• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
58
கானல் - 56

ஷோபா பேசியதில் பிரமை பிடித்தவன் போல் நின்ற கார்த்திக் பின்பு இயல்புக்கு வந்து வேகமாக, "உங்களுக்கு வித்யாவை எப்படி தெரியும்!!!??.." என்றிட..

" வித்யா வா!!?..யாரது!!?..அப்படி யாரையும் தெரியாதே!!.." என்று அவள் குழப்பமாகக் சொன்னதும், கார்த்திக்கிற்கு ஒன்றுமே புரியவில்லை..

"தீபு ரொம்ப நாளா தேடுறவங்களை பார்த்ததா நீங்க தானே சொன்னீங்க?!!.. நான் லவ் பண்ற பொண்ணு வித்யாவை காணோம் னு நான் கவலைப்பட்டுட்டு இருந்தப்ப தான்,"

"'அவளை எப்படியாவது கண்டுபிடிச்சுடலாம் டா!..என்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி வைக்கிறேன்.. நீயும் ட்ரை பண்ணு!..'னு எனக்கு தைரியம் சொன்னாள்!.."

"அதான் அவளோட ப்ரெண்ட்ஸ் கிட்ட எதுவும் சொல்லி இருப்பாளோ னு நினைச்சேன்!..அது மாதிரி உங்க கிட்டேவும் சொன்னாளோ னுட்டு தான் கேட்டேன்!.." என்றவன்,

"அப்படினா உங்களுக்கு வித்யாவை தெரியாதா??!.." என்று கேட்டு விட்டு பின்பு குழப்பமாக," அப்போ யாரை பற்றி தான், நீங்க பார்த்து அவ கிட்ட சொன்னீங்க??!!!.." எனக் கேட்டான்..

"நீ சொல்ற வித்யா யாரு னு எனக்கு தெரியல!!..ஆனா நான் அவங்கள சொல்லல பா!.. நான் பார்த்தது உங்க அண்ணனை!!.." என அவள் கூறியதும் துல்லியமாக அதிர்ந்தான் அவன்..

தீபிகா பள்ளி நாட்களில் அவ்வப்போது அவளது மூத்த சகோதரன் பற்றி இவளிடம் கூறி இருக்கிறாள்.. அதிகமாக பேசி சிரித்து விளையாடாவிட்டாலும் அவன் மீது தீபிகாவிற்கு பிரியம் உண்டு..

ஒருநாள் பள்ளிக்கு வந்த தீபிகா தனது அண்ணன் வீட்டை விட்டு சென்றது பற்றி இவளிடம் கவலையாக பேசி அழுததில், அவன் மீதான தீபிகாவின் பாசத்தை உணர்ந்தாள் ஷோபா..

அவன் வீட்டை விட்டு சென்ற நேரத்தில், தீபிகா கவலையுடன் கண்ணீர் விட, சீக்கிரமே திரும்பி விடுவார் என்று சொல்லி தேற்றியதும் ஷோபா தான்..

பத்தாம் வகுப்பிற்கு பின் சூழ்நிலையால் இருவரும் பிரிந்தாலும், அவர்களது நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது..

எப்போது தீபிகாவிடம் பேசினாலும், அவளது பிரிந்த சகோதரன் பற்றிய கவலையான பேச்சு வந்து விடும்..

சில சமயங்களில் எப்படியாவது அவரை கண்டறிந்து தோழியின் கவலையை தீர்க்கலாமே! என்று எண்ணிய ஷோபா, ஒருமுறை அவளது ப்ரோஃபைல் பிக்சரில் இருந்த அவர்களது குடும்ப படத்தை சேமித்து வைத்திருந்தாள்..

ஷோபா திருமணம் முடிந்து லண்டன் சென்ற பின்னர் இந்தியா வரும் போதெல்லாம் தீபிகாவிடம் உரையாடுவாள்..

அப்போது அவளது சகோதரன் வீட்டிற்கு திரும்பி விட்டாரா என ஷோபா கேட்ட போது, 'அவர் இப்போது எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை!?'என வேதனையுடன் பதில் அளித்தாள் தீபிகா..

அப்படி ஓர்முறை அவள் லண்டனில் இருந்து திரும்பிய சமயம் கொடைக்கானல் சுற்றுலா சென்றிருக்க, அங்கே ஷோபா எடுத்த தங்களது புகைப்படங்களை சரி பார்த்துக் கொண்டு இருந்தாள்..

அப்போது அவர்களின் ஒரு புகைப்படத்திற்கு பின்னே கண்ட ஒருவரின் முகம் எங்கோ பார்த்தது போல் அவளுக்கு தெரிய,

தன்னிடமிருந்த படங்களை தேடிப் பார்த்த ஷோபா, அது தீபிகாவின் சகோதரன் தான் என்பதை உணர்ந்து ஆச்சர்யப்பட்டவள்,

அவனது புகைப்படத்தை தீபிகாவிற்கு அனுப்பி உறுதிப்படுத்திக் கொண்டு, அந்த புகைப்படம் எடுத்த இடத்தையும் தெரிவிக்க, ஆனந்த அதிர்ச்சி அடைந்த தீபிகா, மறுநாளே அங்கு கிளம்பப் போவதாக சொன்னாள்..

தோழியின் நெடுநாள் கவலை தீர்த்தது என்றெண்ணி நிம்மதி அடைந்த ஷோபா, அவளுக்கு அவகாசம் கொடுத்து, சில நாட்களுக்கு பின்பு தீபிகாவிற்கு அழைக்கவே அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றது..

ஒருவேளை மலைப்பகுதியில் இணைப்பு கிடைக்கவில்லை போல என்றெண்ணி அவளாக அழைப்பாள் என்று ஷோபா காத்திருக்க,

அவளிடம் இருந்தும் எந்த அழைப்பும் வராமல் போகவே, ஷோபா லண்டன் செல்லும் நாள் வரை முயற்சித்தவள், பின்பு தீபிகாவே அழைக்கட்டும் என விட்டு விட்டாள்..

நடந்ததை ஷோபா சொன்ன பிறகு கார்த்திக் ஸ்தம்பித்துப் போய் நின்றிருக்க, அவனது நிலை கண்டு புரியாமல் குழம்பியவள், "கார்த்திக்!!.." என்றழைக்க..

அதில் சுயம் திரும்பியவன், " அக்கா!.. அதுக்கு அப்புறம் நிறைய நடந்துடுச்சு!.. இப்ப குழந்தையை வச்சுகிட்டு எதையும் என்னால சொல்ல முடியாது!.."

"உங்களுக்கு ஓகே னா உங்க நம்பர் தாங்க!?.நான் அப்புறமா உங்களுக்கு கால் பண்றேன்!.." என்று கூற, அவளும் தன் எண்ணை சொல்ல அதை குறித்துக் கொண்டான்..

அதற்குள் கரும்புச்சாறு குடித்து முடித்த பவிஷ்யா, "காத்திப்பா!!.. வீத்துக்கு போவம்!.." என அவனிடம் சொல்லவும்,

"வீட்டுக்கு போவோம் டா குட்டிமா!.." என குழந்தையிடம் சொன்னவன், "நான் அப்புறமா உங்களுக்கு கால் பண்ணி நடந்ததை சொல்றேன்க்கா!.." என்று கூறிவிட்டு கிளம்பினான் கார்த்திக்..

அங்கிருந்து கிளம்பிய கார்த்திக்கின் எண்ணம் முழுவதும் தீபிகா தங்களது அண்ணனை தேடிப் போனதை நம்ப முடியாமல் அதற்கு மேல் சிந்திக்காமல் தேங்கியது..

சகோதரனை பிரிந்ததில் கார்த்திக்கிற்கும் வருத்தம் உண்டு தான் என்றாலும், தன் சகோதரியை இவ்வளவு தூரம் சகோதரனின் பிரிவு பாதித்து இருக்கும் என்று எண்ணியிருக்கவில்லை..

தங்களை பிரிந்து சென்றவன் என்றாவது ஒரு நாள் அவனே அழைத்து பேசும் போது கூட, அளந்து பேசுகின்ற தங்கள் சகோதரனுக்காக தீபிகா இவ்வளவு ஏங்கி இருப்பாள் என்று கார்த்திக்கால் நம்பவே முடியவில்லை..

அங்கிருந்து கிளம்பியவன் தன் சிந்தனை வலையில் சிக்கி, எண்ணங்களில் பயணித்தவன், எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்றே தெரியவில்லை..

**************

அதே நேரத்தில்...

கார்த்திக் மற்றும் குழந்தையும் வெளியே சென்ற பின் வேலைகளை முடித்த வித்யா, ராஜேஸ்வரியிடம், "நான் வேணும்னா உங்க கபோர்ட் க்ளீன் பண்ணட்டுமா ம்மா?!..ரொம்ப கலைந்து போய் இருக்கு!.." என்று அனுமதி வேண்டினாள்..

"இதுக்கு எதுக்கு பர்மிஷன் டா!?..தாராளமா பண்ணு!.. ஆனா பாப்பா இல்லாத நேரம் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் ல?!.." என்று அவர் கேட்க,

"இல்லம்மா!.. எனக்கு பகல்ல தூங்கி பழக்கம் இல்லை.. நீங்க அப்படியே ரெஸ்ட் எடுங்க!.. நான் பாட்டுக்கு இங்க க்ளீன் பண்றேன்!.. ஓகே தானே?!.." என அவள் மீண்டும் கேட்க, அவரும் சரியென ஆமோதித்தார்..

வேலை செய்து கொண்டு இருந்த வித்யா சிறு தயக்கத்துடன், "அம்மா!.. நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் னு நினைச்சுட்டு இருந்தேன்!..ஆனா.." என இழுத்து நிறுத்தியவள்,

"நீங்க டென்ஷன் ஆகாம பதில் சொல்லுவீங்க னா மட்டும் தான் என்னோட கேள்வியைக் கேட்பேன்!.. ஆமா!.." என்ற முன்னெச்சரிக்கை உடன் உறுதி செய்தாள்..

"அடேங்கப்பா!!.. பில்டப் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே!!.. அப்படி என்ன கேட்க போற னு தெரியலையே!!?.." என்றார் அவர் சிறு சிரிப்புடன்..

"ஆமா பின்னே!.. டாக்டர் தான் நீங்க டென்ஷன் ஆகற விசயங்களை பேச கூடாது னு சொல்லி இருக்காங்க ல.. அதனால தான் முன் கூட்டியே கேட்கறேன்!.."

"ஏன்னா நீங்க கண் முழிச்ச அப்பவே அந்த விசயத்தை கேட்டு டென்ஷன் ஆனீங்க!.." என்று அவள் சிறு குறிப்பு கொடுக்கவும், யோசனை ஆனார் ராஜேஸ்வரி..

"எந்த விசயம்!!!?.." என்று சிந்தித்தவர், பின்னர் ஞாபகம் வந்தவரான, "நீ அந்த அம்சவேணியை பற்றி சொல்றியா மா?!.." என அவரே கேட்கவும், வித்யா ஆமென்று பதில் அளித்தாள்..

"அவளைப் பற்றி கேட்க என்ன இருக்கு??!.. அவளை நினைச்சாலே பத்திகிட்டு வருது!!.." என்று அவர் எரிச்சலுடன் கோபமாக சொல்ல,..

"இதோ.. இதோ.. இதை தான் சொன்னேன்!.. நான் இன்னும் கேட்கவே இல்லை.. அதுக்குள்ள இவ்ளோஓஓ டென்ஷன் ஆகுறீங்க!.. போங்க!!.. நான் கேட்கவே இல்ல.." என்று பொய் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்..

"சரி.. சரி.. அவளை நினைச்சாலே எரிச்சல் தான் ஆகுது!.. பரவால்ல நீ கேளு!.." ராஜேஸ்வரி அவளது கேள்வியை கேட்க தூண்டினார்..

"நீங்க கோபப்படாம பதில் சொல்ற மாதிரி இருந்தா கேட்கறேன்!.. இல்லைனா விடுங்க!.."அவள் ஜகா வாங்க, அவர் 'கோபப்பட மாட்டேன்!' என்று உறுதியளித்த பின் தன் கேள்வியை கேட்டாள் வித்யா..

"நீங்க அன்னிக்கு அம்சவேணி உங்க குடும்பத்தை பிரிச்சவள்னு சொன்னீங்க ல.. எதனால அப்படி சொன்னீங்க?!.." என தயங்கிக் கொண்டே தன் கேள்வியை கேட்டாள்..

சற்று அமைதியான ராஜேஸ்வரி, "அவ பண்ணுன தப்புக்கு என் பையனை நான் தப்பா நினைச்சுட்டேன்!.. அதனால அவன் என் மேல கோவிச்சுட்டு எங்களை விட்டு பிரிஞ்சுட்டான்!.."

"ச்சீ!.. அசிங்கம் புடுச்சவ!.. அவ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டா!.. பொண்ணா அவ!!?.. மோசமான புத்தி!.." என்று அவர் கொஞ்சம் கொஞ்சமாக கோபமேற பேசவும்..

"சரி..சரி..நீங்க டென்ஷன் ஆகாதீங்கம்மா!..நாம வேற பேசலாம்!.." என்று அவள் பேச்சை மாற்ற நினைக்கும் போது அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகம் போன்றவற்றை கண்டவள்..

"இதெல்லாம் என்ன ம்மா!.. புக்ஸ் மாதிரி இருக்கு!.." என்றவள் பின்னர், "ஏதோ ஆல்பம்ஸ் மாதிரி இருக்கு ம்மா!!!.." என உற்சாகமாக கேட்கவும்..

"ஆமா டா!.. எனக்கு எப்போ எல்லாம் பார்க்கனும் னு தோணுதோ அப்ப எல்லாம் பார்ப்பேன்!.. அதனால இங்கேயே என் பசங்க வச்சுட்டாங்க!.." பழைய நினைவுகளில் மூழ்கி புன்சிரிப்புடன் அவர் கூறிவிட்டு,

"எடுத்துட்டு வா மா பார்க்கனும்னு ஆசையா இருக்கு!.. " என கண்கள் மின்ன கேட்டார்..அவரை திசை திருப்பியதில் சற்று ஆசுவாசமான வித்யாவிற்கு, 'அப்பாடா!!..' என்று இருந்தது..

அவர் சொன்னதும் அனைத்தையும் கொண்டு வந்து அவர் அருகில் வைத்து, ஒவ்வொன்றாக எடுத்து கொடுத்தவள் அவரோடு சேர்ந்து அவளும் அதனை பார்த்தாள்..

ஒரு புகைப்படத்தை கண்டவர் சிறு சிரிப்புடன், "இங்க பாரேன் இதை!!.." என அவளிடம் காட்ட, "என்ன ம்மா இது!!!?..இப்படி குரங்கு குட்டி மாதிரி தொங்கிட்டு இருக்காரு!.. கார்த்திக் தானே இது!!?.." என்று அவளும் சிரித்தாள்..

அவர்களது சிறு வயது சேட்டைகளை சிரிப்புடன் அனைத்து புகைப்படத்தையும் கண்டவள், ஒரு புகைப்படத்தை கண்டு புருவங்கள் சுருங்க யோசித்தாள்..

அடுத்தடுத்து புகைப்படங்களை வேகமாக திருப்பிட, சிறு அதிர்ச்சியுடன் அந்த புகைப்படத்தை ராஜேஸ்வரியிடம் காட்டி, "இது.... இது!!!??..." அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் அவள் தடுமாற,

அவள் காட்டிய புகைப்படத்தை கண்ட ராஜேஸ்வரி, அவளது முக மாற்றத்தை கவனிக்காமல், அதை வாங்கி பார்த்து, லேசாக கண்கள் கலங்கினார்..

பின்னர், "இது என்னோட மூத்த மகன் ஷக்திபாலன்!.. மூத்தாரோட பையன்!.. நீ கேட்டியே நான் ஏன் அம்சவேணி மேல கோபப்படுறேன் னு.. அவளால தான் இவன் எங்களை விட்டு பிரிஞ்சு போய்ட்டான்!.."

"இவ பண்ணுனதுக்காக ஷக்தியை செய்யாத தப்புக்காக நான் தண்டிச்சுட்டேன்!..அதனால கோபப்பட்டவன் எங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சு போய் ஹாஸ்டல் ல தங்கிட்டான்!..அப்றம் வரவே இல்லை.."

"அவன் எங்களை பிரிஞ்சு போய் சில வருசங்கள் கழித்து தான், ஊர்காரங்க சொன்னதை வைச்சு இந்த அம்சவேணி மேல தான் தப்புன்னு எனக்கு தெரிஞ்சது!.. ஆனா என்ன ப்ரயோசனம்!.." என வேதனையுடன் நடந்தவற்றை கூறினார்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top