• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
48
கானல் - 46

அம்சவேணி அவ்வாறு கேட்டதும், 'இந்த பெண்ணிடம் எத்தனை முறை தான் சொல்வது?இவளிடம் பேசி பிரயோசனம் இல்லை!.' என்ற எரிச்சலோடும்,சலிப்போடும் தங்களது அறைக்கு சென்ற கார்த்திக் கண்டது.

பிள்ளையின் கையை தன் கைகளுக்குள் இறுக பிடித்துக் கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த வித்யாவை தான்.

அவளை கண்டவன் ஒரு பெருமூச்சுடன் குளியலறை சென்று, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த போது கூட, அவள் அவ்வாறே நடித்துக் கொண்டிருக்க,

"நீ தூங்கலனு எனக்கு நல்லா தெரியும்டா விதுமா. இப்ப எதுக்கு இந்த கோபம்?" என ஒன்றும் தெரியாதவன் போல கார்த்திக் கேட்டான்.

அப்போதும் வித்யா கண் விழிக்காமல், ஆழ்ந்து தூங்குவது போல் பாசாங்கு செய்ய, 'இவளை இப்படியே விட்டா சரிப்படாது.' என்றவன் அவள் படுத்திருந்த பக்கம் சென்றான்.

தூங்குவது போல் நடிப்பவளின் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு போக, அவன் வந்ததில் இருந்து அனைத்தையும் உணர்ந்த வித்யா, மிக அருகில் பட்ட அவனது மூச்சுக்காற்றில் பதறி வேகமாக எழுந்தாள்.

அவளது பதட்டத்தை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்ட கார்த்திக்கிடம், "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க? தூங்கறவ கிட்ட வந்து இப்படி தான் பண்ணுவாங்களா?" என வேகமாக எழுந்தமர்ந்து எகிறினாள்.

அவளை நிதானமாக பார்த்த கார்த்திக், "ஆமா, நீ தான் அசந்து தூங்கிட்டியே. அப்றம் நான் என்ன பண்ணுனேன்னு நீ இந்த குதி குதிக்கிற?" என்று

உதட்டில் மறைத்த புன்னகையுடன் கைகளை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு கேட்டு நின்றான் விஷமக்காரன்.

அவனை ஆன மட்டும் முறைத்தவள், "நீங்க, நீங்க" என்று 'எப்படி சொல்ல!?' என தடுமாறிய வித்யாவை, "நான் தான், நான் தான், அப்றம்!?" ஊக்கினான் அவன்.

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மூச்சை இழுத்து விட்டவள், "நீங்க என் முகத்து கிட்ட வந்து, " சிறு கூச்சத்துடன் அவள் சொல்லாமல் நிறுத்த, அவனுக்கு அவளது அந்த பாவனை சுவாரஸ்யமாக இருந்தது.

"உன் முகத்து கிட்ட வந்து?" அவன் ஆர்வத்துடன் அவளை தூண்ட, "என்னை கிஸ் பண்ண தானே வந்தீங்க?" என்று ஒரே மூச்சாக அவள் கேட்டு முடித்தாள்.

அவள் ஒருவழியாக சொல்லி முடித்து 'அப்பாடா!' என்று ஆசுவாசம் ஆவதற்குள், "இதென்ன வம்பா போச்சு?" என்றவன்,

சட்டென்று குனிந்து அவளது கன்னத்தில் முத்தமிட்டு, "எனக்கு உன்னை கிஸ் பண்ணனும்னு தோணுச்சுனா நீ முழிச்சு இருக்கும் போதே இப்படி டைரக்டா கொடுப்பேனே!" என்று கூற,

அதிர்ச்சியில் கண்கள் விரிய, 'ஆ'வென்று வாயை பிளந்து, அவனை பார்த்திருந்தாள் அவள்.

ஒரு புன்சிரிப்புடன், "டோர் க்ளோஸ்!" என்று அவளது நாடியைப் பிடித்து, திறந்திருந்த அவளது வாயை மூடியவன்,

"நானா எதுவும் பண்ணலம்மா. சும்மா இருந்தவனை கிஸ்னு சொல்லி நீ தான் டெம்ப்ட் பண்ணுன. இதுல என்னோட ஃபால்ட் எதுவும் இல்ல சொல்லிட்டேன்." என நல்ல பிள்ளை போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவன்,

"அப்றம், எனக்கு அதுக்கான எல்லா உரிமையும் இருக்கு தானே?" என அவன் குறும்புடன் ஒற்றை புருவம் தூக்கி வினவிட, அவளது தலை தானாக ஆமோதித்து ஆடியது.

"ஹான்! இது நல்ல புள்ளைக்கு அழகு! சரி இப்ப சொல்லு. என்ன கோபம் உனக்கு?" என்று அவன் கேட்க, அவளோ சுயநிலையில் இருந்தால் தானே.

அவனது திடீர் செயலில், எப்படி எதிர்வினை புரிவது என தெரியாமல் விழித்துக் கொண்டு உறைநிலையில் அல்லவா இருந்தாள்.

"என்னடா விதுமா? மறுபடியும் எதாவது மருத்துவ முத்தம் தந்தால் தான் பேசுவியா?" என்று உதட்டில் மறைந்த கள்ளச் சிரிப்புடன் கேட்டு கண்ணடித்தான் கள்வன்.

அதில் இயல்புக்கு வந்தவள், அவனை முறைக்க,"ஹான்!இதான்! இந்த பாசமான பார்வை இல்லைனா என் பொண்டாட்டி தானானு எனக்கே டவுட்டு வருதுல, " அவன் விளையாட்டாக பேசிட,

அதில் முழுவதும் சுயம் தெளிந்தவள், "ஆமாமா, டவுட்டு வர தானே செய்யும். அதான் உங்கள 'அத்தான், பொத்தான்'னு கூப்பிட ஒருத்தி இங்க இருக்காளே."

"அவளை பார்த்தாச்சுல, அப்றம் பொண்டாட்டி யாருனு கண்டிப்பா டவுட்டு வரும் தான்." என்று உதட்டைச் சுழித்து நொடித்தாள் வித்யா.

'அடேய் கார்த்தி! உன் வாய் தான் உன்னோட சத்ரு. நீயே வான்டட்ஆ போய் வலையில விழுந்துட்டியேடா. ஹையோ!!ஹையோ!' என அவனது மனசாட்சி அவனை எள்ளி நகையாட,

திருதிருவென விழித்தவன், 'ஹ! எவ்வளவோ பார்த்தாச்சு, இதையும் சமாளிப்போம்!' என தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தான் அந்த லூசுப்பையன்.

"ஓஹோஓஓஓ! அவளைப் பற்றி சொன்னதும் சார் அப்படியே ட்ரீமுக்கு போயாச்சு போல." நக்கலுடன் அவள் கேட்டதும் சுதாரித்துக் கொண்டான் அவன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா. அந்த பொண்ணு கிட்ட எத்தனையோ தடவை அப்படி கூப்பிடாதேனு சொல்லிட்டேன். அது தான் கேட்க மாட்டீங்குது." அம்சவேணியை குறை கூறினான்.

"முதல் தடவை கூப்பிடுற அப்பவே கண்டிச்சீங்க னா அவ எதுக்கு உங்கள இவ்ளோஓஓ உரிமையா கூப்பிட்றாளாம்!?" என்றவள்,

"முதல்ல அவ யாரு உங்கள அப்படி கூப்பிடறதுக்கு?" கண்களில் அப்பட்டமான பொறாமையுடன் கேட்டவை கண்கள் மின்ன கண்டவன்,

மனதிற்குள் குதியாட்டம் போட்டு ரசித்தேன், "பொறாமை!!" என்று முணுமுணுக்க,அவன் சொன்னது காதில் விழாமல் என்னவென கேட்டவளிடம் ஒன்றுமில்லை என்று மழுப்பினான்.

பின்பு நிதானமாக, "என் தாய்மாமாவோட பொண்ணு தான் இந்த அம்சவேணி. அம்மாவை பார்த்துக்க வந்த நர்ஸ் தான் அவள்." என அவளைப் பற்றி சொல்ல,

அவனை புரியாமல் பார்த்த வித்யாவிடம், அம்சவேணியை சந்தித்தது முதல் நடந்ததை விளக்கத் தொடங்கினான்.

மகள் மற்றும் மருமகனின் மரணம் பற்றி கார்த்திக் சொன்னதும் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை ஹாஸ்பிட்டலில் சேர்த்து,

அவர் கோமாவிற்கு சென்ற பின், 'மருத்துவமனையில் இருப்பதை விட, வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டால் நல்லது' என்ற மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அவரை வீட்டிற்கு மாற்றினான்.

கார்த்திக்கின் பணிக்கு செல்வதற்கான நாள் நெருங்கியதால் வீட்டில் அவரது நிலையை முழுநேரமும் பரிசோதிக்க, ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்ய நினைத்தான்.

அதனால் முழுநேர ஹோம் நர்ஸிங் ஏஜென்ஸியை அவன் அணுகி இருக்க, அதன் மூலம் அவர்களது வீட்டிற்கு வந்தவள் தான் இந்த அம்சவேணி.

முதல் நாள் தனது பணிக்கு வந்த அம்சவேணி, அவரை அடையாளம் கண்டு அதிர்ச்சி அடைந்தவள், "அத்தை!" என பதறி திகைத்து நின்றாள்.

அவளது அதிர்ச்சியில் புரியாமல் அவளை பார்த்த கார்த்திக்கை, சில நொடிகள் உற்று கவனித்தவள், "என்ன அத்தான் என்னை தெரியலையா?" என்றாள் அவள்.

அதற்கு மறுப்பாக அவன் தலை அசைக்க, "நான் தான் அம்சவேணி. உங்க தாய்மாமா பொண்ணு." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் அவள்.

அவள் அவ்வாறு உரைத்ததில் அவரை தன் நினைவடுக்குகளில் தேடி அறிந்தவன், அவளை அடையாளம் தெரியாமல், ஒன்றும் விளங்காமல் முழித்தான்.

"என்ன அத்தான் முழிக்கிறீங்க? அதானே! நீங்க எல்லாம் தான் வளர்ந்த அப்றம் ஊருக்கு வரவே இல்லையே." என்று அவள் சலித்துக் கொண்டு சில விசயங்களை நினைவூட்டினாள்.

அதில் ஞாபகம் வந்தவன், "அந்த அம்சவேணியா நீங்க? ஸாரிமா! எனக்கு டக்குனு நினைவு வரலை."என்று கேட்க, அதை கேட்டவள்,

"அதனால என்ன அத்தான், நீங்க ஸ்கூல் படிக்கும் போது ஊருக்கு வந்தது தான்.அதுக்கப்புறம் வரவே இல்ல, ஞாபகம் இருக்கறது கஷ்டம் தான்."

"ஆனா நான் தான் ரொம்ப நாளா நீங்க வரவே இல்லையே னு கேட்டு அழுதுட்டு இருந்ததா அப்பா சொல்லுவாங்க." என்று ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தவள்,

பின்பு அந்த பேச்சை மாற்றி, "அது இருக்கட்டும். அத்தைக்கு என்ன ஆச்சு?" என வினவினாள் அம்சவேணி.

அவள் கேட்டதும் மனம் கனக்க, தனது சகோதரி மற்றும் அவளது கணவனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தன் அன்னைக்கு இவ்வாறு நடந்து விட்டது என்று மட்டும் கூறினான்.

அதன் பின்னர் ராஜேஸ்வரியை 24 மணிநேர செவிலியாய் அவள் கவனித்துக் கொள்ள, கார்த்திக் அவரது அறையில் டிவியை பொருத்தி, அதில் தன் சகோதரி உயிருடன் இருந்த போது எடுத்த காணொளி காட்சிகளை ஓடச் செய்தான்.

தினமும் தாயின் அறையில் சில மணிநேரங்களாவது அவர்களது வீடியோவை ஓடச் செய்து, அவருக்கு நினைவுகளை திரும்பச் செய்ய பிரயத்தனப்படுகிறான். அதன் பலன் தான் என்னவோ இன்னும் கிடைக்கவில்லை.

அந்த காணொளி காட்சியை முதலில் கண்ட அம்சவேணி அதில் வரும் குழந்தையை கவனித்து, கார்த்திக் வந்த ஓர்நாள் அது யாரென கேட்க,

'தன் சகோதரியின் குழந்தை' என்று மட்டும் அவன் கூறியதால் அந்த குழந்தையும் இறந்ததாக அவள் நினைத்துக் கொண்டாள்.

அந்த குழந்தை உயிருடன் இருப்பதோ, மற்றும் அவள் காணாமல் போனதை பற்றியோ எதுவும் அம்சவேணிக்கு தெரியவில்லை. கார்த்திக்கும் அவளிடம் பெரிதாக விவரங்கள் சொல்லவில்லை.

அவனாக பேசவில்லை என்றாலும் அவளாகவே 'அத்தான்!அத்தான்' என்று வழிய பேசினாலும், ஓரிரு வார்த்தைகளில் அவளுடனான பேச்சை முடித்துக் கொள்வான்.

சில வேளைகளில் அவளது அழைப்பு ஏனோ எரிச்சலாக உணர்ந்து, அவனது பெயரை சொல்லியே அழைக்கச் சொல்ல உடனே,

"சின்ன வயசுல இருந்தே நான் உங்கள அப்படி தானே கூப்பிடுவேன் அத்தான்." என்று அதற்கும் ஒரு 'அத்தான்' போட்டு அவள் நீட்டி முழக்க, வெறுத்துப் போய் விட்டுவிட்டான்.

தன் அன்னையை கவனிக்க, வெளியாட்களை விட சொந்தகாரப் பெண் இருப்பதில் சற்று நிம்மதியாக உணர்வதால் அவளிடம் பெரிதாக எதுவும் வாக்குவாதம் செய்வதில்லை அவன்.

கார்த்திக் கூறிய அனைத்தையும் கேட்ட வித்யாவிற்கு, அம்சவேணியின் பார்வையையும், பேச்சையும் கண்ட பின் அவளை பற்றி அப்படி ஒன்றும் நல்ல விதமாக தெரியவில்லை,

இருப்பினும் கார்த்திக்கின் உறவினள் என்பதால் அவளைப் பற்றி எதுவும் எதிர்மறையாக அவனிடம் சொல்லாமல் விட்டாள்.

நடந்ததைச் சொன்ன கார்த்திக், வித்யாவை பார்க்க, அவள் தீவிர சிந்தனையில் இருப்பதைக் கண்டு, "மேடம் நான் சொன்னதை நம்பலை போல?" என்றான்.

தனது யோசனையிலேயே இருந்தவள் சட்டென, "அதெல்லாம் இல்ல கார்த்திப்பா! உங்களை நம்பாமல் தான் இங்க வரை வந்து இருக்கேனா?"எனக் கேட்டவள்,

'அவளைப் பற்றி தான் யோசிச்சேன். எனக்கென்னமோ அவள் நல்லவளா தெரியல.' என்பதை மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டு யோசனையுடன் இருந்தாள்.

அவளை கவனிக்காமல், "அப்போ டீச்சரம்மாக்கு என் மேல கோபம் போயிடுச்சா?இனியாவது நடிக்காம நிம்மதியா தூங்குவியா?." சிறு சிரிப்புடன் அவன் வினவ, அவள் பதில் எதுவும் உரைக்காமல் அமைதியாக இருந்தாள்.

"இன்னும் என்னடா விதுமா?எதுவா இருந்தாலும் வெளிப்படையா கேளுமா. அப்படி என்ன தீவிர யோசனை இந்த குட்டி மூளைக்குள்ள ஓடுது?" என்று அவளது தலையை பிடித்து லேசாக ஆட்டி கேட்டான் கார்த்திக்.

அவளது குட்டி மூளைக்குள் ஓடிய யோசனையை வித்யா சொன்னதும், திகைத்தான் கார்த்திக். இப்போது சிந்தனையில் மூழ்குவது அவனது முறையானது.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top