• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
65
கானல் - 63

"ஓகே!.. அதை கொஞ்சம் கரெக்ட்ஆ செக் பண்ணிடுங்க!.." என்று பேசிக் கொண்டே அறைக்குள் வந்தவன், ஒரு அழகிய சில்வர் டம்ளர் ஒன்று பறந்து படுவேகமாக வர, மயிரிழையில் அதை கையில் பிடித்து திகைத்து நின்றான் பாலா..

திருமண களேபரங்கள் அனைத்தும் முடிந்த பிறகு, அன்றைய இரவு அறையில் காத்திருந்த மது, ஒரு முக்கிய கைப்பேசி அழைப்பை பேச வெளியே சென்றவன் உள்ளே நுழையும் போது நடத்தியது தான் இந்த தாக்குதல்!..

"ஹேய்!!.. என்னடி முதல் நாளே மண்டையை ஒடைக்கப் பார்க்குற?!.." என்று இன்னும் பீதி குறையாமல் கேட்டான் பையன்..

"எதேஏஏ டி யா?!.. உன்னை பொளக்கப் போறேன் பாரு!!.. இவன் பெரிய, ஊர்ல இல்லாத பேரழகன் னு இவனை கட்டிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!!.. போடா கருவாயா!!.." எனக் கொந்தளித்தாள் அவள்..

அவளது பேச்சில் புரியாமல் விழித்த பாலா, " என்ன மதி சொல்ற?!.. என்ன அப்படி பண்ணுன?!.."என குழப்பமாக கேட்க, அவனை முடிந்த மட்டும் முறைத்தாள் மதுமதி..

"முறைக்காம என்ன னு சொல்லு மதி!.. என் செல்லம் ல!.." என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ள வர, அவனது கையை தட்டி விட்டவள்,

"மேலே கையை வைச்ச கொன்னுடுவேன் உன்னை தட்டித்தலையா!.." என்று கண்களில் அனல் பறக்க மிரட்டினாள் அவள்..

"ஏய்!.. ரொம்ப ஓவரா பண்ணாதே!.. சொல்லலைனா போடி!!.. பெரிய இவ!..என்னமோ ரொம்பத் தான் அலட்டிக்கிறா!!.." என்று அவன் திருப்பிக் கொள்ளவும், கண் கலங்கி நின்றவள்,

" கொஞ்ச நேரம் உன் பேச்சை அவாய்ட் பண்ணுனதுக்கே உனக்கு கோபம் வருது ல.. ஆனா இத்தனை வருசமா என்னை எவ்ளோ காயப்படுத்துன மித்ரன்!.." என்று அவள் கூற, அவன் தனது செயலை எண்ணி வெட்கினான்..

"ஸாரி டா மதி!.. எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டா.. ஆனா அதை வெளியே காட்டுனதில்ல.." எனக் கூறி அவளை அருகே இழுத்து அணைத்து ஆறுதலாக பேசியவன்,

"அதோட இவங்க வேற என்னை கார்னர் பண்ணி வச்சுட்டாங்க.. உம்மேல இருக்க காதலை வெளிப்படுத்தவும் முடியாம, உன்னை நிராகரிக்கவும் முடியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும்!.." என உருக்கமாக அவன் பேச..

அவ்வளவு நேரமும் அவனது மார்பில் இளைப்பாறியவள் சடாரென நிமிர்ந்து," அதுக்கு னு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டியா டா நீ!!?.." என கேள்வி எழுப்ப,

"அது தான் நடக்காது னு எனக்கு தெரியுமே டா செல்லம்!.." என்ற அவனது பதிலில், அவள் அதிர்ச்சி அடைந்து விழி விரித்துப் பார்க்க, அந்த விரிந்த விழிகளில் முத்தமிட்டான் அவன்..

"அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்லுற மித்ரன்?!.." என்று அவள் குழப்பமாக கேட்க, இதழ்பிரியா புன்னகையுடன்,

"அதான் மயூரி என்கிட்ட முதல்நாளே உங்க திட்டத்தை சொல்லிட்டாளே!.. அப்றம் எப்படி நான் உடனே உன்னை விரும்பறதை எங்கம்மா கிட்ட சொன்னேனாம்!.. இது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட ப்ளான்!.." என்றான் ஒற்றை கண்சிமிட்டி..

"அடிப்பாவி!.. இங்க எங்களோடவும் ப்ளான் போட்டுட்டு, உங்க கிட்டவும் ப்ளான் போட்டாளா அவ!.." என்று மதுமதி கருவிக் கொண்டிருக்க, அவளது தலையில் செல்லமாக தட்டியவன்,

"அட லூசே!.. கல்யாணப் பொண்ணை காணோம் னா எங்கம்மா உடனே கல்யாணத்துக்கு வந்த வேற எதாவது சொந்தகார பொண்ணை காட்டுனா என்ன பண்றதாம்!.."

"அதனால தான் அவ எங்கிட்டவும் சொல்லி உடனே ரியாக்ட் பண்ண சொன்னா!.. அதுக்காக தான் எங்கிட்ட முதல் நாள் நைட்டே சொல்லிட்டா!.." என்றவன்,

"உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு அவ.. அவளுக்கும் என்மேல விருப்பம் இல்ல னு தெரியும்.. ஆனா எப்படி உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சா னு யோசிட்டு இருந்தேன்!.."

"அப்ப தானே தெரிஞ்சது உங்க தகிடுதத்தம் எல்லாம்!..கள்ளி!!.. எம் மேல உனக்கு ஏன்டி இவ்ளோஓஓ லவ்வு!!?.." என அவள் கன்னம் நிமிண்டி கேட்டவன் கேள்வியில், நாணத்தில் சிவந்தவள்..

"அதான் எனக்கும் தெரியலை டா!.. நானே பல தடவை என்னையே கேட்டுக்கிட்டும் விடை தெரியாத கேள்வி!.." என்றாள் மதுமதி..

"ஏன் னு தெரிஞ்சுக்கலாமா?!.." என்று அவன் மையலுடன் அவளை நோக்கிக் கொண்டே நெருங்க, "ஓஓ... ஐயா இதுக்கு தான் இவ்ளோஓஓ வசனம் பேசுனீங்களோ!?.. தள்ளி நில்லு டா!.."என்று அவனை விரட்டியவள்,

"அதுசரி.. நாங்க இப்படி தடாலடியா ஏதோ ஒரு ப்ளான் பண்ணி இந்த கல்யாணத்தை நடத்தல னா.., சார் நம்ம கல்யாணத்துக்கு என்ன ஸ்டெப் எடுத்து இருப்பீங்க??!.." என நக்கலுடன் கேட்டாள்..

" என்ன பண்ணி இருப்பேன்!!?.. இன்னும் எவ்ளோ வருசம் முடியுமோ அவ்ளோ வருசம் இழுத்துட்டு இருப்பேன்.. அதுக்குள்ள அவளுக்கு வயசாகுது னு மாமா அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்ப்பார் ல.. அதனால தான்.." என்று அவன் சொல்லவும்,

மயூரவல்லி தனது குறைபாட்டை பற்றி அவனிடம் எதுவும் உரைக்கவில்லை என்பதை உணர்ந்து அவளும் அதை சொல்லாமல் சிந்தனையில் இருந்தாள்..

"நிஜமாவே ஏதோ கனவு மாதிரி இருக்கு டி!.. என்னையும் ஒரு பொண்ணு இப்படி விரட்டி விரட்டி லவ் பண்ணுவா னு நினைச்சு கூட பார்க்கல.."

"முதன்முதலா நீ வந்து காதலை சொன்னப்ப எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு!.. 'என்கிட்ட என்னத்தை இந்த புள்ள கண்டு லவ் பண்றேன்'னு சொல்லுறா னு!!.." என்று அவனாக பேசிக் கொண்டே போக..

"அதென்ன 'என்னையும்' னு சொல்லுற டா!.. உனக்கென்ன குறை.. இனிமே இப்படி உன்னை நீயே குறைச்சு பேசுன.. அவ்ளோ தான் சொல்லிட்டேன்!.." அவனுக்காக அவனிடமே மிரட்டினாள் அந்த ராங்கி..

"எனக்கு ஒரு டவுட்டு.. உனக்கு எம்மேல எந்த ஃபீலிங்கும் வரலையா மித்ரன்!.. நான் தான் உன்னை ஃபோர்ஸ் பண்ணி லவ் பண்ண வைச்சேனா?!.. எனக்குள்ள இந்த கேள்வி ரொம்ப நாளா பிராண்டுது!.." அவள் தன் நெடுநாள் கேள்வியை அவன் முன்வைக்க,

"அட லூசே!.. உன்னை பிடிக்காம இருந்தா நீ ஒவ்வொரு முறை வந்து பேசறப்பவும் பதில் பேசாம போக தெரியாதா?!.. இல்ல சப்புனு ஒரு அறை விட தெரியாதா?!.."

"ஆனா எங்கே உன் முகத்தை நேரா பார்த்தா, ரொம்ப நேரம் என்னோட பொய்கோபத்தை காட்ட முடியாதே னுட்டு தான் சத்தம் போடுற மாதிரி நடிச்சேன்!.. அதெல்லாம் ஒரு தனி சுகம் டா செல்லம்!.."

"அதுவும் நீ ஒவ்வொரு தடவையும் 'மித்ரன்!..மித்ரன்!..' னு கூப்பிடும் போது அதை ரசிச்சுட்டே காது கேட்காத மாதிரி இருப்பேன்!.. அதுல ஒரு கிக் வரும் பாரு!..ப்ப்ப்பா!!!.." என்று சிலாகித்து கூறிவிட்டு,

அவளை நெருங்கியவன், "எனக்கு உன்மேல எவ்ளோஓஓஓ ஃபீலிங் இருக்குனு காட்டட்டுமா!?.." என்று கூறி அவளது முகத்தில் ஒற்றை விரலால் கோலமிட..

அதில் நெளிந்த அந்த சரவெடிப் பேச்சுக்காரி, புஸ்வானமாக மாறி அடங்கிட.. சண்டித்தனம் செய்த அந்த சண்டைக்காரிக்கு விடிய விடிய மஞ்சத்தில் பதில் விளக்கினான்..

*************

"ஏன்டா கார்த்தி நீயும் அவ கூட போயிட்டு வர வேண்டியது தானே!?.. நீங்களும் கல்யாணம் ஆனதுல இருந்து எங்கேயும் தனியா போய் இருக்க மாட்டீங்க!.."

"இப்ப தான் நான் இருக்கேனே.. குட்டிமா வை நான் பார்த்துக்கறேன்!.." என்று ராஜேஸ்வரி, வித்யாவுடன் கார்த்திக்கையும் செல்லுமாறு கூற..

"ராஜி மாதா!.. அது ஸ்கூல் பசங்களோட அவ போற ட்ரிப்.. விட்டா நீங்க அதை ஹனிமூன் ட்ரிப் ஆக்கிடுவீங்க போல.." என்று கூறி நகைத்தான் கார்த்திக்..

"சரி.. அப்ப நீங்க மட்டும் போற மாதிரி எங்கேயாவது போயிட்டு வரலாம் ல?!.." என்று தாய் கேட்டதற்கு, "பார்ப்போம் ராஜி மாதா!..அப்றமா அதைப் பற்றி யோசிக்கலாம் மாதா ஜி!.." என்றான் அவன்..

பாலா-மதுவின் திருமணம் முடிந்து திரும்பிய பின்னர் பள்ளியின் சுற்றுலாவிற்கு வித்யா உடைமைகளை எடுத்து வைக்கும் போது தான் ராஜேஸ்வரி இவனிடம் பேசிக் கொண்டிருந்தார்..

அவரை ஒருவழியாக சமாளித்து, 'ஹப்பாடா!!..' என்ற பெருமூச்சுடன் தங்களது அறைக்குள் நுழைந்தவனிடம், "கார்த்திப்பா நான் வேணும்னா பாப்பாவை மட்டுமாவது கூட கூட்டிட்டு போகவா?!.." என்று தனியாக ஆரம்பித்தாள் மனையாட்டி..

"யம்மா தாயே!!.. இப்ப தான் ஒரு பஞ்சாயத்தை முடிச்சுட்டு வர்றேன்!.. உடனே நீயா?!.. மனுசனுக்கு கொஞ்சம் கேப் கொடுங்க தாய்குலங்களே!.." என்று அவன் கெஞ்சுவது போல செய்யவும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

"ஆத்தா!.. உடனே மலையேறிடாதே டா செல்லம்!.. குட்டிமா க்கு திடீர்னு க்ளைமேட் மாறுனா ஒத்துக்காது டா!.. அதனால தான் வேணாம் னு சொல்றேன்!.." என்று அவன் விளக்கம் சொன்ன பிறகும் அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க,

"அதுவுமில்லாம நீங்க போற இடத்துல ரொம்ப நடக்க வேண்டி இருக்கும்!..குட்டிமா வையும் தூக்கிட்டு தனியா நீ எவ்ளோ நேரம் ஹோல்ட் பண்ண முடியும் டா சொல்லு!?.." என்ற

அவனது நியாயமான கேள்வியில் யோசித்தவள், "நீங்க எல்லாம் இல்லாம போறதுக்கு எனக்கு என்னவோ போல இருக்கு.. ஆனா நிதர்சனத்தை நினைச்சா இந்த மாதிரி யோசிக்க கூடாது னும் தோணுது.."

"என்ன செய்ய!!?.. மூளைக்கு புரியறது.. மனசுக்கு புரிய மாட்டேங்குதே!!.." என்று அவள் குழப்பத்துடன் கூற, "நான் வேணும்னா மனசுக்கு புரிய வைக்கவா?!.." என்று அவன் ஒற்றை கண்ணடிக்க,

அவனை பொய்யாக முறைத்தவள், பின்பு நாணத்தில் சிவக்க, அவளது மனம் வேறு எதையும் சிந்திக்கா வண்ணம் செய்தான் அந்த கள்வன்..

கதிரவனின் கரங்களில் அந்த அழகிய நாளும் திறக்கப்பட, காலையிலேயே பிள்ளைகளோடு ஆசிரியர்களும் தங்களது பயணத்தை தொடங்கினர்..

இயற்கையான காற்றும், மாறும் காட்சிகளும் பிள்ளைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்த, ஆனந்த ஆர்ப்பரிப்புகளுடன் பயணம் எங்கும் குதூகளித்தனர்..

அந்த வனவிலங்கு சரணாலயத்தை ஆர்வமுடன் சுற்றி பார்த்த மாணவர்கள் உணவிற்காக ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர்..

_-_-_-_-_-_-_-_-_-_-_-_

அந்த பிற்பகல் வேளையில், வீட்டில் அப்போது தான் மதிய உணவை முடித்த ராஜேஸ்வரி சற்று ஓய்விற்காக உறங்கச் சென்றிருக்க,

கார்த்திக் மகள் வரைந்து கொண்டிருந்ததை பார்த்து கருத்துகளும், திருத்தங்களும் சொல்லி அவளை பாராட்டிக் கொண்டிருந்தான்..

அப்போது அவனது கைப்பேசி அழைக்க, " இதுல இந்த ப்ளூ கலர் சூப்பரா அடிச்சு இருக்க டா குட்டிமா!!.." என்று பாராட்டிக் கொண்டே அதை ஏற்றவன், 'ஹலோ' என்பதற்குள்,

"கார்த்திப்பா!!.." என்ற வித்யாவின் பதட்டமான அழுகுரல் கேட்க, பதறிய கார்த்திக், "விதுமா!!.. என்னாச்சு!!?.. ஏன் டா அழுகற?!.." என்று பரிதவிப்போடு கேட்டான்..

அவன் பேசியதை கேட்ட பவிக்குட்டி, "அம்மா அழதாங்கா?!.. என்னாச்சு காத்திப்பா!!.." என்று ஓடி வந்தாள்..

உடனே சுதாரித்த கார்த்திக், "அதெல்லாம் இல்லடா.. எனக்கு தான் அப்படி கேட்டுச்சா, அதான் கேட்டேன்!.. நீ போய் வரை டா செல்லம்!.." என்று மகளை அனுப்பியவன்,

அங்கிருந்து விலகிச் சென்று, "விதுமா!!.. என்னாச்சு!?.. எதாவது பிரச்சனையா?!.. சொல்லு டா மனசெல்லாம் பதறுது!!.." என்று அவன் பரபரப்புடன் கேட்க,

தன்னை நிதானப்படுத்திய வித்யா, "நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க கார்த்திப்பா!..எனக்கு பயமா இருக்கு!.." என்று மீண்டும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, இடத்தை கூறினாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top