அவள் அருகே படுத்திருந்த அவளது அன்னை சரஸ்வதி, "என்னாச்சு டா பாப்பு!!??.." என பதட்டத்துடன் எழுந்து அவளது முதுகை நீவி விட்டு அவளை ஆசுவாசப்படுத்தினார்..

தன்னைச் சுற்றி பார்த்து தான் இருக்கும் சூழலை உணர்ந்தவள், "ஒன்னும் இல்லம்மா!.. ஏதோ பயங்கரமான கெட்ட கனவு!!.." என்று விட்டு மீண்டும் படுக்க முனைய,

அவளுக்கு நீரை பருகக் கொடுத்து, "இந்தா!..இதை குடிச்சிட்டு படுடா!.. " என்று மீண்டும் அவளை படுக்க சொன்னவர் மெதுவாக தட்டிக் கொடுத்து உறங்கச் செய்தார் அன்னை..

அவர் அளித்த நீரை வேகமாக பருகியவள் மீண்டும் படுத்துக் கொள்ள அவளது கண்கள் கனவில் கண்ட காட்சியில் மிரண்டு மூட மறுத்தன..

சில நாட்களாய் அடிக்கடி பாடாய் படுத்தும் கனவு இது!!.. முகம் முழுவதும் அடையாளம் தெரியாதபடி ரத்தத்தால் தோய்ந்த அந்த முகம் யாருடையது?!..

'ப்ப்ப்பா!!!..' காந்தம் போல ஈர்த்த அக்கண்களில் தான் எத்தனை காதல்!.. உயிர் போகும் தருவாயிலும் அந்த காதலில் தான் எத்தனை உறுதி!!..

அவளும் ஒவ்வொரு முறை அந்த கனவு வரும் போதும் அரண்டு விடுகிறாளே ஒழிய யாரென அறிய முடியவில்லை..தனக்கு தெரிந்து, யாருக்கும் அந்த பெயரும் இல்லை..

அந்த மாதிரி இடத்திற்கு கூட இதுவரை போனது கிடையாது.. மேலும் தெளிவில்லாமல் தெரிந்த அந்த முகத்தைக் கூட இதுவரை கண்டது போல நினைவும் இல்லை..

'இப்படி ஒருத்தன் உருகி உருகி லவ் பண்ணுனா நல்லார்க்கும் ல நதி!..' என்று நேரங்கெட்ட நேரத்தில் மானங்கெட்ட மனசாட்சி வேறு தன் பங்கிற்கு சிலாகிக்க,

'ஷ்ஷப்பா!!..இருக்கற இம்சை பத்தாது னு நீ வேற ஏன்டி படுத்தற பைத்தியம்!.. கம்முனு கெட!..' என்று அதனை தலையில் கொட்டி அடக்கினாள்..

ஒவ்வொரு முறை கனவில், அவனது உயிர்வலியை காணும் பொழுது எல்லாம்.. இவளது உயிர் வரை வலிப்பது போலானது ஏனென்று அறியாமல் குழம்பினாள்..

தனக்கே என்னவென்று தெளிவாக தெரியாத ஒரு விசயத்தை பற்றி அன்னையிடம் எப்படி உரைப்பது என புரியாததால் அவரிடம் சொல்லாமல் இருக்கிறாள்..

அப்படியே உரைத்தாலும் 'கண்ட கண்ட பேய் படத்தை எல்லாம் பார்த்தா இப்படி தான் கனவு வரும்!..' என்று அவளுக்கு தான் கொட்டு விழும்..அல்லது

'யாரையாவது காதலிக்கிறேன்னு அவங்களா முடிவு செய்து யாரு யாரு னு கேட்டு டார்ச்சர் செய்வாங்க!..' என்றெண்ணி அவரிடம் எதுவும் உரைக்காமல் அமைதியாக உறங்க முயன்றாள்..

****************

'நீ எப்ப வேணும்னாலும் எழுந்திரு!.. நான் என் வேலையை சரியா செய்வேன்!' என்று யாரைப் பற்றியும் கவலையின்றி கதிரவன் தன் கரம் கொண்டு அந்நாளை துவங்கி வைக்க..

வெகு சிரமத்துடன் கண் விழித்த நதியா, தன் காலை கடன்களை முடித்துவிட்டு காலை தேநீருக்காக தன் அன்னையைத் தேடி சமையலறைக்கு சென்றாள்..

"ம்மீ!!.. டீ!!." என அதிகாரமாக வந்த அவள் குரலில் அவளை முறைத்து விட்டு, "இந்த வெட்டி அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!!..ராத்திரி எதுக்குடி அப்படி கத்தின!?.." என காலையிலேயே ஆரம்பித்தார் சரஸ்வதி..

திருதிருவென விழித்தவள் பிறகு "மீ!!!..கத்திஃபையிங்!!!?.." என தன்னை காட்டி ஆச்சர்யமானவள், பின் யோசனையாக தலையை சரித்து தாடையில் விரலால் தட்டிவிட்டு,"அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லையே!!?.." என்று சமாளித்தாள்..

"அப்படியே வாயிலேயே குத்துனா தெரியும்!.. வாய்ப்பு இருக்கா?!.. இல்லையா னு?!.. இப்ப மட்டும் இவ்வளவு தெனாவெட்டா பேச தெரியுதுல.. ராத்திரி என்னத்த கண்டு அப்படி பயந்த!?.."என்றவர்

பின்னர் சட்டென நினைவு வந்தவராக,"ஆமா!!.. அது யாருடி ருத்ரா??!.." கேட்டுவிட்டு, "எனக்கு தெரியாம யாரையாவது லவ் பண்றியா டி செல்லம்?!.." என அவளை வெகு ஆர்வமாக பார்த்துக் கொண்டே கேட்டார் சரஸ்வதி..

"நோ!!!!!..." என்று முகத்தை ஒரு கையால் மூடியபடி கையை நீட்டி போலியாக அலறியவள் பின்னர், "என்னையே சந்தேகபடுறீங்களா சச்சும்மா?!.. என்னால இத ஏத்துக்கவே முடியல.. நான் இப்பவே டீ குடிச்சிட்டு குளிக்கப் போறேன்!!.." என்று விட்டு வேகமாக வெளியேறினாள் அவள்..

"போ!!..போ!.. இன்னும் எத்தனை நாளைக்கு மறைச்சு வைப்ப னு நானும் பாக்குறேன்!.. என்னைக்கு இருந்தாலும் என்னோட உதவியை கேட்டு வர தானே செய்வ!.. அப்ப பார்த்துக்கிறேன்!.. " சரஸ்வதி அசால்டாக சொல்லவும் வெளியேறியவள் திரும்பி ஓடி வந்தாள்..

"ம்மீ!!.. ப்ளீஸ்!!.. இப்படி ஒன்னுமில்லாத விசயத்தை ஊதி பெருசாக்கலாமா?!.. இதெல்லாம் ஒரு பெரிய மனுஷிக்கு அழகா?!.. சொல்லுங்கள்!..சச்சும்மா சொல்லுங்கள்!.." அவரை தாஜா செய்தவள்..

"உங்க சீமந்த புத்திரி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாள்னு உங்களுக்கே தெரியாதா!?.. ஏன் ம்மீ ஏன்?!.. காலையிலேயே இப்படி கடுப்பேத்துறீங்க?!.. " என்று அழும் நிலையில் கேட்டாள் நதியா..

"அப்போ சொல்லு!..ராத்திரி எதுக்கு ருத்ராஆஆ!!..னு கத்துன!?.. என்கிட்ட பொய் சொல்றியா பாப்பு?!.."என்று சந்தேகமாகக் கேட்ட அன்னையிடம் கையெடுத்து கும்பிட்டவள்,

"தாயே!..உண்மையிலேயே அப்படி எனக்கு யாரையும் தெரியாது!.. அது ஏதோ கனவில் வந்து இருக்கும் போல!.. ஆனால் சத்தியமா எனக்கு அப்படி யாரையும் தெரியாது!.. நம்புங்க தெய்வமே நம்புங்க!.. "

"உங்க பொண்ண நீங்களே சந்தேகப்படலாமா?!.." என்று அவள் நடிக்க துவங்கவும்.. "சரிதான் போடி!!.. காலையிலேயே ஆரம்பிச்சுட்டா ட்ராமாவை.. என்னமோ சொல்ற!.. நானும் இப்போதைக்கு நம்புறேன்!.. அவ்வளவுதான்.." என்றதும்,

"இது நல்ல பிள்ளைக்கு அழகு!.. அப்படியே கடகட னு காலைக்கு பூரியும் கிழங்கும் செய்துட்டு, மதியத்துக்கு எனக்கு டிபன் பாக்ஸையும் கட்டி வைங்க!..என் செல்ல அம்மா ல.." என அவரது நாடியை பிடித்து செல்லம் கொஞ்சியவள் மனதில்..

தான் கண்ட கனவை பற்றி அன்னையிடம் சொல்லலாமா?! வேண்டாமா?!.. என்ற குழப்பம் மேலோங்கிட மீண்டுமொரு முறை இதே கனவு தொடர்ந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்..

மகளது கையை தட்டி விட்டு, "இங்க என்ன ஹோட்டலா நடத்தறாங்க!?.. அதிகாரமா மெனு சொல்லிட்டு போற!.. எனக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்!.. முடிஞ்சா சாப்பிடு இல்லனா பட்டினியா போ!!.." என்றதும்,

"ப்ளீஜ் ம்மீ!!.. நான் உங்க செல்ல பொண்ணு தானே!.. ப்ளீஸ்!.. ப்ளீஸ்!!.." அவள் பாவம் போல் கெஞ்சவும், சிரித்துக் கொண்டே, "பொழச்சு போ!!.." என தனது வேலையைத் தொடங்கினார் சரஸ்வதி..

பிள்ளைகளின் உலகில் தன்னை பொருத்திக் கொண்டு அவர்களின் மகிழ்ச்சியே பிரதானம் என வாழும் சராசரிக்கு சற்று மேலான தாய் சரஸ்வதி..

தந்தை சுதர்சனம் மிலிட்டரியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.. தனியாக 'எஸ்.எஸ் மேன் பவர் ஸோர்ஸ்' என்ற நிறுவனத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்.. அதே மிடுக்குடன் வீட்டில் கூட அனைவரிடமும் அதே கண்டிப்புடன் வலம் வருபவர்..

அப்படிப்பட்ட சுதர்சனம் மற்றும் சரஸ்வதியின் செல்ல சேட்டைக்கார மகள் தான் நதியா!..பி.ஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் இறுதியாண்டு பயின்று கொண்டு இருக்கிறாள்..

இந்த படிப்பை அவள் தேர்ந்தெடுத்த போது அதைப்பற்றி விசாரித்த சுதர்சனம், 'தங்களது தொழிலுக்கு ஏற்ற படிப்பு தான்!' என்பதால் சம்மதிக்க, அவளோ வேறு ஒரு திட்டத்தில் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து இருப்பது அவருக்கு தெரியாது..

படிப்பில் படுசுட்டி.. அட்டகாசம் செய்வதில் அல்டிமேட்.. ஆனால் அதெல்லாம் வெளியில் மட்டும் தான்.. அவளுக்கென்று ஒரு கனவு உண்டு..
அதற்கான முதல் படியில் இருக்கிறாள்..

ஆனால் படிப்பை முடித்ததும் அவளுக்கு மணம் முடிக்க எண்ணி இருக்கின்றனர் பெற்றவர்கள்.. வரன் பார்க்கும் படலமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது..

இவ்விசயம் அவளுக்கு தெரியாது.. தெரிந்தால் ஒரு ஆட்டம் ஆடுவாள் என்று கமுக்கமாக இருக்கிறார் பெற்றவள்..இவளது ஆட்டமெல்லாம் தாயிடம் தான்.. தந்தையிடம் இவளது அடம் எல்லாம் செல்லாக்காசு!..

சுதர்சனம்-சரஸ்வதி தம்பதியினருக்கு அரவிந்த் என்ற அப்பாவியாக ஒரு ஆண் பிள்ளையும் உண்டு.. தந்தை சொல்லே வேதவாக்கு என்றிருப்பவன்..

இந்த வாயாடிக்கு அப்படியே எதிர்ப்பதம்!.. பரமசாது!.'வார்த்தைகள் அதிகமாக பேசினால் வட்டி கட்ட வேண்டும்!' என்று யாரோ 'இவனது மண்டைல பதியற மாதிரி அழுத்தி சொல்லிட்டாங்க போல!' அந்த அளவிற்கு அளந்து தான் பேசுவான்..

இவளை விட நான்கு வயது மூத்தவன், தன் பொறியியல் படிப்பை முடித்து விட்டு தனியார் கட்டுமான கம்பெனி ஒன்றில் டிசைனிங் டிபார்ட்மென்டில் பணிக்கு சென்று கொண்டிருக்கிறான்..

சிறிது நேரத்தில் சமையலறையில் தாயைத் தேடி வந்த அரவிந்த், "எனக்கு டைம் ஆகுது ம்மா!.." என்று அவசரப்படுத்தினான்.. அதன் பொருள் விரைவாக காலை உணவை தர வேண்டும், மதிய உணவும் கட்டித்தர வேண்டும்..

"பெரிய டெலிக்ராம் பண்றான்!!.." என வாய்க்குள் சலிப்போடு முணுமுணுத்த சரஸ்வதி, "ஏன்டா டைம் எப்பவும் ஆக தானே செய்யும்!.. அதுக்கென்ன இப்ப??!.." என வேண்டுமென்றே அவனை பேச வைக்க வம்பிழுத்தார்..

அதற்கு பதில் என்னவோ வெறும் முறைப்பு மட்டுமே!.. அவனை பார்த்து பெருமூச்செறிந்து விட்டு, "வாயை தொறந்து ரெண்டு வார்த்தை கூட பேசுனா குறைஞ்சு போயிடுவியா என்ன?!.." என்றவர்,

"அப்படியே அப்பனை கொண்டு, வந்து இருக்கு!..எனக்கு னு வந்து வாய்க்குது பாரு எல்லாம்!!.. என் தலையெழுத்து!!.." என்று முன்னதை சத்தமாகவும், பின்னதை வாயிற்குள்ளும் முணுமுணுத்தவாறே நொடித்துக் கொண்டார்..

இவ்வளவு பேச்சிற்கும் அவனிடமிருந்து "ம்மாஆ!!!.. " என்ற அழுத்தமான அழைப்புடன் ஒரு சலிப்பு மட்டுமே ரியாக்ஷன்!..

"உன்னைய பேச வைக்கிறதுக்கு பதிலா பிறந்த குழந்தையை கூட பேச வைச்சுடலாம் போல!..வாயை தொறந்து ரெண்டு வார்த்தை அதிகமா பேசுனா காசெல்லாம் கேட்க மாட்டேன் டா!.." என அவர் கூறிட அதற்கும் அவன் முறைக்கவும்,

"இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் ரெடி ஆகிடும் பா அரவிந்தா!.. போய் நீ ரெடி ஆகிட்டு வா!.." நக்கலுடன் சலிப்போடு கூறி அவனை அனுப்பி வைத்தார்..

அவரும் வெகு வருடங்களாக அவனை மாற்ற முயற்சிக்கிறார்.. பலன் என்னவோ சுழியம் தான்!.. அவன் என்ன செய்வான்?!..அப்படியே தன் தந்தையின் உர்ராங்குட்டான் குணத்தை கொண்டு வந்துள்ளான்!..

காலை நடை பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பி இருந்த சுதர்சனம், மேஜை மீதிருந்த செய்தி தாளோடு அமர்ந்துவிட கையில் அவருக்கான சத்துமாவு கஞ்சியோடு நின்றிருந்தார் சரஸ்வதி..

"பிள்ளைக ரெடி ஆகிட்டாங்களா?!.." என்று கேட்ட கணவனிடம், "ரெடி ஆகிட்டே இருக்காங்க!.. சாப்பிட்டா வேலை முடிஞ்சது!.." என செய்தி போல் கூறினார் அவரது தர்மபத்தினி ..

"ம்ம்ம்!.." என்ற ஒற்றைச் சொல் அதற்கான அவரது எதிர்வினையாக முடிந்திட, பெருமூச்சுடன் சரஸ்வதி அங்கிருந்து அகன்றார்..

அப்போது, "டேய் அண்ணா!.. எனக்கு இந்த டிரஸ் மட்டும் கொஞ்சம் அயர்ன் பண்ணி தாயேன் டா!!.." என எப்போதும் போல கேட்டுக்கொண்டே அரவிந்தின் அறைவாசலை நெருங்கியவள்..

தந்தை ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டு இருப்பதை அறியாமல் அவரது கடும் முறைப்பிற்கு ஆளாக, அவரை கண்ட அதிர்ச்சியில் வாய் திறந்தபடி அப்படியே நின்றாள்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top