Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 68
- Thread Author
- #1
கானல் - 66
அன்று.....
அந்த பெட்ரோல் பங்கில் தங்களது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப நின்றிருந்த சங்கவி தனது காதலனிடம், "ச்சே!!.. எப்படியும் இந்த டீல் இன்னிக்கி முடிஞ்சுடும்.."
"அப்படியே கொடைக்கானல் ல ரெண்டு நாள் ஸ்டே பண்ணிட்டு போலாம்னு இருந்தேன்!.. எல்லாம் சொதப்பிடுச்சு!.." என்று காரியம் நடக்காத கவலையில் பேசிக் கொண்டிருக்க,
அப்போது, கொடைக்கானல் கிளம்பிய தீபிகா மற்றும் சித்தார்த் மலை ஏறுவதற்கு முன்பாக பெட்ரோலை நிரப்புவதற்காக அதே பங்க்கில் காரை நிறுத்தினர்..
"இங்கிருந்து கொடைக்கானல் எவ்ளோ நேரம் ஆகும் ண்ணா!.."என்று பெட்ரோல் போடுபவரிடம் தீபிகா கேட்டதற்கு, அந்த பணியாளரும் அருகில் தான் உள்ளது என்று பதிலளித்து கொண்டிருந்தார்..
அவர்களது காரை திரும்பிப் பார்த்த சங்கவிக்கு, மனதில் ஒரு அவசர திட்டம் உருவாகிட, தனது காதலன் பிரகாஷிடம் சொல்லவும் அவனுக்கும் அது சரியெனப்படவே, அதனையே செயல்படுத்த முடிவு செய்தனர்..
அங்கிருந்து கிளம்பிய சங்கவியும் அவனும் ஒருவழிப் பாதையான அதே பாதையில் அவர்களுக்கு முன்பாக செல்ல வேண்டுமென விரைந்து மேலே ஏறிச்செல்ல,
பெட்ரோல் போட்டுவிட்டு இவர்கள் வந்து கொண்டிருந்த போது, வழியில் கலக்கமான முகத்துடன் நின்று லிஃப்ட் கேட்ட பெண்ணை கண்டு, தீபிகா சொன்னதற்காக வண்டியை நிறுத்தினான் சித்தார்த்..
"தேங்க்ஸ் ங்க!.. நீங்க கொடைக்கானல் மலைக்கு தான் போறீங்களா?!.." என்று அவள் பதட்டத்துடன் கேட்டதற்கு இவர்களும் ஆமோதித்து, ஏனென்று கேட்க,
"இல்லங்க.. நான் பழனில இருந்து வர்றேன்.. கொடைக்கானல் ல தான் என்னோட ஹஸ்பென்ட் ஒரு வேலையா போனார்.. இப்ப அவரோட ஃபோன்ல இருந்து கால் வந்தது..
"அவருக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆகிடுச்சு னு.. எனக்கு இருப்பே கொள்ளல.. அதான் டாக்சி வைச்சு வந்தேன்.. இப்ப நடுவுல டாக்சி ரிப்பேர் ஆகிடுச்சு.."
"என்ன பண்ண னு தெரியல.. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா!!?.." என்று அவள் காட்டிய திசையில் நின்ற டாக்சியை கண்ட தீபிகா, சரியென கூறியதும் அவளும் நன்றி கூறி பின்னால் ஏறிக் கொண்டாள்..
"இந்த நிலைமைல நீங்க மட்டும் ஏங்க தனியா போறீங்க?!.. வீட்ல இருக்கற யாரையாவது துணைக்கு கூட்டிட்டு வரலாம் ல.." என தீபிகா கேட்டதற்கு,
"எங்களுக்கு லவ் மேரேஜ் ங்க.. வீட்ல ஒத்துக்கல.. அதனால நாங்க மேரேஜ் பண்ணிட்டு தனியா வந்துட்டோம்.."என்று கூறிய புதியவள் கண்ணீர் சிந்த, தீபிகா அவளுக்கு ஆறுதலளித்தாள்..
அவளருகே இருந்த குழந்தையை கண்டு," உங்க குழந்தை ரொம்ப அழகா இருக்கா!.." என்று கூறி குழந்தைக்கு முத்தமிட்டவள், குழந்தையின் புன்னகையில் சிறிது நேரம் தன் துயரம் மறந்திருந்தாள்..
சிறிது தூரம் சென்ற பின் மலைப்பகுதியில் இருக்கும் பிட் ஸ்டாப் போன்ற இடத்தில் இருசக்கர வாகனம் பழுதாகி நிற்க, அதனருகே நின்ற இளம் ஜோடியை கண்ட தீபிகா,
"சித்து!.. அவங்களுக்கு ஏதோ பிரச்சனை போல.. என்ன னு கேட்போமா?!.." என்றிட, "தீபு ம்மா!.. நம்ம வண்டியே ஃபுல்ஆ இருக்கு டா.. அவங்களையும் எப்படி இதுல ஏத்த முடியும்?!.." என்று கேட்டான் சித்தார்த்..
"வண்டில ஏத்த வேண்டாம் பா.. ஒருவேளை பெட்ரோல் காலி ஆகி இருந்தாலோ, இல்ல வேற எதாவது ஹெல்ப் தேவைப்பட்டாலோ நாம உதவலாமே!..அதனால தான் சொன்னேன்.."
"இங்க வேற எந்த வண்டியும் வந்த மாதிரியும் தெரியல..போற மாதிரியும் தெரியல.." என்று அவள் கூறியதும் அவனுக்கும் சரியெனப்பட, அந்த தவறை செய்தான் சித்தார்த்..
வண்டி அவர்களை நோக்கி நெருங்கியதும், தன் காதலனிடம்,"ஹே ப்ரகாஷ்!.. டபுள் ஜாக்பாட் தான் இன்னிக்கு!!.." என்று குதூகளித்துக் கூறியவள், சட்டென முகத்தை பாவமாக மாற்றிக் கொண்டாள் சங்கவி..
காரை ஓரமாக நிறுத்திவனை கண்டு வேகமாக அருகில் வந்த சங்கவியும், பிரகாஷும், " ஸார் ப்ளீஸ்!.. கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா!?.. வண்டி பெட்ரோல் இல்லாம ஆஃப் ஆகிடுச்சு!.. " என்றான் ப்ரகாஷ்..
தீபிகாவின் புறம் இருந்த சங்கவி, "ரொம்ப நேரமா நிக்கிறோம் ங்க!.. ஒரு வண்டியும் வரல.. ப்ளீஸ் கொஞ்சம் உதவி பண்ணுங்க!.." என்று கெஞ்ச,
தீபிகாவை திரும்பிப் பார்த்த சித்தார்த், வண்டியில் இருந்து பெட்ரோல் எடுக்க தேவையானதை டிக்கியில் இருந்து எடுக்கச் செல்வதற்காக நினைக்கும் போது,
சங்கவியும், பிரகாஷும் ஒருசேர சமிக்ஞை செய்து கொண்டு அவர்களது முகத்தில் எதையோ வைச்சு அமுக்க,"ஏய்ய்!!.." என இருவரும் சுதாரிக்கும் முன் எல்லாம் நடந்திருந்தது..
சுய நினைவை இழக்கும் முன், மனதிற்குள் "கடவுளே!.. என் குழந்தையை காப்பாத்து!.." என்ற வேண்டுதலுடன் மயங்கி இருந்தாள் தீபிகா..
பின்னால் இருந்த அந்த பெண், "யார்ரா நீங்க!!?.." என்று பதறி போலீஸிற்கு அழைப்பதற்காக தன் அலைபேசி எங்கே என்று தேட,
அதை டாக்சியிலேயே பதட்டத்தில் மறந்து வைத்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டிருந்த நேரம், அவளது முகத்திலும் ஒரு ஸ்ப்ரே அடித்ததும் அவளும் மயங்கினாள்..
அதன் பின்னர் தீபிகாவையும், சித்தார்த்தையும் அந்த தடுப்பு சுவர் தாண்டி பெரும் பள்ளம் என்றெண்ணி அவர்கள் தூக்கி எறிய, விழும்போது சித்தார்த்தின் தலை அங்கிருந்த மரத்தில் மோதியது..
தீபிகாவை மரத்தின் இலைகளும் கிளைகளும் கீறிட ஒரு சிறிய சதுப்பு பகுதியில் விழுந்தனர் தம்பதியினர்..
"பிரகாஷ்!.. இப்ப இந்த வண்டியை என்ன செய்ய?!." என்று சங்கவி கேட்டதற்கு, "அதுவே திருட்டு வண்டி!.. பேசாம இருக்கட்டும்.. வா போகலாம்.." என்றான் அவன்..
"இல்லடா.. அது சரி வராது.. ஒருவேளை வண்டி போலீஸ் கைல சிக்குனா!?.. நாம வேற இவங்களையும் இங்கே தானே வீசி இருக்கோம்.. எதாவது மோப்பம் பிடிச்சுட்டா மாட்டிக்குவோம்!.." என்றவள்,
சில நொடிகள் யோசனைக்கு பிறகு, "நீ ஒன்னு பண்ணு!.. இந்த வண்டியையும் தள்ளி விட்டுடலாம்!.. ஒருவேளை போலீஸ் வந்து வண்டியை கண்டுபிடிக்கும் போது,"
"அவங்கள பார்த்தா கூட, வண்டில வந்தவங்க ஆக்சிடென்ட் ஆகி விழுந்துட்டாங்க னு நினைச்சு கேஸை க்ளோஸ் பண்ணிடுவாங்க!.." என்று கூறவும்,
"நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல செல்லோ!!..என்னா கிரிமினல்ஆ ப்ளான் போடுற!!!.."என்று அவளை சிலாகித்து அவன் பாராட்டினான்..
"சரி..சரி..ரொம்ப வாசிக்காத!.. சீக்கிரம் இங்கிருந்து கிளம்பலாம்!.. டைம் ஆகிட்டே இருக்கு!.. ம்ம்ம்.. காரில் ஏறு டா!.." என்றாள் சங்கவி..
காரில் ஏறிய பிரகாஷ், வண்டியை மலையேறும் திசையில் ஓட்ட, "டேய்!.. ஏன்டா மேலே போற?!.. அதான் நமக்கு பொருள் கிடைச்சுடுச்சே!.. சீக்கிரம் கீழே போலாம்!..பொருளை ஒப்படைச்சுட்டு காசை வாங்கலாம்.." என்றாள் சங்கவி..
"இல்ல டி.. இவ்ளோ தூரம் வந்தாச்சு.. கொடைக்கானல் குளிர்ல ஒரு ஸ்டே போட்டுட்டு போலாமே!.." என்று கூறி அவன் ஒரு மார்க்கமாய் கண்ணடிக்க,
"வேணாம் டா!.. முதல்ல பொருளை பத்திரமா ஒப்படைச்சுட்டு அப்றம் வந்து நாம என்ன வேணும்னா பண்ணலாம் பிரகாஷ்!..சொன்னா கேளு!.." என்று எச்சரித்துக் கொண்டிருந்தாள்..
சங்கவி மதுரையில் உள்ள பாடாவதி மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணி புரிபவள்..பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிபவள்..
சிறு குழந்தைகளின் உடல் உறுப்புகளுக்கு மெடிக்கல் மார்க்கெட்டில் அதீத விலை என்பதால், அதை களவாடி விற்கும் மிகப் பெரிய மெடிக்கல் மாஃபியா கூட்டத்தின் கடைநிலை ஊழியையாக செயல்படுகிறாள்..
அவசர தேவையாக குழந்தையின் இதயத்திற்கான அசைன்மென்ட் ஒன்று அவளுக்கு வந்து இருக்க,
அதற்கான ஏஜென்ட் ஒருவரின் மூலம் பழனியில் இருந்த மருத்துவமனை ஒன்றில், அநாதை குழந்தை இருப்பதை பற்றிய தகவல் கிடைத்ததின் பேரில் தன் காதலனுடன் அங்கு வந்து சேர்ந்தாள்..
இவர்கள் வருவதற்குள் போலீஸிற்கு தகவல் சென்று அவர்கள் விசாரணையில் இறங்கி விட, ரிஸ்க் எடுக்க விரும்பாமல் திரும்பி விட்டனர்..
இப்போது குழந்தைக்கு என்ன செய்வது என்று அவள் பிரகாஷிடம் புலம்பிக் கொண்டிருந்த போது தான், அருகில் இருந்த காரின் பின்னிருக்கையில் இருந்த பவிஷ்யாவை கண்டவள்,
அவர்கள் புதிதாக கொடைக்கானல் செல்பவர்கள் என்பதையும் தீபிகாவின் கேள்வியை வைத்தே அறிந்து கொண்டாள்..
சட்டென்று ஒரு மனக்கணக்கு போட்டு தன் காதலனிடம் கூறிட, அவனும் அதை செயல்படுத்த விழைந்து, அவர்கள் கொடைக்கானல் செல்வதற்கு விசாரித்ததை வைத்து அவ்வழி செல்வார்கள் என்று திட்டமிட்டவர்கள்..
அவர்களுக்கு முன்பாக சென்று தோதான இடத்தில் நின்று காத்திருக்க, அவர்களும் வந்து சேர, தங்கள் திட்டப்படி அனைத்தையும் செய்து முடித்தனர்..
ஆனால் வேலை முடிந்ததும் பிரகாஷ் காரை திரும்பிக் கொண்டு செல்வான் என்று சங்கவி எதிர்பார்த்திருக்க, அவன் மலைக்கு செல்லலாம் என்று கூறியது அவளுக்கு சரியெனப்படவில்லை..
"வேணாம் டா!.. பொருளை வச்சுக்கிட்டு.. இதெல்லாம் ரிஸ்க்!.. அதுவும் அவங்க முழிச்சுட்டா நாம நல்லா சிக்கிடுவோம்!.." என்று எச்சரித்தாள்..
"அதெல்லாம் பார்த்துக்கலாம் டி!.. அதான் இஞ்செக்ஷன் எல்லாம் வைச்சு இருக்கல.. அதை யூஸ் பண்ணிக்கலாம்!..ப்ளீஸ் டி!.. எனக்காக!.."
"என் செல்லம் ல!.." என்று அவன் அவளது கன்னம் பிடித்து தாஜா செய்து கொண்டே வேகமாக செல்ல முனையும் போது சரியாக எதிரில் வந்த காரில் மோதியது..
***************
" மம்மா எனக்கு இந்த சிண்து போத்து விதுங்க!!..சூலுக்கு லேத் ஆகுது!.." என்று ஓடி வந்த பவிக்குட்டியை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்ட தீபிகா,
"அப்படியா டி செல்லம்!!.. இதோ இப்பவே அழகா போட்டு விடுறேனே!.." மகளது தலைமுடியை அழகாக வாரி இரண்டு புறமும் தென்னைமரக்கன்று குடுமி போட்டு விட.. கொள்ளை அழகு பவிக்குட்டி!..
"ஹை...சூப்பர் மம்மா!.. நான் அழகா இருக்கேனா?!.." என்று தன் முகவாயை கையில் தாங்கி அவள் கேட்க, அவளை நெட்டி முறித்து திருஷ்டி எடுத்து சிரித்தாள் தீபிகா..
"சரி.. சரி.. ஓடுங்க.. ஸ்கூலுக்கு லேட் ஆகிடும்!.. அதுக்குள்ள குட்டிமா சாப்பிடனும்ல.. ஓடிப் போய் அம்மா கிட்ட சாப்பிட வாங்கிட்டு வாங்க!.." என்று மகளை விரட்டி விட, சிட்டாக பறந்தாள் சின்ன வாண்டு..
தீபிகா கண் விழித்த பின்னர் நடந்த விஷயங்களை அவள் கூறவும், ஒன்றும் விளங்காமல் இருந்தவர்கள், எப்படியோ அவள் உயிருடன் இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்று அதை விட்டு விட்டனர்..
அதன் பின்னர், அவளை அழைத்துக் கொண்டு, சித்தார்த்தையும் கூட்டிக் கொண்டு தங்களது வீட்டிற்கு செல்ல விரும்பினர்..
ராமாயி பாட்டியையும் அவர்களுடன் அழைக்க, தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு வர மனமில்லாமல், 'அடிக்கடி வந்து அவரை பார்க்க வர வேண்டும்!' என்ற கோரிக்கையோடு அவர்களை வழியனுப்பி வைத்தவர், அவர் வருவதற்கு மறுத்து விட்டார்..
வைத்தியரின் கடைசி முயற்சியின் பலனாக இரு நாட்களில் கண் விழித்த சித்தார்த்துடன், அனைவரும் வீடு திரும்பினர்..
இறந்து விட்டாள் என்றெண்ணிய மகள், குடும்பத்துடன் திரும்பி இருப்பது ராஜேஸ்வரிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது..
பவிக்குட்டி தான் புதிதாக வந்தவர்கள் யாரென தெரியாமல் முதலில் மிரண்டு விலகினாள்..மகளின் பார்வையில் மனதளவில் அடி வாங்கிய தீபிகா பின்னர் குழந்தையின் மனநிலையை கருத்தில் கொண்டு தன்னை தேற்றிக் கொண்டாள்..
பிள்ளையே சிறிது சிறிதாக அவர்களை மனதளவில் ஏற்றுக் கொள்ள, அவர்களை எப்படி அழைப்பது என அவள் தடுமாறிய போது, ராஜேஸ்வரி அவளிடம் தீபிகாவை 'அம்மா' என்றழைக்க சொன்னதற்கு,
"அம்மா தான் இங்க இக்காங்கே!!.. இவங்கள எப்பி அம்மா னு கூப்பது பாத்தி!?.." என்று நியாயமாக கேட்டாள் சின்னவள்..