Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 34
மதுமதி அவ்வாறு சொல்லி விட்டு சென்றதும் கார்த்திக் திகைப்புடன் விழித்து நிற்க, வித்யா யோசனையுடன் இருந்தாள்.
அவனது முகத்தைப் பார்க்காமல், அவனிடமே சென்று, "அவங்க ஏன் அப்படி சொல்லிட்டு போறாங்க!?" குழப்பத்துடன் கேட்க, வாயாடி வம்பனுக்கு வாயடைத்து போனது.
என்ன சொல்வது என்று அவன் முழித்திருக்க, யோசனேயோடு கேட்ட வித்யா, பதில் வராததால் அவனை திரும்பி பார்த்தாள்.
அந்த நொடி சட்டென்று உடனே இயல்பாக முகத்தை மாற்றிய கார்த்திக்," ஹி, ஹி, இதென்ன பெரிய விசயமா இருக்க போகுதுடா?" என்று இயல்பாக சொல்கிறானாம்.
"ஃபார்மலா எல்லாரும் சொல்வாங்களே அது போல என்னமோ சொல்லிட்டு போகுது. அவளுக்கு கண்ணு ஒழுங்கா தெரியல போல, லூசு."என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளித்தான்.
அவனை ஆராயும் பார்வையுடன் அவள் உற்று கவனிக்க, ஆபத்பாந்தவனாக, ஆலயமணி ஓசையாக, அடுத்த வகுப்பிற்கான மணியடிக்கவும்,'ஹப்பாடா!!..' என்று இருந்தது அவனுக்கு.
"பெல் அடிச்சுட்டாங்க பாருடா. அடுத்த க்ளாஸ் இருக்கு தானே? சீக்கிரம் போம்மா. இல்லனா அந்த வாண்டு பசங்க எதாவது செய்து வைக்கப் போறாங்க." என்று அவளது கவனத்தை திசை திருப்பினான் கார்த்திக்.
அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்ற வித்யாவின் மனதில் அவனது பதட்டம் சந்தேகத்தை விதைத்தது.
அவளை மேலும் சிந்திக்க விடாமல், "அப்றம், நாளைக்கு லீவு சொல்லிட்டியாம்மா?" என்று சென்று கொண்டிருந்த அவளிடம் கேட்டான்.
அவனது யுக்தி நன்றாகவே வேலை செய்தது. அதை சிந்தித்தவள், 'இப்போது எதற்காக விடுமுறை எடுக்க சொல்கிறான்? ' என சிந்திக்க தொடங்கி விட்டாள்.
வகுப்பிற்கு நேரமானதால் வீட்டிற்கு சென்ற பின் கேட்டுக் கொள்வோம் என்று நினைத்தவளின் சிந்தையில், முதல் யோசனை பின்னுக்கு தள்ளப்பட்டது.
இரவு அவனிடம் அதைப்பற்றி கேட்கலாம் என்று எண்ணிய வித்யா, இரவு உணவு முடித்த பிறகு, குழந்தையை உறங்க வைத்து விட்டு வந்து அவனை பார்க்க, ஆழ்ந்து உறங்குவது போல் நடித்து மழுப்பி விட்டான்.
மறுநாள் கிளம்பும் போதும் எங்கே என்று கேட்ட வித்யாவிடம், "தப்பு. தப்பு. வெளியே கிளம்பும் போது எங்க போறோம்னு கேட்க கூடாது. உன் பாட்டி உனக்கு சொல்லி தரலையாடா?" என்று தீவிரமாக கேட்டவன்,
"சரி பரவால்ல விடு செல்லம். இனிமே நான் ஒன்னு ஒன்னா சொல்லி தர்றேன். சரியா." என்று கூறி ஒற்றை கண்ணடித்தான் கள்ளன்.
அவனது பேச்சிற்கு, அவனை முறைத்துக் கொண்டே வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் உதட்டில் பூத்த புன்முறுவலை மறைக்க, அதனால் கேட்க வேண்டிய விசயம் மறந்து போனது.
'இந்த கல்லுளிமங்கன்கிட்ட கேட்கறதுக்கு பதிலா கேட்காமலே இருந்துடலாம். அவனா நினைச்சா தான் சொல்லுவான். சரியான ஃப்ராடு!' என்று செல்லமாக மனதில் அவனை திட்டிக் கொண்டே கிளம்பி அவனுடன் சென்றாள்.
அவன் வண்டியை நிறுத்தியதும் திரும்பிப் பார்த்தாள் அவள். அது ஒரு சார் பதிவாளர் அலுவலகம். இங்கு எதற்கு என்ற யோசனையுடன் அவள் உள்ளே நுழைய,
அங்கே, தாரிணி மற்றும் ஈஸ்வரி குடும்பத்தாரும் நிற்கவும்,' இவர்கள் எதற்காக? தாரிணி க்கா இன்னும் ஊருக்கு கிளம்பவில்லையா!!?' என்று குழம்பினாள்.
அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவன், முதலில் அவர்களது திருமணத்தை பதிவு செய்வதற்கான அனைத்தையும் முடித்தான்.
திருமண பதிவு முடிந்ததும் கோமதி, "நாங்க கிளம்புறோம்டா. கல்யாணம் முடிஞ்சு எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு." என்று அவளிடம் விடைபெற கூறினார்.
ஈஸ்வரியும் ரூபேஷும் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு கிளம்பிட, அதை சிறு புன்னகையுடன் ஏற்ற வித்யா, அவ்வளவு தான் முடிந்தது என்று நினைத்திருக்க, அவள் அருகில் வந்தவன்,
"பாப்பாவை சட்டப்படி நம்ம குழந்தையா மாத்தனும்டா. அதுக்கு தான் அண்ணாவும் அண்ணியும் வந்து இருக்காங்க." என்று விளக்கினான் கார்த்திக்.
ஆம்! வித்யா மணமாகாதவள் என்பதால் குழந்தைக்கு தாயாக பதிய முடியாமல், தாரிணியும், ஹரியும் தான் பெற்றோராக பதிந்து இருந்தது.
இப்போது இவர்களது திருமண பதிவை வைத்து குழந்தையை சட்டப்பூர்வமாக தங்கள் மகளாக மாற்றிக் கொள்ளவே இந்த ஏற்பாடு.
தாரிணியும் புன்னகையுடன் இதற்கு சம்மதிக்க, "குழந்தைக்கு பர்த் சர்டிஃபிகேட் எதுவும் இருக்கா?" என்று கேட்ட பதிவாளரிடம், "இல்லை." என வித்யா சொல்ல, அதே நொடியில், "இருக்கு." என்று கார்த்திக் கூறினான்.
அதிர்வுடன் அவனை திரும்பிப் பார்த்த வித்யா, தாரிணியையும் பார்க்க, அவளும் அமைதியாக நிற்பதை கண்டு, 'இங்க என்ன தான்டா நடக்குது!!!?' என மொத்தமாக குழம்பி நின்றாள் அவள்.
"என்னமா நீங்க இல்லங்கறீங்க? அவர் இருக்குங்கறார். என்ன அதுக்குள்ள ரெண்டு பேருக்கும் பிரச்சனையா? இல்ல, என்ன விசயம்?!" என்று அவர் சற்று கடினமாக வினவினார்.
"ஸாரி ஸார்! எடுத்துட்டு வரலைங்கறத தான் அவங்க அப்படி சொன்னாங்க. நான் எடுத்து வைச்சது அவங்களுக்கு தெரியாது." என்று கதையடித்தான் நம் சமாளிப்பு திலகம்.
"ஓஹோ! என்னவோ போங்க. சரி சரி, சர்டிஃபிகேட் இருந்தா கொடுங்க!." என்று கேட்டவர் அதை பெற்றுக் கொள்ள கைய நீட்டிக் கொண்டே, "குழந்தை பேரு என்ன?" என்று வினவினார்.
வித்யா அதற்குள் சற்று தெளிந்தவள் 'இப்போது காரியம் தான் முக்கியம் இவனை பிறகு கவனித்துக் கொள்வோம்!' என்றெண்ணி அவனோடு இசைந்து நடக்க முடிவு செய்து, இயல்பாக இருந்தாள்.
அவர் குழந்தையின் பெயரை கேட்டதும் வேகமாக, "பவிஷ்யா." என்று அவள் உரைக்க, அதே நொடி, "தாரா." என்று அவன் பதிலளித்தான்.
மீண்டும் ஒரு முறை அதிர்ச்சி அடைந்த வித்யா இம்முறையும் தாரிணி மற்றும் ஹரியை திரும்பி பார்க்க,
இருவரும் எந்த அதிர்ச்சியும் இன்றி இயல்பாக இருப்பதிலேயே அவர்களுக்கு ஏதோ விசயம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை யூகித்தாள்.
'தன்னிடம் மட்டும் இந்த ஆள்விழுங்கி எதுவும் சொல்லவில்லை! ' என்று அவன் மீது ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
ஆனால் அதை வெளிபடுத்தும் இடமோ, அல்லது நேரமோ இதுவல்லவே. புயலுக்கு முன் அமைதி போல தன்னை கட்டுப்படுத்த முயன்றாள்.
அதற்குள் அந்த பதிவாளர், "மறுபடியும் குழப்பமா?என்ன இது பேரை கூட உருப்படியா சொல்ல மாட்டீன்றீங்க. இங்க தாரானு தானே சர்டிஃபிகேட்ல இருக்கு." என்று மீண்டும் அவளையே அவர் சாட,
வெடிக்க தயாரான எரிமலையை அடைத்து இருக்கும் கல்லை அசைக்கிறார் என தெரியாமல் அவர் அவளையே மீண்டும் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.
"இல்ல சார்! பாப்பாவை வீட்ல கூப்பிடுற பேர் அது. யார் கேட்டாலும் அப்படியே சொல்லி பழகிடுச்சு. அதான் அவங்க அதையே சொல்லிட்டாங்க." என்று மீண்டும் ஒரு சமாளிப் பூ வை அவர் காதில் சுற்றினான்.
"என்னமா இது!.. எவ்ளோ முக்கியமான விசயம், இதுல முன்னுக்கு பின் முரணா சொன்னா எப்படி பதியறது!?" அவள் மீது அவர் குற்றம் சுமத்த, அவள் ஆன மட்டும் கார்த்திக்கை கண்களால் எரித்தாள்.
அவரும் சிறு அதிருப்தியுடன், "இப்படி எல்லாம் பதில் சொன்னா எப்படி குழந்தைக்கு உங்கள பெற்றோரா மாத்த முடியும். இப்பவே இப்படி ரெண்டு பேரும் ஒத்து போகாம இருக்கீங்க." தன் அதிருப்தியை வெளிப்படையாக கூறினார்.
"ஸாரி ஸார்! அவங்க டென்ஸன்ல இருக்காங்க. அதான் இப்படி, மற்றப்படி ஒன்னும் இல்ல. அண்ணி சொல்லுங்க." என்று தாரிணியை துணைக்கு இழுத்தான்.
அவளும், கார்த்திக்கோடு ஒத்து பேசி," ஆமா ஸார். அவ காலையில் இருந்தே ஒரு மாதிரி டென்ஸ்டுஆ இருந்தா. அதான், வேற பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்ல ஸார்." என்று கூறிய தாரிணி, வித்யாவின் தோளில் லேசாக இடித்தாள்.
வித்யாவும் அந்த சூழலை புரிந்து கொண்டு, "ஸாரி ஸார்." என்றாள் சுற்றி நின்ற அவர்களை முறைத்துக் கொண்டே,
கார்த்திக் மீதான அவளது கொலைவெறி பார்வையை கண்ட தாரிணி, "கொழுந்தனாரே! அவ முழிக்கிற முழியை பார்த்தாக்கா உன்னை நார் நாரா கிழிச்சு தொங்க விட போறா போல." என்று இழுத்து விட்டு,
"அடை மழை ஆரம்பிச்சு வெளுத்து வாங்க போகுதுடா கார்த்திகைபாலா, உடம்பை இரும்பாக்கிக்கோ." என்று அவன் காதில் மரண ஓலை வாசித்தாள்.
அவளை பீதியுடன் திரும்பிப் பார்த்த கார்த்திக், "நான் அடி வாங்குறதுல உங்களுக்கு என்ன அண்ணி அவ்ளோஓஓ சந்தோஷம்." அழுகுரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசினான்.
"சரி விடு. கல்யாண வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா. உங்கண்ணன் வாங்காத அடியா!?" என்று தாரிணி அவனிடம் பேசிக் கொண்டு இருக்க, அவளது பேச்சில் அவன் சிரித்து விட்டான்.
அதற்கும் அவளது முறைப்பை பரிசாக பெறும் வேளையில், "இப்ப குழந்தை பேர் என்னனு போட பவிஷ்யாவா?தாராவா?" என்று சற்று எரிச்சலுடன் அவர் கேட்க,
"பவிஷ்யதாரா போட்டுக்கோங்க ஸார். நாங்க கெஸெட் ல மாத்திட்டு சர்டிஃபிகேட் சம்மிட் பண்றோம் ஸார்." என்று அவரை வெகுநேரம் தாஜா செய்து அனைத்தும் முடிந்து வர மாலை ஆகி விட்டது.
வீட்டிற்கு திரும்பிய பின் வித்யா கோபமாக தனது அறைக்கு சென்று கதவடைத்து விட, பவிக்குட்டியும் சரணும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கார்த்திக் தாரிணியை திரும்பிப் பார்க்க, பெருமூச்செறிந்த தாரிணி அவளது அறைக்குள் நுழைய, வித்யா பொங்கி வழிய காத்திருந்தாள்.
"அப்ப பாப்பாவுக்கும் கார்த்திக்கிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்குனு உங்களுக்கு முதல்லேயே தெரியும். அப்படிதானேக்கா?" என தொடங்கினாள்.
"நீ சொல்ற முதல்ல எதுனு எனக்கு தெரியல. ஆனா உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடி கார்த்திக் கிட்ட பேசுனப்ப தான் எனக்கு தெரியும்." தாரிணியும் நிதானமாக பதிலளித்தாள்.
"அப்படி என்ன தான் சம்மந்தம்!? அதையாவது சொல்லித் தொலையுங்களேன். எப்போ பாரு ஏன் இப்படி திடீர் திடீர்னு எதையாவது பண்ணி மனுசனை வதைக்கிறீங்க?"
என்று வித்யா வெடித்துச் சிதறி கத்த, விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் மிரண்டு கார்த்திக்கிடம் ஓடின.
அவனை இறுகப் பிடித்த பவிக்குட்டி, "காத்திப்பா! அம்மாக்கு என்னாச்சு? ஏ கோபப்பதுதாங்க?" என்று மிரண்டு வினவினாள்.
அவர்களை கட்டிக் கொண்ட கார்த்திக்,"ஒன்னுமில்லடா பசங்களா! அம்மா ஒரு சாக்கி கேட்டாங்க. காத்திப்பா வாங்கி தரலனுட்டு தாரிணிம்மா கிட்ட கோபமாக பேசுறாங்க." என
பிள்ளைகளுக்கு சமாதானம் கூறியவன், ஹரியிடம் கண்ணை காட்டி பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்ல சொன்னான்.
வித்யாவின் ஆற்றாமையின் வெளிப்பாட்டில் செய்வதறியாது நின்ற தாரிணி," கோபப்படாதடா ரூபி குட்டி. நான்," என்று ஆரம்பிக்கும் போது கதவு தட்டப்படும் ஓசை கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
"உள்ள வரலாமா?" என்று அனுமதி வேண்டி நின்ற கார்த்திக்கை கண்டு, 'நீ ஏன்டா இப்ப வந்த?' எனும் ரீதியில் தாரிணி அவனை பார்த்திருக்க, வித்யாவின் கோபம் கரை புரண்டது.