• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
77
 கானல் - 75

நித்யாவின் கழுத்தில் தாலியை கட்டச் சொல்லி, ராஜேஸ்வரி ராஜீவ்விடம் கொடுக்கவும் அதைக் கண்டு அதிர்ந்தாள் நித்யா..

அவரது செயலில் ராஜீவ் திகைத்து நிற்க, "என்ன பா பார்த்துட்டு இருக்க!?.. ம்ம்.. தாலியை கட்டு பா!.." என்று ராஜேஸ்வரி உத்தரவு போல சொல்லவும்..

அவரது ஆணை போன்ற வார்த்தைகளை கேட்டு ராஜீவ் அவளிடம் நெருங்க, "அம்மா!!.." என அலறினாள் நித்யா..

அவளுக்கும் ராஜீவ்வை பிரிந்து இருப்பது என்னவோ உடலின் ஒரு பாகத்தை இழந்தது போல இருக்கிறது தான்..

ஆனால் அவனை கணவனாக முழு மனதோடு ஏற்றுக் கொள்ள அவள் இன்னும் தயாராகவில்லை..அதனால் தன் மறுப்பை அவள் தெரிவிக்க..

"உனக்கு கணவன் வேண்டாம்னு நினைக்கிற.. ஆனா உன் பிள்ளை பிறந்துல இருந்து இவரை தானே தகப்பனா பார்த்துட்டு இருக்கான்!.. அதுக்கு என்ன சொல்ல போற டா!.."

"நீயே பார்த்த ல இந்த நாலஞ்சு நாளா இவர காணாம அவன் எவ்ளோ ஏங்கி போயிருந்தான் னு..உன்னால அதை மாத்த முடியுமா!?.." எனக் கேள்வி எழுப்பினார்..

"என்னதான் ஷக்தி என் மகனா இருந்தாலும், அவன் உயிரோட இல்ல ங்கறதுக்காக, வாழ வேண்டிய நீ உன்னோட வாழ்க்கைய பாழாக்கிக்கணும்னு அவசியம் இல்ல!.."

"அப்படி சொல்ற மாமியாரும் நான் இல்ல.. தீபிகா ,வித்யா மாதிரி நீயும் என் பொண்ணு தான்!..உனக்கு இன்னும் வயசும் இருக்கு.. வாழ்க்கையும் இருக்கு.."

"நீ என்னை அம்மாவா நினைக்கிற மாதிரி இருந்தா, இதை ஏத்துக்கிட்டு சம்மதம் சொல்லு!!.." என தனது பேச்சை முடிக்கவும் இதற்கு என்ன பதில் சொல்வது என புரியாமல் குழம்பிப் போய் நின்றாள் நித்யா..

அவளது அமைதி சம்மதமாக கருதப்பட, அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கினான் ராஜீவ்..அலைப்புற்று இருந்த அவனது மனம் இப்போது தான் நிம்மதி அடைந்தது..

மகனது திருமணத்தை காண ஏங்கி இருந்த லீலாவதிக்கு, ராஜேஸ்வரியின் இந்த பரந்த மனப்பான்மை மிக்க மகிழ்ச்சி அளித்தது..

அன்று நித்யா இங்கு தங்குவதற்கு தயங்கிய போது புது இடம் என்பதால் தயங்குகிறாள் என்று நினைத்து இருந்த ராஜேஸ்வரி,

ராஜீவ், அவர்களை அங்கே தங்குமாறு கூறியதும் இருவரது மன உணர்வுகளை அவதானித்தவர், அவளது முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தையும் கவனித்தார்..

பின்னர் அங்கிருந்த நாட்களில் அவள் வெளியே இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், தனிமையில் அவள் ஏதோ ஒன்றை இழந்தார் போல் இருந்ததை கவனித்தார்..

அவரது மனதில் ஒரு அனுமானம் இருந்தது..இன்று ராஜீவ் வீட்டிற்கு திரும்ப வந்த போது அது உறுதியானது..அதனை தொடர்ந்து தான் இந்த திருமணத்தை செய்யும் தன் முடிவில் உறுதியாய் இருந்தார்..

பூஜை முடிந்ததும் புரோகிதர்கள் கிளம்பிய பின்னர் அறையில் தனிமையில் தலை குனிந்து அமர்ந்து இருந்த நித்யாவிடம் வந்த ராஜேஸ்வரி அவளது முகத்தை நிமிர்த்தி,

"என் மேல ஏதாவது கோவமா நித்யா!?.." என்று கேட்கவும், அவள் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள்..

"நான் செய்த இந்த விஷயம் உனக்கு இப்போ புரியாது!.. சக்தியோட நீ வாழ்ந்த வாழ்க்கை..நம்மோட லைஃப்ல ஒவ்வொரு ஸ்டேஜிலும் நாம எடுத்த புகைப்படங்களை போல.."

"அதை பார்த்து அந்த நினைவுகள்ல மகிழ்ச்சியா இருக்கலாமே ஒழிய அந்த ஸ்டேஜ்க்கு நாம போக முடியாது!..அது போல தான் இதுவும்!."

"இது சக்திக்கு துரோகம்னு நினைக்காதே!.. சக்தி இப்ப அருவமா நம்ம கூட இருந்தா கூட கண்டிப்பா சந்தோஷம்தான் படுவான்!.." என அவளுக்கு அறிவுரை வழங்கியவர்,

"என் மேல கோபம் னா,வாயை திறந்து சொல்லு மா!.. உன்னையும் என் பொண்ணு மாதிரி தான் நினைக்கிறேன்!..நான் என்னோட பேரன் கூட இருக்கணும் என்பதற்காக உன்னோட வாழ்க்கையை பாழாக்க விரும்பல!.."

"நீ என்னை புரிஞ்சிக்குவ னு நினைக்கிறேன்!.. இனிமே இது உனக்கு தாய் வீடு!!.. நீ எப்ப வேணும்னாலும் வரலாம்!.. போகலாம்!.."

"ஆனா அதுதான் உன்னோட புகுந்த வீடு!!.." என்று தனது பேச்சை முடிக்கவும் அதுவரை அமைதியாக இருந்த நித்யா எழுந்து கண்ணீருடன் அவரை அணைத்து கொண்டாள்..

அதன்பின் அவளை தனியாக சந்தித்த ராஜீவ்,"உனக்கு என்மேலே கோபம் இருக்கும்னு தெரியும் நித்திமா!!..ஆனா இந்த ஒரு வாரமா என்னால சுத்தமா நீங்க இல்லாம இருக்க முடியல!!.." என்றவன்,

"நம்ம வீட்ல இருந்தப்ப கூட பிஸினஸ் ட்ரிப் போனா, அடுத்து வந்து உடனே உங்கள பார்த்துடுவேன் ங்கற எண்ணத்திலேயே என்னை நானே கன்வின்ஸ் பண்ணிப்பேன்"

"ஆனா இந்த ஒரு வாரமா எங்க உங்கள மொத்தமா இழந்துடுவேனோ னு நினைச்சே மனசளவுல உடைஞ்சுட்டேன்!.. நீயும் ஜீவாவும் எங்கூட இருந்தா, அதுவே எனக்கு போதும்!.."

"உன்னோட அனுமதி இல்லாம நான் எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன்!..இந்த தாலியை உங்கழுத்துல கட்டுனது கூட என்னோட மன நிம்மதிக்காக தான்!.." என்று தன் மனதில் இருந்த அனைத்தையும் ராஜீவ் கொட்டித் தீர்க்க..

தன்னோடு சேர்த்து பிள்ளையின் மீதும் இத்தனை அன்பு வைத்திருப்பவனை, அதுவும் அவர்களுக்கு மறு ஜென்மம் தந்தவனை வெறுக்கவும்.. சட்டென ஏற்கவும் அவளால் இயலவில்லை..

மாற்றம் ஒன்று தானே மாறாதது.. அதில் நித்யாவின் மனம் மட்டும் மாறாமல் இருந்து விடுமா என்ன!!.. மாறும் என்று நம்புவோமாக!!..

*************

சில மாதங்களுக்கு பிறகு...

"என்ன லேடீஸ் நீங்க!!?..எவ்ளோ நேரமா அலங்காரம் பண்ணிட்டு இருக்கீங்க?!..என் பொண்டாட்டி உங்கள விட அழகா இருக்கான்னு உங்களுக்கு எல்லாம் பொறாமை!.."

"பாருங்க செல்ல குட்டி வாயோரம் ஜூஸ் வடிஞ்சு இருக்கு!.." என வித்யாவின் உதட்டோரம் வழிந்த ஒரு துளி ஜூசை துடைத்து விட்ட கார்த்திக் கத்திக் கொண்டிருக்க,

"என்ன கொழுந்தனாரே!!.. ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கு!..நான் மட்டும் இல்லன்னா நீங்க இன்னும் சிங்கிள் தான் தெரிஞ்சுக்கங்க!.." என மிரட்டினாள் தாரணி..

"அவரோட ஆன்ஸைட் னு வெளிநாடு போயிட்டு வந்த இந்த கொஞ்ச காலத்துல என்னவெல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க!!?.." என மிரட்டுவது போல் கேட்கவும், அசடு வழிந்தான் பையன்..

"உங்க பொண்டாட்டியை நாங்க ஒன்னும் கடிச்சு தின்னுற மாட்டோம் கார்த்திக் சார்!.. போய் மேடையில எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க!!..போங்க!!.." என அவனை வெளியே விரட்டினாள் ஈஸ்வரி..

அப்போதும் அங்கிருந்து நகராமல், மேடிட்ட வயிற்றோடு.. மெரூன் கலர் பட்டுடுத்தி..மலர் அலங்காரத்தோடு இருந்த தன்னவளை கண்களில் காதலோடு ரசித்துக்கொண்டு நின்று இருந்தான் அவன்..

"அல்லோ கார்த்திக்!!..வாட்டர் ஃபால்ஸ் க்ளோஸ் பண்ணிட்டு போய் வெளியே நில்லுங்க!..உங்க பொண்டாட்டியை நாங்க பத்திரமா கூட்டிட்டு வரோம்!.." என அவனை கலாய்த்தாள் மதுமதி..

"உங்களுக்கெல்லாம் பொறாமை!.. நான் என்னோட டாலுவை ரசிக்கிறேன்!..அது உங்களுக்கு பொறுக்காதே!.. நீ போய் உன்னோட குட்டிப்பொண்ணு பண்ணுன காரியத்தை பாரு அமுதா!.." என ஈஸ்வரியிடம் சொன்னவன்,

"பாவம் அப்ப இருந்து அந்த அமுல் டப்பா அவளுக்கு எப்படி டையப்பர் மாத்த னு தெரியாம திருவிழால தொலைஞ்சு போனவன் மாதிரி நிக்கிறான்!.." என ரூபேஷின் நிலை பற்றி கூறி அவளை வெளியேற்ற முயன்றான்..

"அப்றம் மேடாம் மது!.. இது நீங்க சூஸு குடிக்கிற நேரமாம்!.. இல்லைனா உங்க வயித்துல இருக்க புள்ள கோவிச்சுக்குமாம்!.."

"அதனால அங்க மில்க், மூக்கால அழுதுட்டு உன்னை தான் வலை வீசி தேடிட்டு இருக்கான்..ஓடு..ஓடு.."என கருவுற்று இருந்த மதுவையும் விரட்டினான்..

"இந்த கருவாயனோட இதே வேலையா போச்சு!.. குழந்தை கன்பார்ம் ஆனதுல இருந்து சூஸா கொடுத்து படுத்தறான்!.. நான் இங்க இருக்கேன் னு சொல்லாதீங்க கார்த்திக்!.. ப்ளீஸ்!.." என்று அவள் கெஞ்சவும்,

"அப்படி வா வழிக்கு!!.. என் பொண்டாட்டியை நான் ரசிக்கிறேன்!.. இனிமே எதாவது சொல்லுவ!!?.." என்று கார்த்திக் கேட்கவும், 'நீ என்னமும் பண்ணித் தொலை!' என கையெடுத்துக் கும்பிட்டாள் மது..

"கார்த்திக் உங்கள இப்ப தான் விஹானும் பவிக்குட்டியும் காணோம் னு வந்து தேடிட்டு இருந்தாங்க!.. பொம்முக்குட்டி ரெடியானதும் நாங்களே பத்திரமா அழைச்சுட்டு வர்றோம்!.." என தன் பங்கிற்கு நித்யா அவனை விரட்ட,

"என் சொந்த பொண்டாட்டியோட வளைகாப்பு.. அதுல அவளோட அலங்காரத்தை ரசிக்க, அவளோட புருசனான எனக்கு கூட சுதந்திரம் இல்லாம போச்சே!.. ஒரே அல்லி ராஜ்ஜியமா இருக்கு!.."

"வருத்தப்படாதே கார்த்தி!.. இவங்களை எல்லாம் அடக்க ஒருத்தர் வராமலா போயிடுவாங்க!.." என்று சத்தமாக அவன் புலம்பிக் கொண்டிருக்க,

"ஆமாண்டா உனக்கு மட்டும் சொந்த பொண்டாட்டி!.. எங்க பொண்டாட்டி எல்லாம் ரென்டல் அக்ரிமென்ட் போட்டு வாடகைக்கு கல்யாணம் பண்ணி இருக்கோம்!.. உளறாதே டா லூசு!.."

"அங்க மேடையில உட்கார வைக்க பொண்ணையும் காணோம் உன்னையும் காணோம் னு ராஜிம்மா தேடிட்டு இருக்காங்க!.."

"இவன் என்னடா னா இங்க வந்து அரட்டை அடிச்சுட்டு வம்பு பண்ணிட்டு இருக்கான்!.." என கார்த்திக்கை விரட்டினான் ராஜீவ்..

"டேய் கார்த்தி!..உன் இமேஜ்..டோட்டல் டேமேஜ்!.. பேசாம இங்கிருந்து எஸ்கேப் ஆகிடு!.." என்று அவன் தனக்குள் பேசுவதாக நினைத்து சத்தமாக பேச,

"நீ இன்னும் திருந்தலையா கார்த்திக்!..மைன்ட் வாய்ஸ் னு நினைச்சு சத்தமா பேசறதை எப்ப தான் நிறுத்த போறியோ!.." என சலிப்புடன் கேட்டுக் கொண்டு வந்தான் ஹரிஹரன்..

"ஆஹா!!. ஒன்னு கூடிட்டாங்க யா.. ஒன்னு கூடிட்டாங்க!!.. கார்த்தி விடு ஜூட்!.." என்று அவன் அவசரமாக வெளியேற, கையில் தன் பெண் குழந்தையுடன் வழியில் எதிர்ப்பட்ட ரூபேஷ்,

"என்ன சீனியர் நல்லா பல்பு வாங்குனீங்களா!!?.." எனக் கூறி சிரிக்க,"போடா!.. அமுல் டப்பா அங்கிள்!!.." என கடித்து குதறி விட்டு சென்றான் பையன்..

வித்யாவை மேடையில் கார்த்திக்கோடு அமர வைத்து, வளையல்கள் பூட்டி.. நலங்கு வைத்து.. வெகு விமரிசையாக நடைபெற்றது அவளது வளைபூட்டல்!!..

அவர்களது திருமணம் தான் ஏனோதானோ வென்று நடந்திருக்க, இந்த விசேஷமாவது பெரியவர் ஆசிர்வாதத்தோடு, சுற்றமும் நட்பும் சூழ சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பலரின் ஆசை இதில் தீர்ந்தது..

பவிக்குட்டி தான் தன் உடன்பிறப்பை வெகு ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தாள்..

ஒரு நன்னாளில் வித்யா அழகான ஆண்குழந்தையை பெற்றெடுக்க, பவிஷ்யா தனக்கு தம்பி வந்ததில், துள்ளிக் குதிக்க, கார்த்திக் பையன் தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றினான்..

அவனுக்கு பெண் குழந்தை வேண்டுமாம்!.. 'இதெல்லாம் கள்ளாட்டம்!!..செல்லாது!.. செல்லாது!..நீ முதல்ல இருந்து கோடு போடு' என்ற கணக்காக.. அடுத்து பெண்பிள்ளைக்கு இப்போது இருந்தே அடி போடுகிறான் கேடி!!..

நித்யாவின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக ராஜீவ்வை தன்னவனாக ஏற்க தொடங்கி உள்ளது..அதற்கு ஜீவவிஹானும் ஒரு முக்கிய காரணம்!..

தீபிகாவும் தன் மருத்துவத்தை தொடர, சித்தார்த்தும் புது பணியில் சேர்ந்து விட, அனைவரும் ஒரே குடும்பமாக மகிழ்வுடன் இருந்தனர்..

பவிஷ்யாவிற்கு விபரம் புரியும் வயது வந்ததும் அவளது உண்மையான தாய் தந்தை யாரென கூறி அப்போது அவளுக்கு விளக்கிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர்..

ஷக்தி இல்லாதது மனதில் ஒரு குறையாக இருந்தாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாமல், தனது மக்களோடும்,பேரப்பிள்ளைகளோடும் பொழுதுகள் இன்பமாக கழிகிறது ராஜிமாதாவிற்கு!..

🌺சுபம்🌺

தொடக்கம் முதல் இக்கதைக்கு இடைவிடாத ஆதரவை தந்து என்னை ஊக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐🥰🥰🥰

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top