Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 14
ஆதவன் மறைந்து நிலவின் ஒளிர்வில் மின்னிய அலைகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த வித்யா,
'என் வாழ்க்கையும் இப்படித்தான் எழுதினாயா இறைவா?!..கரையை சேர முயன்று மீண்டும் மீண்டும் தோற்கும்படி!..' என எண்ணி தனக்குள் மறுகினாள்..
'எதற்காக இந்த வாழ்க்கை, என் வாழ்வில் ஒவ்வொரு முறை மகிழ்ச்சியை கொடுக்கும் போதெல்லாம் வலிக்க வலிக்க அதை பிடுங்கிக் கொள்கிறாய்!
இந்த வேதனையை தருவதற்கு பதில் என்னையே எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!..ஒவ்வொரு முறையும் என்னை தனித்து அழ விட்டு அழகு பார்க்கற உனக்கு அதிலென்ன ஆனந்தம்!..
நான் என்ன அவ்வளவு பாவம் செய்தவளா?!.. என் உயிரை மட்டும் எடுக்க மாட்டிங்குற!.. நீ எடுக்கலனா என்ன நானே கொடுக்கறேன்!..' என்று அவள் ஆழ்கடலை கண்டு எண்ணிக் கொண்டு எழ முயன்ற போது,
பவிஷ்யாவின் அழுகுரல் அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.. "இந்தா டியம்மா!..உன் புள்ள!!.. என்னா அழுகை அழற!?.."
"கொஞ்ச நேரம் உன்னை விட்டு இருக்க மாட்டாளாம்!.." என்று சலித்துக் கொண்டு வித்யாவின் கைகளில் குழந்தையை கொடுத்தாள் தேவதாரிணி!..
அவளது மடியில் அமர்ந்த பின் அழுகை நின்று, அவளை பார்த்த அந்த பூந்தளிர், புதிதாய் முளைத்த முன்னிரண்டு அரிசப்பற்கள் மட்டும் தெரிய உதிர்த்த சிரிப்பை கண்ட வித்யா,
'இதற்காக தான் என்னை காப்பாற்றினாயா இறைவா?!..இந்த பிஞ்சுக் குழந்தையும் என்னை போல யாருமற்றவளாக வேண்டாம் னு தான் என் உயிரை விட்டு வைத்தாயா!..' எண்ணி அவளை அணைத்துக் கொண்டாள்..
'நீ தான் இனி என் வாழ்க்கை டா லட்டுக்குட்டி!..என்ன ஆனாலும் சரி இவளையாவது என் வாழ்க்கையில என்னோடு முழுசா பயணிக்க விடு பெருமாளே!..' என்று கடவுளிடம் கோரிக்கை வைத்து விட்டு..
குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டு எழுந்து செல்லும் அவளை பார்த்த தாரிணி, சற்று நிம்மதியானாள்..
சென்னை வந்து ஆறு மாதங்கள் முடிந்த பின்னும் எதையோ யோசித்து வெறித்துக் கொண்டிருக்கும் அவளது மனநிலையை மாற்ற வேண்டி கடற்கரைக்கு அழைத்து வந்தாள் தாரிணி..
ஆனாலும் அவள் அதே போலவே இருக்கவும், தீவிரமான அவள் சிந்தனையை, குழந்தையை கொண்டு கலைக்கவே அவளிடம் குட்டியை விட்டு வந்தாள்..
"சித்தி!.. பாப்பாவை என்கிட்ட கொடுங்க ப்ளீஸ்!.." என்று கேட்டுக் கொண்டே வித்யாவிடம் ஓடி வந்தான் சாய்சரண்.. தேவதாரிணியின் நான்கு வயது செல்வ மகன்..
"டேய்!.. சொன்னா கேளு உன்னால பாப்பாவை தூக்க முடியாது!.. கீழே போட்றுவ வேணாம்!.." அவனை மிரட்டிய தாரிணியிடம்,
"சின்ன பிள்ள ஆசையா கேட்குறான்!. ஏன் க்கா மிரட்டுறீங்க?!..நீ உட்காரு சரண் கண்ணா!. உன் மடி ல பாப்பாவை வைக்கிறேன் சரியா!.. கவனமா பார்த்துக்கோ!!.." என்று கூறி அவனது மடியில் குழந்தையை கொடுத்தாள் வித்யா..
"நீ இப்படியே அவனுக்கு செல்லம் கொடுத்துட்டே இரு!.. அதான் அடங்க மாட்டீன்றான்!.." என்று வித்யாவை செல்லமாக கடிந்து கொண்டாள் தாரிணி..
"தாயைப் போல பிள்ளை!.. அதுக்கு வித்யாவை குறை சொல்லி என்ன ஆக போகுது?!.." சந்தடி சாக்கில் மனைவியை வாரினான் ஹரிகிருஷ்ணா.. தாரிணியின் கணவன்..
"ஓஹோஓஓஓ.. அப்ப நான் அடங்க மாட்டேன் னு சொல்றீங்களா?!!.. உங்களுக்கு என்னை குறை சொல்லலை னா பொழுது போகாதே! ம்ஹூம்!!.." என்று முகவாயை தோளில் இடித்து தாரிணி கூற..
"நான் குறை சொல்லல டா தேவி!.. உன்னை மாதிரி அவன் புத்திசாலி னு சொல்ல வந்தேன்!.." என்று அந்தர்பல்டி அடித்தான் கணவன்..
"நீங்க என்ன சொல்ல வந்தேள் னு எனக்கு தெரியும்!.. சும்மா கதை விடாதீங்க!..வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு!.. நீ வாடா ரூபி குட்டி நாம காருக்கு போகலாம்!.." எனக் கூறி,
முறுக்கிக் கொண்டு செல்லும் மனைவியை பார்த்து பெருமூச்செறிந்த ஹரி, "உன் வாய் தான் டா உனக்கு சத்ரு!!.." தன் வாய் மீதே அடித்துக் கொண்டான்..
"இன்னும் ரெண்டு நாளைக்கு மூஞ்சியை திருப்பிட்டே திரிவாளே!!.. எப்படி சமாளிக்க போறேனோ!!?.." விழி பிதுங்க கவலையுடன் கூறிவிட்டு அவர்களை பின்தொடர்ந்தான்..
அவன் நினைத்தது போலவே அடுத்த இரு தினங்களும் தாரிணி காட்டிய கோபத்தில், அவளை எப்படி மலையிறக்க என யோசித்த ஹரி, திவ்யா விசயத்தை வைத்து சரி செய்ய எண்ணி,
"ஏன்டா தரு ம்மா?!.. இந்த திவ்யா பொண்ணு இப்படியே எப்ப பாரு இருந்தா சரியா போகுமா?!.."
"அவ தான் டி.இ.டி ட்ரை பண்ணிட்டு இருந்தாள்ல.. அதையே ஏன் இப்ப மறுபடியும் ட்ரை பண்ண கூடாது!!?.."எனக் கேட்கவும்,
அவனிடம் கோபம் கொண்டதை மறந்து, "ஆமாங்க!!.. எனக்கு ஏன் இது தோணாம போச்சு!!?..நான் இன்னிக்கே அவ கிட்ட பேசுறேன்!.." இயல்பாகச் சொல்லி,
செல்ல முயன்ற மனைவியை கைபிடித்து நிறுத்தி அருகே இழுத்தணைத்து, "நான் தான் அன்னிக்கு ஏதோ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.."
"நீ என்ன அதை இவ்ளோ சீரயஸ்ஆ எடுத்துட்டு கோவிச்சுட்டு இருக்க டா?!.." என்று கேட்டான்..
அவனை பார்த்துக் கண்ணடித்து, "நானும் சும்மா தான் கோவிச்சுண்டேனே!!.." எனக் கூறி சிரித்துக் கொண்டே ஓடியே விட்டாள் தாரிணி..
அதன்பின் வித்யாவிடம் ஹரி சொன்னதை கூறி, அந்த தேர்விற்கு முயற்சிக்கும் படி தாரிணி வற்புறுத்தவும், அவள் குழந்தையை காரணம் காட்டினாள்..
"இதோ!.. இந்த ஒன்னை பெத்து வளர்த்துன எனக்கு இந்த சின்ன வாண்டு சமாளிக்க முடியாதா?!.." என்று தன் மகனை காட்டி கூறிவிட்டு,
"ஒழுங்கா நீ பரீட்சை எழுதி பாஸ் பண்ற வழியை பாரு!.." என்று மிரட்டவும், அவளில் பேச்சில் தன் தமக்கையை கண்ட வித்யாவின் கண்கள் நனைந்தது..
"சும்மா சென்டிமெண்ட் சீன் ஓட்டி, எஸ்கேப் ஆகலாம் னு நினைக்காத ரூபி குட்டி!.. படிக்க என்ன பண்ணனுமோ அதை பாரு!.." என்று அவளை இயல்பாக்கி விட்டு சென்றாள் தாரிணி..
அதன்பின் வேலைகள் துரிதமாக நடக்க, தேர்விற்கு விண்ணப்பித்து, அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டதில் வித்யா தனது கவலையில் இருந்து வெளி வர தொடங்கினாள்..
தேர்வு முடிவுகள் வரும்வரை, அருகில் இருந்த பள்ளியில் வேலைக்கு அவளை சேர்த்து விட, கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைகளுடன் அவளது நாட்களும் அழகாக வேகமாக சென்றது..
வார விடுமுறை நாளொன்றில் அனைவரும் மால் ஒன்றில் சுற்றிக் கொண்டிருக்க, திடுமென தன் தோள் மீது விழுந்த கரத்தினால் திரும்பிப் பார்த்த வித்யா, ஆனந்த அதிர்ச்சி ஆனாள்..
"ஹேய்!!!.. வித்யா!!.. வாட் எ சர்ப்ரைஸ்!!.. நீ எப்படி இங்க!?.." என தோழியை கண்ட ஆனந்தத்தில் வார்த்தைகள் வராமல் அவள் நிற்க..
அப்போது தாரிணி தூக்கிக் கொண்டு வந்த பவிஷ்யா, "அம்மா!! எக்கு பெய்ம்மா தாய்ஸ் வாங்கி தந்தாங்கே!!.." எனக் கூறி தாவிட, அதிர்ந்து நின்றாள் அமுதீஸ்வரி!..
"என்னடி வித்யா!!.. உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா!!?.." என்று அதிர்ச்சியுடன் கேட்ட ஈஸ்வரியை யாரென தெரியாமல் தாரிணி பார்த்தாள்..
தாரிணியின் பார்வையை உணர்ந்து, "இவ என்னோட க்ளோஸ் ப்ரெண்டு அமுதீஸ்வரி க்கா!.. ப்ளஸ்டூ வரை ஒன்னா தான் படிச்சோம்.."
"அதுக்கு அப்றம் அவங்க அப்பாக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வேற ஊருக்கு போயிட்டா!.." என்று தாரிணிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்..
ஈஸ்வரி இப்போது எதுவும் புரியாமல் இருவரையும் பார்த்து விட்டு, "அக்காவா!!?..இவங்க!!!.. ஆனா!!??.."
இவள் நித்யாக்கா அல்லவே ஆனால் வித்யா 'அக்கா' என்றழைப்பதால் குழம்பிய ஈஸ்வரி, ஒருவேளை அவள் கணவன் வகையில் வந்த முறையோ என்றெண்ணி, கேட்க வந்ததை முழுதாக கேட்காமல் நிறுத்தினாள்..
"இவங்க தாரிணிக்கா!.. பங்கஜம் மாமி இருக்காங்க ல அவங்க பொண்ணு!.. நான் இவங்களோட தான் இங்க இருக்கேன்!.." வித்யாவின் விளக்கத்தில் முழுதாக குழம்பினாள் ஈஸ்வரி..
ஈஸ்வரியின் குழப்ப முகத்தைப் பார்த்த தாரிணி, அவளுக்கு வித்யாவின் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்கள் எதுவும் தெரியாது என்பதை யூகித்தாள்..
வித்யாவை அங்கிருந்து அகற்ற, "நீ குழந்தைகளுக்கு எதாவது சாப்பிட வாங்கி கொடு டா ரூபிணி!.. நாங்க பேசிட்டே அங்க வர்றோம்!.." என்று அவளை அப்புறப்படுத்த,
தாரிணி தன்னிடம் தனியாக பேச விழைவதை புரிந்து கொண்ட ஈஸ்வரி, " நீ போடா வித்யா!.. நானும் அம்மா கிட்ட சொல்லிட்டு அவங்களையும் கூட்டிட்டு வர்றேன்!.." என்று அவளை அனுப்பி வைத்தாள்..
"உனக்கு அவளோட லைஃப் ல நடந்த எதுவுமே தெரியாதா அமுதா?!.." வினவிய தாரிணியிடம்,
"ஸ்கூல் ட்ரிப் ல தான் அவளை லாஸ்ட்ஆ பார்த்தேன் க்கா!.. அதுக்கு அப்றம் அவ கூட பேச ட்ரை பண்ணினா கூட அவங்கம்மா எடுத்து என்னை பேசவே விடல!.."
"சரினு கொஞ்ச நாள் விட்டுட்டேன்.. மார்க் ஷீட் வாங்க வர்றப்பயாவது அவளை பார்க்கலாம் னு நினைச்சேன்!.. ஆனா அவ எனக்கு முன்னாடியே வாங்கிட்டு போயிட்டா!.."
நடந்தவற்றை ஈஸ்வரி கூறவும், பெருமூச்செறிந்த தாரிணி,
"ம்ஹம்!.. அவ அன்னிக்கு அந்த ட்ரிப் போகாம இருந்திருந்தா, அவ அப்பா அவளை சரியான நேரத்துக்கு கூப்பிட வந்திருந்தா.." என்று இழுத்து விட்டு,
"இந்நேரம் அவ வாழ்க்கைல எல்லாமே நல்லா இருந்திருக்கும்!.." என்று வேதனையுடன் தாரிணி கூறியதை கண்டு ஈஸ்வரிக்கு மனம் பதறியது..
"அன்னிக்கு எங்கப்பா கூட அவளோட அப்பாக்கு கால் பண்ணினாரே க்கா!.. ஆனா அவர் தான் எடுக்கல!.. சரி ஒருவேளை வந்துட்டு இருக்காரோ நினைச்சோம்!.."
"பேக்கிங் க்கு லேட் ஆகுதுனு எங்கப்பா அவசரப்படுத்தவும், நாங்க கிளம்பிட்டோம்!.." என்று பதட்டத்துடன் விளக்கினாள் ஈஸ்வரி..
"என்னத்த சொல்ல!!.. எல்லாம் விதி!!.." என்று தாரிணி வேதனையுடன், அவளது வாழ்வில் நடந்த அவலங்களை சொல்லிக் கொண்டிருக்க, ஈஸ்வரிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது..
அதே நேரம் அவளது தாயும் அவளை தேடி அங்கே வந்துவிட, அவரும் வித்யாவின் நிலையை அறிந்து அதிர்ந்து, மனம் பதறி வருந்தினார்..
"நான் தான் அவளை அந்த ட்ரிப் க்கு வற்புறுத்தி வர வச்சேன் க்கா!!. நான் மட்டும் அவளை அப்படி வர வைக்கலை னா அவளும் வீட்டுலேயே பத்திரமா இருந்து இருப்பா!!.." என்று ஈஸ்வரி குற்ற உணர்ச்சியுடன் கூறவும்..
"அதனால என்ன பிரச்சனை!.. அவ அப்பா கவனக்குறைவா இருந்ததுக்கு நீ என்னடா பண்ணுவ?!.. அவ விதி அப்படி தான் இருக்குன்ற போது யாரால மாத்த முடியும்!!?.." என்று அவளுக்கு ஆறுதலாக கூறினாள் தாரிணி..
என்ன தான் தாரிணி சமாதானம் கூறினாலும் ஈஸ்வரிக்கு குற்ற உணர்வாகவே இருந்தது..
அதன்பின் வித்யாவிடம் எதுவும் கேட்காமல் இயல்பாக பேசி விட்டு தற்போது அவள் என்ன செய்கிறாள் என விசாரித்தாள் ஈஸ்வரி..
ஈஸ்வரி சேலத்திலுள்ள அரசு பள்ளியில் பணி புரிவதாகவும், அங்கே தற்காலிக ஆசிரியர் தேவை இருப்பதையும் உரைத்து,
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அது நிரந்தரமாக வாய்ப்பும் உள்ளதாக கூறவும், தாரிணி யோசனையில் இருக்க,
ஹரி தான் 'அவளது அத்தியாவசிய தேவைக்கான பணம் அவர்களது வீட்டின் வாடகை மூலம் வந்தாலும், அவளது மனமாற்றத்திற்கு பணி அவசியமென்றும்,
அவளுக்கென்று ஒரு நல்ல எதிர்காலம் அமையும் போது அதை ஏன் தடுக்கிறாய்?'என்றும் கூறி தாரிணியை சமாதானப்படுத்தி, வித்யாவை குழந்தையுடன் செல்ல அனுமதிக்க வைத்தான்.
அடுத்து என்ன வர காத்திருக்கும் என தெரியாத வாழ்வின் மற்றுமொரு அத்தியாயத்தை நோக்கி, குழந்தையுடன் சேலம் நோக்கி பயணப்பட்டாள் வித்யரூபிணி.