Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
கானல் - 48
கார்த்திக்கின் பதிலிற்கு வித்யா நாணத்துடன் பேசியதை கண்டவன், 'இவ வெட்கப்பட்ற அளவுக்கு அப்புடி என்ன நாம சொன்னோம்!?' என்ற யோசனையில் ஆழ்ந்தான்.
சில நொடிகள் யோசித்த பிறகு, அவனது ஆறாம் அறிவிற்கு எட்டியது. அதன் பொருள் உணர்ந்தவன், அம்சவேணியை கடுப்பேற்றிய வித்யாவின் செயலை எண்ணி சிரிப்பை அடக்க முயன்றான்.
உதட்டில் அடக்கிய புன்னகையுடன், "ஸாரிடா விதுமா! இனிமே இப்படி பப்ளிக்ஆ பேசல. சரியா!?" என்று அவளையொற்றியே பேசி ஒற்றை கண்ணடித்தான் கள்ளன்.
அதில் நிஜமாகவே நாணத்தில் சிவந்தவளை கண்டு, எரிதனலில் நெய் ஊற்றிய கணக்காக அம்சவேணிக்கு எரிய, அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
அந்த இடத்தை விட்டு அவள் சென்றதும், புருசனும் பொண்டாட்டியும் ஒருசேர நகைத்தனர்.
பின்பு," பரவால்லயே!மேடம்க்கு இதெல்லாம் தெரியுது. நாங்கூட ரொம்ப சிரமப்படனும்னு நினைச்சேன்." என்று கூறி கண்ணடித்தவனை பொய்யாக முறைத்தாள் மனையாள்.
"அதெல்லாம் இருக்கட்டும் ஸார்! அது என்ன அப்படியொரு.... ரொமான்ஸ், நடு வீட்டுக்குள்ள நின்னுட்டு!?" கேள்வி தொடுத்தவளை, சிறு கலவரத்துடன் பார்த்தான் அவன்.
"அட ஏன்மா நீ வேற?! அந்த பொண்ணு பேசிட்டே கையை பிடிச்சது கூட எனக்கு தெரியாது. அது ஏதோ சொல்லுச்சே அப்படி ஏதாவது நடந்துச்சா?னுட்டு யோசனையில் இருந்தேன்." என்று தன்னிலை விளக்கம் கூறினான்.
அவள் நம்பாத பார்வை பார்க்க, "நம்புடா!.. நான் பொய் சொல்லலை. அந்த பொண்ணு சொன்ன மாதிரி நடந்ததா எனக்கு எதுவுமே நினைவில்லை. அதான் யோசிட்டு இருந்தேன்." என்று மறுபடியும் உரைத்ததும்,
அவனது கூற்றை உள்வாங்கியவள், அந்த சிந்தனையில் இருக்க, அவனோ அவள் இன்னும் அவனை நம்பவில்லை என்று எண்ணிக் கொண்டான்.
"நான் ஏகபத்தினி விரதன். நம்புடா விதுமா. என் மனைவியை தவிர வேற யாரும் என் மனசை ஈர்க்க முடியாது." என்று அவன் விளக்கிக் கொண்டே போக,
"அட, அதில்ல கார்த்திப்பா!!.. நீங்க எப்படினு தான் எனக்கே தெரியுமே! நான் வேற யோசிட்டு இருந்தேன்." என்றாள் வித்யா வேகமாக, அவள் அவ்வாறு கூறியதும் புரியாமல் அவளை பார்த்தான் அவன்.
"சரி,நீங்க வெளியே போயிட்டு வாங்க. நான் அப்பறமா சொல்றேன்." என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே,"காத்திப்பா!" என்று ஓடி வந்தாள் சின்னவள்.
"வெய்யே போறீங்கா? நானு வதத்தா?" என்று மகள் கேட்டதும், பெரிதாய் தலையசைத்து ஆமோதித்தவன், அவளையும் அழைத்துக் கொண்டு, வித்யாவிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.
கார்த்திக் சென்றதும், அம்சவேணி இருந்த அறைக்கு சென்ற வித்யா அறைவாசலில் இருந்து, கதவை இருமுறை தட்டிவிட்டு "அம்சவேணி!" என்று அழைத்துக் கொண்டு உள்நுழைய, அம்சவேணி அவசரமாக எதையோ மறைத்தாள்.
அவளது செயலை வித்யா கவனித்துவிட, "உள்ள வரும் போது பர்மிஷன் கேட்கனும்னு பேஸிக் மேனர்ஸ் தெரியாதா உனக்கு?!" என எடுத்ததும் ஏக வசனத்தில் அவள் பொரிய,
வித்யாவும் 'இவளுக்கு எதுக்கு மரியாதை?!' என நினைத்தவள், "கதவை தட்டிட்டு வர்ற அளவுக்கு எனக்கு மேனர்ஸ் தெரியும். நீ எனக்கு பாடம் எடுக்காதே." என்று தானும் மரியாதை கை விட்டவள்,
பின்பு,"இந்த வீட்ல நீ அம்மாக்கு நர்ஸிங் பண்ணத் தானே வந்து இருக்க?!" என்று அவளை நோக்கி கூர்மையான பார்வையை வீசிக் கொண்டு கேட்டாள் வித்யா.
'இவளுக்கெல்லாம் பதில் சொல்லனுமா? ' என்றெண்ணிய அம்சவேணி அமைதியாக முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.
"ஆமா எந்த ஏஜென்சியில இருந்து நீ இங்க வந்த?! அந்த ஏஜென்சி பேர் என்ன?!" என்று கேட்ட வித்யாவிடம்,
"அதெல்லாம் உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னோட அத்தானுக்கு தெரியும். நீ யாரு அதை கேட்க?" படபடவென அவள் பொரிந்தாள்.
"உன்னோட பொத்தான், என்னோட ஆத்துக்காரர். அதை முதல்ல நல்லா உன் மண்டைல ஏத்திக்கோ. அவர்கிட்ட ஈஷிண்டு இருக்கற வேலை எல்லாம் வைச்சுக்காதே!"
"அதை சொல்ல தான் வந்தேன். அப்றம், நீ என்ன தான் மஸ்கா போட்டாலும் அவர்கிட்ட அது வேலைக்காது. அவரைப் பற்றி உன்னை விட எனக்கு நல்லா தெரியும்."என்று
அவனை எண்ணி பெருமையுடன் வித்யா சொல்லிக் கொண்டிருக்க, 'நீ என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்' என்று அவளை அலட்சியமாக பார்த்தாள் அம்சவேணி.
அவளை அசட்டை செய்துவிட்டு அறையை விட்டு வித்யா வெளியேறும் போது அங்கிருந்த குப்பை டப்பாவில் சிலதை கண்டவள் திகைத்து, பின்னர் அமைதியாக வெளியேறினாள்.
சிறிது நேரம் தன் வேலைகளை முடித்த வித்யா,'அம்சவேணியை எப்படி வெளியே வர வைக்க?'என்ற யோசனையுடன் காத்திருக்க, அதே நேரம் ராஜேஸ்வரியின் ட்ரிப்ஸ் தீர்ந்ததை பார்த்து, அம்சவேணியை அழைத்தாள்.
அவள் அழைத்ததும் அறையில் இருந்து வெளியே வந்த அம்சவேணியிடம் ட்ரிப்ஸ் தீர்ந்ததை வித்யா கூறிட, "என் வேலையை பார்க்க எனக்கு தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்." என்றவள்,
முறைத்துக் கொண்டு அவரது அறைக்குள் சென்றாள். வித்யா பேசிச் சென்றதில் அந்த சிந்தனையிலேயே இருந்த அம்சவேணி இதை மறந்து விட்டாள்.
அவள் வெளியேறியதும், அவளது அறைக்குள் அவசரமாக நுழைந்த வித்யா, குப்பை டப்பாவில் இருந்த அந்த பொருட்களை தன் அலைபேசியில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு விரைந்து வெளியேறினாள்.
தனது கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை அவள் ஆராய முனையும் போது, கார்த்திக் குழந்தையுடன் திரும்பி வந்தான்.
"என்னாச்சுப்பா? போனதும் வந்துட்டீங்க." என்று அவள் கேட்டதற்கு, பாலாவின் பெற்றோர் ஏதோ வெளியூர் கோவில்களுக்கு சென்றுள்ளதாக அண்டை வீட்டார் சொன்னதாகவும், அதனால் இவர்கள் திரும்பி வந்து விட்டதாகவும் கூறினான் அவன்.
அம்சவேணி அவனது உறவினள் என்ற காரணத்தினால், வித்யாவிற்கு தனது சந்தேகத்தை கார்த்திக்கிடம் சொல்லலாமா? வேண்டாமா!? என்று தயக்கமாக இருந்தது.
இருப்பினும் அவள் கண்டதை அவனிடம் காட்ட எண்ணி, "நான் சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. எங்கூட கொஞ்சம் வாங்களேன்." என்று அவனை அழைத்துக் கொண்டு அம்சவேணியின் அறைக்கு சென்றாள்.
அந்நிய பெண்ணின் அறைக்குள் நுழைய தயங்கிய கார்த்திக்கிற்கு வித்யாவின் தீவிர முகபாவனை அந்த தயக்கத்தை தகர்த்தெறிய, உள்ளே நுழைந்தான்.
வித்யா அவளது அறையில் கண்ட அந்த குப்பை டப்பாவில் இப்போது எதுவும் இல்லாமல் இருப்பதை கண்டு குழம்பி நிற்க, "என்னாச்சுடா விதுமா?!" என புரியாமல் வினவினான் கார்த்திக்.
அப்போது, "ஒன்னுமில்ல அத்தான்! அவங்களுக்கு என்னை பிடிக்கல போல, அதான் என்னை பற்றி எதாவது தப்பா சொல்ல காரணம் தேடுறாங்க." என சொல்லிக் கொண்டு அம்சவேணி வர,
'இவள் எப்போது அங்கிருந்து வந்தாள்?!' என்று அவளை கண்டு வித்யா குழம்பி யோசனையில் மூழ்கிட,
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அம்சவேணி." என்று அவளிடம் கூறியவன், வித்யாவின் கையை தட்டினான்.
வித்யா இன்னுமே புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க, "வா போகலாம்." என அவளது கையைப் பற்றி இழுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறி தங்களது அறைக்கு வந்தான் கார்த்திக்.
"என்னாச்சு உனக்கு?! எதுக்காக அவளோட ரூமுக்கு போன?என்ன தான் பிரச்சனை உனக்கு?நான் அவ்ளோ சொல்லியும் என்னை நம்பலையா நீ?!" கார்த்திக் சற்று எரிச்சலுடன் கேட்கவும்,
தனது குழப்பத்தில் இருந்து சுயம் மீண்டவள் அவனை முறைத்துக் கொண்டே, "இப்போ நான் அப்படி சொன்னேனா? நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க." என்று அவளும் சற்று காட்டமாக சொன்னாள்.
பெருமூச்செறிந்த கார்த்திக்," அப்றம் எதுக்காக அவளோட ரூமுக்கு போய் இருக்க? அவ எப்படி உன்னை பேசுறா பார்த்தியா? இனிமே எதுனாலும் எங்கிட்ட சொல்லிட்டு செய்." என்றான் அவன்.
அவனது பேச்சில் வித்யாவிற்கும் எரிச்சல் மேலோங்க, "நான் ஒன்னும் தேவையில்லாம அவ ரூமுக்கு போகலை. ஒன்னும் தெரியாம பேச வேண்டியது." என்றவள்,
"எவ எதை சொன்னாலும் நம்ப வேண்டியது. யாரு எப்படினு பார்க்கறது கிடையாது. சரியான பேக்கு. அசமஞ்சம்! க்கும்!.." என்று முணுமுணுவென்று அவனை வறுத்தெடுத்தாள்.
"என்ன தனியா முணுமுணுன்னு யாருக்கோ அர்ச்சனை நடக்குது போல மேடம்?" என்று காதை கூர்மையாக்கி கேட்க முயற்சித்தும் முடியாமல் அவன் நேரடியாக வினவினான்.
"வேற யாருக்கு நடக்கும்? இங்க இருக்கறது நீங்களும் நானும் மட்டும் தான். பாப்பா கூட வெளியே விளையாடிட்டு இருக்கா!.. என்னை நானே திட்டிக்கிற அளவுக்கு நான் ஒரு தப்பும் பண்ணல!.." அவளது நீண்ட விளக்கத்தில்.
"இதுக்கு நீ நேரடியாவே 'உன்னை தான்டா மடையா!'னு சொல்லி இருக்கலாம்!.." என அவன் சொன்ன மறுநொடியே வேகமாக,"ஓஹோ.. அப்படியா!!.. அப்ப உன்னை தான்டா மடையா!.." என்றாள் வித்யா..
ஏதோ பேச்சு வேகத்தில் சொல்லி விட்டு, தன் தவறை உணர்ந்து 'ஸ்ஸ்' என்று அவள் நாக்கை கடிக்க, அவளை அப்படி பார்க்க அவனுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
சன்னமான சிரிப்புடன் அவளருகே நெருங்கியவனை கண்டு, நேற்று போல் எதுவும் செய்வானோ என்று அவள் மிரண்டு விழிக்க, மிக நெருக்கமாக வந்தவன் தன் கரத்தை நீட்டி.
அவளது பற்களில் சிக்கி கடிப்பட்டு கசங்கிய இதழை மெதுவாக தன் விரலால் விடுவிக்கும் வேளையில், "அம்மா!!.." என்று அழைத்துக் கொண்டு ஓடி வந்தாள் சின்னக்குட்டி.
அதுவரை எகிறும் இதயத்துடிப்புடன் இருந்தவள் பட்டென்று விலகி, ஓடி வந்த பிள்ளையை தூக்கி இறுக பற்றிக் கொண்டாள்.
அவனோ ஒரு குறுஞ்சிரிப்புடன் தன் தலைமுடியை கோதிக் கொண்டே வேறுபக்கம் பார்த்தான்.
பவிஷ்யா கையோடு கொண்டு வந்த ப்ளாக்ஸை, கார்த்திக்கிடம் நீட்டி, "காத்திப்பா இதை பிசிச்சு தாங்க. நா பிச்சா வத மாத்தின்து.." என்று உதட்டைப் பிதுக்கி கூறிக்கொண்டே கொடுத்தாள்.
"அப்படியாடா குட்டிமா!.. எங்கிட்ட வாங்கடா செல்லம்! அதெப்படி குட்டிமா பிரிச்சு வராம போகலாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிரிக்கலாம்." என்று அதனை இருவரும் இழுப்பது போல் செய்து அவளிடம் பிரித்து கொடுத்தான்..
"அய்யா!!!..வந்துதுச்சே!!.." என கை தட்டி குதூகளித்தவள், அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு குஷியில் இறங்கி வெளியே ஓடியே விட்டாள்.
அவள் சென்றதும், 'ம்க்குக்கும்!' என்று தொண்டையை கனைத்த கார்த்திக், "மேடம் ஏதோ சொன்னீங்க. என் காதுல சரியா விழுகலையே!?.." என்றான் சிரிப்புடன்.
இப்போது இயல்புக்கு வந்த வித்யா, "அதெல்லாம் நல்லா தான் விழுந்துச்சு. சுத்தி என்ன நடக்குதுனு தெரியாத நீங்க..சரியான மாங்கா மடையன்னு சொன்னேன் போதுமா?" என்றாள் காட்டமாக.
"இப்ப எதுக்கு இந்த பொங்கல். என்ன விசயம்டா? எனக்கு ஒன்னுமே புரியல!?" உண்மையிலேயே அவள் சொல்ல வருவது புரியாமல் அவன் வினவ,
"அந்த அம்சவேணி உண்மையிலேயே உங்க மாமா பொண்ணு தானா?அவ எப்படிப்பட்டவ? அவளைப் பற்றி உங்களுக்கு முழுசா எதாவது தெரியுமா?" என கேள்விகளை அடுக்கினாள்.
"இப்ப எதுக்காக இதெல்லாம் கேட்குறடா விதுமா?! என்னாச்சு?அவ என்ன பண்ணுனா?" கார்த்திக் ஒன்றும் விளங்காமல் கேட்டான்.
"அதை காட்ட தான் அவளோட ரூமுக்கு உங்கள கூட்டிகிட்டு போனேன்.ஆனா அதுக்குள்ள அவ என்னவோ செய்துட்டா." என்று கூறிய வித்யாவை, அவன் என்னவென்று பார்த்திருந்தான்.
"நல்லவேளை நான் என் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து வைச்சு இருந்தேன். இதோ, நீங்களே பாருங்க!." என்று வித்யா அவனிடம் நீட்டிய புகைப்படத்தை பார்த்த கார்த்திக் அதிர்ந்தான்.