• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல்-33

"ஒரு தப்பும் பண்ணாத நான் எத்தனை பாடுபட்டேன். ஆனா அவனுங்கள எதுவுமே செய்ய முடியலையே ங்கற கோபம் எனக்குள்ள ஒரு ஓரமா எப்பவும் இருக்கும்." என்று


வித்யா வருத்தத்துடன் கூறியதும்
தாங்கிடுமா? அவள் நாயகன் மனம் உடனே, "அவனுங்க அப்படி உன் கைல கிடைச்சா என்ன செய்யனும்னு நினைக்கிறடா?" என்றான் நிதானமாக.

அவன் கேட்டது தான் தாமதம், அவளது மனதின் கோபத்தீ அனலென அவள் கண்களில் வெளிப்பட, இதுவரை அவளிடம் காணாத ஒரு பாவனையை கார்த்திக் கண்டான்.

அதே கோபத்தோடு, "அந்த கேவலமான செயலை தானே ஆண்மைனு நினைச்சு, சின்ன பொண்ணு கூட பார்க்காம அப்படி செய்தானுங்க. அதையே இல்லாம ஆக்கனும்."

"உணர்ச்சிகளை அடக்க முடியாத அந்த நாய்களை அந்த உணர்வுகளே வராத மாதிரி பண்ணனும். வலினா என்னவென்று அந்த ***களுக்கு வலிக்க வலிக்க காட்டனும்."என்று அவள் பாட்டிற்கு பொங்கி பேசிக் கொண்டிருக்க,

இடையில் திடுமென, "ப்ம்ச்! ச்சே!" என்று கார்த்திக் சத்தமிட, "என்னாச்சு?" என வித்யா புரியாமல் வினவினாள்.

"இல்ல, கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்." என்ற கார்த்திக்கின் வார்த்தைகளில்,

"என்ன சொல்றீங்க? ஒன்னுமே புரியல." என்றவள் அவனையே பார்த்து இருந்தாள்.

அதற்கு கார்த்திக் நிதானமாக, "இல்லடா. அவசரப்பட்டு அவனுகளுக்கு தண்டனை கிடைச்சுடுச்சே." என்றிட,

அவனது வார்த்தைகளை மெதுவாக உள்வாங்கிய வித்யா, ஆச்சர்ய அதிர்ச்சியில் விழி விரிய அவனை பார்த்துக் கொண்டே, "அப்படினா!!?" என்று வினவிட,

அவளது விழி வீச்சில் வீழ்ந்தவன், அவ்விழிகளில் மெதுவாக இதழொற்றி, ஆம் என்று தலையசைத்து மர்மச் சிரிப்புடன் ஆமோதித்தான்.

அன்று..

அவளை அப்படி ஒரு நிலையில் வேதனையோடு கண்டவன் நெஞ்சில், அதற்கு காரணமான அந்த நாய்களை எதாவது செய்ய வேண்டும் என்ற கோபம் கொதித்தது.

வித்யாவை கிளினிக்கில் இருந்து அழைத்துச் சென்ற பின், பாலாவிடம் அவளை பார்த்த இடத்தைப் பற்றி தெரிந்து கொண்ட கார்த்திக்,

அவளுக்கு நேர்ந்த அவலத்தையே மூடி மறைக்க நினைக்கும் அவளது பெற்றோர், எப்படியும் அந்த மனித உரு மிருகங்களை கண்டறிய எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவது இல்லை என்பதை உணர்ந்து,

அந்த இடத்திற்கு சென்று அவர்களை பற்றி எதாவது தடயம் கிடைக்கிறதா என ஆராய்ந்தான்.

எதுவும் அகப்படாத நிலையில் அந்த சாலையிலேயே முன்னோக்கியும், பின்னோக்கியும் என மீண்டும் மீண்டும் கார்த்திக் தேடிச் சென்று பார்க்க,

அந்த பகுதி அதிக நடமாட்டம் இல்லாத இடம் என்பதால், அவளுக்கு நேர்ந்த சம்பவ இடத்திற்கு சற்று முன்பிருந்த, ஒரே ஒரு கடையில் மட்டும் சிசிடிவி பொருத்தப்பட்டு இருப்பதை கண்டான்.

இன்னும் ஒரு சில நாட்களே அவனது விடுமுறை இருக்க, காரியத்தை விரைவில் முடிக்க எண்ணி, அந்த கடைக்கு சென்று, அவரிடம், "அண்ணா! நான் இந்த ஏரியாவுல தான் இருக்கேன். என்னோட பைக்கை எவனோ திருடிட்டு போயிட்டான்."

"போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கு. ஆனாலும் நாமளும் எதாவது முயற்சி செய்வோமே னுட்டு இந்த வழியா சிசிடிவி எதாவது இருக்கானு பார்த்தா, நம்ம கடையில தான் இருக்கு." என்று அவன் கூறி,

"அவன் கண்டிப்பா இந்த வழியா தான் போய் இருக்கனும். இங்கிருந்து வெளியே போக வேற வழி இல்ல. அதனால அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் மட்டும் கொஞ்சம் பார்த்துக்கவா அண்ணா? ப்ளீஸ்!" கண்களில் கெஞ்சலுடன் நம்பும்படியான காரணத்தை சொல்ல,

அந்த கடைக்காரரும் அவனது பேச்சில் நம்பி, அவனுக்கு அதை ஓட்டிக் காட்டினார். அதில் அவர்களைப் பற்றி எதுவும் தெரிகிறதா என ஆராய,

அதில் வித்யா முன்னே செல்ல, பின்னாடியே இருவர் விரைந்து வருவது பதிவாகி இருந்தது.. அதிலிருந்து அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டவன்,

அவர்களை காட்டி அந்த பகுதியில் சிலரிடம் கேட்க, அங்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் வேலைக்காக வெளியூரில் இருந்து வந்து தங்கி பணி புரிபவர்கள் என அறிந்து கொண்டான்.

அவர்களின் இருப்பிடத்தை அறிந்தவன், அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டு விட்டு,

அடுத்து வந்த இரு தினங்களில் அவர்களது வாடிக்கையான செயல்களையும், இன்னும் எத்தனை நாட்கள் அங்கு பணி நடக்கும் என்பதையும் தெரிந்து கொண்டான்.

அனைத்தையும் திட்டமிட்டு விட்டு, அவனது விடுமுறை முடியவே, தனது கல்லூரிக்கும் திரும்பி விட்டான். இதனிடையே பாலாவிடம் அவளை பற்றி அறியவும் மறக்கவில்லை.

அடுத்து சேர்த்தாப்போல அவனுக்கு கிடைத்த வாரயிறுதி விடுமுறைக்கு அங்கு வந்தவன்,

அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு மேலுள்ள மரத்தின் கிளையை வெட்டி அதன்மேல் விழும்படி செய்து அவர்கள் அந்த இடர்பாட்டில் சிக்கி துடிதுடிக்க உயிரிழந்ததை கண்டு திருப்தியுடன் சென்று விட்டான்.

அப்பகுதி வளர்ந்து வரும் பகுதி என்பதால் வீடுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அருகருகே இல்லாததால் அவர்களின் ஓலம் காற்றில் கலந்து காற்றானது.

மறுநாள் அங்கு பணிக்கு வந்த அதே ஊர் ஆட்கள் நடந்த விபத்தை கண்டு, நடந்ததை யூகித்தனர். அதில் அவர்களது மரணம் இயற்கை மரணம் போலானது.

கார்த்திக் தான் செய்தவற்றை கூறிக் கொண்டு இருக்க, ஏதோ விறுவிறுப்பான திரைப்படம் பார்ப்பது போல் அவனையே இமைக்காமல் பார்த்து அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள் வித்யா.

"உன் மனசுல அவங்க மேல இவ்ளோ வெறி இருக்கும்னு தெரியாதே. தெரிஞ்சு இருந்தா அவனுகளுக்கு இன்னும் வலிக்க வலிக்க எதாவது செய்திருக்கலாம்." என்று விட்டு,

"ப்ம்ச்! மிஸ் பண்ணிட்டேன்." சற்று கவலையுடன் அவன் உரைக்க, விழி விரிய அவனை நோக்கியவள், எம்பி அவனது கன்னத்தில் தன் முதல் அச்சாரத்தை தந்தாள்.

எந்த பெண்ணிற்குமே தனக்காக எதிர்த்து நிற்கும் ஆண்மகன் நாயகனாக தெரிவானே, வித்யா மட்டும் விதிவிலக்கா என்ன!.
சட்டென்ற அவளது செயலில், கார்த்திக் ஆனந்த அதிர்ச்சியாகி கண்கள் மின்ன அவளை நோக்கினான்.

வித்யாவுமே மனதின் மகிழ்ச்சி வேகத்தில் அதனை செய்திட, தன் செயலை உணர்ந்து நாணி அவனை விட்டு விலகினாள். 'வட போச்சே!!' என்ற ரீதியில் முழித்து நின்றான் பையன்.

"ம்க்கும்! ஓகே. அப்ப மேடம்க்கு என்மேல கோபம் இல்லையே? " என்று ஏதோ பேச வேண்டும் என்பதற்காக கேட்டு வைத்தான் கார்த்திக்.

"கோபம் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல." புன்சிரிப்புடன் அவளது பதிலில், " எதுக்கு கோபம்? எப்படி போச்சு? " என்றான் யோசனையோடு.

"ம்ம்ம், இத்தனை நாளா எதையுமே சொல்லாம எப்படி எல்லாம் பேச்சை மாத்துனீங்க. அதுக்கு தான் கோபம்." சில நொடிகள் இடைவெளி விட்டு,

"ஆனா எனக்காக நீங்க செய்த எல்லாம் சேர்ந்து அதை ரப்பர் வைச்சு அழிச்சிடுச்சு." என குறும்பு சிரிப்புடன் வித்யா கூறினாள்.

"அதுசரி! இப்படியே பேசிட்டே இருந்தா நாளைக்கு எப்படி ஸ்கூலுக்கு போறதாம்?" நமட்டுச் சிரிப்புடன் கார்த்திக் சொல்லவும்,

"ஸ்ஸ்ஸ்! ஆமால, சரி லேட் ஆகிட்டு இருக்கு. பாப்பா ரொம்ப நேரமா தனியா இருக்கா. நான் தூங்கப் போறேன். நீங்களும் தூங்குங்க."என்று விட்டு அவள் வேக வேகமாக நகர முனைந்தாள்.

அவளது கையைப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவன், "இன்னமும் என்மேல நம்பிக்கை வரலையா விதுமா." அவளது கண்களை நேருக்கு நேர் சந்தித்து கேட்ட பின்,

"பாப்பா மட்டும் தான் தனியா இருக்காளா? நானும் ரொம்ப வருசமா தனியா தான் இருக்கேன்." என்று மனதின் வலி கண்களில் ஏக்கமாக வழிய கேட்டான் கார்த்திக்.

அவனை கண்டு மனம் உருகினாலும் அவனது வார்த்தைகளை கவனித்த வித்யா, "ஆமா, நானே ஒவ்வொரு முறையும் கேட்கனும்னு நினைச்சேன்." அவள் கூறியதும், என்னவென்று அவன் பார்த்தான்.

"உங்க அம்மா எங்க இருக்காங்க? அவங்களுக்கு என்னாச்சு?" என குழப்பமாக கேள்வி-பதில் செஷனை அவள் மீண்டும் துவங்கினாள்.

"அம்மா! தாயே! போதும்மா. போதும். நீ வேணும்னா தூக்கம் வராம கதை கேட்கற மோட் ல இருக்கலாம். ஆனா எனக்கு தூக்கம் கண்ணை கட்டுது."

"நீ போய் உன்னோட சொர்க்கவாசல் அடைச்சுட்டு தூங்கு போ!போடா செல்லம்! நான் தூங்கப் போறேன். குட்நைட்." என்று படபடவென பேசிட்டு அவன் படுத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

அவனது செயலில் முதலில் திகைத்த வித்யா, 'அவன் பேச்சை மாற்றுகினான்!' என்பதை கூட புரிந்து கொள்ளாமல், உதட்டைச் சுழித்து விட்டு தங்கள் அறைக்கு சென்றாள் அந்த லூசு.

மறுநாள் விடியலில் எழுவதற்கு சோம்பலாக இருந்தாலும் நேற்றைய நிகழ்வினால் மனதில் உண்டான இதம் அதை ஓரங்கட்டியது.

நேரமாகி உறங்கினாலும் காலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனை அன்று தான் அவள் கண்டாள்.

அதுவரை அப்படி ஒருவன் வீட்டில் தான் இருக்கிறான் என்பதை சட்டை செய்யாமல் இருந்தவள். இன்று உடம்பில் பூத்த வியர்வையுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனை தயக்கத்துடன் கண்டவள்,

"கரடி! கரடி! காலையில்
எப்பவும் இப்படித்தான் பண்றானா? நாம தான் கண்டுக்கல போல." என தனக்குள் பேசிக் கொண்டே சமையலறை புகுந்தாள்.

என்றுமில்லாத ஒரு இணக்கத்துடன் மூவரும் தயாராகி பள்ளி செல்ல, அன்று ஏனோ அவளுக்கு வண்டியில் அவனருகில் அமர்ந்து இருப்பது
ஒரு கூச்சத்தை தர, சற்று தள்ளி அமர்ந்தாள்.

"எப்படி மேடம் உருண்டே ஸ்கூலுக்கு வர்ற ஐடியாவா?" என்று அவன் கேட்டதும், அவள் விழிக்க, "இல்ல, இதுக்கு மேல தள்ளி உட்கார்ந்தா கீழே விழுந்துவார தான் வேணும்."

"அதான் அப்படியே விழுந்து உருண்டுக்கிட்டே ஸ்கூலுக்கு வர்ற ஐடியால இருக்கியோ?னு கேட்டேன்." விளக்கமாக நக்கலுடன் கேட்டான் கார்த்திக்.

"ம்ஹம்." என்று உதட்டைச் சுழித்துவிட்டு எப்போதும் போல அமர, அவனது இதழ்களில் குறுநகை மலர்ந்தது.

பிள்ளையை அவளது பள்ளியில் இறக்கிவிட்டு, இருவரும் தங்களது பள்ளிக்கு வந்து இறங்கிய போது, "நாளைக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்குடா. லீவு சொல்லிடு." என்று கூறியவன் வண்டியை நிறுத்த சென்று விட்டான்.

என்னவென்று தெரியவில்லை என்றாலும், 'இவ்ளோ நேரம் கூட தானே இருந்தான் அப்போ எல்லாம் சொல்லவே இல்லையே?!' என்று அவள் மனதில் ஓடியது.

'சரி. இவன் தான் எப்ப என்ன செய்வான்னு தெரியாதே. நாளைக்கே பார்த்துக்கலாம்' என்றெண்ணி தோள்களை குலுக்கி விட்டு சென்றாள் வித்யா.

மதிய உணவு இடைவேளையின் போது, வித்யாவை கண்ட மதுமதி, "ஹேய்! என்ன ரூபிணி முகத்துல பிரகாசமா பல்பு எரியுது. உங்க ப்ரெண்ட்க்கு தானே நேத்து மேரேஜ். ஆனா, " என்று

கிண்டலுடன் கண்ணடித்து அவள் கேட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே சென்ற கார்த்திக்கை எதேச்சையாக வித்யா திரும்பிப் பார்க்க,

"ஓஓஓ! இதானா! அங்க இருந்து கரண்ட் வந்து தான் இங்க லைட் எரியுதா? நடத்துங்க. நடத்துங்க." என்று புன்னகையுடன் கேலி செய்தோடு நில்லாமல்,

அவனையும் அழைத்து சிறிது கிண்டல் செய்த பின்னர், "ஹே! சொல்ல மறந்துட்டேன் கார்த்திக். நேத்து அமுதா மேரேஜ் ல தான் உங்க பாப்பாவை பார்த்தேன்.

"குட்டி செம்ம க்யூட்! பாப்பா அப்படியே அம்மா மாதிரியே இருக்காள் ல, ஸோ ஸ்வீட்!"என்று விட்டு சென்றாள். அவளது பேச்சில் கார்த்திக் திகைப்புடன் திருதிருவென விழித்து நிற்க, வித்யா யோசனையில் ஆழ்ந்தாள்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top