• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
71
கானல் - 67

பவிஷ்யா பேசத் தொடங்கியது முதல் வித்யா தான், தனது அம்மா என்றெண்ணி இருக்க, இப்போது குழந்தையால் சட்டென்று அதை மாற்ற இயலவில்லை..

அவளது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ராஜேஸ்வரி விழித்திருக்க, பின்பு வித்யா தான் அவளிடம், அவர்களும் அவளுக்கு அம்மா, அப்பா உறவு தான் எனவும்,

அதனால் அவளுக்கு குழப்பம் வராதவாறு தீபிகாவை 'மம்மா' என்றும், சித்தார்த்தை 'டாடி' என்றும் அழைக்குமாறு புது அழைப்பை சொல்லித் தந்தாள்..

சின்னவளுக்கு என்ன புரிந்ததோ வித்யா சொன்ன காரணத்தினால் அதை புது உறவுமுறை என்றெண்ணி அவளும் அழைக்கிறாள்..

பள்ளி வகுப்புகள் தொடங்கி விட, கார்த்திக்கும், வித்யாவும் தங்களது தினசரி வழக்கத்திற்கு திரும்பினர்.. இதில் அதிகப்படியாக சின்னக்குட்டியையும் பள்ளிக்கு கிளப்பும் பணி வேறு!..

தீபிகா தன் மருத்துவ புத்தகங்களை மீண்டும் புரட்டிக் கொண்டு இருக்க, சித்தார்த்தும் மெதுமெதுவாக தன் இயல்புக்கு திரும்பிக் கொண்டு இருந்தான்..

"அம்மா!!..சாப்பாது கொதுங்க!.. மம்மா ஊத்தி விதுதாங்காம்!.." என்று சமையலறை ஓடி வந்த சின்ன குட்டியை, "சாப்பாது கொதுங்க இல்ல டா செல்லம்!.. சாப்பாடு கொடுங்க!.." என்று திருத்தினாள் வித்யா..

"சாப்பாது கொதுங்க!.. சரியா ம்மா!?.." என்று கேட்டவளை, 'என்ன சொல்வது!?' அதுவும் பள்ளிக்கு கிளப்பும் வேளை பரபரப்பில்..

இதை திருத்திக் கொண்டு இருந்தால் தாமதமாகும் என்பதால் பெருமூச்சுடன் சரி என்று விட்டாள் வித்யா.. அவளை பார்த்து நமட்டுச் சிரிப்பை உதிர்த்தான் கார்த்திக்..

அவனை முறைத்தவள்,"குழந்தைக்கு பேச்சை ஒழுங்கா சொல்லி தர முடியல.. இதுல என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு!!?.." என்று அவள் கேட்டதும்.. இவன் கப்சிப்..

வித்யா பிள்ளையிடம் சாப்பாட்டு தட்டை நீட்ட, "மம்மா!.." என்று அழைத்துக் கொண்டு தட்டை கவனமாக தூக்கிக் கொண்டு தீபிகாவிடம் சென்றாள் சின்னவள்..

காலை வேளையில் ஒரு சில்வண்டை பள்ளிக்கு கிளப்புவது அவர்கள் மூவர் வேலையானது..

வித்யா சமையலை கவனிக்க, அவளுக்கு உதவி என்ற பெயரில் சேட்டைகள் செய்து கொண்டு கார்த்திக் என, அந்த காலை நேர பரபரப்பில் மிக ரம்மியமாக உயிர்ப்புடன் இருந்தது அந்த குடும்பச் சூழல்!..

*************

தீபிகா உயிருடன் திரும்பிய சேதி அறிந்து, மது, பாலா இருவரும் பெங்களூருவில் இருந்து வார விடுமுறை நாளில் பார்க்க வந்தனர்..

"அதிசயம் மாதிரி இருக்கு க்கா!!.. கார்த்திக் அண்ணா தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க!.. அம்மாவும் அப்படி இருக்க.. முதல்ல நீங்களும் எங்கே இருக்கீங்க னு தெரியாம.." என்று பாலா பிரமிப்புடன் தீபிகாவிடம் சொல்லிக் கொண்டிருக்க,

"ஆமா!.. எல்லாரும் உன்னைப் போல 'என்ன பண்ண னு தெரியல!?' னு புலம்பிட்டா இருப்பாங்க!.. பேசறான் பாரு பேச்சு!.." என்று மது அவனை கலாய்க்க,

ராஜேஸ்வரி," என்ன மதுமா இது!?.. கட்டுன புருஷனை இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவாங்களா?!.." என்று கண்டிக்க, பாலா சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான்..

"ஹி.. ஹி.. அது.. படிக்கற காலத்துல இருந்தே அப்படி பேசி பழகிடுச்சா ம்மா!.. அதான் ஒரு ஃப்ளோ ல வந்துடுச்சு!.." என்று சமாளித்தவள், அவனை 'இருடா உனக்கு இருக்கு!!..' எனக் கருவிக் கொண்டே முறைத்தாள்..

இவர்களின் திட்டமெல்லாம் தான், யாருக்கும் தெரியாமல் அல்லவா நடந்தது.. ராஜேஸ்வரிக்கு மது என்றால் பிரியம் அதிகம், அதை கெடுத்துக் கொள்ள விரும்புவாளா!?..

"ஆமா ங்க.. உங்கள போல ங்க என்னங்க பண்ண னுங்க தெரியாம னுங்க புலம்பிட்டு ங்க இருப்பாங்களா ங்க.. பேசறாங்க பாருங்க பேச்சை ங்க!.." என்று அவள் வார்த்தை க்கு வார்த்தை 'ங்க' என்று மரியாதை வீச..

அவளது பேச்சைக் கேட்ட அனைவரும் கொல்லென்று சிரிக்க, அவள் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும் பாலா தான் பேந்தப் பேந்த விழித்தான்..

"யம்மாடி!!!.. என்னா வாய் உனக்கு!!.. உன்னை எல்லாம் எப்படி தான் வீட்ல வைச்சு சமாளிச்சாங்களோ உங்கம்மா!!!?.. அவங்களுக்கு கோவில் தான் கட்டனும்!.." என்று ராஜேஸ்வரி சிரிப்புடன் சொன்னவர்,

"பாவம் பாலா!!.. நல்லா சிக்கிட்டான்!.. டேய் பாலா இவளே இப்படி இருக்கா னா.. இனி புள்ள எல்லாம் வந்தப்புறம் உன் பாடு திண்டாட்டம் போலயே!.." என்று நமட்டுச் சிரிப்புடன் முடித்தார்..

"எதேஏஏ!!!.. அதுக்குள்ள புள்ளையா?!.. எங்களை விட சீனியரே ஜாலியா என்சாய் பண்ணிட்டு இருக்கும் போது.. நான் மட்டும் புள்ளைய பெத்து கஷ்டப்படனுமா?!.." என்று அலறியவள்,

"பார்த்தீங்களா?!.. உங்க பையன் னு உடனே ஓரவஞ்சனை பண்றீங்க ம்மா நீங்க!.. எங்களுக்கு முன்னே கல்யாணம் பண்ணுன கார்த்திக்கையும், வித்யாவையும் மட்டும் கேட்க மாட்டீன்றீங்க?!.." என்று புகார் போல சொன்னாள் மது..

மதுமதிக்கு வித்யாவை பற்றி எதுவும் தெரியாததால் இயல்பு போல பேசிவிட, விசயம் தெரிந்தவர்கள் மட்டும் அமைதியாகினர்..

கார்த்திக் தான் சூழலை சகஜமாக்க,"சதிகாரி மது!!.. நீ ஆன்ட்டி ஆகலையா னு கேட்டா, அதுக்கு மட்டும் பதில் சொல்லனும் அதை விட்டுட்டு எங்களை ஏன் மா கோர்த்து விடுற.."

"அதான் பவிக்குட்டி இருக்காளே!.. அவ உன் கண்ணுக்கு தெரியலையா?!.. " என்று கேட்டவன், "பார்ரா குட்டிமா!!.. இந்த ஆன்ட்டி க்கு உன்னை கண்ணுக்கு தெரியலையாம்!.. பாவம் வயசாகிடுச்சு.." எனக் கூறி மகளுடன் சேர்ந்து சிரித்தான்..

"அல்லோஓஓ.. மிஸ்டர். கார்த்திக்.. உங்க பால் டப்பா வேணும்னா அங்கிள் ஆகி இருக்கலாம்!.. ஆனா நான் ஒன்னும் ஆன்ட்டி ஆகல!.. ம்ஹூம்!.." என்று பழிப்பு காட்டினாள் மது..

என்ன தான் கார்த்திக் பேச்சை மாற்றி விட்டாலும், அவளது கேள்வி வித்யாவின் மனதில் சிறு குழப்பத்தையும், பயத்தையும் உண்டாக்கியது என்னவோ உண்மை..

மதுவும் பாலாவும் இரவு உணவை முடித்துவிட்டு மதுவுடைய வீட்டிற்கு கிளம்பினர்..

அனைத்து வேலைகளும் முடித்து, வித்யா உறங்கச் செல்லும் முன், "அம்மா!.. நான் மம்மா கூத பத்துக்கவா!!?.. அவங்க கதை சொல்தேனு சொன்னாங்க!.." என்று பவிஷ்யா கேட்டதும், சரி என்று விட்டாள்..

தங்களது அறைக்குள் நுழைந்த வித்யாவின் அமைதியை சிறிது நேரம் வரை கார்த்திக் கவனிக்கவில்லை..

"குட்டிமா எங்க டா?!.. தூங்க வரலையா?!.." என்று அவன் கேட்டதற்கு கூட, "அவ அண்ணி கூட தூங்கறேன் னு சொல்லிட்டு போயிட்டா!.." என்று செய்தி போல் சொன்னதும் தான் அவளது முகத்தை கவனித்தான் அவன்..

"ஆர் யூ ஓகே விதுமா!!?..எதாவது பிரச்சனையா டா?!.." என்று சந்தேகமாக அவன் கேட்க, "ஒன்னுமில்ல!.." என்ற ஓராயிரம் விசயம் கொண்ட பதிலை கூறினாள் அவள்..

அவளது மனதில் ஏதோ ஒன்று உறுத்துகிறது என்பதை உணர்ந்தவன், அவளை அருகே அழைத்து, தன் மடியில் சாய்த்துக் கொண்டு தலையை தடவிக் கொண்டே..

"என்ன னாலும் மனசு விட்டு சொல்லனும் னு சொல்லி இருக்கேன்ல.. இப்ப என்ன உன் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு டா!?..எங்கிட்ட சொல்றதுக்கு என்ன தயக்கம் உனக்கு!?.." என அவன் கேட்க, அவளோ அமைதியோ அமைதி!..

அவளாகவே சொல்லட்டும் என்று சிறிது இடைவெளி விட்டான் அவன்..
அது வேலை செய்ய, "அப்ப பாப்பா இனிமே நம்ம குழந்தை இல்லையா கார்த்திப்பா!!?.." என்று அவள் கலக்கமுடன் தொடங்கினாள்..

விசயத்தை ஓரளவு யூகித்த கார்த்திக், "மது பேசுனதால இப்படி கேட்குறியா டா?!.." என்றான்..

"அப்படினு இல்ல.. கொஞ்ச நாளா எனக்குள்ள ஓடிட்டு இருக்கற கேள்வி தான்!.. என்ன தான் இருந்தாலும் அவங்க தானே பெத்தவங்க!.. அவங்க கிட்ட தானே அவ இருப்பா!.." என்று அவள் உளறிக் கொண்டிருக்க,

"குட்டிமா கிட்ட அப்படி எதாவது பிகேவ் பண்ணுனியா நீ?!.." என்று கார்த்திக் வேகமாகக் கேட்டதற்கு, அவள் இல்லை என்றதும் தான் அவனுக்கு சற்று நிம்மதியானது..

"இங்க பாரு டா விதுமா!!.. நீ சொல்றது சரி தான்.. அதுக்காக அவ மேல நமக்கு உரிமை இல்லை னு ஆகிடாது!.. எனக்கு தான் சொந்தம் னு உரிமை கொண்டாட.. அவ என்ன பொருளா!? இல்ல இடமா!?.."

"குட்டிமா நம்ம வீட்டு பொண்ணு!!.. எனக்கு தான் உரிமை!.. அவங்களுக்கு தான் உரிமை னு பிரிக்கறதுக்கு அவ பொருள் இல்ல.. அவ தப்பு செய்தா கண்டிக்கறதுக்கும், நல்ல பண்புகளை சொல்லித் தரவும் நம்ம எல்லாருக்கும் உரிமை உண்டு தெரியுதா?!.." என்றவன் இறுதியாக,

"நீ இப்படி பேசறது தெரிஞ்சா, அம்மாவும் அக்காவும் உண்மையிலேயே ரொம்ப வருத்தப்படுவாங்க டா!.. நீ இல்லைனா குட்டிமா எங்களுக்கு இல்ல.. அது அவங்களுக்கு நல்லா தெரியும்.."

"என்னதான் உறவுமுறைல நாம மாமா, அத்தையா இருந்தாலும் நாமளும் அவளோட தாய், தகப்பன் தான்.. இனிமே இப்படி கேணத்தனமா யோசிக்காம.. அவளுக்கு தேவையானதை செய்யனும் சரியா?!.." என்று கூறினான்..

அவன் சொன்னது புரியாமல் யோசனையுடன் பார்த்த வித்யாவை, "என்ன பார்க்கற?!.. நேத்து செல்லக்குட்டி எவ்ளோ வருத்தமா இருந்தா தெரியுமா?!.. என்ன அம்மா நீ?!.. புள்ளையோட ஆசையை கூட தெரிஞ்சுக்காம இருக்க?!.." என்று அவளை குறை கூற,

"பாப்பா வருத்தமா இருந்தாளா!!?.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே!!?.." எனக் குழப்பமாக அவள் கேட்டாள்..

"உனக்கு தெரியல னு சொல்லு டா!.. அவ எங்கிட்ட தான் ரொம்ப சோகமாக சொன்னா?!.. உங்கிட்டயும் கேட்க சொன்னா டா விதுமா?!.." என்றான் சீரியஸாக..

அவள் இன்னமும் புரியாமல் யோசனையில் இருக்கவும்," அவ க்ளாஸ் ல படிக்கிறாள்ல நந்தினி, அவளோட அம்மா அவளுக்காக தங்கச்சி பாப்பாவை அவங்க வயித்துல பாதுகாப்பா வைச்சு இருக்காங்களாம்!.." என்று ஏதோ கதை போல தொடங்கியவன்,

"அதனால குட்டிமா க்கும் தம்பி பாப்பா வேணுமாம்!.. அம்மா கிட்ட கேட்டு வாங்கி தர்றீங்களானு நேத்து என்கிட்ட ஒரே.... அழுகை!!.." என இழுத்து முடிக்க, அவனை முறைத்தவள்,

தலையணையால் அவனை அடிக்க,"ஏய்!.. உன் பொண்ணு தான் கேட்டா.. அதுக்கு ஏன்டி என்னை அடிக்கிற?!.." என்றான் கார்த்திக்..

"எதேஏஏ!!.. டி யா!?.. என்ன சாருக்கு ரொம்ப வாய் நீளுது?!.. இதென்ன புதுப் பழக்கம்?!.." என்று மிரட்டினாள் மனையாள்..

"அதெல்லாம் ஒரு கிக் டி..என் செல்ல பொண்டாட்டி!!.. உனக்கு புரியாது!!.." என்று அவன் ரசனையுடன் சொல்ல,
"அப்படியா டா!!?.." என்றவள்,

"அட.. ஆமா டா .. இதுவும் நல்லாதான் டா இருக்கு!.. இனிமே இப்படியே கூப்பிடவா டா!?.." என சொன்னதும் அவன் வாயைப் பிளந்து நின்றான்..

"பார்ரா!!..என்ன மிஸஸ்.கார்த்திக்!.. தேறிட்டீங்க போல!!.. அதுசரி.. எனக்கெல்லாம் தாராள மனசு தான்.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லமா!.." என்று பெருந்தன்மையுடன் கூறியவன்,

"ஆனா..நாலு பேர் முன்னாடி மட்டும் கூப்பிட்டு மானத்தை வாங்கிடாத டா செல்லம்!!.." என்று கையெடுத்து கெஞ்சுவது போல கும்பிட, அவள் சத்தமாக சிரித்து விட்டாள்..

"சரி.. சீக்கிரம் குட்டிமா வோட கவலையை போக்கற முயற்சில இறங்குவோமா?!.." என்று ஒற்றை கண்ணடித்து ஒரு மார்க்கமாக கேட்க, அவள் நாணத்தில் சிவந்தாள்.


என்னதான் கார்த்திக் தன் பேச்சால் அப்போதைக்கு அவளது மனதை மாற்றினாலும், சில கேள்விகளும், ஏக்கங்களும் அவளது மனதின் அடிஆழத்தில் இருக்கத்தான் செய்தன.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top