Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 119
- Thread Author
- #1
கனவு - 13
மதிய உணவை முடித்து விட்டு சற்று இளைப்பாறுவதற்காக திண்ணையில் வந்து அமர்ந்த கோதாவரி, கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க.. அங்கே வந்து கொண்டிருந்தவர்களை கண்டு திகைத்தார் அவர்..
சட்டை ட்ரவுசர் எல்லாம் சற்று கிழிந்து, பார்க்கவே பரிதாபமான ஒரு கோலத்தில் நின்ற சிறுவனையும் அவனது தாயையும் கண்டவர் பார்வை..
அவர்களுக்கு அருகே தலைமுடி எல்லாம் கலைந்து, ஒரு பக்க ஜடை முழுவதும் பிரிந்து விரிந்திருக்க.. மற்றொரு ஜடை ரிப்பனில் தூக்கிலிட்டது போல ஊசலாடிக் கொண்டிருக்க..
ஏதோ கழனி வேலை பார்த்தது போல் உடையெல்லாம் புழுதி மண்ணாக.. முகத்தில் இன்னும் குறையாத கோபத்துடன் நின்றிருந்த பேத்தி நதியாவையும்..
அவள் அருகே கண்களில் கலவரத்துடன் நின்றிருந்த சிந்துவையும் கண்டவர், "இன்னிக்கி என்ன பஞ்சாயத்தை இழுத்துட்டு வந்து இருக்காளோ!!?..." என முணுமுணுத்துக் கொண்டு சலித்தார்..
"டேய்!!. நீ நம்ப மேக்கால வீட்டு ரங்கசாமி மவன் தானே டா?!.. என்னடா கோலம் இது?!.. என்னாடி ஆச்சு கோமளா?!.." என்ன நடந்ததென்று புரியாமல் வந்தவளிடம் கேட்டார் கோதாவரி பாட்டி..
"இங்க பாருங் ஆத்தோவ்!.. உங்கட பேத்தியை கொஞ்சம் கண்டிச்சு வைங்!.. இதோ பாருங் என்ற பையனை என்ன பாடுபடுத்தி இருக்கா னுட்டு.." என தன் பையனை அவரருகே இழுத்துக் காட்டினாள் அந்த கோமளம்..
"என்ற பேத்தி காரணம் இல்லாம இப்டி செய்ய மாட்டா டி.. உன்ற பையன் என்ன பண்ணுனானோ?!.." என்று அப்போதும் அவர் தன் பேத்திக்கு வக்காலத்து வாங்கிவிட்டு,
உடனே தன் பேத்தியை, "இங்க வா மொசக்குட்டி!.." என்று அருகே அழைத்தவர், "அவன் என்ன செய்தான் கண்ணு!?.. என்ன இருந்தாலும் நீயி இப்டி கை நீட்றது தப்பு தான கண்ணு!?.." என
செல்லங்கொஞ்சி பாடம் எடுப்பதை கண்ட கோமளத்திற்கு, 'கிழவி கிட்ட பேத்தியை கண்டிச்சு வை னு சொன்னா..கண்டிக்கற லட்சணத்தை பாரு!.' என அடுப்பில் வைத்தது போல கடுப்பேறியது..
"அவன் தான் அம்மாச்சி முதல்ல எங்கள வம்புக்கு இழுத்தான்!.." என நதியா ஆவேசமாக ஆரம்பிக்க,
"அப்படியே இருக்கட்டும் கண்ணு!.. ஆனா என்ன நடந்தாலும் பெரியவ நா இருக்கனல்லோ.. எங்கிட்ட கூட்டிட்டு வரலாமல்லோ கண்ணு!.." என்று கோதாவரி பாட்டி இன்னும் அவளை கொஞ்சிக் கொண்டிருக்க,
கோமளத்திற்கு இருப்பு கொள்ளவில்லை, "ஏனுங் ஆத்தோவ்!.. பேத்திய கண்டிப்பீங் னு பார்த்தா இப்ப தான் என்னவோ பூப்போல பேசிட்டு இருக்கீங்!.." எனக் கேட்டே விட்டாள்..
"அட இரு டி!.. அதா விசாரிச்சுட்டு இருக்கனல்லோ.. சித்தநேரம் நீயி சும்மாயிரு!.." என அவளை அதட்டி விட்டு, மீண்டும் பேத்தியிடம் அதே போல பேசவும், கோமளாவிற்கு வெறுத்தே விட்டது..
" அதில்ல அம்மாச்சி!.. நாங்க எல்லாரும் செவன் ஸ்டோன் விளையாடிட்டு இருந்தோம்!.." என அவள் விளக்கத் தொடங்க," சே..ரி!.." என பாட்டி இசைப்பாட்டு பாடியதில், வந்தவளுக்கு 'ஷப்பா!!.. இப்பவே கண்ண கட்டுதே!' என்று இருந்தது..
"அப்ப அவன் அவுட் ஆகிட்டு ஒத்துக்க மாட்டே னுட்டான் அம்மாச்சி!.." என்று நதியா கோபமாக சொல்ல," அப்டியா கண்ணு!!.." என அவர் ராகம் போட்டதில்..
கோமளா, "ஆத்தாஆஆ!.." என கத்தியே விட்டாள்..அவர் அவளை முறைத்து விட்டு, பேத்தியை கனிவோடு பார்க்க, அவள் நடந்ததை விளக்கத் தொடங்கினாள்..
பாட்டி விளையாட வெளியே விட்டதும், அக்கம்பக்கம் இருந்த சின்ன வாண்டுகளை சேர்த்துக் கொண்டு செவன் ஸ்டோன் விளையாடிக் கொண்டிருந்தனர்..
ஏழு கற்களை ஒன்றன்மீது ஒன்றாக ஒரு அணி அடுக்க, அவர்களை அடுக்க விடாமல் தடுக்க ஒரு அணி என்று பிரிந்து விளையாடிக் கொண்டிருக்க,
கடைசி கல்லை கணேசன் அடுக்கும் முன்பே, பந்தை நதியா சிந்துவிடம் வீச, அவள் அவனை அடித்து அவுட் ஆக்கி விட்டாள்.. ஆனால் அவன் இல்லை என பிடிவாதமாக இருந்தான்..
"இங்க பாருடா கணேசா!.. ஒழுங்கா ஒத்துக்க.. நீ கல்லை மேல வைக்கும் முன்னேயே பால் உம்மேல பட்டுடுச்சு!.. நான் பார்த்தேன்!.." என நிதானமாக சிந்து பேசிக் கொண்டிருக்க, அவன் இல்லவே இல்ல என்று சாதித்தான்..
சிறிது அடம் பிடித்தவன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கடுப்பானவன், "நான் அவுட்டே இல்ல.. போடி கருவாச்சி!.." என்று அவளை திட்டிவிட,
பால் போன்ற நிறத்தில் இருக்கும் நதியாவை விட சிந்து, சற்று நிறம் குறைவாக மாநிறத்தில் இருப்பதில், ஏற்கனவே அவளுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு..
இப்போது இவனும் அதையே குத்தி காட்டியதில் அவள் முகம் கூம்பிப் போக, அவளது உணர்வை புரிந்த நதியா எப்போதும் யாரும் அவளை குறைத்து பேச அனுமதிக்க மாட்டாள்.. அதனால் உடனே அவனிடம் பாய்ந்து வந்தாள்..
"டேய் கணேசா!.. ஒழுங்கா சிந்து கிட்ட ஸாரி கேளு!.." என முதலில் இழுத்து வைத்த பொறுமையுடன் சொல்ல, "அதெல்லாம் முடியாது போ!.." என்று அவளிடம் கூறியவன்,
"பால் எம்மேல படவே இல்ல.. பொய் சொல்லாத டி நூடுல்ஸ் மண்டை!.." என கேலி சிரிப்புடன் சிந்துவை சொன்னது தான் தாமதம், நதியா பொங்கி விட்டாள்..
"அடேய்!!!..மூக்கொழுக்கி!..உன்னைய என்ன பண்றேன் பார்!.."என அவன் மீது பாய்ந்து அவனது தலைமுடியை ஆய்ந்து, அவனோடு சேர்ந்து மண்ணில் புரண்டு, அவனை அடித்து துவம்சம் செய்து விட்டாள்..
நடந்து முடிந்ததை சொன்ன நதியா, "நீங்களே சொல்லுங்க அம்மாச்சி!.. ஒருத்தர் உருவத்தையும், கலரையும் கிண்டல் பண்றது தப்பு தானே!.."
"இந்த கொழுப்பெடுத்த பைய..நம்ம சிந்துவையே சொன்னதும் எனக்கு கோபம் வந்துடுச்சு!.." என இன்னும் கோபம் தணியாமல் கூறி முடிக்கவும்,
அப்போது தான் விளையாடி விட்டு வீடு திரும்பிய அரவிந்த், ஆட்கள் நிற்பதை கண்டு குழம்பியவன் காதுகளில் தங்கை சொன்னது விழுந்து விட்டது..
"இவன் நம்ம சிந்து குட்டிய கிண்டல் பண்ணுனானா டா பப்பிமா?!.." என கோபத்துடன் தன் தங்கையிடம் கேட்க," ஆமா டா அண்ணா!.. அதான் அடிச்சுட்டேன்!.." என்று தனக்கு ஆதரவாக ஆள் வந்ததும் அவளது குரலில் உற்சாகம் பிறந்தது..
"நீயா இருக்க போய் இதோட விட்டுட்ட பப்பிமா!.. நான் மட்டும் அங்க இருந்தேன்னு வை அவன் சில்லு மூக்கை உடைச்சு இருப்பேன்!.." என
கோபமாக கை ஓங்கிக் கொண்டு வந்த அரவிந்தனை கண்டு அந்த கணேசனாகப்பட்டவன் பயப்பட, நம்ப அம்மணிக்கு உள்ளுக்குள் சந்தோஷம் தாங்க முடியவில்லை..
அத்தோடு 'தாய் என்ன சொல்லுவாளோ?' என அழுது கொண்டு கலக்கத்துடன் நின்ற சிந்துவை," நீ அழாதே டா!.. இனிமே இந்த மாதிரி எதனா நடந்தா மாமா கிட்ட சொல்லு!.. அவங்களை ஒருவழி பண்ணிடுறேன்!.." என தைரியமூட்டி,
அவளது கண்ணீரை துடைத்து பாசமாக அவளை தோளோடு அணைக்க, எப்போதும் தன்னிடம் வம்பிழுக்கும் மாமனுக்கு தன் மீதும் பாசம் இருக்கிறது என்பது புரிந்து, அவனை கட்டிக் கொண்டு நின்றாள்..
"கண்ணுகளா சித்த கம்முனு இருங்க.. நா பேசிக்கறேன்!..ஏடி கோமளா கேட்டியா?!.. இனிமேயாவது பையனுக்கு நல்ல புத்தி சொல்லி வை!.." என அவர்களை கோதாவரி போகச் சொல்ல..
'இந்த கிழவி கிட்ட போய் நாயம் கேட்க வந்தேன் பாரு.. என்னை சொல்லனும்!..' என தன்னையே நொந்து கொண்ட கோமளத்திற்கு நதியா சொன்ன விசயம் புரியவே இல்லை..
" வாடா போலாம்!.." என தன் மகனை அழைத்தவள், "இனிமே கொண்டு இவளுகளோட வெளாண்ட.. நானே உங்காலை ஒடைச்சு வூட்ல உட்கார வச்சுருவேன் பார்த்துக்க!.." என மிரட்டிக் கொண்டு சென்றாள் அவனது அன்னை..
சமையலறையில் வேலை முடித்து விட்டு இவர்களின் பேச்சைக் கேட்டு கொண்டே வெளியே வந்த சரஸ்வதி, "ஏன்டா பாப்பு இப்படி அடிதடி எல்லாம் பண்ற?!.. அவன் தப்பா பேசினா பெரியவங்க கிட்ட சொல்லனும்!.." என அவளுக்கு அறிவுரைக்க,
"அதானே!.. எந்த பொட்டபுள்ளயாவது இப்படி ஆம்பள பைய மாதிரி இவ்ளோ ராவடிதனம் பண்ணிட்டு இருப்பாளா?!.. " என நதியாவை மட்டம் தட்டிக் கொண்டு வந்த காவேரி,
அங்கு நெருக்கமாக நின்ற இருவரையும் கண்டு திடுக்கிட, அவளது பேச்சில் அங்கிருந்த, புரியாத சிறு பெண்களை தவிர மற்றவர் முகம் சுழித்தனர்..
காவேரியின் பார்வையை உணர்ந்த அரவிந்த், சிந்துவை விட்டு சற்று விலகி நிற்க, சரஸ்வதி தன் அண்ணன் மனைவியுடன் பிணக்கம் வேண்டாமென நினைத்து எதுவும் பேசாமல் அமைதி காக்க,
"என்னத்தை நீங்க?!.."என நதியா தன் அத்தையிடம், "அவன் நம்ம சிந்துவை கிண்டல் பண்றான்.. அவனை சும்மா விட சொல்றீங்களா?!.." என அவரின் சூட்சம பேச்சு புரியாமல் வேகமாக, கேள்வியை கேட்டாள்..
"சேரி கண்ணுகளா!!.. போயி எல்லாரும் சாப்பிடுங்க!.. பொழுது போயிட்டு இருக்குல்ல.." என சுதாரித்த கோதாவரி பிள்ளைகளை வீட்டினுள் அனுப்பி வைக்க, சரஸ்வதியும் அமைதியாக அவர்களுடன் உள்ளே சென்று விட்டார்..
அங்கிருந்து நகரப் போன காவேரியை, "காவேரி நில்லு!.." என நிறுத்திய கோதாவரி," புள்ளைங்க ஒன்னுமண்ணா ஒத்துமையா இருக்குங்க!.. உன்னோட வித்தார பேச்சுல அதுங்க மனசுல விசத்தை வெதைக்காத!.." என எச்சரித்து,
"ஒரு அளவுக்கு தான் நா விளக்கி சொல்லுவேன்!.. ஒனக்கு அது புரிய மாட்டீங்குது னா என்ற மகனை வேணும்னா சொல்ல சொல்லவா?!.." என்றார்..
உடனே, "அப்டி எல்லா ஒன்னும் இல்லைங் த்தை!..சும்மா வெளாட்டா தான் சொன்னேனுங்!.." என பின்வாங்கிய மருமகளை ஒரு முறைப்புடன் பார்த்தவர் உள்ளே சென்று விட்டார்..
காவேரிக்கு தனது மகளை விட துறுதுறுப்புடனும், தைரியமாகவும் இருக்கும் நாத்தனாரின் மகள் நதியாவின் மீது எப்போதும் பொறாமை உண்டு..
அதனால் அவளை மட்டம் தட்ட நினைத்து அவ்வப்போது இவ்வாறு பேச்சில் வெளிப்படுத்தி விடுவாள்..
அவளது முதல் பிரசவமே மிகவும் சிக்கலாக முடிந்ததோடு,
அவளது கருப்பையில் பிரச்சனை என்று அது நீக்கப்பட்டதால், அந்த வீட்டின் ஆண்வாரிசாக தனக்கு பிள்ளை இல்லாமல் அரவிந்தன் மட்டுமே இருப்பதில் ஏக கடுப்பு..
இவர்கள் இந்த வீட்டை விட்டு சென்றால் மட்டுமே தனக்கும் தனது பிள்ளைக்கும் முன்னுரிமை கிடைக்கும் என்ற வேண்டாத எண்ணமும் உண்டு..
இப்படியே காவேரியின் புகைச்சலோடும், கோதாவரியின் எச்சரித்தலோடும் நாட்கள் நகர, சுதர்சனமும் தனது விடுமுறை நாட்களுக்காக தன் குடும்பத்தை காண ஊர் திரும்பி இருந்தார்..
வெகு மாதங்களுக்கு பிறகு வந்த தங்கையின் கணவனை மனம் நிறைந்த அன்போடு உபசரித்து அனைத்தும் செய்தார் சண்முகம்..
தன் மனைவியிடமும் 'இதை செய்!.. அதை செய்!..' என்று உத்தரவு வேறு..
காவேரியும் பெரிதாக விலக்கம் எதுவும் காட்டிக் கொள்ளாமல், அவர் சொன்ன மாதிரி விருந்துபசாரம் செய்ய, கோதாவரி பாட்டி சற்று நிம்மதியானார்..
ஆனாலும் சுதர்சனம் அங்கிருந்த நாட்களில், எதிர்பாராமல் காவேரியின் பேச்சுக்களை ஓரிரு முறை எதேச்சையாக கேட்க நேர, 'இது எப்போது இருந்து நடக்கிறது?!' என்ற சிந்தனை அவரது மனதில் ஓடியது.
அவரது விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு தங்களது தனிமையில் சரஸ்வதியிடம், "சரோ! உனக்கு இங்க எந்த பிரச்சினையும் இல்ல தானே!?" எனக் கேட்டார்.