Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 77
- Thread Author
- #1
கானல் - 74
வித்யாவோடு கார்த்திக்கின் வீட்டிற்கு வந்த நித்யாவும் ராஜீவும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்..
தான் எதுவும் கூறாமலே ஷக்தியை பற்றி தெரிந்து பேசும் இவர்கள் யார் என்ற குழப்பத்தில் நித்யாவும்..
இவர்கள் நித்யாவின் உறவினர்கள் என்பதை உணர்ந்து, அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்று கலக்கத்தில் ராஜீவ்வும் இருந்தனர்..
எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது சைஸில் ஒரு தோழமையை கண்டதும், பவிக்குட்டி விஹானை அழைத்துக்கொண்டு உள்ளே விளையாடச் சென்றுவிட்டாள்..
ராஜேஸ்வரி ஷக்தியை போலவே இருந்த பிள்ளையை கண்டு ஆனந்தம் அடைந்தவர் மேலும் பேச தொடங்கும் முன்னால் அவரை இடைமறித்த தீபிகா,
"முதல் முறையா வீட்டுக்கு வந்தவங்கள வாசல்ல வச்சு தான் பேசுவீங்களாம்மா??!.. உள்ளே கூட்டிட்டு போய் சாப்பிட ஏதாவது கொடுக்கலாம்!..குழந்தை பசியோட இருப்பான்ல!.." என்று தன் தாயிடம் கூறியவள்,
"நீங்க வாங்க அண்ணி உள்ளே போலாம்!!..நீங்களும் தான் உள்ளே வாங்க!.." என்று இயல்பாக இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்..
இவளும் கார்த்திக்கை போல வெகு இயல்பாக தெரிந்த உறவினரிடம் பேசுவதை போல பேசவும், நித்யா தான் 'யார் இவர்கள்!?' என தெரியாமல் விழித்தாள்..
உள்ளே அழைத்து வந்தவர்களுக்கு குடிக்க, சாப்பிட எனக் கொடுத்து விருந்து உபசாரங்கள் முடிந்த பின்பு, வெகு நேரம் மனதில் கிளம்பிய கேள்வியை கேட்டாள் நித்யா..
"உங்களுக்கு எப்படி ம்மா ஷக்தியை தெரியும்!!?.." என்று கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்..
அவர்களுக்கு பதிலாக வித்யா தான், "அக்கா!!.. அத்திம்பேர் தான் இவங்களோட மூத்த மகன்!!!.." என்று கூறியதும் 'என்ன!!!?' என திகைத்த நித்யா இருக்கையை விட்டு எழுந்தாள்..
"அட உட்காரு க்கா!!.. இந்த மனுசன் என் கழுத்துல தாலி கட்டுனதுல இருந்து இது மாதிரி எத்தனை ஷாக்கை நான் தாங்கி இருக்கேன்!!.." என்று கூறி வித்யா அவளை அமர வைத்திட,
ஷக்திபாலன் யாரென்ற கதையில் தொடங்கி, ஒரு தவறான புரிதலினால் அவர்களை விட்டு அவன் பிரிந்த கதையையும், அவனை காண அவர் ஏங்கியதையும் ராஜேஸ்வரி சொல்ல..
ஷக்தியின் சித்தரிப்பில் பாசமற்றவர்களாக தெரிந்த இவர்கள் அவன் மீது கொண்ட அன்பை புரிந்து கொண்ட நித்யா,
சக்தி தன்னுடைய வீம்பினால், அவன்மீது பாசம் கொண்ட ஒரு குடும்பத்தை விட்டு பிரிந்து தனிமையில் வாடியது எண்ணி அவனுக்காக வருந்தினாள்..
"அது மட்டும் இல்ல அண்ணி!!.. அதுக்கு அப்புறம் இதோ இந்த சண்முகம் பண்ணுன கூத்து என்ன தெரியுமா!!?.." என்ற கார்த்திக்,
அவள் ஷக்தியை காண்பதற்காக கொடைக்கானல் கிளம்பி வந்ததையும், அங்கு அவர்களுக்கு நேர்ந்த சம்பவங்களையும், அந்த விபத்தையும் கூறி முடித்தான்..
"அப்படின்னா நான் மயக்கத்துல இருந்தபோது, தாரணி அக்கா, மாமி எல்லாம் சேர்ந்து இறுதி காரியம் பண்ணனது யாருக்கு!!??.." என்று வித்யா யோசிக்க,
அப்போதுதான் நினைவு வந்த தீபிகா, "ஒரு வேளை எங்க கார்ல இருந்த அந்த பிரக்னன்ட் லேடியா இருக்குமோ!!?.." என தனது யூகத்தை கூறினாள்..
தீபிகா தன் யூகத்தை சொன்னதும், "அப்போ நீ அங்க இல்லவே இல்லையா!!?..நீ எப்படி!!?.. எங்க போன ம்மா?!.." என்ன புரியாமல் குழப்பமாக கேட்டார் ராஜேஸ்வரி..
"அத நான் சொல்றேன் ம்மா!..நாங்க கொடைக்கானல் ல இருந்து திரும்பி வரும் போது வழியில தான் நித்யா மயங்கி கிடந்தாங்க!.." என்று கூறிய ராஜீவ்,
அவனுக்கு நேர்ந்த பொம்மை திருமணத்தையும் அவனது மனைவியின் மரணத்தையும் கூறி அதற்கு சென்றபோது அங்கு மனம் நொந்து திரும்பியதையும் நாசூக்காக சொன்னான்..
"நான் அப்பவே இறங்கி அந்த ஆக்சிடென்ட் நடந்த இடத்துல செக் பண்ணி இருந்தேன்னா வித்யாவையும் காப்பாற்றி இருக்கலாம்!.."
"ஆனா அம்மா தான் நித்யாவோட கிரிட்டிக்கல் சிச்சுவேஷனை சொல்லி என்ன அவசரப்படுத்தினாங்க!.. அதனால போலீசுக்கு போன் பண்ணி சொல்லிட்டு நித்யாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டோம்!.." என்று ராஜீவ் சொல்லவும்,
"ரொம்ப நல்ல காரியம் பண்ணுனீங்க அண்ணா!.. இல்லனா இந்த அம்மையாரை தேடி தேடி கடைசிவரை நான் பிரம்மசாரியாவே இருக்க வேண்டியதுதான்!!.." என சூழலை இலகுவாக்க கார்த்திக் பேசவும், வித்யா அவனை முறைத்தாள்..
"ஏம்மா நான் என்ன பேசினாலும் இந்த முறைப்பு தானா!!?.. உங்க அக்கா கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வந்த!?.. " என அப்போது அவன் மனதிற்குள் புகைந்ததை இப்போது வெளியே விட்டான் பையன்..
"சும்மா இருடா கார்த்தி!!.. அவங்க நடந்ததை சொல்லிட்டு இருக்காங்க!.. நீ சொல்லு மா!!.." என நித்யாவை ராஜேஸ்வரி நடந்ததை கூறும்படி சொல்லவும்,
"எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது ம்மா!!.. பொம்முக்குட்டி உயிரோட இருந்ததை பார்த்து அவளையாவது காப்பாத்தணும் அப்படிங்கிற ஒரு வேகத்துல போயிட்டு இருந்தேன்!.."
"ஆனா அதுக்கப்புறம் என்ன நடந்ததுனு எனக்கு எதுவும் தெரியாது!.. நான் கண் விழிச்சு சுய நினைவுக்கு வந்து பார்த்தபோது லீலாம்மா தான் பக்கத்துல இருந்தாங்க!.." என கூறிய நித்யா,
"அவங்க தான் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல நான் சுயநினைவு இல்லாமல் இருந்தப்போ விஹானையும் என்னையும் பார்த்துக்கிட்டாங்க!!.." என்று நன்றிப்பெருக்குடன் பெருமையாக சொன்னாள்..
அதன் பின்பு வித்யாவை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகளையும் அது தோல்வியில் முடிந்ததையும் விவரித்தாள் நித்யா..
அப்போது பவிக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த விஹானை கண்ட ராஜேஸ்வரி, "ஷக்தியை சின்ன வயசுல நான் பார்த்தபோது எப்படி இருந்தானோ, அப்படியே இருக்கான்!!.."என பழைய நினைவுகளில் மூழ்கி ஒரு வித மகிழ்வுடன் கூறினார்..
வெளியே சென்று வந்த சித்தார்த், வீட்டுக்குள் நுழையவும் புதிதாய் இருந்தவர்களை கண்டு குழம்பியவனிடம் அவர்கள் யாரென அறிமுகம் செய்தாள் தீபிகா..
சிறிது நேரம் கலந்துரையாடலுக்கு பிறகு, அவர்கள் அங்கு எங்கே தங்கி இருந்தார்கள் என்பதையும், எதற்காக வந்தார்கள் என்பதையும் அறிந்த ராஜேஸ்வரி அவர்களை தங்களுடன் தங்குமாறு வற்புறுத்தினார்..
நித்யாவிற்கு தங்கையுடன் தங்குவதற்கு ஆசையாக இருந்தாலும் சற்று தயக்கம் காட்ட, ராஜீவ்வும் அங்கு தங்குவதற்கு ஒப்புதல் இல்லாமல் மறுப்பை கூறிட,
நித்யாவிடம் வந்த ராஜேஸ்வரி அவளது கைகளை பற்றி கொண்டு, "ஷக்தியோட இருக்கணும்னு நெனச்ச என்னோட ஆசை தான் நிறைவேறல!..அவன் மகனோடாவது கொஞ்ச நாள் இருக்கேனே நித்யா மா!.." என்று தவிப்புடன் கேட்டதும்,
நித்யா என்ன சொல்ல என புரியாமல் ராஜீவ்வை திரும்பி பார்த்தாள்.. நேற்று இரவு அவனுடன் ஒரு அறையில் தங்குவதற்கு எரிச்சல்பட்டவளுக்கு,
இன்று வழி கிடைத்தும் ஏனோ அவளது மனம் இதற்கு ஒப்பவில்லை, இருப்பினும் ராஜேஸ்வரியின் ஆசையையும் புறக்கணிக்க முடியாமல் அவள் குழம்பி நின்றாள்..
அவளது மனம் ராஜீவிற்கு தெளிவாக புரிந்தது ஆனால் அவள் தான் அதை அறியவில்லை..அதனால்
"நீ வேணும்னா இங்கேயே இரு நித்திமா!!.." என்று விஹானையும் அவளையும் பிரிய முடியாமல் தன் மனதை கல்லாக்கி கொண்டு அவன் சொல்லவும்,
விகானை பிரிந்து ஓரிரு நாட்கள் தொழில் விஷயமாக வெளியூர் செல்லும்போது கூட, ஓராயிரம் முறை அழைக்கும் அவன், தற்போது இவர்களை அங்கே தங்குமாறு சொன்னது நித்யாவிற்கு ஏமாற்றமாக இருந்தது..
வீட்டினர் அனைவரும் மகிழ்ந்திருக்க, ராஜீவ் மட்டும் தன் ஏமாற்றத்தை மனதிற்குள் மறைத்து வெளியில் இயல்பாக இருப்பது போல நடித்து, பின்பு அவர்களது உடமையை கொண்டு வந்து தருவதாக கூறிவிட்டு கிளம்பினான்..
தனக்கென ஒரு பெரிய குடும்பமே இருப்பதை கண்ட நித்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மனதின் ஓரம் சிறு வலி பரவியது ஏனென்று தெரியவில்லை..
பவிக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த விஹான் திடீரென வந்து, "வீட்டுக்கு போகலாமா ம்மா!.. ரதீப்பா எங்கே!!?.." என்று கேட்கவும்,
பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நித்யா விழிக்கவும், அவனது அழைப்பையும்..அவளது முகத்தையும்.. படித்த ராஜேஸ்வரிக்கு ஏதோ ஒன்று விளங்கியது..
சில நொடிகளில் சுதாரித்த நித்யா, "இல்ல டா கண்ணா!!.. ரதீப்பா வேலை விசயமா வெளியே போயிட்டாங்க!.." என்று கூறி சமாளிக்கவும்,
பிள்ளையின் அழைப்பை திருத்தாத அவள் செயலிலேயே அவர் புரிந்து கொண்டார்..அதை திருத்தினால் அவன் சத்தமிடுவதால் அவளும் பிள்ளையிடம் அப்படியே சொல்லி பழகி போனது அவருக்கு தெரியாதே..
அறைக்கு சென்ற ராஜீவ் அவர்களது உடைமைகளையும், அவர்களுக்கு தேவையான மேலும் சில பல பொருட்களும் வாங்கி, அவனுக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு, ட்ரைவரிடம் கொடுத்து அனுப்பி விட்டான்..
இரு தினங்களில் வருவதாக சொல்லி சென்ற ராஜீவ் நேரில் வராமல், இடையில் அழைத்து சம்பிரதாயமாக பேசி விட்டு வைக்கவும்,
விஹானும் ராஜீவ்வை காணாமலும் அவனிடம் பேசாமலும் அடிக்கடி 'ரதீப்பா எங்கே?' என நித்யாவிடம் கேட்டு படுத்தி எடுக்கவும், என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தாள் அவள்..
இதற்கிடையே அவளை இத்தனை ஆண்டுகள் பார்த்துக் கொண்ட லீலாவதிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறிய ராஜேஸ்வரி அவரது எண்ணைப் பெற்று அவரிடமும் பேசினார்..
இவர்களை இங்கே விட்டு சென்ற ராஜீவிற்கு தனது உலகமே இருளானது போல இருந்தது..மனம் நிலை இல்லாமல் தவித்தவன், தன்னை விட்டு அவர்கள் ஒரேயடியாக பிரிந்து விடுவார்களோ என்று பயந்தான்..
இரு தினங்களில் முடிவதாக சொன்ன வேலை நான்கு தினங்கள் ஆகியும் முடிக்காமல் விழித்துக் கொண்டிருந்தவன், நித்யாவே இவனை அழைத்து பேசுவாள் என்று எதிர்பார்த்து இருந்தான்..
அது நடக்காமல் போகவே இதற்கு மேல் தாங்காது என்று அவர்களின் வீட்டை நோக்கி வந்த ராஜீவ் அங்கு இருந்த கோலம் கண்டு குழம்பினான்..
"வாங்க ண்ணா!!.. என்ன அன்னிக்கு போனவங்க இன்னைக்கு தான் வர்றீங்க!?.. வேலை அதிகமோ?!!.." என்று கேட்டு அவனை உள்ளே அழைத்து சென்றான் கார்த்திக்..
"வாப்பா ராஜீவ்!.. நல்லா இருக்கீங்களா?!..ஏன் நீங்க திரும்ப வீட்டுக்கு வரவே இல்ல?!..நானே உங்கள கூப்பிடலாம்னு இருந்தேன்!.. விஹான் தான் உங்கள கேட்டுகிட்டே இருந்தான்!.." என்று அவனை வரவேற்ற ராஜேஸ்வரி,
"பல கஷ்டங்கள் பட்டு என் பிள்ளைங்க திரும்பி வந்ததுனால, வீட்ல பூஜை வெச்சுருக்கோம்!!. அதற்கான ஏற்பாடு தான் இது!.." என்று அவனுக்கு வீட்டின் அலங்காரத்தை காட்டி விளக்கினார்..
"அப்படியாங்க ம்மா!!?. ரொம்ப சந்தோஷம்!.." என ராஜீவ் பதில் அளித்து கொண்டிருக்கும் போது, "ரதீப்பா!!!.." என்று கத்திக்கொண்டே வந்து அவனிடம் தாவினான் விஹான்..
அவனை ஆனந்தமாக அள்ளி அணைத்துக் கொண்டவன், "ஜீவா!!.. கண்ணா!!.." என கொஞ்சி முத்தமிடும் போதே கண்ணில் திரண்ட நீரை நாசூக்காக மறைத்தான் அவன்..
விஹானின் அழைப்பை கேட்டு, அறைக்குள் வித்யாவுடன் பேசிக் கொண்டிருந்த நித்யா வெளியே வேகமாய் வர அங்கு நின்ற ராஜீவை கண்டு மகிழ்ந்தாள்..
அதன் பின் பூஜை தொடங்கியதும் கார்த்திக் - வித்யா மற்றும் சித்தார்த்-தீபிகா ஜோடிகளாக பவிக்குட்டியுடன் அமர்ந்து இருக்கவும் அவர்களுக்கு அருகில் நித்யாவும் அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே நின்ற தாயை கண்டு ஆச்சர்யமடைந்தான்..
அவனது முகத்தை படித்த ராஜேஸ்வரி, "நான் தான் பா வீட்ல பூஜை இருக்கு.. கட்டாயம் நீங்க வரனும் னு சொல்லி அவங்கள வர சொன்னேன்!." என்று விட்டு ராஜீவ்வை அருகே அழைத்தார்.
அவனை அழைத்தவர், தாலியை அவனது கையில் கொடுத்து நித்யாவின் கழுத்தில் கட்டச் சொன்னதில் நித்யா அதிர்ச்சியில் உறைந்து அவரை பார்த்து இருந்தாள்.