• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
72
கானல் - 70

சற்று நேரத்திற்கு முன்பு..

ஷக்தி ஓட்டிக் கொண்டு வந்த காரில் பின்னிருக்கையில் இருந்த வித்யா அவனை பழி வாங்கும் விதம் பற்றி கிண்டல் செய்ய, மூவரும் மகிழ்வுடன் சிரித்த போது,

எதிரில் வந்த வாகனத்தில் மோதிய அந்த க்ஷணப்பொழுதில் சூழலை கிரகித்த நித்யா, ஜன்னலின் கண்ணாடியில் இடிக்கவிருந்த தங்கையின் தலையை தன்புறம் இழுத்து காப்பாற்றியவள்,

வயிற்றில் இருந்த பிள்ளையையும் காக்க எண்ணி, முன்புற இருக்கையில் காலை ஊன்றி பின்னே தள்ள முயன்றாள், ஆனால் அதற்குள் முன்னிருக்கையில் அவள் வயிறு இடித்திருந்தது..

வண்டிகள் மோதிய பின்னர், சில நொடிகளில் சுயம் திரும்பியவள், தன் கணவனது மூச்சை சோதித்து பார்க்க, அவன் இறந்ததை உணர்ந்து வலியுடன் கதறி அழுதாள் நித்யா..

வேகமாக தன் அருகில் இருந்த தங்கை உயிருடன் இருக்கிறாளா என்பதை சோதிக்க, அவள் உயிரோடு இருப்பதை உணர்ந்து அவளையாவது காப்பாற்ற எண்ணி வேகமாக வண்டியை விட்டு இறங்க முயற்சித்தாள்..

சில நிமிட போராட்டத்திற்கு பிறகு காரின் கதவை திறந்து வெளியே வந்தவள், தங்கையை காப்பாற்ற எண்ணி தன் பிரசவ வலியையும் பொருட்படுத்தாது..

உடலின் சக்தி முழுவதையும் திரட்டி உதவிக்கு யாரும் வருகிறார்களா என்பதை பார்ப்பதற்காக மேல் நோக்கி வெகு சிரமத்துடன் நடந்து சென்றாள்..

பனிக்குடம் உடைந்து வழிய.. பேறு வலி ஒருபுறம்.. மனவேதனை ஒரு புறம் என்று துவண்டவள்..

உயிரோடு இருக்கும் தங்கையாவது காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் தனது முழு பலம் அனைத்தையும் திரட்டி முன்னேறி செல்ல, ஒரு கட்டத்தில் முடியாமல் மயங்கிச் சரிந்தாள்..

சற்று முன், தீபிகா வந்த காரில் இருந்த குழந்தையையும், அவளருகே இருந்த கர்ப்பிணி பெண்ணையும் கண்டு 'டபுள் ஜாக்பாட்!' என்று குதூகளித்த சங்கவி, டாஷ் போர்டில் இருந்த தீபிகாவின் கைபேசியை கண்டவள்,

"ஏன்டா நீ இதை அவனோட ஃபோன் மாதிரி நசுக்கி தூக்கி எறியலையா!?.." என்று திட்டிக் கொண்டிருக்க, பிரகாஷ் என்னவென்று திரும்பிப் பார்க்க அந்த நொடியில்,

இருவரும் சுதாரிக்கும் முன்பே விபத்து ஏற்பட்டிருக்க, அவளும் அவளது காதலனும் விபத்து நடந்த அந்த இடத்திலேயே உயிர் நீத்தனர்..

பின்னால் இருந்த குழந்தை மட்டும், பேபி சீட்டரில் லாக் செய்யப்பட்டு இருந்தால் எந்த சேதமும் இன்றி தப்பித்தாள்..

குழந்தை அருகே லிஃப்ட் கேட்டு ஏறி, இவர்களின் மயக்க மருந்தால் மயங்கி இருந்த, அந்த நிறைமாத கர்ப்பிணியான பெண்ணின், முகம் முழுவதும் கார்களின் மோதலால் உடைந்த சன்னலின் கண்ணாடி துண்டுகள் குத்தி கிழித்திருக்க..

கணவனுக்கு விபத்து என்று கேள்விப்பட்டு பதறி, தன் நிறைமாத கர்ப்பத்தை கூட பொருட்படுத்தாது விரைந்து வந்தவள், இப்போது பரிதாபமாக உயிர் நீத்திருந்தாள்..

சாலையில் மயங்கிக் கிடந்த நித்யாவை காப்பாற்றிய ராஜீவ்வும் லீலாவதியும் அவளது அவசர நிலையை உணர்ந்து முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..

அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்தவர்களை, அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்..

ஷக்தியின் பணி அடையாள அட்டை மூலம் அவனது முகவரி அறிந்த போலீசார், அங்கு கிடைத்த தாரிணியின் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க, அவர்களும் விரைந்து வந்தனர்..

வித்யாவும் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க, வந்தவர்களிடம் நான்கு இறந்த உடல்களையும் காட்டி அடையாளப்படுத்தச் சொல்ல, முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த கர்ப்பிணிப் பெண், நித்யா என்றெண்ணி கொண்டனர்..

அவர்களின் பொறுப்பை தாரிணி குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள, மற்ற இருவரும் யாரென தெரியாமல் இருந்த போலீசார் சிதைந்த நிலையில் கிடைத்த தீபிகாவின் கைபேசியில் இருந்து எடுத்த எண்ணிற்கு அழைத்தனர்..

ஷக்தி மற்றும் நித்யா இறந்ததாக எண்ணிய தாரிணி மற்றும் பங்கஜம் மாமியும் அவர்களுக்கான இறுதி காரியம் முடிந்த பிறகும், கண் விழிக்காமல் இருந்த வித்யாவை எண்ணி கலங்கி இருந்தனர்..

**************

நித்யாவிற்கான அறுவைச் சிகிச்சை முடிந்து குழந்தையை காப்பாற்றினாலும் அதீத ரத்த இழப்பினால் அவள் கண் விழிக்க நாளாகவே,

தன் தொழிலின் காரணமாக அவளையும் குழந்தையையும் தங்களோடே அழைத்துச் சென்ற ராஜீவ் மற்றும் லீலாவதி, தங்களது குடும்ப மருத்துவரின் மருத்துவமனையில் அனுமதித்து இருவரையும் பார்த்துக் கொண்டனர்..

தாயும் சேயும் சிகிச்சை முடிந்து இயல்புக்கு வர, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் லீலாவதி தான் அவர்களுடன் முழுவதும் இருந்து பார்த்துக் கொண்டார்..

கண் விழித்த நித்யாவிடம் நடந்ததை கேட்டு, அவளது இருப்பிடம் சென்ற போது, அவனது நேரம் அந்த அண்டை வீட்டு பெண்மணி அவரது தாய் வீட்டிற்கு சென்றிருக்க, அங்கு பூட்டியிருந்த நித்யாவின் வீட்டை கண்டு திரும்பினான் ராஜீவ்..

அவளுக்கு தாரிணியின் கைப்பேசி எண்ணும் மறந்திருக்க, சென்னையில் வசிக்கும் அவளது இருப்பிடத்தை மட்டும் நித்யா கூறினாள்..

அவ்வளவு பெரிய ஊரில் எங்கு சென்று தேட என தெரியாமல் விழித்த ராஜீவ், தன் தொழில்முறை நண்பர்கள் மூலம், சில மாதங்களில் தாரிணியின் இருப்பிடத்தை கண்டறிந்தான்..

ஆனால் அவர்கள் மகனின் பள்ளிக்காக அங்கிருந்து வேறு இடம் மாறியிருக்க, அதுவும் கண்டறிய முடியாமல் போனது..

இதற்கிடையே ராஜீவ் மற்றும் லீலாவதி கொடைக்கானல் வந்த காரணமும், சங்கீதாவினால் ராஜீவ்விற்கு ஏற்பட்ட காயமும் அறிந்து அவனுக்காக வேதனை அடைந்தாள் நித்யா..

அவர்களது சுயநலத்தால் காயம்பட்ட ராஜீவ்வை எப்படி சரி செய்வது என்ற கலக்கத்துடனும், மகனது வாழ்க்கையே சீரழிந்ததுமென, வேதனையில் இருந்த லீலாவதிக்கு நித்யா மற்றும் ஜீவ விஹான் வருகை சற்று நிம்மதியை தர..

"நீயும் குழந்தையும் இங்கிருந்து போயிட்டா.. இவனோட நிலைமையை நினைக்கவே ரொம்ப பயமா இருக்கு நித்யா!.."

"அவங்க பண்ணுன துரோகத்துல இருந்து என் மகன் எப்படி வெளி வர போறோனோ னு நான் நொந்து போயிருந்தேன்!.. கடவுளா பார்த்து தான் உன்னை எங்களோட சேர்த்து இருக்கார் போல!.." என்று அவளிடம் அடிக்கடி கூறினார்..

கொஞ்சம் கொஞ்சமாக நித்யாவின் தங்கையை பற்றி அறியும் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிய, என்றாவது ஒருநாள் அவளை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள் நித்யா..

தன்னை காத்த இவர்களின் நிம்மதிக்காகவும், மகிழ்ச்சிக்காவும் அவர்களோடே இருந்து விட முடிவு செய்தவள், தன் தங்கை கண்டிப்பாக எங்கோ நலமுடன் இருப்பாள் என்ற உறுதியும் கொண்டு இருக்கிறாள்..

****************

"ஸாரி ப்ரதீப்!.. நான் அதை மீன் பண்ணி சொல்லல!.."என்று தன் பேச்சிற்காக அவள் மன்னிப்புக் கேட்க, "அவ செய்ததுக்கு நீ என்ன பண்ணுவ!?.. எதுக்கு ஸாரி எல்லாம் கேக்குற?!.. விடுமா!.." என்று விட்டு சென்றான் ராஜீவ்..

வருடங்கள் கடந்த பின்னும் மகனது மனதில் ஆறாத வடுவாய் மாறிய அவனது திருமணவாழ்க்கை லீலாவதிக்கு பெரும் வேதனை அளித்தது..

ராஜீவ் மனம் சோர்ந்து செல்வதை கண்டவள் உடனே தன் மகனிடம், "கண்ணா!!.. இப்பதானே சாப்பிட்டு இருக்க.. போய் உன்னோட ரதீப்பா கூட சேர்ந்து கொஞ்ச நேரம் விளையாடு!..போ!. போ!.." என்று அனுப்பி வைத்தாள்..

அவன் ஒவ்வொரு முறை பழைய நினைவுகளில் மனம் சோர்ந்து போகும் போது தனது மகனை கொண்டே சரி செய்கிறாள் நித்யா..
இப்போது அதுப்போலவே செய்த அவளது செயலை கண்டு நிம்மதி அடைந்தார் லீலாவதி..

"கவலைப்படாதீங்க ம்மா!.. எல்லாம் சரியாகிவிடும்!.." என்று அவருக்கு ஆறுதல் அளித்த நித்யா, தன் வேலையை தொடர உள்ளே சென்று விட, அவரது மனதில் ஒரு எண்ணம் துளிர் விட்டது..

இருப்பினும் அதை வெளிக்காட்டாமல், தனது மனதிற்குள்ளேயே கடவுளிடம் வேண்டியபடி, என்றும் கேட்கும் அதே கோரிக்கையை முன் வைத்தார்..

லீவாவதிக்கு தன் மனதில் தோன்றிய ஆசையை மகனிடமாவது கேட்க வேண்டும் என்று எண்ணியவர் உடனடியாக அதை கேட்காமல் சற்று சுற்றி வளைத்தார்..

"ஏன் தம்பி நீ இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்க போற!?.. உனக்கும் வயசு ஏறிட்டே போகுதே.. உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா!?.." என்ற தாயின் கேள்வியை புரியாமல் அவன் விழித்தான்..

"எனக்கு என்னம்மா நல்லா தானே இருக்கேன்!?.. நீங்க எல்லாரும் என் கூட இருக்கும்போது எனக்கு னு வாழ்க்கை னுட்டு எதை சொல்றீங்க!.. புரியல!!.. " என்று உண்மையாகவே புரியாமல் கேட்டான் ராஜீவ்..

"உனக்கு உண்மையிலேயே புரியலையா?!..இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா!?..தெரியல பா!..உனக்கும் இப்பவே முப்பத்தாறு தாண்டிடுச்சு..என்னோட காலத்துக்கு அப்புறம் உனக்கு னு யார் இருக்கா!?.." என்று அவனுக்கு விளக்கிவிடும் நோக்கத்தில் அவர் தொடர,

இப்போது அவரது கேள்வியின் சாராம்சம் புரிந்தவன் சற்று கடுப்புடன்," இப்ப என்ன மறுபடியும் எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்றீங்களா!?.." என்று கேட்டான் சற்று கடுமையாக..

"அந்த பொண்ணு பத்து வயசு வித்தியாசம்ல பா.. அதை யோசிக்காம பொண்ணு நல்லா இருக்காளே னுட்டு உனக்கு கட்டி வச்சேன்..அதுவும் நிலைக்காம போயிடுச்சு..அதுக்காக உன்னோட வாழ்க்கை இப்படியே இருக்கனுமா என்ன!?.."

"இந்த தடவை உன்னை புரிஞ்சுக்கற, உன் மேல அன்பு காட்டுற, நல்ல பொண்ணா பார்த்து, உனக்கும் ஒரு துணைய தேடி கொடுத்தேன் னா தான், கடைசி காலத்துல என் கட்டை நிம்மதியா வேகும்!.." என அவர் உணர்வுபூர்வமாக கூறிட,

"அம்மா ப்ளீஸ்!..மறுபடியும் ஒரு அடிய தாங்குற அளவுக்கு என் மனசுக்கு வலிமை இல்லம்மா!!..தயவு செய்து இதை இதோட விட்டுடுங்க!.." என்று கூறிவிட்டு அவன் வெளியேற முயன்றான்..

"அது இல்லப்பா!..நான் சொல்ற பொண்ணு நித்யாவா இருந்தா கூட வேண்டாமா!?.." என்று அவனது மனதை அறியும் நோக்கில் அவர் கேட்க, அவன் அதிர்ந்து திரும்பினான்..

"அம்மா!!!!.." என்று அதிர்ச்சியுடன் கத்தியவன், " என்னமா பேசுறீங்க!?.. நித்திமாவை நாம தான் காப்பாத்தினோம் ங்கிற காரணத்துக்காக, நீங்க இப்படி எல்லாம் யோசிப்பீங்களா!?.."

"இந்த விசயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சது னா நம்மை பற்றி என்ன நினைப்பா!?.. உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல ம்மா!!.." என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்..

மகன் அவளை பிடிக்கவில்லை என்றோ, வேண்டாம் என்றோ தெளிவாக கூறாமல், அவள் என்ன நினைப்பாள் என்று யோசித்ததில் அவனது மனதை உணர்ந்து கொண்டார் லீலாவதி..

நாட்கள் அதன் போக்கில் நகர, ராஜீவ் தன் தொழில்முறை விசயமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தது..
ஒவ்வொரு முறை அவன் இவ்வாறு வெளியூர் செல்லும் போதும், விஹான் அவனை பிரிய மறுத்து அடம்பிடிப்பான்..

இம்முறையும் அவ்வாறே அவன் அடம்பிடிக்க, " சொன்னா கேக்கணும் ஜீவா!.. நான் வேலை விஷயமா போறேன்.. உன்னை கூட்டிட்டு போய் என்னால உன்னை அங்க பார்த்துக்க முடியாது!!.." என்று கறாராக பேசிக் கொண்டிருக்க,

உடனே, "அப்படினா அம்மாவையும் கூட கூட்டிட்டு போவோம்!.. நீங்க வேலைய பாருங்க..நானும் அம்மாவும் சுத்தி பார்க்கிறோம்!!.." என்று அவன் ஐடியா தரவும், இதற்கு என்ன பதில் சொல்வது என ராஜீவ் விழித்தான்..

இதுதான் சமயம் என்று லீலாவதி, "பையன் கரெக்டா தானே சொல்றான்!..நித்யாவும் வெளியே எங்கேயும் அதிகமா போனதில்ல.. அவளை வெளியே கூட்டிட்டு தான் போயிட்டு வாயேன் பா!.." என்று கூறவும், அவரது நோக்கம் உணர்ந்து அவரை தீர்க்கமாகப் பார்த்தான் ராஜீவ்..

உடனே அவளிடம் திரும்பியவர், "நித்யா நீ என்ன மா சொல்ற!?.. உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும்ல.. உனக்காக தானே பேசிட்டு இருக்கேன்!.." என்று அவளை துணைக்கு அழைத்தார்..

சிறிது நேரம் யோசித்த நித்யாவும் தானும் வருவதற்கு சம்மதிக்க, ராஜீவ் தாயை முறைத்துக் கொண்டு, வேறு வழியின்றி, இருவரையும் அழைத்துச் செல்ல சம்மதித்தான்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top