• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
71
கானல் - 68

"அத்தம்மா நான் இனிமே ஸ்கூலுக்கு போலாம்னு இருக்கேன்!.. நீங்க என்ன சொல்றீங்க?!.." என்று அவரிடம் அபிப்ராயம் கேட்டாள் ஈஸ்வரி.

"இதுல நான் சொல்ல என்ன இருக்கு டா?!.. ரூபேஷ் கிட்ட சொன்னியா?.. அவன் என்ன சொன்னான்?!.." என்று தாமரைச்செல்வி கேட்டதற்கு,
"ஜிஷ்ணு க்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஓகே ன்னு சொல்லிட்டாரு!.." என்றாள் ஈஸ்வரி..

"ஓஓ.. அப்படியா!!.. ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே டா!?.." என்று அக்கறையுடன் அவர் கேட்கவும்,

"அதான் இவ்வளவு நாள் ரெஸ்ட் எடுத்துட்டேனே அத்தம்மா!.. மார்னிங் சிக்னஸ் கூட குறைஞ்சிடுச்சு.. வீட்டிலேயே இருக்க போர் அடிக்குது!.." என்றவள்,

"நீங்களும் என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டீன்றீங்க.. மாமியார் மாதிரி எதாவது வில்லத்தனம் பண்ணினா கூட பரவால்ல.. அதுவும் செய்ய மாட்டீன்றீங்க!.." என்று நீளமாக குற்றப் பத்திரிக்கை வாசித்தவள்..

"நான் இப்படியே சாப்பிட்டுட்டு தூங்கி எழுந்துட்டு இருந்தேன் னா அப்புறம் யானைக்குட்டி மாதிரி தான் ஆயிடுவேன்!!.." என்று கூறி சிரித்தாள் ஈஸ்வரி..

"அடிப்பாவி!!!.. ஊர் உலகத்துல மாமியார் கொடுமை தாங்க முடியாம சிலரெல்லாம் கஷ்டப்பட்டால், உனக்கு நான் இப்படி இருக்கிறது கஷ்டமா இருக்கா!?.. சரிதான்!.." என்றவர்,

"என்ன பண்றது மா எனக்கு அப்படி எல்லாம் வர மாட்டேங்குதே!!..ட்யூஷன் போய் படிச்சா கூட எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராதே!!.." என்று அவர் சலித்துக் கொண்டார்..

"எங்கே ம்மா ட்யூஷன் போக போறீங்க!?.. என்ன படிக்கணும் உங்களுக்கு!?.. " என்று கேட்டுக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான் ரூபேஷ்..

"வாடா!!.. நான் பெத்த நல்லவனே!.. உன் பொண்டாட்டிக்கு வில்லத்தனம் பண்ற மாமியார் வேணுமாம்!.. ரெடி பண்ணி குடுக்குறியா!?.." என்று தாமரைச்செல்வி கேட்க, அவன் முழித்தான்..

பிறகு,"ஏன் அம்மு உனக்கு இப்படி!?.. நானே அவங்க இன்னசன்ஸ் வச்சு தான் நிறைய தடவை தப்பிச்சிட்டு இருக்கேன்!..அத கெடுத்து விட்டுடுவ போலயே!!?.." என்று பயந்தார் போல் கூறினான்..

"அடப்பாவி!!!.. யூ டூ ரூபேஷு!!.. இதுவரை அப்படி என்னென்ன கோல்மால் தான் பண்ணி இருக்க டா!!?.." என்று பொய்யான அதிர்ச்சியுடன் கேட்டார் தாய்..

"யம்மா லோட்டஸு!!.. நான் சும்மா சொன்னேன்!.. இதை வைச்சு ஹிட்லர் கிட்ட எதுவும் மாட்டி விட்டுடாதீங்க தாயே!!.."என அந்தர்பல்டி அடித்தான் பையன்..

"ம்ஹூம்!!.. நீ ஏதோ உண்மைய உளறுன மாதிரி தான் இருந்துச்சு!!.. அப்பா வரட்டும்.. அவருக்கு எதாவது தெரியுமா னு கேட்கறேன்!!.." என தாமரைச்செல்வி மிரட்ட,

"தெய்வமே!!!..... அப்படி எல்லா ஒன்னுமே இல்ல தெய்வமே!!.." என்று அவரை கையெடுத்துக் கும்பிட, மாமியாரும் மருமகளும் சிரித்துக் கொண்டு ஹை - பை கொடுத்தனர்..

"பாவம் அத்தம்மா தெரியாம வாயை கொடுத்து மாட்டிகிட்டார்.. விட்டுடுங்க!.. சரி..நீங்க பேச்சை மாத்தாதீங்க அத்தம்மா!!.." என்று கூறி சிரித்தவள்,

"நான் வேலைக்கு போக தான் போறேன்!!.. டெலிவரிக்கு முன்னாடி ப்ரேக் எடுத்துடுறேன்!.. ப்ளீஸ் அத்தம்மா!!.." என்று அவரது கன்னம் பிடித்து கொஞ்சி தாஜா பிடித்தாள் ஈஸ்வரி..

"அட.. இதுக்கு ஏன் இவ்ளோ ஐஸ் வைக்கற மா!.. உனக்கு சந்தோஷம் னா போயிட்டு வா!!.." என சிரித்துக் கொண்டே தன் சம்மதத்தை சொல்ல, "ஹே!!...." என்று கூச்சலிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் அவள்..

ஓரிரு நாட்களில்..

பள்ளிக்கு வந்திருந்த ஈஸ்வரியை கண்டு ஆச்சர்யமுற்ற வித்யா, விரைந்து வந்தவள், அவளை லேசாக அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த,

"ஏன்டி நான் என்ன வெளிநாடு போயிட்டு ரிட்டர்ன்ஆ வர்றேன்!.. இவ்ளோ எக்ஸைட் ஆகுற!!?.." என்று வித்யாவிடம் புன்சிரிப்புடன் ஈஸ்வரி கேட்டாள்..

"ஆமா பின்னே!!.. மேடம் தான் லோட் ஆனதும் பயங்கர பிஸியாகிட்டீங்க.. ஃபோன் பண்ணுனா எடுக்கறதில்ல..
அப்படியே எடுத்தாலும் தூக்க கலக்கத்துல பேச வேண்டியது!.." என வித்யா குறை பாட..

"நான் என்ன டா தியா பண்ணுவேன்!!?.. எல்லாம் உள்ள இருக்க வாண்டு பண்ற வேலை!.. யப்பா!!.. என்னா பாடு!!.." என்று அவள் தனது மசக்கையில் பட்ட கஷ்டத்தை கூறினாள்..

"தெரியும் டா ஈஷு!!.. எதையுமே சாப்பிட முடியாது!..ஆனாலும் சாப்பிட்டு தான் ஆகனும்.. இந்த நேரம் நீ எடுக்கற ரெஸ்ட் டும், சாப்பாடும் தான் குழந்தையோட வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம்!.."

"உன் மனசை ரொம்ப அமைதியாவும், சந்தோஷமாகவும் வைச்சுகிட்டா தான் குழந்தை நல்ல ஆரோக்யமா, ஹேப்பி சைல்ட்ஆ இருக்கும்!.." என்று வித்யா பாடம் எடுத்ததை வாயை பிளந்து பார்த்த ஈஸ்வரி,

"ஏன்டி என்னமோ நீயே பத்து புள்ள பெத்த மாதிரி இவ்ளோஓஓ சொல்ற.. அல்ரெடி இந்த அட்வைஸ் மழைல நனைச்சு போய் தான் வந்து இருக்கேன்!.. நீ வேற தனியா க்ளாஸ் எடுக்காதே தாயே!!.." என ஈஸ்வரி கும்பிடுவது போல் செய்தாள்..

"எனக்கும் தெரியாது தான்!.. ஆனா நித்யா க்கா மசக்கை அப்போ அவ கஷ்டப்பட்ட போது நானும் அத்திம்பேரும் ரொம்ப பயந்துட்டோம்.."

"எங்களுக்கு தான் சொல்ல யாருமில்லையே!!.. அப்ப டாக்டர் சொன்னது தான்.." என்று சொன்னவள், சில நொடிகள் மௌனமாகி, லேசாக கலங்கிய தன் கண்களை அவளறியாமல் துடைத்துக் கொண்டாள்..

"ஸாரி தியா!!.. நான் ஏதோ விளையாட்டா தான் கேட்டேன்!.." என்று தோழியை காயப்படுத்தியதாக எண்ணி மன்னிப்பு வேண்டினாள் ஈஸ்வரி..

சில நொடிகள் அமைதியாக இருந்த வித்யா," பரவால்ல விடு ஈஷு!.. க்ளாஸ் பெல் அடிச்சுட்டாங்க பாரு!!.. அப்றம் பேசிக்கலாம் டா,.. "என்று விட்டு கலங்கிய மனதுடன் வகுப்பிற்கு கிளம்பினாள் வித்யா..

தான் கண்ட வரை தெளிவாய் இருந்த அவள் முகத்தில் இப்போது புதிதாக கவலை பூசி இருப்பதை கண்டவள், ஏனென்று புரியாமல் யோசனையான ஈஸ்வரி அவளிடம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்தாள்..

உணவு இடைவேளையின் போது வித்யாவை கவனித்த ஈஸ்வரி, "எதாவது பிரச்சனையா தியா?!..ஏன் உன் முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு!!?.. என்று கேட்க, "ஒன்னுமில்ல!.." என்று அவள் பட்டென பதிலளித்தாள்..

"எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.. ஒழுங்கா என்ன பிரச்சனைன்னு சொல்லு டா!!." என்று சிறு அதட்டலுடன் ஈஸ்வரி கேட்க, அவள் மௌனம் சாதித்தாள்..

"கார்த்திக் கூட உனக்கு எல்லாம் ஓகே தானே!!?.. உங்க ரெண்டு பேருக்கும் எதாவது மனஸ்தாபமா டா?!.. நீ எதையோ நினைச்சு வருத்தமா இருக்க!.. அது மட்டும் நல்லா தெரியுது!.." என ஈஸ்வரி கேட்டதும்,

தனக்கென எந்த உறவையும் கடவுள் விட்டு வைக்கவில்லை என்றாலும் தன் நலம் நாடும் தோழியை மட்டுமாவது கொடுத்தாரே என்று எண்ணி மனம் நெகிழ்ந்தாள் வித்யா..

அவள் அமைதியை கண்டு,"இப்போ நீ சொல்ல போறியா!?.. இல்லையா!?.." என்று ஈஸ்வரி அதட்டலுடன் கேட்க,

மெதுவாக, "இல்ல.. இறந்துட்டதா நினைச்சுட்டு இருந்த தீபிகா அண்ணியும் சித்து அண்ணாவும் திரும்பக் கிடைச்சாங்க ல.." என்று கூறி அவள் இழுக்கவும்,

"ஆமா!!.. நான் கூட வந்து பார்த்தேனே!..நல்லா தானே பேசினாங்க!.. ஏன் அவங்க ஏதாவது பிரச்சனை பண்றாங்களா!?.." என்று புருவஞ்சுருங்க யோசனையாக கேட்டாள் ஈஸ்வரி..

"ஹே!!.. அதெல்லாம் இல்ல பா.. அதெல்லாம் அவங்க நல்லா தான் இருக்காங்க!..ரொம்ப அன்பா தான் எங்கிட்ட பழகுறாங்க!.." என்றவள் இன்னும் முழுதும் சொல்லாமல் இருக்கவும் அமைதி காத்தாள் ஈஸ்வரி..

"இது வேற டா.. அவங்க திரும்பி வந்ததிலிருந்தே என் மனசுக்குள்ள ஒரு எண்ணம்.. ஆசை னு கூட சொல்லலாம்!...ஓடிக்கிட்டே இருக்கு!.."

"ஆனா அது உண்மையா இருக்க வாய்ப்பில்லை னு மூளை சொன்னாலும் மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது.." என்று குழப்பமாக வித்யா பேச,

"சரி.. அப்படி என்ன தான் ஆசை உன் மனசுல இருக்கு!?.. அதையாவது வெளிப்படையா சொல்லேன் நானும் கேட்கறேன்!.."என்று ஈஸ்வரி அழுத்தமாக கேட்கவும்,

வித்யா தன் மனதில் எழுந்த கேள்வியையும் அதனால் விழைந்த ஏக்கத்தையும் பகிர்ந்தாள்..

"இவங்க உயிரோட இருந்தாங்க னா.. என்னோட அக்காவும், அத்திம்பேரும் உயிரோட இருப்பாங்களோ??!..னு எனக்குள்ள ஒரு கேள்வி!.." என்று ஆர்வமாக கேட்டவள்,

"ஆனா அவங்களுக்கு தான் கடைசி காரியம் எல்லாம் செய்தாங்களே!.. அப்றம் எப்படி இருப்பாங்க னு மூளை சொல்லும் போதே, அவங்களும் திரும்ப வரனும் னு மனசு ஏங்குது!.." என்று கண் கலங்க வித்யா தன் மனதை உரைத்தாள்..

அவளது எண்ணத்தை சரியாக புரிந்து கொண்ட ஈஸ்வரி, "நமக்கு நெருக்கமானவங்கள திடீர்னு எதிர்பாராம இழக்கும்போது.."

"இந்த மாதிரி எதாவது நடந்து திரும்ப கிடைக்க மாட்டாங்களா னு நினைக்கிறது இயல்பு தான்!.. ஆனா நிதர்சனம் என்னவோ அதை ஏத்துக்கிட்டா தானே மனசை அமைதிப்படுத்த முடியும்.."என்று அவளுக்கு அறிவுறுத்த,

"புரியுது ஈஷு!.. சில நேரம் அந்த எண்ணம் வந்து எனக்கு மனசு டல்லாயிடுது.. இன்னைக்கு நீ கேட்டதும் அக்காவோட பிரக்னன்சி ஞாபகம் வந்துருச்சு!.."

"அதான் கொஞ்சம் அப்செட் ஆயிட்டேன்!.. கொஞ்சம் நேரம் கழிச்சு நானே சரி ஆகிடுவேன்..நீ என்ன பத்தி வொர்ரி பண்ணிக்காத டா.. உன் மனசை ரிலாக்ஸ்ஆ வைச்சு இரு சரியா!?.." என்று

சிறு புன்னகையுடன் வித்யா கூற, அவள் சரி ஆகிவிடுவாள் என்று சற்று நிம்மதியாக உணர்ந்தாள் ஈஸ்வரி..

***************

"டேய் செல்லம்!!.. இன்னும் ஒரே ஒரு வாய் தான் டா கண்ணா!.. இதை மட்டும் வாங்கிக்கோ!.. என் தங்கம்ல.. பாட்டிக்கு முடியல டா காலெல்லாம் வலிக்குது ராசா!.." என்று தன் பேரனுக்கு ஒரு கவளம் உணவை ஊட்ட போராடிக் கொண்டிருந்தார் லீலாவதி..

"போங்க பாட்டி!!..இப்பிடி சொல்லி தான் இவ்ளோ நேரம் கொடுத்தீங்க!.. எனக்கு வேணாம்!.. உவ்வேக்க்!!.. இது நல்லாவே இல்ல!.." என்று அதை வாங்காமலே போக்கு காட்டிக் கொண்டிருந்தான் பேரன் விஹான்..

"உனக்கு காய்ச்சல் இருக்கு ல கண்ணா!!.. இப்ப தானே கொஞ்சம் சரியாகி இருக்கு.. இந்த மாதிரி லைட்டா சாப்பிட்டா தான் ஜீரணம் ஆகும் தங்கம்!.."

"அம்மா அதுக்கு தானே கொடுத்திருக்கா!.. இந்த பாட்டிக்காக ஒரே ஒரு வாய் வாங்கிக்கோ டா!.. நான் நாளைக்கு உனக்கு காரசாரமா செய்து தரேன்!.." என பேரனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார் அவர்..

"ஹான்!..அதான் சொல்றீங்க ல காச்சல் சரியாகிச்சு னு.. அப்றம் எதுக்கு இந்த கஞ்சி!.. வாமித் வர்ற மாதிரி இருக்கு பாட்டி!.." என்று அவன் அதே போல தன் நடிப்பைக் காட்ட, அவர் போதுமென்று ஓய்ந்து விட்டார்..

"டேய் ஜீவா!.. நடிக்காதே!.. பாட்டி வேணும்னா உன் நடிப்பை நம்பலாம்!..எனக்கு உன்னைப் பற்றி தெரியும்!.. இப்ப ஒழுங்கா அதை சாப்பிட்டா தான் மருந்து குடிக்க முடியும். நான் சொன்னா கேட்பாயா, மாட்டியா?" என்று சிறு அதட்டலுடன் வந்தான் ராஜீவ்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top