Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 18
புன்சிரிப்புடன் குழந்தையை கண்ட கார்த்திக், தன்னை நோக்கி குழந்தை சாலைக்கு ஓடி வருவதையும், சாலையில் கார் வருவதையும் உணர்ந்து,
கையிலிருந்த பொருட்களை அப்படியே போட்டு விட்டு அந்த கார், குழந்தையை நெருங்கும் முன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு ஓரமாய் விழுந்தான்..
அவர்களை தாண்டி காரை நிறுத்திய ஓட்டுநர், ஓடி வந்து அவர்களை தூக்கி விட்டு, "ஸாரி சார்!.. குழந்தை திடீர்னு வரவும், ப்ரேக் கன்ட்ரோல் பண்ண முடியல!.." என்று மன்னிப்பை வேண்டினார்..
"பரவால்ல சொல்ல மாட்டேன்!.. ஆனா இந்த மாதிரி மக்கள் அதிகமாக இருக்கற பகுதியில் கொஞ்சம் மெதுவா போங்க பாஸ்!.." என்று அவருக்கு அறிவுறுத்தி விட்டு,
'குழந்தையை வெளியே விட்டுட்டு இவ என்ன பண்றா?!..' என்று எண்ணி பூங்காவை திரும்பிப் பார்க்க, அங்கே சிலர் சூழ்ந்து நிற்க, மயங்கி தரையில் கிடந்தாள் வித்யா!..
வேகமாக சூழலை உணர்ந்து ஓடி வந்த கார்த்திக், அவளை தூக்கி சென்று அங்கிருந்த பென்ச்சில் படுக்க வைத்து, குழந்தையின் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்தான்..
நடந்த அனைத்தையும் கண்டு, அவனது கைகளுக்குள் இருந்த பூச்செண்டு, பயந்து மிரண்டு போய் பார்த்துக் கொண்டு இருந்தாள்..
அவனது சட்டையை இறுகப் பற்றிய குழந்தையின் முகத்தை பார்த்த கார்த்திக்கிடம், "அம்மாக்கு என்னாச்சு காத்திப்பா!!?.." என்று பயத்துடன் வினவினாள்..
அவளது பயத்தை தெளிவிக்க விழைந்த அவன், "ஒன்னுமில்ல டா செல்லம்!.. நீங்க திடீர்னு ரோட்டுக்கு ஓடுனீங்கல அதுல அம்மா பயந்துட்டாங்க!.."
"இனிமே இப்படி கவனம் இல்லாம ரோட்ல ஓடக் கூடாது சரியா!!?.. பாருங்க!.. அம்மா, மயக்கம் வர்ற அளவுக்கு பயந்துட்டாங்க.."
"எப்பவும் நிதானமா ரெண்டு பக்கமும் பார்த்து தான் ரோட்டை க்ராஸ் பண்ணனும் சரியா டா குட்டிமா!!?.." என்று குழந்தைக்கு அவன் எடுத்துரைக்க, குட்டியும் சமர்த்தாக சரியென தலையசைத்தாள்
அப்போது மெதுவாக கண் விழித்த வித்யா, முதலில் கண்டது அவனிடம் அட்டை போல் ஒட்டிக் கொண்டு இருந்த குழந்தையைத் தான்!..
விலுக்கென்று எழுந்த அவள் வேகமாக அவன் கைகளுக்குள் இருந்த குழந்தையை பிடுங்காத குறையாக தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டாள்..
பின்பு, குழந்தைய இறக்கி விட்டு, என்னவென்று உணரும் முன்பே அவளை ஒரு அடி வைத்து, "இனிமே இப்படி ரோட்டுக்கு ஓடுவியா!!?.." என்று கோபத்துடன் கேட்டுக் கொண்டே மீண்டும் அடிக்க கை நீட்ட..
பிள்ளையை அவளருகில் இருந்து தன்னிடம் இழுத்துக் கொண்ட கார்த்திக்,
"குழந்தை மேல கையை வைச்ச!!.. அவ்ளோ தான்!..கொன்னுடுவேன்!!.." என்று கண்களை உருட்டி, உதடு கடித்து, விரலை நீட்டி எச்சரித்தான்..
அவனது திடீர் மிரட்டலிலும், அந்த தோரணையிலும் பயந்த வித்யாவை கவனியாமல்,
"பிள்ளையை அடிக்கற உரிமையை யார் டி கொடுத்தா உனக்கு!!?.." என்று ரௌத்ரமாக அவன் கேட்ட கேள்வியில் மிரண்டு விழித்தாள் அவள்..
அவளை பார்த்து கேட்டுவிட்டு, அழும் குழந்தையை அணைத்து சமாதானம் செய்துக் கொண்டு திரும்பிய கார்த்திக், மிரண்ட அவளது விழிகளில் தன் தவறை உணர்ந்து சற்று இயல்புக்கு வர..
சில நொடிகளில் இயல்பான அவனது முகம் கண்டு, தனது அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த வித்யா, அவனிடமிருந்து குழந்தையை மீண்டும் தன்னிடம் இழுத்துக் கொண்டு,
"இவ என் குழந்தை!.. நான் அடிப்பேன்!.. கொஞ்சுவேன்!.. அதை கேட்க நீங்க யாருங்க!!?.." கேட்டுவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு செல்ல விழைந்தாள்..
அதிர்ச்சியின் மயக்கத்தில் துவண்டிருந்த அவளால் சரியாக நிற்க கூட இயலாமல் குழந்தையோடு தடுமாற, அவளை பிடிக்க வந்தான் கார்த்திக்..
சட்டென்று அவனிடம் இருந்து விலகி, அவள் தன்னை சமாளித்துக் கொண்டு நடக்க முயன்றாள்..
அவளது விலகலில் லேசாய் மனம் வலித்தாலும், "உங்களால வீட்டுக்கு வண்டில போக முடியுமா?!.." என வினவினான் அவன்..
அவனுக்கு பதிலளிக்காமல், அவள் வண்டியில் சாவியை புகுத்தப் போக, அது கை நழுவி கீழே விழுந்தது.. உடனே அதை எடுத்துக் கொண்ட கார்த்திக்,
அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறச் சொன்னான்.. முகத்தை திருப்பிக் கொண்டு அவள் நிற்க, இவளை வழிக்கு கொண்டு வர அவனுக்கா தெரியாது!..
உடனே, "குட்டிமா!.. நீங்க அம்மா கூட ஆட்டோல வர்றீங்களா?.. இல்ல காத்திப்பா கூட பைக்ல வர்றீங்களா?.." என்று குழந்தையிடம் சாய்ஸ் கேட்க..
அவ்வளவு தான், உடனே அவள் குழந்தையை இறுகப் பற்றிக் கொண்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்..
அவளை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டு அவளது வண்டியை உசுப்பினான் கார்த்திக்..
அவர்களை பின்தொடர்ந்து வந்த கார்த்திக், அவளது வீடு வந்ததும், வண்டியை கேட்டினுள் விட்டு விட்டு வந்து ஆட்டோவிற்கான பணத்தை கொடுக்க வர,
அதற்குள் அவள் பணத்தையும் கொடுத்து விட்டு, அவனது கரங்களில் இருந்து வண்டி சாவியை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு, வீட்டினை திறக்க சென்றாள்..
அழுததில் ஓய்ந்த குழந்தை, ஆட்டோவில் வரும்போதே உறங்கி இருக்க, பிள்ளையை கைகளில் வைத்துக் கொண்டு அவள் திறக்க சிரமப்படவும்,
அதை பார்த்து திரும்பி வந்த கார்த்திக், அவளது கையிலிருந்த சாவியை பறித்து அவனே கதவை திறந்தும் விட்டான்..
கதவை திறந்ததும் குழந்தையோடு வேகமாக உள்ளே சென்று கதவடைத்து கொண்டாள் வித்யா..
அவள் கதவடைத்ததும் தோள்களை குலுக்கிக் கொண்டு கார்த்திக்கும் அங்கிருந்து சென்றான்..
அவன் செல்லும் வரை ஜன்னலோரம் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வித்யா, அவன் போனபின் ஆசுவாசப் பெருமூச்சு விட்டு,
அறைக்குள் சென்று குழந்தையை படுக்க வைத்துவிட்டு அவளும் சில நிமிடங்கள் ஓய்வாக படுத்திருக்க, அழைப்பு மணியோசை கேட்டது..
இந்த நேரத்தில் யாரென யோசித்துக் கொண்டே சற்று பயத்துடன் அவள் கதவை திறக்க, கையில் ஒரு பார்சல் கவருடன் நின்றிருந்தான் கார்த்திக்..
"பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கற டீச்சர் நீங்க!.. சாப்பாட்டை வேஸ்ட் பண்ண மாட்டீங்கனு நினைக்கிறேன்!.."
"இது நான் எப்பவும் சாப்பிடுற மெஸ்ல வாங்கினது.. அங்க சுத்தமா தான் செய்வாங்க.. குழந்தைக்கு ஒன்னுமாகாது.. சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க!.." என்று கூறி அந்த கவரை வாயிலில் வைத்துவிட்டு சென்றான்..
செல்லும் அவனை விசித்திரமாய் பார்த்துக் கொண்டு சில நொடிகள் நின்றவள், அதை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல,
அதை மறைவில் நின்று பார்த்திருந்த கார்த்திக்," அப்பாடா!.. எடுத்துட்டு போயிட்டா!.. எங்க காசு கொடுத்து வாங்குனது வீண் ஆகிடுமோ னு நினைச்சேன்!.." எனக் கூறி பெருமூச்சு விட,
'அட கஞ்சப்பயலே!.. நான் கூட அவ எடுத்துட்டு போறாளா னு பார்க்க தான் நிக்கிற னு நினைச்சா, இதுக்கா பார்த்துட்டு இருக்க!!?.. த்தூஊஊ!!..' வெளிப்படையாகவே காறித் துப்பியது அவன் மனசாட்சி..
'பின்னே கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை வீணாக்குவாங்களா?..' என்று அவன் கேட்ட நியாயத்தில்,
'ஆமா!..இவர் மட்டும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சாரு..மத்தவங்க மரத்துல இருந்து புடுங்கிட்டு வந்தாங்க..போய் வேலையை பாருடா கஞ்சப்பிசுனாரி!..' என்று மனசாட்சி கவுண்ட்டர் கொடுக்க..
'சரி..சரி..விடு.. இதெல்லாம் சகஜமப்பா!..' என்று சொல்லிவிட்டு தனது வீட்டை நோக்கி சென்றான் கார்த்திக்..
வீட்டினுள் சென்ற வித்யா, இன்றைய அவனது அணுகுமுறையில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து சிந்தனை வயப்பட்டாள்..
*****************
வார விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த வித்யா, அன்று கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்க்க, என்றும் இல்லாமல் சற்று அதிக இறுக்கத்துடன் இருக்கும் தோழியின் முகம் கண்டு ஈஸ்வரி குழம்பினாள்..
அவளிடம் கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று பதிலுரைக்க, ஒருவேளை கார்த்திக் எதாவது செய்து, அதில் இவ்வாறு இருக்கிறாளோ என்ற சந்தேகம் தோன்ற, அவனிடம் வினவினாள் ஈஸ்வரி..
"நான் என்ன பண்ணேன் அமுதா!!?.. உன் நண்பி மூஞ்சியை திருப்பிட்டு இருந்தா, அதுக்கு நானா பொறுப்பு!.. அவங்கள்ட்டயே கேட்க வேண்டியது தானே!.." என்று அவளிடம் கேட்டுவிட்டு,
"இதுக்கு தான் கார்த்தி, அப்பாவியா இருந்தா அனைத்து பக்கமும் ஆப்பு அடிப்பாங்கனு ஏதோ ஒரு சித்தர் சொல்லி இருக்காரு!.."
"என்ன பண்ண உன்னை இம்புட்டு அப்பாவியா வளத்த ஆத்தாவை சொல்லனும்!.." என்று தனக்கு தானே பாவமாக சொல்லிக் கொண்டு செல்ல,
அவன் சொன்ன பாவனையில் உதட்டில் மறைத்த புன்னகையுடன் சென்றாள் ஈஸ்வரி.
அடுத்த இரு தினங்களில் இயல்புக்கு வந்திருந்தாள் வித்யா, மாலையில் குழந்தையை அழைக்க வந்த வித்யாவை, பிள்ளையின் பள்ளி வாசலில் சந்தித்த கார்த்திக்,
"ஸாரி ரூபிணி, அன்னைக்கு நான் அப்படி நடந்து இருக்க கூடாது. ஆனா ஏற்கனவே குழந்தை பயந்து அழுதுட்டு இருந்தாங்க."
"அதோட நீங்க வேற அடிக்கவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. நான் பேசுனதும் தப்பு தான். ஸாரி!.." என்று அன்றைய பேச்சிற்காக மன்னிப்பை வேண்டினான்.
அவனை அமைதியாக பார்த்த வித்யா, "தப்பு பண்ணுன குழந்தையை எந்த அம்மா அடிச்சாலும் இப்படி தான் டி போட்டு மரியாதையில்லாம பேசுவீங்களா?" என்று நிதானமாக அவள் கேட்க,
அவள் சொன்ன பின் தான் அவனது பேச்சை அவன் ரீவைண்ட் செய்து பார்க்க, அவ்வாறு பேசியது நினைவிற்கு வந்ததும் திருதிருவென முழித்தான்.
'உன்னோட க்ரைம் ரேட் கூடிட்டே போகுதடா கார்த்தி!..'என மனசாட்சி அவனுக்கு அபாய சங்கு ஊதிட..'சரி சமாளிப்போம்!..' என்று விட்டு,
"அது ஒரு ஃப்ளோ ல வந்து இருக்கனும் ங்க!.. அதுக்கும் சேர்த்து ஸாரி!.." என்றான் அவன் சமாளிப்பாக.
அவனது பதிலில் திருப்தி இல்லை என்றாலும், அவனிடம் பேச்சை வளர்க்க எண்ணம் இல்லாமல் பெருமூச்சு விட்டு பின்,
"நானும் அன்னிக்கு அவ்ளோ ஹார்ஷா நடந்து இருக்க கூடாது தான். ஸாரி! ஆனா இனிமே எனக்கும் என் குழந்தைக்கும் நடுவுல வராதீங்க." என்று எச்சரிக்கையுடன் அவள் முடிக்க,
அதற்குள் குழந்தையை விடுவதற்காக ஆயாம்மா வெளி வந்தார்.. வந்தவர் அவனை கண்டு, "என்ன தம்பி!.. இப்ப எல்லாம் நீங்க வர்றதே இல்ல!!?.." என்று வினவினார்.
அவரது கேள்விக்கு என்ன சொல்வது எனத் தெரியாத அவன், வித்யாவை திரும்பிப் பார்க்க, அதற்குள், குழந்தை, "காத்திப்பா!" என்று அவனிடம் தாவி இருந்தாள்.
"ஏ நீங்க இப்ப எல்லா எ கூத வெவ்வாத வவ்வே இய்ய.. நா உங்க பாத்துத்தே இந்தேன்." என, தான் அவனை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததை குழந்தை சொல்லவும்,
அவள் வருந்துவது பொறுக்காமல், "காத்திப்பா க்கு இவ்ளோ நாள் வேலை ஜாஸ்தி இருந்துச்சுடா குட்டிமா. அதான் வர முடியல." என்று சமாதானம் கூறிக் கொண்டிருந்தான்.
"அப்ப இனிமே சாப்பாது ஊத்தி வித்து, வெவ்வாட வவ்வீங்கா!!?" என்று ஆர்வமாக கேட்ட குழந்தையிடம்,
என்ன சொல்ல எனத் தெரியாமல், "உங்கம்மா அலோவ் பண்ணினா வர்றேன்டா செல்லம்!." என்று வித்யாவை கோர்த்து விட்டான்.
"அம்மா ஓகே தா சொவ்வாங்க. என்னம்மா? காத்திப்பா வவ சொவ்வுங்க." என்று அவளிடம் அவனுக்காக அனுமதி கேட்டாள் சின்னவள்.
மகள் கேட்டதும் மறுக்கவும் முடியாமல், அவளுக்கு மனமும் ஒப்பாமல்,"அவங்க வேலை குறைஞ்ச அப்றம் வருவாங்கடா. சரி வா, நாம போகலாம்."குழந்தையை அழைத்தாள்.
குழந்தையை வண்டியில் ஏற்றிவிட்டு,"இனிமே எனக்கும் என் குழந்தைக்கும் இடைல வராதீங்க!.." என்று மீண்டும் ஒருமுறை எச்சரித்தாள்.
"நான் எங்கேங்க இடைல வர்றேன் னு சொன்னேன்."என்று இயல்பாக சொல்லி பின் நிறுத்தி நிதானமாக,
அவளது விழிகளை ஆழ நோக்கி தன் விழிகள் வழியே தன் மனதை அவளிடம் உரைக்க, "வாழ்க்கை முழுக்க உங்க ரெண்டு பேர் கூடவே, வர தான் விரும்பறேன்." என்ற
அவன் விழி மொழியில் உறைந்து நின்றாள்.