Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 68
- Thread Author
- #1
கானல் - 65
புதிதாக வந்த அந்த பாட்டியை கண்டு அவர் யாரென தெரியாமல் இவர்கள் இருவரும் விழிக்க, அவரோ தன் மகள் என்று தீபிகாவை சொல்லவும் மேலும் குழம்பினர்..
"அம்மா!!.. இவங்க உங்க மகள் இல்ல..என்னோட அக்கா தீபிகா!.. நீங்க யாரையோ நினைச்சு பேசுறீங்க னு நினைக்கிறேன்!!.." என்றான் கார்த்திக்..
அவன் சொன்னதை கவனித்த ராமாயி பாட்டி, சில நொடிகளுக்கு பிறகு அதனை புரிந்து கொண்டவர், "ஐய்யா ராசா!!.. நீங்க தான் சிகப்பியோட சொந்தகாரவகளா!!!?.." என்று ஆச்சர்யமாக கேட்டார்..
"ஆமா பாட்டி ஆனா அவங்க பேர் தீபிகா!.. இத்தனை வருசமா அவங்க இறந்துட்டாங்க னு நினைச்சுட்டு இருந்தோம்.. ஆனா அவங்க எப்படி உங்க கூட!!!??.." என்று குழப்பமாக கேட்டாள் வித்யா..
"என்ன!!!!?.." என்று ராமாயி பாட்டி அதிர்ச்சி அடைய, "ஆமா ம்மா!.. ஒரு முக்கியமான விசயத்துக்காக கொடைக்கானல் போன அவங்க கார் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு.."
"அதுல இவங்க இறந்துட்டதா தான் நாங்க நினைச்சுட்டு இருக்கோம்!.." என்ற கார்த்திக், அன்று நடந்த அனைத்தையும் அவரிடம் கூறிவிட்டு, தீபிகா எப்படி அவரிடம் சேர்ந்தாள் என்றும் விசாரித்தான்..
"கடவுளே!!.. இது என்ன கொடுமை!!.." என்று அன்றைய சம்பவத்தை நினைத்து வருந்தியவர்,சில நொடிகளில் நினைவு வந்தவராக, "தம்பி!.. என் கூட கொஞ்சம் வர முடியுமா?!.." என்று கேட்க, கார்த்திக் குழம்பினான்..
அவனது குழப்பத்தை பார்த்து, "இங்க பக்கத்துல தான் தம்பி!.. என் வீடு வரை வாங்களேன்!.." என்று அவர் மீண்டும் வற்பறுத்தவும், அவன் தன் சகோதரியை திரும்பிப் பார்த்தான்..
"தாயி கண்ணு முழிக்கறதுக்குள்ள வந்துடலாம்!.. வாங்க ராசா!.." என்ற அவரது உறுதியில் ஏதோ விசயம் இருப்பதை உணர்ந்து, செவிலியரிடம் சொல்லி விட்டு இருவரும் அவரோடு அவரது குடிசைக்கு கிளம்பினர்..
சிறிது நேர பயணத்திற்கு பிறகு அவரது குடிசையை அடைய வாசலிலேயே காவி உடையில் நெற்றியில் விபூதி பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுமென, சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் நின்றிருந்தார்..
"வெளிய போயிட்டியா ராமாயி!.. இன்னைக்கு நான் வருவேன்னு தெரியும் தானே!.. இன்னைக்கு தானே கடைசி சிகிச்சை னு சொல்லி இருந்தேனே!.." என்றார் அவர்..
"சாமி!!..அதுக்குள்ள என்னென்னவோ ஆகிடுச்சுங்க!.." என்று கூறியவர் ,தன் அருகில் இருந்த கார்த்திக்கையும் வித்யாவையும் காட்டி,"நம்ம சிகப்பியோட சொந்தக்காரவக சாமி!.." என்று அறிமுகப்படுத்த அவர் ஆச்சரியமாக பார்த்தார்..
நடந்த நிகழ்வை சுருக்கமாக தம்பதியினர் கூற, அதைக் கேட்டவர், சிகப்பி (எ) தீபிகா தன் சொந்தங்களை கண்டதுடன் அவளது நினைவும் மீண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்..
"அதாங்க சாமி!.. இவகளையும் காட்டலாம் னு கூட்டிட்டு வந்தேன்!.." என்ற ராமாயி, கதவை திறந்து உள்ளே செல்ல, அந்த சாமியாரும் இவர்களை உள்ளே அழைத்தார்..
அவர்கள் காட்டிய திசையில் பார்த்த வித்யா, கார்த்திக் இருவருக்கும் மற்றுமொரு இன்ப அதிர்ச்சி!..
அங்கே கட்டிலில் இருந்த சித்தார்த்தை கண்டு உறைந்து இருந்தவர்களிடம்," இவகளும் உங்க சொந்தம் தானா தம்பி!!?.." என்று பாட்டி கேட்டதற்கு, ஆமென்று கூறிய கார்த்திக், அவன் யாரென்றும் சொன்னான்..
"நாங்க மலையடிவாரத்துல இருக்கற இந்த மன்னவனூர் கிராமத்த சேர்ந்தவங்க தம்பி.. இவக ரெண்டு பேரையும் நாங்க......" என்று நடந்ததை சொல்லத் தொடங்கினார் ராமாயி பாட்டி..
ராமாயி பாட்டியின் குலதெய்வமான வனகாளியம்மன் கோவில் பூஜைக்கு சென்று விட்டு திரும்பி மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த போது,
ஓரிடத்தில் அவர்கள் சென்ற வண்டி பஞ்சர் ஆகி நிற்க, அதன் சக்கரத்தை மாற்ற ஓரமாக நிறுத்தி இருந்தனர்..
அனைவரும் வண்டியில் இருந்து இறங்கி இளைப்பாற தடுப்பு சுவரில் அமர்ந்திருந்த சமயம், ஏதோ முனகல் சத்தம் கேட்கவும், எங்கே என்று தேடிப் பார்த்தனர்..
அப்போது சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தவர்கள் தீபிகாவை காண, உடனே அவளருகே விரைந்து, 'இவள் எப்படி இங்கே வந்தாள்!? ' என்ற யோசனையில் சுற்றிப் பார்க்கும் போது சற்று தொலைவில் சித்தார்த்தும் இருந்ததை கண்டனர்..
"இவக யாரு னு தெரியலையே!?.. ரெண்டு பேருக்கும் உசுரு இருக்கு பா.. சீக்கிரம் தூக்குங்க!.அந்த பையனுக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு போல!.." என்று பதறியவர்கள்
அவர்களை காப்பாற்ற வேண்டி விரைவாக வண்டியை சரி செய்து பின்னர் தங்களது இருப்பிடத்திற்கு கொண்டு வந்தனர்..
அதன்பின்னர் அந்த சித்த வைத்தியரை அழைத்து சிகிச்சைகள் அளிக்க, சில நாட்களில் தீபிகா மட்டும் கண் விழிக்க, அவளும் நினைவும் தப்பி இருந்தாள்..
தான் யாரென்றே தெரியாமலும் என்ன நடந்ததென்று தெரியாமலும் இருந்த அவளிடம் மேலும் கேள்விகளை கேட்க,
ஒவ்வொரு முறையும் அதை யோசிக்க முடியாமல் அவள் மீண்டும் மயக்கத்திற்கே செல்லவும், ராமாயி அவளை தன் மகளாக எண்ணி அவளுக்கு ஒரு பெயரையும் சூட்டி அவளை, அவர்களை சேர்ந்தவள் தான் என்று நம்ப வைத்தார்..
அவளுக்கு தெரியாமல் உணவில் மருந்தை கலந்து கொடுத்து அதன் மூலம் அவளது நினைவுகளை மீட்டெடுக்க நினைத்து இன்று வரை அதை தொடர்ந்து வருகிறார் அந்த வைத்தியர்..
சித்தார்த் மட்டும் இன்னமும் நினைவு திரும்பாமல் இருக்க, ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக தன் சிகிச்சை முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அவர்..
"நானும் ஒவ்வொரு முறையும் புதுசாக சிகிச்சை முறையை படிச்சுட்டு வந்து முயற்சி செய்துட்டு தான் இருக்கேன்!.. ஆனா இந்த தம்பி தான் இன்னுமும் கண் விழிக்கல.." என்ற அவர்,
"இதுல என்ன ஒரு குழப்பம் னா இவங்க ரெண்டு பேரும் யாரு, என்ன உறவு னு எங்களுக்கு எதுவுமே தெரியாது!.. சிகப்பி கிட்டவும் கேட்க முடியல.. அதனால இவரும் ராமாயி உடைய சொந்தம் னு அவ கிட்ட சொல்லி வச்சு இருக்கோம்!.." என்று அவர் விளக்கினார்..
"ஆமா தம்பி!.. சிகப்பி கூட என்னை திட்டுவா!.. இந்தாளை எதுக்கு காபந்து பண்ணிட்டு இருக்க!? னுட்டு.. ஆனா சில நேரம் அவளே இவர்கிட்ட போய் கொஞ்ச நேரம் உத்துப் பார்ப்பா!.. என்ன னு மட்டும் சொல்ல மாட்டா!.." என்ற பாட்டி,
"ஒருவேளை அந்த தாயி க்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கும் போல இவர் தான் தன்னோட உறவு னு.. அதான் அப்படி பார்த்துட்டு இருப்பா போல.." அவரே அனுமானித்து கூறினார்..
"ஆனா பாட்டி.. அவங்களுக்கு ஒரு தடவை கூட தான் இந்த இடத்தை சேர்ந்தவர் இல்ல னு தோணவே இல்லயா?!.." என்று வித்யா கேட்கவும்,
"இருக்கலாம் தாயி!.. அதான் அப்பப்ப தனிமைல போய் உட்கார்ந்துக்குவா!.. ரொம்ப நேர சிந்தனைக்கு பிறகு வந்து நான் நிசமாகவே உன் பொண்ணு தானா னு என்னை கேட்பா!.."
"நானும் அவளுக்கு ஏதோ நினைவு வந்துடுச்சு போல னு நினைச்சு சந்தோஷமா 'ஏன் கேட்குற கண்ணு!?.. உனக்கு வேற எதுவும் தோணுதா!?..' னுட்டு கேட்டா.."
"உடனே தலையை அழுத்தமா பிடிச்சுக்கிட்டு அலற ஆரம்பிச்சுட்டா.. அதனால அவளை அதிகமாக சிந்திக்க விடாம நினைவு வரும் போது வரட்டும் னு ஒன்னும் கேட்கறது இல்ல!.." என்று பாட்டி சொன்னார்..
"ஆனா அவங்க எப்படி அங்க வந்தாங்க ங்கற கேள்விக்கு பதில் அவ கிட்ட தான் இருக்கு!.. சரி..நான் இவருக்கான சிகிச்சையை ஆரம்பிக்கட்டுமா!.."என்று அந்த வைத்தியர் கேட்டதற்கு, கார்த்திக் சம்மதிக்க அவரும் தன் பணியை தொடங்கினார்..
அதற்குள் மருத்துவமனையில் இருந்த தீபிகா கண் விழித்ததாக தகவல் வரவும் மூவரும், கார்த்திக் வந்த வாகனத்தில் அங்கே விரைந்தனர்..
அவர்கள் வரும்போது கண் விழித்திருந்த தீபிகாவிற்கு, ராமாயி பாட்டி கண்டு யாரென அடையாளம் தெரிந்து அவளருகே வந்தவரை அணைத்துக் கொண்டாள்..
சில வருடங்கள் மகளாய் இருந்தவள் தன்னை மறந்திருப்பாளோ என்று பயந்து இருந்தவர், அவளது செயலில் மகிழ்ந்து அவளுக்கு நெட்டி முறித்தார்.. ஆனால் கார்த்திக்குடன் இருப்பவளை தான் தெரியாமல் விழித்தாள்..
அவளருகே சென்ற கார்த்திக், "நீங்க இறந்துட்டதா நினைச்சு எவ்ளோ நாள் வேதனையில் கண்ணீர் சிந்தினோம் னு தெரியுமா சண்முகம்!?.." என்று ஆனந்த கண்ணீருடன் கூறியவன், அவளை தோளோடு அணைத்தான்..
பின்பு வித்யாவை அருகே அழைத்து,
"இவளை யார்னு தெரியுதா?!.." என்று கேட்டதற்கு, "பார்த்த முகம் மாதிரி இருக்கு டா!.. ஆனா யார்னு தான் பிடிபடல.." என்றாள் அவள்..
கார்த்திக் அவள் யாரென்று விளக்கி, அவளை மணந்ததும் கூறியதில் ஆச்சர்யமான தீபிகா, "எப்படியோ ஜெயிச்சுட்ட கார்த்திகைபாலா!.." என்று அவனது தோளை தட்டி மெல்லமாக சிரித்தவள்,
"ஆமா!.. சித்து எங்க டா?!.. அவருக்கு என்ன ஆச்சு?!.." என்று பதட்டமாக கேட்டவள்,"நான் இன்னும் அவரை பார்க்கவே இல்லையே!!.. ஒருவேளை...." என்று அவள் அலைப்புறுதலோடு பேசிட,
"மாமா க்கு என்ன நல்லா ஜம்மு னு படுத்துட்டு இருக்கார்!.. சரி அன்னிக்கு என்ன தான் நடந்தது.. அந்த ஆக்சிடென்ட்ல நீங்க இறந்துட்டதா தான் சொன்னாங்க!.. அப்றம் எப்படி!!!??.." என்று கார்த்திக் குழப்பமாக கேட்டான்..
"சித்து.. சித்து க்கு ஒன்னும் இல்ல ல.. நல்லா தானே இருக்கார்!.. குட்டிமா!!!..குட்டிமா க்கு.. குட்டிமா வை தான் காப்பாத்த முடியல.." என்று கண்ணீர் வடித்தவளை கண்டு,
"அட லூசு சண்முகம்!.. குட்டிமா சேஃப்ஆ தான் இருக்கா!.. அம்மா கிட்ட விட்டுட்டு வந்து இருக்கேன்!..அவளை பற்றி கவலைப்படாத.." என்று நடந்தவற்றை கூறிவிட்டு,
"மாமா தான் சிகிச்சைல இருக்கார்.. நீ வந்து நல்லா நாலு தட்டு தட்டினேனா எழுந்துடுவார் போதுமா!?.." என்று அவள் கணவன் நிலையை விளையாட்டு போல சொன்னவன்,
"உங்களுக்கு என்ன நடந்தது னு சொல்லு தீபு!.." என்று கேட்க, கணவன் நிலையை எண்ணி கலங்கியவளுக்கு, மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற சொல் நிம்மதி அடைய செய்தது..
மறுபடியும் வந்த விழுந்த அவனது கேள்வியில் அன்று நடந்ததை விவரிக்கலானாள் அவள்..
"அன்னிக்கு நாங்க கொடைக்கானல் மலையேறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு லிஃப்ட் கேட்டா டா..சரி உதவி தானே னு நினைச்சு, வண்டில லிஃப்ட் கொடுத்தோம்!.."
"அப்றம் மலையேற ஆரம்பிச்சதும் எங்க பின்னாடியோ, முன்னாடியோ ஒரு வண்டியும் வரலையே னு நினைச்சுட்டு இருந்தப்ப.."
"வழில டூ வீலர் ஒன்னு ரிப்பேர் ஆகி ஒரு கபுள் நின்னுட்டு இருந்தாங்க!.." என்றவள் தன் தவறிற்காக மறுகிட, பின்னர் சொல்ல தொடங்கினாள்.
"நான் தான் சித்து கிட்ட 'அவங்களுக்கு எதாவது ஹெல்ப் வேணுமோ என்னவோ கேட்கலாமே சித்து!..'னு வண்டியை நிறுத்த சொன்னேன்."
"எங்க பக்கத்துல வந்த அவங்க பேசிக்கிட்டே ஏதோ ஒன்னை முகத்துல வைச்சு அமுக்க பார்த்தாங்க. சுதாரிச்ச நான் மூச்சடக்கினாலும் முதல்ல உள்ள போன மருந்தால மயங்கிட்டேன்."
"அதுக்கு அப்றம் என்ன நடந்ததுனு தெரியலடா கார்த்தி!..அந்த நேரத்துலேயும் 'கடவுளே!.. என் குழந்தையை காப்பாத்து!' னு வேண்டிட்டு தான் மயங்கினேன்!.." என அன்று நடந்ததை நினைவு கூர்ந்து சிறு நடுக்கத்துடன் கூறினாள் தீபிகா.