• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 31

பாலாவிடம் வித்யா கேட்டதும் சில நொடிகள் என்ன சொல்ல என தயங்கிய பாலா, "அதான் ஞாபகம் வரலை தானே. அப்றம் ஏன்ங்க அதை போட்டு இழுத்துட்டு இருக்கீங்க?" என்று பேச்சை மாற்ற முயல.

"அப்படி இல்லைங்க. அது ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கும். எரிச்சலா இருக்கும். அதான் உங்க கிட்ட கேட்டுடலாம்னு வந்தேன்." பதிலளித்தாள் அவள்.

ஒரு பெருமூச்செறிந்த பாலா," 5,6 வருசத்துக்கு முன்னாடி ஒரு நைட் நீங்க உடம்பு சரியில்லாம இருந்தப்ப நான் தான் ஹெல்ப் பண்ணினேன்." என்றான் தெளிவில்லாமல்.

முதலில் குழம்பிய வித்யாவிற்கு, அவனது பதில் முடியும் போது, அந்த நாள் நினைவில் வந்து, இவன் முகம் பதிந்த நொடிகளும் நினைவிலாடி நிலைகுலைய செய்தது.

பாலா அதை உரைத்தபின் அவளது எதிர்வினை கண்டு வேகமாக, "கார்த்திக் அண்ணா உங்க கிட்ட எதுவும் சொல்லலையா?" என்று குழப்பமாக அவன் கேட்க,

'கார்த்திக் இதில் எங்கு வந்தான்?!' என்ற பெரும்குழப்பம் அவளுள் வர, "கார்த்திக்கிற்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?" என்று அறிந்து கொள்ளும் உந்துதலில் அவள் கேட்டாள்.

வித்யா அவ்வாறு கேட்டபின் தான், 'அவளுக்கு எதுவும் தெரியாது போலவே!!!' என்றுணர்ந்த பாலா, தான் ஏதோ உளறி விட்டதை எண்ணி யோசிக்கும் வேளையில்,

"இங்க என்னமா பண்ணிட்டு இருக்க? பாப்பா உன்னை தான் காணோம்னு கேட்டுட்டு இருக்கா."என்று

சொல்லிக் கொண்டே அங்கே வந்த கார்த்திக், பாலா அங்கு நிற்பதைக் கண்டு சில நொடிகள் திடுக்கிட்டு, "சரி வா, போகலாம்." என்று அவளை அழைத்தான்.

பாலாவின் கேள்வியில் சிந்தனை வலையில் சிக்குண்ட வித்யா, கார்த்திக்கின் அழைப்பிற்கு அவன் பின்னோடே சென்றாள்.

அவளிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சில நிமிடங்கள் உடன் இருந்தவன், பின்னர் வெளியே வேகமாக வந்து பாலாவை தேடினான்.

பாலாவும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஒரு தனியான இடத்தில் நிற்பதை கண்டு அங்கு விரைந்த கார்த்திக்,

"அவ கிட்ட எதை எல்லாம் சொல்லி தொலைச்ச டா?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவினான்.

"எதுவும் சொல்லலண்ணா. அந்த இன்சிடன்ட் அப்ப ஹெல்ப் பண்ணுனது நான் தான் னு மட்டும் சொன்னேன்." என்றுவிட்டு தயங்கிய பாலாவை கண்டு,

"இல்லையே! வேற என்னவோ உளறி வைச்சு இருக்க போல? உன் முட்ட கண்ணு காட்டிக் கொடுக்குதே." என்றான் கார்த்திக்.

"அது வந்து, " என்று இழுத்து விட்டு, தயங்கிக் கொண்டே,"நீங்க அவங்க கிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்கனு நினைச்சு, " இடைவெளி விட்டவனை, ஆழமாக கார்த்திக் பார்க்க,

"கார்த்திக் அண்ணா எதுவும் உங்ககிட்ட சொல்லலையானு கேட்டுட்டேன். " தலைகுனிந்து கொண்டே கூறினான் பாலா.

"எரும! எரும! அவ வந்து கேட்டா உனக்கும் எதுவும் ஞாபகம் இல்லைனு சொல்லிட்டு போக வேண்டியது தானே. "என்று அவனை வறுத்தெடுத்து விட்டு,

தலையிலடித்துக் கொண்டே திரும்பிய கார்த்திக், அங்கே தீர்க்கமான பார்வையோடு வித்யா நிற்பதை கண்டு திகைத்தான்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட கார்த்திக்,"குட்டிமா எங்க? உங்கூட தானே இருந்தாள்?" என அவளிடம் குழந்தையை பற்றி கேட்டு சமாளிக்க பார்த்தான்.

"அவளை தாரிணிக்கா கிட்டே விட்டுட்டு வந்து இருக்கேன்." என்று செய்தி போல் கூறியவள் சில நொடிகள் இடைவெளிக்குப் பிறகு,

"ஸோ, அப்ப என்னை பற்றின விசயம் உங்களுக்கு ஏற்கனேவே தெரிஞ்சு இருக்கு."என்று கார்த்திக்கிடம் அழுத்தமான பார்வையோடு கைகளை கட்டிக் கொண்டு கேட்டாள் வித்யா.

"அது வந்து, அப்படி இல்லைடா " என்று அவன் ஏதோ சொல்ல விழையும் போது, அவனை கை காட்டி நிறுத்துமாறு செய்கை செய்தவள்,

பாலாவை பார்த்து,"நீங்களாவது உண்மையாகவே முழுசா என்ன நடந்ததுனு சொல்றீங்களா? " என்று கேட்டுக் கொண்டிருக்க, அவன் கார்த்திக்கை பார்த்தான்.

கார்த்திக் 'சொல்லாதே!' என்பது போல் கண்களால் சமிக்ஞை செய்து, தலையாட்டிக் கொண்டிருந்ததை சடாரென திரும்பிப் பார்த்த வித்யா அவனை கண்களால் எரித்தாள்.

"நான் அவர் கிட்ட தானே கேட்டேன். நீங்க தான் எதுவும் முழுசா உண்மையை சொல்லாம மழுப்பிட்டு இருக்கீங்க. அட்லீஸ்ட் அவரையாவது சொல்ல விடுங்க." என்று அவனை மிரட்டியதும் கார்த்திக் முகத்தை திருப்பிக் கொண்டான்.

ஒரு சங்கடமான முக பாவனையுடன் பாலா, "பெருசா ஒன்னும் இல்லைங்க. கார்த்திக் அண்ணா உங்கள அங்க தான் பார்த்தாங்க."என்று இயல்பாக கூறி முடிக்க முயற்சி செய்தான்.

"இல்ல. அதுக்காக எதுக்கு இவர் இவ்ளோ டென்ஸன் ஆகனும்? என்னமோ விசயம் இருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து எதையோ எங்கிட்ட மறைக்கிறீங்க." என்று லேசாக கண்களில் குளம் கட்ட, சிறு பிள்ளை போல் அவள் கேட்டதும்,

அதில் மனம் தாங்காத கார்த்திக், "நானே முழுசா சொல்றேன்டா. இப்ப விசேஷம் நடக்கற இடம்ல, நைட் நம்ம வீட்டுக்கு போய் சொல்றேனே." என்றான் கெஞ்சலோடு.

"இல்ல.. நீங்க சொல்ல மாட்டீங்க. எதாவது பேசி டைவர்ட் பண்ணி பேச்சையே மாத்திடுவீங்க. அதை தானே இத்தனை நாளும் செய்றீங்க." என்று கார்த்திக்கிடம் கத்திவிட்டு,

"நீங்க சொல்லுங்க சார். என்ன தான் நடந்துச்சு? இவருக்கு என்னை எப்படி தெரியும்? வேற என்னென்ன எல்லாம் மறைச்சு இருக்கீங்க?"என்று

பாலாவை பார்த்து உண்மை அறியும் தவிப்புடன் கேட்க, பாலாவும் அவளது தவிப்பை உணர்ந்து அன்றைய தினம் நடந்ததை விவரித்தான்.

அன்று!...

இருள் சூழ்ந்த அவ்வேளையில் பெரியவர் ஒருவர் கை காட்டி நிறுத்துமாறு செய்கை செய்ததும்,

ஏதோ லிஃப்ட் கேட்பதற்காக கை காட்டுகிறார் என்றெண்ணி,
வண்டியை நிறுத்திய பாலா, அவர் அழைத்துச் சென்று வித்யாவை காட்டியதும் அதிர்ந்தவன், சில நொடிகள் செயலற்று நின்றான்.

பின்பு அவரது அழுகையில் சுயம் திரும்பியவன், அவர் மருத்துவமனை கூட்டிச் செல்ல வேண்டுமென கூறியதும்,

அங்கு சென்றால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றிக் கூறி தீபிகாவின் கிளினிக்கில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றான்.

அங்கே அவளுக்கான முதலுதவி செய்த தீபிகா, வித்யாவின் தந்தை சீனிவாசனிடம் வந்து இப்போதைக்கு முதலுதவி மட்டும் செய்து இருப்பதாகவும்,

மேலும் "நீங்க போலீஸ் ல இன்ஃபர்ம் பண்ணினா தான் அவங்க ஜி.ஹெச் கூட்டிட்டு போய் வேற டாக்டர் யூட்ரஸ் க்ளீன் பண்ணுவாங்க."

"அப்றம் கேஸ் ஃபைல் பண்ணி அந்த கல்ப்ரிட்ஸை பிடிக்க முடியும்." என்று எடுத்துரைக்கும் போது,

அப்போது தான், தன் சகோதரியை அழைத்துச் செல்வதற்காக உள்ளே நுழைந்த கார்த்திக் அதை கேட்டான். ஆம். கார்த்திக்கின் சகோதரி தான் தீபிகா.

உள்ளே வந்தவன் கண்களில் முதலில் கண்டது பிய்த்தெறியப்பட்ட பூமாலையாய் கட்டிலில் கிடந்த வித்யாவை தான்.

பின்னர் தீபிகா கூறியதை கேட்டதும், ஓரளவு நடந்து இருப்பதை யூகித்தான்.

மெல்லிய மலரென காணப்பட்ட அவள் மயக்கத்தில் இருந்தும், வலியினை காட்டிய அந்த மலர் முகத்தை கண்டு அவன் மனதிலும் வலியை உணர்ந்தான்.

இப்படிப்பட்ட மலரினும் மெல்லியளை எப்படி அந்த காமுகர்களுக்கு கசக்கி எறிய மனம் வந்தது என்று அந்த மிருகங்கள் மேல் கடுங்கோபம் பிறந்தது அவனுள்.

வேறு வழியின்றி வித்யாவின் தந்தை சொன்னதற்காக, தீபிகாவும் சம்மதித்து, அதனை செய்வதற்காக அறையினுள் சென்றுவிட, இது அனைத்தையும் கண்ட கார்த்திக்,

அவளுக்கான கண்ணீரோடும், அவளது இந்த நிலைக்கு காரணமான கயவர்கள் மீது அதீத கோபமும் கொண்டு நின்று இருந்தான்.

தீபிகா கருப்பையை சுத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும், அவளையே செய்ய சொல்லி சீனிவாசன் மன்றாடிட,

தீபிகாவும் பாலாவை திரும்பிப் பார்க்கவும், எதுவும் சொல்லாது வேகமாக வெளியேறிய பாலா, வழியில் கண்களில் கோபச் சிவப்பேற நின்றவனை கண்டு திகைத்தான்.

"என்னாச்சு அண்ணா? உங்களுக்கும் அந்த பொண்ணை தெரியுமா?" என்று கார்த்திக்கிடம் வினவிட,

தெரியாது என உடனே பதிலளித்த கார்த்திக், யோசனையுடன் அவன் கேள்வியை உள்வாங்கியவன், "உங்களுக்கும்னா? அப்ப உனக்கு தெரிஞ்ச பொண்ணாடா?" என்றான்.

ஆமென்றும், அவளை எப்படி தெரியும் என்றும் பாலா உரைத்திட," அப்ப அமுல் டப்பா இந்த பொண்ணை லவ் பண்றானாடா?" என்று மனதில் சூழ்ந்த ஏமாற்றத்துடன் வினவினான்.

கார்த்திக் அவ்வாறு கேட்டதற்கு, ரூபேஷிடம் பாலா இதேபோல் கேட்டு அதற்கு மறுத்துக் கூறிய அவனது பதிலை சொல்லி விட்டு, "ஆமா. அதை ஏன் கேட்கறீங்க?" என்று விட்டு,

"பாவம் அந்தப் பொண்ணு. கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாம எப்படி பண்ணி இருக்கானுங்க பாருங்களேன்?" அவளுக்காக வருந்தி கண்கள் கலங்க கூறியவன்,

"தினமும் பஸ்ல பார்ப்போம் அண்ணா. குழந்தை மாதிரி அப்படி குதூகலமா பேசிட்டு வரும். இப்ப, இப்படி ஒரு நிலைல பார்க்கவே முடியல."

"அந்த பொண்ணோட அப்பா கையை காட்டி என் பைக்கை நிறுத்தும் போது கூட இப்படி ஒரு விசயத்தை எதிர்பார்க்கலண்ணா. அப்படியே உடம்பெல்லாம் உதறிடுச்சு."என்று

கண்ணை மீறி வெளியேறிய கண்ணீரோடு அவன் கூறிட, எந்த எதிர்வினையும் இல்லாமல் நின்ற கார்த்திக்கை கண்டு குழம்பினான்.

"அந்த பொண்ணை எங்கடா பார்த்தீங்க?" முகத்தில் எந்த உணர்வையும் வெளி காட்டாமல் கேட்டவனை வித்தியாசமாக பார்த்தான் பாலா.

"ஏண்ணா? என்னாச்சு?" என்று புரியாமல் அவன் கேட்டிட, பாலாவும் அந்த இடத்தை கூறவும் சிந்தனையோடு அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக்.

அப்போது தான் உள்ளே நுழைந்தார் அவளுடைய அம்மா அலமேலு. சீனிவாசன் அலமேலுவை சமாளித்து கிளம்பும் போது பாலாவுக்கு கை கூப்பி நன்றியை கூறிவிட்டு கிளம்பிட, அவன் கார்த்திக் சென்ற இடத்தை நோக்கி சென்றான்.

"என்ன அண்ணா? யோசனையில் இருக்கீங்க?" என்று கார்த்திக்கிடம் பாலா வினவிட, அவன் தீவிரமாக பேசத் தொடங்கினான்.

பாலாவை அவளின் வீட்டை கண்டறிய சொல்லி விட்டு, அவ்வப்போது கண்காணிக்கவும் சொன்னான்.

திடீரென அவன் அவ்வாறு கூறவும், எதுவும் புரியாமல், "எதுக்கு ண்ணா இதெல்லாம் பண்ண சொல்றீங்க?" குழப்பத்துடன் வினவிய பாலாவிடம்,

"அவ சின்ன பொண்ணுடா. அவளுக்கு நடந்ததை நினைச்சு அவளோ அல்லது அவளோட பேரன்ட்ஸோ தப்பா எதுவும் முடிவு எடுத்துட்டா?"

"அதனால நீ அப்பப்ப அவங்கள பாத்துட்டு இரு. நான் இப்ப செம் லீவுல வந்து இருக்கேன்டா. என்னால இங்க தொடர்ந்து இருக்க முடியாது.இல்லைனா நானே பார்த்துப்பேன்."

"உனக்கு இன்னும் ஒன் இயர் இருக்குல, நீ இங்க தானே இருக்க அதனால தான் உங்கிட்ட சொல்றேன்." என்று தீவிரமாக பேசிய அவனை புதிதாக பார்த்தான் பாலா.

அவனை புரியாமல் பார்த்த கார்த்திக்," என்னடா? நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ பதிலே பேசாம அமைதியா இருக்க?" எனக் கேட்க,

"நீங்க பேசறது எல்லாம் புதுசா இருக்கே. அதான் ஏன் னு யோசிக்கிறேன்?" என்றான் பாலா நிதானமாக.

கார்த்திக் நேர்பார்வையுடன் அவனை நோக்கியவன், "ஏன்னா, நான் அவளை விரும்பறேன்." என்றிட, அவனது பதிலில் திகைத்தான் பாலா.

அவனது திகைப்பை கண்டு கொள்ளாமல்,"ப்ளீஸ்! நான் சொன்ன மாதிரியே செய்டா. அவளை கொஞ்சம் பத்திரமா கவனி. அங்க என்ன நடந்தாலும் எனக்கு சொல்லு.ப்ளீஸ் எனக்காகடா." என்று

அவனது கைப்பேசி எண் பாலாவிடம் உள்ளதா என உறுதிப்படுத்தி விட்டு, அடுத்த செய்ய வேண்டிய வேலையை தீவிரமாக யோசித்துக் கொண்டே சென்றான் கார்த்திக்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top