Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 29
பள்ளிக்கு வந்த வித்யாவின் முகம், முகில் நீங்கிய நிலவென பளிச்சிட, அவளை கண்ட ஈஸ்வரி, "என்ன மேடம்? முகத்துல இன்னிக்கு டாலடிக்குது." என வினவினாள்.
'அவ்வளவு அப்பட்டமாகவா வெளியே தெரிகிறது!' என்று ஆச்சர்யப்பட்ட வித்யா, "அதெல்லாம் ஒன்னும் இல்லையே. உன் கண்ணுல தான் ஏதோ கோளாறு." கண்களில் புன்னகையுடன் கூறிவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள்.
அவளை ஆதுரமாக பார்த்த ஈஸ்வரியின் மனம் நிறைந்தது. தோழியின் வாழ்வில் விரைவிலேயே விடியல் வரும் என்ற நம்பிக்கை தந்தது, அவளது காட்டாத புன்னகை.
ஓய்வு நேரத்தில் தனது இடத்தில் அமர்ந்திருந்த வித்யாவை, தனது வகுப்பை முடித்து வந்த மதுமதி கண்டு,
அவளருகே வந்தவள், "ஸாரி ரூபிணி. நான் நேத்து கொஞ்சம் ரூட்ஆ நடந்ததுக்கு," என்றாள் நேற்றைய நிகழ்விற்காக.
"நானும் உங்கள டார்கெட் பண்ணி பேசலை மதுமதி. ஆனா ஸ்டூடண்ட்ஸ் இருக்கற இடத்துல நாம கொஞ்சம் டிக்னிட்டியோட இருக்கறது பெட்டர். அதுக்காக தான் நானும் பேச வேண்டியதா போச்சு." வித்யாவும் பதிலளித்தாள்.
"ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் ரூபிணி. அது, கார்த்திக்கை ரொம்ப நாள் கழிச்சு பார்த்த எக்ஸைட்மென்ட்ல அப்படி நடந்துடுச்சு." தன் செயலுக்கான விளக்கத்தை அவள் கூறவும்,
அவளுக்கும் கார்த்திக்குமான பிணைப்பை அறிய வித்யாவிற்கு ஆர்வம் பிறந்தது. மெதுவாக, "உங்களுக்கும் கார்த்திக்கும் ரொம்ப நாள் பழக்கமா?" கேட்டாள்.
"யா! அவர் இங்க வேலைக்கு சேர்ந்தப்ப இருந்தே பழக்கம் தான்."என்று அவள் கேட்டதற்கு மட்டும் பதிலளிக்க, அடுத்து எப்படி கேட்க என்று வித்யா தயங்கினாள்.
பின்பு, "நீங்க தப்பா எடுத்துக்கல னா உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கலாமா?"என்று தயங்கிக் கொண்டே வித்யா கேட்டதற்கு, மதுமதி சரியென்றதும்,
"உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா?" என வார்த்தைகளை தேர்ந்தெடுத்து மனதில் கோர்த்து ஒருவழியாக கேட்டு விட்டாள்.
அவளை சிறு ஆச்சரியத்துடன் பார்த்த மது," ஏன் திடீர்னு இந்த கேள்வி?" என்றாள். அதற்கு வித்யா நேற்று அவள் அழுததை பார்த்ததாக கூறியதும்,
அதை நினைத்து பெருமூச்செறிந்து விட்டு, மதுமதி பேசினாள்." நீங்க கார்த்திக்கோட வைஃப் ங்கிறதால உங்க கிட்ட ஷேர் பண்றேன்."என்று விட்டு,
"நான் கோயம்புத்தூர்ல பி.ஜி பண்ணும் போது ஒரு வெளங்காதவனை லவ் பண்ணி தொலச்சுட்டேன்." அவள் ஆரம்பித்ததும், வித்யா கண்கள் விரிய அவளை பார்த்தாள்.
அதை கண்டு கொள்ளாமல் மது தொடர, "அந்த தடிமாட்டுக்கும் என்மேல ஏதோ இருக்கு. ஆனா என்னை ரிஜெக்ட் பண்ற மாதிரியே பேசுவான். நானும் அதை கண்டுக்காம விட்டுட்டேன்."
"படிப்பு முடிஞ்சதும் அவன் எதுவும் சொல்லாம திடீர்னு காணாம போயிட்டான்."அவள் சொல்வதை ஏதோ விறுவிறுப்பான கதையை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தாள் வித்யா.
"அப்றம் இந்த ஆறு மாச கோர்ஸ்க்காக பெங்களூர் போனப்ப எனக்கு ஒரு ஹெல்த் இஸ்யூ ஆகி போச்சு. டெஸ்ட் எடுக்க ஒரு டயக்னாஸ்டிக் சென்டர் போனேன்."
"அங்க தான் அந்த கருவாயனை மறுபடியும் பார்த்தேன். புல்ஸ்டாப் வைச்ச லவ்வை, மறுபடியும் கமா போட்டு தொடங்குனா அவன் என்னை எடுத்தெறிஞ்சு பேசிட்டான்." என்று கண்களில் சிறு வலியுடன் மது கூறிவிட்டு,
"கார்த்திக் கிட்ட எப்பவுமே எனக்கு ஒரு பாண்டிங் உண்டு. அதனால அவரை பார்த்ததும் மனசுல அழுத்திட்டு இருந்த அந்த விசயத்தை ஷேர் பண்ணுனேன்." விளக்கத்தின் பின்னர்,
"அதான் அந்த கண்ணீர். போதுமா?"என்று விட்டு, "இதுக்காக கார்த்திக்கை எதுவும் வறுத்தெடுத்தீங்களா?" என்று கண் சிமிட்டி கேட்ட மதுமதியை வித்யாவிற்கும் பிடித்துப் போனது.
"அதெல்லாம் ஒன்னுமில்ல." என்று வித்யாவின் வாய் சொன்னாலும், அவளது அசட்டுச் சிரிப்பை கண்ட மதுமதி, "நம்பிட்டேனே!"என்று சிரித்தாள்.
அதன் பின்னர் வகுப்பிற்கான மணியடிக்கவும் மதுமதி கிளம்பிட, கள்ளமில்லாமல் பழகும் இவர்களை போய் சந்தேகித்தோமே! என்று வித்யாவின் மனம் வருத்தம் அடைந்தது.
****************
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, வித்யாவிற்கும் கார்த்திக்கிற்கும் அன்றைய நாளுக்கு பின்னர், புலப்படாத ஒரு பிணைப்பு ஏற்பட்டது.
ஓர் நாள் காலையில், பள்ளிக்கு கிளம்பி மூவரும் ஆயத்தமாகி வெளியே வந்த போது, சின்னக்குட்டி தன் காத்திப்பாவின் பைக்கில் செல்லும் ஆசையோடு அவனை பார்க்க,
அதை உணர்ந்த கார்த்திக், வித்யா தன் வண்டியை உசுப்பும் முன், "ஒரு சின்ன ஆப்லிகேஷன். கேட்கலாமா?" என்றான் அவன்.
வித்யா என்னவென்று புருவங்சுருக்கி பார்வையால் வினவிட, 'இவ ஒருத்தி ஆ ஊ னா கண்ணால பேசியே கொல்லுவா?' என்று மனதில் செல்லமாக சலித்தாலும்,
"இல்ல, ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலுக்கு தான் போறோம். எதுக்கு ரெண்டு வண்டி. ஒருத்தரோட வண்டியிலேயே போய்க்கலாமே. பெட்ரோல் செலவும் மிச்சம் ஆகும்." என்றவனை,
ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவளிடம், "அட, என்னமா நீ? கவர்ன்மென்ட்டே அதானே சொல்லுது. நீ, இந்த கார் பூலிங் பற்றி எல்லாம் விளம்பரத்துல கேட்டதில்லை?" என ஏதேதோ பேசினான்.
'எதற்காக இந்த விளக்கம்! ' என புரியாமல் விழித்தவள், அவன் சொல்வது சரியெனப்பட, "சரி, வாங்க. என்னோட வண்டியிலேயே போகலாம்." என்றாள் வாய் திறந்து..
'நாசமா போச்சு. இதுக்கா நான் மூச்சைப் பிடிச்சு முக்கா பக்கத்துக்கு பேசினேன். தேவுடா! உனக்கு கருணையே இல்லையா?' என்று அவன் மனதில் கடவுளிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
"டைம் ஆகுது. சீக்கிரம் ஏறுங்க." என்று அவள் அவசரப்படுத்தினாள். 'கொஞ்சம் பொறுமா. மனுசன் யோசிக்க வேண்டாமா?' என மனதிற்குள் அவன் அவளுக்கு பதிலளித்து கொண்டிருக்க,
சின்னவளோ, "அம்மா, பீஸ்! காத்திப்பா கூத பைக்ல போலாமா? அப்பியே காத்துல போனா ஊஊஊஊனு நல்லா தாலியா இக்கும்." என்று தன் ஆசையை முன் வைத்தாள்.
குட்டியின் ஆசை மின்னும் கண்களை கண்டவள், கார்த்திக்கை திரும்பிப் பார்க்க, அவனும் அதை சொல்ல தயங்கி, சுத்தி வளைத்ததை புரிந்து கொண்டாள்.
இருவரும் அவளது மனம் நோகக் கூடாதென இத்தனை நாளும் இருப்பதை உணர்ந்து மனதில் இருவரின் மீதும் அன்பு ஊற்றெடுத்தது. கார்த்திக் கூட வளர்ந்த மனிதன், ஆனால் குழந்தை.
இந்த சிறு வயதிலேயே தன் மனதை காயப்படுத்தாமல் இருக்க தன் ஆசையை தள்ளி வைத்து இத்தனை நாளும் பிரயத்தனப்பட்டதை நினைத்து மனம் மகிழ்ந்தாலும்,
பிள்ளையின் மன உணர்வை கூட படிக்க தெரியவில்லையே என்று தன்மீதே அவளுக்கு கழிவிரக்கம் வந்தது.
தன் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு, பிள்ளையின் அருகில் வந்தவள், அவளை தூக்கி அணைத்து முத்தமிட்டு, "போலாம்டா லட்டுக்குட்டி." என்று மகிழ்வுடன் கூறினாள்.
"ஷ்ஷ்ஷப்பா!! ரொம்ப தேங்க்ஸ்டா குட்டிமா. உங்கம்மாவுக்கு க்ளாஸ் எடுத்தே நான் டயர்டு ஆகிடுவேன் போல.இன்னும் என்னென்ன சொல்லி தரனுமோ!"
என்று மலைத்துப் போய் கார்த்திக் வண்டியில் முன்னால் அமர்ந்த பிள்ளையிடம் ரகசியம் பேசிட,
பின்னால் அமர்ந்தவளுக்கு எதிர்காற்றில் கேட்கவில்லை. முன்னால் அமர்ந்தவள் காற்றில் பறக்கும் குஷியில் அதை கவனிக்கவே இல்லை.
அதன் பின்னர் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக எங்கு சென்றாலும் அவனுடைய பைக்கிலேயே மூவரும் சென்றனர்.
இதற்கிடைய ஈஸ்வரியின் திருமணத்திற்கான ஆடைகள் எடுக்கும் நிகழ்விற்காக இரு வீட்டாரும் ஓர் நல்ல நாளை பார்த்து முடிவு செய்தனர்.
அது வார நாட்களில் வரவும், ஈஸ்வரி வித்யாவை அழைத்ததற்கு அவளால வர இயலாதே என்று வருத்தம் தெரிவித்தாள்.
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. வியாழக்கிழமை தானே? அதனால ராகு காலம் தாண்டி தான் போகனும்னு சொல்லிட்டு இருந்தாங்க."
"அது முடியவே மூணு மணி ஆகிடும். அப்றம் தானே போகிறோம். நீ ஸ்கூல் முடிஞ்சு, பாப்பாவை கூட்டிட்டு கார்த்திக்கோட வந்து சேரு." என்று அன்புக் கட்டளை இட்டாள் ஈஸ்வரி.
ரூபேஷின் வீட்டிலும் அனைவரும் வந்து சேர, இரு வீட்டாரும் சேர்ந்து துணிக்கடைக்கு சென்றனர்.
முதலில் ஈஸ்வரிக்கான பட்டுப்புடவை மற்றும் சில சடங்குகளுக்கான புடவைகள் எடுக்க வேண்டுமென்று தீர்மானித்தனர்.
ஈஸ்வரி கார்த்திக்கிடமும் சொல்லி இருந்ததால், அவனும், வித்யாவும் பவிக்குட்டியை அழைத்துக் கொண்டு அந்த கடைக்கு வந்து சேர்ந்தனர்.
ஈஸ்வரிக்கான புடவை தேர்வில் தாய்மார்கள் தீவிர தேடுதலில் இருக்க, ஒவ்வொன்றாய் அவள் மீது வைத்து பார்த்து தேர்வு செய்துக் கொண்டிருக்க,
ஆனால் அதன் முடிவு மட்டும் வேறு பக்கம் இருந்து ரூபேஷின் சமிக்ஞையில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது கடையில் நுழைந்த மதுமதி, "அடேய், வெள்ளபன்னி! நீ எப்படா ஊர்ல இருந்து வந்த?"என்ற ஆச்சர்ய கேள்வியோடு ரூபேஷை நெருங்கினாள்.
'யார்ரா அது? பப்ளிக்ல இப்படி மானத்தை வாங்கறது?!' என்று திகைத்த ரூபேஷ் திரும்பிப் பார்க்க, மதுமதியை கண்டவன்,
"ஹேய், பீட்டரு. நீ எங்க இங்க? ஆளே அட்ரஸ் இல்லாம ஆகிட்ட? " என்று அவன் அவளை கண்ட மகிழ்ச்சியில் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருக்க, இங்கே ஈஸ்வரியின் கண்களில் கனல் பிறக்க ஆரம்பித்தது.
மதுமதியும், ரூபேஷும் பள்ளி நண்பர்கள். இருவரும் வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்த குஷியில் பேசிக் கொண்டிருக்க,
எதற்காக வந்து இருக்கிறோம் என்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தான் அந்த மக்குப் பையன்.
கடையினுள் அப்போது தான் நுழைந்த வித்யா, குழந்தையோடு ஈஸ்வரியை நெருங்கிட, கார்த்திக், ரூபேஷை கண்டு அவனருகில் சென்றான்.
அங்கே ரூபேஷ் திரும்பி நின்று இருந்ததால் மறைத்தாற்ப் போல் நின்றிருந்த மதுமதியை கண்ட கார்த்திக், "மது, நீ என்ன பண்ற? அதுவும் இந்த அமுல் டப்பா கூட." என்று கேட்டவன் உஷாராகி,
"பேசிட்டு இருக்கேன் மட்டும் சொல்லிடாத ஆத்தா. அது எனக்கே தெரியுது. அதனால இங்கேயும் அங்கேயும் எப்படி கனெக்ட் ஆச்சுனு மட்டும் சொல்லு." இருவரையும் கை காட்டி கேட்டான்.
இருவரும் பள்ளி நண்பர்கள் என்றும், காலேஜ் சேரும் போது அவன் வேறு ஊருக்கு சென்றதாகவும் மதுமதி விளக்கிட,
அதை கேட்டவன்,"அதெல்லாம் சரிடா அமுல். ஆனா இத்தனையும் செய்த நீ மண்ட மேல இருக்க கொண்டையை மறந்துட்டியே." என்றான் கார்த்திக் ரூபேஷிடம்.
புரியாமல் முழித்தவன் முகத்தைப் பற்றிய கார்த்திக் ஈஸ்வரியை காணச் செய்ய, அவளது கோபம் கண்டு ரூபேஷ் திருதிருத்தான்.
"சரி விடு. கல்யாணம் பண்ணனும்னு நீ முடிவெடுத்த அப்றம் இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா?"சமாதானம் என்ற பேரில் பயத்தின் சாமரம் வீசினான் கார்த்திக்.
"ஏன் சீனியர் இப்டி?" ரூபேஷ் கேட்டதும், "என்னது சீனியரா? கார்த்திக்கை உனக்கு தெரியுமா?" என ஆச்சர்யமாக கேட்டாள் மதுமதி.
"காலேஜ்ல என்னோட சீனியர் இவர். நான் பர்ஸ்ட் இயர் சேரும் போது, சார் தேர்ட் இயர் இருந்தாரு. முதல் நாளே என்னை அமுல் பேபி னு கூப்டு மானத்தை வாங்கின மஹா உன்னதமானவர்." என்று
கார்த்திக் உடனான கல்லூரி நாட்களின் அலப்பறைகளையும், அவனுக்கும் ரூபேஷுக்குமான பழக்கத்தையும் விலாவரியாக கூறினான் ரூபேஷ்.
"சச் எ ஸ்மால் வேர்ல்ட்." மதுமதி அதிசயித்து சிலாகித்து கூறிக் கொண்டிருக்கும் போதே,
"ஹேய் பீட்டரு! அப்றமா அதிசயிக்கலாம். வா, என்னோட பியான்ஸியை உனக்கு அறிமுகப்படுத்தறேன்." என்று அவளை ஈஸ்வரியிடம் அழைத்துச் சென்றான் ரூபேஷ்.