Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 19
"வாங்க காத்திப்பா போவம்!.. ஐய்யா!.. தாலி!!..தாலி!!..அம்மா காத்திப்பாவும் நம்ம கூத வத்தாங்காம்!.. போவம் வாங்க!.." குழந்தையின் குதூகளிப்பில் இயல்புக்கு வந்த வித்யா,
அவனை முறைத்து விட்டு, அந்த ஆயாம்மா நின்று கொண்டிருந்ததை எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க, அவள் எண்ணத்தை உணர்ந்த கார்த்திக்,
"அவங்க நாம பேச ஆரம்பிச்சதுமே உள்ள போயிட்டாங்க!.." என்று அவளுக்கான பதிலை வழங்கினான்..
"உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா சார்?!.. குழந்தை முன்னாடி எப்படி பேசனும்னு தெரியாதா?!.." அவனை காய ஆரம்பிக்க..
"அப்படி என்னங்க நான் தப்பா பேசிட்டேன்!!.. இப்ப நீங்க பேசறதை கேட்டா தான் தப்பா நினைப்பாங்க!.." அவனது பதிலில் தான் சொன்ன சொற்களை யோசித்த அவள், அவனை முறைத்து விட்டு கிளம்ப எத்தனித்தாள்..
உடனே சின்னவள்," காத்திப்பா!.. வாங்க போவம்!.." என ஆர்வமாக அவனை அழைத்தாள்..
"வர்றேன் டா குட்டிமா!.. உங்கம்மா கூப்பிட்ட உடனே ஓடி வந்துடுவேன்!.. சரியா!.." பதில் குழந்தையிடம், பார்வை அவளிடம் என்று அவன் பேசவும்..
"அவங்க நம்ம கூட வர வேண்டிய அவசியமில்லை டா செல்லம்!.. அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்.."
"நாம நம்ம வீட்டுக்கு போலாம்!.." இவளும் தனது பார்வையை அவனிடமும், பதிலை குழந்தையிடமும் வைத்து அதே போல் கூறினாள்..
இவர்களது வார்த்தை விளையாட்டில் குழந்தை தான் எதுவும் புரியாமல் விழித்து விட்டு," ஓகே ம்மா!.." என்று தன் தாயிடம் உரைத்தாள்..
வீட்டிற்கு வந்த வித்யாவிற்கு சில நாட்களாக அவனது நடவடிக்கையில் தெரியும் வித்தியாசத்தை யோசித்துக் கொண்டே அனைத்து வேலைகளும் முடித்துக் கொண்டு இருந்தாள்..
அப்போது அவளது கைப்பேசியில் அழைப்பு வர, யாரென்று பார்த்த வித்யா அதை ஏற்று, "சொல்லுங்க அக்கா!.. எப்படி இருக்கீங்க எல்லாரும்?!.. குட்டி பையன் என்ன பண்றான்?.." நலம் விசாரிக்கவும்..
அவள் அருகில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சின்னவள், "பெய்ம்மா வா ம்மா!!?.." என்று வினவிட தாய் ஆமோதிக்கவும்..
அவளது கரங்களில் இருந்து கைப்பேசியை பற்றி," பெய்ம்மா!.. நல்லா இக்கீங்கா?.. எப்ப வவ்வீங்க?!.." என்று ஆர்வமாக கேட்டாள்..
தினமும் என்ன தான் பள்ளியில் பிள்ளைகளுடன் விளையாடினாலும், வீட்டில், தாயின் முகத்தை மட்டுமே கண்ட குழந்தைக்கு மாற்றம் தேவைப்படுகிறது..
"அடியேய் ஆழாக்கு!.. பெய்ம்மா கூப்பிடாத!.. தேவிம்மா சொல்லுனு சொன்னேன்ல.. நாங்க எங்க வர்றது!?.. உங்கம்மா தான் லீவுல உன்னை கூட்டிட்டு வர்றதா சொன்னாளே!?.." என்றாள் தாரிணி..
"பெய்ம்மா!.. இன்னிக்கு காத்திப்பா எங்க கூத வதேன் னு சொன்னாங்கே!!.." என்று குழந்தை மொட்டையாக உரைக்கவும்..
"எதே!.. காத்திப்பா வா!!?.. அது யாரு செல்லம் புதுசா?!..யாரு அவங்க?.. உனக்கு எப்படி அவங்கள தெரியும்?.." என்று
அவள் குழந்தையிடம் விசாரணையை தொடங்கவும், கைப்பேசி கைமாறவும் சரியாக இருந்தது..
"ஹலோ அக்கா!.." என்ற வித்யா பேசவும், "யாரு ரூபி அது?!.. பாப்பா யாரையோ காத்திப்பா னு சொல்றா?.." என வினவினாள் தாரிணி..
"கார்த்திக் னு இங்க ஸ்கூல்ல பி.டி டீச்சர் க்கா!.. சும்மா ஒரு கர்டஸிக்கு சொல்வோம்ல அது மாதிரி சொன்னார்.."
"அதை இந்த வாண்டு பிடிச்சுக்கிட்டு உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கா!.." என்று படபடவென பேசிய வித்யாவின் பேச்சில் திருப்தி அடையாத தாரிணி..
அங்கு என்ன நடக்கிறது என உடனே அமுதாவிடம் விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்..
தாரிணி தன் மனதில் யோசித்துக் கொண்டு இருக்க, அதற்குள் இவள் இருமுறை அக்கா அக்கா என அழைத்து விட்டாள்..
"ஹான்!.. சொல்லு மா!.. லைன்ல தான் இருக்கேன்!.. ஓஓ.. அப்படியா!.. சரி விடு!.. சாப்டாச்சா?.. என்ன பண்றீங்க?.. ஆமா எப்போ லீவு வருது?.." என்று பேச்சை மாற்றினாள் தாரிணி..
வித்யாவின் கூற்றை அவள் நம்பி விட்டாள் என்றெண்ணி, வித்யாவும் அவளது கேள்விக்கு பதிலளித்து பேசி முடித்ததும்,
குழந்தையிடம்," ஏன்டா லட்டும்மா?!. பெரியம்மா கிட்ட அப்படி சொன்ன?.." என கேட்க..
"அதான் காத்திப்பா நம்ம கூத வதேன் னு சொன்னாங்க தானே ம்மா!.. அத் தா பெய்ம்மா கித்த சொன்னேன்!.."
வெள்ளந்தியாக சொல்லும் மகளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் ஒன்றும் கடிய முடியாமல் விட்டு விட்டாள்..
விரைவிலேயே அவனிடம் பேசி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தீர்மானித்தாள்..
குழந்தையின் மனதில் அவனை பற்றிய எண்ணம் வளர்ந்து கொண்டே போவதில் சற்று அச்சமுற்றாள்..
வித்யாவிடம் பேசிய தாரிணி உடனே அழைத்தது ஈஸ்வரிக்கு தான், "ஹலோ அக்கா!.. சொல்லுங்க!.. என்ன இந்ந நேரத்துல கூப்டு இருக்கீங்க?!.." என்று
அவள் கேட்டபின் தான் நேரத்தை கவனியாமல் அங்கே பேசிவிட்டு இவளை அழைத்ததை நினைத்து தன்னையே தலையில் தட்டிக் கொண்டாள்..
"ஸாரி டா!.. நேரத்தை பார்க்கல!.. உங்கிட்ட ஒரு விசயம் பேசனும் னு நினைச்சேன்!..நினைச்ச உடனே கால் பண்ணிட்டேன்!.. டைம் பார்க்கல!.." தாரிணி தனது தவறிற்கு மன்னிப்பு கேட்க..
"இதுக்கு எல்லாம் எதுக்கு ஸாரி க்கா!.. சொல்லுங்க என்ன விசயம்!?.." நேரடியாக விசயத்திற்கு வந்தாள் ஈஸ்வரி..
"ஆமா!.. இந்த கார்த்திப்பா யாரு!!?.. பாப்பா இன்னிக்கு தான் எங்கிட்ட அவர் பற்றி சொன்னா!.. வித்யா கிட்ட கேட்டா மழுப்பலா பதட்டத்தோட பதில் சொல்ற!!.."
"அங்க என்ன தான் நடக்குது அமுதா?!.. " என்று தாரிணி குழப்பமாக வினவவும், ஈஸ்வரி என்ன சொல்ல, எப்படி சொல்வது என யோசித்தாள்..
"உன்னை நம்பி தானே அவளை அனுப்பி வைச்சேன் டா!.. அவரால எதுவும் பிரச்சனையா!?.." என்று தாரிணி படபடப்புடன் கேட்க..
"அதெல்லாம் பிரச்சனை இல்ல க்கா!.. இது விசயமே வேற!!.." என்று விட்டு, கார்த்திக்கின் ஆரம்ப நடவடிக்கையில் இருந்து, அனைத்தையும் சொல்லி விட்டு, அவனுடன் இவள் பேசியதையும் உரைத்தாள்..
"அதோட எனக்கு என்னமோ அந்த கார்த்திக் சார் க்கு வித்யாவை பற்றிய ஏதோ ஒரு உண்மை தெரிந்து இருக்கும்னு தோணுது க்கா!!.." என்று தனது சந்தேகத்தையும் சொல்லி,
"ஆனா மனுசன் பிடி கொடுக்க மாட்டீங்கறாப்ல!!.. நான் கேட்டதுக்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சமாளிக்கிறாரு!!." என்று முடித்தாள்..
"சரி விடு!.. நான் பார்த்துக்கறேன்!.. நீ அவரோட ஃபோன் நம்பர் மட்டும் எனக்கு வாட்ஸப் பண்ணி விடு!.." என்று தாரிணி முடிக்கப் போக..
"கார்த்திக் நல்ல மனுசன் தான் க்கா!.. அவளை எந்த தொந்தரவும் செய்ததில்ல!.. நானும் அவளை பார்த்துட்டு தான் க்கா இருக்கேன்!.." என்றாள் ஈஸ்வரி சிறு குரலில்..
"ஸாரி டா!.. உன்னை குறை சொல்லனும் னு அப்படி கேட்கல!.. அவ பதட்டமா பேசவும் ஒருவேளை உனக்கே எதுவும் தெரியாம மறைச்சுட்டு இருக்காளோ னு தோணுச்சு!.. "
"அதான் பட்டுனு அப்படி கேட்டுட்டேன்!.." தாரிணி தனது கேள்விக்கான விளக்கத்தை கூறினாள்..
அமுதாவிடம் பேசிய பின் சிறிது நேரம் யோசித்த தாரிணி, தன் கணவனிடம் நடந்ததை சொல்ல, அதற்கு ஹரி,
"அவளை பற்றி அவருக்கு என்ன தெரியும் னு முதல்ல விசாரி டா தேவி!..அவளும் இப்படியே இருக்க முடியாது!.. அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு!.."
"அவளால இப்போதைக்கு அடாப்ட் ஆக முடியாது தான்!.. அதுக்காக அவளை இப்படியே விடவும் முடியாது!.." என்று தாரிணிக்கு விளக்கினான்..
"புரியுதுங்க!.. நான் முதல்ல அந்த கார்த்திக் கிட்ட பேசி பார்க்கிறேன்!.. அதுக்கு அப்றம் நாம ஒரு முடிவெடுக்கலாம்!.."என்றவளுக்கு அன்றைய இரவு முழுவதும் சிந்தனையிலேயே ஓடியது..
மறுநாள் மதிய வேளையில், ஈஸ்வரியிடம் விசாரித்தபடி அவர்களது மதிய உணவு இடைவேளையின் போது கார்த்திக்கிற்கு அழைத்தாள் தாரிணி..
அவன் அழைப்பை ஏற்றதும்,"ஹலோ! நான் தேவதாரிணி பேசறேன்!.." என்று விட்டு, ஒருவேளை அவனுக்கு தன்னை பற்றி எதுவும் தெரியுமோ என்றெண்ணிய அவள் சில நொடிகள் இடைவெளி விட..
அது போதாதா நம் வாயாடி வம்பனுக்கு, உடனே, "ஹலோ!.. சொல்லுங்க!.. எப்படி இருக்கீங்க?!.."என்று கேட்க, குழப்பமான தாரிணி," என்னை பற்றி உங்களுக்கு தெரியுமா!!?.." என்றாள்..
"என்னங்க இது உங்கள பற்றி தெரியாமலா!!.. நீங்க சொர்க்கத்துல இருந்து தானே கால் பண்றீங்க!?.. இந்திரனுக்கு எதாவது பிட்னஸ் அட்வைஸ் வேணுமா?!.." என்று அவன் வினவவும், அந்த பக்கம் அவள் 'ஙே' என்று விழித்தாள்..
"என்ன உளர்றீங்க மிஸ்டர்!!?.." என்று கடுப்பாக அவள் கேட்கவும், "பின்ன என்னங்க?!.. நீங்களா கால் பண்ணுனீங்க!.."
"தேவ..தாரிணி னுட்டு அமைதியா இருந்தா!?.. நான் எப்படி யோசிக்கிறது?!.." என்று அவன் விளக்கவும், செம காண்டானாள் தாரிணி..
"ஷ்ஷ்ஷப்பா!!.. இவ்ளோஓஓ வாயடிக்கற ஆளு கிட்ட போய் என் தங்கச்சிக்காக பேச வந்தேன் பாரு.. என்னை சொல்லனும்!.." என்று அவள் தலையிலடித்துக் கொண்டாள்..
அவள் தங்கை என்றதும், சிந்தனையான கார்த்திக்," நீங்க!!?...." என்று இழுக்க.. "நான் வித்யாவோட அக்கா!.."என்றாள் தாரிணி..
'என்னடா கார்த்தி பொண்ணு வீட்டு ஆளுங்க கிட்ட இப்படி பேசி வைச்சா உனக்கு கண்டிப்பா சன்னியாசம் தான் போ!.' என்று எள்ளி நகையாடியது அவனது மனசாட்சி.
"ஸாரிங்க! நான் யாரோ னு நினைச்சு எப்பவும் போல பேசிட்டேன்." என்று உடனடியாக மன்னிப்பு கடிதம் வரைந்தான்.
"என்னாதுஉஉ!!எப்பவும் போல வா, இப்படி தான் எப்பவுமே பேசுவீங்களா?. கஷ்டகாலம்." என்று அவள் சலித்துக் கொண்டு,
பின் அவனைப் பற்றி விசாரிக்க, அவனது விவரங்களை கேட்டவளுக்கு அவனைப் பற்றி பழுது சொல்ல எதுவும் இல்லை என்றாலும்,
அவனுக்கு வித்யாவின் விஷயம் எதுவும் தெரியுமா என்று கேட்க "அமுதா உங்கள பற்றி சொன்னா, ஆனா உங்களுக்கு வித்யாவை பற்றி முழுசா தெரியுமா?" எனக் கேட்டாள்.
"ஒருத்தரை பற்றி முழுசா தெரிஞ்சுட்டு தான் காதல் வரனுமா என்ன?" என்றான் அவன்.
"நீங்க சொல்றது நார்மலா இருக்கற ஆட்களுக்கு, ஆனா இவளோட விசயம் வேற, அதுவும் இல்லாம கையில குழந்தையோட வர்றவளை உங்கம்மா எப்படி ஏத்துக்குவாங்க?" என்று நடைமுறையை கேட்டாள் தாரிணி..
"எங்கம்மா பற்றி எனக்கு தெரியும். அவங்க கண்டிப்பா மறுப்பு சொல்ல மாட்டாங்க." அவ்வளவு உறுதியுடன் கூறும் அவனிடம் என்ன கேட்க என தாரிணி யோசிக்க, அவனே தொடர்ந்தான்.
"இன்ஃபேக்ட் அவளை குழந்தையோட கூட்டிட்டு வர சொன்னதே, எங்கம்மா தான். எனக்கு முதல்ல விருப்பம் இல்லைன்னாலும் அம்மாவோட ஆசைக்காக தான் சரி னு சொன்னேன்."
"ஆனா அவளை இங்க பார்த்ததும் நான் தொபுக்கடீர் னு விழுந்துட்டேங்க." என்று தீவிரமாக பேசிய கார்த்திக், நகைச்சுவையாக கூறி முடித்தான்.
"உண்மைய சொல்லுங்க. யாரு நீங்க? உங்களுக்கு அவளோட விசயங்கள் என்ன எல்லாம் தெரியும்?" என்று அவள் படபடப்புடன் வினவிட,
கார்த்திக் தனக்கு தெரிந்த விஷயத்தை சொன்னதும் அதிர்ச்சியான தாரணிக்கு, இவன் கண்டிப்பாக வித்யாவை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையை கொடுத்தது.