Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 117
- Thread Author
- #1
கனவு - 10
அனைத்து உயிர்களும் ஆடியோடி அலைந்து அலுப்புடன் உறங்கிக் கொண்டிருக்க, சோபையான விளக்குகள் அந்த தெருவை இருட்டில் இருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தன..
அனைத்து வீடுகளும் ஒளியிழந்து இருளில் இருக்க, ஒரு வீட்டில் மட்டும் இன்னமும் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன..
திடுமென மின்சாரம் துண்டிக்கப்பட.. எங்கும் இருளின் அரசாட்சி தொடங்க, விளக்குகள் ஒளிர்ந்த அந்த வீட்டிலிருந்து, "ஆஆஆ!!!.. அம்மா!!!.. " என்ற அலறல் காதை கிழிப்பது போல கேட்டது..
"இதோ வந்துட்டேன் டா!!.." என அவசரத்துடன் கூறிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தவர், தோராயமாக சத்தம் வந்த இடத்தை நெருங்கி, அருகே இருந்த டேபிளில் மெழுகுவர்த்தியை வைத்துவிட்டு அவளருகே சென்றார்..
அங்கே சுவரோடு ஒட்டி அமர்ந்து, கால்களை குறுக்கி பிடித்துக் கொண்டு, நெருப்புக் கோழியாக தலையை புதைத்து இருந்தவள், வெளிச்சம் வந்ததும் மெதுவாக நிமிர்ந்து, அவளருகே வந்தவரை பார்த்தாள்..
"கேன்டில் எடுக்க தான்டா போயிருந்தேன்!.. எழுந்து வா!.." என தொண்டையை அடைத்த தன் வேதனையை விழுங்கி கொண்டு, அவளை கைத்தாங்கலாக எழுப்பி, மெத்தையில் அமர வைத்து நீரை பருகக் கொடுத்தார்..
அவரது கையை இறுக பற்றி கொண்டு, "எங்கேயும் போகாதீங்க!!.." என கண்களில் மிறட்சியுடன் கூறி அவரை ஒட்டிக்கொண்டவளை, தன்னோடு அணைத்து படுக்க செய்து, உறங்குவதற்காக தட்டிக் கொடுத்தார்
சிறிது நேரத்தில் அவள் உறங்கி விட, மெதுவாக எழுந்து வெளியே வந்தவரிடம், "தூங்கிட்டாளா!!?.." என ஒரு தவிப்புடன் கேட்டவரிடம், "ம்ம்!.." என்று பதிலளிக்க,
அமைதியாக நகர்ந்து சென்ற அவரை பின்தொடர்ந்தவர், "நான் அப்பவே சொன்னேன்!.. அந்த ஜெனரேட்டரை சரி பண்ணி வைங்க னு.." என சற்று கடுமையாக சொல்ல, சரியென தலையசைத்து விட்டு சென்றார் அவர்..
~~~~~~~~~~~~~~~~
உலகில் எங்கு என்ன நடந்தாலும் எந்த மாற்றமும் இன்றி கதிரவன் தன் பணியை செய்ய.. அந்த இதமான காலைப் பொழுதும் இனிதாய் புலர்ந்தது..
இரவில் நடந்த எதுவும் நினைவின்றி அமைதியாய் உணவு மேசைக்கு வந்து அமர்ந்தவளிடம், "உனக்கு பிடிச்ச பூரி செய்து இருக்கேன் டா பாப்பு!!.." என போலி மகிழ்வுடன் அவர் கூற..
அதற்கு அவளது பதில் என்னவோ வெறும் தலையாட்டல் மட்டும் தான்.. முன்பெல்லாம் இதுபோல அவள் எதிர்பாராத விதமாக அவளுக்கு பிடித்த உணவை செய்தால், கண்கள் மின்ன,
அருகே வந்து தன்னை கட்டி அணைத்து முத்தமிட்டு, "லவ் யூ ம்மீ!!!.." என சொல்லும் மகளை காண ஏங்கிய அவளது தாய் சரஸ்வதியின் ஏக்கம் இன்னும் தீரவில்லை..
மகளது முகத்தை கண்டு குற்ற உணர்வுடன் குனிந்த சுதர்சனம், தனது தட்டில் இருந்த உணவை அலைந்து கொண்டிருக்க, அங்கு வந்தான் அரவிந்தன்..
நதியா தனது உணவை அமைதியாக உண்டு விட்டு கிளம்பிட, "அம்மா!.. டைம் ஆச்சு!.. " என்றவனிடம், உணவு பாத்திரத்தை நங்கென்று வைத்த சரஸ்வதி, "நேத்து நைட்டு உன் தங்கச்சி அலறுனா!.. ஏன் என்ன னு எதாவது கேட்டியா?!.." எனக் கேட்டார்..
அவர் கேட்டதற்கு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தவன், "அவளுக்கு நைக்டோஃபோபியா னு டாக்டர் தான் சொன்னார் ல.. லைட் ஆஃப்ஆக விட்டது உங்க தப்பு!.." எனக் கூறி தன் தந்தையின் மீது ஒரு நொடி பார்வை வீசியவனை கண்டு காண்டாகினார் சரஸ்வதி..
"ஏன்டா அவ என்ன இருட்டுக்கு எல்லாம் பயப்படற ஆளா?!.. நடுராத்திரி இருட்டுல உட்கார்ந்து பேய் படத்தை ரசிச்சு பார்க்கறவ.. இப்ப இப்படி இருக்காளே!.."என கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு,
"அவளை சரி செய்ய எதாவது யோசிச்சியா னு கேட்டா, இப்ப தான் என்னமோ எனக்கு பாடம் எடுத்துட்டு இருக்கான்!.." என்று கடுப்புடன் பேச, பதில் எதுவும் கூறாமலே அவன் சென்று விட்டான்..
சுதர்சனமும் கையை கழுவிவிட்டு எழுந்து கொள்ள, சோர்வுடன் செல்லும் அவரை கண்டு, சரஸ்வதிக்கும் பரிதாபமாக தான் இருந்தது..
"இதென்ன வீடா!?.. இல்ல த்யான மடமா னு தெரியல!.. எப்ப பாரு ஒரே அமைதியா இருக்கு!.. என் பொண்ணு மட்டும் நல்லா இருந்தா வீடு இப்படியா இருக்கும்?!!!.." என சரஸ்வதி வாய்விட்டு புலம்பிக் கொண்டே சமையலறைக்கு சென்றார்..
தனது அறைக்கு சென்றிருந்த நதியா, அந்த ஜன்னலில் எப்போதும் போல வெளியே தோட்டத்தை வெறித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்..
சுதர்சனமோ மனதிற்குள் புழுங்கிக் கொண்டே தங்களது அறையில் சிறிது நடைபயின்றவர், கட்டிலில் கண் மூடி படுக்க, நடந்தவை அனைத்தும் கண் முன்னே விரிந்தது..

திருமணம் முடிந்து மகிழ்வாக தன் புகுந்த வீட்டிற்கு சென்ற மகள், மீண்டும் தன் தாய் வீட்டிற்கு கணவனோடு அவ்வப்போது வருகை புரிந்து கொண்டு தான் இருந்தாள்..
ஆனால் அப்போது அவளது அமைதியை கண்டு, சுதர்சனம் வீட்டில் இருக்கும் போது எப்போதும் அப்படியே இருப்பதால் பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை..
மாதங்கள் செல்ல செல்ல, அவள் வருவதும் குறைந்து போய், அலைபேசி வழியே அன்னையிடம் மட்டும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள்..
இப்படியே ஒரு வருடம் கடந்த நிலையில், திடீரென ஒரு நாள் நதியா மருத்துவமனையில் இருக்கிறாள் என்று அழைப்பு வந்தது.. பெற்றோர் இருவரும் பதறிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர்..
கைகளில் சலைன் குத்தியிருக்க.. அருகில் ட்ரிப்ஸ் ஸ்டான்ட்டில் மாட்டப்பட்டு, பிடுங்கிய கொடியென படுத்து இருந்த மகளை கண்டு, இருவரும் அதிர்ச்சி அடைய..
அதே நேரம் விசயம் கேள்விப்பட்டு அரவிந்தனும் வர, தங்கையின் நிலை கண்டு கலங்கியவன் என்னவாயிற்று என குழம்பினான்..
"என்னாச்சு ஜெயராம்?!.. என் பொண்ணு ஏன் இப்படி இருக்கா?!.." என சுதர்சனம் பதட்டத்துடன் கேட்க,
"தெரியல ங்க!.. காலைல இருந்து ரூமை விட்டு வெளியேவே வரல.. சரி மதியமாவது சாப்பிட வருவா னு பார்த்துட்டு இருந்தோம்!.." என அமராவதி பதிலளிக்க,
'எத்தனை கோபம் வந்தாலும் தனது மகள் பசியோடு இருக்க மாட்டாளே!!.. அப்படி இருக்கையில் என்னவாக இருக்கும்!!?..' என பெற்ற மனம் பதைபதைப்புடன் அவர்கள் சொல்வதை கவனித்துக் கொண்டு இருந்தார் சரஸ்வதி..
"ஆனா அப்பவும் வரலைன்னு இவ வந்து சொன்னதும் தான் கதவை தட்டி திறந்து பார்த்தோம்!.. உள்ளே பார்த்தா.. மூச்சுபேச்சு இல்லாம இருந்தாள்!.. அதான் உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தோம்!. அவங்க அட்மிட் பண்ண சொன்னாங்க.."
"என்ன விசயம் னு கூட இன்னும் சொல்லலை.. உடனே உங்களுக்கும் கால் பண்ணிட்டேன் சுதர்சனம்!.. என்ன ஆச்சு னு இனி அவ எழுந்து தான் சொல்லனும்!." என அவருக்கு தெரிந்து, நடந்ததை கூறினார் அவர்..
அவர்கள் சொன்னதை கூர்மையுடன் கேட்ட அரவிந்த், "உங்க பையன் எங்கே?!.." என ஆராய்ச்சி பார்வையுடன் கேட்க,
"அவன் கம்பெனில முக்கியமான மீட்டிங் ல இருக்கான்!.. ஃபோன் பண்ணினா ஸ்விட்ச் ஆஃப் னு வருது!.." என அமராவதி பதிலளித்தாள்..
"ஃபோன் எடுக்கல னா என்ன!?.. முக்கியமா பேசனும் னா எதாவது கான்டாக்ட் பண்ண சொல்லி இருப்பார்ல.. அதுல கூப்பிட வேண்டியது தானே!?.." என அவன் சத்தமாக கேட்க,
"அரவிந்த்!.. இப்ப நதியாவுக்கு என்ன ஆச்சு னு தெரியனும்!.. நாம போய் முதல்ல டாக்டரை பார்க்கலாம்!.. இவங்க கிட்ட வந்து பேசிக்கலாம்!.."
என்று சுதர்சனம் தன் மகனை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் செல்ல, தேவ்வின் பெற்றோரும் அவர்களோடு சென்றனர்..
மருத்துவரிடம் சென்றதும் சரஸ்வதி, "டாக்டர்!.. என் பொண்ணுக்கு என்ன தான் ஆச்சு!?.. நல்லா இருந்தவ எப்படி திடீர்னு இப்படி?!!.." எனக் பதட்டத்துடன் கேட்க,
"ரிலாக்ஸ் ம்மா!!.." என்ற மருத்துவர், "உங்க பொண்ணு ரொம்ப நாளா சாப்பிடாம இருந்து இருக்காங்க!.. அதனால டிஹைட்ரேட் ஆகி மூர்ச்சை ஆகிட்டாங்க!.." எனக் கூறவும்,
மூவரும் கேள்வியாக தேவ்வின் பெற்றோரை திரும்பிப் பார்க்க, "இல்ல டாக்டர்!.. அவ டெய்லியும் நாங்க சாப்பிட்டு முடிச்ச அப்றம் கூட சாப்பிட்டுட்டு இருந்தாளே!?.." என அவசரமாகக் கூறினர்..
"சான்ஸ் இல்ல மா!.. ஒருவேளை அதை ட்ராஷ் கூட செய்து இருக்கலாம்.. நீங்க கவனிச்சு இருக்க மாட்டீங்களோ என்னவோ!?.. ஐ திங்க் அவங்க ரெண்டு மூணு மாசமா சாப்பிடாம இருக்காங்க போல.. " என்ற மருத்துவர்,
"இதுவே இன்னும் கொஞ்ச நாள் கன்ட்நியூ ஆகியிருந்தா அவங்க பாடி மெட்டபாலிசம் கொலேப்ஸ் ஆகி, ஆர்கன்ஸ் டேமேஜ் ஆகற நிலைக்கு போயிருக்கும்!.. " என்றதில், பீதியாகினர் பெற்றவர்கள்..
"ட்ரிப்ஸ் போட்டு இருக்கு!.. இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சுடுவாங்க!.. அவங்கள பதட்டமாக விடாம பொறுமையா விசாரிங்க!.." என தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து கொண்டே கூறினார்..
நதியா கண் விழிக்கும் வரை வராண்டாவில் சரஸ்வதி வாய்க்குள் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே அமர்ந்திருக்க, மீதமுள்ளவர் அமைதியாக காத்திருந்தனர்..
சிறிது நேரத்தில் ரவீந்திரும் அவனது மனைவியும் கூட வந்து விட்டனர்.. ஆனால் கட்டிய கண்ணாளன் மட்டும் வரவே இல்லை.. அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தான் அரவிந்த்..
அனைவரின் காத்திருப்பின் முடிவாக, நதியா கண் விழித்ததும், அவளை காண சரஸ்வதி வேகமாக உள்ளே நுழைய, தாயை தேடும் கன்றாக, "அம்மா!!!.." என்று தனது அருகே வந்த அன்னையை கட்டிக் கொண்டாள் நதியா..
"என்னாச்சு டா பாப்பு?!.. ஏன் இப்படி பண்ணுன!?.. நாங்கெல்லாம் இன்னும் உயிரோட தானே இருக்கோம்!.. ஏன்டா இப்படி பண்ணுன?!.." எனக் கதறிய தாயிடம் பேச முடியாமல் கண்ணீர் வடித்தாள் அவள்..
அவர் பின்னால் வந்த சுதர்சனமும் என்னவென்று புரியாமல் விழித்திருக்க, அரவிந்த் தான், "நம்ம வீட்டுக்கு போலாம் டா பப்பிமா!..நீ எதை நினைச்சும் பயப்படாதே!.." என்றான் தீர்மானமாக..
அவசரமாக முடிவெடுக்க கூடாது என்னும் பொருளில், "அரவிந்தா!!!.." என சுதர்சனம் சத்தமிட, "நான் அவளை நம்ம வீட்டுக்கு தான் கூட்டிட்டு போகப் போறேன்!.." என்றவன்,
பின்னர், "யார் என்ன சொல்றாங்க னு நானும் பார்க்கிறேன்!.." என தீர்க்கமாக சொன்ன மகனிடம் எதுவும் வாதாடாமல் அமைதி காத்தார் அவர்..
அதன்பின் அனைத்தும் வேகமாக நடந்தது.. நதியா தனது தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. அடுத்த வந்த நாட்களில் இருளில் அலறியவளை கண்டு பீதியடைந்தவர்கள் மருத்துவரிடம் கூட்டிச் செல்ல..
அவள் நைக்டோஃபோபிக்காக இருக்கிறாள் என்றனர்.. புரியாமல் விழித்தவர்களிடம் இம்மாதிரி மனநிலையில் உள்ளவர்களுக்கு இருள் என்றாலே அதீத பயம் உண்டாகும் என்றார் மருத்துவர்.
என்னவென்று மெதுவாக தாய் அவளிடம் விசாரிக்க, அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவர், சிட்டுக்குருவியாக இருந்த மகள்.
இப்போது சிறகொடிந்த பறவை போல தனது கூட்டிற்குள் ஒடுங்கி இருப்பதை கண்டு மனதிற்குள் ரத்தக் கண்ணீர் வடித்தார் தாய்.
இதற்குமேலும் தாமதிக்காமல், அவனிடம் இருந்து விவாகரத்துக்கு கோரி, வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் அலைந்தனர்.
இதனிடையே மருத்துவமனை வாசமும் கூட.. அனைத்திற்கும் முன்நின்று அவளை அரண் போல காத்து, அவளது விவாகரத்து வழக்கு அவளை காயப்படுத்த வகையில் முடிக்க செய்தவன் அரவிந்த் தான்.