Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 120
- Thread Author
- #1
கனவு - 15
நதியா காலை கண் விழிக்கும் போது எப்போதுமே பாட்டி இருக்க மாட்டார் தான்.. ஆனால் தன்னருகே படுத்து இருக்கும் சிந்துவையும் காணாமல் குழம்பியவள்,
தனது தாய், அத்தை என யாரும் கண்களுக்கு புலப்படாமல் இருக்க, தேடிக் கொண்டே பின்கட்டுக்கு வந்தவள், பெண்கள் எல்லாம் அங்கு குழுமி இருப்பதை கண்டு தலையை சொறிந்தாள்..
"மம்மீ!!.." என தன் அன்னையை அழைத்தவளை, திரும்பி பார்த்த சரஸ்வதி, "உள்ள போடா பாப்பு!.. இதோ வந்து உனக்கு பால் கலந்து தர்றேன்!.." என அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முனைந்தார் சரஸ்வதி..
"என்னாச்சு ம்மா!.. ஏன் எல்லாரும் இங்க இருக்கீங்க?!.. இதென்ன புதுசா இங்க குடிசை எல்லாம் இருக்கு!!?.." என குழப்பமாக கேள்வி மேல் கேள்வி கேட்ட மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் அவள் அன்னை..
அவளை ஹாலில் அமர செய்து விட்டு சமையலறைக்குள் சரஸ்வதி நுழைய, அப்போது தான் தன்னருகே இருந்த அரவிந்தனை கண்டவள், "டேய் அண்ணா!.. இங்க என்ன தான் நடக்குது!.. நீ ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க!?.." என புரியாமல் கேட்டாள்..
"நல்லா தூங்கிட்டு இருந்தேன் டா பப்பிமா!.. திடீர்னு எழுப்பிவிட்டு, ஓலையெல்லாம் வைச்சு அந்த குடிசை கட்ட சொன்னாங்க!..அப்றம் நம்ம சின்ட்டு குட்டியை குளிக்க வைச்சு கூட்டிட்டு போனாங்க!.. என்னைய போ னு துரத்தி விட்டுட்டாங்க!.." என பாவமாக நடந்ததை கூறினான்..
அரவிந்த் கூறி முடித்ததும், கிளுக்கிச் சிரித்த நதியா,"அதொன்னுமில்ல டா அண்ணா!.. அவ பெட் லேயே சுச்சூ போயி இருப்பாளோ என்னவோ!!.." என்றவள்,
பின்பு அவனது காதருகே வந்து,"அவ அடிக்கடி இந்த மாதிரி தான் செய்வா!.." என ரகசியமாக கூற, அவளது தலையிலேயே குட்டு வைத்த அண்ணங்காரன், "ச்சீஈஈ!.. இதெல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்காதே லூசு!.." என அறிவுரைத்தான்..
"ஆஆஆவ்!.. வலிக்கிது டா அண்ணா!.." என தன் தலைய தேய்த்தவள்," நான் அப்படி எல்லா பண்ண மாட்டேன் ண்ணா!.." என சொல்லிக் கொண்டிருக்க சரஸ்வதி இருவருக்கும் கலந்து வந்த பாலை நீட்டினார்..
"மம்மீ!.. சிந்து இனிமே பெட் ல சுச்சூ போகாம இருக்க நான் அவகிட்ட சொல்லி வைக்கிறேன்!.. அதுக்காக எதுக்கு அவளை தனியா அடைச்சு வைச்சு இருக்கீங்க!?.." எனக் கேட்டவளை கண்டு திகைத்தவர் பின்பு சிரித்து விட்டார்..
இவள் சொன்னதும் தலையிலடித்துக் கொண்டு அரவிந்தன் அந்த இடத்தை விட்டு நகர "அடியேய்!.." என கூறி சிரித்தவாறே, "அது இல்ல டா பாப்பு!.. அவ வயசுக்கு வந்துட்டா!.." என சொன்னது தான் தாமதம்,
"அதெப்படி வயசாகும்?!.. என்னை விட ஒம்பது மாசம் சின்னவ!.. அதுக்குள்ள எப்படி அவளுக்கு வயசாகும்!?.." என புரியாமல் கேட்டவளை முறைத்த சரஸ்வதி, இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க என யோசித்தார்..
"வயசாகல டா!.. இது வேற...." என்றவர் அவளிடம் 'என்ன சொல்ல!?'என குழம்பியவர், அவளுக்கு புரியும்படி ஏதோ தனக்கு தெரிந்த அளவில் விளக்கம் கூறினார்..
அதில் அவளுக்கு புரிந்தது இதுதான், "அப்ப இன்னும் பத்து நாளைக்கு சிந்து ஸ்கூலுக்கும் வர மாட்டா, விளையாடவும் வர மாட்டாளா!!?.." என அதிர்ச்சியாக கேட்டதற்கு, சரஸ்வதி ஆமென்று தலையசைக்க, நதியாவின் முகம் கூம்பிப் போனது..
சில மணிநேரங்களுக்கு முன்பு..
அதிகாலை உறக்கத்தில் இருந்து இயற்கை அழைப்பிற்காக எழுந்த சிந்து, பதறி "அப்பத்தாஆஆ!.." என அழைத்ததில் வேகமாக எழுந்து வந்தவர், அவளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவளது பெற்றோரை காணச் சென்றார்..
"காவேரி!.. கதவைத் திற!.." என்றவர், அவர்கள் வெளியில் வந்ததும் சிந்து பூப்பெய்தியதை சொன்னதும் அவளது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்..
அதிலும் காவேரிக்கு தனது மகளை விட சில மாதங்கள் பெரியவளான நதியாவிற்கு முன்பே சிந்து பூப்படைந்ததில் ஆனந்தம் தாங்க முடியவில்லை..
கோதாவரி பாட்டி அப்போதே அனைத்திற்கும் தயார் செய்து, அவளுக்கு குச்சு கட்ட தாய்மாமன் இல்லாததால் உறங்கிக் கொண்டிருந்த அரவிந்தனை எழுப்ப, தனக்கு ஒரு சகோதரன் இல்லாமல் சகோதரி மட்டும் இருப்பதை எண்ணி காவேரி கடுப்பேறிய தருணம் அது..
தூக்கக் கலக்கத்தில் வந்தவனிடம் என்ன ஏதென்று கூறாமல் சொன்னதை செய்ய சொல்லிவிட்டு அனுப்பி விட்டனர்.. அதனால் தான் பையனுக்கு ஒன்றும் புரியவில்லை..
அம்மணி கும்பகர்ணன் போல தூக்கம்!.. அதனால் நடந்த எதுவும் தெரியாது.. இப்போது தாய் சொன்னது கூட பெரிதாக புரிந்துவிடவில்லை.. ஆனால் அவள் இன்னும் சில நாட்கள் அந்த குடிசைக்குள் தான் அடைந்து கிடப்பாள் என்பது மட்டும் புரிந்தது..
தனது விளையாட்டு தோழி இல்லாமல் சோகமான நதியா, "அப்ப அவ கூட பேசக்கூட முடியாதா ம்மா?!.." என வருத்தமாக கேட்க, மகளது வருத்தத்தை உணர்ந்தவர்,
"அதெல்லாம் பேசலாம் டா!.. அவ தான் வெளியே வர மாட்டா!.. நீ அவ கூட அங்கேயே உட்கார்ந்து விளையாடலாம்!.." என கூறியதும் அவளுக்கு சற்று நிம்மதியானது..
"ஆனா அண்ணா தான் அங்க போகவும் கூடாது.. அவளை பார்க்கவும் கூடாது!.." என்று அவர் அடுத்து சொன்னது, அப்போது தான் அங்கு வந்த அரவிந்தனை அதிர்ச்சியாக செய்தது..
"ஏன்??!..ஏன்?!.. ஏன் நான் போக கூடாது?!.. பார்க்க கூடாது?!.." என பொங்கிக் கொண்டு வந்தவனை, "அது அப்படி தான் டா!.." என ஒரே வசனத்தில் அடக்கி விட்டார் தாய்..
அதன்பின் அந்த பத்து நாட்களும் நதியா, சிந்துவின் இடத்திற்கு சென்று அவளுடன் விளையாடிக் கொண்டிருக்க, வீட்டில் இருக்கும் போது அவளிடம் எப்போதுமே வம்பிழுத்துக் கொண்டிருக்கும் அரவிந்தனுக்கு தான் போரடித்தது..
ஆமையாய் நகர்ந்த அந்த ஒரு வாரம்
முடிந்து அவளுக்கு விசேஷம் வைக்க, நலங்கு வைப்பதற்காக பட்டுப்புடவை கட்டி மரப்பாச்சி பொம்மை போல அழகாக வந்து நின்றவளை கண்டவன் கண்களுக்கு புதிதாக தெரிந்தாள் அவள்..
ஒரு வாரமாக அளித்த ஊட்டமும், வெயில்படாத தேகமும் இன்னும் மெருகேற்றி அவளது முகத்தில் புதுவித ஷோபையை ஏற்படுத்தி இருக்க, நதியாவே, "என்ன டி சின்டு திடீர்னு இவ்ளோ அழகாயிட்ட!!!?.." எனக் கேட்டதும் புதிதாய் நாணம் கூட பிறந்தது அவளுக்கு..
அதன்பின் ஒவ்வொருவராய் வந்து நலங்கு வைத்து செல்ல, சிந்துவையே புதிதாக பார்த்து கொண்டு இருந்த அரவிந்தனின் மனம்,
'சின்ன பொண்ணு டா!.. அப்படி பார்க்க கூடாது!..அடங்குடா!..' என கட்டுப்படுத்த.. தன்னை சமன்செய்து கொண்டவன் இயல்புக்கு வந்தான் பையன்..
நிகழ்ச்சி இனிதே நிறைவடைய, அதன்பின் வந்த நாட்களில் வழக்கம் போல நதியாவுடன் பள்ளிக்கு சென்றாள் சிந்து.. ஆனால் அரவிந்தனிடம் ஒரு ஒதுக்கத்தை காட்டினாள்..
' என்ன செய்ய!? ' சிறு பெண்ணிற்கு அளிக்கப்பட்ட அறிவுரை அப்படி!!?.. அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்!.. ஆண்களிடம் பேசாதே!.. தனியாக எங்கும் செல்லாதே!..
பாவாடை சட்டை போட்டாலும் மேலாக்கு போடு!.. என ஒரு ரூல்ஸ் புக்கே எழுதும் அளவிற்கு இருக்குமே!.. அவளது பிள்ளை மனதிலும் அது பதிந்து போக..
அதுவரை பட்டாம்பூச்சியாய் சுதந்திரமாய் சுற்றி திரிந்தவள் வீட்டுக்கிளியாக மாறினாள்..
நதியா தான் புலம்பிக் கொண்டு இருந்தாள்..
"நீ ரொம்ப மாறிட்ட சிந்து!.."என்று அவளிடம் குறைபட, "உனக்கும் இதுபோல நடக்கும் போது புரியும் டி நதி!.. அப்றம் நீயும் இப்படி தான் இருப்ப!.." என பெரிய மனுஷியாக அறிவுரைக்கும் அளவுக்கு மாறி விட்டாள்..
"என்னால எல்லாம் உன்னை போல அப்படி அடைஞ்சு இருக்க முடியாது பா!.." என நிதர்சனம் புரியாமல் இருந்த நதியா சொல்லவும், சிந்துவால் சிரிக்க தான் முடிந்தது..
"ஏழாங்கிளாஸ் தானே படிக்கற என்னமோ ஏழாம் அறிவு சூர்யா மாதிரி ரியாக்ஷன் கொடுக்கற?!.. நீ இப்ப விளையாட வர்றியா.. இல்லையா?!.." என விடாப்பிடியாக கேட்டதற்கு அவள் மறுக்க சரியென விட்டு விட்டாள் நதியா..
அந்த ஆண்டின் விடுமுறைக்காக வந்த சுதர்சனம், சிந்துவின் விசேஷத்திற்கு வர முடியாததால், மாமன் சீராக அவளுக்கான தங்க ஆபரணங்கள் வழங்கியதில்,
காவேரிக்கு குறை சொல்ல ஒன்றும் இல்லாமல் போனது..
தன்னை கண்டாலே ஓடி ஒளிந்து கொண்டும், வம்பிழுக்கும் போது சிணுங்கிக் கொண்டும், பாட்டியை பஞ்சாயத்துக்கு அழைக்கும் பழைய சிந்துவை காணாமல் அரவிந்தனுக்கு தான் எதையோ இழந்தது போலானது..
நாட்களும் மாதங்களாக.. மாதங்களும் வருடமாய் மாற, நதியா மட்டும் இன்னும் வலையில் அகப்படாத பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டும் புதிது புதிதாக பஞ்சாயத்துகளை இழுத்துக் கொண்டும் தான் இருந்தாள்..
தன்னிடம் ஏதோ ஒரு விதத்திலாவது பேசிக் கொண்டு இருந்த தனது அண்ணி, இப்போது தேவையை தவிர அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசாததில் வருத்தமடைந்த சரஸ்வதி,
"ஏன் அண்ணி எங்கிட்ட இப்ப எல்லாம் நீங்க பேசறதே இல்ல!!?.. நானும் நிறைய வாட்டி கேட்டுட்டேன்!.. பதிலே சொல்ல மாட்டீன்றீங்க?!.." என வாய்விட்டு கேட்டே விட்டார்..
அதற்கு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு, "அப்படி எல்லா ஒன்னும் இல்லையே!.." என வேகமாக கூறிய காவேரி, "இதையும் உங்கொண்ணன் கிட்ட போட்டு கொடுத்திடாதே தாயே!.." என கூறவும்..
அவள் பேச்சில் குழம்பிய சரஸ்வதி, "நான் என்ன!?..எப்ப!?..எதை அண்ணன் கிட்ட சொன்னேன்!!?.. ஏன் அண்ணி இப்படி எல்லாம் சொல்றீங்க!?.." என புரியாமல் கேட்டார் சரஸ்வதி..
"ஆமாமா!.. உனக்கு ஒன்னுமே தெரியாது பாரு!.. போயி வேல பொழப்பை பாரு சரசு!.. மத்தியான சாப்பாட்டுக்கு பொழுதாயிட்டு இருக்கு!.." என அப்பேச்சை கத்தரித்தாள் காவேரி..
'தான் என்ன செய்தோம்!?.. இதற்கும் தன் சகோதரன் அன்று தன்னிடம் கேட்ட போது கூட இவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே!?..' எனக் குழம்பிய சரஸ்வதி அதன் பின்னர் காவேரியிடம் பெரிதாக கேட்டுக் கொள்வதில்லை..
பெரியவர்களின் நாட்கள் இப்படி பட்டும்படாமல் சென்று கொண்டிருக்க, அரவிந்தனும் தனது பள்ளிப்படிப்பின் இறுதி வருட பொதுத்தேர்வை முடிந்துவிட, நதியாவும் சிந்துவும் தங்களது எட்டாம் வகுப்பு தேர்வுகளை முடித்து விடுமுறையில் இருந்தனர்..
சிந்து பூப்பெய்திய பிறகும் அவளை விட பெரியவளான நதியா இன்னும் மலராமல் இருப்பதில் சரஸ்வதியும், கோதாவரியும் கவலையில் ஆழ்ந்து இருந்த சமயம்,
தனது வருடாந்திர விடுமுறைக்காக சுதர்சனமும் வந்து சேர்ந்தார்.. வந்தவர் ஒரு முடிவோடும் வந்து இருந்தார்..
சுதர்சனம் வந்ததால் சில நாட்களுக்கு மேல் வீட்டிற்குள் அடைந்து இருக்க முடியாத நதியா, சிந்துவை ஆன மட்டும் கரைத்து ஆசைகாட்டி, வெளியே வர சம்மதிக்க, பாட்டி தடை சொன்னார்..
அதற்கு, "ப்ளீஸ் அம்மாச்சி!.. சிந்துவை வெளியே தான் விளையாட விட மாட்டீன்றீங்க!.. அட்லீஸ்ட் தோட்டத்துக்காகவது போய் நாங்க வெளாடுறோமே!!!.." என்ற அவரது செல்லப் பேத்தியின் கெஞ்சலில் கரைந்தவர்,
"இல்ல மொசக்குட்டி!.. உன்ற அப்பாரு வேற வீட்ல இருக்காரு.. வெளியே போய் எதாவுது பிரச்னை வந்துட போவுது கண்ணு!.." எனக் கூறி தயங்கினார்..
பாட்டிக்கு சம்மதம் தான் என்பதை உணர்ந்த நதியா, அரவிந்தனை பாதுகாப்பிற்காக அழைத்துச் செல்வதாக உறுதி கூறி பாட்டியிடம் மன்றாடி மூவரும் சென்றனர்.
விதியின் விளையாட்டை அறிந்து இருந்தால், விளையாட சென்றிருக்க மாட்டார்களோ!!?