Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 49
- Thread Author
- #1
கானல் - 47
யோசனையுடன் இருந்த வித்யாவிடம், "அப்படி என்ன தான் இந்த குட்டி மூளைக்குள்ள ஓடுது?!.." என்று கார்த்திக் கேட்டதும், தனது மனதில் தோன்றும் விசயத்தை பகிர்ந்தாள் அவள்..
"நாம ஏன் இனிமே அம்மாவை சேலத்துக்கு கூட்டிட்டு போக கூடாது?!.. இவ்ளோ நாள் தான் உங்களுக்கு னு யாரும் இல்ல..ஆனா..இப்ப தான் நான் இருக்கேனே!.." என்றவளின் வார்த்தைகளில்,
கார்த்திக்கின் மனதில் சொல்ல இயலாத இதம் பரவியதில் அவளை காதலோடு அவன் பார்த்திருக்க, அந்த பேக்கு அதை கண்டால் தானே.. அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே சென்றாள்..
"அவங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்.. அம்மாவை நானே கூட இருந்து பார்த்துக்கறேன்.." எனக் கூறிவிட்டு பதிலை எதிர்பார்த்து ஆவலோடு அவனது முகத்தை கண்டாள் வித்யா..
அவன் முகம் காட்டிய உணர்வில் கட்டுண்டு, தன் பார்வையை தாழ்த்தியவள், பின்பு, "கார்த்திக்!.." என்றழைத்து அவனை இயல்புக்கு கொண்டு வர முனைந்தாள்..
அவளது அழைப்பில் அவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டதை உணர்ந்து, "நான் கேட்டுட்டே இருக்கேன்!..நீங்க எதுவும் சொல்லாம இருக்கீங்க?!.." எனக் கேள்வி எழுப்பினாள்..
அதன் பின் அவள் சொன்னதை ஒருமுறை நினைவுப்படுத்தி பார்த்த கார்த்திக், அவள் அடுத்ததாக கூறியதில் துணுக்குற்றவன், "உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா டா விதுமா?!.." என்றான்..
"அதெல்லாம் ஒன்னுமில்ல பா..நான் தான் இருக்கேனே!..அம்மாவை நானே பார்த்துக்குவேனே..அப்றம் எதுக்கு தேவையில்லாம நர்ஸ் எல்லாம் வச்சுட்டு.." இழுத்து நிறுத்திய அவளது அவசரமான பதிலில்,
அவளை கூர்ந்து பார்த்தவன், "அப்படினா.. உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா?!.. இல்ல.. அந்த அம்சவேணியை பிடிக்கலையா?!.." என நேரடியாக கேட்டான் கார்த்திக்..
அவளை பற்றிய தனது அபிப்ராயத்தை கூறினால் 'அவன் எதுவும் கோபம் கொள்வானோ?' என்று எண்ணியவள், "பிடிக்கல னு இல்ல..எனக்கு தோணுனதை சொன்னேன்!..அவ்ளோ தான்!.." என முடித்துக் கொள்ள பார்த்தாள்..
சில நொடிகள் அவளை அசையாமல் பார்த்தவன், "சரி விடு.. நீ இப்போ தானே இங்க வந்து இருக்க!.. கொஞ்ச நாள் போகட்டும் டா!.. அப்புறமா என்ன பண்ணலாம் னு யோசிப்போம் சரியா!?.." என்று
அப்போதைக்கு பேச்சை நிறுத்தியவன், "இப்போ தூங்கு மா!.. இன்னும் நாள் இருக்கு.. நாம இங்க தானே இருப்போம்.. அப்புறமா யோசிச்சு முடிவெடுப்போம்!.." என முடித்து அவளை உறங்கச் சொல்லி விட்டு அவனும் படுத்து விட்டான்..
அவனது பதிலில் ஏமாற்றம் ஏற்பட்டாலும், அதுவும் சரி தான் என யோசித்தவள், அதை விட்டு விட்டு உறங்க முயன்று வெற்றியும் கண்டாள்..
'நீ என்ன வேணும்னாலும் செய்!..நான் என் வேலையை ஒழுங்கா செய்வேன்' என்று கதிரவன் தன் பணியை தொடங்கி விட, பொழுதும் புலர்ந்து நேரமும் கடந்தது..
விடிந்ததும் கண் விழித்த வித்யாவிற்கு, குளியலறையில் கார்த்திக்கின் பேச்சுக்குரலும், கெக்கபெக்கே என்ற குழந்தையின் சிரிப்பும் இன்னிசையாக காதில் விழ, மென்னகையுடனே கண் விழித்தாள்..
அவள் எழுந்து வருவதற்குள் இருவரும் வெளியே வந்தனர்.. "அம்மாக்கு குட் மார்னிங் சொல்லு டா குட்டிமா!.." கார்த்திக் பிள்ளையிடம் பணிக்க, "கும்மானிங் ம்மா!.." என சிரிப்புடன் சத்தமாக சொன்னாள் சின்ன வாண்டு..
"குட் மார்னிங் டா லட்டு!.. என்ன அதுக்குள்ள குளிச்சே முடிச்சுட்டீங்க!!?.." என தாய் ஆச்சர்யமாக கேட்க, அதற்கும் சிரிப்பையே பதிலாக தந்த மகள்,
"பாத்தியை பாக்க போதோமே!!.. காத்திப்பா சொன்னாங்கே!!..அதா நானு, காத்திப்பாவு பாஸ்தாஆ கெம்பித்தோம்!.." என ஏதோ சாதனை போல் கண்கள் விரிய உரைத்தாள்..
"ஓஹோஓஓஓ அப்படியா!!!.. ரொம்ப ஃபாஸ்ட் தான் ரெண்டு பேரும்!!..இதோ அம்மாவும் கிளம்பி வர்றேன்!.." எனக் கூறிவிட்டு குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு அவள் நகர,
அவள் அவ்வாறு சொன்னதும், கார்த்திக் குழந்தையின் காதிற்குள் ஏதோ ரகசியம் பேச, அவள்,"அம்மா!.." என்றழைத்து வித்யாவை தேக்கினாள்.."என்னடா செல்லம்!?." கேட்ட தாயிடம்,
"உங்களையும் காத்திப்பா கெப்பனுமா?!.. அவா சீக்கம் கெப்பி விவ்வாங்க!.." என்ற குழந்தை.. கூடவே, "காத்திப்பா தான் கேக்க சொன்னாங்க!.." அவனையும் சேர்த்துப் போட்டுக் கொடுத்தது..
'இந்த குட்டி வாண்டு இப்படி போட்டுக் கொடுத்துட்டாளே!!..' என்று மனதிற்குள் புலம்பியவன், வித்யாவைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்து, "ஹி!..ஹி!..ஒரு எல்ப் க்கு சொன்னேன்!.."என்றான்..
அவனை முறைத்தவள், "ம்ம்ம்..ஒரு ஹெல்ப் பும் தேவையில்லை!.. இத்தனை வருஷம் நானே தான் ரெடி ஆனேன்!.." என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்..
மூவரும் தயாராகி தங்களது அறையிலிருந்து வெளியில் வர, வித்யா குழந்தைக்கான பாலை கலக்குவதற்காக சமையலறையை பார்வையாலே தேடி அறிந்தவள்,
"இரு டா செல்லம்!. பாப்பாக்கு பால் கலக்கி கொண்டு வர்றேன்!.." என்று செல்ல விழைய," பால் குச்சாச்சு ம்மா!.. காத்திப்பா தந்தாங்க!.." என்றாள் மகள்..
உடனே கார்த்திக், "குட்டிமாக்கு பால் கொடுத்துட்டு, அவளுக்கும் நமக்கும் சேர்ந்தே பிரேக்ஃபாஸ்ட்டும் ரெடி பண்ணியாச்சு!..வா சாப்பிட போகலாம்!.." என அவளது கையைப் பிடித்துக் கொண்டு வர..
அப்போது தான் சமையலறையில் இருந்து வந்த அம்சவேணி, இருவரது கரங்களையும் வெறுப்போடுப் பார்த்து கொண்டே தனக்கான உணவோடு வந்து அமர்ந்தாள்..
அவளது விழிகளின் வெறுப்பை கார்த்திக் உணர்ந்தானோ, இல்லையோ தெரியவில்லை..
ஆனால் அவளை பார்த்த வித்யா சிந்தனையுடன், கார்த்திக் கவனித்தானா என நோட்டமிட, அவனோ பிள்ளையுடன் பேசிக் கொண்டல்லவா இருந்தான்..
உணவு மேசையில் அமர்ந்த மூவரும் குழந்தையோடு ஏதேதோ பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் உணவை உட்கொள்ள,
அம்சவேணிக்கு தான் கடுப்பேறியது, வேகமாக தனது உணவை முடித்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்..
அவளையே அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்த வித்யாவிற்கு அவளது எண்ணம் என்னவென்று சரியாக அனுமானிக்க முடியவில்லை..
மூவரும் காலை உணவை முடித்து விட்டு, ராஜேஸ்வரியை காண அவரது அறைக்குள் நுழைய, அம்சவேணி அவருக்கான உபகரணங்களை சோதித்துக் கொண்டு இருந்தாள்..
உள்ளே வந்ததும் பவிஷ்யா அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை பார்த்து சற்று பயத்துடன் தாயிடம் ஒட்டிக் கொண்டாள்..
அவளது முகத்தில் பீதியை கண்ட வித்யாவிடம், "வெய்யே போவம் ம்மா!!.." என்றாள் குழந்தை பயத்துடன்..
அவளது மனநிலையை புரிந்து கொண்ட கார்த்திக், "குட்டிமா!.. இவங்க தான் உன் பாட்டி!.. ரொம்ப நாளா தூங்கிட்டே இருக்காங்க!.." என குழந்தைக்கு விளக்கியவன்,
தன் தாயிடம் திரும்பி, "பாருங்க ராஜி மாதா!.. உங்க பேத்தி உங்க செட்டப் எல்லாம் பார்த்து பயப்பட்றா!.. எழுந்து அவகிட்ட பேசுங்க!.." என்றான்..
வித்யாவிடம் அட்டை போல ஒட்டிக் கொண்ட பவிஷ்யா, தன் காத்திப்பா அவரிடம் பேசுவதை ஏதோ அதிசயம் போல பார்த்து இருந்தாள்..
தாயிடம் பேசியவன், குழந்தையிடம் திரும்பி," குட்டிமா!.. பாட்டியை எழுந்திரிக்க சொல்லேன் டா!.. காத்திப்பா நிறைய தடவை சொல்லிட்டேன்!.. நீயாவது சொல்லேன்!.." சற்று குரல் கமற பேசினான்..
கார்த்திக்கின் குரல் மாற்றத்தை உணர்ந்த பவிஷ்யா, வித்யாவிடமிருந்து அவனிடம் தாவியவள், அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு நெஞ்சில் தலை சாய்க்க..
"ராஜி மாதா எழுந்திருங்க!.. இதோ குட்டிமா வந்துட்டா!.. நீங்க சொன்ன மாதிரி அவளை கூட்டிட்டு வந்துட்டேன்ல.. அப்றம் என்ன இன்னும் தூக்கம்!?..எழுந்திருங்க!.."
"பாட்டி கிட்ட எழுந்திருக்க சொல்லி நீயே சொல்லுடா குட்டிமா!!.. அவங்கள 'பாட்டி!' கூப்பிடு!.." என அவன் குழந்தையிடம் சொல்லிக் கொண்டு இருக்க, நடப்பதை புரியாமல் பார்த்திருந்தாள் அம்சவேணி..
காத்திப்பா வின் கலங்கிய குரலில் என்ன உணர்ந்தாளோ!?, அவன் சொன்னதற்காக,"பாத்தி!!.." என மெதுவாக அழைத்தாள்..
அவரிடம் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்க, மனம் சோர்ந்தான் அவன்.. உடனே அவனருகே நின்ற வித்யா ஆதரவாக அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்..
அவளை திரும்பிப் பார்த்த கார்த்திக்கிடம் 'எல்லாம் சரி ஆகிவிடும்!' என்று பார்வையாலே தைரியமூட்ட, இருவரது சம்பாஷணை கண்டு அங்கு ஒருத்தியின் மனதில் அனல் மூண்டது..
குழந்தை இன்னமும் அந்த மருத்துவ உபகரணத்தை கண்டு, அவளுக்கு உடல்நலம் இல்லாத போது அங்கு சென்ற நினைவில் பயத்துடனே இருந்தாள் பவிஷ்யா..
அவர்கள் சிறிது நேரம் அங்கேயே இருக்க, குழந்தை அவனை விட்டு இறங்கவே இல்லை..அவரிடமும் நெருங்கவே இல்லை.. பின்னர் தங்களது அறைக்கு திரும்பினர்..
வெளியே கிளம்பி வந்த கார்த்திக்கை, "அத்தான்!!.." என அழைத்த அம்சவேணியை ஒரு அசூயையுடன் பார்த்தவன், என்னவென்று வினவ..
"உங்களுக்கு எப்ப மேரேஜ் ஆச்சு!?.. அத்தை க்கு அந்த குழந்தையை பற்றி தெரியுமா?!..யாரு அந்த குழந்தை?!.." என இதுவரை அவளது மண்டையை குடைந்த கேள்விகளில் சிலதை அடுக்கினாள்..
"அதெல்லாம் உனக்கெதுக்கு மா?!.. குட்டிமா எங்களோட பொண்ணு!.. எங்களுக்கு எப்பவோ மேரேஜ் ஆயாச்சு!.. போதுமா?!.." என கத்தரித்தாற் போல் அவன் பதிலளிக்கவும்..
"என்ன அத்தான் இப்படி வேண்டா வெறுப்பா பேசுறீங்க?!.. இவ்ளோ நாள் நல்லா தானே பேசுனீங்க!.. யாரு உங்க மனசை கெடுத்தது..யாரோ விரோதி கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க!.." என்று கூறி,
அவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொள்ள, யாரையும் புண்படுத்தி பழக்கம் இல்லாத கார்த்திக்கிற்கு 'தான் சற்று கடினமாக பேசி விட்டோமோ!?' என்று தோன்றியது..
"அப்படி எல்லாம் இல்ல அம்சவேணி!.. நான் ஏதோ யோசனையில் அப்படி பேசிட்டேன்!.. ஸாரி!.." என்று அவன் தனது பேச்சிற்காக மன்னிப்பு கேட்டான்..
அதில் மனம் குளிர்ந்தவள், "எனக்கு தெரியும் அத்தான்!..உங்களுக்கு எப்பவுமே என்னை ரொம்ப பிடிக்கும்!..சின்ன வயசுல கூட நான் கொஞ்சம் வருத்தப்பட்டா கூட உங்க மனசு தாங்காது!.." என
அவனது கரத்தைப் பிடித்துக் கொண்டு ஏதேதோ அவள் உளறிக் கொண்டு இருக்க..அவள் சொன்னது எதுவும் நினைவே இல்லாமல் விழித்துக் கொண்டு நின்றான் அவன்..
அப்போது கேட்ட, "கார்த்திக்!.." என்ற அழைப்பில் திரும்பியவன் அங்கே வித்யா நிற்கவும், அவளை நோக்கி போக நகர்ந்த போது தான், அவனது கரத்தை அம்சவேணி பிடித்திருப்பதையே உணர்ந்தான்..
'இது வேறயா!? அடேய் கார்த்தி!.. நல்லா மாட்டுனியா?!.. உன் கதை முடியும் நேரமிது
..' என்று மனசாட்சி வேறு நேரங்கெட்ட நேரத்தில் பாடல் இசைக்க, அவன் முழித்தான்..
வேகமாக அவளது கையை உதறியவனிடம், "உங்க பர்ஸ் மறந்துட்டு போயிட்டீங்க!.." என்று அவனை முறைத்துக் கொண்டே நீட்டினாள் வித்யா..
"தேங்க்ஸ் டா விதுமா!.." என்று கூறி சிரித்தவன், "பாலா வீட்டுக்கு தான் போறேன்!.. வேணும்னா நீயும் பாப்பாவும் வர்றீங்களா?!.." என சமாதானம் செய்ய முனைந்தான்..
"நான் இப்போ வரலை..இன்னொரு நாள் வர்றேன்!.. எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு!.." என்ற வித்யா, அம்சவேணியை கூர்மையாக பார்க்க, அவளும் சளைக்காமல் அலட்சியமாக மிதப்பான பார்வை வீசினாள்..
"அப்ப பாப்பாவை கூட்டிட்டு போகவா?!.." என்றவனை இன்னும் அதிகமாக முறைத்த வித்யா, "ஏன் இதெல்லாம் கிளம்பி வெளிய வரும் போது தோணலையா?!.." என்றாள்..
"அட..என்னமா கேள்வி இது!?.. நேத்து நைட்டு முழுக்க என்னால தான் நீ ஒழுங்கா தூங்கவே முடியலையே.. அதான் ரெஸ்ட் எடுக்கட்டும் னு விட்டுட்டேன்!.." அந்த லூசு பையனின் பதிலில்,
அம்சவேணி எரிச்சலுடன் பார்க்க,
அவளது பாவனையை கண்டு வித்யா சிரிப்பை அடக்கிக் கொண்டு, "ச்சீ!!.. என்னங்க நீங்க!.. பப்ளிக்ஆ இப்படி தான் பேசுவீங்களா?" என வித்யா நாணத்துடன்,
வேண்டுமென்றே அம்சவேணியை கடுப்பேற்றிட கூறவும், அந்த திருவாழத்தான் தான் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றான்.