• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
51
கானல் - 49

வித்யா தன் அலைபேசியில் காட்டிய புகைப்படங்களை பார்த்த கார்த்திக், "இதெல்லாம் எங்க இருந்துச்சு?.இதை நீ எப்போ பார்த்த? எப்படி ஃபோட்டோ எடுத்த விதுமா?" எனக் கேள்விகளை அடுக்கினான்.

பின்பு அந்த படத்தையே உற்று பார்த்த கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்து, "சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லடா விதுமா. ஐ ஸ்வேர்." என்று பதறி சத்தியம் செய்தான்.

அவனை முறைத்தவள், "லூஸாப்பா நீங்க? நான் எப்போ அப்படி சொன்னேன்? நேத்து நைட் நீங்க நம்ம ரூம்ல தானே இருந்தீங்க. அதுவும் இல்லாம நீங்க எல்லா நேரமும் என்கூடவும், பாப்பா கூடவும் தானே இருந்தீங்க."

"நான் உங்கள சந்தேகப்படல கார்த்திப்பா." என வித்யா நம்பிக்கையுடன் சொல்லவும், அவன் மீது அவள் கொண்ட நம்பிக்கையில் கார்த்திக்கின் கண்ணோரம் நீர் துளிர்த்தது.

அவன் மீதான அவளது நம்பிக்கையில் பிரமித்த கார்த்திக் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க அவனது மனதில்,

'அவளது வட்டத்தை தாண்டி ஒரு ஆண்மகனை அவள் நம்புவது கடினம்.' என ஈஸ்வரி அன்றொரு நாள் சொன்னது தான் அவனது நினைவிற்கு வந்தது.

அதை கடந்து அவளது மனதில் அவன் ஆழமாக பதிந்திருப்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்! என்று அவளை எண்ணி கார்த்திக் பெருமிதம் கொண்டு நிற்க, அவளோ தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்.

அவளது நம்பிக்கையை நினைத்து இவன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவதற்கான காரணம் அவள் காட்டிய புகைப்படத்தில் இருந்த பொருட்கள் தான்.

அந்த புகைப்படத்தில், எரிந்த சிகரெட் துண்டு, சில மருந்து அட்டைகள் அதனிடையே ஒரு உபயோகிக்கப்பட்ட ஆணுறையும் இருந்தது தான். அதை கண்டு தான் வித்யா திகைத்தாள்.

நடந்ததை விளக்கிய வித்யா, "நான் உங்கள கூட்டிட்டு போய் காட்டுனேனே அந்த டஸ்ட்பின்ல தான் இருந்துச்சு. ஆனா அடுத்து நாம போகும் போது அங்கே எதுவுமே இல்ல." என முடித்தாள்.

"அவ எப்போ அவளோட ரூமுக்கு திரும்பி வந்தாள் னு தெரியல. அம்மோவோட ட்ரிப்ஸ் மாத்த தான் போயிருந்தாள். அந்த கேப்ல தான் நான் இந்த ஃபோட்டோ எடுத்தேன்."

"நாம வந்து பார்க்கறதுக்குள்ள எங்கேயோ மறைச்சுட்டா. நீங்க வந்த அப்றம் உங்க கிட்ட காட்டிட்டு விசாரிக்கலாம்னு இருந்தேன்." என்று பேசிக் கொண்டே அவனை திரும்பி பார்த்தவள் விழித்தாள்.

"இது என்னப்பா ரியாக்ஷன்!!? நான் எவ்ளோ சீரியஸ்ஆ பேசிட்டு இருக்கேன். நீங்க ஏதோ ட்ரீம்ல இருக்கீங்க?" அவளை பிரமிப்புடன் பார்த்திருந்த அவனது தோளை தட்டினாள்.

அவள் உசுப்பியதில் இயல்புக்கு வந்தவன் திடுமென, "ரொம்ப தேங்க்ஸ்டா விதுமா!.. லவ் யூ சோ மச்." என்றிட,

தான் பேசியதற்கும் அவனது பேச்சிற்கும் சம்பந்தமே இல்லாமல் அவன் நன்றி சொன்னதில் ஒன்றும் புரியாமல் விழித்து நின்ற வித்யா, அவனிடமே அதை கேட்டும் விட்டாள்.

"இந்த மாதிரி ஒரு விசயத்தை பார்த்த யாரா இருந்தாலும் என்னை தான் முதல்ல சந்தேகப்படுவாங்க. ஆனா நீ என்மேல வைச்ச நம்பிக்கையில ஸ்டன் ஆகிட்டேன்." என்று தனது மனதில் தோன்றியதை விவரித்தான் கார்த்திக்.

"அந்த நம்பிக்கையே நீங்க என்மேல வைச்ச காதலால் வந்தது தானே கார்த்திப்பா. எனக்கு காதலை பற்றி எல்லாம் ஒன்னும் தெரியாது. உங்க மூலமா தான் அதையே உணர்ந்தேன்."

"ஒரு ஆணால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம இந்தளவு காதலிக்க முடியுமா!?னு பிரமிக்க வைச்சது நீங்க தான். உங்க அளவுக்கு எனக்கு காதலிக்கவும் தெரியாது."

"இந்த அளவு கடந்த அன்பையும், பாசத்தையும், அக்கறையையும் என்னோட அத்திம்பேர்க்கு அப்றம் உங்க கிட்ட தான் உணர்றேன்." என்று அவள் மனம் திறந்து கூறவும்,

ஈஸ்வரி சொன்ன அந்த ஒரு நபர் யாரென்று கார்த்திக்கிற்கு இப்போது தான் புரிந்தது. அவளது அத்திம்பேர் மீது சிறு பொறாமை கூட வந்தது.

தன் மனதை உரைத்த வித்யா,"இப்ப இது முக்கியமான விசயம் இல்ல கார்த்திப்பா! அந்த அம்சவேணியை பற்றி தான் யோசிக்கனும்." என்று சொல்லும் போதே "அம்மா பசிக்குது." என்று வந்தாள் பவிஷ்யா.

அவளை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டவள், "அப்படியா தங்கம்! சரி வா சாப்பிட போகலாம். நாம அப்பறமா பேசுவோம்பா." என்று கார்த்திக்கிடம் கூறி விட்டு குழந்தையோடு வெளியேறினாள் வித்யா.

அன்றைய தினம் முழுவதும் சின்னவள் வித்யாவிடமே ஒட்டிக் கொண்டு சுற்ற, அதன் பின் இருவருக்குமே அம்சவேணியை பற்றி கலந்து ஆலோசிக்கும் சூழல் அமையவில்லை.

கார்த்திக் மட்டும் தன் அலைபேசியில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டு இருப்பதை அவ்வப்போது கவனித்த வித்யா, அம்சவேணியின் நடவடிக்கைகளையும் நோட்டமிட்டாள்.

அம்சவேணியும் எதுவும் நடவாதது போல இயல்பாக சுற்றிக் கொண்டு,அடிக்கடி இவர்களையும் கவனித்தவள், தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தனது அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த கார்த்திக் மாலை வேளையில் வெளியே செல்ல, அவனுடன் வருவதாக சொன்ன குழந்தையை வேண்டாமென்று விட்டு கிளம்பிச் சென்றான்.

இரவு வந்த கார்த்திக், சிறிது நேரம் தன் தாயின் அறையில் அமைதியாக அவரையே பார்த்து மனதிற்குள் பேசிக் கொண்டு இருக்க, "அத்தான்!!" என்ற அம்சவேணியின் அழைப்பில் அதீத எரிச்சலானான்.

"என்னை அப்படி கூப்பிடாதே எனக்குப் பிடிக்கலைனு உனக்கு பல தடவை சொல்லிட்டேன் அம்சவேணி."என அதே எரிச்சலுடன் மொழிந்த கார்த்திக்,

"ஆமா. சுந்தரம் மாமாக்கு இன்னுமா கான்ட்ராக்ட் முடியல. அப்படியே இருந்தாலும் தங்கச்சி இந்த மாதிரி நிலைல இருக்கறப்ப பார்க்கனும்னு கூட வர முடியாதா என்ன?" என்று கேள்விக்கணை தொடுத்தான்.

அவள் வந்த போது கார்த்திக் இதே கேள்வியை கேட்டதற்கு, அவளது தந்தை வெளிநாட்டு வேலைக்கு அப்போது தான் சென்றுள்ளார் என்றும் அதனால் வர இயலவில்லை என்றும் கூறியிருந்தாள்.

அவளது தாயின் உடல்நல குறைவால் மருத்துவ செலவுகள் அதிகமாகி, கடன் தான் அதிகரித்ததே ஒழிய அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும்,

அதனை தீர்க்க அவளது தந்தை அந்த கடன் கொடுத்தவர் மூலமாகவே அவ்வேலைக்கு சென்றுள்ளதாகவும், அவரது மாத சம்பளம் அதற்கு செல்வதாகவும், அதனால் வர இயலாத சூழல் என்றும் சொல்லி இருந்தாள்.

ஆனால் இத்தனை மாதங்களாக எதுவும் கேட்காத கார்த்திக் திடுமென கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகள் விழித்தவள்,

"ஏன் அத்தான் இவ்ளோ ரூட்ஆ பேசுறீங்க? நீங்க என்னை சந்தேகப்படுறீங்களா? அவ எதாவது என்னை பற்றி தப்பா உங்க கிட்ட சொன்னாளா?"

"அதான் நீங்க இப்படி எல்லாம் கேட்குறீங்களா?" அவசரத்தில் வித்யாவை ஒருமையில் பேசி விட்டாள்.அதில் கார்த்திக்கிற்கு கோபமேற,

"அவ இவனு சொன்ன அவ்ளோ தான்! என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? வித்யா என்னோட வைஃப்! ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு." என்று கண்களை உருட்டி விரல் நீட்டி மிரட்டினான்.

அவனது அந்த தோரணையில் பயந்தவள், ஓரடி பின்னுக்கு நகர, உடனே தனது கண்ணீர் ஆயுதத்தை உபயோகித்தாள்.

இம்முறை கார்த்திக் அவளது கண்ணீருக்கு இளகாமல் இருப்பதை கண்டவள், "நீங்க இந்த ரெண்டு நாளா ரொம்ப மாறிட்டீங்க அத்தான்." கண்களை துடைத்துக் கொண்டே சொன்னாள் அவள்.

சில நொடிகள் அவளை ஆழ்ந்து பார்த்தவன், "அழுது முடிச்சுட்டனா நான் கேட்ட கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்றியா?." என்று தனது நிலையிலிருந்து மாறாமல் நின்றான் கார்த்திக்.

"இன்னும் கான்ட்ராக்ட் முடியல அத்தான். அப்படி அவர் திரும்பி வந்து இருந்தா நான் எதுக்கு இப்படி உங்க கிட்ட எல்லாம் பேச்சு வாங்க போறேன்." என்று கண்ணீர் சொரிந்தவள்,

"ஆனாலும் ஒரு தாயில்லாத பிள்ளையை நீங்க இப்படி காயப்படுத்தக் கூடாது அத்தான்!" என்றவள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு,

"யாரோ என்னமோ சொன்னாங்க னுட்டு இத்தனை நாளா அத்தையை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட என்னை சந்தேகபடுறீங்கல." எனக் கூறிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.

அவளது நடிப்பில் கார்த்திக் தான் குழம்பிப் போய் முழித்தான். பின்பு தன் தாயிடம், "அம்மா! நீங்க சீக்கிரமே கண் விழிச்சுட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும்மா. ப்ளீஸ்ம்மா!"

"எது உண்மை? எது பொய்னு தெரியாம முழிக்கிறேன். நான் எதாவது செய்ய முடியாம தவிச்சா நீங்க தானே எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க."

"இப்பவும் அதுபோல எழுந்து எனக்கு உதவி செய்யுங்கம்மா." என்ற மகனது கலங்கிய குரல், ராஜேஸ்வரியின் செவி வழி சென்று அவரது மனம் அதை கிரகித்தது.

அவன் மன வேதனையுடன் பேசியதை உணர்ந்த அவரது மனம், அவன் வலியுடன் பேசிவிட்டு வெளியேறிய பின் ஒரு துளி கண்ணீரை அவனுக்காக வெளியேற்றியது.

தாயின் அறையிலிருந்து சோர்ந்து போய் வந்த கார்த்திக்கை கண்ட வித்யா, " என்னாச்சுப்பா? எங்க போனீங்க? சாப்பிடவும் இல்ல வாங்க சாப்பிடலாம்." என்று அழைக்க முடக்கப்பட்ட இயந்திரம் போல அனைத்தும் செய்தான் அவன்.

அவனையே கவனித்துக் கொண்டிருந்த வித்யா, இரவு குழந்தை உறங்கியதும், அவனது அமைதி கண்டு என்னவென்று வினவ, அவளது அருகே அமர்ந்து மடியில் தலை சாய்த்தான் அவன்.

அவளது விரல்கள் அனிச்சையாய் அவனது தலை கோதி விட, "என்னாச்சு கார்த்திப்பா? ஏன் இவ்ளோ டல்லா இருக்கீங்க? என்ன நடந்தது?." என்று நிதானமாக கேட்டாள் வித்யா.

"என்ன தான் உறவுக்கார பெண்ணா இருந்தாலும், அம்மாவோட ரூம்ல மட்டும் சேஃப்டிக்கு ஒரு சிசிடிவி கேமரா வைச்சு இருக்கேன். அதை தான் மதியம் முழுக்க பார்த்தேன்டா." என்றவன்,

"அதுல எதுவும் சந்தேகப்படுற மாதிரி தெரியல.யாரும் வரவும் இல்ல.வெளியே இருக்கற கேமரா ஜஸ்ட் டம்மி தான் அதுல எதுவும் சேவ் ஆகாது."

"யார் வந்து இருப்பா? இந்த பொண்ணு கிட்ட பேசினாலே உடனே கண்ணீர் விட ஆரம்பிச்சுடுறா. சரி,அந்த ஏஜென்சியிலாவது இவளைப் பற்றி விசாரிப்போம்னு பார்த்தா மெயில் அனுப்பி விடனுமாம்."

"அவங்களே கான்டாக்ட் பண்ணுவாங்களாம். எனக்கு என்ன பண்றதுனே புரியலடா."என தன் குழப்பமான மனநிலையை அவன் கூறினான்.

சில நேரம் சூழலை புரிந்து நடக்கும் தெளிவாக முடிவெடுக்கும் கார்த்திக் இன்று குழம்பி இருப்பதை நன்றாகவே உணர்ந்த வித்யா, அவனுக்கு உறுதுணையாக பேசினாள்.

"சரி விடுங்க. அவங்க பதில் சொல்லட்டும்.நாம தான் இன்னும் ஒரு மாசம் இங்க தானே இருக்க போறோம்.அவளை கண்காணிக்கலாம்."

"நாம ஊருக்கு போகும் போது அம்மாவையும் அங்க ஷிஃப்ட் பண்ண அரேன்ஜ் பண்ணலாம் சரியா? கவலைப்படாதீங்க.நான் எல்லாம் பார்த்துக்கறேன்." என்று அவனுக்கு தைரியம் ஊட்டினாள் வித்யா.

அவளது வார்த்தைகளில் இதமாக உணர்ந்தவன், அவள் தலைகோதியதில் வெகு நாட்களுக்குப் பிறகு தாயின் பரிவை உணர்ந்து அப்படியே கண் அயர்ந்தான்.

நாட்களும் மெதுவாக நகர, வித்யா அம்சவேணியை அவளறியாதவாறு கண்காணிக்க, கார்த்திக்கும் வித்யாவின் அறிவுரைப்படி அவளது புகைப்படத்தை தனியார் துப்பறியும் நிறுவனத்தில் கொடுத்திருந்தான்.

குழந்தையும் அந்த வீட்டில் இயல்பாக பொருந்திப் போக, அவளும் இப்போது ராஜேஸ்வரியின் அறைக்கு செல்வதில் அவ்வளவாக பயப்படுவது இல்ல.

இவர்கள் வீட்டில் இருப்பதால் இயல்பாக இல்லாமல் ஒரு அலைப்புறுதலோடு சுற்றிக் கொண்டிருந்த அம்சவேணி,

தனது அத்யாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல வேண்டும் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top