Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 75
- Thread Author
- #1
கானல் - 73
தனது மீட்டிங் முடித்து விட்டு, நித்யா சொன்ன அந்த கோவிலுக்கு வந்த ராஜீவ், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேட, விஹான் மட்டும் தனியாக நின்று அழுது கொண்டிருந்ததை கண்டான்..
"கண்ணா!!.. ஜீவா!!!.." என்று ராஜீவ் அழைத்ததும், "ரதீப்பா!!!.." என கத்திக்கொண்டே கண்ணீரோடு அவனை நோக்கி ஓடி வந்த விஹானை கையில் அள்ளிக் கொண்டவன்..
"அம்மா எங்கடா கண்ணா!!??..நீ மட்டும் ஏன் தனியா நிக்கிற?!.." எனக் கேட்டதும், "அம்மா இங்கதான் இருந்தாங்க!..நான் வெளாண்ட்டு இருந்தேன்..திடீர்னு அம்மாவை இப்ப காணோம்!!.." என உதடு பிதுக்கி அழுது கொண்டே நடந்ததை கூறினான்..
"அழாத டா செல்லம்!!..அதான் ரதீப்பா வந்துட்டேன்ல.. அம்மாவை பார்க்கலாம் வா!!.." எனக் கூறிய ராஜீவ், அவனை தனது தோளில் சாய்ந்து சமாதானம் செய்து கொண்டு நித்யாவை சுற்றிலும் தேட,
சற்று தொலைவில் கும்பலாக நிற்பதை கண்டவன் விஹானை கையில் வைத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி சென்றான்..
மயக்கம் தெளிந்து எழுந்த வித்யாவை கைத்தாங்கலாக கார்த்திக் தூக்கி விட, "பொம்முகுட்டி!!.."என அவளை நெருங்கிய நித்யாவை கண்டு பரவசமான வித்யா,
"அக்கா!!..நீ தானா!!??.." என்று அவளது கன்னம் தாங்கி இன்ப அதிர்ச்சியில் கேட்க, கண்ணீரோடு 'ஆம்' என்று தலையசைத்து புன்னகைத்தாள் நித்யா..
"நீயும் உயிரோட இருந்து இருக்கலாமேனு நினைச்சு எத்தனை நாளா ஏங்கிட்டு இருக்கேன் தெரியுமா!!??.." என்று வித்யா கேட்டது நித்யாவிற்கு புரியவில்லை
ஆனால் கார்த்திக் அவளது வார்த்தைகளில் தெரிந்த ஏக்கத்தை கண்டு, இத்தனை நாட்களாக அடிக்கடி அவள் ஏதோ சிந்தனையில் சைலன்ட் மோட் சென்று விடும் காரணத்தை தெரிந்து கொண்டவன்,
தன்னிடம் கூட சொல்லாமல் மனதில் அவள் கொண்ட வேதனையை உணர்ந்தான்..
"நீ உயிரோட இருக்க னு தெரியும் டா பொம்முகுட்டி!!..ஆனா எங்க இருக்க னு தெரியாம, எங்கேயோ ஒரு பக்கம் நீ சந்தோஷமா இருப்பாய் னு மனசை தேத்திக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்!.."
"ஆனா உன்னை இங்க பார்ப்பேன் னு நினைக்கவே இல்லை..அதுவும் நீ தாயாக போற நல்ல சேதியோட!!.." என்று நித்யா மகிழ்வுடன் கூறிய பின்னர் தான் வித்யாவிற்கு குழந்தை நினைவிற்கு வந்தது..
"அக்கா!!!..பாப்பா!!!??.." எனத் தொடங்கியவள், 'உயிருடன் இருக்கிறதா?!' என வார்த்தையாக கூட கேட்க மனம் வராமல் நிறுத்த, "பாப்பா இல்ல டி!!.." என்ற நித்யாவின் பதிலில் அழுகை வந்தது தங்கைக்காரிக்கு..
அவளது கண்ணீரை துடைத்து விட்ட நித்யா,"லூசு!!..பாப்பா இல்ல டி!.. பையன்!!..நீ சொன்ன மாதிரியே பையன் தான்!!.." என்று சிரிப்புடன் கூறிவிட்டு,
"இங்க தான்!!.." என்று தன்னை சுற்றி தேடியவள், விஹானை காணாமல் பதட்டமாக,அதேவேளை, "நித்திமா!!.." என அழைத்துக் கொண்டே கையில் பிள்ளையோடு அவர்களை நெருங்கி இருந்தான் ராஜீவ்..
தெரிந்தவர்கள் வித்யாவை சுற்றி இருந்ததால் கூட்டமும் கலைந்து இருக்க, ராஜீவ்வை கண்ட நித்யா, அவனிடம் விரைந்து சென்று,
"ப்ரதீப்!!..என் தங்கச்சி கிடைச்சுட்டா!!.." என ஒரு வேகத்தில் அவனது கையைப் பற்றி கூறியவள்,
"அவ கன்சிவ்ஆ இருக்காளாம்!!!.." என்று நித்யா மனம் மகிழ பரவசத்துடன் கூறினாள்..
அதைக் கேட்ட ராஜீவ், இதுவரை அவளது முகத்தில் காணாத மகிழ்வை கண்டு, நெகிழ்வுடன் அவளை பார்த்திருந்தான்..
இவர்களை கண்ட வித்யாவும், கார்த்திக்கும் அவன் யாரென தெரியாவிடிலும், இருவரையும் கண்டு தங்களுக்குள் அர்த்தமுள்ள பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்..
"சரி மா!!..அதுக்காக ஜீவாவை தனியா விட்டுட்டு வந்துட்ட!..இவன் அங்க அழுதுட்டு இருந்தான்!.. நல்லவேளை நான் வந்தேன்!.." என்று நடந்ததை அவன் கூற,
பதறிய நித்யா, "ஸாரி டா கண்ணா!!.." என்று அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ராஜீவ்விடம் இருந்து பையனை வாங்கிக் கொண்டு, "இங்க பார் விஹான்!.. இவங்க தான் உன்னோட சித்தி!!.." என வித்யாவை அறிமுகம் செய்து வைத்தாள்..
உடனே வித்யா பிள்ளையை தூக்க முன்வர,"குழந்தை உண்டாகி இருக்கும் போது வெயிட் எல்லாம் தூக்கக் கூடாது டா!!.."என்று அறிவுரைகூறி,
தன்னிடமே அவன் இருக்கட்டும் அப்படியே கொஞ்சிக் கொள் என்றதும், வித்யா சிணுங்கினாள்..
"அல்ல்லோ லேடீஸ்!!.. இங்க ஒருத்தன் குத்து கல்லாட்டம் இருக்கேன்!..அதுவும் கோ ப்ரொட்யூசர் நானு!!.." என்று இடை புகுந்த கார்த்திக்,
"எனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லாம உங்க தொங்கச்சிய மட்டும் கொஞ்சிட்டு இருக்கீங்களே அண்ணி!!?..இது நியாயமா!?.. அண்ணா நீங்களே சொல்லுங்க!.." என ராஜீவ்விடம் நியாயம் கேட்டான்..
வெகு உரிமையோடு, சட்டென இடைபுகுந்த அவனது பேச்சில் திகைத்த நித்யா, தன்னை அண்ணி என்றும், ராஜீவ்வை அண்ணா என்றும் அவன் அழைத்ததை கவனியாமல், அவனை விசித்திரமாக பார்த்து இருந்தனர் இருவரும்..
அவனது வாயாடித்தனத்தை அறிந்த வித்யா சிறு புன்னகையுடன் கூடிய செல்ல முறைப்புடன் அவனை பார்த்திருந்தவள்.."சும்மா இருங்க கார்த்திப்பா!!.." என்று வெட்கத்துடன் அவனை அடக்கிவிட்டு,
"இவர் தான் என் ஹஸ்பண்ட் கார்த்திக்!..கொஞ்சம் ஓவர் வாய்!!.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!!.." என அறிமுகம் என்ற பெயரில் அவனை டேமேஜ் செய்ய, கார்த்திக் அவளை முறைத்தான்..
அவர்கள் இருவரும் சிரிக்கவும், "இப்ப தான் முதல்முறையா என்னை பார்க்கறாங்க!.. அவங்க கிட்ட போய் இப்படித்தான் அசிங்கப்படுத்துவியா விதுமா!!?.." என கோபமாக அவன் கேட்க,
உண்மையிலேயே அவன் தன் தங்கை மீது கோபம் கொண்டானோ என்று நித்யா பதட்டமடைந்தாள்..
ஆனால் அதற்குள் வித்யா அவனிடம் இயல்பாக, "ஆமா பின்னே!..இப்படி பேசுனா அப்படி தான் சொல்லுவாங்க!.." என்று சொல்லி அவனை அடக்கினாள் வித்யா..
"ஓகே!!..ஜிப் லாக்!!.." என்று தன் வாயை மூடுவது போல கார்த்திக் செய்கை செய்ய அனைவரும் சிரித்தனர்..
விஹான் அவனது செயலில் சிரித்துவிட்டு, "ஹைய்யா!!.. நீங்க ரதீப்பா!!.. அவங்க கார்த்திப்பா!!!.." என்று கைகொட்டி குதூகளித்து ஆர்ப்பரித்தான்..
"ஆமா டூட்!!.. எங்க வீட்ல ஒரு வாண்டு உன்னை மாதிரி தான் சிரிப்பா!.. வர்றியா நம்ம வீட்டுக்கு போகலாம்!!?.." என்று சின்னவனை அழைத்தான்..
"அவங்க கன்சிவ்ஆ இருக்காங்க னு சொல்லிட்டு இப்படி நிக்க வச்சு தான் பேசுவியா நித்திமா!!?..அங்கே போய் உட்கார்ந்தாவது பேசலாம்ல!.." என ராஜீவ் சொன்னதும்,
"இதுக்கு தான் பெரியவங்க வேணும் ங்கறது.. இதையே நான் சொன்னா நாங்க பேசறதுல உனக்கு பொறாமை னு சொல்லிடுவாங்க ண்ணா!!.." என பாவமாக கூறிய கார்த்திக்..
"சரி..சரி..வீட்டுக்கு போய் நிதானமா எல்லாம் பேசிக்கலாம் அண்ணா!.. நீங்க எப்படி வந்தீங்க!?.." என்று கேட்டு விட்டு..
"என்ன டூட்!!?.. வீட்டுக்கு போகலாமா?!.. அங்க உனக்கு அத்தை, மாமா, பாட்டி அப்றம் ஒரு குட்டி ப்ரெண்டு கூட இருக்கா!.." என விஹானிடம் கேட்டான்..அதைக் கேட்ட சின்னவன் பெரிதாய் தலையசைத்து சம்மதித்தான்..
கார்த்திக் பைக்கில் வந்ததாக கூறவும், உடனே வித்யாவின் நிலையை கருத்தில் கொண்டு, ட்ரைவரிடம் அவனது பைக் எடுத்துக் கொண்டு அவர்களை பின்தொடரச் சொல்லி விட்டு, இவர்கள் அனைவரும் ராஜீவ்வின் காரில் ஒன்றாக பயணித்தனர்..
காரில் வரும் வழியில் அக்காவும் தங்கையும் வித்யா காப்பாற்றப்பட்டு எங்கு சென்றாள் என்ற கதையை பேசிக் கொண்டே வர, அவளிடம் மட்டும் கண்கள் விரிய கதை பேசிய மனைவியை கண்டு
"என்னிக்காவது எங்கிட்ட இப்படி சிரிக்க சிரிக்க கதை பேசி இருக்காளா!?.." என மனதிற்குள் பேசுவதாக நினைத்து சத்தமாக புகைந்து கொண்டு அமர்ந்து இருந்தான்..
"அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல தம்பி!!.." என்று ராஜீவ் சிரிப்புடன் கவுன்டர் கொடுத்ததும் தான், சத்தமாக பேசியதை உணர்ந்தவன் வாய் மூடிக் கொண்டு விட்டது..
அதற்குள் வீடு வர, வண்டியில் இருந்து இறங்கியவர்களை ஆலம் சுற்ற தட்டோடு வரவேற்றாள் தீபிகா..
அங்கிருந்து கிளம்பும் போதே நித்யாவை பற்றி எதுவும் சொல்லாமல், வித்யா கருவுற்ற விசயம் மட்டும் அவளுக்கு சொல்லி இருக்க, காரிலிருந்து இறங்கிய அவர்களை கண்டு குழம்பினாள் தீபிகா..
"அட என்ன சண்முகம் பார்த்துட்டு இருக்க!!?.. எல்லோருக்கும் ஆலம் சுத்தி போடு!.." என்று கார்த்திக் சொல்லவும், அவள் விழித்தாள்..
"நீ எல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன பிரயோசனம்!!?..என்ன பார்க்கற!?.. அவங்க தான் வித்யாவோட அக்கா!.. நம்ம அண்ணி!..அண்ணா நீங்களும் சேர்ந்து நில்லுங்க!.." என்று ராஜீவ்வையும் நித்யா அருகில் நிற்க சொல்ல,
அப்போது தான் நித்யா, அவர்களிடம் ராஜீவ்வை யாரென்று அறிமுகம் செய்யாததை உணர்ந்தவள், பேச வருவதற்குள், "ம்ம்ம்!.. ஆகட்டும் சண்முகம்!!.." என்று அவசரப்படுத்தினான் கார்த்திக்..
"டேய் கார்த்திகைபாலா!..என்னை அப்படி கூப்பிடாதே னு எத்தனை முறை சொல்றது!!.." என்று அவனிடம் முறைப்புடன் கூறியவள் நால்வருக்கும் ஆலம் சுற்றி முடித்தாள்..
"வலது காலை எடுத்து வைச்சு வாங்க அண்ணி!.." என்று கார்த்திக் சொல்லவும், புரியாமல் விழித்த நித்யா, தங்கையை திரும்பிப் பார்க்க, அவளும் செய் என்பது போல் தலையசைத்தாள்..
வெகு இயல்பாக கார்த்திக் 'அண்ணி!' என்றழைப்பதில் குழம்பிய நித்யா, ஒருவேளை 'அவன் சட்டென்று பழகி விடும் இயல்போ என்னவோ!? ' என்றெண்ணி அதை புறந்தள்ளினாள்..
வீட்டிற்குள் வந்ததும், "காத்திப்பா!!.." என்று ஓடி வந்த பவிக்குட்டி, அவனிடம் தாவிக் கொள்ள,
"ஹேய் குட்டிமா!.. நீ ஆசைப்பட்ட மாதிரியே அம்மா தம்பி பாப்பாவை வயித்துல வைச்சு இருக்காங்க டா!.." என்று அவளை கையில் அள்ளிக் கொண்டு, அதிசயம் போல அவளிடம் கூறினான்..
"அப்படியா ம்மா!..பாப்பா வயித்துல இக்கா!!?..ஐய்யா!!.. தாலி!!..நா சூலுக்கு போனதும் என் ப்பென்டு கித்த, எனக்கும் தம்பி பாப்பா வவ்வான் னு சொல்வேனே!!.." என்று கூறிய பவிக்குட்டி,
அவனிடமிருந்து வேகமாக இறங்கி,"பாத்தி!!.." என அழைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள் இந்த விசயத்தை பகிர்வதற்காக.. புதிதாக வந்தவர்கள் கூட அவள் கண்களுக்கு தெரியவில்லை..
"சரி நீங்க உள்ளே வாங்க!.." என்றவன், தீபிகாவிடம்," நீ என்ன இன்னும் பராக்கு பார்த்துட்டு இருக்க!..உள்ள போ சண்முகம்!.. அப்பப்ப இப்படி சிலையா நிக்க வேண்டியது!!.." என்று அவளை கொட்டி விட்டே சென்றான் அந்த வாயாடி வம்பன்.
வீட்டினுள் அவர்களை அழைத்து வர, பவிக்குட்டி வந்து சொன்ன செய்தியில் மகிழ்ச்சியுடன் வெளியே வந்த ராஜேஸ்வரி, வந்தவர்களை அறிமுகம் இல்லாமல் பார்த்தார்.
"ராஜி மாதா!!..என்ன பார்க்கறீங்க!?.. உங்க மூத்த மருமகள் வந்துட்டாங்க!.." என்றதும், நித்யா திகைக்க, வித்யா சிரிப்புடன் பார்த்து இருந்தாள்.
'என்னடா நடக்குது இங்க!?..' என்ற ரீதியில் நித்யாவும், ராஜீவ்வும் பார்த்திருக்க, விஹானை கண்ட ராஜேஸ்வரி, கண்கள் குளமாக,"ஷக்தி!!.." என்று அழைத்தார்.
அவரது விளிப்பில் அதிர்ந்த நித்யா, 'இவர்களுக்கு எப்படி ஷக்தியை தெரியும்!!!?? ' என புரியாமல் விழித்தாள். ராஜீவ்வோ ஏதோ புரியாத மொழி படம் பார்ப்பதை போல 'பே' என்று முழித்து நின்றான்.
'யார் இவர்கள்!?நித்யாவின் தங்கை வித்யா என்று மட்டுமே தெரியும். ஆனால் நித்யாவை ஏதோ தெரிந்தது போல் பேசுகிறார்கள்.' என்று குழம்பி நின்ற ராஜீவ்வின் மனதில்,
ஏற்கனவே அவள் தன்னை விட்டு போவதாக கூறிக் கொண்டிருக்க, இப்போது அவளுக்கான உறவுகள் வந்ததும், தங்களை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற பயம் கிளை பரப்ப தொடங்கியது.