Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 41
கணவன் மனைவி இருவரும் தங்களது பணி முடிந்து பள்ளியை விட்டு வெளியே வரும் போது அங்கு நின்ற பாலாவை கண்டு ஆச்சர்யமடைந்தான் கார்த்திக்.
கார்த்திக்கின் அனுமதியின்றி வித்யாவிடம் உண்மையை கூறிய பின்னர், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எதுவும் நடந்து இருக்குமோ என்றும், தன்னால் தான் எல்லாம் என்ற குற்ற உணர்ச்சியோடும் இருந்த பாலா,
ரூபேஷின் திருமணம் முடிந்து ஊருக்கு சென்றவன், கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்க எண்ணி, விடுப்பு எடுத்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறான்.
"ஹேய் மில்க்! நீ என்னடா இங்க எப்படி?!" என்று கார்த்திக் ஆச்சர்யமாக வினவிக் கொண்டு இருக்கும் போதே,
"டேய் உரங்குட்டான்! நீ எப்புட்ரா இங்க?!" படுஉற்சாகமாக கேட்டுக் கொண்டே புன்னகையுடன் அவர்களை நெருங்கினாள் மதுமதி.
மதுமதியை அங்கு எதிர்பாராத பாலா, திகைத்து நிற்க.. வித்யாவும் கார்த்திக்கும் எதுவும் புரியாமல் நின்றிருந்தாள்.
மதுமதி அவ்வளவு உற்சாகமாக கேட்டுக் கொண்டு வர," என்னடா நடக்குது இங்க?" என்று கண்களை விரித்து கார்த்திக் பாலாவிடம் கேட்க, அவன் திருத்திருவென முழித்தான்.
பின்பு, "அண்ணா நான் உங்ககிட்ட பேச தான் வந்தேன். இந்த ரோட்ல வரும்போது ஒரு காபி ஷாப் பார்த்தேன். நீங்க அங்கே வாங்க. நாம பேசணும்." என்று கூறி அவன் கிளம்ப தயாராக,
அதற்குள் அருகே வந்த மதுமதி, "என்னடா?என்னை பார்க்க தானே வந்த? அப்புறம் ஏன் கிளம்புற?" என்று கேட்கவும், கார்த்திக்கும் வித்யாவும் விழித்தனர்.
"நான் ஒன்னும் உன்னை பார்க்க வரவில்லை." என்ற பாலாவிடம், "என்னை பார்க்க வரலையா? அப்போ எதுக்காக இங்க வந்து இருக்க?" என மதுமதி குழப்பமாக கேட்டாள்.
"அது உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஓகே. நான் கிளம்புறேண்ணா. நீங்க அங்க வந்துடுங்க." என்று அவளுக்கு பதிலை கூறிவிட்டு காத்திக்கிடம் விடைபெற தயாரானான் பாலா.
"கார்த்திக்கை பார்க்க வந்தியா!?" என்று மதுமதி கேட்டதும்," கார்த்திக் அண்ணா, உன்ன விட வயசுல பெரியவர். ஒழுங்கா மரியாதையா கூப்பிடு." என்று அவளை திருத்தினான் பாலா.
"பேர் சொன்னா மரியாதை இல்லைனு யாருடா சொன்னா?" என்று மதுமதி ஆயாசமுடன் கேட்க, "உன் கிட்ட மனுஷன் பேசுவானா?" என்று பாலா கடுப்புடன் கூறிக் கொண்டிருக்கும் போது,
கார்த்திக் அவர்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தவன் பின்பு, "சரி, நீங்க ரெண்டு பேரும் உங்க சண்டைக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு, வீட்டுக்கே வாங்க. காஃபி ஷாப் எல்லாம் வேண்டாம்."
"வீட்டுக்கு போய் உங்களோட டாம் அன்ட் ஜெர்ரி சண்டையை வச்சுக்கலாம். பார்க்கறதுக்கு நல்லா ஜாலியா தான் இருக்கு." என்று சிறு புன்னகையுடன் கார்த்திக் கூற, வித்யாவின் இதழ்களிலும் இளநகை.
பாலாவும், மதுமதியும் வீட்டிற்கு வர தயங்க, கார்த்திக் இருவரையும் அதட்டி அவர்களை பின் தொடர சொன்னான்.
"அப்படியே மதுவோட வண்டில எங்கள ஃபாலோ பண்ணிட்டு வாடா. குழந்தையை கூப்பிட போகனும்." கார்த்திக் குழந்தை என்றதும், பாலா அவளுடன் போட்டுக் கொண்டிருந்த சண்டையை மறந்து, விழித்துக் கொண்டிருக்க,
"அல்லோ! மிஸ்டர்.உரங்குட்டான்! உங்க அண்ணனே சொல்லிட்டாரு. வண்டில ஏறுறீங்களா? இல்ல."
"அப்படியே அவங்க பின்னாடி ரன்னிங் ரேஸ் எதுவும் ஓட போறீங்களா?" என்று நக்கலுடன் மது கேட்கவும், அவளை ஆன மட்டும் முறைத்தவன்,
"ஆட்டோ!" என்று அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி முன்னால் சென்ற வண்டியை காட்டி பின்தொடரச் சொன்னான்.
"போடா! இதெல்லாம் என்ன புதுசா? ஹ!" அவனுக்கு பழிப்பு காட்டிய மதுமதி கார்த்திக்கின் வண்டியை பின் தொடர்ந்து சென்றாள்.
குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு அவர்கள் வீடு வந்து சேர, பின்னோடே மதுமதியும் வர, வித்யா வீட்டை திறந்து உள்ளே நுழையும் போது, பாலா ஆட்டோவில் இருந்து இறங்கினான்.
வீட்டினுள் நுழைந்து பின்னர் அவர்களை அமர்ந்து இருக்க சொல்லி விட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி விட்டு, அவர்களும் தயாராகி வர சென்றனர்.
ஷோபாவில் அமர்ந்த பாலா நவகிரகம் போல அவளுக்கு முகத்தை காட்டாமல் திருப்பிக் கொண்டு இருக்க, அவனது சிறு பிள்ளைதனமான செய்கையை ரசனையுடன் காணாமல் கண்டிருந்தாள் மதுமதி.
***************
மதுமதி தனது முதுகலை படிப்பை படிக்க சென்ற இடத்தில் தான் பாலாவை பார்த்தாள். முதல் பார்வையிலேயே அவளை ஈர்த்தவன்.
இப்போது வரை அந்த கருவாயனிடம் அவளை ஈர்த்த விசயம் எதுவென்று அவளே அறிய முடியவில்லை. அவளும் பலமுறை யோசித்து தோற்றுப் போன ஒரு விசயம்.
இருவரும் வேறு வேறு பாடப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஆனாலும் பொதுவான இடங்களான நூலகம், உணவகம் என்று அவனை காணும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு ப்ரவாஹம்.
ஓராண்டு முழுவதும் அவனை பார்வையால் மட்டுமே ரசித்தவள், முதல்முறையாக அவனிடம் தன் எண்ணத்தை வெளியிட, அவனோ அவளை மேலும் கீழுமாக பார்த்து முறைத்து விட்டு சென்றான்.
அதன் பின் அடிக்கடி அவனிடம் சென்று இவளே பேசினாள், ஆனால் ஒவ்வொரு முறையும் இவளை ஊதாசீனப்படுத்தி பேசியது அவனது வாய் மட்டும்.
அவள் சென்ற பின் அவனது விழி மொழி வேறு பேச, ஒருமுறை அதை கண்டு கொண்டாள். அவன் எதனால் அவளை தவிர்க்கிறான் என தெரியாமல் குழம்பினாள் அவள்.
அவன் மீது தான் கொண்ட காதல் உண்மை என்றால் என்றாவது ஒரு நாள் அவன் அந்த காதலை உணர்வான் என்று காத்திருந்தாள்.
ஆனால் நாட்கள் மட்டுமே நகர, இருவரது படிப்பே முடியும் தருவாயிலும் வாயை திறக்காத அவனை நம்பி பிரயோசனம் இல்லை என்று அவளே மீண்டும் இறுதியாக கேட்டு விட எண்ணி சென்றாள்.
நண்பனுடன் பேசிக் கொண்டு கேண்டீனில் அமர்ந்து இருந்த பாலா, அவனது பின்பக்கமாக கேட்ட, "மித்ரன்!" அழைப்பிலேயே கண்டு கொண்டான் அவள் தான் என்று.
அந்த அழைப்பில் சில நொடிகள் மென்மையாக மாறிய அவன் முகம், அவள் அழைத்ததை கண்டு கொள்ளாமல் இருந்தது போல் நடிக்க, அவள் மீண்டும், "மித்ரன்!" சற்று சத்தமாக அழைத்தாள்.
அவளது அழைப்பை உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் கடுமையான முகமூடியை மாட்டிக் கொண்டு திரும்பி, "என்ன?" என்றான் பாலா.
"உங்கிட்ட தனியா பேசனும்." என்று அவள் கூறியதுமே அருகே இருந்த நண்பன் இங்கிதம் கருதி எழுந்து சென்று விட, பாலாவின் முன்னால் வந்து நின்றாள் மதுமதி.
"சொல்லு." என இறுக்கமாக கேட்டவனிடம், "ஏன் எப்போ பார் ப்ரோக்ராம் பண்ணுன ரோபோ மாதிரி பேசுற மித்ரன்?" என கேட்டாள் மதுமதி.
"இதை கேட்க தான் வந்தியா? நான் அப்படி தான். போதுமா? கிளம்பு." என்று அவளை விரட்ட முயன்றான்,
அவள் மேலும் சிறிது நேரம் நின்றால் அவளிடம் அவன் காட்டும் பார்வை மாறி விடுமே. அதுவே அவனுக்கு எட்டப்பனாகி விடுமென்று பயம் பையனுக்கு.
'இவன்கிட்ட பேசறதே வேஸ்ட்! போயும் போயும் இந்த ஜிஞ்சர் ஏட் மங்கி கிட்ட போய் காதல் வந்துச்சு பாரு உனக்கு. நீ தான்டி பைத்தியம்.' என்று அவள் தன்னை தானே வசை பாடிக் கொண்டு இருக்க, அவன் கிளம்பி சென்று கொண்டிருந்தான்.
அவன் சென்றதை கண்டவள், "அடேய் உரங்குட்டான்! நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனே, கொஞ்சமாவது உனக்கு என் மேல ஃபீலிங் வந்துச்சாடா?" என்று அவள் கத்த, ஓடி வந்து அவள் வாயை கை கொண்டு அடைத்தான் பாலா.
"லூசு! மெண்டல்! இப்படி கத்தற? பைத்தியமாடி நீ?எனக்கு எல்லாம் உம்மேல ஒன்னும் ஃபீலிங் இல்ல. போதுமா?" சொன்னவன் வேகமாக நகரப் பார்க்க,
"அப்ப ஓகே!" என்று அவள் கூலாக சொல்லி விட்டு திரும்பவும், இந்த லூசானுக்கு தான் பதறியது மனதிற்குள்.
அதிர்வுடன் அவளை திரும்பிப் பார்த்த பாலாவை, 'அப்படி வாடா வழிக்கு.' என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் சென்றே விட்டாள்.
படிப்பை முடித்து விட்டு பெங்களூரூவில் தனியாக ஒரு பரிசோதனை நிலையம் வைத்து வளர்ந்து கொண்டு இருந்த பாலாவிற்கு இந்த ராங்கி மனதில் குடைந்து கொண்டு தான் இருந்தாள்.
இருப்பினும் 'அவ ஒரு ஓரமாக இருக்கட்டும்!' என்று அவளுக்கு மனதை கொடுத்து விட்டு, அவன் உண்டு, அவன் வேலை உண்டு என்றிருக்க, மீண்டும் வந்தாள் அவனது செல்ல இம்சை.
பாலா சத்தியமாக அவளை பெங்களூரூவில் எதிர்பார்க்கவில்லை. அவள் தானே அன்று சரியென விட்டு சென்றாள்.
மீண்டும் வந்து அவனிடம் அவள் பேச, அன்று அவள் விட்டுச் சென்ற கோபத்தை இன்று காட்டி, வார்த்தைகளால் கடித்து குதறி அனுப்பி விட்டான்.
அவளை காயப்படுத்தி பேசி அனுப்பிதற்காக இரவு கண்ணீர் சிந்தியது, அவன் தலையணை மட்டுமே அறிந்த கதை.
அவள் மீண்டும் அவனை விட்டுச் சென்றதாக நினைத்திருக்க, இன்று அவளை கண்டதில் உள்ளம் குத்தாட்டம் போட்டது. முகம் கோபத்தை பூசிக் கொண்டது.
°°°°°°°°°°°°°°°°°°°
இனி...
கார்த்திக் தயாராகி வர, வித்யா குழந்தையுடன் அவர்களுக்கு சாப்பிட கொண்டு வருவதற்காக சமையலறைக்கு சென்றாள்.
"அப்றம்! என்ன திடீர்னு 'வாம்மா மின்னல்!' மாதிரி வந்து நிக்குறீக? " என்று கார்த்திக் பாலாவிடம் வினவிட, அவனோ மதுமதி அருகே இருப்பதால் கார்த்திக்கிடம் பேச தயங்கினான்.
"என்னடா வாய் ஓயாம பேசுவ. இப்ப என்னவோ இவ்ளோஓஓ அமைதியா இருக்க." கார்த்திக் ஆச்சர்யமாக கேட்டான்.
"என்னாதுஉஉ! இவன் பேசுவானா?அதுவும் வாய் ஓயாம, என்ன கார்த்திக் இது? இதெல்லாம் உலக மகா உருட்டு!" என்று வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
பாலா அவளை கண்களால் எரித்துக் கொண்டு இருக்க, "ஆமா. உனக்கெப்படி இவனை தெரியும்னு சொல்லவே இல்லையே?" கார்த்திக் மதுவிடம் கேட்கும் போது,
பவிஷ்யா தட்டில் ஸ்நாக்ஸ் உடன் வந்தவள், "எத்துக்கோங்க ஆன்தி." என்று அவளிடம் நீட்டியவளை கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட மதுமதி, "ச்சோ! ச்வீட்!" என்று கொஞ்சினாள்.
"கொஞ்சறது இருக்கட்டும் மேடம். இந்த சாரை உங்களுக்கு எப்படி தெரியும்?" கார்த்திக் மீண்டும் தன் கேள்வியை முன் வைக்க,
"என்னை ஒருத்தன் காண்டாக்குறான்னு சொன்னேன்ல கார்த்திக்? அந்த பிரகஸ்பதி இது தான்." என்று பாலாவை நோக்கி கை நீட்டினாள் அவள்.
"இதப்பாரு அது, இதுனு எதாவது சொன்னனு வையேன். அவ்ளோ தான்." பாலா அவளை மிரட்டிக் கொண்டிருக்கும் சமயம் அனைவருக்குமான பானங்களுடன் வித்யா வந்தாள்.
அவள் வந்ததால் பாலா அமைதியாகி விட," என்னடா மில்க் எதுக்கு இவ்ளோ டென்சன்? சரி விடு. நாம அதை அப்றம் பேசிக்கலாம்."
"நீ என்ன திடீர்னு வந்து நிக்கிற? எதாவது வேலையாக இங்க வந்தியா டா?" என்று கார்த்திக் வினவியதும் அவன் மீண்டும் மதுமதியை பார்த்து தயங்கினான்.
அவனது தயக்கத்தை கண்டு கொண்ட கார்த்திக்," சரி வாடா. நாம கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோமா?" அவனை வெளியே அழைத்து வந்தான்.
தனியாக வந்த பின் பாலா தனது மனதில் அழுத்தும் குற்ற உணர்ச்சியை சொல்ல, நீ சொன்ன விசயத்தால் ஒன்றும் கெடுதல் நேரவில்லை. உனது குற்ற உணர்வு தேவையற்றது என புரிய வைத்தான் கார்த்திக்.
பின்பு," சொல்லு. அவளை உன் மனசுக்கு பிடிச்சு இருக்கு. ஆனா ஏன் மதுமதியை அவாய்ட் பண்ற டா?"என்று கார்த்திக் கேட்டதில் திகைத்தான் பாலா.