Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 60
- Thread Author
- #1
கானல் - 58
தனது சகோதரன் ஷக்தி தான் அவளது அக்காவின் கணவன் என்று தெரிந்த பிறகு கார்த்திக்கிற்கு அனைத்தும் ஸ்தம்பித்தது..
தன் அண்ணனிடம் அதிகம் சிரிக்க சிரிக்க பேசவில்லை என்றாலும், அவனது சுபாவம் என்று அதை புறந்தள்ளி உள்ளான்..
அதனால் அவர்களை விட்டு அவன் பிரிந்தது கூட அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்..
ஆனால் அதன் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்குமென்றும் தெரியவில்லை.. தமக்கை அவனைக் காண ஏங்கி இருக்கிறாள் என்பதையும் அறியவில்லை..
கடைசிவரை அவனை கண் கொண்டு காண முடியாமல் இறந்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை..
கண்கள் அதன் போக்கில் கண்ணீரை உகுக்க, அப்படியே சிலையென அமர்ந்து இருந்தவன்,
"அடப்பாவி!!!..இப்படி எங்கள விட்டுட்டு ஒரேயடியா போகத் தான் அப்பவே பிரிஞ்சு போனியா!!!???.." என்ற தாயின் கதறலில் விழுக்கென்று திரும்பி அறைவாயிலை பார்த்தான்..
அதுவரை அழுகையில் கரைந்து இருந்த வித்யாவும் பதறிப் போய் அவரருகே ஓடியவள்,"அம்மா!!.. அழாதீங்க!!..ப்ளீஸ்!!.."என்று அவரை கட்டிக் கொண்டாள்..
உடனே தாயருகே ஓடி வந்த கார்த்திக்கும்," அம்மா!!.. ப்ளீஸ்!.. எமோஷனல் ஆகாதீங்க ம்மா!!.." என்று அவரை பிடித்துக் கொண்டான்..
எங்கே மீண்டும் அவருக்கு எதாவது நேர்ந்து விடுமோ என்று இருவரும் பதறி துடிக்க, இவர்களின் அழுகையை கண்ட பவிஷ்யா, ஒரு ஓரமாக அரண்டு போய் நின்றாள்..
கார்த்திக் அப்போது குழந்தையை பார்க்க, தன் கண்ணீரை உடனே துடைத்துக் கொண்டு, உதடு பிதுக்கி அழ தயாரான அவளிடம் ஓடியவன், அவளை அள்ளிக் கொண்டு, "ஒன்னுமில்ல டா குட்டிமா!!.." என்றான்..
வித்யாவும் குழந்தையை கண்டு தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு சிறு போலி சிரிப்புடன் அவளிடம் ஓடி வந்தவள்,
"செல்லக்குட்டி!!..ஒன்னுமில்ல தங்கம்!!.. பாட்டிக்கு ஊஊ பட்டுடுச்சு!. அதான் அழறாங்க!.." என்று அவனிடம் இருந்து அவளை வாங்கி அணைத்து தேற்றினாள்..
அவளை தட்டிக் கொடுத்துக் கொண்டே கார்த்திக்கிடம் அவரை பார்க்குமாறு சமிக்ஞை செய்தவள், "பாப்பாக்கு அம்மா பால் கலக்கவா டா செல்லம்!!?.." என்று கேட்க, சரியென்று தலையாட்டினாள் சின்ன மொட்டு..
குழந்தை பசிக்கிறது என்று சொன்னதால் அவளை அழைத்துக் கொண்டு, பேச்சு சத்தம் கேட்ட அவர்களது அறைக்கு வந்த ராஜேஸ்வரி, வித்யா கூறிய அனைத்தையும் கேட்டு விட்டார்..
ஏற்கனவே அவளிடம் பேசியதில் ஷக்தியை தண்டித்த குற்ற உணர்ச்சியில் இருந்த அவருக்கு, அவன் உயிரோடே இல்லை என்ற செய்தி கண்ணை இருட்டியது..
தான் பெறாத பிள்ளைக்கும், பெற்ற பிள்ளைக்குமாக அவர் அழுது கரைய, கார்த்திக் தான் செய்வதறியாது நின்றான்..
இப்படியே இருந்தால் அவர் மீண்டும் கோமா விற்கு சென்று விடுவாரோ என்று பயந்தவன், "இப்போ நிறுத்துறீங்களா??!!..இல்லையா!!!???" எனக் கத்தி அவரது கவனத்தை திசை திருப்பினான்..
அவனது சத்தத்தில் சற்று அழுகை மட்டுப்பட்டு, ராஜேஸ்வரி அவனை திரும்பிப் பார்க்க, " இப்ப என்ன!!??.. அவங்க ரெண்டு பேரும் இறந்துட்டாங்க!!.. அது நடந்து ரெண்டு வருசத்துக்கு மேலேயும் ஆச்சு!!.." என்று கூறிக் கொண்டே,
வழியும் தன் கண்ணீரை துடைத்தவன், " நீங்க இப்போ கதறி கதறி அழுதா மட்டும் திரும்பி வந்துடுவாங்களா??!!..அது போதாது னு நீங்களும் ரெண்டு வருசமா ஜாலியா படுத்துட்டு மனுசனை உயிரை எடுத்தது பத்தாதா?!.."
"ப்ளீஸ் ராஜி மாதா!!..அழாதீங்க!.. மறுபடியும் உங்களையும் இழந்து வாழ எனக்கு தெம்பில்லை!.. அவங்க இறந்தது கஷ்டமா தான் இருக்கு!.. அதுக்காக அழுதா திரும்ப வந்துடுவாங்களா?!.." என்று
கொஞ்சம் கொஞ்சமாக கத்தலில் இருந்து நிதானத்திற்கு வந்தவன், கண்ணீரில் கரைய, அவனை அருகே அழைத்து தன் மடியில் சாய்த்துக் கொண்ட ராஜேஸ்வரி தன் கண்களை துடைத்துக் கொண்டார்..
இருவரும் மௌன கண்ணீர் வடிக்க, குழந்தையோடு சமையலறை சென்றவளுக்கும் கண்ணீர் நிற்காமல் வர, அவளும் மெதுவாய் தன் கண்களை துடைத்து கொண்டிருந்தாள்..
அவளை திரும்பி பார்த்த குழந்தையிடம் கண்ணில் தூசி விழுந்தது என கூறி சமாளித்தாள் வித்யா..
வெகு நேரம் தாயும் மகனும் அதே நிலையில் அமைதியாய் இருக்க, பாலை குடித்து முடித்துவிட்டு வந்த குழந்தையும் ஓடிச் சென்று தன் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டாள்..
அதன் பின் குழந்தையின் முன் அழுகையை நிறுத்தி விட்டு, இவர்களின் அரற்றலால் பயந்த அவளை இயல்புக்கு கொண்டு வர மூவரும் முனைந்தனர்..
ராஜேஸ்வரி அவ்வப்போது அமைதியாக அந்த வேதனையில் மூழ்கும் போது, அவரை இயல்புக்கு கொண்டு வர குழந்தையை எந்நேரமும் அவரிடமே விட்டு இருந்தனர்..
அவள் உறங்கும் வேளையில் வித்யா அவருடன் இருக்க, ஷக்தியுடன் அவள் இருந்த நாட்களை பற்றி கேட்டு அறிந்தவர், தன் மகன் சிறிது காலமேனும் மகிழ்வோடு இருந்தானே என்றெண்ணி சிறு நிம்மதி அடைந்தார்..
கார்த்திக் மற்றும் வித்யாவின் இடைவிடாத முயற்சியினால் அவர்களின் இழப்பை ராஜேஸ்வரி ஏற்கத் தொடங்கி இருந்த சமயத்தில் தான், அவர்களது வீட்டிற்கு ரூபேஷ் மற்றும் ஈஸ்வரியோடு வருகை புரிந்தாள் மதுமதி..
அவர்களின் வரவை கண்டு, "ஹேய்!!..வாங்க வாங்க!.. நீங்க வர்றதா சொல்லவே இல்லையே ஈஷூ!!?.." என்று வினவிய வித்யாவிடம்,
"எதேஏஏ சொல்லலையா!!??.. அல்லோ மேடம்!.. நீங்க இந்த கேள்வியை கேட்க வேண்டியது கார்த்திக் கிட்ட!!.. அவர்ட்ட அட்ரஸ் கேட்டு தானே வந்தோம்!.." என்று வந்ததும் ஆரம்பித்தாள் மதுமதி..
அதற்குள் தங்களது அறையில் இருந்து வேகவேகமாக வெளியே வந்த கார்த்திக், "இப்ப தான் வந்த.. அதுக்குள்ள வத்தி வைக்கனுமா??!.. ரெண்டு பேர் நல்லா இருந்தா உனக்கு பிடிக்காதே!.." என அவளை வாரினான்..
"அவங்க வர்றது சர்ப்ரைஸ்ஆ இருக்கட்டும் னு தான் சொல்லல விதுமா!!..வேற ஒன்னும் இல்ல!.." என்று வித்யாவிடம் அவன் சரணடைந்தான்..
"என்னவோ போங்க!.. அது உங்களுக்குள் ஆயிரம் எனக்கு அதுல பங்கு வேணாம்!.. ஆனா என்னை குற்றம் சொல்லிட்டாங்களே!!.. ஹோ காட்!!.. நான் என்ன செய்வேன்!!?.." அவள் நாடகத்தனமாக நடிக்க,
"உன்னை விட்டா விடிய விடிய இதை வைச்சே ஓட்டுவ மா பரதேவதை!.. கொஞ்ச நேரம் உன்னோட வாய் ஜிப்பை மூடுறியா!?.."என்ற ஈஸ்வரி, "எப்படி இருக்க டா தியா!!?.." என வித்யாவிடம் நலம் விசாரித்தாள்..
அதற்குள் பேச்சுக்குரல் கேட்டு ராஜேஸ்வரியே அறையிலிருந்து வெளியே வர, அவரிடம் ஓடிச் சென்ற மதுமதி, தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு அவரது நலம் விசாரித்தாள்..
ரூபேஷூம் ஈஸ்வரியும் வந்து அவரிடம் நலம் விசாரித்து விட்டு ஆசிர்வாதம் பெற, அவர்கள் யாரென்று ராஜேஸ்வரிக்கு அறிமுகப்படுத்தினாள் வித்யா..
"ஐஐஐ.. அத்தை!!.." என்று குதூகளித்த பவிஷ்யா, ஈஸ்வரியிடம் வந்து, "பாத்தி வரலயா??!.." என வினவிட, "நீங்க எல்லாரும் அங்க வந்ததும் அப்றம் வந்து பார்க்கறேன் னு சொன்னாங்க டா செல்லம்!.." என பதிலளித்தாள்..
அவர்களின் வரவால் ஓரளவு மூவரும் இயல்புக்கு வந்து விட, அதுவும் மதுமதியின் பேச்சால் கொஞ்சம் கொஞ்சமாக தனது சோகத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஸ்வரி சிரிக்கக் கூட செய்தார்.. மேலும் குழந்தைக்கு தான் ஏக குஷி!..
இரு தினங்கள் சென்றிருக்க, அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்த வேளையில் மதுமதியிடம், "சரி!.. நீ என்ன செய்யலாம் னு முடிவு பண்ணி இருக்க மது!!??.." என்று கார்த்திக் கேட்டதும், மற்றவர்கள் புரியாமல் அவனை பார்த்தனர்..
"அந்த பொண்ணை எப்படியாவது சந்திக்கனும் கார்த்திக்!.." என்று மதுமதி யோசனையுடன் சொல்லவும், யாரைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று விளங்காமல் வித்யா கேட்க, நடந்தவற்றை விளக்கி கூறினான் கார்த்திக்..
"பார்ரா!!.. ஏன் மது அந்த பாழா போன காதல் உனக்கு அந்த பாலா பைய மேலேயா வரனும்!!.. ஸோ ஸேட்!!.." என்று பரிதாபப்பட்டு ரூபேஷ் சொல்லவும்..
"அதைத்தான் ரூபேஷ் நானும் பல நாள் யோசிச்சு மண்டை குழம்பி போனேன்!.. என்ன பண்றது இந்த ஜென்மத்துல இந்த கருவாயனை தான் எனக்கு னு கடவுள் எழுதி வைச்சு இருக்கார் போல!.." என
அவள் சோகமாக சொன்னதை, அவளை அறிந்தவர் தவிர புதிதாக யார் கேட்டாலும், ஏதோ கட்டாயத்தின் பேரில் அவனை விரும்புகிறாள் என்றே நினைப்பார்கள்..
"அதுசரி!!.. அப்ப அவன் பாடு திண்டாட்டம் தான்!!." என்று சிரித்த ரூபேஷிடம்,
"ம்க்கும்!!!.. அவனுக்கு என்ன திண்டாட்டம்!?..அதான் மாமன்மகள் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் ரெண்டு பேர் இருக்கற மெதப்பு!..நல்லா அவன் மண்டைலேயே நறுக்கு னு கொட்டி ஓட்டையை போடனும்!.." மது பொய் கோபத்துடன் கூறினாள்..
"அதுக்கெல்லாம் நமக்கு இப்ப டைம் இல்ல.. லீவே முடிய போகுது மது!.. அதனால நாளைக்கே அந்த பொண்ணை மீட் பண்ணு!.." என்ற கார்த்திக்,
"அந்த பொண்ணு ஏதோ ப்யூட்டிஃஷியன் கோர்ஸ் பண்றதா பாலாவோட அம்மா சொன்னாங்க!.." என்று அவளுக்கு நினைவூட்டவும், மதுவும் சரியென சம்மதித்தாள்..
ரூபேஷ் வந்து இருப்பதால் அவனுடன் பாலாவின் வீட்டிற்கு சென்றனர்.. ரூபேஷை கண்ட பாலாவின் பெற்றோர், அவனது திருமணத்திற்கு வர முடியாத சூழல் என்றுரைத்து விட்டு ஈஸ்வரியிடமும் நலம் விசாரித்தனர்..
அப்போது வந்த மயூரவல்லியை அவர்களுக்கு கனகலட்சுமி அறிமுகப்படுத்த, அவளிடம் இயல்பாக பேசி அவள் எங்கே படிக்கிறாள்? வகுப்புகளின் நேரம் என்ன? என்பதையும் அறிந்து கொண்டனர்..
வீட்டிற்கு திரும்பியவர்கள் மதுமதியிடம், மயூரவல்லியின் வகுப்புகள் பற்றி தெரிவிக்க, அவளுக்கு அறிமுகமான ஈஸ்வரியுடன் மறுநாளே சென்று அவளை காண திட்டமிட்டாள்..
தனது வகுப்பு முடிந்து வெளியே வந்த மயூரவல்லியை, எதிர்கொண்ட ஈஸ்வரியை பார்த்த அவள், "ஹலோ அக்கா!!.. நீங்க எங்கே இங்க!!?.." என்று குழப்பமாகக் கேட்டாள்..
"இல்ல..இந்த வழியா கடைக்கு வந்தோம்!.. அதான் உன்னோட க்ளாஸ் இங்க தானே சொன்ன!.. உன்னையும் பார்க்கலாம் னு நினைச்சேன்!..இவ என்னோட ஃப்ரெண்ட் மதுமதி!.." என அருகிலிருந்த மதுவை அறிமுகப்படுத்தினாள் ஈஸ்வரி..
இருவரும் பரஸ்பரம் அறிமுகம் ஆனதும், "நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் மயூரவல்லி!.. அதோ அந்த ஜூஸ் கடைக்கு போகலாமா?!.." என மது நேரடியாக விசயத்திற்கு வரவும், எதற்கென புரியாமல் அவளை பார்த்த மயூரவல்லி,
"சரி வாங்க!!.." என்றவள் அவளுடன் எதிரில் இருந்த பழச்சாறு கடைக்கு சென்று, ஆளுக்கு ஒரு பழச்சாறு ஆர்டர் செய்த பின்னர், பேசத் தொடங்கினாள் மதுமதி..
"நான் நேரடியா விசயத்துக்கு வர்றேன் மயூரவல்லி!.. முதல் விசயம் உங்க பேர் ரொம்ப பெருசா இருக்கு பா!.. நான் மயூ சொல்லிக்கவா?!.." மது கேட்டதும் சிறு சிரிப்புடன் சரியென்றவள்,
"சரி கூப்பிட்டுக்கோங்க!!.. ரெண்டாவது என்ன விசயம் க்கா!.." என்றவள் உடனே, "அப்படி கூப்பிடலாம் தானே!!!?.." என அனுமதியும் கேட்டாள்..
"தாராளமா கூப்பிடலாமே!..நான் கேட்க வந்தது உனக்கும் பாலாவுக்கும் மேரேஜ் பேசி இருக்காங்கள்ல.." மது சொன்னதுமே, மயூரவல்லியின் முகம் சுருங்கியது..
அதை கவனித்த மது, "உனக்கு அந்த மேரேஜ் தள்ளி போறது பிடிக்கலையா?!.. இல்ல அவனை மேரேஜ் பண்ணிக்க பிடிக்கலையா மயூ?!.." என கேட்க,
"அத்தான்னு இல்ல.. வேற யாரா இருந்தாலும் எனக்கு மேரேஜ் பண்ணிக்க பிடிக்கலக்கா!!.." என்று திட்டவட்டமாக சொன்னவளை புரியாமல் விழித்து, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..