Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 21
ஜன்னல்வழி தெரிந்த இருள் வானில், எப்போதும் தெரியும் அந்த தன்னந்தனி நட்சத்திரத்தை அவள் உற்று கவனித்து பார்த்துக் கொண்டிருக்க..
அதன் பின்னால் இன்னுமொரு நட்சத்திரம் ஒளிர்வது அவளின் கண்களுக்கு புலப்படும் போது, கதவு திறக்கும் ஓசை கேட்டது..
உள்ளே வந்த தாரிணியிடம், "ஏன்க்கா இப்படி செய்தீங்க?!.." என்று கண்கள் குளமாக, வலி நிறைந்த குரலில் கேட்டாள் வித்யா..
"ஒருவேளை கார்த்திக் உங்கிட்ட பேசி உன்னோட சம்மதம் வாங்கி தான் இந்த கல்யாணம் நடக்கனும் னா நீ அதுக்கு சம்மதிச்சு இருப்பியா சொல்லு டா?!.." என்றாள் தாரிணி அவளுக்கு புரிய வைத்திடும் நோக்கில்..
"அதான் இந்த முடிவு எடுக்க வேண்டியதாகிடுச்சு ரூபி குட்டி!.. உன்னோட வாழ்க்கை இப்படியே முடிஞ்சு போக கூடாது மா!.." என்று விளக்கம் சொன்னாள் தாரிணி..
அதோடு," சரி.. நீ உன்னோட வாழ்க்கை முழுதும் பாப்பா மட்டும் போதும் னு நினைக்கிற!.. ஆனா அந்த பாப்பா உனக்கு பிறந்தவ இல்லயே!!.."
"என்னைக்காவது ஒரு நாள் அவளோட சொந்தக்காரங்க யாராவது அவளை தேடி வந்து எங்க குழந்தையை எங்க கிட்ட கொடு னு வாங்கிட்டு போயிட்டா நீ என்ன பண்ணுவ?.." என்ற கேள்வியில், சர்வமும் ஒடுங்கி அச்சமுற்றாள் வித்யா..
இடிந்து போய் கட்டிலில் அமர்ந்த அவள் தோள் மீது கை வைத்து அழுத்தி,
"அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது மா!.. பயப்படாதே!.. நான் உன் நல்லதுக்கு தான் செய்தேன் ங்கறதை போக போக புரிஞ்சுக்குவ டா ரூபி குட்டி!.." ஆறுதலாக தாரிணி கூறியதும்..
"நீங்க எனக்கு நல்லது பண்றேன் னு கார்த்திக் மாதிரி ஒரு சந்தோஷமான மனுசனோட வாழ்க்கையை கெடுத்துட்டீங்க க்கா!.." அவனுக்காக வருந்தி வித்யா சொன்னாள்..
தனக்கு விருப்பமில்லை என்றோ, அவனை பிடிக்கவில்லை என்றோ அவள் சொல்லாத விசயத்தை புரிந்து கொண்ட தாரிணி, இவள், கார்த்திக் உடன் கண்டிப்பாக பொருந்தி போவாள் என்று எண்ணி நிம்மதி ஆனாள்..
அவளே உணராததை தாரிணி எடுத்துரைக்க வேண்டாம் என்று நினைத்து,
"எப்பவும் சிரிச்சுட்டே இருக்கறவங்க சந்தோஷமா இருக்காங்க னு அர்த்தம் இல்ல ரூபி குட்டி!..அவங்க வலி பிறருக்கு தெரியக் கூடாதுன்னு கூட சிரிக்கலாம்!.." என்ற தாரிணியின் கூற்றில் புரியாமல் விழித்தாள் அவள்..
"நீ டயர்டா இருப்ப!.. ரொம்ப மனசை போட்டு குழப்பிக்காம கொஞ்ச நேரம் படுத்து தூங்கு டா!.. மைன்ட் ஃப்ரெஷ் ஆகும்!.." அவள் சிந்திக்கட்டும் என்று விட்டு சென்றாள் தாரிணி..
சற்று ஓய்வாக படுத்த வித்யாவின் எண்ணங்கள் அன்று காலை நடந்த நிகழ்வுகளில் உழன்றது..
******************
அன்று காலை..
கார்த்திக் அவளது கழுத்தில் மங்கல நாணை பூட்ட, கை கொட்டி சிரித்த பிள்ளைகளின் மகிழ்ச்சியில் சுற்றுப்புறம் உணர்ந்து அவள் தன் கழுத்தில் தொங்கும் தாலியை குனிந்து பார்த்துக் கொண்டிருக்க..
சில வருடங்களுக்கு பிறகு கேட்ட அந்த "பொம்மு குட்டி!!.." என்ற பிரத்யேக அழைப்பில், கண்கள் மலர திரும்பிப் பார்த்த வித்யா ஜிஷ்ணுவை கண்டு குழம்பி நின்றாள்..
ஆம்!.. வித்யாவின் கழுத்தில் தாலி கட்டியதில், அவள் அதிர்ச்சியில் கலங்கி நின்றதை கண்டு அதிர்ந்தான் ஜிஷ்ணு ரூபேஷ்!..
பாலாவின் பொம்மை என்ற இடுபெயர் அவனது மனதில் பதிந்து பொம்முகுட்டியாக மருவி இருந்தது..
அவனை கண்டு அவள் குழம்பி நிற்க, அங்கு வந்த ஈஸ்வரி, ஜிஷ்ணு அவளை அறிந்ததை போல அழைத்ததை கண்டு விழித்து நின்றாள்..
பின்பு அவனை நெருங்கி, "உங்களுக்கு வித்யாவை முதலே தெரியுமா!!?.." என்று வினவிட, "தெரியும் அம்மு!.. அதை நான் அப்றம் சொல்றேன்!.." என்று விட்டு..
கார்த்திக்கை நோக்கி திரும்பிய ரூபேஷ், "என்ன சீனியர் இது!!?.. நீங்க இப்படி பண்ணுவீங்க னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.." என்று வருத்தமாக உரைத்தான்..
"ஹேய் அமுல் பேபி!.. நீ எங்கே இங்க?!.." என்று அவனிடம் வினவிவிட்டு, பின்னர் அவனது உடையை கண்டு, "அப்போ அமுதாக்கு பார்த்த அமுல் பேபி நீ தானா!!?.." என்றான் புன்னகையுடன்..
அங்கே ஒருத்தி இவனது செயலில் அதிர்ந்து கண் கலங்க நிற்க, கார்த்திக், இவனை கலாய்த்துக் கொண்டு இருந்தான்..
அவனை கடுப்புடன் பார்த்த ஜிஷ்ணு, "விளையாடாதீங்க சீனியர்!!..இந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லாம இப்படி பண்ணிட்டீங்களே னு கேட்டா நீங்க வேற எல்லாம் பேசிட்டு இருக்கீங்க!?.." என்றான்..
ஜிஷ்ணுவின் அருகில் வந்த கார்த்திக், அவனை கட்டியணைப்பது போல் நின்று, அவனது காதருகே,
"அதெல்லாம் இஷ்டம் இருக்கு டா அமுல்!.. ஆனா அது கிணத்துல கிடைக்கிற தண்ணி மாதிரி உள்ள இருக்கு!.."
"அதை தூர்வார ரொம்ப நேரம் எடுக்கும் னு அவங்க அக்கா தான் இப்படி செய்ய சொன்னாங்க!.." என்று தன்னிலை விளக்கினான் அவன்..
கார்த்திக் அவ்வாறு கூறியதும் ரூபேஷ் புரியாமல் முழித்துக் கொண்டிருக்க,
தாரிணி கார்த்திக்கை மாங்கல்யத்தில் குங்குமிட்டு, வித்யாவின் நெற்றி வகிட்டிலும் வைக்க சொல்ல, வித்யா தாரிணியை அதிர்ந்து பார்த்தாள்..
அவளது அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், அனைத்தும் நடக்க, எதுவும் செய்ய தோன்றாமல் பதுமை போல் சொன்னதை செய்தாள் வித்யா..
ஜிஷ்ணுவிற்கு எவ்வாறு வித்யாவை தெரியும் அதுவும் பிரத்யேக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு என்ற பெரும் குழப்பம் ஈஸ்வரிக்கு எழ..
"சரி!.. இப்ப சொல்லுங்க ஜிஷ்ணு!.. உங்களுக்கு வித்யாவை எப்படி தெரியும்!?..அதுவும் பொம்முகுட்டி னு கூப்டுற அளவுக்கு!!." என்று அவனிடம் அறியும் ஆர்வத்தில் வினவினாள்..
அவளது கேள்விக்கு பின் தான் வித்யாவும் அவனை கவனித்தாள்.. அவனை இதற்கு முன் எங்கும் பார்த்தாக கூட நினைவில்லை அவளுக்கு..
அவளும் குழப்பமாய் அவனை பார்க்க, அதற்குள் கார்த்திக், "அதானே!.. என்னோட பொண்டாட்டியை நீ எப்புட்ரா அப்படி கூப்பிடலாம்?!.." என்று பொய்கோபம் காட்டினான்..
அவனது பேச்சை கண்டு, வித்யா அவனை முறைக்க, " உனக்கு எமன் உன் வாய் தான் டா கார்த்தி!.." என்று கூறி தன் கை கொண்டு வாய் மூடினான்..
அவனது செயலில் அவளது கண்களில் சிறு சிரிப்பை கண்ட கார்த்திக் சற்று நிம்மதியானான்..
என்ன தான் தாரிணி அவளது மனம் பற்றி கூறினாலும் தன்னை அவளுக்கு பிடிக்காதோ என்று மனதில் இருந்த சிறு சுணக்கம், இப்போது அவளது கண்கள் காட்டிய சிறு அசைவு அதை அகற்றியது..
அன்று..
தாரிணி கார்த்திக்கிடம் வித்யாவை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட போது, அவன் சொன்ன சேதியில், தாரிணியின் மனதில் கார்த்திக் மீதான மதிப்பு கூடியது..
ஆனால் அவளது சம்மதத்துடன் தான் மணம் புரிய வேண்டும் என்று அவன் உரைக்க, அவள் இருக்கும் மனநிலையில் கண்டிப்பாக ஏற்க மாட்டாள் என கூறினாள்..
"அதுக்காக கட்டாய கல்யாணமா மேடம் பண்ண முடியும்!?.. அவங்க மனசு மாறுற வரை நான் காத்திருக்கேன்!.." என்று அவன் உரைக்கவும்..
"எப்போ ரெண்டு பேரும் வயசாகி போன காலத்துலேயா?!.. புரியாம பேசாதீங்க கார்த்திக்!.. அவ குழந்தை மட்டும் தன்னோட வாழ்க்கைக்கு போதும் னு இருக்கா!.."
"இப்ப இருக்கற காலகட்டத்துல ஒரு பெண் குழந்தையை தனியா அவ வளர்த்து ஆளாக்கலாம்!.. ஆனா அவளுக்கும் ஒரு ஸ்டேஜ்ல தனிமை அறுக்கும்!.."
"அப்ப திரும்பி பார்த்தா, ரொம்ப காலம் கடந்து இருக்கும்!.. அதுவுமில்லாம உங்க வீட்ல உங்கள இப்படியே இருக்க விட்டுடுவாங்களா?!.. அதான் நான் சொல்லுற மாதிரி செய்ங்க!.." என்ற
தாரிணியின் திட்டப்படி அனைத்தும் நடந்தது.. ஈஸ்வரி நிச்சயத்திற்கு அழைத்ததும் தாரிணி தன் திட்டத்தை அதை வைத்தே நிறைவேற்றிட எண்ணி..
ஈஸ்வரியின் பெற்றோரிடமும் பேசி அனைத்தும் தயார் செய்ய, வித்யரூபிணி - கார்த்திகைபாலன் திருமணம் இனிதே முடிவடைந்தது..
கார்த்திக் அவ்வாறு கேட்டதும், "அவங்க உங்க பொண்டாட்டி ஆகும் முன்னேயே எனக்கு தெரியும்!.."என்றான் ரூபேஷ்..
அனைவரும் குழம்பி நிற்க, "உன்னையும் எங்கே பார்த்தேன் னு இப்ப நினைவு வந்துடுச்சு அம்மு!.. நீங்க ரெண்டு பேரும் எந்த ஊர்ல ஸ்கூல் முடிச்சீங்க?!.." ஈஸ்வரியிடம் வினவிட, அவள் பதிலளித்ததும்,
"நீங்க 42 பஸ்ல தானே ஸ்கூலுக்கு போவீங்க!?.." என்ற அவனது அடுத்த கேள்விக்கு அவளும் ஆமோதிக்கும் போதே அவளுக்கும் நினைவிற்கு வந்தது.
"ஹேய்!.. நானும் உங்களை அந்த பஸ்ல தான் நிறைய தடவை பார்த்து இருக்கேன்!.. இப்ப ஞாபகம் வந்துடுச்சு!!.." என்றாள் குதூகலமாக.
"அடேய்!.. எப்படி தெரியும் சொல்லிட்ட நீ!.. ஆனா ஏன் அப்படி கூப்பிட்ட னு இன்னும் சொல்லலையே டா அமுல் பேபி!!?.."என்று கார்த்திக் பதற,
"அட.. அது ஒன்னுமில்ல சீனியர்!.. இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு வரும் போது, இதோ இவங்க!!.. உங்க பேர் என்ன?!.." என்று வித்யாவை பார்த்து கேட்க, ஈஸ்வரி அவனது கேள்விக்கு பதில் அளிக்க.. கார்த்திக்கிற்கு ஏக கடுப்பாகியது.
"அவங்க பேரே தெரியல.. ஆனா செல்லப்பேர் மட்டும் வக்கனையா வைச்சு இருக்க!.."என்று மூக்கில் காற்றடித்து கொண்டே கேட்டான்.
"டென்சன் ஆகாதீங்க சீனியர்!.. நீங்க காலேஜ்ல படிக்கும் போது எப்படி இருந்தீங்களோ இன்னும் அப்படியே தான் இருக்கீங்க!.." என்று சிரித்து விட்டு,
"நம்ம பாலா இருக்கான்ல அவன் தான் வித்யாவை பொம்மை னு சொல்லுவான்.அது அப்படியே என் மைன்ட்ல ஸ்லைட்டா சேன்ஜ் ஆகி இப்படி சேவ் ஆகிடுச்சு!.." என்றான் அசட்டுச் சிரிப்புடன்.
அவன் கூறியதை கேட்ட கார்த்திக் திடீரென அமைதியாகி விட, கோமதி தான்,
"சரி!.. மத்த விவரம் எல்லாம் நாம அப்றம் விலாவாரியா பேசிக்கலாம்!.. இப்ப நல்ல நேரம் முடியறதுக்குள் லக்னப் பத்திரிக்கை வாசிச்சிடலாமே!.." என்றார்.
"ஆமா கோமதி!.. நானும் இவனுக ப்ளாஷ்பேக் ரீல் ஓட்டுறதை முடிப்பானுங்க னு பார்க்கறேன்!.. இன்டர்வெல் விடாம போயிட்டு இருக்கு!.."
"வந்த வேலையை முதல்ல முடிப்போம் டா மகனே!.."என்று ஜிஷ்ணுவிடம் அவன் தாய் தாமரைச்செல்வி கூறினார்.
என்ன செய்ய, கோமதியின் ஃபோனில் பேசிய சகவாச தோஷம் தாமரைச்செல்வியையும் அவரை போலவே மாற்றி பேச வைத்திருந்தது.
ஜிஷ்ணுவின் தந்தை ராஜாராமன், மனைவியின் பேச்சை கண்டு 'ஆ'வென்று நிற்க, அவரை உசுப்பி நிச்சய பத்திரிகை வாசிக்க அழைத்து சென்றார் அவரது இல்லாள்.
நடந்த நிகழ்வில் எப்படி எதிர்வினை புரிய என தெரியாமல் ஏதோ ஒரு சோக மனநிலையில் இருந்தது வித்யா மட்டும் தான்.
அவளது மனதில், "பெருமாளே!.. இன்னும் என் வாழ்வில் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய்?!.."
"எனக்கான ஒரு வழி என்று அமைதியான ஓடை போல சென்று கொண்டிருந்த என் வாழ்வில் எதற்கு இந்த புது பந்தம்!!?.."
"மேலும் அடிபட என் மனதில் வலுவில்லை பகவானே!.." என்று இறைவனிடம் மனதிற்குள் அரற்றிக் கொண்டிருந்தாள்.
அவளது உணர்வை புரிந்தது போன்று, அதே நேரம் கார்த்திக் குழந்தையோடு அவளருகே வர, பவிஷ்யா ஒரு கையை அவளது காத்திப்பாவின் தோளில் போட்டுக் கொண்டு,
மற்றொரு கையை தாயின் மீது போட்டு இருவருக்குமான உடையாத
பிணைப்பாக அவனது கைகளில் ஒய்யாரமாய் சிரித்து கொண்டு இருந்தாள்.