• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்த போட்டியின் நடுவர்கள் மற்றும் இந்த போட்டியை நடத்தும் பாசத்திற்குரிய ' சொர்னசந்தனகுமார் ' சகோதரிக்கும் என் வணக்கங்களை சொல்லிக் கொண்டு, குறுநாவல் போட்டியில் கதையை தொடங்குகிறேன்.

கதையில் தவறுகள் மற்றும் எழுத்து பிழைகள் இருப்பின் தயங்காமல் சுட்டி காட்ட வேண்டுகிறேன் 🙏 🙏 🙏

இனி கதைக்குள்✍️✍️✍️

மதுரை -
'வாக்காளர் முன்னேற்ற கழகத்தின்' மாபெரும் பொதுக்கூட்டம்.

இந்த கட்சி தமிழ் நாடு முழுவதும் இல்லாமல் தென் மாவட்டங்களில் மட்டுமே உள்ள ஒரு கட்சி. விரைவில் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி கொள்கையை பரப்ப வேண்டும் என்பது 'வாக்காளர் முன்னேற்றக் கழகத்தின் ' நிறுவனரும் தலைவரும் ஆன ஆதித்யனின் ஆசை.

மதுரை மாநகரில் முதல் முறையாக 'வாக்காளர் முன்னேற்றக் கழகம் ' கட்சி பொதுக்கூட்டம் நடத்துகிறது.

கட்சியின் தொண்டர்கள், இந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விசுவாசமாக பணிகளை செய்தார்கள்.

ஒலி ஒளி அமைப்பு அருமையாக செய்து இருந்தார்கள்.

இரவு 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்க இருப்பதால், மதியம் மூன்று மணியிலிருந்தே ஒலிப்பெருக்கியில் கட்சி பொதுக்கூட்டம் நடைபெறுவதை பற்றி விளம்பரம் செய்து கொண்டே இருந்தார்கள்.

அதிக நேரம் கழகத்தின் பெருமைகளை சொல்லும் பாடல்கள் ஒலிபரப்பானது.

அதில் சில பாடல்கள் சினிமா பாடல் மெட்டில் இருந்ததால் பொதுமக்கள் அதை இரசித்தனர்.

சில பாடல்கள் இங்கே,
நான் சிகப்பு மனிதன் படத்தில் இருந்து ' எல்லாருமே திருடங்க தான் ' என்ற மெட்டில், 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

எல்லாருமே வாக்காளர்கள் தான்
சொல்லப் போனால் இந்நாட்டின் மன்னர்கள் தான்
என்றும்

வேறு ஒரு பாடல்,
'நிலை மாறும் உலகில் ' என்ற பாடல் மெட்டில்
🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵

தமிழகத்தில் ஆட்சி மாறும் நிலையில்
நாங்க ஆட்சியை பிடிப்போம் என்ற கனவில்

வாழ்த்தும் வாக்காளர்களால் நாங்க
வாகை சூடும் திருநாள்

போடுங்க போடுங்க அழுத்தி போடுங்க
வாக்காளர் முன்னேற்ற கழக வேட்பாளருக்கு

அடுத்து ஒரு பாடல்,
'உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி '
என்ற மெட்டில்
🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵 🎵

இங்கே இருக்கும் வாக்காளர்களை
நம்பி
எங்கள் கழக வேட்பாளர்கள் நிற்கிறார்கள் தம்பி தம்பி

நியாயமான முறையில் வாக்கை செலுத்து
வாக்குக்கு பணம் வாங்க வில்லை என்று தோளை உயர்த்து

எதையும் மாற்றும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது
என்று
பாடல் ஒலித்தது.

பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் வர ஆரம்பித்தது.

இருக்கைகள் எல்லாம் ஒரு சில இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஆட்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.

பொதுக்கூட்டத்திற்கு கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு முன் வரிசையில் இருக்கைகள் போடப் பட்டு இருந்தது.

மேடையில் அதி முக்கியமான நபர்களுக்கு மட்டும் இருக்கைகள் போடப் பட்டு இருந்தன.

வாக்காளர் முன்னேற்ற கழகம் தலைவரை தவிர மற்ற அனைவரும் கூட்டத்திற்கு வந்து விட்டார்கள்.

வரவேற்புரை நிகழ்த்துபவர் தன் உரையை ஆரம்பிக்கும் போது, "இன்னும் கொஞ்ச நேரத்தில் தலைவர் வந்து விடுவார்" என்று சொல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த முக்கிய நிர்வாகிகள் பெயரை சொல்லி வரவேற்றார். வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போதே, தலைவர் வந்ததற்கான அறிகுறியாக சரவெடிகள் வெடித்தன.

தலைவர் காரை விட்டு இறங்கி மேடையை நோக்கி வரும் போதே, வரவேற்புரை நிகழ்த்துபவர்" இதோ வந்து விட்டார். நம் கழக தலைவர், தமிழகத்தின் விடிவெள்ளி என்று நிறைய புகழ் மாலை சொல்லி வரவேற்றார்.

மேடையில் தலைவர் அமர்ந்ததும், மீண்டும் வரவேற்புரையை முடித்து கொண்டு செல்ல , பொதுக்கூட்டத்தை நடத்தும் நிர்வாகி,கட்சி வளர்ச்சி பற்றி பேச அடுத்த நபரை அழைத்தார் .

பேச வந்தவரும், முதலில் கழக தலைவருக்கு சில புகழ் மாலை பாடிவிட்டு, அடுத்து முக்கிய கட்சி நிர்வாகிகள் பற்றி பேசி விட்டு அவர் உரையை முடித்துக் கொண்டு இருக்கைக்கு சென்றார்.

அப்படியே சில பேச்சாளர்கள் பேசி முடித்ததும், வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பேச வந்தார்.

அவரும் கழக தலைவரை பற்றி புகழ் மாலை பாடி விட்டு, " நமது கழகம், கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றிகள்" என்று சொல்லி விட்டு, " இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான, திருமதி குழலி அவர்களுக்கு நம் கட்சியில் புதிய பொறுப்பு ஒன்றை தலைவர் கொடுக்க இருக்கிறார்" என்றதும் கரவோசை சத்தமாக கேட்டது. மேடைக்கு கீழே முன் வரிசையில் இருந்த திருமதி குழலியும் குழம்பி போனார்.

மேடைக்கு திருமதி குழலியை வரவைத்து, தலைவர் ஆதித்யன், திருமதி குழலிக்கு ' வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் ' கொள்கை பரப்பு செயலாளராக பதவி உயர்வு கொடுக்கிறேன் " என்றார். திருமதி குழலி அதை ஏற்றுக் கொண்டதும், அவரை பொதுக் கூட்டம் நடத்தும் நிர்வாகி பேச அழைத்தார்.

குழலியும் பேசும் போது, " தன்னை கொள்கை பரப்பு செயலாளராக தேர்ந்தெடுத்த தலைவருக்கும் மற்ற கட்சி மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு " தன் உரையை முடித்துக் கொண்டு மேடைக்கு கீழே இருக்கைக்கு போக இருந்த நிலையில், மேடையிலேயே குழலிக்கு இருக்கை போட சொன்னார் தலைவர்.

முதல் முறையாக மேடையில் குழலிக்கு இருக்கைப் போட்டது இது தான் முதல் முறை.

பொதுக்கூட்டம் முடிந்ததும், அனைவரும் கலைந்து செல்லும் போது, குழலி அருகே ஒரு கார் வந்தது. காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், "இந்த கார் உங்களுக்கு தான்" என்று சொல்லி விட்டு கார் கதவை திறந்து விட்டார். " கார் எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு" , பஸ் ஏறி வீட்டுக்கு சென்றார்.

குழலி வீட்டுக்கு வந்ததும், அவரின் அம்மா, "உன் உழைப்பால் அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு கிடைத்ததற்காக, உனக்கு ஆரத்தி எடுக்கிறேன்" என்று சொல்லி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

வீட்டுக்குள் போனதும், குழலியின் அப்பா, சுந்தரம் மகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அண்ணன் வளவன் தங்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு, " உனக்கு கட்சியில் கார் கொடுத்ததாக கேள்வி பட்டேன், ஆனால் நீ ஆட்டோவில் வந்து இறங்கிற?" என்று கேட்க,

குழலி " எனக்கு கட்சியோட கார் வேண்டாம் என்று சொல்லி விட்டு பஸ்ஸில் வந்தேன்" என்று எரிச்சலுடன் சொன்னாள்.

அம்மா ஆரத்தியை ஊற்றி விட்டு உள்ளே வந்து, சமையலறைக்குள் சென்று மகளுக்கு காபி போட்டு எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.

குழலி காபி குடித்து முடித்ததும்,
அம்மா " இப்போது நாங்க சொன்னது புரிகிறதா? நீ எப்ப உன் புருஷனை விட்டு வந்தியோ அப்போதிலிருந்து உனக்கு வெற்றி தான் கிடைச்சிருக்கு.
நீ அவனை சுத்தமாக தலை முழுகி விட்டு, நாங்க சொல்கிறவரை திருமணம் செய்து கொள்" என்று சொல்லி முடிக்கும் முன், " அம்மா...! " என்று கத்தி விட்டார் குழலி.

அப்பா, அமைதியாக இருக்க, அண்ணன் " இவளை திருத்த முடியாது" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார். அம்மா எதுவும் பேசாமல் அவர் அறைக்கு சென்றார்.

குழலியும் தன் அறைக்கு சென்று கதவை அடைத்து விட்டு, தன் கடந்த கால வாழ்க்கையின் நினைவுகளின் கதவை திறந்தார்.

திருமதி குழலி என்றால்?
குழலியின் கணவர் யார்? அவர் மீது குழலியின் குடும்பம் கோபத்தில் இருக்க என்ன காரணம்? குழலி மறுமணத்திற்கு ஏன் சம்மதம் சொல்
ல வில்லை? அனைத்து புதிர்களுக்கும் விடைகளும் அடுத்து அடுத்து வரும் பாகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தொடரும்,
 
Member
Joined
Jun 3, 2025
Messages
92

வாழ்த்துகள் ணா 😍😍😍கட்சி மீட்டிங்கை நேரில் பார்த்த போல இருக்கு... ஆஹா ஆஹா இதுவல்ல பேய் அடச்சை தாய்😕😕😕😕குழலி புருசன் எங்கிருந்தாலும் வரவும் 🤭🤭😁😁😁
 
Joined
Nov 30, 2024
Messages
15
அருமையான ஆரம்பம் அண்ணா😍😍 கணவரை விட்டு வந்ததுக்கு அப்புறமா தான் குழலி லைஃப் நல்லா இருக்குன்னு குடும்பமே நம்புது. ஆனா குழலி வேண்டாம்னு மறுக்குறாங்க... அவளின் கடந்த காலத்தை வைத்து அருமையான ஆரம்பம் அண்ணா... குழலி, வளவன், ஆதித்யன் நல்ல தமிழ் பெயர்கள் வெச்சு இருக்கீங்க. சூப்பர் சூப்பர். மீண்டுமொரு வெற்றிக்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
 
மகிழ்ச்சி டா பாப்பா 💐💐💐
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top