• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
56
கானல் - 54

ராஜேஸ்வரியின் கேள்விக்கு ஓடி வந்த பவிஷ்யா, "சாந்தி ஆன்தி வவ்வாங்கா பாத்தி?!.." என்று கேட்டதும், அவர் ஒன்றும் புரியாமல் விழித்தார்..

"யாரு டா குட்டிமா சாந்தி?!.. அப்றம் பாத்தி சொல்ல கூடாது பாட்டி னு சொல்லனும்!.. சரியா!.." என்று அவளை கேட்டவர், அவளது உச்சரிப்பை திருத்தினார்..

"சரி பாத்தி!.. சாந்தி ஆன்தி எ சூல் ல இக்காங்க!.. அதா இங்க வத்தாங்கா னு கேத்தேன்!.." என்ற அந்த சில்வண்டு அவளது பாஷையிலேயே பேசியதை கேட்ட ராஜேஸ்வரிக்கு சிரிப்பு தான் வந்தது..

"அதுசரி!!..அவங்க எல்லாம் வரலை.. இது வேற விசயம்!.. தாரா குட்டி போய் விளையாட்டிட்டு இருப்பீங்களாம்!.. பாட்டி கொஞ்ச நேரத்துல வர்றேன்!.. சரியா டா கண்ணு!.." என்று அவளை அங்கிருந்து அனுப்பி விட்டு,

அவர்களிடம் திரும்பியவர், "என்ன பதிலே இல்லாம இருக்கீங்க ரெண்டு பேரும்!?.." என்று கேட்க, வித்யா என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாக இருந்தாள்..

"இப்போ இந்த டீடெய்ல் எல்லாம் எதுக்கு கேட்கறீங்க ராஜி மாதா!!?.. எதாவது ஊருக்கு எங்களை அனுப்பிட்டு நீங்க மட்டும் ஜாலியா இருக்கலாம் னு ப்ளான் போடுறீங்களோ!?.." என்றான் கார்த்திக்..

"போடா போக்கிரி!..பேசறான் பார் பேச்சு!.. பின்ன என்னடா உங்க ரெண்டு பேரையும் பார்த்தா புதுசா கல்யாணமான மாதிரியா இருக்கு?!.."என்று அவர் கேட்டதும்,

"இல்ல தான் மாதா ஜி!.. எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிடுச்சு!.. அதனால கல்யாணமாகி பழசு தான்!.." என கார்த்திக் கவுன்டர் கொடுக்க, அவனை முறைத்தார் அன்னை..

அதில், "ஓகே!..டோர் க்ளோஸ்!..யூ கன்டிநியூ!.." வாய்க்கு ஜிப் போடுவது போல செய்கை பண்ணியவன், அவரை பேசுமாறு சமிக்ஞை செய்தான்..

அவனை முறைத்து விட்டு, " அப்றம் வேறென்ன டா கேட்க சொல்ற?!.. அவ என்ன னா சமையல் செய்றதும், வீட்டை சுத்தம் பண்றதும் தான் என்னோட வேலை ங்கற மாதிரி இருக்கா!.."

"நீ என்னடா னா எந்நேரமும் எங்க ரெண்டு பேர் கூடவும் சுத்திட்டே இருக்க!.. வேற எப்படி கேட்கறதாம்?!.. நானும் கண் முழிச்சதுல இருந்து பார்த்துட்டு தானே இருக்கேன்!.." என்று அவர் முடிக்க, இருவரும் அமைதியாக இருந்தனர்..

"உண்மையிலேயே நீ இவளை விரும்பி தானே கல்யாணம் பண்ணுன?!.." என ராஜேஸ்வரி, மகனிடம் கேட்கவும், இப்போது முறைப்பது அவனது முறையானது..

"இல்ல.. இவன் எதாவது உனக்கு இஷ்டம் இல்லாம கட்டாய தாலி கட்டி, கூட்டிட்டு வந்துட்டானா மா?!.." என்று வித்யாவிடம் அவர் கேட்டுக் கொண்டே அவனை குறுகுறுவென பார்க்க, பையன் பதறி விட்டான்..

''அதை தானே பண்ணுனான்! 'னு இவ சொல்லிட்டா இந்தம்மா என்னை கிழி கிழினு கிழிச்சுடுவாங்களே!..' என அவன் மனதிற்குள் பீதி ஆனாலும், அவனுக்குமே சில சமயங்களில் தோன்றும் கேள்வி தானே..

அம்மாவின் கேள்விக்கு 'அவள் என்ன பதில் சொல்லுவாள்? ' என்று அறியும் ஆர்வம் அவனுக்கும் இருந்தது.. அதனால் அவனும் அவளையே பார்த்திருக்க,

திடீரென அவளிடம் ராஜேஸ்வரி கேட்டதில், என்ன பதில் சொல்ல என தெரியாமல் விழித்தவள், "அதெல்லாம் இல்ல ம்மா!.." என்று மட்டும் கூறினாள்..

"நீ அவசரமா சொல்றத பார்த்தா.... இவன் எதாவது உன்னை மிரட்டுனானா?!.. உனக்கு இவனை பிடிக்கலையா?!.. எதுவா இருந்தாலும் சொல்லு மா?!." என்று ராஜேஸ்வரி அவளை தூண்டி துருவி கேள்விகள் கேட்க..

"சோலி முடின்ச்சு!.. கோர்டு வேணாம்.. வக்கீல் வேணாம்.. இந்த அன்னையர்குல மாணிக்கம் போதும் என் வாழ்க்கையை பிரிச்சு மேயறதுக்கு!!.." என்று பாவமாய் அவன் முணுமுணுத்தான்..

"என்னடா வாய்க்குள்ளேயே பேசுற?!..இவளை எதாவது கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணுனியா?!.." என அவனிடம் அவரது கேள்வி திரும்பியதும்,

"கடவுளே!!!!..என்ன பேச்சு பேசுறீங்க மாதா ஜி!!?.. உங்க சீமந்த புத்திரன்.. ஸ்ரீ ராமச்சந்திரன்.. அமைதியின் திருவுரு.. அப்படி எல்லாம் செய்வேனா??!.." தற்பெருமை தூக்கலாக பேசிவிட்டு..

"இப்படி ஒரு கேள்வியை உங்க அன்பு மகனை பார்த்து கேட்கலாமா??.. நியாயமா?!.. இந்த உலகம் இதை தாங்குமா?!.." என்று நீட்டி முழக்கிக் கொண்டே போனான்..

" போதும் நிறுத்து டா!!.. நீ இவ்ளோஓஓ பில்டப் கொடுக்கும் போதே தெரியுது ஏதோ கோல்மால் பண்ணி இருப்ப னு!.." என்று வாயாடி மகனின் வாயை அடைத்தவர்,

"நீ சொல்லு மா வித்யா.. இவன் எதாவது உன்னை கார்னர் பண்ணி தாலி கட்டிட்டானா?!.. அதான் உனக்கு இவனை பிடிக்கலையா?!.." மீண்டும் வித்யாவிடமே தீவிரமாக கேட்டு நின்றார்..

"நீங்க ஏன் ம்மா இதையே திரும்பத் திரும்ப கேட்கறீங்க!?..அது மாதிரி எல்லாம் ஒன்னுமில்ல ம்மா!.." என்று படபடப்புடன் பதில் சொல்லி விட்டு,
"எனக்கு கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு ம்மா!.." என்று விட்டு அவள் உள்ளே சென்று விட்டாள்..

செல்லும் அவளை விசித்திரமாக பார்த்த ராஜேஸ்வரி, "அவளுக்கு உன்னை பிடிக்கலையா டா கார்த்தி?!..ஏன் அவ ஏதோ தப்பிச்சு போற மாதிரி போறாள்?!.." என்று யோசனையுடன் கேட்டார்..

"நீங்க உங்களுக்கு உள்ள சி.ஐ.டி சரோஜா வை ஆஃப் பண்ணி வையுங்க ம்மா!..அவ எதாவது அவசர வேலையா இருந்து இருப்பா!.." என அவளுக்காக வக்காலத்து வாங்கியவன்,

"நீங்க பொழுது போகல னு டைம் பாஸ் பண்றதுக்காக கூப்பிட்டு வைச்சு கும்மியடிச்சா அதை யார் பார்க்கறதாம்!..அதான் ஓடி போய் இருப்பா!.." என்று அவன் சொல்லவும்,

ராஜேஸ்வரி அவனை முறைக்க, 'கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ!!?' என திருதிருவென விழித்தவன், குழந்தை அழைத்ததை போல பாவனை காட்டி," இதோ வர்றேன் டா குட்டிமா!.." என்று ஓடி விட்டான்..

இருவரது செயலையும் கண்டு யோசனையான ராஜேஸ்வரி, வித்யாவிடம் பேச வேண்டும் என முடிவு செய்ய, அதையே அவளும் நினைத்து இருந்தாள்..

சமையலறை சென்ற வித்யாவிற்கு, ராஜேஸ்வரி அம்மாவிற்கு தன்னை பற்றி முழுதாக தெரியுமா? கார்த்திக் எதுவும் சொல்லவில்லையோ? என்று தோன்றவும்,

அவரிடம் தனது நிலையை கூறி, அதன்பின் அவர் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்!.. என்று தனக்குள் யோசிக்கும் போதே அவளுக்கு மனதில் வலி பரவியது..

அதனால் ஒரு முடிவிற்கு வந்தவள், கார்த்திக் குழந்தையோடு பூங்கா செல்ல நினைத்து வித்யாவை அழைத்து போது வேலை இருப்பதாக கூறி மறுத்து விட்டாள்..

அவளை விசித்திரமாக பார்த்தவன், ஒன்றும் கூறாமல் பவிஷ்யாவோடு வெளியே கிளம்பிச் சென்ற பின், வித்யா ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைந்தாள்..

உள்ளே வந்தவளை, "வாம்மா!.. வேலை முடிஞ்சதா?!..குட்டிமா கூட பார்க் க்கு போகலையா?!.." என்று அவளை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டு கேட்க,

"முடிஞ்சது ம்மா!.. உங்க கிட்ட சில விசயம் பேசனும்!.. அதான் அவங்கள மட்டும் போக சொல்லிட்டேன்!.." முதலிலேயே அதை யூகித்த ராஜேஸ்வரி, 'மேலே சொல்!' என்பது போல பார்த்து இருந்தார்..

"கார்த்திக் என்னை முதன்முதலா எங்கே பார்த்ததாக சொன்னார் ம்மா?!.." என்று கேட்டவளிடம், தீபிகாவின் கிளினிக்கில் என்று அவன் சொன்னதை பதிலாக அளித்தார் ராஜேஸ்வரி..

"என்ன மாதிரி நிலைல.. எதனால நான் அங்கே வந்தேன் னு எதுவும் சொன்னாரா?!.." என்ற அவளது அடுத்த கேள்விக்கு மறுப்பாக பதில் அளித்த ராஜேஸ்வரியை பார்த்த வித்யா..

"அதை நான் சொல்றேன் ம்மா!.. அதுக்கு அப்றமும் உங்க மகனோட வாழ்க்கைல நான் இருக்கனுமா வேண்டாமா னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!.." என்றாள்..

மூச்சை ஆழ இழுத்து விட்டு தன்னை தயார் செய்தவள், தனது வாழ்வின் கருப்பு தினமாக, அழிக்கப்பட வேண்டிய தினமான அன்று நடந்ததையும்,..

அதனால் தீபிகாவின் கிளினிக்கில் நடந்த சிகிச்சை மற்றும் அதன்பின் நடந்த அனைத்தையும் கண்களில் நீர் வழிய, மரத்துப் போன குரலில் கூறி விட்டு,

"என்னால இயல்பான ஒரு தாம்பத்யத்தை ஏற்க முடியுமா னு தெரியல ம்மா!.. அதை நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது!.." என்று அவரிடம் தன் மனநிலையும் வெளிபடுத்தினாள்..

"என் மனசு உங்க மகனை ஏத்துக்கிட்டாலும் இதனால தான் அவரை விட்டு நான் விலகி போனேன்!.. ஆனா என் மீதான அவரது காதலை தெரிஞ்சப்றம் அவரை இழக்க விரும்பலை!.." தன் மனதை மறைக்காமல் உரைத்தவள்,

"ஒரு தாயா உங்களுக்கும் உங்க மகன் வாழ்க்கை பற்றி ஒரு கனவு இருக்கும்..ஆனா என்னால அவர் வாழ்க்கை வீணாக வேண்டாம் னா...." என்று இழுத்து நிறுத்தவும்,..

"வேண்டாம் னா... என்ன பண்றதா நினைச்சு இருக்கீங்க?!.." சற்று நக்கலுடன் ராஜேஸ்வரி கேட்கவும், சில நொடிகள் மௌனம் சாதித்தாள் வித்யா..

பின்னர் நிதானமாக," உங்க பேத்தி தான் திரும்ப வந்துட்டாளே.. அதனால..." என தயங்கியவள்,

"உங்க மகன் வாழ்க்கை இந்த மாதிரி கற்பை இழந்த பெண்ணோட வீணாக வேணாம் னு நீங்க நினைச்சா, உங்களோட எந்த முடிவுக்கும் கட்டுப்படுறேன் ம்மா!.." என முடித்தாள்..

வித்யா பேசி முடித்ததும், அவளையே தீர்க்கமாக பார்த்த ராஜேஸ்வரி, அவளது முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நின்றாலும் மனதின் வேதனை விழிகளில் தெரிவதை உணர்ந்தவர்,

"நான் அப்படி நினைக்கிறவளா இருந்தா இந்நேரம் கார்த்தியோ, தீபிகாவோ இருந்து இருக்க மாட்டாங்க!.." என்று அவளை பார்த்துக் கொண்டே சொன்னார்..

அவள் புரியாமல் பார்க்கவும், "கார்த்திக் உங்கிட்ட சொன்னானா இல்லையா தெரியல.. நான் அவங்கப்பாவோட ரெண்டாவது மனைவி!.." என்றார் ராஜேஸ்வரி..

அவன் சொல்லி இருப்பதாக வித்யா கூறியதும், "நீ சொல்லுற மாதிரி கற்பை இழந்தவர் னு பார்த்தா அவரோட நான் குடும்பம் நடத்தி இருக்க முடியுமா?!..கற்பு ங்கறது உன் மனசுல இருக்கு!.."

"உனக்கு நடந்தது ஒரு விபத்து!.. நாம வண்டில இருந்து கீழே விழுந்தா கையோ, காலோ, உடைஞ்சதுனா ஏத்துக்கறோம்ல.. அதுக்கப்புறம் நாம வண்டியே ஓட்டுறதில்லையா என்ன!.."

"நடந்ததையே நினைச்சு மனசை குழப்பிக்காதே மா!..உன் மனசையும் உடலையும் உன்னை தவிர வேற யாரால கன்ட்ரோல் பண்ண முடியும்!?.. அதனால இதையும் கடந்து வந்துடனும்!..சரியா!?.." என்று அறிவுரைத்தவர்,

"இந்த மாதிரி லூசுதனமா யோசிக்கிறதை விட்டுட்டு ஒழுங்கா அவன் கூட சந்தோஷமா வாழுற வழியைப் பாரு டா!.. வேண்டாத சிந்தனை எல்லாம் தூக்கி தூர போடு!..இருக்கற ஒரு வாழ்க்கையை சந்தோஷமா வாழனும்!.." என்று அவர் முடிக்கவும்,

அதுவரை மனசஞ்சலத்தில் உழன்ற வித்யா, அமர்ந்திருந்த ராஜேஸ்வரியின் அருகே வேகமாக வந்தவள், கீழே அமர்ந்து அவரை அணைத்து அவரது மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்..

அவரும் பரிவாக அவளது தலையை வருடி, "உன் மேல எந்த தப்பும் இல்ல னு முதல்ல நீ நம்புடா!.. அதெல்லாம் முடிஞ்ச கதை!..அதுக்குள்ளேயே அமிழ்ந்து போகாதே!.."

"உனக்காகவே காத்திருந்த அவனும் உன்னோட மனசை நினைச்சு தானே தள்ளி இருக்கான்!.." என்று அவர் சொன்னதும் அவள் நிமிர்ந்து பார்க்க,

"என்ன லுக்?!.. அதான் உங்க ரெண்டு பேர் லட்சணமும் அப்பட்டமா தெரியுதே!!..லவ் பண்ணி கல்யாணம் பண்ணின மாதிரியா இருக்கீங்க?!.." அவர் சொன்னதற்கு, வித்யா தலையை குனிந்து கொண்டாள்.

"போனதெல்லாம் போகட்டும்!.. இனிமேலாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க!.." என்று அவர் கூற, சரியென தலையசைத்தாள் வித்யா.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top