Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 62
- Thread Author
- #1
கானல் - 60
மதுமதி, மயூரவல்லியிடம் பேசி முடித்து வந்ததை கார்த்திக்கிடம் பகிர, "நான் தான் அப்பவே சொன்னேனே!..அந்த பொண்ணுக்கு இந்த மேரேஜ் ல இஷ்டம் இல்ல போலனு.."
"நீ தான் நம்பலை.. ஆனா அதுக்கு பின்னாடி இப்படி ஒரு ரீசன் இருக்கும்னு நான் நினைக்கல மது!.." என்றான் சிறு வருத்தத்துடன்..
"உண்மை தான் கார்த்திக்.. அவ என்னமோ ஜென் துறவி மாதிரி பேசிட்டு இருக்கா!.. அவளோட பிரச்சனையை அடுத்து பார்ப்போம்!.."
"இப்ப பாலாவோட பேரன்ட்ஸ்ஐ எப்படி ஒத்துக்க வைக்கிறது?!.. அந்த லூஸு தான் அவங்கள மீறி எதுவும் செய்ய முடியல னு சொல்லிட்டு இருக்கானே!.." என்று மது சலிப்புடன் கூறினாள்..
பாலாவிடம் உண்மையை கூறிவிடலாம் என்று கார்த்திக் சொன்னதுக்கு, அவனை முறைத்தவள், " எதுக்கு!!?.. இந்த காருண்ய காண்டாமிருகம் 'அவளுக்காக யார் இருக்கா?!' அப்படினு சொல்லிட்டு.."
"அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சொல்லுவான் அதுக்கு நான் 'எங்கிருந்தாலும் வாழ்க
' அப்படினு சோக வயலின் வாசிக்கனும் அதானே!!?.." என மூக்கில் காற்றடிக்க காண்டாகி கேட்க, கார்த்திக் கப்சிப்!..
"வேற எதாவது உருபடியா யோசிங்க கார்த்திக்!.." என்றிட, கார்த்திக் தனக்கு தோன்றிய யோசனையை பகிரவும்.. அவளும் அதை சிந்திக்கலானாள்..
"எனக்கென்னமோ கொஞ்சம் ஓகே மாதிரி தான் இருக்கு கார்த்திக்!.. எதுக்கும் நாளைக்கு மயூ கிட்ட பேசிக்குவோம்!.." என்றாள் மதுமதி..
அதன் பிறகு, இரவு உணவின் போது ஈஸ்வரியும் ரூபேஷும் மறுநாள் கிளம்புவதாக சொல்லவும், "ஏன் மா உடனே கிளம்புறீங்க?!.. உன் ப்ரெண்டு கூட இன்னும் ரெண்டு நாள் இருக்கலாமே!?.. " என்று ராஜேஸ்வரி கேட்டதற்கு,
"இல்லம்மா!..எனக்கு நாளை மறுநாள் ட்யூட்டி ஜாய்ன் பண்ணனும்!.. இப்ப தான் ட்ரான்ஸ்பர் ஆகி வந்து இருக்கேன்!.. அதுக்குள்ள லீவு நிறைய எடுத்தா நல்லா இருக்காது!..அதனால தான்....." என்று ரூபேஷ் கூறினான்..
"டேய் அமுல்!!!.. ட்ரான்ஸ்பர் ஆகி வந்துட்டியா?!.. சொல்லவே இல்ல!!.. ஏம்மா அமுதா நீ கூட சொல்லலை!.. அட்லீஸ்ட் உன் டோலி கிட்டயாவது சொல்லி இருக்கலாம் ல!.." என்று கார்த்திக் குறைபட..
"அவர் வந்தே இப்ப தான் பத்து நாளாகுது கார்த்திக்!.. அதான் வீக் என்ட் வந்ததுமே இங்க வந்துட்டோம்!.. இன்னும் அங்க நிறைய வேலை இருக்கு!.." என்று ஈஸ்வரி விளக்கினாள்..
"அவங்க தான் அவசரம் னு கிளம்புறாங்க!.. நீ இங்க இன்னும் கொஞ்ச நாள் இருப்ப தானே டா மது?!.." என்று மதுமதியின் இருப்பை பற்றி அவர் கேட்க,
"ஸ்கூல் லீவ் முடிய போகுதே ம்மா!.. இனி நீங்களே இவங்களோட அங்க வந்துடுவீங்க தானே!.. அப்றம் என்ன தினமும் வந்து உங்கள டார்ச்சர் பண்றேன் சரியா?!.." என்று அவரது கையை ஆதரவாக தட்டி கூறினாள் மது..
இரவு பவிக்குட்டி பாட்டியுடன் படுப்பதாக சொல்லவும், மதுவும் அவர்களுடனே உறங்க செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.. தோழிகள் பேசிக் கொண்டு வேலைகளை முடிக்க,
வேலை முடிந்து தங்களது அறைக்கு வந்து படுத்த வித்யா, குழந்தை இல்லாததால் அன்று போல் இன்றும் கார்த்திக்கின் கையைப் பற்றி கொண்டு உறங்க முனைந்தாள்..
சிறிது நேரத்தில் அவனை நெருங்கியவள் அவனது கைவளைவில் வந்து அடங்க, கார்த்திக் தான் 'அதற்குள் தூங்கி விட்டாளா!?' என குழம்பினான்..
அவளது உடலின் நடுக்கம் உணர்ந்து அவள் உறங்கவில்லை என்பதை அறிந்தவன், "என்ன டா விதுமா!?.. உடம்பு சரியில்லையா?!.. இல்ல எதாவது கெட்ட கனவு கண்டியா?!." என அவன் கேட்க ,
அதற்கு மறுப்பாக தலையசைத்தவள், அவனை இன்னும் இறுக அணைக்க, கார்த்திக் தான் திண்டாடினான்..
"அது இல்லனா!!.. அப்றம் ஏன் உன் உடம்பு இப்படி நடுங்குது?!.. எதாவது பயந்துட்டியா?!.." என குழப்பத்துடன் அவன் வினவ, அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் தெரிந்த உணர்வை புரிந்தும் புரியாமலும் திணறினான்..
"பயந்து பயந்து தள்ளி போடறதை விட..அதை தைரியமா ஃபேஸ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் கார்த்திப்பா!!.." என்று தயக்கத்துடன் வந்த அவளது பதிலில் குழம்பி அவன் பார்க்க..
அவனது பாவனையை கண்டு, அவன் காதருகே சென்றவள், தனது எண்ணத்தை உரைக்கவும், கண்கள் விரிய ஆச்சர்யமாக 'நிஜமா!!?' என்று அவன் கேட்க, அவளும் ஆமென்று தலையசைத்தாள்..
"வேணாம் டா!.. உன்னை கஷ்டப்படுத்தற விசயம் எதுவும் தேவையில்லை!.. பாரு!.. இப்பவே நீ எப்படி நடுங்கற னு?!.." என்று கார்த்திக் மறுக்க,
அதை சரி செய்வது அவனது கடமை என்று வேகமாக உரைத்தவள், முதல்முறையாக அவன் முன்பு நாணம் கொண்டு முகத்தை மூடினாள்..
அவளது பதிலையும், அவன் முன்பாக நாணத்தில் சிவந்தவளையும் கண்டு காதல் பித்துபிடித்தவன், முதல் அச்சாரமாக இதழில் கவி எழுத தொடங்க..
அவளும் தன் நடுக்கங்களும் தயக்கங்களும் உதிர்த்து மெதுமெதுவாய் அவனுள் அடங்க.. அங்கே அழகிய இல்லறம் இன்பமாக அரங்கேறியது!..
*************
அதிகாலையில் வெய்யோன் தன் கரங்களை நீட்டி இனிய அந்நாளை தொடங்க, விடிந்து வெகு நேரமாகியும் வித்யா வெளியே வராமல் இருக்கவும்..
மற்றவர்கள் எழுந்து வந்த பின்னரும் அவர்கள் வராததை கண்ட மது, "ரூபிணி க்கு எதாவது உடம்பு சரியில்லையா?!.. நான் போய் கதவை தட்டி கேட்கவா?!.." என்று குழப்பமாக கேட்டுக் கொண்டு நகர,
தன் மனதில் ஏதோ தோன்ற, அவளைப் பிடித்து பின்னே இழுத்த ஈஸ்வரி, "இப்ப என்ன பிரச்சனை உனக்கு!?.. அவளுக்கு உடம்பு சரியில்லை னா கார்த்திக் கூட இருக்கார்ல அவர் பார்த்துக்குவார்!.." என்று புன்சிரிப்புடன் சொன்னாள்..
அவளை விசித்திரமாக பார்த்த மது, "அட.. அவர் தூங்குறாரோ என்னவோ!!.. இல்லனா வெளியே வந்து சொல்லி இருப்பார்ல!!?.." என புத்திசாலித்தனமாக கேட்டாள் அந்த கூமுட்டை..
"ஆத்தா அஞ்சலி பாப்பா!!..கொஞ்சம் போய் உன்னோட வேலையை பார்க்குறியா?!.." என்று கையெடுத்துக் கும்பிட்டு அவளை விரட்ட, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள் மது..
சிறிது நேரத்தில் தயாராகி வெளியே வந்த வித்யாவை உதட்டில் மறைத்த நமட்டுச் சிரிப்புடன் ஈஸ்வரி பார்க்க, வெட்கப் புன்னகை சிந்தினாள் அவள்..
தோழியின் முகத்தைப் பார்த்து அவளது முகத்தில் தெரிந்த மகிழ்வில் ஈஸ்வரியின் மனதில் இருந்த கவலை நீங்கியது..
அன்று முழுவதும் கார்த்திக்கின் முகத்தில் மிளிர்ந்த மகிழ்வைக் கண்ட ராஜேஸ்வரி, 'கடவுளே!.. என்றென்றும் இந்த மகிழ்ச்சி இவர்களிடம் நிலைக்கனும்' என்று இன்ஸ்டன்ட் வேண்டுதல் வைத்தார்..
மதியத்திற்கு மேல் ஈஸ்வரியும் ரூபேஷும் ஊருக்கு கிளம்பும் வேளை வரவும், தோழியை அணைத்து தனது மகிழ்வை வெளிப்படுத்திய ஈஸ்வரி, "நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் டா தியா!.." என்று வாழ்த்தி விட்டு சென்றாள்..
மாலை மயூரவல்லியை சந்திக்க மதுவுடன் கார்த்திக்கும் சென்றிட, வகுப்புகள் முடிந்து வெளியே வந்தவள் மதுவை பார்த்து மகிழ்ச்சியாக அருகில் வந்தாள்..
"என்னக்கா நேத்து தான் பேசிட்டு போனீங்க?!.. மறுபடியும் எதாவது சொல்லனுமா?!.." என்று கேட்டுக் கொண்டே இருவரையும் பார்த்தாள்..
"ஆமா மயூ!.. ஒரு யோசனை வந்தது அதான் உங்கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணலாம் னு வந்தோம்!.." என்று மது பதிலளிக்க, மீண்டும் அதே பழச்சாறு கடை..அதே போல ஆர்டர் கொடுத்து விட்டு, அதே இருக்கைகளில் அமர ஆலோசனை தொடங்கியது..
"இல்ல..உன் பொத்தான் தான் அவன் பெத்தவங்க பேச்சை மீற முடியலனு சொல்றான்!.. அதான் கார்த்திக் ஒரு ஐடியா சொன்னாரு..அது நாங்க மட்டும் டிசைட் பண்ற விசயம் இல்ல.."
"அதனால தான் அதுக்கு உன்னோட கன்சர்ன் என்ன னு கேட்கலாம்னுட்டு வந்தோம்!.." என்று மெதுவாக மது தொடங்கிட, "சரி சொல்லுங்க!.." என்றாள் அவள்.
கார்த்திக்கின் யோசனைப்படி பாலாவிடம் மயூரவல்லிக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், அவன் வெளிநாடு சென்றுள்ளான் என்றும் இப்போதைக்கு வர முடியாத சூழல் என்றும் உரைக்க வேண்டும்..
"இன்னொருத்தனை லவ் பண்ற பொண்ணையா கல்யாணம் பண்ணிக்க போற!?.. னு அவனை பேசி சரிகட்டி, அவன் அண்ணன் பண்ணுன மாதிரி மதுவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்!.." என்று கார்த்திக் சொல்லி முடிக்க,
அவனது யோசனையில் அதிருப்தியான மயூ, "என்ன அண்ணா லூசுதனமா சொல்றீங்க!?.." என்றிட, மது கையால் வாயை மூடிக் கொண்டு சிரிப்பை அடக்க, கார்த்திக் அவளை முறைத்தான்..
"அப்படி சொன்னா, 'சரி பரவால்ல.. அவர் வர்றவரை நான் வீட்ல ஏதாவது காரணம் சொல்லி தள்ளிப் போடுறேன்!.. அவர் வந்ததும் உங்க அப்பா கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன்' னு..சின்ன அத்தான் கிளம்பிட்டா!!.."
"நானே எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதுல இல்லாத காதலனுக்கு நான் எங்க போறது!!?.." என லாஜிக்காக கேள்வியை வைக்க கார்த்திக் விழித்தான்..
"கரெக்டு மயூ!.. அவன் அப்படி எல்லாம் பேசக் கூடிய ஆளு தான்!.. கார்த்திக் சொன்னப்ப ஏதோ நெருடலா இருந்துச்சு!.. நீ சொன்ன அப்றம் தான் அது புரிஞ்சது!.." என அவளுடன் கை கோர்த்தாள் மது..
"நான் சொல்லும் போதெல்லாம் மண்டையை மண்டைய ஆட்டிட்டு இப்ப அந்தர்பல்டி அடிக்கிறியா?!.. ப்பே!..அப்படினா நீங்களே ஒரு வழி சொல்ல வேண்டியது தானே!.." கார்த்திக் மதுவை திட்டி விட்டுக் கேட்டான்..
"நானும் ஒரு ஐடியா யோசிச்சேன்!.. ஆனா அது எந்த அளவு வொர்க் அவுட் ஆகும்னு தெரியல!.." என்று சந்தேகத்துடன் கூறினாள் மயூரவல்லி..
அவளது யோசனை என்னவென்று அவர்கள் கேட்க," வீட்ல சொல்லி கல்யாணத்தை ஏற்பாடு பண்ண சொல்லிட்டு அத்தானை எமர்ஜென்சி னு வர சொல்லிடலாம்!.." என அவள் கூற, மது அவளை முறைத்தாள்..
"அட..பொறுங்க க்கா!..அதுக்குள்ள கோபப்படாதீங்க!.. அப்படி வர்ற அத்தானை கார்னர் பண்ணி தாலி கட்ட சொல்லலாம்!.." என்றிட, இப்போது மதுவின் அனல் பார்வை அதிகமானது..
"முழுசா கேளுங்க!.. தாலி கட்டப் போற நேரம் பொண்ணை காணோம் னு களேபரம் பண்ணி, மணவறை வரை வந்துட்டு கல்யாணம் நிக்க கூடாதுன்னு சொல்லி, உங்களுக்கு தாலி கட்ட வைச்சிடலாம்!..எப்பூடி என் ஐடியா!!!?.." என்றாள் அவள் கண்கள் மின்ன..
"சரி!.. பொண்ணு காணாம போச்சு னா என்ன அர்த்தம்!!?.. நீ எங்க போக போற?!.. அப்றம் ஓடிப் போனவ னுட்டு உனக்கும் அதனால உன்னோட பேரன்ட்ஸ் க்கும் தானே கெட்ட பேர் வரும்!.." என கார்த்திக் கேட்க..
"அதுக்கும் ஒரு ஐடியா வைச்சு இருக்கேனே!!.. தாலி கட்டி முடிஞ்சதும், என்னை யாரோ கடத்துனதாகவும், நான் அவங்கள்ட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரியும் சொல்லி வந்துடுவேனே!!.." என்று அவளை எண்ணியே அவள் பெருமிதமாக சொல்ல..
கார்த்திக்கிற்கு இது ஏதோ நாடகத்தனமாக தெரிய ஒப்பாமல் தலையசைக்க, "வாவ்!!!!.. வாட் அன் ஐடியா ஸார் ஜி!!!.." என்று அவளை தோளோடு அணைத்து பாராட்டினாள் மது..
"இதையே ஃபாலோ பண்றோம் கார்த்திக்!.. சூப்பர் டா மயூ!.." என்று கூறி அவளது கன்னத்தில் முத்தமிட்டு மது தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
ஆனால் இறைவன் ஒன்றை கணக்கிட்டு வைத்திருக்க, நடக்கப் போவதை அறியாமல், அவளது திட்டத்தை எண்ணி குதூகலித்தாள் மதுமதி.